Jump to content

புதிய அர­ச­மைப்­பின் தர்­ம­சங்­க­ட­மான பய­ணம்


Recommended Posts

புதிய அர­ச­மைப்­பின் தர்­ம­சங்­க­ட­மான பய­ணம்

 
புதிய அர­ச­மைப்­பின் தர்­ம­சங்­க­ட­மான பய­ணம்
0
SHARES
 

புதிய அர­ச­மைப்­புக்­கான வழிகாட்டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­ன­தைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் புதிய அர­ச­மைப்பு யோச­னை க­ளுக்கு எதி­ராக வெளி­யி­டும் குற்­றச்­சாட்­டுக் களை மறுத்­து­ரைக்­கும் விதத்­தில் அரச தரப்­பி­ன­ரும் பதி­லி­றுத்து வரு­கின்­ற­னர்.

தற்­போ­து நடை­மு­றை­யில்­உள்ள அர­ச­மைப்­புக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­கள் மற்­றும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள், அது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வேளை பெரு­ம­ள­வில் முன்­னெ­டுக்­கப் பட்­ட­துண்டு. அதனை ஐ.தே.கட்சி அரசே உரு­வாக்கி நிறை­வேற்­றி­ய­போ­தி­லும், பிற்­கா­லத் தில், அதா­வது 2015 ஆம் ஆண்­ட­ள­வில் ஐ.தே.கட்­சியே அதனை விமர்­சித்­துக் கருத்து வெளிப்­ப­டுத்தி வந்­தது.

அரச தலை­வர் தேர்­தல்­க­ளில் சுதந்­தி­ரக்­கட்சி சார்­பா­கப் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய சகல அரச தலை­வர்­க­ளும் முன்­னைய அர­ச­மைப்பை இல்­லா­தொ­ழிப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­த­னர்.

2007ஆம் ஆண்­டில் அரச தலை­வ­ரா­க­வி­ருந்த சந்­தி­ரிகா புதிய அர­ச­மைப்பு யோச­னை­யொன்றை நாடா­ளு­மன்ற அனு­ம­திக்­கா­கச் சமர்ப்­பித்­த­போ­தி­லும், அவர் அதனை நிறை­வேற்­றிக் கொள்­வ­தில் தோல்­வி­கண்­டார். அதே­போன்று மகிந்த ராஜ­பக்ச இரு தட­வை­கள் அர­ச­த­லை­வ­ரா­கப் பதவி வகித்த வேளை­க­ளி­லும் நாட்­டுக்­குப் புதிய அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தாக பல தட­வை­கள் வாக்­கு­றுதி வழங்­கிய போதி­லும் அவர் கூடத் தமது வாக்­கு­று­தியை நிறை­வேற்ற அக்­கறை காட்­டிச் செயற்­பட்­ட­தில்லை.

நிறை­வேற்று அதி­கார நடை­முறை ஒழிப்பு,
இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு
இவ்­வி­ரண்­டுமே முக்­கி­ய­மா­னவை

கடந்த பல ஆண்­டு­ கால­மாக இத்­த­கைய எதிர்ப்­புச் செயற்­பா­டு­க­ளுக்கு இரு முக்­கிய கோரிக்­கை­களே கார­ணங்­க­ளாக அமைந்­தன.
நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­தல் மற்­றும் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணல் என்­ப­வையே அவ்­விரு முக்­கிய கோரிக்­கை­
க­ளா­கும். இப்­போது கூட இவ்­விரு பிரச்­சி­னை­க­ளுக்­குச் சாத­க­மான விதத்­தில் தீர்வு காணத் தவ­றி­னால் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் என்­பது அர்த்­த­மற்­ற­தா­கி­வி­டக் கூடும்.

தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள உத்­தேச அர­ச­மைப்பு சட்­ட
மூ­லம், இறுதி ஆவ­ண­மல்ல என்ற நிலையில், அது மீண்­டும் பொது­மக்­க­ளது கருத்து வெளிப்­பா­டு­க­ளுக்கு உள்­ளா­கும் வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. இவை, ஒரு­வர் மீதொ­ரு­வர் குற்­றம் குறை கூறி விமர்­சிப் பதை விடுத்து பய­ன­ளிக்­கத்­தக்க ஆலோ­ச­னை­க­ளா­கவோ, கருத்து வெளிப்­பா­டு­க­ளா­கவோ அமைய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­காட்­டல் குழு­வின் அறிக்­கை­யில் மேலும் பெறு­ம­தி­யான விட­யங்­கள் இருப்­பி­னும், குறித்த அறிக்கை தொடர்­பான முக்­கிய அர­சி­யல் கட்­சி­க­ளது கருத்து நிலைப்­பாடு குறித்­தும் தெரிந்­து­கொள்ள வேண்­டி­ய­து­அ­வ­சி­ய­மா­கும். ஐ.தே.கட்சி இந்த அறிக்கை தொடர்­பாக வேறு யோச­னை­களை முன்­வைக்க மாட்­டாது என்­ப­தால் குறித்த அறிக்கை தொடர்­பான விவா­த­மெ­தி­லும் ஐ.தே.கட்சி ஈடு­பட முன்­வ­ராது எனக் கருத முடி­யும்.

அர­சி­யல் அங்­கம் வகிக்­கும் மற்­றொரு முக்­கிய கட்­சி­யொன்­றான சுதந்­தி­ரக் கட்சியான அறிக்கை தொடர்­பான தனது கருத்தை வேறா­கச் சமர்ப்­பித்­துள்­ளது. அதில் முத­லா­வது பக்­கத்­தில் முத­லா­வது பகு­தி­யில் மாற்­ற­மொன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென அந்­தக் கருத்து வெளிப்­பாட்டு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்­தக் கட்­சி­யின் சில தலை­வர்­கள், குறித்த சட்­ட­மூ­லம் தொடர்­பா­கக் கடும் விமர்­ச­னங்­களை மேற்­கொண்டு வந்­துள்­ள­னர். இத்­த­னைக்­கும், தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பின் கீழ் 14 ஆண்­டு­கள் கால­மாக சுதந்­தி­ரக் கட்சி நாட்டை நிர்­வ­கித்­தி­ருந்தமை முக்­கி­ய­மா­கத் தொட்­டுக் காட்­டப்­பட வேண்­டிய ஒன்­றா­கும்.

நடை­முறை அர­ச­மைப்­பின் முக்­கிய அம்­சங்­க­ளில் மாற்­றம் மேற்­கொள்ள சுதந்­தி­ரக் கட்சி ஒப்­புக் கொள்­ளாது

நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பின் 1-9 பிரி­வில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பிள­வு­ப­டாத நாடு, பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை மற்­றும் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை ஆகிய அம்­சங்­க­ளில் ஒரு சிறு மாற்­ற­மே­னும் மேற்­கொள்ள சுதந்­தி­ரக் கட்சி உடன்­ப­ட­மாட்­டாது. பொது எதி­ர­ணித் தரப்­பும்கூட நூற்­றுக்கு நூறு வீதம் இதே கருத்­தையே கொண்­டுள்­ளது.

குறித்த இடைக்­கால அறிக்­கையை கூட்டு எதி­ரணி முற்­று­ மு­ழு­தாக எதிர்க்­கும் அதே­வேளை சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர்கள் சிலர் அமைச்­சுப் பத­வி­களை வகிப்­ப­தால் சுதந்­தி­ரக் கட்சி வெளிப்­ப­டை­யாக இடைக்­கால அறிக்­கையை எதிர்க்க இய­லாத நிலை­யில் உள்­ளது. சில­வேளை உரிய சந்­தர்ப்­பம் கிட்­டு்ம்­வரை சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் காத்­திருக் கின்றனர் என்றும் கருத முடி­ கி­றது. ஆயி­னும் சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் கொள்கை ரீதி­யில் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரது நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ள­னர்.

அந்­த­வ­கை­யில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் கொள்கை நிலைப்­பாடு இறுக்­க­மா­னது மட்­டு­மன்றி எது­வி­தத்­தி­லும் விட்­டுக் கொடுக்­காத, உறுதி கொண்­ட­தாக இருக்­கக் கூடும். அர­ச­மைப்பு சபை­யின் சட்­ட­ மூ­லத்­தில் உள்­ள­டக்­கப்­பட் டிருக்கும் வேறு எந்­த­வொரு மேல­திக யோச­னை­க­ளுக்கும் சுதந் தி­ரக் கட்சி ஆத­ர­வ­ளிக்­காது என சுதந்­தி­ரக் கட்சி தெரி­வித்­தி­ருப்­ப­தி­லி­ருந்து பிள­வு­ப­டாத நாடு , பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை ஆகிய விட­யங்­க­ளில் எவ்­வித மாற்­றம் மேற்­கொள்­வ­தற்­கும் சுதந்­தி­ரக் கட்சி உடன்­ப­டாது என்­பது தெளி­வா­கி­றது. அது­மட்­டு­மன்றி இது தொடர்­பான எது­வித பேச்­சுக்­கும் கட்சி உடன்­ப­டாது என்­ப­து­டன் ஏனைய கட்­சி­க­ளும் அந்த நிலைப்­பாட்­டைப் பேண வேண்­டு­மென சுதந்­தி­ரக் கட்சி கரு­து­வ­தா­கக் கொள்ள இய­லும்.

‘பெர­ஹர’ நாட்­டியக்­கா­ரர் கர­ணம் அடித்து தலை­கீ­ழாக நிற்­பது போன்று தற்­போது சுதந்­தி­ரக் கட்சி நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் நடை­
மு­றையைக் காப்­பாற்ற வேண்­டு­மென யோசனை முன்­வைக்
கி­றது. அதே­வேளை நிறை­ வேற்று அதி­கா­ரம் கொண்ட பத­வியை ஒழிப்­பே­னெனத் திரும்­பத் திரும்ப வாக்­கு­றுதி வழங்கி வந்த அரச தலை­வர் கட்­சி­யின் நிலைப்­பாட்டை ஒட்­டிச் செயற்­ப­டு­வாரா? அல்­லது குறித்த நிறை­வேற்று அதி­கா­ரத்­தைக் கைவி­டு­வாரா? என்­ப­தெல்­லாம் மனச்­சாட்­சிக்கு உட்­பட்ட பிரச்­சி­னையே.

மென்­போக்கு நிலைப்­பாட்­டை பேணுகிறது
தமிழ்த் தேசி­ய கூட்­ட­மைப்பு

அதே­வேளை இந்த விட­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மென்­போக்­கைக் கடைக்­கொண்டு வரு­கி­றது. இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது பிரே­ர­ணை­களை முன்­வைத்­தி­ருப்­பி ­னும், இரண்டு முதன் மைக் ­கட்சிக­ளி­டையே நல்­லி­ணக்­கம் இருக்­கு­மா­னால், அரசமைப்பு வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் முன் வைக்­கப்­பட்­டுள்ள முக்­கிய அடிப்­படை அம்­சங்­க­ளு­டன் இணங்­கிப் போக இய­லுமா என்­பது குறித்­துப் பரி­சீ­லிக்­கத் தயா­ரென தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

லியம் பொக்ஸ்­ஸின் உடன்­பாட்டு முயற்­சி­யின்­படி கூட, தீர்வு ஒன்று எட்­டப்­பட வேண்­டு­மா­னால் முதன்மைக் கட்­சி­கள் இரண்­டி­ன­தும் ஒத்­து­ழைப்பு அவ­சி­யமே. அந்த வகை­யில் நோக்­கும்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு பாராட்­டுக்கு உரி­ய­தொன்றே.

அதே­வேளை குறிப்­பிட்ட அர­ச­மைப்பு சட்­ட­மூ­லத்தை நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு மடங்கு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்ற இ­ய­லாது தடுத்து நிறுத்­தி­வி­டு­வதே கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­ன­ரது தற்­போ­தைய திட்­ட­மா­கும். அது இதற்கு முன்­னர் அர­ச­மைப்­புக்­கான திருத்­தச் செயற்­பா­டு­களை தோற்­க­டிக்க அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவை ஈட்ட மேற்­கொண்ட முயற்­சி­யைக் கூட கூட்டு எதி­ரணி மேற்­கொள்ள முயன்று வரு­கி­றது. அர­ச­மைப்­புக்­கான திருத்­தம் தொடர்­பான குழப்­பங்­கள் உச்­சம் பெற்­றமை போன்று இன­வாத அழுத்­தங்­கள் தலை­தூக்­கி­னால், சில சிறு கட்­சி­கள் கூட்டு எதி­ர­ணி­யு­டன் இணை­ய­வும் முய­லக்­கூ­டும்.

இன­வாத, மத­வாத கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக பொது­மக்­களை கிளர்ந்­தெ­ழச் செய்­தல் வேண்­டும்

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் அர­சு­டன் ஒத்­து­ழைக்க விரும்­பும் ஏனைய கட்­சி­கள் மற்­றும் சிவில் அமைப்­புக்­க­ளது பொறுப்பு, இன­வாத, மத­வாத தரப்­பி­னர்­க­ளது அர­ச­மைப்பை நிறை­வேற்ற இய­லாது தடுத்து நிறுத்­தும் முயற்­சி­க­ளுக்கு எதி­ராக நாட்டு மக்­க­ளைக் கிளர்ந்­தெழ வைப்­ப­தா­கும். இதில் இடது சாரிக் கட்­சி­க­ளது பொறுப்­பும் கணி­ச­மான அள­வுக்கு உள்­ளது.

அவ்­வி­தம் பொது­மக்­க­ளது ஆத­ரவு அலை­யொன்றை உரு­வாக்­கிக் கொள்ள முடி­யு­மா­னால், முன்­னைய அர­சின் கொள்கை நிலைப்­பாட்­டைப் பின்­தள்­ளு­தல் போன்றே, விட­யங்­கள் தொடர்­பான இணக்­கப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­தக் காட்­டும் விருப்­ப­ வீ­னத்­தைக் கூட, விலக்­கிக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பும் உரு­வா­கக் கூடும்.

எது எப்­ப­டி­யான போதி­லும் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான சிக்­கல்­க­ளுக் குத் தீர்வு காண்­ப­தற்கு வாய்த்துள்ள இந்­தச் சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்த, முன்­னர் போன்று நாம் தவ­று­வோ­மே­யா­னால், அது பெரும் நஷ்­டத்­தை­யும் பயங்­கர முடி­வு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தக் கார­ண­மா­கக் கூடும். அது நாட்­டின் எதிர்­கா­லச் சந்­த­தி­யி­ன­ரது வாழ்க்­கையை நாசப் படுத்த வழி வகுக்­கும்.அவ்­வி­தம் இடம்­பெ­று­மா­னால் வர­லாறு ஒரு­போ­தும் எம்மை மன்­னிக்­க­ மாட்­டாது.

http://newuthayan.com/story/36961.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.