Jump to content

வலுப்படுத்த வேண்டியதன் அவசியம்


Recommended Posts

வலுப்படுத்த வேண்டியதன் அவசியம்

 

இலங்­கைத்­த­மிழர் விவ­கா­ரத்தில் இன்று பேசு பொரு­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் விடயம் இடைக்­கால அறிக்­கை­யாகும். பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக, பல்­வேறு விமர்­ச­னங்­களும் கருத்­துக்­களும் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்றன.

இவ்­வ­றிக்கை பற்றி சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், அர­சியல் ஆய்­வா­ளர்கள், சாசன நெறி­யா­ளர்கள், அர­சியல் தலை­வர்கள், பத்­தி­ரி­கை­யாளர் என பல்­வேறு தரப்­பி­னரும் பல்­வேறு கருத்­து­களை கூறி­வ­ரு­கின்­றார்கள். இக்­க­ருத்­து­களும் விமர்­ச­னங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை தரு­கின்­றதா அல்­லது சந்­தே­கங்­க­ளையும், அதி­ருப்­தி­க­ளையும் உண்டு பண்­ணு­கி­றதா என்­பது தீர்­மா­னிக்க முடி­யாத விட­ய­மாக இருக்­கி­றது.

முதலில் வழிப்­ப­டுத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையின் உள்­ள­டக்கம் எதைக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்றிப் பார்ப்­பது இவ்­வ­றிக்கை பற்றி சாதா­ரண பாம­ரனும் புரிந்து கொள்ளக் கூடி­ய­தா­க­வி­ருக்கும்.

2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 21 ஆம் திகதி பாரா­ளு­மன்றில் வழிப்­ப­டுத்தல் குழுவின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வழிப்­ப­டுத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கை­யா­னது பின்­வரும் உள்­ள­டக்­கத்தை உடை­ய­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

(1)உறுப்­பு­ரைகள் 1, மற்றும் 2, (2) அதி­கா­ரப்­ப­கிர்வு கோட்­பா­டுகள், (3)அர­ச­காணி, (4) மாகாண நிரல் விட­யங்கள் பற்றி மத்­திய அரசு சட்­ட­மி­யற்­றுதல், (5) பிர­தான ஆட்­புலம், (6) இரண்டாம் சபை, (7) தேர்தல் முறைமை, (8) ஆட்­சித்­துறை, (9)அர­சியல் அமைப்பு பேரவை, (10) பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம், பொது மக்­களின் பாது­காப்பு என பத்து விட­யங்­களை தன்­ன­டக்­க­மாக கொண்­டுள்­ளது.

இத்­துடன் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் உத்­தேச விட­யங்கள், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கருத்­து­களும், திருத்­தங்­களும், ஜாதிக ஹெல உறு­மய, கட்­சியின் அவ­தா­னிப்­புகள், ஒருங்­கி­ணைந்த எதிர்க்­கட்­சியின் விடய எடுத்­து­ரைப்­புகள், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசின் அறிக்கை மீதான அவ­தானம், ஏசி­எம்சி, ஈ.பி­.டி.பி., எஸ்.எல்.எம்.சி, டி.பி.ஏ ஆகி­ய­வற்றின் கூட்­டு­முன்­மொ­ழிவு, டாக்டர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன, டக்ளஸ் தேவா­னந்தா ஆகி­யோரின் அனு­பந்தம் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என பல இணைப்­பு­களை உள்­ள­டக்கி இவ்­வி­டைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது.

*இவ்­வி­டைக்­கால அறிக்கை முழு­வ­தையும் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­து­வது, ஆகாத காரி­ய­மெ­னினும் சில முக்­கி­ய­மான விட­யங்கள் பற்றி நோக்­கு­வது சாலச்­சி­றந்­தது.

உறுப்­பு­ரைகள் 1, மற்றும் 2 இல் இலங்­கையின் இறைமை, மக்­க­ளுக்கு உரி­ய­தா­யி­ருப்­ப­தோடு பாரா­தீ­னப்­ப­டுத்த முடி­யா­த­தா­கவும் பிரிக்­கப்­ப­ட­மு­டி­யா­த­தா­கவும் இருக்க வேண்டும். இதைத்­தொ­டர்ந்து வரும் பிரி­வு­களில்

*இலங்கை பிரிக்­கப்­ப­டாத மற்றும் பிரிக்­கப்­பட முடி­யாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும்.

*பிரிந்து செல்­லு­தலை (நாட்டைக் கூறு­போ­டுதல்) தடுக்கும் பொருட்டு அர­சியல் அமைப்பில் விஷேட ஏற்­பா­டுகள் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும்.

*அதி­கூ­டிய பகிர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யங்கள் இவ் அத்­தி­யா­யத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் மத்­திய மற்றும் மாகா­ணங்­களின் நிறு­வ­னங்­களைக் கொண்­டுள்ள சுதந்­தி­ரமும் இறை­மையும் தன்­னா­திக்­கமும் கொண்­டுள்ள ஏகிய ராஜ்­ஜிய ஒரு­மித்த நாடு என்னும் குடி­ய­ர­சாகும் உறுப்­பு­ரிமை 2 இல் வலி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த ஏகிய ராஜ்­ஜிய என்ற சிங்­களப் பதம் தொடர்பில் கடு­மை­யான கருத்­து­களும் விமர்­ச­னங்­களும் முன் வைக்­கப்­பட்­டுள்­ளமை பல்­வேறு சர்ச்­சை­க­ளாக உள்­ளதை நாம் அறிவோம். தமிழில் இந்த ஏகிய ராஜ்­ஜிய என்­பது ஒரு­மித்த நாடு என வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் பல வாதப்­பி­ர­தி­வா­தங்கள் ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

மேற்­படி வார்த்தைப் பிர­யோகம் தமிழில் மற்றும் ஆங்­கி­லத்தில் தரும் அர்த்தம் தொடர்பில் பல சந்­தே­கங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஏகிய ராஜ்­ஜிய என்­பது நேர­டி­யா­கவே அது ஒற்­றை­யாட்­சி­யென்ற அர்த்­தத்­தையே தரு­கின்­றது. தமிழில் சமஷ்­டிக்கு ஈடான மாற்­றீ­டான சொல்­லாக அர்த்­தப்­ப­டுத்த முடி­யாது என்ற வாதமும் இவ்­வி­டைக்­கால அறிக்கை தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

உறுப்­புரை 2 இல் கூறப்­பட்­டுள்ள இன்­னொரு விட­யத்­தையும் இங்கு கவ­னத்தில் கொள்­ள வேண்டும். நாட்­டைக்­கூ­று­போ­டுதல் என்ற விவ­கா­ர­மாகும். உறுப்­பு­ரிமை 5 இல் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்கும் எந்­த­வொரு மாகா­ண­சபை அல்­லது ஏனைய அதி­கார சபை இலங்­கையின் ஆட்­பு­லத்தின் எந்­த­வொரு பகு­தி­யையும் தனி­நா­டொன்­றாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தவோ அல்­லது எந்­த­வொரு மாகா­ணத்­தையோ அல்­லது அதன் பகு­தி­யையோ இலங்­கை­யி­லி­ருந்து விலகி தனி­யா­வ­தற்­காக ஆத­ரித்து வாதா­டவோ அல்­லது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவோ கூடாது என உறுப்­புரை 5 வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இந்­தப்­பி­ர­க­ட­ன­மா­னது அண்­மையில் உல­கத்தில் ஏற்­பட்­டுள்ள அனு­பவம் தொடர்­பான எச்­ச­ரிக்கைக் காட்­டி­யென்­பதை புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

1972 ஆம் ஆண்டின் குடி­ய­ரசு யாப்­பிலோ அல்­லது 1978 ஆம் ஆண்டின் சோச­லிச குடி­ய­ரசின் யாப்­பிலோ விதந்­து­ரைக்­கப்­ப­டாத புதிய சேர்ப்பு என்­பது அறி­யப்­பட்­டுள்ள விடயம்.

இந்த அனு­ப­வத்தின் முன்­னு­ரை­க­ளாகக் காணப்­படும் கடந்த செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி குர்திஸ் இன ஈராக் வாழ் மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான 92 சத­வீத ஆணையை வழங்­கி­யமை, ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகா­ண­மாக விளங்கும் கற்­ற­லி­னாவின் பொது வாக்­கெ­டுப்பும் சிறு­பான்மை மக்­களின் வேட்­கையும், இதே போன்றே 1905 ஸ்கண்­டி­நே­விய நாடு­களில் நடத்­தப்­பட்ட பொது வாக்­கெ­டுப்பு, 1944 ஐஸ்­லாந்தில் இடம்­பெற்ற பொது வாக்­கு­கெ­டுப்பு, 1958 கயானா, 1990 சுவே­னியா, 1991 குரோ­சியா போன்ற நாடுகள் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் பிரிந்து கொண்­ட­மையை எச்­ச­ரிக்­கை­யாகக் கொண்டு உறுப்­புரை 5 இல் இக்­க­டு­மை­யான உறுப்­பு­ரையை அர­சியல் சாச­னத்தில் கொண்டு வர­வேண்­டு­மென்ற எச்­ச­ரிக்­கை­யெண்­ணங்கள் தோன்­றி­யி­ருக்­கலாம்.

உறுப்­புரை 6, உறுப்­புரை 7 முறையே தேசி­யக்­கொடி, தேசிய கீதங்கள் பற்றி வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­கின்­றன. இதில் உறுப்­புரை 9 என்­பது, இலங்­கையில் பௌத்த மதத்­துக்கு முதன்­மைத்­தானம் வழங்­கப்­படல் வேண்­டு­மென்­ப­தோடு, எல்லா மதங்­க­ளையும் மற்றும் அதன் நம்­பிக்­கை­க­ளையும் மரி­யா­தை­யு­டனும் மாண்­பு­டனும் மற்றும் பார­பட்­ச­மின்­றியும் நடத்­து­வ­துடன் அர­சியல் அமைப்­பினால் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பௌத்த சாச­னத்­தையும் பாது­காத்­தலும் பேணிக்­காத்­தலும் அரசின் கட­மை­யாக இருத்தல் வேண்­டு­மென உறுப்­புரை 9 தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

இலங்கை ஒரு மதச்­சார்­பற்ற நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்கை பல தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்­ட­போதும் அது ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வு­மில்லை. கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வு­மில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வழிப்­ப­டுத்தல் குழுவில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மதச்­சார்­பற்ற நாடு என்­பதை புதிய அர­சியல் சாச­னத்தின் மூலம் நிர்­ணயம் செய்­ய­வேண்­டு­மெனக் கூறி­யி­ருந்த நிலையில் பௌத்த பீடங்­களும் தேரர்­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் காட்­டிய எதிர்ப்பின் நிமித்­தமே இது­வொரு பௌத்த நாடு என்­பதை சகல இலங்­கை­யரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனவே அர­சியல் சாசனம் பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்கும் என்­பதை உறு­திப்­ப­டுத்தும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையைக் கேட்­டி­ருக்­கிறோம்.

இடைக்­கால அறிக்­கையின் இன்­னொரு முக்­கி­யத்­து­வத்தைக் கொண்­டி­ருக்கும் பகுதி அதி­காரப் பகிர்வுக் கோட்­பா­டுகள் (11) என்ற அத்­தி­யா­ய­மாகும். இதில் உள்ள (2) ஆம் பிரிவில் அதி­கா­ரப்­ப­கிர்வின் முதல்­நிலை அல­காக மாகா­ண­ச­பைகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்­பதை வழிப்­ப­டுத்­தல்­குழு ஏற்றுக் கொண்­டுள்­ளது என்று கூறப்­பட்­டுள்­ளது.

மாகா­ணங்­களை இணைத்தல் தொடர்­பான ஏற்­பா­டு­க­ளுக்கு பின்­வரும் யோச­னைகள் அல்­லது தெரி­வுகள் யோச­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­லா­மென கூறப்­பட்­டுள்­ளது.

இணைப்­புக்கு அர­சியல் அமைப்பு ஏற்­பா­டுகள் செய்­த­லா­காது வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் தனி­யொரு மாகா­ண­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அங்­கீ­க­ரிக்கும் என்ற விட­யங்கள் தெளி­வுறத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. தமிழ் மக்­க­ளு­டைய அபி­லா­ஷை­களில் நீண்ட நாள் கோரிக்­கை­யாக இருந்­து­வந்­துள்ள விடயம். வடக்கு– கிழக்கு இணைப்பு, வடக்கு– கிழக்கு தமிழ் மக்­க­ளு­டைய பாரம்­ப­ரி­ய­மான பிர­தேசம், அதற்கு உரிமை கொண்­டாடும் தகுதி யாருக்­கு­மில்­லை­யென்ற ஞாயத்தை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, அதனை தொடர்ந்து ஈழ­வி­டு­தலைப் போரா­ளிகள், பின்னே த.தே.கூ அமைப்பு தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். இந்த வலி­யு­றுத்­தலின் பதி­வுகள் கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக இருந்­து­வந்­துள்­ளது. இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் போது இது முக்­கி­ய­மான விட­ய­மாக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. 1987ஆம்­ஆண்டு தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் இணைப்பை நிரந்­த­ர­மாக உறு­திப்­ப­டுத்தும் வாக்­கெ­டுப்பை ஒரு வரு­ட­கா­லத்­துக்குள் நடத்­தி­யி­ருக்க வேண்டும். அது முன்­னைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­தனவால் திட்­ட­மிட்ட முறையில் காலம் கடத்­தப்­பட்­டது. அன்­றைய சூழ்­நி­லையில் வாக்­கெ­டுப்பு நடத்­தி­யி­ருந்தால் இணைப்பு என்­பது நிரந்­த­ர­மாக்­கப்­பட்­டி­ருக்கும்.

 2006ஆம் ஆண்டு அம்­பா­றையைச் சேர்ந்த குறித்த ஒரு சமூ­கத்தைச் சேர்ந்­த­வ­ரைக்­கொண்டு திட்­ட­மிட்ட முறையில் அவர் குறித்த கட்­சியைச் சேர்ந்­த­வ­ராக இல்­லாது இருந்­த­போதும் குறித்த கட்­சி­யாளர் எனக்­கூறி உச்ச நீதி­மன்றில் வழக்குத் தொட­ரப்­பட்­டது. மிக சாணக்­கி­ய­மான முறையில் உச்­ச­நீ­தி­மன்றம் இணைப்பை இரத்துச் செய்­தது. இவை­யெல்லாம் இலங்கை வர­லாற்றில் தற்­செயல் நிகழ்­வல்ல. மிகக் கச்­சி­த­மாக திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள்.

 இப்­போது நிலை­மை­களை அசா­தா­ர­ண­மாக்கி இணைப்­புக்கு கறுத்­தக்­கொ­டி­காட்டும் நிலை­மைகள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­துடன் கொண்டு வரப்­ப­ட­வுள்ள அர­சியல் சாச­னத்­திலும் பார­தூ­ர­மான பாது­காப்பு செய்­யப்­ப­ட­வி­ருக்­கின்­றது. என்ற கருத்து தமிழ் மக்கள் மத்­தியில் தீவி­ர­மாக பர­வி­வ­ரு­வது தவிர்க்­க­மு­டி­யாத விட­ய­மாகும். தேசியக் கொள்கை (5.2) என்ற அத்­தி­யா­யத்தில் குறிப்­பிட்ட விட­யங்­க­ளுக்கு அப்பால் அதி­கார அலகின் முதல் எல்­லை­யென்ற வகையில் மாகா­ண­ச­பைகள் மாகா­ணத்­தி­லுள்ள விட­யங்கள் தொடர்­பாக நிர­லி­லுள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு ஏற்ப மாகாண சபை­களால் சட்­ட­மாக்­கப்­பட்ட நிய­திச்­சட்­டங்­களை அலட்­சியம் செய்ய முடி­யாது. மத்­திய அரசோ அல்­லது ஆளு­நரோ என்ற விடயம் முன்­பி­ருந்த நிலை­களை விட மாகாண சபை­களை வலி­மைப்­படுத்துவ­தாக அமை­கி­றது.

ஏலவே மாகாண சபை­களால் உரு­வாக்­கப்­படும் நிய­திச்­சட்­டங்­களை ஆளுநர் நிரா­க­ரிக்­கின்ற அல்­லது ஏற்­றுக்­கொள்ளா நிலை சில மாகாண சபை­களில் இருந்து வந்­துள்­ளது. தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் விதந்­து­ரைக்­கப்­பட்­டதன் பிர­காரம் ஆளுநர் பெரும்­பாலும் ஒரு வைபவ ரீதி­யான வகி­பா­கத்தை வகித்து, நிறை­வேற்று அதி­காரம் அமைச்சர் சபைக்கு உரித்­தாக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தே இவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­ப­ட்­டுள்­ளது. அமைச்­சர்­களால் மேற்­கொள்­ளப்­படும் மதி­யு­ரையின் கீழ் ஆளுநர் தொழில்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தை வழிப்­ப­டுத்தல் குழு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

 கடந்த 28 வரு­ட­கால மாகாண சபை­களின் ஆளுமை ஆட்சி அதி­கார அனு­ப­வங்­களைக் கொண்டு பார்க்­கின்ற போது மக்­களால் தெரிவு செய்­யப்­படும் மாகாண முத­ல­மைச்சர் மற்றும் மாகாண அமைச்­சர்­களை விட ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­படும் ஆளுநர் அதி­கா­ரக்­கு­வியல் கொண்­ட­வ­ராக இருந்து வந்­துள்ளார் மாகாண சபை­களை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தும் அடிமைச் சாச­னத்தை எழுதிச் செயற்­ப­டுத்தும் அதி­கா­ரி­யா­கவே செயற்­பட்டு வந்­துள்ளார் என்­பது அனு­பவ ரீதி­யாக அறி­யப்­பட்­ட­வி­டயம். புதிய வரைபில் ஆளுநர் ஒரு வைபவ ரீதி­யான அதி­கா­ரி­யாக உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது சகல தரப்­பி­ன­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டைக்­கால அறிக்­கையில் அர­ச­காணி (111) தொடர்பில் தேசிய நிரல், மாகாண நிரல் மற்றும் பின்­னி­ணைப்பு என்ற விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

காணி­ய­தி­காரம் என்பது நீண்டகாலமாகவே இருந்து வரும் தீர்க்கப்படாத முரண்பாடான விடயமாகவே இருந்து வந்துள்ளது. காணி அதிகாரம் தொடர்பில் 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாணங்களுக்குரிய விவகாரமென குறித்தொதுக்கிக் கூறப்பட்டிருந்த போதும் அது பொது நிரலில் உள்ளடங்கி காணப்படுவதனால் மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு கையளிக்கப்படாத நிலை இழுபறி கொண்டதாகவே இருந்து வருகிறது.

என்னதான் அதிகாரப்பகிர்வு உச்ச அளவில் பகிர்ந்தளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்படுகின்றபோதும் காணி அதிகாரங்கள் தொடர்பில் குறித்த இடைக்கால அறிக்கையில் ஒரு தெளிவுபடுத்தப்பட்ட நிலை உருவாக்கப்படவில்லை. தேசிய நிரல், மாகாண நிரல், என்பவை மீண்டும் மத்திய அரசை வலிமைப்படுத்துவதாகவேயுள்ளது. பின்னிணைப்பில் இலங்கையின் சகல காணிகள், சுரங்கங்கள், கனிய வளங்கள் மற்றும் ஏனைய பெறுமதியுடைய பொருட்கள், கண்ட மேடைகள் ஆகியன தொடர்ந்தும் குடியரசுக்கு உரித்தாதல் வேண்டுமென்பதுடன், மத்திய அரசாங்கத்தின் கீழ் வைக்கப்பட வேண்டுமென்ற விடயம் இணைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றைத் தொகுத்துநோக்குமிடத்து இடைக்கால அறிக்கை அதாவது அரசியல் சாசனத்தின் முன்னீடாகக் காணப்படும். இடைக்கால அறிக்கையானது ஒரு சில விடயங்களில் முன்னெற்றம் கொண்டதாக காணப்படுகிறபோதும் இதுபற்றிய விவாதத்தின் போது இன்னும் கலந்துரையாடி அழுத்தங்களைப்பிரயோகித்து பேரம்பேசி வலிமைப்படுத்த வேண்டிய தேவை தமிழ் தரப்பினருக்கு உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

 

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.