Jump to content

பாடசாலை மெய்வல்லுனரில் யாழ் மாணவர்களின் பதக்க வேட்டை ஆரம்பம்


Recommended Posts

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள்

 

Image

ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள்

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில்
தங்க வெண்கலப்பதக்கங்கள்
ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் பிரிவில் செல்வி ச. சங்கவி 1ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m உயரம் பாய்ந்து 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

22450148_1669013959809524_5167389845185622365444_1669014059809514_8903577308052422448199_1669014093142844_56576720093316

Link to comment
Share on other sites

கோலூன்றிப் பாய்தலில் மகாஜனவுக்கு வெள்ளி

 
 
கோலூன்றிப் பாய்தலில் மகாஜனவுக்கு வெள்ளி
 
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 20 வயது ஆண்­கள் பிரி­வில், மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் டிலக்­சன் வெள்­ளிப்­ப­தக்­கத்­தைக் கைப்பற்றி­னார்.

கொழும்பு திய­கம மகிந்த ராஜ­பக்ச விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தத் தொடர் நடை­பெற்று வரு­கி­றது.

நேற்று நடை­பெற்ற 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்­றிப் பாய்­த­லில் மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் சிவ­நா­தன் டிலக்­சன் 4.20 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்துவெள்­ளிப் ப­தக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

 

http://newuthayan.com/story/36640.html

தட்டெறிதல் போட்டியில் இமையாணன் அ.த.க. வித்தியாலயத்துக்கு வெள்ளிப்பதக்கம்

 
தட்டெறிதல் போட்டியில் இமையாணன் அ.த.க. வித்தியாலயத்துக்கு வெள்ளிப்பதக்கம்
 
 

இலங்கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளப்­போட்­டி­யில் 16 வயது ஆண்­கள் பிரிவு தட்­டெ­றி­த­லில் இமை­யா­ணன் அர­சி­னர் தமிழ் கல­வன் வித்­தி­யா­ல­யத்­துக்கு வெள்­ளிப் பதக்­கம் கிடைத்­தது.

திய­கம விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று இடம்­பெற்ற இந்­தப் போட்­டி­யில் இமை­யா­ணன் அர­சி­னர் தமிழ் கல­வன் வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த முத்­து­ராசா திவான்­சன் 47.89 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்தே வெள்­ளிப்­ப­தக்­கம் வென்­றார்.

http://newuthayan.com/story/36602.html

Link to comment
Share on other sites

தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் அருணோதயவுக்கு கிடைத்தது தங்கம்

தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் அருணோதயவுக்கு கிடைத்தது தங்கம்
 
 

இலங்­கைப் பாட­சா­லை­ க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­ மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் அள­வெட்டி அரு­ணோ­த­ யக் கல்­லூ­ரிக்கு தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

கொழும்பு திய­கம மகிந்த ராஜ­பக்ச விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தத் தொடர் நடை­பெற்று வரு­கி­றது.

நேற்று நடை­பெற்ற 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்­றிப் பாய்­த­லில் அள­வெட்டி அரு­ணோ­த­யக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த க.நெப்­தலி ஜொய்­சன் 4.45 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

http://newuthayan.com/story/36619.html

Link to comment
Share on other sites

பாடசாலை மெய்வல்லுனரில் யாழ் மாணவர்களின் பதக்க வேட்டை ஆரம்பம்

AISG-2017-696x464.jpg
 

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளான இன்றைய தினம் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

சத்விகாவுக்கு முதல் தங்கம்

Sathvika.jpgஇதில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.10 மீற்றர் உயரம் தாவி யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி வி. சத்விகா முதற்தடவையாக தங்கப்பதக்கம் வென்றார். எனினும், அவருடன் போட்டியிட்டு அதே அளவு உயரத்தைத் தாவிய நீர்கொழும்பு நிவ்ஸ்டெட் மகளிர் கல்லூரி மாணவி தினிதி நிமாயாவும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சத்விகா, தினதி நிமாயாவுடன் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் கிரிஜாவும் தெரிவாகியிருந்தனர். எனினும், 3.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கிரிஜா எடுத்த 3 முயற்சிகளும் கைகூடாமல் போனதால் அவருக்கு இம்முறையும் வெண்கலப் பதக்கத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் 19 வயதுக்கு உட்டப்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த கிரிஜா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆரம்பம் முதல் பலத்த போட்டியுடன் விளையாடியிருந்த சத்விகா மற்றும் தினிதி நிமாயா ஆகிய வீராங்கனைகள் முதல் சுற்றுக்களில் ஒரு சில தவறான உயரங்களை மாத்திரம் பதிவு செய்து முதலிரண்டு இடங்களுக்காக கடுமையாக போட்டியிருந்தனர். எனினும், இறுதிச் சுற்றுக்காக வழங்கப்பட்ட 3.10 மீற்றர் உயரத்தை அவர்களால் தாவுவதற்கு முடியாமல் போனது.

இதன்படி, இரு வீராங்கனைகளுக்கும் மேலும் இரு சந்தர்ப்பங்களை வழங்க போட்டியின் பிரதான நடுவர் நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் குறித்த வீராங்கனைகள் தொடர்ந்து விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவரது ஒருமித்த சம்மதத்துடன் முதலிடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இதன்படி, 3.00 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். அருணோதயா கல்லூரி மாணவி வி. சத்விகா மற்றும் நீர்கொழும்பு நிவ்ஸ்டெட் மகளிர் கல்லூரி மாணவி தினிதி நிமாயா ஆகியோர் முதலிடங்களையும், 2.85 மீற்றர் உயரத்தைத் தாவிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் கிரிஜா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ். அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த சத்விகா முன்னதாக இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாவி 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.80 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு சத்விகா கருத்து வெளியிடுகையில், ”நான் 2014ஆம் ஆண்டு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதற் தடவையாகக் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்டேன். எனினும், கடந்த காலங்களில் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்தாலும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனது அப்பா தற்போது கட்டாரில் தொழில் புரிந்து வருகின்றார். அம்மாவுடன் வாழ்ந்து வருகின்ற எனக்கு 2 தங்கைகள் மற்றும் ஒரு தம்பியும் உள்ளனர். அத்துடன் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலும் இவ்விளையாட்டை எந்தவொரு இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தாரும், பாடசாலையும் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமைக்கு இந்த தருணத்தில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், எஸ். பாஸ்கரன் ஆசிரியரின் வழிகாட்டலுடன் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று இந்நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலை விளையாட்டு விழாவில் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு இறுதித் தடவையாக களமிறங்கிய கோலூன்றிப் பாய்தலின் தேசிய சாதனையாளரும், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியுமான அனித்தா ஜெகதீஸ்வரன், குறித்த போட்டியில் 3.30 மீற்றர் உயரம் தாவி பாடசாலை விளையாட்டு விழா சாதனையொன்றை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் ஜொய்சன் மீண்டும் சாதனை Joyson.jpg

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும் தங்கப் பதக்கத்தை வென்று புதிய மைல்கல்லை எட்டினார்.

பாடசாலை விளையாட்டு விழாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இம்முறையும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் 4.45 மீற்றர் உயரம் தாவி புதிய பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

எனினும், ஜொய்சனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த சக வீரரான தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். டிலக்ஷன், 4.15 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆரம்பத்தில் 4.15 மீற்றர் உயரத்தை ஒரே முயற்சியில் தாவிய ஜொய்சன், டிலக்ஷன் தாவிய 4.25 மீற்றர் மற்றும் 4.35 மீற்றர் உயரங்களைக் கடந்து நேரடியாக 4.45 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு தீர்மானித்தார். எனினும், குறித்த உயரத்தை இறுதி முயற்சியில் வெற்றிகொண்ட அவர், மற்றுமொரு முயற்சியாக 4.62 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு தீர்மானித்தார்.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக மைதானத்தில் காணப்பட்ட ஈரலிப்பு தன்மையால் ஜொய்சனுக்கு அந்த உயரத்தை தாவ முடியாமல் போனது. இதனையடுத்து அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய 4.45 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜொய்சனுக்கு எப்பொழுதும் போட்டியாக இருக்கின்ற மகாஜனா கல்லூரி மாணவனான எஸ். டிலக்ஷன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் வகிக்கின்ற நெப்தலி ஜொய்சன், ஆரம்ப காலத்தில் பாஸ்கரன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்வரன் மற்றும் பிரதீப் ஆசிரியர்களிடம் பயிற்சிகளைப் பெற்றுவந்த அவர், 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை பங்குபற்றிய போட்டிகளில் 7 தேசிய சாதனையுடன் 10 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றிய ஜொய்சனுக்கு தவிர்க்க முடியாத ஒரு சில தடங்களினால் வெற்றிபெற முடியாமல் போனது.

இந்நிலையில் போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜொய்சன் கருத்து வெளியிடும் போது, ”அகில இலங்கை மட்டத்தில் 10ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான எனது பயிற்சியாளருக்கும், பாடசாலைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி தொடர்ந்து தங்கப்பதக்கங்களை வென்று வருகின்ற நெப்தலி ஜொய்சன், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இடம்பெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொள்ளவும், அதன்பிறகு தெற்காசிய மற்றும் ஆசிய போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கமொன்றை பெற்றக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, 4.05 மீற்றர் உயரத்தைத் தாவிய நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த உஷான் திவங்க பெரேரா வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

ஈட்டி எறிதலில் சங்கவிக்கு 2ஆவது தங்கம்Sangavi.jpg

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி, இவ்வருடத்தில் தான் பங்குபற்றிய தேசிய மட்டப் போட்டிகளில் 2ஆவது தடவையாகவும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் குறித்த போட்டியில் 37.44 மீற்றர் தூரத்தை எறிந்து 35.00 மீற்றர் வர்ண சாதனையை முறியடித்து சாதனையையும் படைத்தார்.

2014ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆகிய இரு மைதான நிகழ்ச்சிகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சங்கவி, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலும் சங்கவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

எனினும், கோலூன்றிப் பாய்தலில் அதிக திறமைகளை வெளிப்படுத்திய அவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2ஆவது இடத்தையும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்துறை ஆசிரியரான மதனரூபனிடம் பயிற்சிகளைப் பெற்றுவருகின்ற சங்கவி, எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி தேசிய சாதனையொன்றை நிகழ்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக எமது இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.

இந்நிலையில், 36.44 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய வர்ண சாதனையுடன் கொழும்பு மியூசியஸ் கல்லூரியைச் சேர்ந்த நெலும் இமல்சா 2ஆவது இடத்தையும், 33.80 மீற்றர் தூரத்தை எறிந்து அம்பாந்தோட்டை கஹவத்தை மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹசினி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

உயரம் பாய்தலில் ஹெரினா அபாரம்

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் கலந்துகொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரகுமார் ஹெரினா, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் குறித்த போட்டியில் 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி இவ்வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1.55 மீற்றர் உயரத்தைக் கொண்ட பாடசாலை வர்ண சாதனையையும் அவர் முறியடித்தார்.

இந்நிலையில், எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த வி.சந்துனிகா, 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி 2ஆவது இடத்தையும், அம்பாறை டி.எஸ் சேனநாயக்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த துல்ஷானி பெர்ணாந்து, 1.55 மீற்றர் உயரம் பாய்ந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி போட்டிகளின் 2ஆவது நாளில் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் 66 புள்ளிகளைப் பெற்ற வட மாகாணம் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துவுக்கு கிடைத்தது தங்கப்பதக்கம்

 
ஈட்டி எறிதல்  போட்டியில் சாவகச்சேரி  இந்துவுக்கு கிடைத்தது  தங்கப்பதக்கம்
 
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 18 வய­துக்கு உட்­பட்ட பெண் க­ளுக்­கான ஈட்டி எறி­த­லில் சாவ­கச்­சேரி இந்­துக் கல் லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.சங்­கவி தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

கொழும்பு திய­கம மகிந்த ராஜ­பக்ச மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற 18 வயது பெண்­கள் பிரிவு ஈட்டி எறி­த­லில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித் துவம் செய்த எஸ்.சங்­கவி 37.34 மீற்­றர் தூரத்துக்கு எறிந்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்துள்­ளார்.

http://newuthayan.com/story/36634.html

கோலூன்றிப் பாய்தலில் அருணோதய வீராங்கனைக்குத் தங்கம்

 
கோலூன்றிப் பாய்தலில் அருணோதய வீராங்கனைக்குத் தங்கம்
 
 

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கோலூன்­றிப் பாய்­த­லில் 20வயது பெண்­கள் பிரி­வில் அரு­ணோ­த­யக் கல்­லூரி வீராங்­கனை தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

கொழும்பு திய­கம மகிந்த ராஜ­பக்ச மைதா­னத்­தில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

நேற்று நடை­பெற்ற 20வயது பெண்­கள் பிரிவு கோலூன்­றிப் பாய்­த­லில் அள­வெட்டி அரு­ணோ­த­யக் கல் லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த வ.சாத்­வீகா 3.00 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

http://newuthayan.com/story/36628.html

Link to comment
Share on other sites

வயாவிளான் மத்தியின் வீராங்கனைக்கு வரவேற்பு

 
 
வயாவிளான் மத்தியின் வீராங்கனைக்கு வரவேற்பு
 
 

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வயாவிளான் மத்திய கல்லூரி வீராங்கனை ரெஜீனாவுக்கு கல்லூரிச் சமூ கத்தால் நேற்றுமுன்தினம் சிறப்பான வரவேற்பு வழங்கப் பட்டது.

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி அண்மையில் நடை பெற்று முடிந்தது.

ரெஜீனா 20 வயது பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரி வில் 107 கிலோ பளுவைத்தூக்கி தங்கப் பதக்கத்தைத் தன தாக்கியிருந்தார்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மட்டப் ேபாட்டியிலும், தெற்காசிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/36591.html

தேசிய உயரம்பாய்தலில் மகாஜனாவின் ஹெரீனா தங்கப் பதக்கம் வென்றார்

 
 
தேசிய உயரம்பாய்தலில் மகாஜனாவின் ஹெரீனா தங்கப் பதக்கம் வென்றார்
 

இலங்கைப் பாட சாலைகளுக்கு இடையிலான தட களத் தொடரில் உயரம் பாய்தலில் மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சந்திர குமார் ஹெரீனா தங்கப் பதக்கத் தைச் சுவீகரித் தார்.

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தட களத் தொடர் கொழும்பு தியகம ராஜபக்ச மைதா னத்தில் நடை பெற்று வருகிறது.

18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு உயரம் பாய்தல் நேற்று நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சந்திர குமார் ஹெரீனா 1.58 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

http://newuthayan.com/story/36597.html

Link to comment
Share on other sites

 

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாணவிகள் ஆதிக்கம்

ath-2-1.jpg

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் 4ஆவது நாள் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் அனைத்து இடங்களையும் பெற்று தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.

 

இதில் 3.10 மீற்றர் உயரம் தாவிய யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன், 2ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வென்றார்.

எனினும், இப்போட்டியில் 3.20 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு ஹெரினா எடுத்த முயற்சி துரதிஷ்டவசமாக தவறவிடப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்ற ஹெரினா, அவ்வருடம் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.49 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வந்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.70 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போதைய வெற்றியின் பிறகு ThePapare.com இணையத்தளத்துக்கு ஹெரினா கருத்து வெளியிடுகையில், நான் 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்றேன். இவ்விளையாட்டை எந்தவொரு இடையூருமின்றி மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தாரும், பாடசாலையும் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமைக்கு இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல சுபாஸ்கரன் ஆசிரியர் மற்றும் எனது அக்காவான அனிதாவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று இந்நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” என அவர் தெரிவித்தார்.

 

ஹெரினா கோலூன்றிப் பாய்தலைப் போல நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியிலும் 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், புதிய வர்ண சாதனையையும் நிகழ்த்தினார்.

இதற்கு முன்னர் இவர், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.50 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ம்முறை ஈட்டி எறிதல், கோலூன்றிப் பாய்தல் மற்றும் தட்டெறிதல் ஆகிய மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி, ஹெரினாவுடன் போட்டியிட்டு இம்முறையும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் குறித்த போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தை தாவி புதிய வர்ண சாதனையும் நிகழ்த்தினார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சங்கவி, 37.44 மீற்றர் தூரத்தை எறிந்து பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

 

2014ஆம் ஆண்டு ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆகிய இரு மைதான நிகழ்ச்சிகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சங்கவி, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் 2ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மற்றுமொரு மாணவியான என் டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்படி, அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்ற . கனாதீபனின் வழிகாட்டலின் கீழ் சங்கவி மற்றும் டக்சிதா ஆகிய மாணவிகள் இவ்வாறு வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தனர்.

அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

தங்கம், வெள்ளி, வெண்கலம் எல்லாம் வடமாகாணத்துக்கே

கோலூன்றிப் பாய்தலில் வழித்துத் துடைத்து சிறப்பு அடைவு

 
தங்கம், வெள்ளி, வெண்கலம் எல்லாம் வடமாகாணத்துக்கே
0
SHARES
 

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்டத் தடகளத் தொடரில் 18 வயது ஆண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்துக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று அத்­தனை பதக்­கங்களும் கிடைத்­தன.

கொழும்பு திய­கம மகிந்த ராஜ­பக்ச மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

18 வய­துக்கு உட்­பட்ட ஆண்­கள் பிரிவு கோலூன்­றிப் பாய்­த­லில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த அ.புவி­த­ரன் 4.50 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், அள­வெட்டி அரு­ணோ­த­யக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த ர.யது­சன் 4.00 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கேது­சன் 3.90 மீற்­றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://newuthayan.com/story/36976.html

Link to comment
Share on other sites

மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி

 
  
Jaffna rule Pole Vault while Walala dominate 800m on 4th day
 

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் 4ஆவது நாளான இன்றைய தினம் (14), 17 இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.

எனினும், சீரற்ற காலநிலையால் போட்டிகளை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதுடன், போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்களும் பல்வேறு சங்கடங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தலா மூன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.

அத்துடன், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவிகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டு தமது பாடசாலைகளுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கோலூன்றிப் பாய்தலில் ஹெரினா, சங்கவிக்கு வெற்றி

Hareena-300x200.jpgஇன்றைய தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 3.10 மீற்றர் உயரம் தாவி அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

Daksitha-300x184.jpgஇந்நிலையில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான சந்திரசேகரன் சங்கவி, 2.90 மீற்றர் உயரத்தை தாவி வெள்ளிப்பதக்கத்தையும்,  என். டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீளம் பாய்தலில் சாதனை படைத்தார் சதீஸ்

Sathees-300x200.jpgயாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சதீஸ், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். அவர் குறித்த போட்டியில் 6.08 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

33 வருடகால பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வென்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பெற்றது.

இந்நிலையில், 5.64 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சிலாபம் அம்பகந்தவில் புனித ரொஜஸ் கல்லூரியைச் சேர்ந்த நிபுன் கனிஸ்க அப்புஹாமி வெள்ளிப்பதக்கத்தையும், 5.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த டி சில்வா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

குண்டு எறிதலில் ரிஷானனுக்கு 3ஆவது இடம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ரிஷானன் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.90 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற இதே விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் 13.70 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் களமிறங்கியிருந்த ரிஷானன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று மைதான நிகழ்ச்சிகளில் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு இரட்டை தங்கத்தை பெற்றுக்கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 15.96 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், வெலிப்பன்ன சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுபுன் மதுசர, 14.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

ஹார்ட்லி கல்லூரிக்கு 2 பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றிருந்தனர்.

Mithunraj-200x300.jpgஇதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட எஸ்.மிதுன் ராஜ், 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

சிலாபம் புனித மரியார் கல்லூரியைச் சேர்ந்த கிரிஸ்மால் பெர்ணான்டோ, 60.08 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், குருநாகல் ஸ்ரீ நிஸ்ஸங்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த லக்மால் ஜயரத்ன, 54.50 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

 

எனினும், இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த டி. அபிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 39.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த போட்டியில் 42.72 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சிலாபம் புனித ரீட்டா கல்லூரியைச் சேர்ந்த மலிந்த மெத்தசிங்க தங்கப்பதக்கத்தையும், 40.27 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சவீன் ருமேஷ்க சில்வா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

மேல் மாகாணம் முதலிடம்

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் புள்ளிகள் பட்டியலில் 905 புள்ளிகளைப் பெற்று மேல் மாகாணம் முதலிடத்தையும், 401 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 295 புள்ளிகளைப் பெற்று வட மேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன், தென் மாகாணம் 280 புள்ளிகளையும், சப்ரகமுவ மாகாணம் 250 புள்ளிகளையும், வட மாகாணம் 144 புள்ளிகளையும், கிழக்கு மாகாணம் 36 புள்ளிகளையும், தலா 34 புள்ளிகளுடன் ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் கடைசி இரு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

800m Final results

4-1.png

5-1.png

6-1.png

7-1.pngFull Results of Day 03

8-2.png

9-1.png

10-1.png

11-1.png

12-1.png

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் அருண, ஹசினி சிறந்த வீரர்களாக முடிசூடல்

Aruna-250best-player-696x464.jpg
 

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன இணைந்து நடாத்திய 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன தெரிவானார்.

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 47.19 செக்கன்களைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற அருண, 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (21.63 செக்கன்கள்) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 13.22 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற வென்னப்புவை திருக்குடும்ப கன்னியஸ்தர் மடத்தைச் சேர்ந்த பி. எம். ஹசினி பபோதா தெரிவானதுடன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிலும் இவ்விருதை ஹசினி தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து 700 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6300 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை போட்டித் தொடரின் மெய்வல்லுனர் கடந்த 11ஆம் திகதி தியகம மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட 5 புதிய வயதுப் பிரிவுகளாக நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், எறிதல் நிகழ்ச்சிகளில் அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஸ். பசிந்து பவந்த (20 வயதின் கீழ் ஆண்கள் ஈட்டி எறிதல் 57.12 மீற்றர்) அதி சிறந்த வீரராகத் தெரிவானார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேளி ஓட்டப் போட்டியை 13.91 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த சாதனையை முறியடித்த  கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியசம், சட்டவேளி ஓட்டப் போட்டியில் சிறந்த வீரராகத் தெரிவானார்.

ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

மாரிஸ் ஸ்டெல்லா, வலல்ல ஏ. ரத்நாயக்கவுக்கு அதிக கௌரவம்

walala-team-300x200.jpgஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட 12 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக கொழும்பு றோயல் கல்லூரியும், 2ஆவது இடத்தை மாவனல்லை ஸாஹிரா கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியஸ்தர் மடமும் தெரிவாகின.

14 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியும் சம்பியனாகத் தெரிவாகின.

அத்துடன், 16 வயதுப் பிரிவின் ஆண்கள் சம்பினாக சிலாபம் புனித மரியார் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையும் தெரிவாகின.

இதேவேளை, 18 வயதுப் பிரிவில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகியதுடன், 20 வயதுப் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியனாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில், 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகள் அடங்கலாக ஆண்கள் பிரிவில் 105 புள்ளிகளைப் பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, தொடர்ச்சியாக 8ஆவது தடவையாகவும் ஒட்டுமொத்த சம்பியனானது.

அதேபோன்று, பெண்கள் பிரிவில் 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் 187 புள்ளிகளைப் பெற்ற வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, தொடர்ச்சியாக 14ஆவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக முடிசூடிக்கொண்டது.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா சம்பியனாக மேல்மாகாணம்

WLA_6231-300x200.jpg

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1268 புள்ளிகளைக் குவித்த மேல்மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 526 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 438 புள்ளிகளைப் பெற்ற வட மத்திய மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த வருடத்தைப் போன்று இம்முறை போட்டித் தொடரிலும் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணம் வெறும் 38 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இடம் மாகாணம் புள்ளிகள்
1 மேல் மாகாணம் 1268
2 மத்திய மாகாணம் 526
3 வட மேல் மாகாணம் 438
4 சப்ரகமுவ மாகாணம் 350
5 தென் மாகாணம் 347
6 வட மாகாணம் 158
7 வட மத்திய மாகாணம் 57
8 ஊவா மாகாணம் 52
9 கிழக்கு மாகாணம் 38

மைதான நிகழ்ச்சிகளில் வடக்குக்கு அதிக கௌரவம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலைகள், இம்முறை போட்டித் தொடரிலும் கோலூன்றிப் பாய்தல் உள்ளடங்கலாக ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.

இதில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி, 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், யாழ். மகாஜனா கல்லூரி, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களையும் வென்றிருந்ததுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரி, 2 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் வி. சத்விகா

பாலசுப்ரமணியம் கிரிஜா

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

3.10 மீற்றர்

2.85 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் கே. நெப்தலி ஜொய்சன்

எஸ். டிலக்ஷன்

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி

4.45 மீற்றர்

4.15 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் ஆ. புவிதரன்

ஆர். யதூஷன்

கே. கேதூஷன்

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி

யாழ். மகாஜனா கல்லூரி

4.50 மீற்றர்

4.00 மீற்றர்

3.90 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் சந்திரசேகரன் சங்கவி யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி 37.44 மீற்றர் தங்கப்பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் சந்திரகுமார் ஹெரினா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி 1.58 மீற்றர் தங்கப்பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் சந்திரசேகரன் ஹெரினா

சந்திரசேகரன் சங்கவி

என். தக்சிதா

யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி

3.10 மீற்றர்

2.90 மீற்றர்

2.90 மீற்றர்

தங்கப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் எஸ். சதீஸ் யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரி 6.08 மீற்றர் தங்கப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஸ்.மிதுன் ராஜ் யாழ். ஹார்ட்லி கல்லூரி 53.65 மீற்றர் வெண்கலப்பதக்கம்
18 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான தட்டெறிதல் டி. அபிஷாந்த் யாழ். ஹார்ட்லி கல்லூரி 39.59 மீற்றர் வெண்கலப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் எம்.திவன்செயன் யாழ். இமயனன் அரசினர் தமிழ் பாடசாலை 47.89 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் எஸ். பிரகாசராஜ் யாழ். ஹார்ட்லி கல்லூரி 40.35 மீற்றர் வெள்ளிப்பதக்கம்

கிழக்கு மாகாணத்திற்கு பின்னடைவு

அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பல நட்சத்திர மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கி வருகின்ற கிழக்கு மாகாணம், அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த வருடத்தைப் போல இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு பிரபல பாடசாலையோ அல்லது பெண் வீராங்கனைகளோ வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.

எனினும், கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளான கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரி, மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் ஏ. ஆபித் கிண்ணியா முள்ளிபொத்தானை மத்திய கல்லூரி 6.89 மீற்றர் வெண்கலப்பதக்கம்
14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் பரமேஸ்வரன் குகேந்திரன் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 12.99 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் ஜே. ரிஷானன் களுதாவளை மகா வித்தியாலயம் 13.90 மீற்றர் வெண்கலப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஏ.சி அப்துல்லாஹ் அக்கரைப்பத்து அல் – கலாம் மஹா வித்தியாலயம் 14.13 செக்கன்கள் வெண்கலப்பதக்கம்

பிற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பிரகாசிப்பு

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையைக் காணமுடிந்தது.

இதில் கண்டி, மாவனல்லை, நிக்கவெரட்டிய, புத்தளம், பாணந்துறை மற்றும் கொழும்பைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி பெயர் பாடசாலை அடைவு பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் ஏ.எம் அப்ரிட் சிலாபம் சவரானா முஸ்லிம் வித்தியாலயம் 1.93 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஏ.எஸ்.எம் சபான் நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மகா வித்தியாலயம் 10.96

செக்கன்கள்

வெள்ளிப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஏ.எஸ்.எம் சபான் நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மகா வித்தியாலயம் 21.61 மீற்றர் தங்கப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் எம்.என் ரஹீப் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை 13.68 செக்கன்கள் தங்கப்பதக்கம்
12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் எம்.என் ரஹீப்

அதீப் முஹிடீன்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை

கொழும்பு ஏசியன் சர்வதேச பாடசாலை

8.48 செக்கன்கள்

8.54 செக்கன்கள்

வெள்ளிப்பதக்கம்

வெண்கலப்பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சபியா யாமிக் கண்டி விஹாரமஹாதேவி வித்தியாலயம் 12.63 செக்கன்கள் வெண்கலப்பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஹஸ்னா மிஸாரா டீன் பாணந்துறை அகமதி மகளிர் கல்லூரி 34.79 மீற்றர் வெள்ளிப்பதக்கம்
 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.