• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

Recommended Posts

ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

UNESCO

'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழப்பு' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, பாலஸ்தீனத்தை அதன் முழு நேர உறுப்பினராக அங்கீகரித்தது. அப்போதே இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு கொடுக்கும் நிதியையும் நிறுத்திக்கொண்டது. பின்னர், அமெரிக்காவுக்கும் யுனெஸ்கோவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/world/104866-us-quits-un.html

Share this post

Link to post
Share on other sites
யுனெஸ்கோவிலிருந்து வெளியேறவுள்ள அமெரிக்கா - இஸ்ரேல்! 
[Saturday 2017-10-14 09:00]
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்தது. யுனெஸ்கோவில் இருந்து விலகுவதற்கு இதையும் ஒரு காரணமாக அமெரிக்கா கூறியுள்ளது. யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா விலகும்போது அந்த சமயத்தில் இஸ்ரேலும் விலகுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி வெளியுறவுத்துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=191988&category=WorldNews&language=tamil

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this