Sign in to follow this  
தமிழ் சிறி

டெல்லி முதல்வரின், கார் திருட்டு.

Recommended Posts

Delhi CM Aravind Kejriwal's car theft in Secretariat

தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கார் அபேஸ்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் நீல நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.

அக்கம்பக்கங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Share this post


Link to post
Share on other sites

Delhi CM Aravind Kejriwal's car theft in Secretariat was found

தலைமை செயலகத்தில் காணாமல் போன டெல்லி முதல்வரின் கார் உ.பி.யில் மீட்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இந்த கார் உ.பி.மாநிலம் காசியாபாத்தில் மீட்கப்பட்டது.

டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். இவருக்கு பரிசாக வந்த நீல நிற மாருதி வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.

அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் காணாமல் போன கார், உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாதில் கண்டெடுக்கப்பட்டது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this