Jump to content

இசைஞானி


Recommended Posts

இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு 

1)

1992 ஆம் ஆண்டு "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடல் பாடாத இடம் எங்கும் இல்லை, அந்த பாடலை கேட்கும் போது ஒரு புதுவிதமான இசையொலி, இதற்கு முன் கேட்காத ஆகச்சிறந்த ஒலிக்கலவை ரோஜாவில் பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு கண்ணாலனே, மலர்களே, வராக நதிக்கரையோரம், முஸ்தபா, என்னவிலை அழகே போன்ற பாடல்கள் செவிக்கு ஒரு புதுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்தியது, ராஜாவின் பாடல்களை விட இதுபோன்ற பாடல்கள் ஒரு மாயை ஏற்படுத்தியது, அப்போது என்னுள் தோன்றியது அந்தந்த காலக்கட்டத்தில் வந்த ரஹ்மான் பாடல்கள் நிஜமாகவே ஒரு புயலை கிளப்பியது, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வரத்துவங்கியது,  ராஜாவின் 'பூமணி' என்ற படத்தில் "எம்பாட்டு எம்பாட்டு" என்ற பாடல் ராஜாவின் குரலில் ஒலிக்க துவங்கியது அதனை தொடர்ந்து 'ராமன் அப்துல்லா', 'காதல் ரோஜாவே' போன்ற பாடல்கள் மீண்டும் ராஜா ராஜா தான் என்று உணர்த்தியது. அதன்பிறகு 'காதலுக்கு மரியாதை' படப்பாடல்கள் வெளிவந்து ராஜாவை தனது சிம்மாசனத்தில் அமர வைத்தது.

அப்போதை காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில் அலைவரிசைகளில் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும்போது ஒரு விதமான இசை காட்சிகளின் பின்னணி இசைவரும், அப்போதே என் உள் உணர்வு சொல்லும் இதற்கு ராஜா தான் இசை என்று, சொல்லி வைத்தார்போல் இசை இளையராஜா என்று வரும். சரி இந்த பின்னணி இசையில் வரும் இசைக்கருவி என்ன என்று தேடிப்பார்த்தால், செல்லோவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருப்பார். சரி இந்த இசைக்கருவி பின்னணிக்கு மட்டும் தான் ராஜா பயன்படுத்தி இருக்கிறாரா என்று தேடல் துவங்கியது, ராஜா பாடல்களுக்கும் ;கொடியிலே மல்லிகைப்பூ' போன்ற என்னற்ற பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார், அதன் தொடர்ச்சியாக ஒரு பாடலில் எந்தந்த இசைக்கருவி உபயோகப்படுத்தபட்டது என்று ஆராய்கையில் முன்னிசையில் வயலின், கித்தார், புல்லாங்குழல் போன்ற பயன்படுத்தி இருக்கிறார், அதேபோல இடையிசையிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

பொதுவாகவே ராஜாவின் பாடல்களில் வயலினையும் கித்தாரையும் அந்த பாடலின் பயணத்திற்காக பயன்படுத்தி இருப்பார் அதுபோலவே இந்த இரண்டு இசைக்கருவிகளின் இணைப்பை புல்லாங்குழல், வீணை போன்ற இசைக்கருவிகள் இசைக்க துவங்கும். ஆனால் எத்தனை விதமான இசைக்கருவிகள் இடம்பெற்றாலும் அந்த இசைக்கருவிகளுக்கெல்லாம் பேஸ் கிட்டார் நிச்சயம் இடம்பெறும், ராஜாவின் பாடல்களில் இந்த கருவி மறைமுகமாகவே இசைத்தாலும் இந்த கருவி தான் ஒட்டுமொத்த பாடலையும் வழி நடத்தும்.

சரி எந்தவிதமான சூழலிற்கு இந்த இசைக்கருவிகளை தேர்வு செய்கிறார் என்று பார்க்கையில், உண்மையாகவே ராஜா என்னை ஆட்கொண்டது இந்த இடத்தில் தான் இன்று வரை எனக்கு பிரமிப்பாகவே இருப்பது, ஒரு சோகமான பாடலில் பயன்படுத்தப்படும் ஷெனாய் போன்ற இசைக்கருவிகள், காதல் பாடல்களுக்கும் பயன்படுத்தி இருக்கிறார், உதாரணமாக 'காக்கிசட்டை' படத்தில் "கண்மணியே பேசு" என்ற பாடலின் முன்னிசையாகவே வரும். அப்போது தான் முடிவு செய்தேன் ராஜாவின் இசையை எதைக்கொண்டும் தீர்மானித்துவிட முடியாது என்று, உண்மையாகவே ஒன்றை சார்ந்த அலசலில் அதை ஆராய்ந்து அதில் வெற்றிபெற்றிவிடுவோம், ஆனால் நான் தோற்றுப்போனேன் என்பது தான் நிதர்சனம், அப்படி பாடலில் துவங்கி ராஜாவின் பின்னணியை தொடர்ந்தால் இப்படி ஒரு மனித உயிரால் சாத்தியமா ? என்று எனக்குள் ஒரு கேள்வி.

ராஜாவின் இசை இல்லாத இடைப்பெற்ற காலத்தில் மேலே சொன்ன இசையமைப்பாளர்களின் பாடல்கள் என்னை ரசிக்க வைத்ததே தவிர, அந்த இசையின் மன்னிக்க, அந்த ஒலியின் நுட்பத்தை ஆராய எனக்கு வாய்ப்புகள் ராஜாவின் இசைபோல் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல ராஜாவின் இசையைத் தாண்டி ஒரு பாடலில் இடம்பெறும் பாடகர்களின் குரலும் ஒரு வியப்பாகவே இருக்கிறது, அதற்கு காரணம் திரையில் பாடும் கதாப்பாத்திரங்களின் வாயசைவுக்கு பின்னணி பாடகர்களின் குரல் அச்சுபிசராமல் அந்த குரலாகவே நம்மை நினைக்க வைப்பது, அதிலும் காதல் பாடல்களில் ஜானகி அம்மாவின் குரலில் ஒலிக்கும் கொஞ்சல் ஒருவித உணர்வை கொடுக்கிறதே இது எப்படி சாத்தியம் ?.

இப்படி எல்லாம் ஒரு ஆகச்சிறந்த படைப்பை ராஜா கொடுத்துவிட்ட பின்பும் எனக்கு இசை என்றால் தெரியாது என்றும், எனது எல்லாப் பாடல்களிலும் ஒரு சின்ன சின்ன பிழை இருக்கிறது என்றும் எவனால் சொல்ல முடியும்?.

ராஜாவின் இசையை தவிர எப்படி என்னை மற்ற இசையமைப்பாளர்களின் இசை ஆட்கொள்ளும் என்று நினைக்கையில் பூஜியத்திலே நிற்கிறது மனது. ராஜாவுடன் எவரையும் ஒப்பீடு என்று என்று என்னால் கற்பனைகளில் கூட எண்ண முடியாது.
இந்த இசையை தவிர்த்து எப்படி வாழ்வது?. இந்த ராஜாவின் சாதனைகளை இனி வரும் எவரால் செய்ய முடியும் ?.

ராஜா ஒரு மெட்டமைத்து, அதற்கான இசைக்குறிப்புகளை வெறும் அரைமணி நேரத்திலே எழுதி, அந்த பாடலுக்கு ஒத்திகை செய்யும்போது 50 வயலின் இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் இசைக்கும் போது, அதில் ஒருவர் தவறு செய்தாலும் அதனை ஒரு 20 அடி தூரத்தில் இருந்து கண்டுபிடித்து திருத்துவது மனித வரலாற்றில் சாத்தியமா ?

தேடல் தொடரும்....

- வைரஸ் சைமன் (10.10.2017)

2)

ஆரம்பகாலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

-இளையராஜா

நன்றி : மாலைமலர்

- வைரஸ் சைமன்

 

Link to comment
Share on other sites

இதுதான் ராஜா ராஜாவாகவே இருப்பதன் காரணம் !

பெரிய டைரக்டர் - சின்ன டைரக்டர்... பிரமாண்டம் - லோ பட்ஜெட் என்றெல்லாம் இசையின் தரத்தை மாற்றிக்கொள்ளாதவன். மகா கலைஞன். என்னுடைய ‘அகல்விளக்கு’ படத்தில் அவன் இசையமைத்த பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே... காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே...’ இந்தப் பாட்டை உச்சரிக்காத ராஜாவின் ரசிகர்கள் இருப்பார்களா?

சமீபத்தில் ஒரு நாள் காலை... ராஜாவுக்கு போன் போட்டு, நான் இப்போது இயக்கியிருக்கும் ‘பச்சைக்குடை’ படத்துக்காக ரீரெக்கார்டிங் செய்து தருமாறு கேட்டேன். ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னான். ‘‘படத்தை எடுத்து முடித்து விட்டேன்’’ என்று சொல்லி, ‘பச்சைக்குடை’யின் டி.வி.டி-யைக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம். பெரிய பில் போட்டுவிட்டால் என்ன செய்வது? ‘‘படத்தின் மொத்த பட்ஜெட்டே 16 லட்ச ரூபாய்தான்’’ என்றேன். ‘‘சரி... சரி... பாத்துக்கலாம்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரீரெக்கார்டிங் செய்யும் இந்தக் காலத்தில், வெறும் 16 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நான் எடுத்த படத்துக்கு அவன் பின்னணி இசைத்தான்.

படத்தின் டி.வி.டி-யைக் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களில் ராஜாவின் உதவியாளர் சுப்பையா அழைத்தார். ‘‘பின்னணி இசை ரெடி... வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். ராஜா இருந்த பிஸியில் ஒரே நாளில் எப்படி சாத்தியம்? போனேன். ‘‘ராஜா சார் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டார்’’ என்றார் சுப்பையா.

ராஜா வந்தான். ‘‘ரெக்கார்டிங் ஸ்டூடியோ எல்லாம் வேண்டாம். எடிட்டிங்லயே போஸ்ட் பண்ணிடு. பணம் மிச்சமாகும்’’ என்றான். ஒரு பைசாகூட வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்காகப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்போது, என்னிடம் ஒரு பைசாவும் வாங்கிக்கொள்ளாமல் ஓர் இசை ராஜாங்கமே நடத்திவிட்டான்.

‘வனங்களை, மரங்களைக் காக்க வேண்டும்’ என்பதுதான் படத்தின் தீம். அதை முழுமையாக உணர்ந்து இசையமைத்துக்கொடுத்தான். நைஜீரியாவில் ஒரு பழங்கதை உண்டு. அந்த மக்கள் அவர்களின் குலதெய்வத்துக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறார்கள். கடவுள் ஒரு கேள்வி கேட்கிறார்: ‘‘எனக்குக் கோயில் கட்ட நினைக்கிறீர்களே... உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறதா?’’

‘‘இல்லை’’ என்கிறார்கள். ‘‘உங்கள் எல்லோருக்கும் வீடு கிடைக்கும்வரை நான் இந்த மரத்திலேயே தங்கிக்கொள்கிறேன்’’ என்கிறது தெய்வம். நைஜீரிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கவில்லை. அதனால், அவர்களின் தெய்வம் இன்னமும் மரங்களில்தான் வசிப்பதாக அந்த மக்கள் நம்புகிறார்கள். மரத்தை அழிப்பதை தெய்வ குற்றமாக நினைக்கிறார்கள்.

‘பச்சைக்குடை’ கதையின் அடிநாதம் அதுதான். பழங்குடி மக்கள் தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப் பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.

ராஜாவின் இசையைக் கேட்டால் அந்தத் தொல்குடியின் பாரம்பர்யத்தை உணர முடியும்.

கதாசிரியர், இயக்குனர் திரு.செல்வராஜ்
நன்றி : நவீனன்

வைரஸ் சைமன் (13.10.2017)

 

 

 

ராஜாவின் மறுபக்கம் !

நான் இளையராஜாவின் மீது இப்படி வெறி கொண்டு இருப்பதற்கு பின் வரும் சம்பமும் ஒரு காரணம்...

கவிஞர் பிறைசூடன் பாடல் எழுத முதலில் அவரது நண்பர் இயக்குனர் ஆர்.சி.சக்தி அவர்களின் மூலமாக அமரர் திரு.எம்.எஸ்.வி
அவர்களை சந்தித்தார், அப்போது 'சிறை' என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி அவர்கள் அந்த படத்திற்கு ஒரு பாடலை எழுதி தர பிறைசூடனிடம் சொல்ல "ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடலை எழுதி கொடுத்தார் கவிஞர். 

இரண்டு மாதங்களுக்கு பின்பு பிறைசூடன் ஒரு உணவு விடுதியில் உணவு உட்கொண்டிருந்தபோது வானொலியில் இவர் எழுதி பாடல் ஒலிப்பரப்பட்டது.
அந்த பாடலை கேட்ட மகிழ்ச்சியில் தானும் பிரபலமான கவிஞராகலாம் என்று எண்ணிக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தது பொய்த்துபோனது, அந்த பாடலை எழுதிய பின்பு 2 வருடங்களாக அவருக்கு எந்த வாய்ப்பும் யாரும் தரவில்லை.

இதை அறிந்த இளையராஜா தன்னுடைய 'கண்ணுக்கொரு வண்ணக்கிளி' என்ற படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார். முதல் பாடலை எழுதிய பிறைசூடனின் வரிகள் ராஜாவிற்கு பிடித்து விடவே, மற்றுமொரு பாடலையும் எழுதிக்கொடுக்க சொன்னார். துரதிஷ்டவசமாக படம் தொல்வி அடைந்தது.

அதன் தொடர்ச்சியாக ராஜா 'என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு' என்ற திரைப்படத்திற்கு ஒரு மெட்டமைத்து அதை கேசட்டில் பதிவேற்றம் செய்து அந்த மெட்டிற்கு பாடலை எழுதிகொடுக்கசொன்னார்.

கவிஞரிடமோ டேப்ரெக்கார்டர் இல்லை, இதனால் அவர் வீட்டின் அருகே உள்ளவர்களிடம் கேட்க ஒருவரும் டேப்ரெக்கார்டர் தரவில்லை, ஆனாலும் கவிஞரின் மனைவி ஒருவரிடம் கேட்க, ஒரு முறை தான் கேட்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரது வீட்டிற்கு அழைத்து அந்த ஒலினாடாவை ஒலிபரப்பு செய்தார், அப்படி ஒரு முறை அந்த மெட்டை கேட்டு எழுதிய பாடல் தான் இது "உயிரே உயிரின் ஒலியே".

அதன் பின்பு தொடர்ச்சியாக 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இடம்பெற்ற "ஆட்டமா தேரோட்டமா", இதயம் படத்தில் இடம்பெற்ற "இதயமே இதயமே" போன்ற எண்ணற்ற பாடலை கொடுத்து உயர்த்தினார் என்பது மிகையில்லை...

கூடுதல் தகவலாக... பிறைசூடன் உயிரே உயிரின் பாடலை எழுதியபின்பு டேப்ரெக்கார்டர் இருந்தால் தான் பாடல் எழுத முடியும் என்று எண்ணி சிறுகசிறுக சேர்த்து வைத்த பணத்தில் ஒரு டேப்ரெக்கார்டரையும் வாங்கினார். இந்த பாடலை எழுதியதற்கு சம்பளம் வாங்க இயக்குனர் திரு.பாசிலிடம் சென்ற கவிஞருக்கு ஒரு டேப்ரெக்கார்டரை வாங்கி கொடுத்து சம்பளத்தையும் கொடுத்து அனுப்பினார் இயக்குனர்...

ராஜாவின் இசையில் மட்டுமல்ல, இதுபோன்ற உதவிகளும் ராஜாவை ஒரு படி மேல் வைத்திருக்கிறது என் இதயம்....

- வைரஸ் சைமன் (13.08.2017)

 

Source_ Facebook

Link to comment
Share on other sites

 

‘பாண்டியன்’ படத்துக்கான பாடல் இசைப் பணியில் இருந்த இளையராஜா அவர்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்டுடியோவில் எப்போதும் ரொம்ப கவனமாக பாடல் உருவாக்கும் பணியில் இருப்பவர், என்னிடம் ஒரு பாடலின் டியூனை வாசித்துக் காட்டினார். ‘‘ரொம்ப அருமையா இருக்கு ராஜா. பாடல் எழுதி ரெக்கார்டிங் போயிடலாமே’’ என்று சொன்னேன். அப்போது இளையராஜா அவர்கள், ‘‘இந்தப் பாடலை நான் அமைக்கவில்லை. என்னோட மகன் கார்த்திக் ராஜா உருவாக்கினான்’’ன்னு சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இளையராஜாவின் இசை தரத்துக்கு இணையாக அவரது மகன் கார்த்திக் ராஜா இப்படி ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறாரே என்று மேலும் சந்தோஷப்பட்டேன்.

இந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்து முடித்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, கார்த்திக் ராஜாவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினோம். ராஜாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். அப்படி உருவான அந்தப் பாட்டுத்தான், ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…’ என்ற பாடல்.

‘பாண்டியன்’ பாடல்களைப் போல படத்துக்குப் பின்னணி இசையும் மிக முக்கிய பங்களிப்பாக தேவைப்பட்டது. என்ன தேவை என்ற விஷயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டால் போதும், கேட்டதைவிட 200 மடங்கு அதிக மாகவே கொடுத்துவிடுவார். ‘பாண்டியன்’ படத்தோட வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரிய பலம். ராஜா மட்டுமின்றி அவர் மகன் கார்த்திக் ராஜாவும் துணை இருந்தார் என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
நன்றி : நவீனன்

- வைரஸ் சைமன் (14.10.2017)

"ஸ்டைலா கெத்தா சொல்வேன், நான் இளையராஜா ரசிகன்னு!"

சில மாதங்களுக்கு முன்பு இசைஞானி எஸ்.பி.பி அவர்களின் மேல் காப்புரிமை வழக்கு தொடுத்தார், அப்போது எங்கே பார்த்தாலும் இளையராஜா பணத்தாசை பிடித்தவர், கர்வம் பிடித்தவர் என்று எத்தனையோ பேர் ஏளனம் செய்தார்கள் ஏராளம்...

அப்போது ராஜாவின் மேல் எந்த தவறும் இல்லை என்று பதிவும் செய்தேன்... இப்போது இந்த விஷயத்தை சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு...

இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் தான் தயாரித்து இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் என் மனதிற்கு மிகவும் பிடித்த படம், காரணம் இசைஞானியின் அசாத்தியமான பின்னணி இசை.

இந்த படத்திற்கு இசையமைக்க ராஜாவிடம் சென்ற மிஷ்கினிடம் என்னால் இசையமைக்க முடியாது என்று மறுத்துவிட்டார், அதன் பின்  சமரசம் ஏற்பட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டு இசையும் அமைத்துக்கொடுத்தார் ராஜா.

படம் வசூல் ரீதியாக வெற்றியடையாததால் மிஷ்கின் அவர்களே கூட சுவரொட்டி ஒட்டினார் என்பதும் நாம் அறிந்த வருத்தமளித்த செய்தியே... 

இந்த செய்தி ராஜாவின் காதிற்கு போக, மிஷ்கினை 
அழைத்த ராஜா, இந்த படத்திற்கு எனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை, இசைகலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள் என்று கூறிவிட்டார்.

ராஜாவிடம் சற்றும் எதிர்பாராத மிஷ்கின், ராஜாவிற்கு நன்றி கடனாக பின்னணி இசையை ஒரு  குறுந்தகடில் பதிவு செய்து இலவசமாகவே ரசிகளுக்கு வழங்கினார், அதுமட்டுமல்ல தலைப்பில் இளையராஜா என்று போட்டுவிட்டு அதன் கீழே மிஷ்கின் என்று போட்டார்.

அதுமட்டுமல்ல இது போன்ற பல படத்திற்கு சம்பளம் வாங்காமலே இசையமைத்து கொடுத்திருக்கிறார் ராஜா. இந்த படத்திற்கு மட்டுமல்ல 80 களில் இளையராஜா என்ற ஒரு பெயர் இருந்தால் வசூல் ஈட்டிவிடலாம் என்று எண்ணி உயர்ந்த தயாரிப்பாளர்கள் ஏராளம், அந்த சமயத்தில் தனது இசைக்கு இவ்வளவு தான் வேண்டும் என்று ராஜா கேட்டதில்லை, 

இப்போது சொல்லுங்கள் அன்று ராஜாவை ராஜா பணத்தாசை பிடித்தவர் என்று பழித்த முகங்களே உங்கள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வீர்கள்... 

மீண்டும் ஒரு முறை தலைப்பை படியுங்கள் ஏன் அப்படி தலைப்பை போட்டேன் என்று புரியும்...

- வைரஸ் சைமன் ( 15.07.2017 )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்பட வேண்டிய அருமையான செய்திகள், தொடருங்கள் அபார ஜிதன்.....! tw_blush:

Link to comment
Share on other sites

இயக்குனர் பாண்டியராஜனின் 'ஆண்பாவம்' படத்திற்கு பின்னணி இசை அமைத்த ராஜா, அதில் திரைக்கதையும், நகைச்சுவை காட்சியும் 
ராஜாவிற்கு பிடித்துவிடவே அடுத்தது பாவலர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் பண்ணுவோம் என்று இயக்குனரிடம் சொன்னார்.

ராஜா சொன்னது போலவே படத்திற்கு 'கற்புகரசன்' என்றும் பெயரிட்டு பூஜையும் போடப்பட்டது.

அந்த படத்திற்கு இசையமைக்கப்பட்ட பாடல்களும் சிறப்பாக வந்தது, இடையில் சில காரணங்களால் படம் பாதியிலே நின்றுவிட, ராஜாவின் தயாரிப்பில்  
பஞ்சு அருணாச்சலம் இயக்கத்தில் வேறு ஒரு படத்திற்கு  பாடல்கள் யன்படுத்தப்பட்டது.

அந்த படத்தில்  இடம்பெற்ற அனைத்தும் அமுதான பாடல்கள் என்றாலும் ஒரு தெய்வீக குரலில் வந்த பாடல் மட்டும் ஆகச்சிறந்த படைப்பாகவே வெளிவந்தது. அப்படி வெளிவந்த பாடல் தான் 'புதுப்பாட்டு' படத்தில் இடம்பெற்ற ராஜாவும், ஆஷாபோஸ்லேவும் பாடிய "எங்க ஊரு காதலப்பத்தி" பாடல்...

- வைரஸ் சைமன் (11.07.2017)

ராஜா ராஜாதான் !

ஆரம்ப காலத்தில் புல்லாங்குழல் கலைஞர் திரு.சுதாகர் அவர்களை தனது கச்சரிகளுக்கு வாசிக்க செய்தார், அதன் பின்பு தனது படங்களுக்கும் புல்லாங்குழல் 

கலைஞனராக பயன்படுத்திக்கொண்டார். 

ராஜா தனது பாடல்களுக்கு அதிகபட்சமாக ஒரே ஒரு புல்லாங்குழல் கலைஞரை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம், 
சுதாகர் அவர்களுக்கு புல்லாங்குழலிற்கான இசைக்குறிப்புகளை எழுத கற்றுக்கொடுத்ததும் ராஜாதான். 

பின்னாளில் சுதாகர் மேற்கொண்டு புல்லாங்குழலில் 
சிறந்து விளங்க, ஹாளந்தை சேர்ந்த வர்ஜினியா நின்கி என்ற பெண்மணியை தனது வீட்டிலே பயிற்சி அளிக்க சொல்லி ஒரு புல்லாங்குழல் பயிற்சியளிக்க 
நியமித்தார்.

நின்கி புல்லாங்குழலில் ஒரு சிறந்த விற்பன்னர். இசைக்குறிப்புகளை பார்த்த மாத்திரத்தில் அடுத்த நொடியே எந்தவித பயிற்சியும் இல்லாமல் வாசிக்கும் வல்லமை கொண்டவர். இப்படி ஒருவரை மட்டுமே பயன்படுத்திய ராஜா பாரதிராஜாவின் படத்திற்கு இசைக்கோர்ப்புகள் ஜெமினி ஸ்டுடியோவில் நடைபெற்றது, 

அந்த ஒரு பாடலுக்கு இரட்டையகள் புல்லாங்குழல் வாசித்தார்கள் சுதாகர் மற்றும் நின்கி.
இன்றளவும் இந்த பாடலுக்கு ஒரு மகத்துவம் உண்டு என்றால் அது மிகையல்ல, அந்த பாடல் தான் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை".

அது மட்டுமல்ல ராஜா அதிகமாக மற்றுமொரு இசைக்கருவியையும் பயன்படுத்தினார், அதன் பெயர் "ரிக்கார்டர்" அதன் வடிவம் புல்லாங்குழல் போன்று தோற்றமளித்தாலும் அதன் இசை அலாதியாகவும் புல்லாங்குழலின் ஓசையிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும். அதன் இசையை 'உதிரிப்பூக்கள்" படத்தில் இடம்பெற்ற "அழகிய கண்ணே" என்ற பாடலில் முதலாவது இடையிசையில் இடம்பெற்று தனித்துவத்தை காட்டியிருக்கும்.

- வைரஸ் சைமன் (07.07.2017)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அபராஜிதன் ரொம்பவும் சுவாரிசமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

இந்த திரியில் இசைக்கலைஞனை இன்னும் காணாமல் இருப்பது அதிசயமாக இருக்கு. ஆளுக்கு ஒரு தனி மடல் போடுவம்

Link to comment
Share on other sites

தனிமடல் போட்ட நிழலிக்கும், தொடர்ந்து பதிவுகளை இணைத்துவரும் அபராஜிதனுக்கும் நன்றிகள். tw_blush: பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் யார் இந்த வைரஸ் சைமன் என்பதுதான் தெரியவில்லை. இவரை பற்றிய தகவல்கள் உண்டா?

Link to comment
Share on other sites

On 16/10/2017 at 10:46 PM, இசைக்கலைஞன் said:

தனிமடல் போட்ட நிழலிக்கும், தொடர்ந்து பதிவுகளை இணைத்துவரும் அபராஜிதனுக்கும் நன்றிகள். tw_blush: பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் யார் இந்த வைரஸ் சைமன் என்பதுதான் தெரியவில்லை. இவரை பற்றிய தகவல்கள் உண்டா?

இல்லை முகநூல் அறிமுகம் தான் மிகத் தீவிர இளையராஜா ஃபான்

On 16/10/2017 at 10:46 PM, இசைக்கலைஞன் said:

தனிமடல் போட்ட நிழலிக்கும், தொடர்ந்து பதிவுகளை இணைத்துவரும் அபராஜிதனுக்கும் நன்றிகள். tw_blush: பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் யார் இந்த வைரஸ் சைமன் என்பதுதான் தெரியவில்லை. இவரை பற்றிய தகவல்கள் உண்டா?

இல்லை முகநூல் அறிமுகம் தான் மிகத் தீவிர இளையராஜா ஃபான்

 

 

 

ராஜா  ராஜா  தான்....!

மூன்றே நாட்களில் ரீ–ரிக்கார்டிங்கை   முடித்தார்.....!
இளை­ய­ரா­ஜா­வின் அண்­ணன் பாஸ்­கர் அடிக்­கடி போய் சந்­திக்­கும் நண்­பர்­க­ளில் ஒரு­வர், கலை­ஞா­னம். அவர் அப்­போது தேவர் பிலிம்ஸ் கதை இலா­கா­வில் இருந்­தார். அவர் அப்­போது ஒரு படம் தயா­ரிக்­கப் போவ­தா­க­வும், இயக்­கு­னர் ஸ்ரீத­ரி­டம் உத­வி­யா­ள­ராக இருந்த பாஸ்­கர் என்­ப­வர் படத்தை இயக்­கப் போவ­தா­க­வும் இளை­ய­ரா­ஜா­வின் அண்­ணன்  பாஸ்­க­ரி­டம் சொல்லி, படத்­திற்கு இளை­ய­ரா­ஜாவை இசை­ய­மைக்க ஒப்­பந்­தம் செய்­ய­வேண்­டும் என்­றும் கேட்­டி­ருக்­கி­றார். அவ­ரும் இளை­ய­ரா­ஜா­வி­டம் இவரை அழைத்­துச் செல்ல, கதை கேட்ட இளை­ய­ராஜா இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­டார்.
படத்­தின் பெயர் 'பைரவி.' படத்­தின் நாய­கன், ரஜினி. நாயகி, ஸ்ரீப்­ரியா. இயக்­கு­னர் பால­சந்­த­ரி­டம் இரண்டு ஹீரோக்­க­ளாக கம­லும், ரஜி­னி­யும் நடித்து கொண்­டி­ருந்­த­வர்­கள், தனித்­தனி ஹீரோக்­க­ளாக நடிக்க முடி­வெ­டுத்த கால­கட்­டம் இது. பாடல் பதி­விற்கு முன்­னமே படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. படப்­பி­டிப்­பில் ஒரு முறை ரஜி­னியை நேரில் பார்த்த இளை­ய­ராஜா சொன்­னது:–
“ரஜி­னியை படப்­பி­டிப்­பில் நேரில் பார்த்­த­போது, ஒரு நெருப்பு கனன்று கொண்­டி­ருப்­பது போல இருந்­தது. எனக்­குள்­ளும் அப்­படி ஒரு நெருப்பு ஓடிக்­கொண்­டி­ருந்­தது. அன்று எங்­கள் இரு­வ­ரு­டைய பேச்­சும் சாதிக்க வேண்­டிய இலக்கு பற்­றியே இருந்­தது.” இன்று இரு­வ­ரும் அவ­ர­வர் வழி­யில் சாதித்து விட்­ட­னர்.
படப்­பி­டிப்­பில் கலை­ஞா­ன­மும், பாஸ்­க­ரும் இளை­ய­ரா­ஜா­வி­டம் சென்று தேவை­யான பாடல்­களை உட­ன­டி­யாக ரிக்­கார்­டிங் செய்­ய­வேண்­டும் என்று கேட்­ட­தும், கவிதா ஓட்­ட­லில் கவி­ய­ர­சர் கண்­ண­தா­ச­னு­டன் கம்­போ­சிங் தயா­ரா­னது.
இயக்­கு­னர் பாடல்­க­ளுக்­கான சிச்­சு­வே­ஷனை சொல்ல, டியூன்­களை வாசித்­துக் காட்­டி­னார் இளை­ய­ராஜா. ஒரு பாட­லுக்­கான சிச்­சு­வே­ஷ­னைக் கேட்­ட­தும், கிரா­மப்­பு­றத்­தில் பாடப்­ப­டும் குழந்­தை­க­ளின் விளை­யாட்­டுப் பாட­லான ''நண்­டூ­ருது நரி­யூ­ருது'' என்ற பாடலை பல்­ல­வி­யாக வைத்­தால் நன்­றாக இருக்­கும் என்று சொல்லி டியூனை ''நண்­டூ­ருது நரி­யூ­ருது…'' என்ற சந்­தத்தை வைத்தே தொடங்­கி­னார் இளை­ய­ராஜா. கவி­ய­ர­ச­ரும் ''நண்­டூ­ருது'' என்றே தொடங்கி பாடலை எழு­தி­னார். இந்த பாட­லின் சர­ணத்­தில் தங்­கையை இழந்து, தங்­கையை கொன்­ற­வர்­க­ளைப் பழி­வாங்க துடிக்­கும் அண்­ணன் உச்­சஸ்­தா­யி­யில் வரும் “ஏழைக்கு வாழ்வு என்று எழு­தி­ய­வன் எங்கே?” என்ற வரி­கள் அரு­மை­யாக இருக்­கும்.
இந்த வரி­க­ளுக்கு ஏற்ப படத்­தி­லும் மிக அரு­மை­யா­கப் பட­மாக்­கி­யி­ருப்­பார் இயக்­கு­னர். இந்த வரி­க­ளைப் பட­மாக்­கும் போது இளை­ய­ரா­ஜா­வும் படப்­பி­டிப்­புத் தளத்­தில் இருந்­தி­ருக்­கி­றார். இந்த படத்­தில் இடம்­பெற்ற நான்கு பாடல்­க­ளில் சொல்­ல­வேண்­டிய இன்­னும் ஒரு பாடல் கவி­ய­ர­சர் எழு­திய “கட்­ட­புள்ள குட்­ட­புள்ள… கரு­க­மணி போட்ட புள்ள…” பாடல். இந்த பாட­லின் கம்­போ­சிங்­கும் கவிதா ஓட்­ட­லில்­தான் நடந்­தது.
இயக்­கு­னர் கலை­ஞா­னத்­தைப் பார்ப்­ப­தற்­காக சில விநி­யோ­கஸ்­தர்­கள் வந்­தி­ருந்­த­னர். அவர்­களை கண்­ண­தா­னி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் இயக்­கு­னர். இவர்­க­ளைப் பார்த்­த­துமே இளை­ய­ரா­ஜா­விற்கு 'கவிக்­கு­யில்' படத்­தின் பாடல் பதி­வின் போது ஏற்­பட்ட சம்­ப­வம் ஞாப­கத்­திற்கு வர, பாடலை யாரா­வது பாடிக்­காட்­டுங்­கள் என்று கேட்­டால் பாடிக்­காட்­டக்­கூ­டாது என்று முடிவு செய்து வைத்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா.
இந்த நேரத்­தில் கண்­ண­தா­ச­னுக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய பின் கலை­ஞா­னம் இளை­ய­ரா­ஜா­வைப் பார்த்து “பாடலை கொஞ்­சம் வாசித்­துக் காட்­டுங்­கள்” என்­றார். எல்­லோ­ரும் ஆவ­லு­டன் இளை­ய­ராஜா பாடு­வார் என்று எதிர்­பார்க்க இளை­ய­ரா­ஜாவோ ஆர்­மோ­னி­யத்தை மூடி­விட்டு எழுந்து கலை­ஞா­னத்­தி­டம் கூலாக, “இங்கே பாடி­னால் ஒன்­றும் புரி­யாது. டி.எம்.எஸ்., சுசீ­லாவை பாட­வைத்து மியூ­சிக்­கோடு ரிக்­கார்டு செய்து போட்டு காட்டி விடு­வோம். அப்­போது நன்­றாக இருக்­கும்” என்­றி­ருக்­கி­றார். இதை பார்த்த எல்­லோ­ரும் என்ன சொல்­வ­தென்று தெரி­யா­மல் விழித்­தி­ருக்­கி­றார்­கள்.
இது போன்­ற­தொரு நிகழ்ச்­சியை பார்த்­த­தில்லை என்­பது கண்­ண­தா­சன் பார்த்த பார்­வை­யி­லேயே தெரிந்­தது என்று ஒரு­முறை இளை­ய­ரா­ஜாவே இந்த சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­த­போது சொல்­லி­யி­ருக்­கி­றார்.
இந்த படத்­தின் பின்­னணி இசைச்­சேர்ப்­பின் போது கலை­ஞா­னத்­திற்­கும் இளை­ய­ரா­ஜா­விற்­கு­மி­டையே ஒரு சிறு பிரச்னை ஏற்­பட்­டது. இதற்கு மேலே சொன்ன சம்­ப­வம்­தான் கார­ணமா என்று தெரி­ய­வில்லை. பின்­னணி இசைச்­சேர்ப்­பிற்கு படம் தயா­ரா­ன­தும், கலை­ஞா­னம் இளை­ய­ரா­ஜா­வி­டம் வந்து இன்­னும் மூன்று நாட்­க­ளுக்­குள் பின்­னணி இசையை முடித்­தாக வேண்­டும், அதற்கு மேல் ஆகக்­கூ­டாது என்­றும் அந்த அள­விற்­குத்­தான் என்­னி­டம் பணம் உள்­ளது என்­றும் சொல்­லி­யி­ருக்­கி­றார்.
இளை­ய­ரா­ஜாவோ, “படத்­தின் ஆரம்­பத்­தி­லேயே கிளை­மாக்ஸ் காட்­சி­கள் போல ஹீரோ­வின் தங்­கையை கெடுப்­பது, அவ­ளின் மர­ணம், அதன் இறு­திக்­காட்­சி­கள், வில்­ல­னின் ஆட்­க­ளோடு சண்டை என்று போய் கொண்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மல்­லாது படம் முழு­வ­துமே மிக­வும் சீரி­ய­ஸாக மனதை தொடும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது. மூன்று நாட்­க­ளுக்­குள் முடிக்க முடி­யுமா என்­பது சந்­தே­கம்” என்­றி­ருக்­கி­றார். கலை­ஞா­னமோ வேறு எது­வும் சொல்­லா­மல், அதெல்­லாம் தெரி­யாது மூன்று நாட்­க­ளுக்­குள் முடித்­தாக வேண்­டும் என்றே சொல்­லி­யி­ருக்­கி­றார். இளை­ய­ரா­ஜா­விற்கோ கோபம். மூன்று நாட்­க­ளுக்கு மேல் போனால் யார் சம்­ப­ளம் கொடுப்­பது? அப்­படி மூன்று நாட்­க­ளுக்கு மேல் போனால் எனக்கு நீங்­கள் சம்­ப­ளம் தர­வேண்­டாம், ஆனால் ஆர்க்­கெஸ்ட்­ரா­விற்கு கொடுத்து விடுங்­கள் என்று சொல்லி பின்­னணி இசைச்­சேர்ப்பை ஆரம்­பித்­தார் இளை­ய­ராஜா.
கிட்­ட­தட்ட படத்­தின் எல்லா ரீல்­க­ளி­லுமே மியூ­சிக். மூன்று நாட்­க­ளுக்­குள் முடி­ய­வில்லை. இரவு 9 மணிக்கு முடிய வேண்­டிய கால்­ஷீட் இர­வும் தொடர்ந்­தது. அதி­காலை 4.30க்கு படத்தை முடித்­தார் இளை­ய­ராஜா. கலை­ஞா­னம் பாக்கி சம்­ப­ளப் பணத்தை இளை­ய­ரா­ஜா­வின் கையில் வைத்­தார். ''நீங்­கள்­தான் பணம் இல்லை என்­றீர்­களே, பர­வா­யில்லை எனக்கு எந்த வருத்­த­மு­மில்லை. ஆர்க்­கெஸ்ட்­ரா­விற்கு மீதிப் பணத்தை தந்­து­வி­டுங்­கள்'' என்­றார் இளை­ய­ராஜா. கலை­ஞா­னமோ, “இல்லை இல்லை கஷ்­டப்­பட்டு உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். உங்­க­ளுக்கு பேசிய தொகை கொடுத்­தால்­தான் மரி­யாதை” என்று சொல்லி இளை­ய­ரா­ஜாவை வேறு வார்த்தை பேச­வி­டா­மல் சம்­பள பணத்தை அவ­ரு­டைய கையில் வைத்­தி­ருக்­கி­றார்.
முதல் முறை­யாக மூன்றே நாட்­க­ளில் படத்தை முடிக்க வேண்­டும் என்ற இக்­கட்­டான நிலை இந்த படத்­தில்­தான் வந்­தது என்று சிறு வருத்­தத்­தோடு இளை­ய­ரா­ஜாவே பகிர்ந்து கொண்ட ஒரு சம்­ப­வம் இது. வேக­மா­க­வும், அதே சம­யம் நல்ல இசை தரு­வ­தில் எந்த ஒரு காம்ப்­ர­மை­ஸும் இல்­லா­மல் தந்­த­தில் எனக்கு ஏற்­பட்ட ஒரு அனு­ப­வம் என்று சந்­தோ­ஷப்­பட்­டும் இருக்­கி­றார் இளை­ய­ராஜா....

நன்றி....தினமலர்.....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குற்றமே தண்டனை படம் மொத்தமா முடிக்கிற வரை இசை யாருனு ஃபிக்ஸ் பண்ணிக்கலை. என் மனசுல தோணின ஒரே பேர் இளையராஜா. படத்தில் ஹீரோவுக்குள்ள ஒரு பயணம் இருக்கு. அந்தப் பயணத்தின் சிறப்பே... மௌனம்தான். படத்துல ஒரு பாட்டுகூட இல்லை. அதனால் படத்தின் ஆன்மாவே இசைதான். ஆனா, பாடல்களே இல்லாத படத்துக்கு ராஜா சார் இசை அமைப்பாரானு ஒரு தயக்கம் இருந்தது. 'என் ரெண்டாவது படத்துக்கு நீங்க மியூசிக் பண்ணணும்’னு மட்டும் ராஜா சார்கிட்ட கேட்டேன். 'ம்... ம்...’னு மட்டும் சொன்னார். 

படத்தைப் பார்த்தவர் தொடர்ந்து ஏழு நாட்களில் ரீ-ரிக்கார்டிங் பண்ணி முடிச்சுக் கொடுத்தார்.  ஒவ்வொரு நாள் ரீ-ரிக்கார்டிங் முடிஞ்சதும், 'எப்படி வந்திருக்கு... திருப்தியா?’னு கேட்பார். ஒருநாள் ஒரு சீனில் பி.ஜி.எம் சேர்க்க குழுவினரைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். நான் அந்த இடத்தில் மியூசிக் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருந்தேன். ஆனா, அவர்கிட்ட எப்படிச் சொல்றதுனு தயங்கி நின்னேன். 

இசைக் குழுவினர் அவரோட சிக்னலுக்குத் தயாரா இருந்தப்ப, அந்த சீனை இன்னொரு முறை பார்த்தவர், 'இந்த இடத்தில் இசை வேண்டாமே! உங்களுக்கு வேணும்னா போட்டுத் தர்றேன்’னு சொன்னார். எனக்கு சந்தோஷம்... அதைவிட ஆச்சர்யம். ரீ-ரிக்கார்டிங் முடிந்த பிறகு  அவர் பார்த்த சில படங்கள், அதோட   காட்சியமைப்புகள் பத்தி நிறையப் பேசினார்.

-’காக்காமுட்டை’ மணிகண்டன் (இயக்குனர்)
பதிவு : வைரஸ் சைமன் (06.11.2017)
நன்றி : விகடன்

கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான்.

‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்சில் ஸ்கெட்ச் ஓவியமாகக் காட்டப்பட்டு, அது மெல்ல மெல்லத் திரைப்படமாக மாறும். இந்த ‘சேஞ்ச் ஓவ’ரின் பின்னணியில் இசைக்கப்பட்ட ஒலித்துணுக்கு, கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) ஒலித் தொகுதியிலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒன்று. நீதிமன்றக் காட்சியைத் தொடர்ந்து திரையில் விரிந்த டைட்டில் பாடல்.. ‘விக்ரம்ம்…. விக்ரம்ம்ம்ம்ம்… நான் வெற்றிபெற்றவன்… இமயம் தொட்டுவிட்டவன்.. பகையை முட்டிவிட்டவன்’ என, கமல் பாடிய இந்தப் பாடலை, ‘சைடு ஸ்பீக்கர்கள்’ பொருத்தப்பட்ட திரையரங்குகளில் கேட்டபோது, இளைஞர்கள் ஒரு சின்ன திடுக்கிடலோடு எழுந்து நின்று, விசிலடித்து ஆர்ப்பரித்துக் கைதட்டினார்கள். அது கமல், இளைராஜா ஆகிய இரு ஆளுமைகளுக்காக மட்டுமே அல்ல; ‘விக்ராம்ம்ம்ம்…’என்ற அந்தக் குரல் இரண்டாவது முறையாக எக்கோ எஃபெக்டுடன்,‘மெட்டல் வாய்ஸாக’ உலோகக் குரலில் ஒலித்தது. இதை எந்தப் பாடகரும் அப்படிப் பாடிவிட முடியாது. தமிழ் சினிமா இசையில் ஒலிகள் மட்டுமல்ல, குரலும் கணினி நுட்பத்தை உள்வாங்கி ஒலித்தது அதுவே முதல் முறை. ‘விக்ரம்’ படம் புதுமையான விருந்தாக இருக்கப்போவதற்கு அந்தப் பாடலின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்றிருந்த எலெக்ட்ரானிக் வாத்திய ஒலிகள் கட்டியம் கூறின. அதற்காகவும்தான் திரையரங்கில் அத்தனை ஆர்ப்பரிப்பு. ‘விக்ரம்ம்ம்..’ பாடலில் மட்டுமல்ல, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’பாடலிலும் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற ஒலிகளில் பெரும்பாலானவை கணினியில் உள்ளீடு (Feeding) செய்யப்பட்ட சேம்பிளர் (sampler) இசையிலிருந்து தொகுக்கப்பட்டவைதான்.

 எதிர்பாராமல் அமைந்த பொருத்தம்

கமலிடம் ஒரு பெரிய பிரச்சினை உண்டு. வெகுகாலம் கழித்து நடிக்க வேண்டிய, எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து விடுவார். எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதல் ஆளாகத் தனது படங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிடுவார். அப்படித்தான் பல புதுமைகளை ‘விக்ரம்’ படத்தில் பயன்படுத்தினார். அவற்றில் கம்ப்யூட்டர் இசை முக்கியமானது.

தமிழ் அறிவியல் புனைவுக் கதைகளின் முன்னோடியான எழுத்தாளர் சுஜாதா, எழுதிய நவீன அறிவியல் தொடர்கதையில் தன் கனவுப் படத்துக்கானத் திரைக்கதையைக் கண்டு அவரை எழுத வைத்தார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்க, ‘ப்ளூ மேட்’ திரையின் பின்னணியில் பல காட்சிகளை முதல் முறையாகப் படம்பிடித்தார். இப்படிப் பல ‘முதல்’களைச் செய்த கமல், கம்ப்யூட்டர் எனும் சாதனத்தை முதன்முதலில் திரையில் காண்பித்ததும் இந்தப் படத்தில்தான். கம்ப்யூட்டர் காட்டப்பட்ட படத்தில், கம்ப்யூட்டர் இசை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது எவ்வளவு பொருத்தம்!

இசைஞானியிடம் ஓர் இளைஞர்

எந்த வகைப் பாடலாக இருந்தாலும் அதில் இசையின் துடிப்பை பொங்கிவரும் ஒரு நீரூற்றைப்போல உணரச்செய்துவிடும் ‘இசைஞானி’யின் படைப்பாற்றல். அதிலிருந்து விலகாமல், ஆனால் திடீரென்று ராஜாவின் இசை டிஜிட்டலாக மாறி ஒலித்ததைத் தமிழகம் ஆச்சரியமாகக் கேட்டு ரசித்தது. அடுத்து ‘புன்னகை மன்னன்’படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையிலும் பின்னணி இசையிலும் ராஜா நவீன இசையைத் தந்து ஆச்சரியப்படுத்திபோது, அவரிடம் ஆர்.எஸ். திலீப்குமார் என்ற இளைஞர், கீபோர்ட் பிளேயராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர்தான் இன்றைய ‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘ரோலேண்ட்’ எஸ்.770 சேம்பிளர்

‘புன்னகை மன்னன்’ படப் பாடல்களின் பின்னணி இசைக்கோவையில் இடம்பெற்ற புதுமையான ஒலிகளை ராஜா எப்படி உருவாக்கினார்? ரஹ்மான் பயன்படுத்திய ‘ரோலேண்ட் எஸ்770’(Roland S770) என்ற சேம்பிளர் கருவியிலிருந்து தேர்வுசெய்து அவற்றை தன் கற்பனைக்கு ஏற்ப மாற்றினார். சேம்பிளர் என்பது பல வாத்தியக்கருவிகளின் ஒலி மாதிரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும் புராசஸர் கொண்ட ஒரு ஹார்டுவேர் கருவி. இப்படி சேம்பிளர் கருவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிகளை நம் கற்பனைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அந்த ஒலிகளை எப்படி அணுகுவது? அதற்குள் நுழைய (input) பாலம் போன்ற ஒரு ஊடகம் தேவை. அந்தப் பாலம்தான் ‘மிடி’ கீபோர்டு.

அது என்ன ‘மிடி கீபோர்டு? ‘மிடி’ கீபோர்டு என்பது இசைக்கருவிபோல் காட்சியளிக்கும் ஒரு டம்மி கீபோர்டு. இதை வாசித்தால் ஒலி வராது. ஆனால் இதைக் கேபிள் மூலம் சேம்பிளர் உடன் இணைத்து, சேம்பிளரின் நினைவகத்தில் (Memory card) பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வகை வாத்திய ஒலியையும் எளிதில் அணுகி, உங்கள் கற்பனைக்கு ஏற்ப வாசிக்கவும் மாற்றி அமைக்கவும் முடியும். ‘மிடி’ கீபோர்டில் ஒரு ‘பியானோ’வில் இருப்பதுபோல் கருப்பு-வெள்ளை கட்டைகள் (Keys) இருக்கும். இந்தக் கட்டைகளில் தன் விரல்களை இழையவிடும் இசை அமைப்பாளர், எப்போதும்போல் தனது கற்பனையின் ஜாலத்தைக் காட்டுகிறார்.

‘மிடி’ கீபோர்டு
 
இசையமைப்பாளர் கம்போஸ் செய்த ஒலி மாதிரிகளை, சேம்பிளரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த வாத்தியமாகவும் ஒலிக்கச் செய்யலாம். பியானோ பட்டன்களின் வழியே நீங்கள் தவில் வாசிக்கலாம், வயலின் வாசிக்கலாம். கிட்டார் வாசிக்கலாம். இப்போது கூறுங்கள் ‘மிடி’ கீபோர்டு (MIDI-Musical Instrument Digital Interface) இசையுலகத்துக்கு அறிவியலின் ஆச்சரியமான பரிசுதானே. ஆக ‘மிடி’ கீபோர்டை கணினி இசையின் வரம் என்று வர்ணிக்கலாம்.

வாத்திய ஒலிகள் சேமிக்கப்பட்ட ஒரு கணினி (சேம்பிளர்) இருந்தால் போதுமா…கணினி இசையை உருவாக்க கற்பனைத் திறன் தேவைப்படாதா? 

இசைஞானி கூறுவதைக் கேளுங்கள், “இன்றைய இளம் இசையமைப்பாளர்களே… கம்ப்யூட்டர் இசையைத் தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்”. 

நன்றி : தி இந்து நாளிதழ்
பதிவு : வைரஸ் சைமன் (24.10.2017)

Link to comment
Share on other sites

சார்,  நாயகன் ஒரு கிராமத்தில் இருந்து உங்களின் (இளையராஜா) இசையில் பாடவேண்டும் என்று சென்னைக்கு வருகிறான், இதற்கிடையில் அவனது காதலிக்கு 

திருமணம் வீட்ல நிச்சயிக்கிறாங்க, அதனால நாயகி நாயகனுக்கு லெட்டர் போட்றா, அந்த லெட்டர அவன் படிக்கல இதற்கு இடையில் நீங்க அவன உங்க 

மியூசிக்ல பாட அவன கூப்பிட்றீங்க, அவனும் உங்க பிரசாத் ஸ்டூடியோல பாடிட்டு இருக்கான், அப்போ தான் அவனோட காதலியோட லெட்டர பாக்குறான், 

பாத்துட்டு தவிக்கிறான், இதற்கு இடையில நாயகி சென்னைக்கு வரா, அவள 4 ரவுடிங்க துறத்துறாங்க, இது தான் சார் சிச்சிவேஷன்...

சூழல் சொன்ன மாத்திரத்தில் "தானனனான தானானா" என்கிற சந்தம் பிறக்கிறது, ராஜாவின் இதழ்களிலிருந்து, மெட்டை ஒகே செய்கிறார் இயக்குனர், பின்னர் 

அந்த பாடலுக்கான முழு இசைக்குறிப்பையும் ராஜா எழுதி முடிக்கிறார், இறுதியாக இந்த சூழலுக்கான பாடலை எழுத கவிஞர் மேத்தா அவர்களை அழைக்கிறார் ராஜா.

மேத்தாவிடம் சூழல் சொல்லப்படுகிறது, பின்பு ஒரு காகிதத்தில் எழுதுகிறார், அந்த சூழலின் தன்மையை தனது இதயத்தில் நிரப்புகிறார், நிரம்பிய காட்சிகளை வரிகளாக தூவிக்கொண்டிருக்கிறது எழுதுகோல், பாடல் சரிபார்க்கப்பட்டு, அப்பாடலை பாட திரு.பாலு அவர்களை அழைக்கிறார் ராஜா.

ராஜாவின் இசைக்கும், ராஜாவின் தேவை என்னவோ அதை ஏற்றுக்கொண்டு தனது குரலால் உணர்வில் கலந்து பதிவாகிவிட்டது பாடல்.

இந்த சூழலுக்கு கனக்கச்சிதமாக  வேறொருவர் இசைத்துவிட முடியுமா? 
இந்த சூழலுக்கு என்ன ராகத்தை பயன்படுத்துவது ?
இந்த பாடலுக்கு என்னென்ன கருவிகளை பயன்படுத்துவது ?
இந்த வரிகளை எவர் எழுதினால் சிறப்பாக இருக்கும் ?
இந்த வரிகளை யார் பாடினால் நன்றாக இருக்கும் ?

இப்படி எத்தனையோ கேள்விகள் நம்மை துளைக்கிறது, அதற்கெல்லாம் ஒரு சில நொடிகளில் விடை கிடைக்கிறது, அந்த விடைக்கு பெயர் "இளையராஜா".

இப்படி நாயகன் இசைகூடத்தில் மெதுவாக பாடல் கடக்கிறது, நாயகன் கீழே விழுந்த காதலியின் லெட்டரை எடுக்கிறான், அவன் அதை எடுக்கும் வேலையில் வரும் பேஸ் கிட்டாரின் இசை ஒரு வித பயத்தை விட்டுச்செல்ல தவறவில்லை, அவள் வந்துவிட்டாள் என்று உணர்த்த அதிவேகம் எடுக்கும் டிரம்ஸ் ஆகட்டும், அதே வேலையில் பதற்றத்தை பாய்ச்சிகிறது அரை சத வயலினின் இசை. அதை தவிர்த்து நாயகியை துரத்தும் காட்சிகளுக்கு ஒரு டிரம்மை கொண்டு 
ஓடவைத்து விடுகிறார் ராஜா, இதைவிட சேசிங் காட்சிகளுக்கு வேறு எந்த வித இசைக்கருவியை பயன்படுத்து விட முடியும் ?.. 

ஒரு சில வரிகளில் தான் சூழல் சொல்லப்படுகிறது, அப்படிப்பட்ட சூழலுக்கு எப்படி ராஜாவால் முடிகிறது என்பது கோடிக்கணக்கான கேள்விகளை என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சிறந்த பாடலின் காட்சியமைப்புக்கு ராஜாவின் இசையை தவிர வேறு எதுவும் செய்து விடாது, இப்படி நான் சொல்ல காரணம், ஒரு பாடல் உருவானால் அந்த பாடலின் இசைக்கும், வரிகளுக்கும் ஏற்றார்போல் இரண்டென கலந்து அந்த இயக்குனரின் கற்பனைக்குள் போக வேண்டும், அப்படி போனால் தான் இப்படி காலத்தில் அழியாத காவியமாய் ஒரு பாடலை கொடுக்க முடியும்... 

அப்படி அழியாத காவியங்களாக ராஜாவால் உருப்பெற்ற பாடல்கள் ஏராளம், அந்த வகையில் இங்கே நான் சொல்ல வந்த பாடலும் நிச்சயம் சேரும்...

இப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை உருவாக்கியவன் ஒரு தமிழன் என்று நாளைய தலைமுறை பேசும்... அதில் ஒரு சிறிய நீர்த்துளியாய் இந்த பாடலை தான் 
மேலே விவரிக்கப்பட்ட்து "இதயக்கோவில்" படத்தில் இடம்பெற்ற 'யார் வீட்டில் ரோஜா" பாடல்.

- வைரஸ் சைமன் (27.05.2017)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் வீட்டில் ரோஜா மிகவும் அருமையான பாடல். மோகனின் நடிப்பும், துடிப்பும்,தவிப்பும் அசத்தல்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

தமிழ் திரைவரலாற்றில் இசையில் பல புதுமைகளை கொண்டது 'கேளடி கண்மணி' திரைப்படம். இயக்குனர் வஸந்த் அமரர் திரு.பாலச்சந்தர் அவர்களின் சிஷ்யர்.

வஸந்த் தனது முதல் படத்திற்கு இசையமைக்க அணுகியது இசைஞானியையே!. அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு புதிய இயக்குனரிடம் பணியாற்றுவதில் 

எந்த பாரபட்சமும் இல்லாமல் போனது ராஜாவிற்கு.

ராஜாவை பொருத்த வரையில் ஒரு புதிய இயக்குனர் உதயமாகிறான் என்றால் தனது இசையால் அவனை முன்னுக்கு தூக்கிவிடமுடியும் என்பதில் எந்த 

மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே நோக்கமாகவும் இருந்தது.

'கேளடி கண்மணி' பட கம்போஸிங்க பிரசாத் ஸ்டூடியோவில் காலை 6.30 மணியளவில் நடந்தது,  இயக்குனர் வஸந்த அந்த அறையின் உள்ளே நுழைகிறார், ஒரு 

மெல்லிய வெளிச்சத்தில் வெள்ளை நிற ஆடையில் ஒரு ஆண் தேவதையாய் இசைஞானி அமர்ந்திருக்கிறார், ராஜாவின் எதிரில் இயக்குனர் வஸந்த் அமர்ந்து 

அந்த படத்தில் உள்ள பாடலின் சூழலை சொன்னமாத்திரத்தில் அருவியாய் வந்து விழுகிறது ராஜாவின் மெட்டுக்கள். 

உதாரணத்திற்கு ஒரு பாடல் 5 நிமிடம் என்று வைத்துக்கொள்வோம், இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அப்படி என்றால் ராஜா மெட்டமைத்த மொத்த நேரமே 

வெறும் அரைமணி நேரத்தில் தான். ( கேட்பதற்கே பிரமிப்பாக இருக்கிறதல்லவா ? )

இந்த படத்தில் 4 பாடலின் சூழலை இயக்குனர் சொல்ல 4 பாடலுக்கான மெட்டு முடிந்தது, மீதம் உள்ள மெட்டு 2, அதில் ஒரு புதுமையை செய்தால் என்ன என்று 

இயக்குனருக்கு தோன்றுகிறது, ராஜாவிடம் சூழலை இப்படி விவரிக்கிறார், சார், நாயகன் கடற்கரையில் காதலியோடு இருக்கிறான், அவன் பாவலரின் பாடல் 

ஒன்று காகிதத்தில் இருக்கிறது, அந்த பாடலை அவன் மூச்சி விடாமல் பாடுகிறான் என்று சொல்ல, ராஜா இடைமறித்து நன்றாகத்தான் இருக்கும், இருந்தாலும் 

பல்லவியில் மூச்சிவிடாமல் வேண்டாம், சரணத்தில் பாடுவது போல் வைத்துக்கொள்வோம் என்று சொல்லி ஆர்மோனியத்தில் சில கட்டைகளை அழுத்து 

சந்தத்தில் பாடி காண்பித்த மாத்திரத்தில் உருவாகிறது "மண்ணில் இந்த காதல் அன்றி" பாடல்.

மற்றொரு பாடலின் சூழலை இயக்குனர் சொல்ல ராஜா மெட்டமைக்கிறார், இந்த பாடலுக்கு ராஜா தத்தகாரத்தில் பாடவில்லை மாறாக அந்த பாடலிற்கு ஒரு 

டம்மி வரிகளாக "லிட்டில் ஸ்டார் லிட்டில் ஸ்டார் ஒய் யூ டிவிங்கிள் ஸ்டார்" என்று பாடி முடித்த பிறகு இயக்குனர் சரி என்று சொல்ல பின்பு கவிஞர் 

மேத்தாவின் வரிகளில் உருவானது "தென்றல் தான் திங்கள் தான்" என்று...

'கேளடி கண்மணி' படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து பின்னணி இசைக்கோர்புக்கு இசைஞானியிடம் வருகிறது, ராஜா டபுள் பாசிடிவை பார்க்கிறார், 

அன்றை காலத்தில் ஒரு அசாத்திய வேலையை இசையில் செய்தவர் ராஜா என்றால் அது மிகையல்ல, காரணம் தொழிட்னுட்பம் இல்லாத காலத்திலே காலை 

ஒரு பாடல், மாலை ஒரு பாடல் என்று உருவாகும், அதுமட்டுமல்ல ஒரு திரைப்படத்திற்கு மொத்தம் 15 ரீல் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 4 

ரீலுக்கான பின்னணி இசையயை வெறும் 1 நாளிலே முடித்துவிடுவார் இசைஞானி. ஆக ஒரு திரைப்படத்திற்கான பின்னணி இசையமைக்க அதிகபட்சமாக 4 நாட்களே போதுமானதாக இருந்தது ராஜாவிற்கு.

'கேளடி கண்மணி' திரைப்படத்திற்கு ராஜா 3 நாட்களில் 12 ரீலுக்கான பின்னணி இசையை முடித்துவிட்டார், இன்னும் ஒரு நாளில் முழுப்படத்திற்கான பின்னணி 
இசையும் முடித்துவிடலாம் என்று எண்ணினார் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் இயக்குனரை அழைத்து, நாளை மறுநாள் ராஜா திருவண்ணாமலைக்கு 
சென்றுவிடுவார், ஆதலால் நாளைக்குள்ளே படத்தின் பின்னணி இசையை முடித்துவிடவேண்டும் என்று சொல்ல, இயக்குனர் வஸந்த ராஜாவிடம், நீங்கள் நாளை 

மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்றுவிடுவீர்கள் ஆதலால் நாளைக்கு பின்னணி இசையயை முடித்துகொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, 

ராஜா வஸந்திடம் "யாருயா நாளைக்கு ஒரு நாளில் முடிந்துவிடும் என்று சொன்னது, உன்னோட கதைக்கு இன்னும் 3 நாள் தேவைப்படும், அந்த அளவிற்கு உன் படம் இருக்கு என்று சொல்லி அனுப்பிவைத்தார்".

ராஜாவை தவிர்த்து பிற இசையமைப்பாளர்கள் தங்கள் படத்தில் உள்ள ஒரு தேர்ந்த மெல்லிசை பாடலை தான் பின்னணி இசைக்காக பயன்படுத்தினார்கள், காரணம் அந்த பாடலை பாடலை பயன்படுத்தினால் பாடலுடன் சேர்த்து பின்னணி இசையும் ஹிட் ஆகும் என்ற நோக்கத்தில், ஆனால் ராஜாவோ அதற்கு 
எதிர்மறையாக அப்படி ஒரு சாயலை தனது படத்தில் இசைத்ததில்லை. அதனால் தான் இன்றும் ராஜாவை நாம் ஏன் பின்னணியின் பிதாமகன் என்று சொல்வதன் காரணம்...

வைரஸ் சைமன் (23.05.2017)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வெளிநாடு வாழ் தமிழர்களை இணைக்கும் உணர்வுப் பாலம்... ராஜாவின் இசை - கவிஞர் பா.விஜய்
  
ஒருமுறை கவிஞர் வாலி ஐயாகிட்ட, அவர் இசைஞானியுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பத்திக் கேட்டோம். ‘ஒரு தனி மனுஷன் பன்மொழியில் ஆற்றல் பெறுவது சாதாரண விஷயம் இல்ல. அவர் ஒரு கன்னடக் கவிஞரிடம், அந்த மொழிக் கவிதையில் இருக்கும் நுணுக்கங்களைப் பத்தி விவாதிச்சதைப் பார்த்து நான் வியந்திருக்கேன். வெண்பாவை என்னைவிட தலைகீழா எழுதுவதில் வல்லவன் இளையராஜா!’னு வியந்தார்!’- லயித்துப் பேசுகிறார், கவிஞர் பா.விஜய்.
 
இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம்?
"நான் பனிரெண்டாம் வகுப்புப் படிச்சிட்டு இருந்தப்போ, தமிழகத்துல ராஜாவோட ஏகபோக இசையாட்சிதான். அவரோட இசையில் என் வரிகளைப் பதிவுசெய்யணும் என்பதை லட்சியமா கொண்டுதான் சென்னைக்கு வந்தேன் நான். அது யுவன் மூலமா நிறைவேறிச்சு. ‘நந்தா’ படத்துல ‘அம்மா என்றாலே’ என்ற என் வரிகளுக்கு ஞானத்தகப்பன் ராஜா பாடியதைக் கேட்ட பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தொடர்ந்து ‘பட்டியல்’ படத்துல நான் எழுதின ‘நம்ம காட்டுல’ பாடலையும் அவர் பாடினார். சேரன் இயக்கத்துல வெளிவந்த ‘மாயக் கண்ணாடி’ படத்தின் ‘கொஞ்சம் கொஞ்சம்’ பாடலுக்கு, என் வரிகளுக்கு ஐயா இசையமைச்சது எனக்கு ரொம்பப் பெருமை.
எத்தனையோ இளையராஜா பாடல்களுக்கு நான் அடிமையா இருந்தாலும், என் வரிகளுக்கு அவர் மெட்டமைச்ச பாடல்கள் எல்லாம் பொக்கிஷம் எனக்கு. சமீபத்துலதான் அவரோட ரொம்ப நெருக்கமா வேலைசெய்யும் வாய்ப்புக் கிடைச்சது. ‘ருத்ரம்மா தேவி’ திரைப்படத்துக்கு வசனம், மற்றும் பாடல்கள் முழுமையா எழுதற வாய்ப்பு எனக்குக் கிடைக்க, அவரோட சிபாரிசுதான் காரணம்னு சொல்றதுல ரொம்ப பெருமைப்படுறேன்!"
 
இசைஞானியின் பாடல்களில், ‘இந்தப் பாட்டை நான் எழுதி இருக்கலாமே’ என்று நீங்கள் ஏங்கிய பாடல் எதுவும் இருக்கிறதா?
"ஐயாவோட பாடல்களைப்பத்திப் பேசணும்னா எனக்கு நாலு பக்கங்கள் போதாது. அவரோட இசையில், காலத்தின் பருவங்கள் இருக்கும். இசைக்குள் பருவம்... அந்த பரவச அனுபவத்தை நீங்க உணர்ந்திருக்கீங்களா? நான் உணர்ந்திருக்கேன். கண்ணை மூடிட்டு ‘அந்தி மழை பொழிகிறது’ பாட்டைக் கேட்டா, என் மேல சாரல் அடிக்கிற மாதிரி இருக்கும்; ‘கோடை காலக் காற்றே’ பாட்டைக் கேட்டா, ஒரு காற்று சூழற மாதிரி இருக்கும். இப்படி நிறையச் சொல்லலாம். அப்படிப் பல சூழல்களை இசைக்குள்ள கொண்டு வந்த ஒரே மகான், நம் இசைஞானிதான். அந்த மாதிரியான பல பாடல்கள், ‘இதை நாம எழுத வாய்ப்புக் கிடைச்சிருக்கலாமே’னு நினைக்க வெச்சிருக்கு. குறிப்பா, ‘விருமாண்டி’ படத்தில் வரும் ‘ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல’ பாடலை நான் எழுதியிருக்கலாமேனு நினைச்சு, அதைக் கேட்கும்போதெல்லாம் ஏங்கியிருக்கேன்!"
 
மிகப்பிடித்த ராஜா பாடல்?
உலகமெங்கும் பல நாடுகளில் நம்ம தமிழர்கள் தொழில் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து தமிழகத்தை விட்டுவிலகி வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் தமிழகத்தோடு தொப்புள்கொடி உறவு அறுந்து போகாம இருக்க, இசை சித்தரின் இசை முக்கியக் காரணம். தாய் மண்ணையும், வெளிநாட்டில் வாழும் எம் தமிழர்களையும் இணைக்கும் உணர்வுப் பாலம்... ராஜா இசை. அதில் எனக்குப் பிடிச்ச பாடல்கள் பத்தல்ல... பல ஆயிரங்கள் சொல்லலாம். இன்னைக்கும் புத்தாண்டுக்கு ‘இளமை இதோ இதோ’ பாட்டை போட்டுத்தான் ஆடுறோம். அதைப் பாடும்போதே, பிஜிஎம்-ஐ ஞாபகப்படுத்தும். பின்னணி இசையை நம்மளை உணரச்செய்யும் ஓர் அற்புதம், ராஜாவின் பாடல்களுக்கே உண்டு. வாக்கியங்களுக்கு மட்டுமல்ல, வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த தலைவன் இளையராஜா ஐயா. பாடல்களுக்கு ஜீவன் கொடுக்கிற தேவன் அவர்!
 
ராஜாவின் குரல்..?
"ஐயாவோட குரல் ஒரு காந்தம். அந்தக் குரலால உற்சாகத்தைச் சொல்ல முடியும். ‘தென்பாண்டிச்  சீமையிலே’வில் தவழும் சோகம் நம்மை அழவைக்கும். ‘ஆத்தாடி பாவாட காத்தாட’னு அவர் பாடும்போது குரலில் அரும்புதே ஒரு குறும்பு... நினைச்சாலே ஆச்சர்யமா இருக்கு. ஒரு குரலால ஒரு உணர்ச்சியைத்தான் வெளிப்படுத்த முடியும். இசைஞானியோட குரல்ல எத்தனை எத்தனை உணர்ச்சிகள்!"
 
இளையராஜாவிடம் கேட்க ஆசைப்படும் ஒரு கேள்வி?
தமிழர்களின் பயணங்களில் இளையராஜாவின் பாடல்கள்தான் வழிநெடுக துணை வரும். இசைஞானி தன் பயணங்களில் யாரோட பாட்டைக் கேட்பார்?!
 
இளையராஜாவுக்கு அவர் பாடல்களிலிருந்து எந்தப் பாடலை அவருக்காக டெடிக்கேட் செய்வீங்க?
"‘சிவோஹம்’!இளையராஜா ஒரு அபூர்வ ஆன்மிகவாதி. சிவம் என்கிற மாபெரும் சக்தி அவருக்குள்ள நிரம்பி இருக்குங்கிறதை நான் நம்பறேன். அவர் இசை அமைத்த ‘நான் கடவுள்’ படத்துல வர்ற ‘சிவோஹம்’ பாடலைக் கண்ணை மூடிக் கேட்டா, இமய மலை அடிவாரத்துல உட்கார்ந்திருக்கிற ஒரு உணர்வைக் கடத்திடுவார். அதுதான் இசைஞானி இசையின் தாக்கம், வெற்றி!"
 
ராஜாவிடம் மனம் திறந்து..?
"கே.பி. சார், மணிரத்னம் போன்றவங்களோட பயணிச்சவர். இளம் இயக்குனர்களோடயும் கைகோத்து, இந்த சமூகத்துக்கு இசைப் பரிசு தந்துட்டே இருக்கணும். அதை அவர் இப்போ செய்துட்டுதான் இருக்கார். நன்றி ஐயா!"
 
தேசிய விருது பற்றி?
"இந்த முறை ஐயாவுக்கு வழங்கப்பட்டதால, தேசிய விருதுக்குதான் பெருமையேத் தவிர அவருக்கு இல்லை. அவர் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். என்னைப்போன்ற ஆட்களுக்கு வேணும்னா விருது பெருமையா இருக்கலாம். ஆனா அந்தக் கடலுக்கு, விருது என்பது இன்னொரு அலை அவ்வளவுதான்!"

நன்றி : மனம்

Link to comment
Share on other sites

ராஜா தலைக்கனம் பிடித்தவர்!

இளையராஜாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் நான் அல்ல... ராஜாவின் இசை என்னில் மட்டுமல்ல, அனேக இசைஞானியின் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுகருத்தும் இருக்க முடியாது, சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன், அப்போது என் தோழர் பாடலை கேட்டுவிட்டு இசைத்துறையில் ராஜா அசைக்க எவராலும் முடியாது என்று சொல்லிவிட்டு மறுகனமே ஆனால் ராஜா ஒரு தலைகனம் பிடித்தவர் என்று சொன்னார், நான் அவரிடம் வினாவினேன் எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று ? உடனே அவர் சொன்னார் ஒரு பேட்டியில் ராஜா " என் இசையை கேட்பது தான் தமிழர்களின் தலையெழுத்து" என்று சொல்லி இருக்கிறார் என்றார், உடனே நான் அவரிடம் அந்த பேட்டியை நீங்கள் பார்த்தீர்களா ? என்றேன், அதற்கு இல்லை என்றார், இப்படி இவர் ஒருவர் மட்டுமல்ல ராஜாவை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் உண்மை என்ன என்று தெரியாமல் அறியாமையிலே பேசுகிறார்கள்.

ராஜாவிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது, அந்த கேள்வியில் ராஜாவை பெருமைப்பட வைப்பதற்காக அந்த கேள்வியை கேட்கிறார், அதற்கு எதிர்மறையாக ராஜா, ஒரு நையாண்டியுடன் 'என் இசையை கேட்பது தான் தமிழர்களின் தலையெழுத்து' என்று சிரித்துக்கொண்டே இந்த பதிலை கூறுகிறார், அந்த பதிலுக்கு அலங்காரம் செய்துவிட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை கூட.

ராஜாவின் இசை வெறும் வியாபாரத்திற்காக மட்டும் தானா என்று கேள்வி எழுமேயானால், நிச்சயமாக இல்லை என்பது என்போன்றவர்களின் பதில். ஒரு இசையமைப்பாளனின் இசை எதை செய்யவேண்டும்?, தான் பிறந்த மண்ணிற்கும், தன்னுடைய நாட்டிற்கும், நாட்டின் பாரம்பரியத்தையும் உணர்த்த வேண்டும், இதை ராஜா மட்டும் தான் செய்திருக்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை ராஜாவிற்கு முன் இருந்த ஆகச்சிறந்த கம்போஸர்களும் செய்திருக்கிறார்கள், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அமரர் திரு.எம்.எஸ்.வி அய்யா அவர்களை சொல்லலாம், அதற்கு பின் ராஜாவை தவிர எவராவது செய்திருக்கிறார்களா என்பது கோடிக்கணக்கான கேள்வி. எம்.எஸ்.வி அய்யா தங்கம் என்றால் ஒன்றே என்றாலும் ராஜா ஜொலிக்கும் வைரம்.

சரி எம்.எஸ்.வி அய்யாவிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்றால், எம்.எஸ்.வி அய்யாவின் பாடல்களில் அந்த வரிகளுக்கு உணர்வு கொடுத்திருப்பார். அதனை தொடர்ந்தே ராஜா தனது பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். கீழே சில பாடலை கேட்டால் தெரியும்..

1. வலையோசை கலகலவென
2. இளமை இதோ இதோ
3. உன்ன நெனச்சேன்
4. ஆராரிரோ பாடியதாரோ
5. மீண்டும் மீண்டும் வா

போன்ற பாடலை கேட்டால் பாடலின் சூழல் வெவ்வேறு என்றாலும் அதை இசையின் மூலமாக இதயத்திற்கு அனுப்புவது ராஜாவின் இசை தான், காதல் பாடலாகட்டும், சோக பாடலாகட்டும், காட்சியில் பார்த்து உணர்வதை விட இசையின் மூலமாக அறிவுக்கு அனுப்பாமல் மனதிற்கு செல்கின்றது என்றால் அதுதானே இசை என்று சொல்லக்கூடும். இவ்வளவு ஏன் "மீண்டும் மீண்டும் வா" விரகதாபத்தை பற்றிய பாடல் இது, இது காட்சியில் பார்த்து உணர்வது சரி, ஒலியின் மூலமாக இந்த உணர்வை நமக்கு ஏற்படுத்துவது ராஜாவின் இசையே தவிர, வேறு யாரால் முடியும்.

கல்வியறிவு தான் இந்நாட்டிற்கு புரட்சிக்கு உதவுமென்றால், இளையராஜாவின் இசையையும் சொல்லலாம், காரணம் எந்த ஒரு சூழல் இருந்தாலும் அவன்/அவளை மீட்டு ஒரு நண்பனை போல் வாழ்க்கை முழுவதும் பயணிப்பது ராஜாவின் இசைதான். இதயம் என்ற பூமியில் இசையால் அடித்தளம் அமைத்ததால் தான் இன்று வரை ராஜா ராஜாவாகவே இருக்கிறார், இந்த கொடுப்பினை மட்டுமல்ல உலகத்தில் ஒரு இசையமைப்பாளருக்கு கோடிக்கணக்கான ரசிகள் உண்டு என்றால் அது ராஜாவிற்கு மட்டும் தான்.

1. தன் சொந்த நாட்டின் இசை உணர்த்தாத இசை, ராஜாவின் இசை நிகழ்த்தியது போலோகொனோவில்...

2. வயிற்றில் இருந்த அசைவற்ற சிசுவிற்கு  அசைவு திருவாசகத்தின் மூலமாக  நிகழ்த்தியதும் ராஜா தான்..

3. பிரன்சு நாட்டின் ஆகச்சிறந்த கம்போஸர் திரு.பால் மரியா தன்னை சந்திக்க வருபருக்கு வெறும் 5 நிமிடம் மட்டுமே ஒதுக்குவார் வந்தவர் மிகப்பெரிய இசையமைப்பாளர் என்றாலும் கூட, ஆனால் ராஜாவிடம் அவர் பேசியது 1.30 மணி நேரம் என்றால்
 இசைஞானியின் ஆளுமை.

4. தனது தந்தை இறப்பின் போது வராத கண்ணீர், 15 நாள் கழித்து கவிஞர் மகுடேஸ்வரனுக்கு 'இதயம் ஒரு கோவில்' உள்ள இசையும் குரலும்   வரவழைத்தது என்றால் அது தான் அத்ம இசை, உயிரின் கரு.

இவையெல்லாம் இசையை வெறும் வியாபாரத்திற்கு செய்பவனால் கொண்டு வர முடியாது என்பது என் ஆழமான கருத்து. ஆகச்சிறந்த படைப்புகள் யாவும் கலைஞனின் சுதந்திரத்தில் உருவாகுவது தான், அந்த படைப்பில் சிலர் மூர்க்கத்தனமாக நுழைத்தால்
கோபம் வருவது மனித இயல்பு, அதை தட்டி கேட்டால் அதற்கு பெயர் தலைக்கனம் என்றால் ராஜாவிற்கு தொழில்பக்தி. எப்படி கடவுளும் கல்லும் பார்ப்பவரின் பார்வையின் மாறுகிறதோ அப்படியே இருக்கட்டும் என்னை பொருத்தவரையில் ராஜா எங்கள் இசைக்கடவுள். நீங்கள் அதற்கு வேறு பெயர் என்று சொன்னால் (தலைப்பை படியுங்கள்) இருந்துவிட்டுப்போகட்டும் ...

- வைரஸ் சைமன் (09.12.2017)

Link to comment
Share on other sites

எந்த பப்புக்கும் போனதில்ல ராஜா சார். ஆனா அவரோட பாட்டு இல்லாத பப்பே இல்லை - நடிகர் விவேக்

1976ல் பள்ளிக்கூடம் விட்டு வீடுவந்து படுத்துக்கிடந்திருந்த என்னை, டிரான்சிஸ்டரில் ஒலித்த வித்தியாசமான பாடல் இசை எழும்பி உட்கார வைத்தது. அன்னைக்கு எழும்பி உட்கார்ந்த என்னை இன்னைக்கு வரைக்கும் படுக்கவிடல நம்ம ராஜா சார். ஏன்னா அன்னைக்கு நான் கேட்டது ‘அன்னக்கிளி’ படத்தோட ‘மச்சானப் பாத்தீங்களா’ சாங். அப்போ ஆரம்பிச்ச அவரோட பயணம் இப்போவரைக்கும் தொடர்ந்துட்டே இருக்கு. 

ஆயிரம் சினிமா, ஐயாயிரம் சினிமா பாடல்கள், ஆன்மிகப் பாடல்கள், சிம்பொனி இசை, இன்னும் நிறைய மியூஸிக் ஆல்பங்கள்னு அவரு கொடுத்த இசைக்கு அளவே கிடையாது. ஒரு நீரூற்றாகக் கிளம்பிவந்த இசைஞானி பின் குட்டையாகி, குளமாகி, ஏரியாகி, கடலாகி, அந்தக் கடல் இன்று மகா சமுத்திரமாகி மாறி நிற்குது. அந்த மகா கலைஞன் வாழ்கிற காலத்துல நாம வாழ்கிறோம் என்பதே நமக்குக் கௌரவம், கர்வம். எல்லாத்துக்கும் மேல நான் தனிப்பட்ட முறையில அவரோட பேசியிருக்கேன், அவர் இசையமைக்கிற அறையில நான் உட்கார்ந்திருக்கேன்னு சொல்றதே எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.

அவரோட உட்கார்ந்து பேசுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஏன்னா அவரு ஒரு சித்தர் லெவல்ல இருப்பாரு. கேள்வி கேட்டா இன்னொரு கேள்வியை பதிலா சொல்லுவாரு. ஆனா இசை மூலமா அவரு நம்மகிட்ட நிறையப் பேசியிருக்காரு. பலபேரு அவரோட பாட்டைக் கேட்டுதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சிருக்காங்க. தாய் பாசம் என்பது அவர் மூலமா இங்கே பலருக்கு ஊட்டப்பட்டிருக்கு. 

80களில் ராஜா சார் பீக்கு, சென்சேஷன், இளையராஜா மியூஸிக்னா தியேட்டரே ரெண்டாயிடும். யாரு நடிச்சாலும் சரி, நாய்க்குட்டி நடிச்சாலும் சரி, கழுதைக்குட்டி நடிச்சாலும் சரி படம் ஹிட்டு. ஒரு படத்துல அஞ்சு பாட்டுன்னா அஞ்சும் ஹிட்டு. பத்து பாட்டுன்னா பத்தும் ஹிட்டு. தீபாவளிக்கு பத்துப் படம் ரிலீஸ் ஆகும், பத்தும் ராஜா சார் மியூஸிக். 
அப்படி ஒரு காலகட்டத்துல அவர் குரல் தேர்வு பண்றாரு. அதுக்கு அப்போ காலேஜ் படிச்சிட்டுருந்த நானும் போனேன். இப்போ நான் ஒரு நடிகனா இருக்கேன்னா அதுக்கு இளையராஜா சார்தான் காரணம்.

இன்று தமிழ்நாடு பப்பு, கிளப்பு, சரக்குன்னு போயிட்டிருக்குற காலகட்டத்துல, எந்த பப்புக்கும் போனதில்ல ராஜா சார். ஆனா அவரோட பாட்டு இல்லாத பப்பே இல்லை. மத்த நேரத்துல எல்லாம் என்னென்ன பாட்டெல்லாமோ கேட்கிற நம்ம பசங்க, அந்த நேரத்துல மட்டும் ராஜா சார் வேணும்னு கேட்கிறான். அதுக்காக ராஜா சாரா அவங்களுக்கு கம்பெனி கொடுக்க முடியும்? ஆனா அவரோட பாட்டு கம்பெனி கொடுக்கும்.

இந்த மாதிரி தமிழ்நாட்டு மக்களோட நாடி, நரம்பு, இரத்தம், இதயம், வாழ்க்கை, அவங்க குடும்பம்னு எல்லாவற்றிலும் கலந்து போயிருக்கிறவர்தான் இசைஞானி இளையராஜா. 
கட்..!’’
‘‘என்ன சார் கட்டா? அவ்ளோதானா?’’
‘‘வெயிட் பண்ணுங்க, அவ்ளோ சீக்கிரம் பேசி முடிச்சுட முடியுமா இளையராஜாவைப் பத்தி! சின்ன ரெஸ்டு...’’ 

‘‘ராஜா சாரிடம் நான் வியக்கிற இன்னொரு விஷயம் இது. தமிழ்நாட்டுல மிகப்பெரிய கர்நாடக சங்கீத வித்வான்கள் எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்களே வியக்கும் வண்ணம் கர்நாடக இசையை சினிமாவில் கொண்டு வந்ததுதான். 

இளையராஜாவால கிராமிய இசை மட்டும்தான் பண்ண முடியும்னு சொல்லிட்டு இருந்தப்போ, டக்குன்னு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் மூலமா ஒரு வெஸ்டர்ன் மியூஸிக் கொடுத்தாரு. என்னதான் மியூஸிக் பண்ணாலும் அவரால கர்நாட்டிக் மியூஸிக்கை டச் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. அப்போதான் ‘சிந்து பைரவி’ வந்து அத்தனையையும் அடிச்சு நொறுக்கிச்சு. ‘சலங்கை ஒலி’ வந்து எல்லாரையும் அண்ணாந்து பார்க்க வெச்சிச்சு. ‘காதல் ஓவியம்’ வந்துச்சு. படத்தைத் தவிர அதுல எல்லாமே ஹிட்டு. ஹிட்டே ஆகாத ஒரு படத்துல இவ்ளோ சூப்பர் ஹிட் சாங்ஸ் யாராச்சும் கொடுத்திருக்காங்களா? அங்க நிக்குறாரு இளையராஜா!’’  

‘முதல் மரியாதை’, ‘தளபதி’, ‘அஞ்சலி’ என்று இளையராஜா பின்னணி இசையில் அசத்திய படங்களை விவேக் சிலாகிக்கும்போது, ராஜாவின் முன்வரிசை பக்தர்களில் ஒருவர் இவர் என்பது நமக்குப் புரிந்தது. ‘‘இப்போ இருக்கிற மார்கெட்டிங் சிஸ்டம்லாம் அப்போ இருந்துச்சுன்னா அவருக்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கிறது? ஆஸ்கார் விருதுக்கு எந்த வகையில் சளைத்தவரு ராஜா சார்? ராஜா சார் இயற்கை நமக்குக் கொடுத்த அரிய பெரும் நிகழ்வு. ஒரு இசையமைப்பாளர்னு மட்டும் அவர் எல்லையைச் சுருக்கிட முடியாது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவர்.
 
‘‘நான் எந்தளவுக்கு இளையராஜாவின் தீவிரக் காதலன் என்றால், எனக்கு பெண் குழந்தை முதல்ல பொறந்தப்போ, அவளுக்கு பெயர் வைக்கிறதுக்கு எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு, என்னோட குருநாதர் பாலச்சந்தரையும் விட்டுட்டு, நான் ராஜா சார்கிட்டதான் போனேன். அவரு ஒரு பத்து பெயரை ஒரு பேப்பர்ல எழுதிட்டு, பூஜை ரூம்ல போயி கொஞ்ச நேரம் தியானத்துல இருந்துட்டு, அப்புறமா ஒரு பெயரை டிக் பண்ணிக் கொடுத்தாரு. அதுதான் அமிர்தா நந்தினி. அதுதான் என் பொண்ணோட பேரு! 

அவரோட திரை இசைப்பாடல்களைப் பற்றிப் பேசுறோம். ஆனா குறைந்தபட்சம் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த மண்ணில் பாடப்பட்ட திருவாசகத்தின் முக்கியமான பாடல்களைத் தொகுத்து அவர் வெளியிட்ட திருவாசகம் மியூஸிக் ஆல்பம் கேட்டுருக்கீங்களா? நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் சரி, அதை நீங்க கேட்கவில்லை என்றால் உங்கள் ஆன்மிகப் பயணத்தில் நீங்க எங்கோ வழிதவறி போயிருக்கீங்கன்னு அர்த்தம். அவ்வளவு பெரிய பொக்கிஷம் அந்த இசைக்கோர்வை. 

ஏன் ராஜா சார் மத்த இசையமைப்பாளர்களிடம் இருந்து வேறுபட்டு நிக்குறார்னா, ஐயாயிரம் பாடல்கள் இசையமைத்த அவரது பாடல்களோட எந்த ஒரு பாதிப்பும், சாயலும் இந்த திருவாசகத்தில் இருக்காது. அதேபோல இந்த இசைக்கோர்வையில் பயன்படுத்திய எந்த பிரயோகமும் அதற்குப் பின் அவர் இசையமைத்த எந்த திரைப்பாடலிலும் இடம் பெற்றிருக்காது. 

இது அதிசயமா? அல்லது கடவுள் உங்களுக்குக் கொடுத்த கிஃப்டானு அவருகிட்ட கேட்டா, ‘அந்த வரியைப் படிச்சவுடனே எனக்கு அப்படித் தோணுது, அப்படியே பாடுறேன்’னு சிம்பிளா சொல்லிடுறாரு. அதனாலதான் அவர் இசைஞானி.

நன்றி : மனம்
பதிவு : வைரஸ் சைமன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’  என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.

வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று  நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ,  ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன்.  ‘`அப்ப அந்தப் பாட்டை யெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு  நீங்க சொல்லுங்க’’ என்றேன்.

‘`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். ‘`என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். ‘`அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். ‘`என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். ‘`மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாம பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார்.

‘`என்ன?’’ என்று கேட்டேன். ‘`ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.

‘`என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், `‘அது பரவாயில்லைங்க.  என்னைக்   காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மிபண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘`அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். ‘`ஐயய்யோ… அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். ‘என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, ‘`நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். ‘இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆம், ‘ஹேராம்’ படத்தில் அத்தனை ஹிட் பாடல்களும் ஏற்கெனவே எழுதி, ஷூட் பண்ணின காட்சிகளுக்குப் புதிதாக இசையமைக்கப் பட்டவை. அதே வரி, அதே சொற்கட்டு. ஆனால், இசையும் ராகமும் வேறு. ராஜா வழி வந்தவை.

அதில் ஒரு காட்சியில், இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய, பெண் பார்க்க ஹீரோ வந்திருப்பான். அவள், மிகவும் இளம் வயது பெண். ‘வைஷ்ணவ ஜன தோ…’ என்று காந்தியாருக்கு மிகவும் பிடித்த பாடலை அந்தப் பெண் பாடுவாள். அதில் ஓர் இடத்தில், ‘`ஸ்ருதியை ரொம்ப மேல எடுத்துட்டா பிசிறி நாறப்போகுது’’ என்று ஒரு விதவை ஐயங்கார் பாட்டி சொல்வார். அதனால் அவள் சரியாகப் பாடவேண்டுமே என்கிற பதற்றத்துடன் அனைவரும் கேட்டுக் கொண்டிருப் பார்கள். அவர் மேல் ஸ்தாயியில் பாடும் இடம் வரும்.  எல்லோரும் பதறி, பிறகு, ‘நல்லா பாடிட்டா’ என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். பின், அந்தப் பெண் பாடியபடியே தன் குடும்பத்தினரை கர்வமாகத் திரும்பிப் பார்ப்பாள். இதுதான் காட்சி. அந்தக் காட்சியையும் ஏற்கெனவே படமாக்கிவிட்டோம்.

அந்தக் காட்சியைக் காட்டி, ‘`இதுக்கு எப்படிப் பண்றது? சரியா உச்சஸ்தாயி போகவேண்டிய இடத்தில் உச்சஸ்தாயி போகணும். எப்படிப் பண்ணலாம்னு எனக்குப் புரியலை’’ என்றேன். ‘`என்ன வேணும் சொல்லுங்க’’ என்றார் ராஜா. ‘`மொத்தக் கதையும் நார்த் இண்டியாவுல நடக்குது. ஆனால், இதுமட்டும் சென்னையில் நடக்கும் காட்சி. அதனால இதுமட்டும் தென்னிந்தியத் தன்மையோட இருக்கணும்’’ என்றேன். ‘`அவ்வளவுதானே’’ என்றவர் உச்சஸ்தாயி போவதுபோல் மூன்று டியூன்கள் போட்டார். அதற்கும் 30 நிமிடங்கள்தான். எனக்கு அந்த மூன்றுமே பிடித்திருந்தன. ‘`நானே சூஸ் பண்றேன்’’ என்று மூன்றில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்தான் படத்தில் வந்தது.

இப்படி வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ‘`எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாம பண்ணிட்டீங்களே’’ என்றார். ‘`இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். `‘இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். `‘ஒரு இயக்குநரா பார்க்கும்போது, இதுல இன்னொரு பாட்டுக்கான இடம் இல்லையே. தவிர இன்னொரு பாட்டு ரொம்ப ஜாஸ்தியாயிடும், வேண்டாங்க’’ என்றேன். `‘ஐயா, இருக்கிற இடத்துல நான் போட்டுக்குறேன். நீங்க சும்மா இருங்களேன்’’ என்றார். ‘`எங்க?’’ என்றேன். ‘`அவர் பாங்கு குடிச்சிட்டு வர்ற அந்த இடம். இயக்குநரா நீங்க அதை ரீரெக்கார்டிங்கா நினைச்சிருந்தீங்க. நானும் அது ரீரெக்கார்டிங்தான்னு சொல்றேன். ஆனா, அதையே பாட்டா போட்டுக்கொடுக்குறேன்’’ என்றார். ‘`நல்லாருக்குமானு பாருங்க’’ என்றேன் அரைமனதாக.

அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், ‘`இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வை யாளர்களுக்குக் கடத்த, ‘சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, ‘ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. இதன்மூலம் பிரபல இந்துஸ்தானி பாடகர் அஜய் சக்கரவர்த்தி அவர்களின் நட்பையும் ராஜா எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.

‘`பணம், உழைப்பு, நாள்கள்… என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில்  ‘ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் ‘`இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர்.

அவர்களின் முகத்தில், ‘`இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. ‘`இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘`காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன்.

ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின்,  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப்பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர்.

ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், ‘இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, ‘மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ… மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி ‘ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.

“ ‘ஹேராம்’ படத்தில் நடந்த இந்த விஷயத்தை ஊர் ஃபுல்லா தண்டோரா போட்டுச் சொல்லணும்ங்க’’ என்று நான் சொன்னபோது,  ‘`அதெல்லாம் பண்ணக்கூடாது. ரொம்பத் தற்பெருமையா இருக்கும்’’ என்றார் ராஜா. நானும் சில பேட்டிகளில் இதைச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்த சாதனையை ஒவ்வொரு வரியாகப் போட்டுக் காட்டி, எது எதுவாக மாறியது என்று சொன்னால்தான் புரியும். அதாவது கிட்டத்தட்ட காளமேகம் புலவர் ஒரு பாட்டுக்கு  இரண்டு  அர்த்தம்  வருவதுபோல் சிலேடைப் புலமையால் பாடுவார் என்பார்களே, அப்படி இசையில் பல்வேறு அர்த்தங்கள் கண்டறியும் இசைக் காளமேகம் இவர்.

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன. ‘விருமாண்டி’யில் நடந்த இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். பாடல்கள் தவிர, அந்தப் படக் காட்சிகள் அனைத்தையும் ஷூட் செய்துவிட்டு வந்து படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். ‘`என்ன கமல், இப்படி வெட்டுக் குத்தா இருக்கு. ஓலமே கேக்குதே’’ என்றார். ‘`வெட்டுக்குத்தைப் பற்றிச் சொல்லும்போது ஓலம் தன்னால வரத்தானே செய்யும்’’ என்றேன். `‘உங்க மூடு அப்படி இருக்கிறதால இப்படியான படங்கள் எடுக்குறீங்களா’’ என்றவர், ‘`காமெடிப் படங்கள் எடுங்க’’ என்றார். ‘`எடுக்கலாம். இது எனக்கு ஆசையா இருக்கு’’ என்றேன். ‘`சரி, முடிவு பண்ணிட்டா பண்ணிட வேண்டியதுதான். வாங்க’’ என்றபடி கம்போஸிங்குக்கு வந்தார்.

ஒரு ட்யூன் வந்தது. ‘`பிரமாதமா இருக்குங்க. இதுக்கு ஒரு நல்ல கவிஞரை வெச்சு எழுத வைக்கணும்’’ என்றேன். ‘`அதெல்லாம் நீங்க சொல்லப்படாது’’ என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அமைதியாக இருந்தேன். ‘`சரி, இப்ப என்ன பண்றீங்க. இங்க உட்கார்ந்து இந்த ட்யூனுக்குப் பாட்டு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க’’ என்று ஒரு பேப்பரை என் கையில் திணித்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘`என்னங்க விளையாடுறீங்களா, நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் போகணும்’’ என்றேன். `‘அதெல்லாம் தானா வரும். போங்க, எழுதுங்க’’ என்றார்.  ‘`எனக்கிருக்குற டென்ஷன்ல முதல்வரியே வராது. முதல் வரியையாவது சொல்லுங்க. அதுல இருந்து புடிச்சிக்கிட்டு எழுதுறேன்’’ என்றேன். ‘`சொல்லட்டுமா’’ என்றவர், ‘`உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல…’ என்று பாடலாகவே பாடியவர், ‘போங்க, இப்ப எழுதிக்கொடுங்க’ என்றார். ஆமாம், அந்த முதல் வரி இளையராஜா அவர்களுடையது.

பிறகு அந்தப் பாடல் ரெக்கார்டிங். ஸ்ரேயா கோஷல் தன் வசீகரிக்கும் குரலில் அழகாகப் பாடியிருந்தார். ‘உங்களுக்கு நீங்கதான் பாடுறீங்க’ என்றார் ராஜா. ‘`ஏங்க அவங்க நல்லா பாடியிருக்காங்க. விட்டுடலாமே’’ என்றேன். ‘`இல்ல, நீங்க பாடுங்க’’ என்றார். சமயத்தில் சிலர், அழகான பாட்டை பெரிய ஆர்க்கெஸ்ட்ரா போட்டு ‘ஜங்கர ஜங்கர’ என்று சத்தம் எழுப்பிக் கெடுத்துவிடுவார்கள். ஆனால் ராஜா, அந்தப் பாட்டுக்கு சத்தம் கூட்டாமல் வெறும் ஆறு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மட்டுமே வைத்து  ஒலி கோத்தார். அந்த ஆறுமே ஒன்றோடொன்று பிசிறில்லாமல் தனித்தனியாகக் கேட்கும். என் டீமில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று என்னைப்போலவே ராஜாவுக்குத் தெரியும். எங்களுக்குப் பிடித்ததை, விருப்பமானதை அதில் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.

அப்போது சந்தானபாரதியின் தம்பி சிவாஜி சின்னமுத்து என்னுடன் இருந்தார். ‘` `காட்டு வழி காளைகள்…’னு வர்ற இடத்துல காளைகளோட கழுத்துமணிச் சத்தம் சேர்த்தா நல்லா இருக்கும். அந்த பெல் சத்தங்கள் பதிவு பண்ணின வீடியோ ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு. அதைக்கேக்குறீங்களா’’ என்றார் ராஜாவிடம். `சேர்த்தா கண்டிப்பா நல்லா இருக்கும். வாங்குய்யா அதை’ என்றார். வீடியோ கேமராவிலிருந்து வந்த சவுண்டை ட்ரீட் பண்ணி, அதைப் பாட்டுக்கு நடுவில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அது, அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப் பாடல். ‘மாடவிளக்கை யார் கொண்டுபோய் தெருவோரம் ஏற்றினா? மல்லிகைப்பூவை யார்கொண்டு முள்வேலியில் சூட்டினா?’ என்ற பாடல். அதில், ‘ஆறாக நீ ஓட, உதவாக்கரை நான்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார்.  அதைப் படித்துவிட்டு ராஜாவும் நானும் நேருக்குநேர் பார்த்து, ‘உதவாக்கரைனு வையிறதுக்கான அர்த்தத்தை இதுநாள்வரையிலும் நாம சரியா புரிஞ்சுக்கலையே’ என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. முத்துலிங்கத்தின் கைகளைப்பிடித்தபடி பாராட்டினார். அந்த நெகிழ்வு எனக்கு ராஜாவிடம் மிகவும் பிடிக்கும். அந்த நெகிழ்வு இல்லாத எந்தக் கலைஞர்களும் பணி ஓய்வு பெற்றுவிடலாம். இந்தச் சின்னச்சின்ன விஷயங்களை ரசிக்க முடியாதபோது அவர்கள் எல்லோருமே ஒருமாதிரி வெறுத்து சக்கையாகிவிட்டார்கள் என்றே அர்த்தம். எங்களை எளிதாக அழவெச்சிடலாம். ‘உதவாக்கரை’னு ஒரு வார்த்தைக்காக இப்படியா கொண்டாடுவது’ என்றால், கொண்டாடத்தான் வேண்டும். அந்தமாதிரியான சின்னச்சின்னக் கொண்டாட்டங்களில்தான் இளையராஜாபோன்ற ஒருவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதேபோல எத்தனை சின்னச்சின்னக் கொண்டாட்டங்களுக்கு அவர் தன் இசையின் மூலம் காரணமாக இருந்திருப்பார்?

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங்  தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டுவிட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென ‘போடா’ என்று சொல்லிவிடுவார்.  அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.

ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், ‘ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதைவிட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், ‘உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு.

எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன்.

இத்தனை ஆண்டுக் காலப் பயணத்தில்… எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு… என்னென்னமோ இருக்கின்றன.  நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கிவாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம்கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசிமெழுகிவிட்டது.

எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்…  பற்றிப் பேசும்போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததில் இருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்… என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்ததுபோலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டிவந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை.

ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், ‘இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்.

நன்றி; ஆனந்தவிகடன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ராஜாவின் வீணை ! புண்யா ஸ்ரீனிவாஸ் !!

“இளையராஜா சார் தன் மகள் பவதாரணிக்கு வீணை கற்றுக்கொடுக்க டி.வி.ஜி சார்கிட்ட ஆள் கேட்க, அவர் மூலமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. 

பவதாரணிக்கு வீணை கற்றுக்கொடுக்க ஆறு மாதங்கள் ராஜா சார் வீட்டுக்குப் போனேன். ராஜா சார் தினமும் ரெக்கார்டிங் தியேட்டருக்குக் கிளம்பும் முன், காலை ஆறரை மணிக்கு தன் வீட்டின் மியூசிக் ரூமுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டுப் போவார். அந்த ரூம்லதான் நான் பவதாரணிக்கு க்ளாஸ் எடுத்துட்டிருப்பேன். அந்தச் சமயத்துல நான் சொல்லிக்கொடுப்பதைக் கவனிச்சிருக்கார். ஒருநாள் அவர் வீட்டிலேயே என்னை சில கீர்த்தனைகளை வாசிச்சுக்காட்டச் சொன்னார். அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருச்சு. அப்போ ஆரம்பிச்ச பயணம், தொடர்ந்து 27 வருஷமா ராஜா சார்   ட்ரூப்பில் வீணை வாசிச்சுட்டிருக்கேன்!” - சிலிர்ப்பும் சந்தோஷமுமாகப் பேசுகிறார் புண்யா ஸ்ரீநிவாஸ்.

பிரபல வீணைக் கலைஞரான இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பல நூறு திரைப்படங்களில் பணியாற்றியவர். புண்யாவின் இசைப்பயணம்  இப்போது அநிருத் இசையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல’ பாடல் வரை வந்திருக்கிறது. 

“இளையராஜாவிடம் வேலைபார்க்கும் அனுபவம்?”

“அது வரம்! ராஜாசார்கிட்ட வேலைக்குச் சேர்ந்தப்போ எனக்கு 17 வயசு. முதல் ஒரு மாசம், எனக்குப் பயிற்சிகள் கொடுத்தார். பிறகு, 1990-களிலிருந்து ராஜா சாரின் எல்லாப் படங்களின் பின்னணி இசை, பாடல் இசை மற்றும் மேடைக் கச்சேரிகள்ல பிரதான வீணைக் கலைஞராக வாசிக்க ஆரம்பித்தேன். 90-களின் தொடக்கத்தில் தன் இசையில் வீணைக் கருவியுடன் கிடார் மற்றும் சிதார் கருவிகளையும் இணைத்து வாசிக்கவைப்பார். பின்னாள்களில், வீணை இசை தனித்துவமா ஒலிக்கிற மாதிரியான போர்ஷனை கம்போஸ்செய்து, அதில் என்னை வாசிக்கவைத்தார். ‘நிற்பதுவே நடப்பதுவே’ (பாரதி), ‘ஒரு ராகம் தராத வீணை’ (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) உள்ளிட்ட நிறைய பாடல்களில் என் வாசிப்பு தனித்துவமா தெரியும்.’’

“மற்ற இசையமைப்பாளர்களோடும் பணியாற்றுகிறீர்களே?” 

‘`ராஜா சார்கிட்ட சேர்வதற்கு முன் நான் அதிகமா சினிமாவெல்லாம் பார்த்ததில்லை. சொல்லப்போனா, ராஜா சார்கிட்ட சேர்ந்த பிறகுதான் தமிழ் சினிமா இசை உலகு பற்றியும், அதில் அவர் முடிசூடா மன்னன் என்பதையுமே தெரிஞ்சுக்கிட்டேன். ராஜா சார்கிட்ட வேலைபார்க்க ஆரம்பிச்ச காலத்திலேயே, எனக்கு மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்தும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்கு ராஜா சார் எந்த ஆட்சேபனையும் சொல்லலை. வாழ்த்தினார். 

தொடர்ந்து தேவா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் தொடங்கி இன்று அனிருத் வரை முன்னணி தமிழ் மற்றும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானவர்கள்கிட்டயும் வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒருவேளை ஒரே நேரத்துல பல இசையமைப்பாளர்களிடமிருந்தும் அழைப்பு வந்தால், ‘ராஜா சார் வேலையை முதல்ல முடிச்சுட்டு அப்புறம் வாங்க’னு அவங்களே சொல்லிடுவாங்க.”

“வெளி நிகழ்ச்சிகளில் சினிமாப் பாடல்கள் வாசிப்பதில்லையே. ஏன்?” 

“27 வருஷத்தில், ஒரு வெளிநிகழ்ச்சியில்கூட சினிமாப் பாடல்களை வாசித்ததில்லை. ஏன்னா, அது இசையமைப்பாளர்களின் சொத்து. என் சொந்த உழைப்பில் உயிர்பெறும் பாடல்களின் மூலமே நான் வீணைக் கலைஞரா புகழ்பெற ஆசைப்படுறேன். அதன்படி 2012-ம் வருஷம், ‘வீணா இன் வியன்னா’ங்கிற பெயர்ல ஒரு வீணை ஆல்பம் வெளியிட்டேன். அந்த ஆல்பம் விற்பனையில் சாதனைபடைக்க, மீண்டும் ‘சவுண்ட் ஆஃப் ஸ்வான்’னு இன்னொரு ஆல்பம்  ரிலீஸ் பண்ணினேன். அதுவும் ஹிட். தொடர்ந்து பல வெளிக்கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள்ல வாசிச்சுட்டிருக்கேன். அவற்றிலெல்லாம் தனி ஆல்பம், கர்னாட்டிக், ஃபியூஷன் மற்றும் பஜன்ஸ் மியூசிக் வகையில் உருவான பாடல்களை மட்டுமே வாசிக்கிறேன். என் ஆல்பங்கள் மூலமா என்னைத் தெரிஞ்ச பலருக்கும், நான் பலநூறு படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கிறதெல்லாம் தெரியாது.”

நன்றி : கு.ஆனந்தராஜ்
பதிவு : வைரஸ் சைமன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இளையராஜாவையும் அவரது இசையையும் நேசிக்கும் பக்தர்களில் இவர் ஒரு இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர். கொஞ்சம் முரட்டு பக்தர்,
இவர்முன் யாராவது இளையராஜாவை கிண்டல் செய்து பேசினால்
கோபத்தில் பொங்கி விடுவார்.

பேசியவரை முதலில் இங்கிருந்து கிளம்புனு விரட்டிவிடுவார், அதையும்
மீறி அங்கேயே உட்கார்ந்து கிண்டலடித்தால் அவ்வளவுதான் அவர்
பாஷையில் தக்காளி சொல்லிகிட்டே இருக்கனு மரண அடி கொடுப்பார்"

இப்படி ஒரு வெறி தனமான பக்தர் யாருமல்ல.... ராஜ்கிரண் தான் அவர்.

ராஜாவை "அண்ணே என்று தான் கூப்பிடுவார்" இவர் தயாரித்து இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இசை இளையராஜாதான். அவர் எவ்வளவு பிஸியாக 
இருந்தாலும் அவருக்காக காத்திருந்து இசை பெறுவார். "என்ன பெத்த ராசா", "எல்லாமே என் ராசாதான்", "ராசாவே உன்னை நம்பி", "அரண்மனைக்கிளி" "என் 
ராசாவின் மனசிலே" இதற்கெல்லாம் இசை ராஜாதான்.

ஒரு கட்டத்தில் பக்தி முத்திபோய், தான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கெல்லாம் ராஜா இசையமைத்தால் தான் நடிப்பது என்ற முடிவில் இருந்தார். 
அதனால் சில பட வாய்ப்புகளையும் இழந்ததுண்டு.

பிறகு வேறொருவர் இசையில் அவர் இயக்கியது நடித்தது எப்படி ?

" ஒரு தடவை ஆர்.பி.சௌத்ரி என்னை வச்சு ஒரு படம் தயாரிக்க முடிவானது. அந்த படத்திற்கு ராஜா அண்ணன் தான் இசையமைக்க வேண்டும் என்று 
சொன்னதற்கு " அவருக்கு சம்பளம் அதிகமா தரவேண்டி இருகக்குமோனு சௌத்ரி சார் வேறு ஒரு இசை அமைப்பாளர் பெயரை சொன்னார்.

ராஜா அண்ணன் இசை அமைக்காத படத்துல நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இதை கேள்விப்பட்டு ராஜா அண்ணன் என்னை 
கூப்பிட்டு பேசினார்.

"உன் சொந்த படம்னா வா இசை அமைத்து தர்றேன்". மத்தவங்க தயாரிக்கற படத்துல அவங்க இஷ்டம்போல யாரை வேணாலும் மியூசிக் பண்ணட்டும், நீ போய் நடி, எனக்காக ஏன் வர வருமானத்த இழக்கிறேன்னார். அதனாலதான் பிற மியூசிக் டைரக்டர் படத்துல நடிச்சேன்...

பதிவு : வைரஸ் சைமன்

Via Fb 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இயக்குநர்கள் சொல்லாததை திரையில் கொண்டு வருவார் இசைஞானி - நடிகர் மனோபாலா

“இளையராஜாவைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் முழுக்க பேசிக்கொண்டே இருந்தாலும் அலுக்காது. அதுக்கு காரணம் அவரோட இசைதான். உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்கு இளையராஜா சாரோட பழக்கம் உண்டு. அதுதான் என்னோட வாழ்க்கையில எனக்கு கிடைச்ச மாபெரும் வாய்ப்பு. மியூசிக் கம்போசிஷன் செய்யும்போது இயக்குநருடன் இருக்க ஒரேயொரு உதவி இயக்குநருக்குதான் வாய்ப்பு கொடுப்பார் ராஜா. அப்படியான வாய்ப்பு என்னுடைய இயக்குநர் பாரதிராஜா சார் மூலமாக எனக்குக் கிடைச்சிருக்கு. இளையராஜா சார் பிஸியா இருந்த காலகட்டத்துல ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கு” என்று எடுத்த எடுப்பிலேயே இசைஞானி பற்றி டாப் கியரில் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா!
 
“சென்னை கடற்கரை சாலையில் இருக்குற வி.ஜி.பி.யிலதான் இளையராஜா ரூம் போடுவாரு. 110வது அறை எப்பவும் அவரோடதா இருக்கும். அவரைச் சுற்றி இருக்கிற மற்ற எல்லா அறைகளையும் தயாரிப்பாளர்கள் புக் பண்ணியிருப்பாங்க. ஒரே சமயத்துல 10 தயாரிப்பாளர்களோட படங்களுக்கு அவர் இசையமைப்பாரு. அதுக்கு காரணம், எப்போ ராஜா கம்போசிங்குக்கு கூப்பிடுவாருன்னு தெரியாது. ஆனா அந்த சமயத்துல முதல்ல அவர் பாடல் கம்போஸ் பண்றது பாரதிராஜாவுக்குதான். அவரோட அஸோசியட் டைரக்டர் நான்தான் என்பதால, டைரக்டர்கூட போவேன். அதிகாலை 4.30 மணிக்கு வி.ஜி.பி. கடற்கரையோரம் ராஜா சார் வாக்கிங் போவாரு. அப்போ, டைரக்டரும், நானும் கூடப் போவோம். அப்படி போகும்போது நிறைய விஷயங்களை ராஜா சார் எங்ககிட்ட பகிர்ந்திருக்காரு.
 
எங்க படத்துக்கு கம்போசிங் பண்ணும்போது, ரெண்டு மூணு ட்யூனை போட்டுக் காட்டுவாரு இளையராஜா. டைரக்டரோ, “நான் நினைச்ச மாதிரி வரலையா...”ம்பாரு. அதுக்கு ராஜாவோ, “என்னய்யா நினைச்ச?”ன்னு கேட்பாரு. ‘என்னமோ நினைச்சேன். அதைச் சொல்லத் தெரியல. தெரிஞ்சா... சொல்ல மாட்டனா?. அது கொஞ்சம் நல்லாயிருக்கும்...” இப்படி எங்க டைரக்டர் எதை எதையோ சொல்லுவாரு. “என்னதான்யா... உங்க டைரக்டரு நினைக்கிறாரு...?”ன்னு என்னைப் பார்த்து இளையராஜா கேட்பாரு. “கொஞ்சம் மந்திரம் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும் சார். அதாவது ஸ்லோகம் மாதிரி...ஐய்கிரி...நந்தினி..மேதவி....”ன்னு நான் சொல்லுவேன், அப்படி ராஜா சார் இசையமைச்ச பாட்டுதான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் வர்ற “நம்தன... நம்தன... தாளம் வரும் புது ராகம் வரும்...” பாட்டு!
 
அதேமாதிரி கவியரசு கண்ணதாசன், இளையராஜா காம்பினேஷனில் வேலைப் பார்த்ததையும் மறக்க முடியாது. எல்லோருமே நிமிர்ந்து பார்க்கிற ஒரு மனிதர் கண்ணதாசன். அவரோட வரிகளுக்கும் ராஜா சார் இசையமைச்சிருக்காரு என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. கண்ணதாசன் சாரோட வேகத்துக்கு எல்லாம் எந்தவொரு பாடலாசிரியராலும் எழுதவே முடியாது. அந்த வகையில் “வான் மேகங்களே...” என்னோட கிளாசிக்!. 
 
பொதுவா ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் தான் வேலை பார்க்கிற படத்தோட பின்னணி இசையின்போது உடனிருக்கணும்னு ஆசைப்படுவாங்க. எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. அதனால, ‘புதிய வார்ப்புகள்’ படத்தோட எடிட்டிங் முடிஞ்சதும் அடுத்தது ரீரெக்கார்டிங்தான்னு முடிவானதுமே, நான் தயாராயிட்டேன். காலையில ஏழு மணிக்கே ராஜா சார் அலுவலகத்துல போய் நின்னுட்டேன். இப்போ மாதிரி டிஜிட்டல் எல்லாம் கிடையாது. அப்போ ரீல் ரீல்லாதான் போடணும். அப்படி ஒன்றரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் முடிச்சு, கையில கொடுத்திட்டாரு. அசுர வேகம்னு சொல்வாங்களே... அப்படி அசுர வேகமாகத்தான் இசையமைப்பாரு இசைஞானி!
 
பாடலுக்காக ஹார்மோனியத்துல ராஜா சார் கை வைச்சா அந்த அறையே தெய்வீகக் கலையாயிடும். அவர் இசையமைப்பதைப் பார்க்கும்போது, ‘அய்யோ... இந்த மனுசன் எவ்ளோ நாள் வேணா இருந்துட்டுப்போகட்டுமேன்னு தோணும். எங்க ஆயுளையெல்லாம் கூட எடுத்துங்க. அவரை வாழ விடுங்கன்னு அந்த கடவுளுகிட்ட சொல்லத் தோணும். நினைச்சுப் பாருங்க. இவ்ளோ நல்ல பாடல்களை அவரைத் தவிர, வேறு யாரு கொடுத்திட முடியும்? 18 ஜி.பி.க்கு ராஜா சாரோட கலெக்ஷன் வைச்சிருக்கேன். என்னால இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டே, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை போய்விட முடியும்!
 
இதுவரை யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்தையும் உங்ககிட்ட சொல்றேன். பொதுவா, ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் முதல்ல பாடலைத்தான் ரெக்கார்டிங் பண்ணுவாங்க. அப்படி ராஜா சார் ஸ்டூடியோவுல ரெக்கார்டு ஆகிற பாடலோட கேசட்ஸ் எல்லாம், எனக்கு தனியா வந்திடும். அப்போ ஸ்டூடியோவுல பாண்டுன்னு ஒருத்தர் இருப்பாரு. அவரோட உதவியால, இளையராஜா சாரோட பல பாடல்களை நான் கடத்திக்கிட்டு வந்திருக்கேன். அந்தப் பாடல்கள் எதுவும் என்னோட படம் கிடையாது. யார் யாரோட படமாகவோ இருக்கும். அப்படி, இயக்குநர் மகேந்திரன் சாரோட ‘உதிரிப்பூக்கள்’ படத்தோட பாட்டெல்லாம் எனக்கு முன்னாடியே வந்துடுச்சு. உண்மையிலேயே அவர் அந்தப் பாட்டையெல்லாம் கேட்டாரான்னா தெரியாது. எல்லோருக்கும் முன்னால நான் கேட்டுடுவேன். எப்படீன்னா... இரவு எட்டரை மணிக்கு ஸ்டூடியோவுக்குப் போய், பாண்டு மூலமா கேசட் எடுத்துக்கிட்டு வந்து, அதே ஸ்டூடியோவுல இருக்குற ஒரு தென்னை மரத்துக்கு அடியில உட்கார்ந்து பாடல்களைக் கேட்பேன். 
 
என்னோட சில படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, ராஜா சார்கிட்ட, ‘சார்... அந்தப் படத்துல அந்த மாதிரி போட்டிருந்தீங்களே... எனக்கு அப்படியொரு பாட்டு வேணும்”னு சொல்வேன்’. அவரு, “அதான் அந்தப் படத்திலேயே போட்டுட்டேனே... மறுபடியும் அது எதுக்கு?”ம்பாரு. அதனால, நான் கொஞ்சம் பெரிய ஆளுங்களா இருக்குற நவுஷாத் மாதிரியான இசைக் கலைஞர்களோட பாட்டு மாதிரி ஒண்ணு கொடுங்கன்னு கேட்பேன். “என்னமா பாட்டு போட்டுருக்கான்யா... நாமெல்லாம் ஒண்ணுமேயில்ல...” என்பார். என்கிட்ட 1934ல் இருந்து இசையமைக்கப்பட்ட பல படங்களோட ஆடியோ கேசட் இருக்கு. அதுல எஸ்.டி.பர்மன்ல தொடங்கி பல பேரு இருக்காங்க. அந்த கலெக்ஷன்ல இருக்குற டிவிடிக்கள் எல்லாத்தையும் ராஜா சார்கிட்ட கொண்டுபோய் கொடுத்தேன். அந்தப் பாட்டை எல்லாம் கேட்டவரு, “இந்த ஜாம்பவான்கள் இருக்குற கூட்டத்துல, நானும் ஒருவனா இருக்கிறதே ஒரு சாதனைதானே...” என்றார். ‘சாதனையை எல்லாம் கடந்து, நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார்’ன்னு பதில் சொன்னேன். இந்திய உலகின் சாதனையாளராக இளையராஜா இருப்பதற்குக் காரணம், அவரது அயராத தேடலும், இன்னும் சிறப்பான படைப்பு ஒன்றை அளிக்க வேண்டும் என்கிற ஆர்வமும்தான்.
 
சினிமாவுல நாம ஒரு கதையை எழுதி, ஒரு காட்சியில காதலன் தன்னோட காதலியை காதலோட பார்க்குறான்னு  சொல்லிடலாம். அதைப் படமாகவும் எடுத்துடலாம். ஆனா, இயக்குநர்கள் சொல்லாத ஒரு கதையை திரையில் கொண்டு வருவது என்பது இளையராஜாவின் இசையால் மட்டுமே சாத்தியம்!” என்று சிகரம் வைத்தது போன்ற வார்த்தைகளை உதிர்த்து, இளையராஜா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மனோபாலா.

நன்றி : மனம்

Link to comment
Share on other sites

  • 8 months later...

நெஞ்சம்  மறப்பதில்லை 123 

பாக்யராஜின் பாடல் வரிகளைப் பாட மறுத்த இளையராஜா   

-சித்ரா லட்சுமணன் 

"சுவர் இல்லாத சித்திரங்கள்"படத்தின் மூலம் இயக்குனரான கே.பாக்யராஜ் அந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்கிய பல படங்கள்  வெற்றிப்படங்களாக அமைந்ததால்  அவருடைய இயக்கத்திலே ஒரு படத் தைத் தயாரிக்க வேண்டும் என்று அப்போது முன்னணியிலே இருந்த  எல்லா பட நிறுவனங்களும் ஆசைப்பட்டன.அப்படி தன்னைத் தேடிவந்த பல வாய்ப்புகளில் ஏவி.எம்.நிறுவனத்தின் வாய்ப்பை  ஏற்றுக் கொண்ட பாக்யராஜ் அந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோதே அந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கங்கை அமரனுக்கு தருவதாக  உறுதி அளித்தார்.தன்னுடைய முதல் படமான "சுவர் இல்லாத சித்திரங்கள்"படத்துக்கு இசையமைத்தவர் என்பதால் கங்கை அமரன் மீது அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பாசம் இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம்.

ஏவி.எம்.சகோதரர்களில் எம்.குமரன் இசை ஞானம் மிக்கவர்.ஆகவே ஏவி.எம்.தயாரிப்புகளைப் பொறுத்தவரையில் இசை சம்பந்தப்பட்ட  முடிவுகளைப்  பெரும்பாலும் அவர்தான் எடுப்பார்."முந்தானை முடிச்சு" படத்துக்கு  இசையமைப்பாளராக சங்கர் கணேஷைப்  போடலாம் என்று எம்.குமரன் ஆலோசனை சொன்னபோது  அதை உடனடியாக மறுத்த  பாக்யராஜ் தான் ஏற்கனவே கங்கை அமரனுக்கு வாக்கு கொடுத்திருப்பதைப் பற்றி அவரிடம் சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் ஏவி.எம் சகோதரர்கள் எவரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. 

"முந்தானை முடிச்சு" படத்திற்கான முழு திரைக்கதையையும் எழுதி முடித்த வுடன் ஏவி..எம்.சகோதரர்களுக்கு  அந்தக் கதையை சொன்னார் கே.பாக்யராஜ்.கிராமிய மணம் கமழ பாக்யராஜ் சொன்ன கதை அவர்கள் மூவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையைக்  கேட்ட அவர்கள் மூவருக்குமே  அந்தப் படத்தின் வெற்றியில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை அவர்கள் முகத்தைப் பார்த்தே பாக்யராஜ் தெரிந்து கொண்டார்.ஆனால் அதற்குப் பிறகும் அவர்கள்  மூவரும் தனித்தனியாக பேசிக் கொண்டிருக்க அதைப்  பார்த்த பாக்யராஜ்  லேசாக குழப்பம் அடைந்தார்.அவரது குழப்பத்தை அதிகம் நீடிக்க விடாமல் அடுத்த அரை மணி நேரத்தில்அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்த விஷயம் என்ன என்பதை  பாக்யராஜிடம்  சொன்னார் ஏவி.எம்.சரவணன்.

"உங்களுடைய கதையைப் பொறுத்தவரை  நாங்கள்  அனைவரும் எதிபார்த்ததை விட  பல மடங்கு சிறப்பாக இருக்கிறது .முழுக்க முழுக்க கிராமியக் கதையாக உங்களுடைய கதை அமைந்திருப்பதால்  இளைய ராஜா இசையமைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எல்லோரும் நினைக்கிறோம்"என்று அவர்கள் சொன்ன அடுத்த நிமிடமே "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் ஏற்கனவே கங்கை அமரனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன்.அதனால் அவரை மட்டும் என்னால் மாற்ற முடியாது"என்று திட்டவட்டமாக அவர்களிடம் தெரிவித்தார் பாக்யராஜ்.அவரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் அவர் திரும்பத் திரும்ப அதையேதான் சொல்வார் என்பதைத் தெரிந்து கொண்ட சரவணன் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்கு இசையமைக்க  முதலில் குன்னக்குடி வைத்தியநாதனை ஒப்பந்தம் செய்திருந்த எம். ஜி. ஆர் பின்னர் அவரை மாற்றிவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதனை ஒப்பந்தம் செய்ய என்ன தந்திரத்தைக் கையாண்டாரோ அதையே கங்கை அமரன் விஷயத்திலும்  கையாண்டார்.   
    
"கே.பாக்யராஜ் இயக்கத்திலே நாங்கள் "முந்தானை முடிச்சு"என்ற படத்தைத்   தயாரிக்க இருக்கிறோம்.அது முழுக்க முழுக்க கிராமியக் கதையாக இருப்பதால் அந்தப் படத்துக்கு உங்கள் அண்ணனான  இளையராஜா இசையமைத்தால்  நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை உங்களுக்குத் தருவதாக ஏற்கனவே சொல்லிவிட்ட காரணத்தால் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள பாக்யராஜ் மறுக்கிறார்.நீங்கள்தான் அவரிடம் பேசி இந்த மாற்றத்துக்கு அவரை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்" என்று கங்கை அமரனிடம் சரவணன்  கேட்டபோது மறுத்துப் பேச முடியாமல் அதற்கு ஒப்புக்கொண்ட  அவர் அடுத்து பாக்யராஜை சந்தித்தார். "அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் விருப்பப் படுகிறார்கள்.கிராமியப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தால்  மிகச்சிறப்பாக இருக்கும் என்பதை யாரால்  மறுக்க முடியும்?அதனால் நாம் இருவரும் இணைந்து உங்களுடைய அடுத்த படத்திலே பணியாற்றுவோம். இந்தப் படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கட்டும்"என்று கங்கை அமரன் சொல்ல   பாக்யராஜ் அதை ஏற்றுக்கொண்டார்.  

 அந்த மாற்றத்திற்கு பாக்யராஜ் ஒப்புக்கொண்ட போதிலும்  இளையராஜா  அந்தப்  படத்திற்கு  இசையமைக்க முதலில் ஒப்புக் கொள்ள வில்லை.
ஏவி.எம். சகோதரர்கள் இளையராஜாவைத்  தொடர்பு  கொண்ட போது "மன்னித்துக் கொள்ளுங்கள் இந்த படத்திற்கு  என்னால் இசையமைக்க முடியாது.உங்களுடைய அடுத்த படத்திற்கு என்னைக் கூப்பிடுங்கள்,நிச்சயமாக இசையமைக்கிறேன்.ஆனால் இந்தப் படம் மட்டும் வேண்டாம்,என்னை விட்டு விடுங்கள்  " என்று அவர் சொன்ன வுடன் பாக்யராஜிற்கும்  இளையராஜாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் அவர் பாக்யராஜின் படத்திற்கு இசையமைக்க மறுக்கிறார் என்ற முடிவுக்கு  ஏவி. எம் சகோதரர்கள் வந்தனர்.  ஆனால் உண்மை அதுவல்ல என்பது  இளையராஜாவை பாக்யராஜ் நேரில் சந்தித்தபோது தெரியவந்தது 

"16 வயதினிலே" படம் முதலே  இசையமைப்பாளர் இளையராஜாவை கே.பாக்யராஜ்  நன்கு அறிவார் என்பதால் பிரசாத் ஸ்டூடியோவில் அவரை நேரில் சந்தித்து "என்னுடைய படத்திற்கு இசையமைக்க மறுத்து விட்டீர்களாமே?" என்று உரிமையோடு பாக்யராஜ் கேட்டபோது "நான்  மறுத்தது இருக்கட்டும்.  நீ முதலில் நான் இசையமைக்க வேண்டும் என்றா ஆசைப்பட்டாய்?  கங்கை அமரனைத்தானே நீ இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்தாய், அப்படி இருக்கும்போது நான் எதற்கு உன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று லேசாக சிரித்தபடியே பாக்யராஜிடம் கேட்டார்  இளையராஜா.  அவருடைய கேள்வியிலே  காரம் இருந்தாலும் முகத்திலே சிரிப்பு இருந்ததால் எப்படியும் தன்னுடைய படத்துக்கு இசையமைக்க ராஜா நிச்சயமாக ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை பாக்யராஜிற்கு பிறந்தது. அதற்குப்  பிறகு சிறிது நேரம் பாக்யராஜிடம் கிண்டலாக பேசிக்கொண்டிருந்த இளையராஜா இறுதியிலே பாக்யராஜ்  எதிர்பார்த்ததைப் போலவே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டு விட்டார் என்ற செய்தி அறிந்ததும் ஏவி. எம்.  சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்
 
"முந்தானை முடிச்சு" படத்திற்கு இசையமைக்கின்ற வாய்ப்பை கங்கை அமரனுக்கு கொடுக்கமுடியாமல் போனதால் அதை ஈடுகட்டும் விதத்தில் அந்தப் படத்தில் மூன்று பாடல்களை எழுதுகின்ற வாய்ப்பினை அவருக்கு அளித்தார் கே.பாக்யராஜ்.  "முந்தானை முடிச்சு" படத்திலே மொத்தம்  6 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.அதில் மூன்று பாடல்களை  கங்கை அம ரன் எழுத மீதமுள்ள மூன்று பாடல்களை புலமைப்பித்தன் முத்துலிங்கம் நா.காமராஜன் ஆகியோர் எழுதி இருந்தனர்.

கே.பாக்யராஜைப் பொறுத்தவரையிலே திரைக்கதை ஆனாலும் சரி பாடல் ஆனாலும் சரி எதிலும்  அவ்வளவு எளிதிலே அவர் திருப்தி அடைய மாட்டார்.படத்தின் காட்சிகளைப்  படமாக்குவதற்கு முன்பு கடைசி நிமிடம்வரை அந்தக் காட்சியை இன்னும் சிறப்பாக ஆக்க முடியுமா என்று யோசிப்பது அவரது வழக்கம்.அதேபோன்று பாடல்களைப் பொருத்தவரையிலும் பதிவாகின்றவரை அந்தப் பாடல் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்  அவர். 
"முந்தானை முடிச்சு" படத்திலே இப்போது இடம்பெற்றுள்ள "விளக்குவைச்ச நேரத்துல..." என்று  தொடங்கும் பாடலுக்கு அந்த பாடலை எழுதிய கவிஞர் நா.காமராஜன் முதலில்  வேறு வரிக்ளை எழுதியிருந்தார்.என்ன காரணத்தாலோ  நா. காமராஜ் எழுதியிருந்த அந்தப் பல்லவி பாக்யராஜை   கவரவில்லை. 

பாடல் பதிவின்போது அந்த பல்லவியை  எப்படி மாற்றலாம்  என்று சிந்தித்துக் கொண்டிருந்த பாக்யராஜின் மனதிலே  
"விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்..."என்ற வரிகள் தோன்ற அதை அப்படியே  ஒரு காகிதத்தில் எழுதிய பாக்யராஜ் அந்தப் பாடலைப்  பாடிக்கொண்டிருந்த இளையராஜாவிடம் அந்த பல்லவியைக் கொடுத்து பாடச் சொன்னார். 

திருத்தி எழுதப்பட்ட வரிகளை இளையராஜாவிடம் பாக்யராஜ் நீட்டியபோது  அந்த பாடலின் ஏழாவது "டேக்" போய்க் கொண்டிருந்தது. 

புதிய பல்லவி எழுதப்பட்டிருந்த  அந்த காகிதத்தை கையில் வாங்கிக் கொள்ளவே  மறுத்த இளையராஜா " ஏழு முறை பாடிவிட்டு எட்டாவது டேக்கில் பாடலை மாற்றிப் பாடச் சொன்னால் எப்படி வார்த்தைகளை மனதில் பதிய வைத்துக்கொண்டு பாட முடியும்?" என்று பாக்யராஜைப் பார்த்து கேட்டபோது "இதை உங்களுடன் பாடுகின்ற எஸ்.ஜானகி கேட்டால் கூட நியாயம் இருக்கிறது.ஏனென்றால் இந்த வரிகளை எல்லாம் தெலுங்கிலே எழுதி வைத்துக்கொண்டு அவர் பாட வேண்டும்.நீங்கள் சொன்னால் எப்படி?"என்று லேசாக சிரித்தபடியே கேட்டார் பாக்யராஜ். 

அவரது தர்க்கப்பூர்வமான அந்த கேள்விக்கு பதில் இல்லாததால் வேறு வழியின்றி அந்த காகிதத்தைக்  கையில் வாங்கிக்கொண்டு    அந்த பல்லவியைப் படித்துப் பார்த்த இளையராஜா "என்ன பாட்டு இது?
விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க 
அவன் குடிக்க 
அந்த நேரம் 
தேகம் சூடு ஏற 
என்றெல்லாம் பாடல் வரிகளை  இப்படி  செக்ஸியாக  எழுதியிருக்கீங்க.  இந்த வரிகளை எல்லாம் என்னால் எப்படி  பாட முடியும்"என்றபடி அந்த காகிதத்தை திரும்ப பாக்யராஜிடம் நீட்டினார்,இந்த முறை பாக்யராஜ் அதை கையில் வாங்க மறுக்க அவர்களுக்கிடையே நடந்து கொண்டிருந்த பனிப்போரைப் பார்த்த பாடகி எஸ்.ஜானகி  இளையராஜாவை சமாதானப் படுத்தினார். 

அதற்குப் பிறகு அந்தப் பாடலைப் பாட ஒப்புக்கொண்டு பாடிய இளையராஜா 
"விளக்கு வச்ச நேரத்துல தன்னான்னா ..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே  தரின்னான்னா .."
என்று பாடல் வரிகளை முழுமையாகப் பாடாமல் சுரம் போட்டு  பாடிவிட்டு "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன், பாருங்கள், நீங்க கடைசீ நேரத்திலே பல்லவியை மாற்றியதால் அந்த வரிகள் என் மனதில் பதியவில்லை.இன்னொரு முறை பாடிவிடுகிறேன்"என்றபோது அவசரமாக அவரைத் தடுத்த பாக்யராஜ்"தயவு  செய்து நீங்க பாடினதில் எந்த மாற்றத்தையும் செய்யாதீங்க. தயவு செய்து ஒன்றும் செய்து விடாதீர்கள்.பாடியது  அப்படியே இருக்கட்டும்" என்றார். அவர் அப்படி சொன்னவுடன் பாடலை சரியாகப் பாடுகிறேன் என்றால் இவர் வேண்டாம் என்கிறாரே என்று குழப்பத்துடன் பாக்யராஜை  இளையராஜா பார்த்தபோது அதற்கான விளக்கத்தை சிரித்தபடியே பாக்யராஜ் சொன்னார்.  

"நான் பல்லவியை கொஞ்சம் கிளுகிளுப்பாக எழுதியிருந்தேன் என்பது உண்மைதான்.  .ஆனால் நீங்கள் பாடிய முறையில் அது இன்னும் பல 
மடங்கு கிளுகிளுப்பாகி விட்டது.  

"விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்"
என்றால் கூட படத்தைப் பார்க்கும் ரசிகனுக்கு ஒரு அர்த்தம்தான் புரியும்.ஆனால் நீங்கள் 
"விளக்கு வச்ச நேரத்துல தன்னான்னா ..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே  தரின்னான்னா .."என்று பாடியிருப்பதைக் கேட்கும்போது அவர்கள் மனதில் ஆயிரம் கற்பனைகள்  தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதனால் நீங்கள்  பாடிய பாட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.அப்படியே இருக்கட்டும்"என்று பாக்யராஜ் சொன்னபோது தன்னையும் அறியாமல் சிரித்துவிட்ட இளையராஜா பாக்யராஜைப் பார்த்து  "நீ ரொம்ப விவகாரமான ஆளுய்யா"என்றார். 

இளையராஜாவிற்கும் பாக்யராஜிற்கும் இடையே மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்க வேண்டிய ஒரு சம்பவம் சிரிப்பிலே  முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அவர்கள்  இருவரும் அந்த பிரச்னையை அணுகிய முறைதான்.

பிரச்னைகள் பெரிதாவதற்கு முக்கியமான  காரணம் அதை நாம் அணுகும் முறைதான் என்பதை எடுத்துச் சொல்ல இதைவிட வேறு என்ன சம்பவம் வேண்டும் ? 

Link to comment
Share on other sites

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.