Jump to content

அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்


Recommended Posts

அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்

அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசும் டிரம்ப்.படத்தின் காப்புரிமைALEX EDELMAN/AFP/GETTY IMAGES Image captionதொலைக்காட்சிக்கு எச்சரிக்கை.

அந்தச் செய்தியை "பொய்ச் செய்தி", "முழுக் கற்பனை" என்று வருணித்தார் டிரம்ப். "என்.பி.சி. மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து எல்லாம் பொய்ச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது உரிமத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கு எது உகந்த நேரம்? நாட்டுக்கு கெடுதி," என்று புதன்கிழமை தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

இதே தொலைக்காட்சிதான், டிரம்ப் ஒரு மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீயத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கெனவே வெள்ளை மாளிகையின் கோபத்துக்கு இந்த ஊடகம் இலக்காகி இருந்தது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ புதன்கிழமை அமெரிக்கா வந்திருந்தார். அவரை வரவேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் பேசியபோதும் என்.பி.சி.யின் செய்தியை அவர் மறுத்தார்.

"பராமரிக்கவே விரும்புகிறேன்"

அவர் உண்மையில் அணு ஆயுதங்களின் அளவை அதிகரிக்க விரும்புகிறாரா என்று கேட்டதற்கு, "அணு ஆயுதங்களை, முழுமையாக, சிறப்பாக பராமரிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடந்துகொண்டும் இருக்கிறது.

ஆனால் இப்போது இருப்பது போல பத்து மடங்கு வேண்டும் என நான் விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருப்பது முழுக்க தேவையற்றது, என்னை நம்புங்கள்" என்று தெரிவித்தார் டிரம்ப்.

"நவீனமயமாக்க விரும்புகிறேன், அவற்றுக்கு புத்துயிரூட்ட விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிசும் என்.பி.சி. செய்தியை மறுத்தார்.

பேச்சுரிமை சிக்கல்

அதே நேரம், தொலைக்காட்சிகளின் உரிமம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்து, பேச்சுரிமை தொடர்பான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

கனடியப் பிரதமருடன் டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP Image captionகனடா நாட்டுப் பிரதமரை வரவேற்ற பிறகு என்.பி.சி. வெளியிட்ட அணு ஆயுத எண்ணிக்கை தொடர்பான செய்தியை மறுத்தார் டிரம்ப்.

"என்.பி.சி.யின் உரிமம் கேள்விக்குள்ளாகும் என்ற டிரம்பின் கருத்து, பிற அரசுகளுக்கும் எதேச்சதிகாரப் போக்குகளைக் கைக்கொள்வதற்கான துணிச்சலை வழங்கும்," என்று சிபிஜே என்னும் பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு டிவீட் செய்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்க 'அரசாங்க அறம்' தொடர்பான அலுவலகத்துக்குத் தலைமை வகித்த வால்டர் ஷூப் என்பவர் "இது நம்நாடு ஜனநாயகமாகவே இல்லாமல் போகும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அணு ஆயுதம்?

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனில் நடந்த உயர்மட்டக்கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், 1960ம் ஆண்டு முதல் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவதைக் காட்டும் வரைபடத்தைப் பார்த்துவிட்டு அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று தெரிவித்ததாக என்.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிடம் 7,100 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7,300 அணு ஆயுதங்களும் இருப்பதாக அமெரிக்காவின் பக்கச்சார்பற்ற ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உரிமம் ரத்து செய்ய முடியுமா?

உண்மையில் தொலைக்காட்சி உரிமத்தை ரத்துசெய்யவேண்டும் என்று டிரம்ப் விரும்பினால், அவர் அதற்காகப் போராடவேண்டியிருக்கும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் என்ற அமைப்பே அமெரிக்காவில் ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது.

அந்நிறுவனம் ஒரு தொலைக்காட்சிக்கென ஒட்டுமொத்தமாக உரிமம் தருவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு தொலைக்காட்சியின் தனித்தனி ஒளிபரப்பு நிலையங்களுக்கே உரிமம் வழங்குகிறது. என்.பி.சி. தொலைக்காட்சிக்கு 30 ஒளிபரப்பு நிலையங்கள் உள்ளன.

செய்தி முறையாக இல்லை என்று காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்வது எளிமையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

http://www.bbc.com/tamil/global-41591006

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.