• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Athavan CH

தெலுங்கானாவில் உருவாகிறது ஒரு திருமலை

Recommended Posts

Tamil_News_large_1872716_318_219.jpg

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை, 1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.
ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்த போது, உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருமலை, ஆந்திராவுடன் இணைந்தது. பல்வேறு விஷயங்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள, புராதன நரசிம்மர் கோவிலான, யாதாத்ரி கோவிலை மேம்படுத்த, 1,800 கோடி ரூபாய் செலவில், தெலுங்கானா மாநில அரசு, புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மொத்தம், 11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள், 100 அடி உயர முக்கிய வாயிற் கதவு உள்ளிட்ட வசதிகளுடன் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதைத் தவிர, அருகில் உள்ள எட்டு மலைகள் மற்றும் வனப்பகுதிகளையும் சேர்த்து, யாதாத்ரி கோவிலுக்கு பக்தர்களை அதிகளவில் ஈர்க்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள, 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்கள் தங்குமிடம், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
கோவிலை புனரமைக்கும் பணியில், 500க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டப் பணிகளை, 2018, மே மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில், நான்கு வழி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.'ஆந்திராவுடன் போட்டி போடுவதற்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு கடன் வாங்கும் நிலையில் மாநில அரசு உள்ளபோது, இந்த திட்டம் தேவையில்லாதது' என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1872716

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Athavan CH said:

கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள, 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்கள் தங்குமிடம், பல அடுக்கு வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
கோவிலை புனரமைக்கும் பணியில், 500க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டப் பணிகளை, 2018, மே மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில், நான்கு வழி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.'ஆந்திராவுடன் போட்டி போடுவதற்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு கடன் வாங்கும் நிலையில் மாநில அரசு உள்ளபோது, இந்த திட்டம் தேவையில்லாதது' என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எங்கை வருமானம் வருதோ அங்கை முதலீடு செய்யுறத்துதானே உலக வழக்கம்..:cool:

Share this post

Link to post
Share on other sites

சபாஷ்... சரியான, போட்டி.
இப்போது.... கோவில் கட்டுவது, தான் சரியான வருமானத்தை தரும் கொம்பனித் தொழில்.

தமிழக  மக்கள் தான்...  ஒரிஜினல் ஆந்திர . வெங்கடடேச பெருமாளுக்கு, கோடி கோடியாய்... கொட்டிக் கொடுத்துக்  கொண்டு  இருப்பதாக... திருப்பதி தேவஸ்தானம் சொல்கின்றது.
ஆனால்.... தமிழக முதலைமைச்சர்  எடப்பாடி  பழனிச்சாமி  சென்ற கிழமை, அங்கு போன போது....
வெறும்.. வைரவ கோயில், பூசாரி வந்து... வரவேற்பு கொடுத்தாராம். என்று...  கிசு கிசுக்கின்றார்கள்.

ஊரில்... ஆயிரம் வேலை இருக்க,  போனவனுக்கு... புத்தி எங்கு போனது?
நீதி:  உனது.. கடமையை...  செய். கடவுள் உன்னை தேடி வருவார்.
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கனடாவிலும்கோவில் பிசினஸ் செம.....சித்தி வினாயகர்  அய்யர் காட்டிலை மழை....இந்தியாவில் இருந்து எந்த நடிகர் ..பாட்டுக்காரன் வந்தாலும் அய்யா சம்சாரத்துடன் கலர் புல்லா இருப்பார்....அடிமட்ட பாட்டுக்காரன் வந்தாலும் ..பிரிவியூ (மீடியா சொன்பரன்ஸ்) அதிலும் இருப்பர்.....எந்த நிக்ழ்விலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் சிரிப்பு முகம் மாறாமலே இருக்கும்....எப்படியும் ஒரு கிழமைக்கு  இரண்டுதரம் பாக்கலாம்...மாறாத ஆட்கள் ...மாறாத சிரிப்பு ..முகப்புத்தகப்பக்கம் போகவே முடியல....போதாக்குறைக்கு நாட்டியமணிகளின் கொண்டாட்டம் வேற....

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this