Jump to content

‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’


Recommended Posts

‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’

image_45d8676847.jpg“எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார். 

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே இருதரப்புக் கலந்துரையாடல்கள், ஹெல்சின்கி நகர ‘கெஸரன்தா’ பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்தில், செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியானதன் பின்னர், இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்புக்களையும் பின்லாந்தின் பிரதமர் பாராட்டினார். 

கல்வி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, டிஜிட்டல் மயமாக்கல், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் போன்ற பல துறைகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனஞ் செலுத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பின்லாந்தின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன. 

உலகின் முன்னேற்றகரமான கல்வி முறைமைகளை செயற்படுத்தும் பின்லாந்து உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்ப எப்போதும் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக பின்லாந்து தரப்பினர், இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக் காட்டினர். 

பின்லாந்தின் எரிசக்தி உற்பத்தித் தொழிநுட்பத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாகவும், இலங்கையில் பல்வேறுப்பட்ட கருத்திட்டங்களை செயற்படுத்த கொடைகள் மற்றும் மானிய வட்டி வீதங்களில் கடன் உதவிகளை வழங்க இணங்கியமை குறித்தும் விக்கிரமசிங்க, யுஹா சிபிலா அவர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார். 

பிராந்திய மற்றும் உலகளாவிய போக்குகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கவனஞ் செலுத்தப்பட்டது. தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அயலிலுள்ள பெரிய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு, பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

இலங்கை சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் பூர்த்தியடையும் எதிர்வரும் வருடத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். 

இருதரப்புக் கலந்துரையாடலின் பின்பு இலங்கைத் தூதுக் குழுவினருக்கு பின்லாந்து பிரதமர் இராப்போசன விருந்தொன்றை வழங்கினார். 

அதன் பின்பு இரு நாடுகளின் பிரதமர்கள் ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தினர். 

அந்த ஊடகச் சந்திப்பில், அவ்விருவரும் தெரிவித்திருப்பதாவது,  

இன்று எமக்கு முக்கியமான பல தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்தது. இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே காணப்பட்ட பழைய உறவுகளை மென்மேலும் உறுதிப்படுத்தி அந்த உறவுகளைப் பலப்படுத்துவதற்கு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், உடன்படிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ளவும் எம்மால் முடிந்தது. 

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே எரிசக்தியை மேம்படுத்தவும், புதிய எரிசக்தி வழிமுறைகள் தொடர்பான ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும் நாம் உடன்பட்டோம். அதே போன்று எமது கல்வி முறைமையை நவீனமயப்படுத்தவும், விசேடமாக 13 வருட பாடசாலைக் கல்வியைக் கட்டாயப்படுத்தவும், உலகின் மிகச்சிறந்த கல்வி முறை அமுலாகும் பின்லாந்தின் இரண்டாம் நிலை, தொழில்கல்வி நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினோம். எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இவையனைத்தும் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். 

“இது முக்கியமானதோர் வருடமாகும். பின்லாந்துக்கு சுதந்திரம் கிடைத்து ஒரு நூற்றாண்டு கழியும் சந்தர்ப்பத்தில் எமது நட்புறவை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் பூர்த்தியாகும் எதிர்வரும் வருடத்தில் பின்லாந்து பிரதமர் உள்ளிட்ட ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக அந்த உறவைப் மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும்” என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அரசமைப்புக்கு-பின்லாந்தின்-அனுபவங்களையும்-பெற-முடியும்/175-205410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ் பக்கத்தில இருக்கிற இந்தியாவின்ட அரைகுறை தீர்வை தரவே உங்களால் முடியாது இந்த லட்சணத்தில் பின்லாந்து நாட்டு தீர்வு.....போய் சம்பந்தனுக்கும் சுமத்திரனுக்கும் கதை விடும் நம்புவினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

ஜோவ் பக்கத்தில இருக்கிற இந்தியாவின்ட அரைகுறை தீர்வை தரவே உங்களால் முடியாது இந்த லட்சணத்தில் பின்லாந்து நாட்டு தீர்வு.....போய் சம்பந்தனுக்கும் சுமத்திரனுக்கும் கதை விடும் நம்புவினம்...

அது மட்டுமில்லை...புத்தன்!

நாங்கள்..தென்னாபிரிக்கா, பெல்ஜியம், சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசியல் யாப்புகளையும் பார்த்திருக்கிறம்!

ஆனால் ஒன்றிலும்...புத்த மதம் தான் அரச மதம்! சிங்களம் தான் அரச மொழி என்ற 'சரத்து' இல்லை!

அதனால் தான்....பின்லாந்தின் அரசியலமைப்பை ..இப்ப வாசிக்கிறம்!

கொஞ்சம் பொறுங்கோ....அஸ்கிரிய மகானாயக்கரின் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்த பின்னர் தான்.. எமது முடிவை அறிவிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

ஜோவ் பக்கத்தில இருக்கிற இந்தியாவின்ட அரைகுறை தீர்வை தரவே உங்களால் முடியாது இந்த லட்சணத்தில் பின்லாந்து நாட்டு தீர்வு.....போய் சம்பந்தனுக்கும் சுமத்திரனுக்கும் கதை விடும் நம்புவினம்...

3 hours ago, புங்கையூரன் said:

அது மட்டுமில்லை...புத்தன்!

நாங்கள்..தென்னாபிரிக்கா, பெல்ஜியம், சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசியல் யாப்புகளையும் பார்த்திருக்கிறம்!

ஆனால் ஒன்றிலும்...புத்த மதம் தான் அரச மதம்! சிங்களம் தான் அரச மொழி என்ற 'சரத்து' இல்லை!

அதனால் தான்....பின்லாந்தின் அரசியலமைப்பை ..இப்ப வாசிக்கிறம்!

கொஞ்சம் பொறுங்கோ....அஸ்கிரிய மகானாயக்கரின் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்த பின்னர் தான்.. எமது முடிவை அறிவிப்போம்!

 

சிங்களம் எங்கடை தலைவர்மாருக்கு ரீல் விட......அவையள் வந்து எங்களுக்கு ரீல்ரீலாய் விட தமிழ்ச்சனம் இப்பிடியே இருக்க வேண்டியதுதான்...

DL6Xv6SV4AEvoxm.jpg:large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2017 at 4:41 PM, புங்கையூரன் said:

அது மட்டுமில்லை...புத்தன்!

நாங்கள்..தென்னாபிரிக்கா, பெல்ஜியம், சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசியல் யாப்புகளையும் பார்த்திருக்கிறம்!

ஆனால் ஒன்றிலும்...புத்த மதம் தான் அரச மதம்! சிங்களம் தான் அரச மொழி என்ற 'சரத்து' இல்லை!

அதனால் தான்....பின்லாந்தின் அரசியலமைப்பை ..இப்ப வாசிக்கிறம்!

கொஞ்சம் பொறுங்கோ....அஸ்கிரிய மகானாயக்கரின் அபிப்பிராயம் என்ன என்பதை அறிந்த பின்னர் தான்.. எமது முடிவை அறிவிப்போம்!

 

On 12/10/2017 at 8:07 PM, குமாரசாமி said:

 

சிங்களம் எங்கடை தலைவர்மாருக்கு ரீல் விட......அவையள் வந்து எங்களுக்கு ரீல்ரீலாய் விட தமிழ்ச்சனம் இப்பிடியே இருக்க வேண்டியதுதான்...

DL6Xv6SV4AEvoxm.jpg:large

உவையள் சந்திரமண்டலம்,செவ்வாய்கிரகம் போன்றவற்றில் இருக்கும் யாப்புகளையும் படிச்சு போட்டு தீர்வு தாரன் என்பினம் எங்கன்ட அப்புக்காத்துமாரும் ஏன் அவர்கள் (சிங்கள அரசியல்வாதிகளுக்கு)    வாசிக்க சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என்று கேட்பினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.