Jump to content

நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்


Recommended Posts

நா

நாங்கள் பள்ளிக்கு
செல்வது எப்படி?

இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்

ங்கள் பள்ளிக்கு
செல்வது எப்படி?

இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்

 
 

1920trolley-stuck-in-the-mi-mr.jpg

 

தினமும் ராதிகா மற்றும் யசோதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள்.

இமயமலையில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி பெறுவதென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இருவரின் சவாலான அன்றாட வாழ்க்கையை 360 டிகிரி காணொளி மூலம் பாருங்கள் - அல்லது அவர்களுடைய முழுக் கதையை கீழே படிக்கலாம்.

360 டிகிரி காணொளியை காண மொபைலை மேலும், கீழுமாக, இடம் - வலமாக திருப்பவும். கணினியில் பார்த்தால், மவுஸ் உதவியுடன் இடது, வலது, மேலே, கீழே செல்லலாம்.

இது சஃபாரி பிரவுசரில் வேலை செய்யாது. யு டியூப் மொபைல் ஆப் மூலம் சிறந்த அனுபவத்தை உணரலாம்.

மழைக்காலத்தின் மத்தியில் சூரியன் பிரகாசிக்கும் ஒரு காலை வேளையில் 5 மணி அளவில். ராதிகா மற்றும் யசோதா சகோதரிகள் மாடியின் முகப்பு பகுதியில் முகத்தை கழுவுகிறார்கள்.

700-radhika-washes-her-face-mr_2awsfwj.j
700x500thumb_img_3108_1024_o70cfvh-mr_8l

காலை சிற்றுண்டிக்கு யார் அதிக சப்பாத்திகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் இருவரும் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொள்கிறார்கள்.

அரைமணி நேரத்தில் பொடிநடையாக பள்ளி செல்லும் ஓர் அபாயகரமான பயணத்தை சகோதரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுடைய விளையாட்டுத்தனம் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு மலையேற்ற பயணம் சகோதரிகளை மலைப்பாங்கான நிலப்பரப்பு, அடர்ந்த காடுகள் மற்றும் வேகமாக ஓடும் ஆறுகளை கடந்து அழைத்து செல்ல உள்ளது.

ஆனால், முதலில், இமயமலையில் உள்ள தங்களது சிறிய கிராமத்தின் மத்தியில் உள்ள இந்து கோயில் ஒன்றை சகோதரிகள் பார்வையிடுகிறார்கள்.

ஆலயத்தில் ஒலிக்கும் மணி அங்குள்ள தெய்வங்களின் வழிபாட்டை உறுதிப்படுத்துகின்றன.

சையபா என்ற தொலைத்தூர கிராமத்திலிருந்து தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் 6 இளம் வயதினரில், 14 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளும் அடங்குவர்.

ஒரு காலை பொழுதில் சையபாவில் உள்ள வீடுகளின் கூரைகள்

ஒரு காலை பொழுதில் சையபாவில் உள்ள வீடுகளின் கூரைகள்

சகோதரிகளின் தந்தை ஒரு புன்முறுவலுடன் மற்றும் கனத்த இதயத்துடன் தனது பிள்ளைகளுக்கு கை அசைக்கிறார்.

காலநிலையை பொறுத்து சகோதரிகளின் பயணம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் பிடிக்கும்.

ஆனால், மனேரி மற்றும் மல்லா நகரங்களை அடைவதற்கு இதுதான் ஒரே வழி. இந்த நகரில்தான் பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.

பாகீரதி நதி பள்ளத்தாக்கு

பாகீரதி நதி பள்ளத்தாக்கு

இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள இமயமலையின் உயரமான பகுதியிலுள்ள சிறிய கிராமம்தான் சையபா. வெறும் 500 பேர் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். சையபாவின் உள்ளே மற்றும் வெளியே செல்ல சாலைகள் கிடையாது.

பாடப்புத்தகங்களுடன், சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துச்செல்லும் பெண்கள் தளர்வான கற்கள் நிறைந்த ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்கிறார்கள்.

பயணத்தின் மிக கடினமான பகுதியை இரண்டு மணிநேரம் கழித்து பாகீரதி நதியை கடக்கும்போது சகோதரிகள் எதிர்கொள்வார்கள்.

நதியின் குறுக்கே அமைந்திருக்கும் கம்பிகள் மற்றும் கூண்டு

நதியின் குறுக்கே அமைந்திருக்கும் கம்பிகள் மற்றும் கூண்டு

ஆர்ப்பரிக்கும் நீரின் மேல் உயரமாக அமைந்திருக்கும் கேபிளில் உலோக டிராலி அமைந்திருக்கிறது. அதனைக் கொண்டு சகோதரிகள் தங்களை நதியின் மறுபக்கத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கு நிறைய உடல்வலிமை தேவைப்படும். மழைக்காலத்தில் கயிறுகள் கனமாகி இழுப்பதற்கு கடினமானதாக இருக்கும். காயங்கள் அசாதாரணமாக ஏற்படும்.

தலைமீது அமைந்துள்ள கேபிள்களினால் உள்ளூர் கிராமவாசிகளின் விரல்கள் சேதமடைந்துள்ளன. சில நேரங்களில் அவர்கள் விரல்களை இழந்திருக்கிறார்கள்.

700trolley-4-mr_jrnynel.jpg

ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக டிராலியை நாங்கள் இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் யசோதா."

சகோதரிகளின் உறவினர் ஒருவர் கயிறுகளில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் மீட்கப்பட்டார்.

'கயிறுகள் மீதிருக்கும் கிரீஸ் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். எங்களுடைய கைகள் அழுக்காகிவிடும். ஆனால், சீருடையில் கிரீஸ் படாமல் இருப்பதற்கும் நாங்கள் முயற்சிப்போம்,'' என்கிறார் யசோதா.

'எங்களுடைய பள்ளி சீருடையின் கால்சட்டை வெள்ளை நிறத்திலிருப்பதால் கறை அப்படியே தெரியும்.''

700-pulling-trolley-2-mr_mctivf1.jpg

பாகீரதி நதியின் பாதுகாப்பு பகுதியான வடக்கு கரைப்பகுதியை சகோதரிகள் அடைந்தவுடன் பள்ளிக்கு சாலை வழியாக செல்வதற்காக காருக்காக காத்திருக்கிறார்கள்.

அடர்ந்த காடுகள் தாங்கள் எதிர்கொள்ளும் சொந்த ஆபத்துக்களை முன்வைக்கின்றன. கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற தெரிந்த விலங்குகளை சாலைகளில் பார்த்திருப்பதாக மாணவிகளின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

இந்த மெய்நிகர் ஆவணப்படத்தில், யசோதா மற்றும் ராதிகா தாங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் சாகச மற்றும் அற்புதமான பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார்கள்.

உத்தரகாசியின் மலைப்பகுதியில் சையபா கிராமத்தை போன்று சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அதில் சில கிராமங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கிராமங்களுக்கு பொடிநடையாகத்தான் செல்ல வேண்டும்.

டெல்லியிருந்து சாலை வழியாக சுமார் 400 கி.மீ தொலைவில் பாகீரதி நதியின் கடக்கும் பகுதியில் இது அமைந்துள்ளது. 


டெல்லியிருந்து சாலை வழியாக சுமார் 400 கி.மீ தொலைவில் பாகீரதி நதியின் கடக்கும் பகுதியில் இது அமைந்துள்ளது. 

16 வயதாகும் யசோதாவிற்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், 14 வயதாகும் ராதிகாவுக்கு எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராக வேண்டும் என்றும் கனவுகள் இருக்கின்றன.

இருவருக்குமே தங்களது பெற்றோரை போல இளம் வயதில் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. தொடர்ந்து படிக்கவே விரும்புகின்றனர்.

யசோதா மிகவும் அமைதியானவர். தனது காலில் உள்ள ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை அகற்ற உடனடியாக குனிவதற்கு சில விநாடிகளுக்குமுன்தான் ராதிகா தனது பேச்சை நிறுத்துகிறார்.

ராதிகா மற்றும் யசோதா

ராதிகா மற்றும் யசோதா

மழைக்காலத்தில் ஏராளமான அட்டைகள் சேற்று பாதையில் கிடக்கின்றன.

ஒரு தீக்குச்சியால் அட்டைகளை எரிக்கும்போது ராதிகா சிரிக்கிறார். அட்டைகளைப்பற்றி ராதிகா பெரியதாக அக்கறை கொள்ளவில்லை.

'நான் எதற்கும் பயப்பட மாட்டேன்,'' என்கிறார். தனது அக்காவைப்போல், அவரும் தன்னுடைய கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை சூழலை பெரிதும் விரும்புகிறார் ராதிகா.

500-thumb_img_3102_1024_85v0waq-mr_fknla

மழை பெய்யும் போது, நாங்கள் நிறைய குட்டி குட்டி நீர் வீழ்ச்சிகளை பார்ப்போம். நீங்கள் நகரத்திலிருந்து வந்தால் இதுபோன்ற நீர்வீழ்ச்சிகளை பார்த்து மெய்மறந்து போவீர்கள். 

உறவுக்காரர்களின் மொபைல் போன்கள் சகோதரிகளுக்கு எப்போதாவது கையில் கிடைக்கும்போது, யசோதாவும், ராதிகாவும் பெரும்பாலும் பாலிவுட் பாடல்களின் வீடியோவை அந்த சிறிய திரையில் பார்த்தபடியே பயணிப்பார்கள்.

அவர்களிடம் தொலைக்காட்சி கிடையாது. ஆனால், சகோதரிகளின் மாமா வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது. சில நேரங்களில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுகூடி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.

ஓர் அமைதியான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து பிபிசி குழுவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஃபோனுடன் படுக்கையில் யசோதா படுத்திருக்க, ஒரு பிங்க் நிற துப்பட்டாவை தனது தலையை சுற்றி அணிந்து கொண்டு நடனமாடுகிறார் ராதிகா.

700-radhika-puts-a-scarf-on_luw6qzb-mr_0
 
700-dancing_a2upxx3-mr_cauhaly.jpg

'நாங்கள் பல விஷயங்கள் குறித்து கனவு காண்போம்,'' என்கிறார் யசோதா.

'நாங்கள் சிலநேரங்களில் எங்களுடைய பேய் குறித்து கனவு காண்போம். சிலநேரங்களில் கனவுகளில் எங்களுடைய தம்பியை பார்ப்போம். ஏனென்றால் அவன் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகிறான். வார இறுதி நாட்களில் மட்டுமே அவனை நாங்கள் பார்ப்போம்.''

சையபாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் 8 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால் வீட்டைவிட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, அது குடும்பத்தினருக்கு கூடுதல் செலவாக மாறுகிறது.

பெரும்பாலான குடும்பங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.

பெற்றோருடன் ராதிகா மற்றும் யசோதா 

பெற்றோருடன் ராதிகா மற்றும் யசோதா 

இந்த மெய்நிகர் ஆவணப்படத்தை யசோதா, ராதிகா மற்றும் குடும்பத்தினர் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக மெய்நிகர் தலைக்கருவிகளை சையபா கிராமத்தில் பிபிசி குழுவினர் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

இது அவர்களுடைய படம், யசோதா மற்றும் ராதிகாவின் பெற்றோரின் படமும்கூட. பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்றுவிடும் வாய்ப்பாகவும் இது அமையலாம்.

 

http://www.bbc.co.uk/news/resources/idt-sh/how_we_get_to_school_tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.