Sign in to follow this  
நவீனன்

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

Recommended Posts

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

 

ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும்.

அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

Related image

இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும். விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்னால் நிற்கும் காட்சி. வட்டுக்கோட்டை விவசாயத்திற்கும் மாட்டுவண்டிச் சவாரிக்கும் பெயர்போன ஒரு பிரதேசமாகும்.

Image result for jaffna  1980

இது கொழும்பு மாவட்டத்தின் ‘பெட்டா’ பிரதான வீதி ஆகும். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட புகைப்படம். பெட்டா கொழும்பு மாவட்டத்தின் முக்கியமான ஒரு வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த இடமாகும்.

Related image

கிக்கடுவை அல்லது இக்கடுவை கடற்கரையாகும். ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது. 1980ஆம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டி தலதா மாளிகையின் அன்றைய தோற்றம். இற்றைக்கு 1800ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும்.

Related image

ஸ்ரீலங்காவின் சப்ரகமுவ மாகாணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படம். ரம்புட்டான் பழத்திற்குப் பெயர்போன இரத்தினபுரி பகுதியில் 1905ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டது. வீதியோரமாக ரம்புட்டான் வியாபாரத்தில் ஈடுபடும் மூன்று பெண்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் ஒரு வீதியோரமாக நடந்து செல்லும் இரண்டு இளம் பெண்கள். வீதியின் மறுபக்கம் எண்ணெய் வண்டில் செல்கின்றது. அன்றைய காலத்தில் வண்டில்களில் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று மண்ணெண்ணெய் விற்கப்பட்டுள்ளது. இன்றைய எண்ணெய்த் தாங்கிகளைப்போல அன்று இந்த வண்டில்கள் பயன்பட்டுள்ளன.

Image result for old ceylon

கொழும்பில் ஒரு பிரதான சாலையில் ஓடும் அரசாங்க பேருந்து ஒன்று. 1970ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான பேருந்துகள்தான் அன்றைய கால இலங்கையில் முக்கியமான போக்குவரத்துச் சாதனங்களாகும்.

L246-full.jpg

மட்டக்களப்பின் பிரதான ஏரி. வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பது இவ்விடத்தின் விசேடமாக இருந்தது. மீன்பாடும் தேன் நாடு என மட்டக்களப்பு அழைக்கப்பட்டதற்கு இது முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது.

இவ்வாறாக இலங்கைத் தீவின் எளில் மிகுந்த காட்சிகள் அந்த நாட்களை மீட்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. ஞாபகங்கள் இன்னும் தொடரும்..........

https://news.ibctamil.com/ta/internal-affairs/old-ceylon-1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய புகைப்படத் தொகுப்பு; விடுதலைப் புலிகளின் ஆரம்பகால நிகழ்வுகள்!

 

இன்றைய எமது படத்தொகுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால புகைப்படங்கள் சிலவற்றை இங்கே இணைக்கின்றோம். புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்து தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பின் வளர்ச்சிப் பாதை எவ்வாறான மேடு பள்ளங்களைக் கடந்து வந்தது என்பதை இந்த படங்கள் வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Image result for ltte old

அமைப்பின் ஆரம்பகால போராளிகள் தமது பாசறையொன்றில் ஓய்வினைக் கழித்தபோது எடுக்கப்பட்ட படம். கழுத்திலே நஞ்சுக் குப்பியினை ஒவ்வொரு போராளியும் சுமந்திருக்கின்ற அதே நேரம் ஒரு போராளியின் கழுத்திலே சிலுவையும் காணப்படுகின்றது. புலிகள் எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

Related image

ஆரம்பகால பெண் போராளிகள் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட படம். பெண் போராளிகள் தலை முடியினை கட்டையாக வெட்டுவதும் இரட்டை சடைப் பின்னலினை மேல் நோக்கிக் கட்டுவதும் இதன் பின்னர் வந்த வழக்கங்களே.

kittu%20ltte%202.jpg

விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் கிட்டு ஸ்ரீலங்கா இராணுவ பொறுப்பாளர்களுடன் நிற்கும் காட்சி. கிட்டுவின் காலத்தில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக இருந்த கொத்தலாவல புலிகளுடன் சுமூகமான ஒரு உறவினைப் பேணிவந்தார். ஒருபக்கம் போர் நடந்துகொண்டிருந்தாலும் பரஸ்பர சடலங்களின் பரிமாற்றத்திற்காக யாழ் கோட்டையின் தளபதியும் கேணல் கிட்டுவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர்.

37a-dhanu-leads-march.jpg

விடுதலைப் புலிகளின் முதலாவது மகளிர் அணி பயிற்சியினை நிறைவு செய்து தமது அணிவகுப்பு மரியாதையைச் செலுத்தியபோது பிடிக்கப்பட்ட புகைப்படம்.

Related image

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூத்த போராளிகளுடன் இந்தியாவில் பயிற்சி பெற்றபோது. மூத்த தளபதிகளான பொட்டம்மான் மற்றும் புலேந்திரன் போன்றோரும் இங்கே காணப்படுகின்றனர்.

Related image

ஈழத்தமிழருக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வருபவரான தமிழகத்தின் அரசியல் தலைவர் திரு வை கோபாலசாமி (வைகோ) தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோருடன் காணப்படுகின்றார்.

Related image

விடுதலைப் புலிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆயுத உதவிகளும் தனது தனிப்பட்ட சார்பில் கோடிக்கணக்கான பண உதவியும் செய்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள். தலைவர் பிரபாகரனுடனான சினேகபூர்வமான சந்திப்பின்போது “என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், ஆனால் போராட்டத்தை எச் சந்தர்ப்பத்திலும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று எம்.ஜி.ஆர் வினயமாகக் கேட்டிருந்தார். படத்தில் விடுதலைப் புலிகளின் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களும் காணப்படுகின்றார்.

Related image

வன்னியில் விடுதலைப் புலிகளின் ஒரு முகாமில் தலைவர் பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம், கேணல் சங்கர் மற்றும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஆகியோர்.

Related image

தலைவர் பிரபாகரன் இந்திய இராணுவ உயர் அதிகாரியச் சந்திக்கப்போனபோது குறித்த இராணுவ அதிகாரி எழுந்து நின்று தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதைக் காணலாம்.

Image result for ltte old photos

1987ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படம் இது. ஆரம்பகால போராளி ஒருவர் இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Related image

தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருமணப் புகைப்படம். அருகில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் அமர்ந்துள்ளார்.

Related image

1985இல் போராளி ஒருவர் பதுங்கி நிற்கும் காட்சி.

Related image

யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் தலைவர் பிரபாகரன் தனது மெய்ப் பாதுகாவலர்களுடன். பின்னால் சுவரில், தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த புரட்சியாளரான சே குவேராவின் புகைப்படம் தொங்குகின்றது.

Related image

மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி லெப்டினன் கேணல் விக்டர் யாழ் மாவட்டக் கட்டளைத்தளபதி கேணல் கிட்டு அவர்களுடன் காணப்படுகின்றார். கேணல் விக்டர் அவர்களின் நினைவாக ’விக்டர் கவச எதிர்ப்பு படையணி’ எனும் மரபுவழி போரியல் அணி ஒன்று தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்றைய எமது படத்தொகுப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால புகைப்படங்கள் சிலவற்றை இணைத்திருந்தோம். மீண்டுமொரு வித்தியாசமான படத்தொகுப்புடன் சந்திக்கலாம் வாசகர்களே!

தொடரும்.......

https://news.ibctamil.com/ta/internal-affairs/LTTE-s-early-events

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this