Jump to content

சிங்களப் பிரதியும் தமிழ்ப் பிரதியும்


Recommended Posts

சிங்களப் பிரதியும் தமிழ்ப் பிரதியும்

 
 
 

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யின் சிங்­க­ளப் பிர­தி­யில் ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரிமை என்ற அனைத்­துமே தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன, ஆகவே எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டப் போவ­தில்லை, இத­னைத் தமி­ழர் தரப்­பும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

இப்­ப­டித் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல. சிங்­கள மக்­கள் மத்­தி­யில் ஆதிக்­கத்தை நிலை­நாட்டி வைத்­தி­ருக்­கும் அஸ்­கி­ரிய பீடத்­தின் மகா­நா­யக்­க­ரைச் சந்­தித்த பின்­னர் அமைச்­சர் இத­னைத் தெரி­வித்­தார்.

இடைக்­கால அறிக்கை தொடர்­பான அவ­தா­னிப்­புக்­களை மகா­நா­யக்­கர்­கள் இந்த வாரம் வெளி­யிட இருக்­கும் நிலை­யில் அரசு சார்­பில் அவர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார் அமைச்­சர் லக்ஸ்­மன்.

அத­னா­லேயே மகா­நா­யக்­கர்­க­ளைத் திருப்திப்­ப­டுத் தும் விதத்­தில் அவர் தனது கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார்.

அவர் கூறி­ய­தைப் போலவே இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை என்­பது தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒற்­றை­யாட்சி என்­பது மட்­டும் தெளி­வற்­ற­தா­கவே உள்­ளது. அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ‘ஏக்­கிய’ என்ற சிங்­க­ளப் பதத்­திற்கு ஒரு­மித்த நாடு அதா­வது பிரிக்­கப்­பட முடி­யாத நாடு என்று, அறிக்­கை­யில் பொருள் கூறப்­பட்­டா­லும், அது ஒற்­றை­யாட்­சி­யைத்­தான் குறிக்­கின்­றது என்று தலைமை அமைச்­சர் முதற்­கொண்டு அனை­வ­ரும் கூறு­கின்­றார்­கள்.

ஒற்­றை­யாட்சி என்­ப­தைக் குறிப்­ப­தற்­கான ஆங்­கி­லப் பத­மான யுனிட்­டரி (Unitary) என்­ப­தை­யும் உள்­ள­டக்­கு­வது குறித்­துப் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றது என்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், ஒற்­றை­யாட்­சி­யைக் கைவிட சிங்­க­ளத் தரப்­பி­னர் எல்­லோ­ரும் இணங்கி விட்­டார்­கள் என்­கி­றார் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். தற்­போது நடை­மு­றை­யில் உள்ள அர­ச­மைப்­பில் இலங்கை ஒற்­றை­யாட்சி நாடு என்றே தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அதனை ஏன் ஒரு­மித்­த­நாடு, ‘ஏக்­கிய’ என்று குறிப்­பிட்­ட­வேண்­டும்? அதற்கு பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாடு என்று விளக்­கம் அளிக்­கப்­ப­ட­வேண்­டும்? என்­கிற கேள்­வி­க­ளின் நியா­யப்­படி பார்த்­தால் அரச தரப்­பி­னர் சொல்­கின்ற ஒற்­றை­யாட்சி என்­பது கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.

ஆனா­லும் கடை­சி­யில், அமை­ச்சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல சொன்­ன­தைப் போன்றே அர­ச­மைப்­பின் ‘சிங்­க­ளப் பிர­தி’­தான் இறுதி முடிவை எடுக்­கப்­போ­கின்­றது.

பிரிக்­கப்­பட முடி­யாத நாடு என்­பதே ஒற்­றை­யாட்­சி­யைத்­தான் என்று அவர்­கள் விளக்­கம் கொடுத்­தால் அதை இலங்­கை­யின் நீதி­மன்­றங்­க­ளும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டும் என்­ப­தால் அரச தரப்­பி­ன­ரின் கருத்­துக்­க­ளைப் புறந்­தள்­ளி­விட முடி­யாது.

அதே­போன்று, இடைக்­கால அறிக்­கை­யில் தீர்க்­க­மான முடிவு எட்­டப்­ப­டா­மல் விடப்­பட்­டுள்ள வடக்­கு-­கி­ழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு, மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைக் கொழும்பு அரசு மீளப் பெறு­வ­தைத் தடுப்­ப­தற்­கான இறுக்­க­மான பொறி­முறை, முழு­மை­யான நிதிச் சுதந்­தி­ரம் ஆகிய மூன்று விட­யங்­க­ளி­லும் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மான முடிவு வர­வில்லை என்­றால் இறுதி வரை­பைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­காது என்று அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார்.

ஆக, அர­ச­மைப்­புக்­கான தமிழ்ப் பிர­தி­யில் இந்த மூன்று விட­யங்­க­ளும் கட்­டா­யம் இடம்­பெற்­றி­ருக்க வேண்­டும்.

இப்­படி சிங்­க­ளப் பிரதி, தமிழ்ப் பிரதி என்­கிற அடிப்­ப­டை­யில் எப்­படி ஒரு நாட்­டுக்­கான அர­ச­மைப்பை உரு­வாக்க முடி­யும் என்­பது பெருங்­கேள்­வி­தான்.

இப்­ப­டித் தனித் தனிப் பிர­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் இரண்டு நாடு­க­ளுக்­கான அர­ச­மைப்­புக்­களை வேண்­டு­மா­னால் உரு­வாக்­கிக் கொள்­ள­லாம். அதற்­கான அனு­ம­தி­யைக் கேட்­டுத்­தான் தமி­ழர்­கள் நீண்ட கால­மா­கப் போரா­டி­னார்­கள்.

அது வேண்­டாம் என்­ப­தற்­கா­கத்­தான் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­க­வும் முற்­பட்­டார்­கள். ஆனால் இப்­போதோ, இரு­வேறு பிர­தி­க­ளைப் பற்­றிப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது எங்­கு­போய் முடி­யுமோ?

http://newuthayan.com/story/35491.html

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

சிங்களப் பிரதியும் தமிழ்ப் பிரதியும்

இப்­படி சிங்­க­ளப் பிரதி, தமிழ்ப் பிரதி என்­கிற அடிப்­ப­டை­யில் எப்­படி ஒரு நாட்­டுக்­கான அர­ச­மைப்பை உரு­வாக்க முடி­யும் என்­பது பெருங்­கேள்­வி­தான்.

இப்­ப­டித் தனித் தனிப் பிர­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் இரண்டு நாடு­க­ளுக்­கான அர­ச­மைப்­புக்­களை வேண்­டு­மா­னால் உரு­வாக்­கிக் கொள்­ள­லாம். அதற்­கான அனு­ம­தி­யைக் கேட்­டுத்­தான் தமி­ழர்­கள் நீண்ட கால­மா­கப் போரா­டி­னார்­கள்.

இரண்டு நாடு­க­ள் என்றோ உரு­வா­கி ஒருமித்து விட்டன. இலங்கைக்குள்தான் சிறிலங்கா உருவாகி ஒருமித்தது. அதனைத் தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுச் செயல்பட முன்வரவில்லை என்பதும் மிகப்பெரிய ஏமாற்றம். "நீங்கள் எந்த நாடு என்று பிறரெவரும் எங்களைக் கேட்டால்....?" "நாங்கள் சிறீலங்கா என்று சொல்லியும், எழுதியும் பழகிவிட்டோம்."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.