Jump to content

சசி... சதி


Recommended Posts

gallerye_000336127_1872030.jpg

* வௌ்ளிக்கிழமை இரவு, சென்னை வருகை

* சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில், 'ஹால்ட்'

* இரவு, 'செம மப்பு!' வீட்டில் சிலரை அழைத்து, குசலம் விசாரிப்பு; அவர்களிடம், 'முக்கியஸ்தர், துணை முக்கியஸ்தர்' பற்றி, சகட்டு மேனிக்கு சாடல்
* சனிக்கிழமை காலை, வீட்டிலிருந்து புறப்பட்டு, பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்கை
* சனிக்கிழமை பிற்பகல் வீடு திரும்பல். உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து உரையாடல். வெளியில் பலர் சந்திக்க முனைந்தது நடக்கவில்லை
* ஞாயிறு காலை, தி.நகரிலிருந்து புறப்பட்டு, மருத்துவனைக்கு மதியம், 12:40 மணிக்கு செல்கை. நெருங்கிய உறவினரைப் பார்த்து விட்டு, 1:30 மணிக்கு கிளம்பி, வீடு திரும்பல்
* கடந்த டிசம்பரில் மறைந்தவரின் உதவியாளரான பூவுக்குக் குன்றானவருடன் சந்திப்பு. வெளியே, மக்களின் பிரதிநிதிகள் சிலர் காத்திருப்பு; நெல்லை மாவட்டத்தில், 'விஜில்' 

செய்பவர் மற்றும்சமீபத்தில் மக்களிடம் செருப்படி வாங்கி, 'ஏங்க இப்படி செய்றீங்க...' என்று கேட்டவர் என, பலர் குவியல்; யாருக்கும் அனுமதி இல்லை

* ஞாயிறு இரவு, 11. 00 மணிக்கு, தி.நகரில் உள்ள, 'கமண்டலம் ஏந்தியவரின்' கோவிலிலிருந்து குருக்கள் விஜயம்; 1.00 மணி வரை, எதிரிகளை அழிக்கவல்ல, 'சத்ரு சம்ஹார ஹோமம்' நடத்தல்; பின் வெளியேறுதல். மேற்படியார், டிசம்பரில் இறந்தவருக்கு கடைசி சடங்கு செய்தவர்; அறநிலையத் துறையில் நிறைய சிபாரிசு செய்து, முக்கிய புள்ளியாக வலம் வந்தவர்

* அன்றிரவே, இந்த இடைவெளியில், 'பீனிக்ஸ்' மால் சினிமா தியேட்டர் முக்கியபுள்ளியின், பென்ஸ் கார், இரவு, 9.45 மணிக்கு, தி.நகர் வீட்டிலிருந்து 
கிளம்பிச் சென்று, இரவு, 12.45 மணிக்குத் திரும்புகிறது. கார் கண்ணாடியில், கறுப்பு தாள் ஒட்டப்பட்டிருந்ததால், உள்ளே யார் இருந்தனர் என்பது தெரியவில்லை.
* திங்கள் மதியம், 12.45 மணிக்கு, மறுபடி மருத்துவமனை விஜயம்; 2.00 மணிக்குக் கிளம்பி வீடு திரும்பல். அதன் பின், 'வீடியோ

 

கான்பரன்ஸ்' மூலம், பல பிரதிநிதிகளை அழைத்து, 'நான் தான் உங்களுக்கு இந்த வாய்ப்பை, பெற்றுத் தந்தேன். எனக்கு துரோகம் செய்தவர்களிடம் கை கோர்த்து, எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள்... தொலைத்து விடுவேன்' என எச்சரிக்கை

* மத்திய, மாநில என பல, 'பைனாக்குலர்'கள் கண்காணிப்பில் இருந்தும், அவர்களின் கண்ணில் மண்ணைத் துாவி, நினைப்பது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுதல் எனச் செல்கின்றன நாட்கள்... இப்போதைக்கு அவ்ளோ தான்!

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1872030

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.