Jump to content

“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் ஃபீலிங்ஸ்


Recommended Posts

“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் ஃபீலிங்ஸ்

 
 

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ் முடிந்தப்பிறகு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்க கணேஷைத் தொடர்பு கொண்டோம்.

கணேஷ் வெங்கட்ராம்

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவேயில்ல. வெளியில வந்து பார்த்தா எனக்கு பெரிய ஷாக். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லாம உலகம் முழுக்க வசிக்க தமிழ் மக்கள் எல்லாரும் இந்த ஷோவைப் பார்த்திருக்காங்க. பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட்டாகியிருக்கு. நிறைய ஈவெண்ட்டுக்கு கூப்பிடுறாங்க, பல ஸ்கிரிப்டுகள் வருது செம பிஸியா இருக்கேன். வெளியில வந்து ரெண்டு நாள் என் ஃபேமிலிக்கூடதான் இருந்தேன். அதுக்கப்பறம் ஃபுல்லா வெளியிலதான் இருக்கேன். இன்னும் ஹாட் ஸ்டார்ல ஷோவைப் பார்க்கவேயில்ல. இனிமேல்இன்னும் பத்து நாள்கள்: கழிச்சுதான் ஃபிரியாவேன் போல.’’

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த 100 நாள்கள் எப்படி இருந்தது..?

“என் வாழ்க்கையில அந்த 100 நாள்களை மறக்கவே மாட்டேன். ஏன்னா, நான் ஜாய்ண்ட் ஃபேமிலியில இருந்தது கிடையாது. எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா, அக்கா மட்டும்தான். மும்பையில இருந்து நான் சென்னைக்கு வந்தபோதும் தனியாதான் ரூம்ல இருந்தேன். கல்யாணத்துக்கு அப்பறம் நானும் நிஷாவும் மட்டும்தான். இப்படி அதிகமான ஆள்களோட நான் பழகினதே இல்ல. பிக் பாஸ் வீட்டுக்குள்ள அந்த 14 பேரோட ஒண்ணா, ஒரே குடும்பமா இருந்தது நல்ல அனுபவமா இருந்தது. கூட்டுக்குடும்பத்திற்காக ஏங்கிய எனக்கு பிக் பாஸ் அதை நிறைவேற்றி இருக்கு. 

வெளியில இருக்கும்போது நம்மளோட வேலைகள், நமக்கான தேவைகள்னு ஓடிட்டு இருப்போம். ஆனா, நாங்க அந்த வீட்டுக்குள்ள இருந்த 100 நாளும் மத்தவங்க என்னப் பண்றாங்க, அவங்களுக்கான தேவை என்னான்னு யோசிச்சோம். அதுவே புது அனுபவம் தான். நிறைய கத்துக்கிட்டேன். போட்டியாளர்கள் எல்லாருமே சினிமா பிரபலங்களா இருந்தாலும் ஒவ்வொரு ஆளும் வேற வேற ஊர், வேற வேற ஸ்டேட்ல இருந்து வந்தவங்க. அவங்ககிட்ட இருந்து அவங்களோட கலாசாரத்தை தெரிஞ்சுக்கிட்டேன். ”

தொடர்ந்து படம் பண்ணிட்டு இருக்கும் போது 100 நாள்கள் ப்ரேக் எடுத்துக்க எப்படி தைரியம் வந்தது..?

கணேஷ் வெங்கட்ராம்

“அந்த தைரியம் கமல் சார்னாலதான் வந்தது. முதலில் இந்த ஷோ பத்தி விஜய் டிவி என்கிட்ட பேசும் போது நான் வேணாம்னு சொல்லிட்டேன். எனக்கு இந்த ஷோ மேல நல்ல அபிப்ராயம் இல்ல. அப்பறம் கமல் சார் இந்த ஷோவைப் பண்றாங்கனு கேள்விப்பட்டதும் ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, அவர் சாதாரணமா ஒரு ப்ராஜெக்ட்குள்ள போக மாட்டார். அவர் இந்த ஷோ பண்றனாலதான் எனக்கு 100 நாள் ப்ரேக் எடுத்துக்கிற தைரியம் வந்தது. அப்பறம், எனக்கு இந்த ஷோ மேல இருந்த சந்தேகத்தை எல்லாம் விஜய் டிவி ரொம்ப சரியா க்ளியர் பண்ணிட்டாங்க. அதுமட்டுமில்லாம, நான் கமிட் பண்ணியிருந்த இரண்டு படங்களும் நவம்பர், ஜனவரியில்தான் ஷூட் பண்றதா இருந்தாங்க. அதுனால தைரியமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். ’’

பிக் பாஸில் போட்டியாளர்கள் எல்லாரும் உங்களை ஜென்டில்மேன்னு சொல்லும்போது உங்க வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது..?

கணேஷ் வெங்கட்ராம், நிஷா

“அம்மா, அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எல்லாரும் அவங்ககிட்ட உங்க பையனை நல்லா வளர்த்திருக்கீங்கனு சொன்னாங்க. நான் 100 நாள்கள் அங்க இருக்கும் போது நிஷா ரொம்ப தைரியமா இருந்தாங்க. அதுக்காக நிறைய பேரு நிஷாவுக்கும் வாழ்த்து சொன்னாங்க. நானும் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஏன்னா, அபியும் நானும் படத்தில் என்னை ஜோகிந்தர் கிங்கா, உன்னைப்போல் ஒருவன் படத்தில் அரிஃப் கானா, தனி ஒருவன் படத்துல சக்தியா பார்த்திருப்பாங்க. ஆனா யாரும் உண்மையான கணேஷை பிக் பாஸுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. இப்போ இதுதான் என் கேரக்டர், கணேஷ் இப்படித்தான் இருப்பார்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுல நான் செம ஹாப்பி.’’

உங்களுக்கு கோபம் வருமா ப்ரோ..?

“எல்லா மனுஷக்கும் கோபம் கண்டிப்பா வரத்தான் செய்யும் ப்ரோ. ஆனா, அந்த கோபத்தை எப்போ வெளிப்படுத்துறோம், அதுனால எதுவும் உபயோகம் இருக்கானு பார்க்கணும். எல்லா இடங்களிலும் தேவையில்லாம கோபப்பட்டால் எதுவும் ஆகப்போறது  இல்ல. எனக்கு பொய் சொன்னா பிடிக்காது, ஒழுக்கம் இல்லாம இருந்தால் பிடிக்காது. அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கும் போது எனக்கு கோபம் வரும்.’’

பிக் பாஸ் வீட்டுல இருக்கும் போது இதை நான் பண்ணிருக்கணும்னு நினைக்கிற விஷயம்..?

“பரணி விஷயத்துல நான் சும்மா இருந்திருக்கக்கூடாது. அவர் சுவர் ஏறி குதிக்க போனப்போது நான் அவரை தடுத்திருக்கணும். நான் அதை பண்ணலை. அதுதான் நான் பண்ணுன தப்பு. 100வது நாள் எல்லா போட்டியாளர்களும் வீட்டுக்கு வந்தப்போ பரணி என்னைக் கட்டிப்பிடிச்சு, ‘இந்த வீட்டுல நீங்கதான் யாருக்கும் துரோகம் பண்ணாத ஆளு’னு சொன்னார். அப்போதான் பரணி என்னை புரிஞ்சிக்கிட்டார்னு தோணுச்சு.”

 

 

பிக் பாஸ் சீசன் 2ல யார் யார் கலந்துக்கிட்டா நல்லாயிருக்கும்னு நீங்க ஃபீல் பண்றீங்க..?

 

“யார் யார்னு பாயிண்ட் அவுட் பண்ணி என்னால சொல்ல முடியலை. ஆனா, முதல் சீசன் மாதிரி எல்லாருமே சினிமா பிரபலங்களா இல்லாம, போலீஸ் டிப்பார்ட்மெட்டில் ஒருத்தர், அரசியலில் இருந்து ஒருத்தர், விளையாட்டுத்துறையில் இருந்து ஒருத்தர், சினிமாவுல இருந்து ஒருத்தர்னு பல துறைகளில் இருந்து வந்தா செமையா இருக்கும். ஒவ்வொருத்தரோட எண்ணமும் எப்படி இருக்கு, எப்படி யோசிக்கிறாங்கனு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரொம்ப சீரியஸ் பர்ஷனா இல்லாம கொஞ்சம் ஜாலியான பர்ஷனா இருந்தா கலகலப்பா இருக்கும்.”

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/104362-ganesh-venkatraman-interview.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.