Sign in to follow this  
நவீனன்

ஒரு நிமிடக் கதை தேங்க்ஸ் வாத்தியாரே!

Recommended Posts

white_spacer.jpg
 

p38.jpg தேங்க்ஸ் வாத்தியாரே!

‘‘கதிர் பத்திரிகை நடத்தின ‘சூப்பர் ஹோம் செக்யூரிட்டி டிப்ஸ்’ போட்டியில ஐயாவோட டிப்ஸ் செலக்ட் ஆகி, 250 ரூபா பரிசும் கிடைச்சிருக்கு. இதோ பாரு!’’ என்று பெருமையோடு மனைவியிடம் அந்தப் புத்தகத்தை நீட்டினார் கருப்பையா.

‘‘வீட்டுக்குத் திருட வரும் கொள்ளையர்கள் முதலில் குறி வைப்பது பீரோவைத்தான். எனவே, தங்க நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை அரிசி டின்னுக்குள் பொட்டலங்களாகக் கட்டிப் போட்டுவிட்டால், பறிகொடுக்காமல் தப்பிக்கலாம். இது, என் சொந்த அனுபவக் குறிப்பாகும்!’’ என முழு விலாசத்துடன் அந்த டிப்ஸ் பிரசுரமாகியிருந்தது.

சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக சினிமாவுக்குப் போய்விட்டு, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அடுத்து என்ன டிப்ஸ் எழுதிப் பரிசு வாங்கலாம் என்ற சிந்தனையோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த கருப்பையா - கமலம் தம்பதியை மேஜை மீது படபடத்த வெள்ளைத்தாள் ஒன்று வரவேற்றது.

அதில்... ‘தலைவா! பத்திரிகையில உன் பாதுகாப்பு டிப்ஸ் படிச்சோம். அதிக சிரமம் இல்லாம உன் வீட்டைக் கொள்ளை அடிக்க முடிஞ்சுது. அரிசி டின்னில் கிடந்த பணப் பொட்டலங்களையும், நகைகளையும் சுலபமா எடுத்துக்கிட்டோம். ரொம்பத் தேங்க்ஸ் வாத்தியாரே! இப்படிக்கு, பேட்டை பக்கிரி’

http://www.vikatan.com/

 

Edited by நவீனன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவி..... கடைசில "பேட்டை பக்கிரி" என்று தனது அட்ரஸ் சையும் குடுத்து தொலைச்சிட்டானே. இதுக்குத்தான் திருடனாயினும் எட்டு எழுத்து படிச்சிருக்க வேணும்......! tw_blush:

"பக்கிரி நாலு எழுத்து படிச்சவன் அதுதான் கடிதம் எழுதி வைத்திருக்கிறான்" .

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை
   பழக்கம்
   காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது.
   ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான்.
   ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான்.
   ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான்.
   ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா.
   அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வெடித்தான்.
   ‘‘வடையில உங்களுக்குப் பிடிக்காத மிளகு போட்டிருக்கேன். அதனாலென்ன? சும்மா சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.   ‘‘ஏண்டி! உனக்கு என்ன ஆச்சு?’’
   ‘‘கிராமத்துல தனியா இருக்கிற உங்க அம்மா, அடுத்த மாசத்திலிருந்து நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க. அவங்களுக்கு இஞ்சி, மிளகு, முள்ளங்கி எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்க. இனிமே அதையெல்லாம் சேர்த்துதானே சமைக்கணும். அவங்க எதிர்ல நீங்க கோபப்பட்டா, வருத்தப்பட்டு திரும்பிப் போயிடுவாங்க. அதனால, நீங்களும் எல்லாத்தையும் இப்பவே சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா?   பார்ட்டிக்குப் பாட்டியா?
   ‘‘என்னங்க, சொன்னா கேளுங்க. நாளைக்கு நியூ இயர் பார்ட்டிக்கு உங்கம்மாவையெல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். அவங்களும், அவங்க கண்டாங்கிப் புடவையும், தொளதொள ரவிக்கையும், இழுத்து இழுத்துப் பேசும் கிராமத்துத் தமிழும்... நம்ம மானமே போயிடும்!’’
   ஜானகி தீர்மானமாகச் சொல்ல, கணவர் வாயடைத்து நிற்க, ‘‘ஆமாப்பா! அம்மா சொல்றது சரிதான். ஸ்டார் ஓட்டல், நியூ இயர் பார்ட்டி இதுக்கெல்லாம் பாட்டி சரிப்பட்டு வரமாட்டாங்க’’ என்றான் அவர்களின் மகன் ஸ்ரீராம்.
   ‘‘சரியாச் சொன்னேடா, ஸ்ரீராம்!’’ என்று மகிழ்ந்தாள் ஜானகி.
   ‘‘ஆமாம்மா! நாளைக்கே நான் பெரியவனா னதும், என்கூட நியூ இயர் பார்ட்டிக்கு உன்னை எல்லாம் கூட்டிட்டுப் போனா எனக்கும் அசிங்கமாதானே இருக்கும்!’’
   ஜானகிக்குச் சுருக்கென தைத்தது!
   - வரலொட்டி ரெங்கசாமி
    
    
     கா தலைச் சொல்லிவிடுவதென்று முடிவுசெய்துவிட்டு, செல்போன் மெஸேஜில் ‘ஐ லவ் யூ’ என்று டைப் செய்தான். அனுப்புவதற்கு முன், செல்போன் மெமரி யில் உள்ள பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினான், யாருக்கு அனுப்பலாம் என்று!
   - அ.ரியாஸ்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை சாட்டிங்
    
   சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத்.
   ‘‘டே சிவா, பிஸியா?’’
   ‘‘இல்லை பரத், சொல்லு!’’
   ‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’
   ‘‘ஆமா!’’

   ‘‘எனக்கொரு ஹெல்ப்...’’
   ‘‘சொல்லுடா?’’
   ‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க...’’
   ‘‘நைஸ்... கங்கிராட்ஸ்!’’

   ‘‘பொண்ணு ெடல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’
   ‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’
   ‘‘இல்லை... அவ சென்னைக்கு வந்துடுவா!’’
   ‘‘நான் என்ன பண்ணணும்?’’

   ‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’
   ‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’
   ‘‘டன்!’’
   ஒரு வாரம் கழித்து...
   ‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’
   ‘‘ம்...’’
   ‘‘எப்படி இருக்கா?’’
   ‘‘சூப்பர். ஆனா உனக்கு சரிப்பட்டு வரமாட்டா!’’
   ‘‘என்னடா சொல்றே?’’

   ‘‘அவளுக்கு டெல்லிதான் பிடிச்சிருக்கு. இங்கேயே செட்டில் ஆக விரும்புறா. பேரன்ட்ஸ் கட்டாயப்படுத்துறதனாலதான் உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கா... அப்புறம் ஒரு விஷயம்...’’‘‘என்ன?’’
   ‘‘அவ இங்கே ஒரு பையனை லவ் பண்றா. இன்னிக்குதான் எனக்குத் தெரியும். பையன் சுமாராதான் இருக்கான், ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு!’’
   ஒரு மாதம் கழித்து, சிவா-சிநேஹா கல்யாணப் பத்திரிகை பரத் கைக்கு வந்தது.      
   kungumam.co.
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை செல்லங்கள்
    
   நம்ம மிதுனுக்குப் புதுசா ஒரு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன். ஜோடிப் பொருத்தம் அபாரம்!’’ என்றபடி தரகர் அய்யாசாமி, மிதுனின் புகைப்படத்துடன் பெண்ணின் படத்தையும் ஜோடி சேர்த்து அவன் தாயாரிடம் நீட்டினார். முகத்தில் பரவசம் பரவ தாயார் கேட்டார், ‘‘என்ன படிச்சிருக்கா?’’
   ‘‘நம்ம பையனுக்கு சமமான படிப்புத்தான். எம்.ஏ., எம்.ஃபில்!’’
   ‘‘வசதி எப்படி?’’ - மிதுனின் தந்தை சேனாபதி கேட்டார்.
   ‘‘பொண்ணோட அப்பா பெரிய பஸ் கம்பெனி அதிபர். நாலஞ்சு பெட்ரோல் பங்க் இருக்கு. பத்துப் பதினைஞ்சி டேங்கர் லாரி ஓடுது. பொக்லைன் அது இதுனு நம்ம அந்தஸ்துக்குச் சமமானவங்கதான்!’’   ‘‘பொண்ணு கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?’’
   ‘‘ஒரே பொண்ணுதாங்க. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க!’’
   ‘‘அப்ப இந்த இடம் தோதுப்படாது தரகரே!’’
   ‘‘ஏனுங்க?’’
   ‘‘மிதுனும் எங்களுக்கு ஒரே பையன். ரொம்பச் செல்லம். செல்லமா வளர்ந்த பிள்ளைங்க நல்லபடியா வாழணும்னா அவங்க வாழ்க்கைத்துணை கொஞ்சம் அனுசரித்துப் போற கேரக்டரா இருக்கணும். ஆனா, இங்க பையன் பொண்ணு ரெண்டு பேருக்கும் விட்டுக்கொடுத்துப் போற மனப்பக்குவம் இருக்காது. எல்லாத்திலும் நானா நீயானு போட்டி போடுவாங்க. நிம்மதி இருக்காது. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சிகளோட வளர்ந்த பொண்ணா பாருங்க!’’ என்றார் சேனாபதி.  
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி!
    
     தங்கக் கோடாலி!
   ஏ ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது.
   ‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
   ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீட்டியது.
   ‘‘இல்லை. இது என் கோடாலி இல்லை. என்னுடையது இரும்புக் கோடாலி’’ என்றான் விறகுவெட்டி.
   ‘‘உன் நேர்மையை மெச்சினேன். பரவாயில்லை. இதை வைத்துக்கொள்! இந்தத் தங்கத்தைக் கொண்டு வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள். மழை தரும் மரங்களை இனி வெட்டாதே!’’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு மறைந்தது தேவதை.
   - எஸ்.ரவி
    
   http://www.vikatan.com
  • By நவீனன்
   டிப்ஸ் தர்மம்!
   வ ழக்கமாக புதன்கிழமையன்று எனக்கும், மேனேஜருக்கும் ஃபீல்ட் வொர்க் நாள் முழுவதும் இருக்கும். இந்த மேனேஜர் புதியவர்.
   பத்து மணி சுமாருக்கு ஓட்டல் ஒன்றில் இரு வரும் டிபன் சாப்பிட்டோம். பில்லை வைத்த சர்வர் தலையைச் சொறிந்தான். வேறென்ன, டிப்ஸ் வேண்டுகோள்தான்! பர்ஸை எடுத்த என்னைத் தடுத்த மேனேஜர், ‘‘என்னப்பா... சம்பளம் வாங்கா மலா வேலை செய்யறே? போ, போ!’’ என மறுத்து விட்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் ஜஸ்ட் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விஷயங்களில் இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது எனக்கு. இருந்தும் என்ன செய்வது... ஒன்றும் சொல்ல முடியாது. மேனேஜராச்சே!
   மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு ஓட்டல். சொல்லிவைத்தாற்போல அங்கு சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் இல்லை. பில்தான். இன்னொரு டிப்ஸ் மறுப்பு காத்திருக்கிறது.
   அந்தத் தர்ம சங்கட தருணமும் வந்தே விட்டது. ஆனால், இந்த முறை ஆச்சர்யம்! பில் பணத்தோடுகூட ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை டிப்ஸாகத் தட்டில் வைத்துவிட்டு எழுந்தார் மேனேஜர். என் கண்களில் தொக்கி நின்ற வியப்பு நிறைந்த கேள்விக் குறியைக் கவனித்துவிட்டுச் சொன்னார்...
   ‘‘...டிப்ஸுக்காகத் தலையைச் சொறிந்த அந்த ஓட்டல் சர்வர் மிகவும் இளைஞன்! அவனுக்கு இதுலேயே திருப்தி வந்துடக் கூடாது. அப்பத்தான் இன்னும் முயற்சி பண்ணி முன்னேறணும்னு நினைப்பான். ஆனால், பாவம்... இவர் வயசானவர். என்ன இயலாமையோ, என்ன தோல் வியோ... இந்த வயசுலேயும் சர்வராக வேலை பார்க்கிறார். இவருக்கு டிப்ஸ் தர்றதுல தப்பு இல்ல!’’ என்றார்.
   நான் ஆமோதிப்புடன், ‘‘இந்த விளக்கம் எனக்கு நல்ல டிப்ஸ் சார்!’’ என்றேன்.
   - பரிமேலழகன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
     அப்பா முகத்தில்...
   வீடு எப்படி அமைய வேண்டும் என்று அண்ணன், அண்ணி, தம்பிகள், தங்கைகள் எல்லோருடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு பிளான் வரைந்தார்கள். கடைசியாக அப்பாவிடம் கொண்டு காட்டி, ‘‘அப்பா, இது சரியான்னு பாருங்க. ஏதாவது மாற்றம் இருந்தால் செஞ்சுக்கலாம்’’ என்றார் அண்ணன்.
   அப்பா சிறிது நேரம் பார்த்துவிட்டு, ‘‘எல்லாம் சரிதான். முன் பக்கத்தில் மட்டும் முடிந்தால் கொஞ்சம் கார்டன் போட இடம் விடுங்கள். பூச்செடிகள் வைத்து, சாமிக்குப் பறிச்சுப் போடலாம்’’ என்றார்.
   ‘‘சரிப்பா! அப்படியே பண்ணிடலாம்!’’- அண்ணன்.
   தனிமையில் அண்ணனிடம் தம்பிகள் கேட்டார்கள்... ‘‘ஏன் அண்ணா, அப்பாகிட்ட கேட்டது ரொம்ப அவசியமா? செய்ய முடியாதபடி ஏதாவது மாற்றம் சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பே?’’
   ‘‘செய்யறோம், செய்யலே... அது முக்கியம் இல்லே! அப்பாவை கன்சல்ட் பண்ணும்போது அவர் முகத்திலே ஒரு சந்தோஷத்தைப் பார்த்தியா... அதுதான் முக்கியம்!’’ என்றார் அண்ணன்.
   - எம்ஆர்எல்
   http://www.vikatan.com
  • By நவீனன்
    
    
   முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான்.   ‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியாமலோ, ரோல் மாடல் ஆயிடறார்... உனக்கு நானும், மேனேஜர் அவர் மகனுக்கும் ரோல் மாடல் ஆகறது நல்ல விஷயம். மூட்டை தூக்கறவன் தன் மகனுக்கு ரோல் மாடல் ஆகறது அப்படி இல்லை... நம்மகிட்ட இருக்கிறவங்க எதிர்காலம் நல்லா இருக்கணுமில்லையா!’’ என்றார் முருகேசன். ‘‘அதை அப்படிப் பார்க்காதீங்கப்பா! அப்பா மூட்டை தூக்கித்தான் தன்னைப் படிக்க வைக்கிறார் அப்படிங்கற உணர்வு அந்தப் பையனை நிச்சயமா உயர்ந்த நிலைக்கு ஆளாக்கும் இல்லையா?’’ என்ற மகனின் நம்பிக்கையில் உயிர் இருப்பதாக உணர்ந்தார் முருகேசன். 
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்    
         அதிசய திரவம்?! கி.பி. 2050.
   ‘‘இந்த திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சொட்டு விட்டால் பைக் ஓட்டலாம். இரண்டு சொட்டு விட்டால் கார் ஓட்டலாம். இதன் விலை யும் ரொம்ப மலிவு. ஐந்து மில்லி லிட்டர் கொண்ட சிறிய பாட்டில் வெறும் ஐந்து ரூபாய் தான்!’’ என்று பரபரப்பாக விற்றுக்கொண்டு இருந் தான் அவன். அந்த அதிசய திரவத்தைவாங்க வும், ஆர்டர் செய்யவும் கூட்டம் அலைமோதி யது.
   ‘‘இந்தாப்பா ஆயிரத்து ஐந்து ரூபாய். எனக்கு ஒரு லிட்டர் தண்ணீரும், ஒரு ஐந்து மில்லிபாட்டி லும் கொடு’’ என்றார் வரிசையில் முதலில் நின்றி ருந்தவர்!
   -பா. சிவபாத சுந்தரம்
    
    
    
    
     மகளின் பார்வையில்...
   அந்தப் பூங்காவுக்கு என் மகளை ஏன்தான் கூட்டிச் சென்றேனோ! எங்கு பார்த்தாலும் காதலர்கள்... விதவிதமான சில்மிஷங்கள்... சேட்டைகள்! அத்தனையும் கண்கொட்டாமல் பார்த்தபடி என்னுடன் வந்தாள் என் 12 வயது மகள் ப்ரியா.
   ‘சே... நம்ம பொண்ணோட மனசே கெட்டுப் போயிருக்குமே! எதிர்காலத்துல இவளும் பாய் ஃபிரண்டோடு பார்க், பீச்-னு சுத்துவாளோ?’ - அழகிய பூங்காவுக்கு வந்தும் அமைதியின்றித் தவித்தது என் மனம்.
   ‘‘கூல்டிரிங்க்ஸ் ஏதாவது வாங்கித் தரட்டுமா ப்ரியா?’’ என்றேன் அவளைத் திசை திருப்பும்விதமாக.
   ‘‘வேண்டாம்ப்பா! உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’’ என்றாள்.
   ‘‘என்னடா?’’
   ‘‘ஏம்ப்பா... இங்க உள்ள அங்கிள், ஆன்ட்டியெல்லாம் எவ்வளவு சந்தோஷமா, அன்பா இருக்காங்க? நீ மட்டும் ஏம்ப்பா எப்பப் பார்த்தாலும் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடி அடின்னு அடிக்கிறே?’’ என்றாள். சாட்டையால் சுளீரென அடி வாங்கியது போல் வலித்தது எனக்கு.
   - ஏவி.என்.ராமநாதன்
    
    
    
    
    
     திருமணப் பரிசு! டெல்லி ரயில் புறப்படத் தயாராக இருந்தது. புது மஞ்சள் கயிறு கழுத்தில் துலங்க, கணவனின் அருகில் பதைத்து நின்றிருந்தாள் காவேரி.
   'எனக்கு உன்னைத் தர மறுத்துட்டே இல்ல? நீ எழுதின லவ் லெட்டரையெல்லாம் கல்யாணப் பரிசா உன் கணவன்கிட்டயே கொடுக்கப் போறேன்' என்று மிரட்டிய மணிகண்டன் வழியனுப்ப வந்திருந்தான்.
   ''உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியலை. வாழ்த்துக்கள்!'' என்று ஒரு பளபள காகிதப் பார்சலை காவேரியின் கணவனிடம் கொடுத்துவிட்டுக் கை குலுக்கினான். ''உள்ளே என்ன இருக்குன்னு காவேரிக்குத் தெரியும்'' என்று ஒரு சஸ்பென்ஸ் அணுகுண்டை வேறு அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்துக் கொண்டே வீசினான். விலகினான்.
   ரயில் மெதுவாக நகரத் தொடங்கியது. காவேரி அந்தப் பார்சலையே திக் திக் நெஞ்சோடு பார்த்துக் கொண்டு இருக்க...
   பிச்சையெடுக்க வந்த ஒரு சிறுவன் பளபள காகிதத்தால் வசீகரிக்கப்பட்டு சடாரென்று அந்தப் பரிசுப் பார்சலை அள்ளிக்கொண்டான். வேகம் எடுக்கும் ரயிலிலிருந்து லாகவமாகக் குதித்து இறங்கி ஓடினான்.
   அபாயச் சங்கிலியை இழுக்கப்போன கணவனை காவேரி மறித்தாள்...
   ''விடுங்க! அதுல இருக்கிறது யாருக்கும் பைசாவுக்குப் பயன்படாது..!''
   - கமல் கிருஷ்ணா
    
    
    
     பாசம்!
   கிராமத்து ஆலமரத்தடியில் அந்தப் பஞ்சாயத்து கூடியிருந்தது. பஞ்சாயத்துத் தலைவர் தவசியப்பன் ரங்கராஜையும், தங்கராஜையும் மாறி மாறிப் பார்த்தபடி பேச ஆரம்பித்தார்... ‘‘பெத்து வளர்த்த அப்பா - அம்மாவை ரெண்டு பேருமே நிர்க்கதியா தவிக்கவிட்டா எப்படிப்பா? உங்க ரெண்டு பேருக்குமே கஷ்ட ஜீவனம்கிறதால, ஒருத்தர் அப்பாவையும் இன்னொருத்தர் அம்மா வையும் வெச்சுக் காலம் பூரா காப்பாத்தணும். இது என் தீர்ப்பு!’’
   ‘‘அப்பாவை நான் வெச்சுக்கறேன்’’ என்று முந்திக்கொண்டான் ரங்கராஜ். ‘‘இல்லையில்லை... அப்பா என்கிட்டே இருக்கட்டும். அம்மாவை அண்ணன் வெச்சுக்கட்டும்’’ என்றான் தங்கராஜ். பிரச்னை பெரிதாகி சண்டையில் முடியும் போல் தோன்றவே, திருவுளச்சீட்டு போட்டு யாருக்கு யார் என்று தீர்ப்பாகியது.
   ‘‘அது சரிய்யா... அப்பாதான் வேணும்னு ரெண்டு பேரும் சண்டை போட்டாங்களே, அப்பா மேல அவ்ளோ பாசமா?’’ என்று பக்கத்தில் இருந்தவரின் காதைக் கடித்தார் தவசியப்பன்.
   ‘‘ம்ஹூம்! அப்பனுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர். ஆறு மாசம்தான் உயிரோடு இருப் பார்னு டாக்டர் சொல்லிட்டார்! அதான் விஷயம்!’’ என்று பதில் வந்தது.
   - தனலட்சுமி ராஜகோபால்
    
    
    
     விட்டகுறை!
   முடி திருத்திக்கொண்டு கிளம்பும் முன், 100 ரூபாய்த் தாளைக் கொடுத்த வாடிக்கையாளரிடம் மீதிப் பணத்தைக் கொடுக்கும்போது, ‘‘ஐயா, அஞ்சு ரூபா சில்லறை இல்லீங்களே!’’ என்றார் முத்து. ‘‘சரிப்பா... இருக்கட்டும்’’ என்றவாறு கிளம்பிப் போனார் கஸ்டமர்.
   அவர் போன பின், ‘‘ஏம்ப்பா... கல்லாப் பெட்டியிலதான் சில்லறை இருக்கே! அஞ்சு ரூபாயை இப்படிக் கூடுதலா எடுத் துக்கிறதுல அல்ப ஆசையா?’’ என்று கேட்டான் மகன் செல்வன்.
   முத்து சிரித்துக்கொண்டே சொன்னார்... ‘‘டேய்... வேலை முடிஞ்சதும் சரியா பணத்தை எண்ணி வாங்கிட்டா பிறகு அவருக்கும் நமக்கும் கணக்கு முடிஞ்சு போயிடும்டா! பாக்கியை இப்பவே திருப்பிக் கொடுன்னு கேட்கிற அளவு அது பெரிய தொகை இல்லை. அதே சமயம், போனாப் போகுதுனு விடவும் அவருக்கு மனசு கேக்காது, அதனால இந்தக் கணக்கை நேர் பண்ண, அடுத்த முறை முடிவெட்ட கண்டிப்பா இங்கதான் வருவார். இப்பிடி ஒரு ஓட்டு உறவு இருந்தாத்தான்டா நிரந்தரமான வாடிக்கை யாளர்களைப் பிடிக்க முடியும்!’’
   அப்பாவின் உளவியல் அறிவுகண்டு, அசந்து நின்றான் செல்வன்!
   - ப.சதாசிவம்
   http://www.vikatan.com
  • By நவீனன்
    
     உப்பு மூட்டை
   க ளைத்து வீட்டுக்கு வந்த கதிரிடம் ஓடி வந்தாள் குழந்தை ஷாலினி. ‘‘அப்பா! உப்புமூட்டை..!’’ என ஆவலோடு அவனை நோக்கிக் கை உயர்த்தினாள்.
   ‘‘அவ கிடக்கிறா விடுங்க! நாள் பூராவும் வேலை செஞ்சு களைப்பா வந்திருக்கீங்க. பாவம், நீங்க ஓய்வு எடுங்க’’ என்ற கமலா, ‘‘ஏய், நீ வாடி இங்கே! அப்பாவைத் தொல்லை பண்ணாதே!’’ என்று ஷாலினியை இழுக்க முயன்றாள்.
   ‘‘பாவம், அதைத் தடுக்காதே கமலா! குழந்தைக்கு என்ன தெரியும்... அங்கே அந்தப் பாரம் பொழப்பு. இந்த பாரம் சுகம்!’’ என்றபடியே குழந்தையை முதுகில் உப்புமூட்டை ஏற்றி விளையாடினான் - மார்க்கெட்டில் உப்பு மண்டியில் உப்பு மூட்டை ஏற்றி இறக்கும் சுமை தூக்கியான கதிர்!
   http://www.vikatan.com