Jump to content

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்


Recommended Posts

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

 

 

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்
 

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வை கடந்த நான்காம் திகதி கணக்கின் உரிமையாளர் மீளப் பெற்றுள்ளதுடன் மீண்டும் 8 மில்லியன் ரூபாவை கடந்த ஆறாம் திகதி மீளப் பெறுவதற்கு முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் பணத்தை மீளப் பெறுவதற்காக குறித்த வங்கிக்கு வந்த மற்றுமொருவரை கைது செய்வதற்காக வங்கியின் சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/10/தாய்வான்-வங்கியில்-கொள்/

Link to comment
Share on other sites

லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் கைது

 


லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் கைது
 

தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கியின் தனியார் கணக்கொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பணம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் தாய்வானின் குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து இலங்கை வங்கியின் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கு முயன்ற கணக்கு உரிமையாளர் ஜே.சி.நம்முனி என்பவர் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/10/லிட்றோ-கேஸ்-நிறுவனத்தின்/

Link to comment
Share on other sites

“ஷலில முனசிங்க இலங்கை குடியுரிமையற்றவர்”
 

தாய்வான் நாட்டு வங்கியொன்றில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க இலங்கை பிரஜை அல்ல என இரகசிய பொலிஸார் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு இன்று(11) அறிவித்துள்ளனர்.

இவர் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் எனவும், அவருக்கு இலங்கையில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள விசா கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஷலில-முனசிங்க-இலங்கை-குடியுரிமையற்றவர்/175-205406

Link to comment
Share on other sites

தாய்வான் அதிகாரிகள் இலங்கை வருகை
 

image_8730327a18.jpgதாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று (11) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும் வங்கி அதிகாரி ஒருவரும் விசாரணைகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரவினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகைப் பணத்தில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கை உட்பட, கம்போடியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமது வங்கிக் கணக்குகளில் ஊடுருவி, கொள்ளையிடப்பட்ட பெருந்தொகைப் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர் வரையில், இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

கணினிகளுக்குத் தீங்கிழைக்கும் வைரஸ்கள், தமது நிறுவனத்தின் கணினிகளுக்குள் பரவியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு தாய்வானின் நிதி முகாமைத்துவ ஆணைக்குழுவும் குற்றப் புலனாய்வுப் பணியகமும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், தாய்வானின் தகவல் பாதுகாப்புப் பொறிமுறையை உறுதிப்படுத்தி, விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, அந்நாட்டுப் பிரதமர் லேய் சிங் டே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இது பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள தாய்வான் நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தாய்வான்-அதிகாரிகள்-இலங்கை-வருகை/150-205415

 

Link to comment
Share on other sites

முனசிங்க பதவிநீக்கம்
 

image_33037ef944.jpg‘லிட்ரோ காஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க பதவிநீக்கப்பட்டார் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், அவர் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே, அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/முனசிங்க-பதவிநீக்கம்/175-205413

Link to comment
Share on other sites

தாய்வான் வங்­கிக் ­க­ணக்­கினை ஹெக் செய்து நிதி கொள்ளை: லிட்ரோ காஸ் தலைவருக்கு 25 வரை விளக்கமறியல்

08-92cd5b3d52f883bc345a9395816ec6d80cb3b8fb.jpg

 

முக்கிய புள்ளிகளுக்கு பணம் பகிர்ந்தளிப்பு;குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்
(எம்.எப்.எம்.பஸீர்)

நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் தலை மைக் கணினி கட்­ட­மைப்­புக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக

ஊடு­ருவி, தாய்­வானின் ஈஸ்டன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் பணத்தை கொள்­ளை­யிட்­டமை தொடர் பில் கைது செய்­யப்­பட்­டுள்ள லிட்ரோ காஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் சலில முன­சிங்க , இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­முனி

ஆகிய இரு­வ­ரையும் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்ட கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அனை­வ­ரையும் உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜ­ராக்­கு­மாறும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இந்த நிதி மோசடி கொள்ளை சம்­ப­வத்தில் கிடைத்த பங்கில் ஒரு பகுதி முக்­கிய புள்­ளிகள் பல­ருக்கு பகி­ரப்­பட்­டுள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பொலிஸார் சந்கேம் வெளி­யிட்­டுள்­ளனர். இது குறித்தும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுகத் அம­ர­சிங்க மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­ப­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த சந்­தேகம் எழு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

 இந்த பணக் கொள்­ளையில் தனக்கு கிடைக்கப் பெற்ற பங்கில் 20 இலட்சம் ரூபா மட்­டுமே தன்­னிடம் இருப்­ப­தாக சலில முன­சிங்க குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் வாக்கு மூலம் அளித்­துள்ள நிலை­யி­லேயே இந்த சந்­தேகம் மேலெ­ழு­வ­தாக அந்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 இந்த வங்கி கட்­ட­மைப்பு ஊட­றுப்பு மற்றும் பணக் கொள்­ளையில் சலில முன­சிங்­க­வுடன் தொடர்­பு­பட்ட கொள்­ளையின் பகுதி 300 இலட்சம் ரூபா என குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்ப்ட்­டி­ருந்­தது.

குறித்த பணத் தொகையை சலி­லவும், முத­லா­வது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­மு­னியும் இணைந்து எடுத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்­சி­களும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிடியில் உள்ள நிலையில் தன்­னிடம் 20 இலட்சம் ரூபா மட்­டுமே உள்­ள­தாக சலில வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்­ளதால் மிகுதி 280 இலட்சம் தொடர்பில் பாரிய சந்­தே­கங்கள் எழு­வ­தாக குறித்த பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 இந் நிலையில் இந்த நிதி கொள்ளை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­முனி மற்றும் லிட்ரோ காஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் சலில முன­சிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது அவ்­வி­ரு­வ­ரையும் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்டார். அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் தொடர்­பு­பட்­டுள்ள ஒவ்­வொ­ருவர் தொடர்­பிலும் விஷேட அவ­தானம் செலுத்­து­மாறும் அவர்­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு நீதிவான் ஆலோ­சனை வழங்­கினார்.

இது­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் தலை­மை­யக கணினி கட்­ட­மைப்­புக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக ஊடு­ருவி, தாய்­வானின் ஈஷ்டன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணக்கில் இருந்து மோச­டி­யான முறையில் கொள்­ளை­யி­டப்­பட்ட மொத்த பணப் பெறு­மதி 69.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

 எனினும் அதில் ஒரு­ப­கு­தியே இலங்கை வங்­கியின் நியூயோர்க் கிளை ஊடாக இலங்­கைக்கு பறி­மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், மற்­றைய பணத் தொகை எந்த நாட்­டுக்கு எவ்­வாறு பரி­மாற்­றப்­பட்­டது என்­பது குறித்து துல்­லி­ய­மாக அறிய கணினி ஆதா­ரங்­களை மையப்­ப­டுத்தி விசா­ரித்து வரு­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரிகள் கோட்டை நீதி­வா­னுக்கு நேற்று அறி­வித்­தனர்.

கடந்த 6 ஆம் திகதி, ஜனக சமிந்த நம்­முனி எனும் முத­லா­வது சந்­தேக நபர் 80663687 எனும் தனது வங்­கிக்­க­ணக்­கிற்கு அமெ­ரிக்க டொலர்­களில் பணம் கிடைக்­க­வேண்டி இருப்­ப­தா­கவும் அதனை பரி­சீ­லிக்­கவும் இலங்கை வங்­கியின் தனியார் வங்­கிகள் தொடர்­பி­லான முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சிறி குருப்­பு­விடம் கோரி­யுள்ளார். . இத­னை­ய­டுத்து நம்­மு­னியின் வங்­கிக்­க­ணக்கை பரி­சீ­லனை செய்­த­போது, 1103960 அமெ­ரிக்க டொலர்கள் அந்த கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­மையை முகா­மை­யாளர் கண்­டு­கொண்­டுள்ளார்.

 இந் நிலையில் அந்த பணத்தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்­கவும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்­கியில் உள்ள கணக்­கொன்­றுக்கு மாற்­றவும் இதன்­போது நம்­முனி வங்­கியைக் கோரிய போதும் உட­ன­டி­யாக அதனை செய்ய முடி­யாது எனக் கூறி அதற்­கான விண்­ணப்­பத்தை நிரப்பித் தரு­மாறு முகா­மை­யாளர் அவரை அன்­றைய தினம் திருப்பி அனுப்­பி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து மறு நாள் அதா­வது ஒக்­டோபர் 5 ஆம் திகதி, இலங்கை வங்­கியின் அமெ­ரிக்க டொலர்கள் கணக்கை மேற்­பார்வை செய்யும் நியூயோர்க் நகரில் உள்ள வங்­கியின் கொழும்பு கிளையில் சேவை­யாற்றும் அசேல என்­பவர், இலங்கை வங்­கியின் தனியார் வங்­கிகள் தொடர்­பி­லான முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சி­ரியை தொடர்­பு­கொண்­டுள்ளார்.

 இதன்­போது நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ரு­வி­யுள்ள ஒருவர் 1103960 அமெ­ரிக்க டொலர்­களை 80663687 எனும் வங்­கிக்­க­ணக்­குக்கு பறி­மாற்­றி­யுள்­ள­தா­கவும் அந்த தொகை­யா­னது போலி­யான பரி­மாற்று எனவும் அது தொடர்பில் சிட்டி வங்கி மின்­னஞ்சல் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அசேல, முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சி­ரியின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ளார்.

 இது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்டு, கடந்த நான்காம் திகதி வங்­கிக்கு வந்து பணம் பெற்­றுக்­கொள்ள முற்­பட்ட, நம்­முனி என்­பவர் மீள வங்­கிக்கு வந்த போது பொலி­ஸாரின் உத­வி­யுடன் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் வங்கி அதி­கா­ரி­க­ளினால் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

 தாய்வான் அர­சாங்கம் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக மின்­னஞ்­சல்­மூலம், இலங்கை பொலி­ஸாரின் சர்­வ­தேச கிளைக்கு தகவல் பரி­மாற்­றி­யுள்­ளது. தாய்­வனின் கொமர்ஷல் சர்­வ­தேச வங்­கியின் சர்­வ­தேச கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி நபர் ஒருவர் ' ஸ்விப்ட் தகவல்' ஊடாக 6010400 டொலர்­களை மோச­டி­யான முறையில் பல வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு பறி­மாற்­றி­யுள்­ள­தாக அந்த மின்ஞ்சல் ஊடாக கூறப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இவை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் மேல­திக விசா­ர­ணை­களை நடாத்தி சந்­தேக நபர்­களைக் கைது செய்­தனர். அதன்­பின்னர் தொடர்ந்த விசா­ர­ணை­களில், கைதான முதல் சந்­தேக நப­ரான நம்­மு­னியின் அமெ­ரிக்க டொலர் கணக்­கிற்கு இந்­தி­யாவைச் சேர்ந்த டுட்­டா­லியா எனும் நபர் அமெ­ரிக்க டொலர்­களை வைப்பில் இடு­வ­தா­கவும், அதில் 50 வீததை குறித்த இந்­தி­ய­ருக்கும் 20 வீதத்தை தனக்கும் தரு­மாறும் மிகுதி 30 வீதத்தை வைத்­துக்­கொள்­ளு­மாறும் சலில முன­சிங்க முதல் சந்­தேக நப­ரான நம்­மு­னிக்கு தெரி­வித்­துள்­ள­மையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­தனர்.

 தலை நகரில் உள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் இரு இந்­தி­யர்­க­ளுக்கு ஒன்­றரை கோடி ரூபாவை சலில முனசிங்க வழங்கியமை தொடர்பிலும், அவை இந்த கொள்ளை தொடர்பிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் தகவல்களை சேகரித்துள்ளதாக நீதிவானிடம் குறிப்பிட்ட விசாரணையாளர்கள், அந்த இந்தியர்கள் இருவரும் தற்போது பணத்துடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டனர்.

இந்த நிலையிலேயே தற்போது கணினி சாட்சியங்களை மையபப்டுத்தி விஷேட விசாரணைகளில் வ பலர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

 விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான், குற்றத்தின் பாரதூரம் கருதி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்து அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-12#page-1

Link to comment
Share on other sites

தாய்­வான் வங்­கி­யில் பண மோசடியில் முக்­கிய புள்­ளி­க­ளுக்­கும் தொடர்பா?

‘திடுக்’ தக­வல்­களை வெளி­யி­டு­கி­றது குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு

 
 
 

தாய்­வான் வங்­கி­யில் இணை­ய­வழி மோச­டி­யூ­டா­கத் திரு­டப்­பட்ட பணத்­தில் ஒரு பங்கு மாத்­தி­ரமே லிட்றோ எரி­வாயு நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வ­ரி­டம் உள்­ளது.

எஞ்­சிய பங்­குப் பணம் அர­சின் முக்­கிய புள்­ளி­கள் உள்­ளிட்ட பல­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­கம் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­தி­யர்­கள் இரு­வர் பங்­குப் பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­தா­க­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அமெ­ரிக்­கா­வின் நியூ­யோர்க் நக­ரி­லுள்ள சிட்டி வங்­கி­யின் தலை­மை­யக கணி­னிக் கட்­ட­மைப்­புக்­குள் முத­லில் ஊடு­ரு­வல் நடந்­துள்­ளது. அத­னூ­டாக தாய்­வா­னின் ஈஷ்டன் வங்­கி­யின் கணக்­கி­லி­ருந்து 69.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் திரு­டப்­பட்­டுள்­ளது.

இதில் ஒரு சிறு­ப­குதி, நியூ­யோர்க்­கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யின் ஊடாக இலங்­கைக்கு பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய பணம் எந்த நாடு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்­பில் பன்­னாட்­டுப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

கடந்த 6ஆம் திகதி ஜனக சமிந்த என்­ப­வர் இலங்கை வங்­கிக்­குச் சென்று தனது வங்­கிக் கணக்­குக்கு அமெ­ரிக்க டொலர்­க­ளில் பணம் கிடைக்­க­வேண்­டி­யி­ருப்­ப­தாக வங்­கி­யின் முகா­மை­யா­ளர் ஜகத் அனு­ர­சி­றி­யி­டம் கோரி­யுள்­ளார்.

அவ­ரது வங்­கிக் கணக்­கைப் பரி­சீ­லித்­த­போது 11 லட்­சத்து 39 ஆயி­ரத்து 60 அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்­தப் பணத்­தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்­க­வும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்­கி­யில் உள்ள கணக்­குக்கு மாற்­ற­வும் அவர் வங்கி முகா­மை­யா­ள­ரைக் கோரி­யுள்­ளார். அதற்­கு­ரிய விண்­ணப்­பத்தை மேற்­கொள்­ளு­மாறு முகா­மை­யா­ளர் அவ­ருக்கு கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில், நியூ­யோர்க்கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யி­லி­ருந்து இங்கு மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதில், இணைய ஊடு­ரு­வல் மூலம் பணம் திரு­டப்­பட்­டுள்ள விட­யம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இலங்கை வங்­கி­யின் கிளைக்கு பணம் பரி­மாற்­றப்­பட்­ட­மை­யும் அறி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து உஷா ர­டைந்த இலங்கை வங்­கிக் கிளை­யின் முகா­மை­யா­ளர் பொலி­ஸா­ருக்கு தக­வ­லைத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார். முதல் நாள் வங்­கி­யில் வந்து பணத்­தைப் பெற்­றுச் சென்ற ஜனக சமிந்த வங்­கிக்கு மீண்­டும் வந்­த­போது பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில், லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர், இந்­தி­யா­வைச் சேர்ந்த டுட்­டா­லியா என்­ப­வர் அமெ­ரிக்க டொலர்­களை வங்­கி­யில் வைப்­பி­லி­டு­வார். அவ­ருக்கு 50 சத­வீ­தத்­தை­யம், 30 சத­வீ­தத்தை தன்னை (ஜனக சமிந்த) எடுத்­துக் கொள்­ளு­மா­றும், 20 சத­வீ­தத்தை தனக்கு (லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர்) தரு­மா­றும் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.
கொழும்­பி­லுள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர விடு­தி­யில் வைத்து, இரு இந்­தி­யர்­க­ளுக்கு லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர் பணம் வழங்­கி­யுள்­ளார். இந்­தி­யர்­கள் இரு­வ­ரும் அந்­தப் பணத்­து­டன் நாட்­டை­விட்டுத் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

இதே­வேளை லிட்றோ நிறு­வன முன்­னாள் தலை­வ­ருக்கு 300 லட்­சம் ரூபா பணம் கிடைத்­துள்ள நிலை­யில், 20 லட்­சமே தன்­னி­டம் இருப்­ப­தாக அவர் வாக்­கு­மூ­லம் வழங்­கி­யுள்­ளார்.

எஞ்­சிய பணம் அர­சின் பெரும் புள்­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் சந்­தே­கம் எழுந்­துள்­ள­தாக, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/36291.html

Link to comment
Share on other sites

தாய்வான் வங்கி மோசடி: $1.3 மில். மீட்கப்பட்டது
 

தாய்வான் வங்கியொன்றிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக, இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையிடப்பட்ட 1.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பணத்தை மீட்டுள்ளதாக, இலங்கை அதிகாரிகள் நேற்று (12) தெரிவித்தனர். 

தாய்வான் வங்கியின் கட்டமைப்புக்குள் இணைய வழியாகப் புகுந்த கொள்ளைக் குழுவொன்று, 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் திருடியது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கொள்ளையிடப்பட்ட பணம், ஐக்கிய அமெரிக்கா, கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், கொழும்பிலுள்ள இரண்டு வங்கிகளில், பணத்தை மீளப்பெற முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அதிலொருவர், இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் எனவும், மற்றையவர் இரண்டு நாடுகளினதும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனவும் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும், இந்தியர் இருவரே பணத்தை அனுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விசாரணைகளின் வீச்சமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

“கடந்த வாரத்தில், பணப்பரிமாற்றம் இடம்பெற்றபோது, இரண்டு இந்தியர்களும், கொழும்பில் இருந்தனர். ஆனால் அதன் பின்னர், அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்” என, பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட பணத்தைப் பரிமாற்றுவதற்கான ஏற்பாட்டை, இந்தியர்கள் செய்தனர் எனவும், இதில் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு, பணத்தின் ஒரு பங்கு கிடைக்குமெனவும் இருந்தது என, பொலிஸார் தெரிவித்தனர். இந்த இந்தியர்களின் அடையாளம் தொடர்பான விவரம், இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது என, பொலிஸார் குறிப்பிட்டனர். 

கொள்ளையிடப்பட்ட 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெரும்பகுதியை, ஏற்கெனவே மீட்டுவிட்டனர் என, தாய்வான் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தாய்வான்-வங்கி-மோசடி-1-3-மில்-மீட்கப்பட்டது/150-205492

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.