• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழரசு

அதிர்ச்சி... இயற்கைத் தேனிலும் பூச்சிக்கொல்லி..! ஆய்வு முடிவு

Recommended Posts

பூச்சிக்கொல்லி

விவசாயத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன நஞ்சுகளால், விளைபொருள்கள் விஷமாகிக் கிடக்கின்றன. இதனால் மனிதர்கள் நடமாடும் நோய் தொழிற்சாலைகளாக மாறியிருக்கிறார்கள். விதவிதமான நோய்கள், வீதிக்கு வீதி மருத்துவமனைகள் என மருந்து, மாத்திரைகளை உண்டே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இப்படி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, சில நாள்களில் மருந்தே பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆக, நோய்க்கு உண்ணும் மருந்தும் விஷமாகும் காலகட்டத்தில் மனித இனம் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது பலரும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருத்துவ முறைகளில் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இயற்கையாக காட்டில் மலரும் பூக்களிலிருந்து தேனீக்கள் உறிஞ்சிச் சேகரிக்கும் தேன், நூறு சதவிகிதம் இயற்கையானது என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கையில் இடியை இறக்கியிருக்கிறது சுவிட்சர்லாந்து நியூசாடல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டோபே மேற்கொண்ட ஆராய்ச்சி. 

 

அலெக்சாண்டோபே தலைமையிலான குழுவினர், தேன் தொடர்பான ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், பல்வேறு சூழ்நிலைகளிலிருந்து கிட்டத்தட்ட 198 தேன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு முடிவு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்த மாதிரிகளில் 75 சதவிகித தேன்களில் நியூனிகோ டினைட்ஸ் என்ற பூச்சிக்கொல்லி நஞ்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பூச்சித் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்கப் பயன்படும் இந்த ரசாயன பூச்சிக்கொல்லி உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இதை விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தும்போது, காற்று மூலமாகவும் மற்ற பூச்சிகள் மூலமாகவும் இந்த நஞ்சு பரவுகிறது. விவசாய நிலங்கள் மட்டுமல்லாது அடர்ந்த காடுகளில் உள்ள பூக்களின் மகரந்தங்கள் வரை இந்த நஞ்சு சென்றடைந்துள்ளது. 

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் அலெக்சாண்டே அபே,

‘ இந்தப் பூச்சிக்கொல்லிகளால் மனித இனத்துக்கு நன்மை செய்யும் பல பூச்சி இனங்கள் அழிந்துவிட்டன. இன்னும் சில அழிந்து வருகின்றன. தற்போது தேனில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரசாயன நஞ்சின் அளவு மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவை விட குறைவாகத்தான் உள்ளது. எனவே, தேனை உட்கொள்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா நாடுகளிலிருந்து சேகரித்த மாதிரிகளில்தான் அதிகளவில் ரசாயன நஞ்சு கலந்திருந்தது. ரசாயன பயன்பாட்டை இனியாகிலும் மனித இனம் குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கெனவே குறைந்துவிட்ட தேனீக்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும். இதன் தொடர்ச்சியாகப் பயிர்களில் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி மாபெரும் சரிவைச் சந்திக்கும். எனவே உலகம் முழுவதிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்‘‘ என்கிறார்.

பூச்சிகொல்லி

ஒரு லிட்டர் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் விஷமாக மாறிவிடுவதுப்போலத்தான் தேனும். இயற்கையாகப் பூத்துப் பூக்களிலிருந்து தேன் எடுத்தாலும், காற்றில் பரவும் ரசாயனங்கள் இயற்கையான பூக்களையும் நஞ்சாக மாற்றிவிடுவதால், சுத்தமான தேனிலும் சிறிது ரசாயனம் கலந்துவிடுகிறது. உலகமே ஒட்டுமொத்தமாக ரசாயன பூச்சிக்கொல்லிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வரை இந்த அவலம் தொடரத்தான் செய்யும்.

http://www.vikatan.com/news/coverstory/104319-new-experiment-result-says-chemical-residues-are-there-in-natural-honey.html

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this