Jump to content

விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி


Recommended Posts

விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி

முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா.

சப்ரீனாபடத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா

ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில் தற்போது மனம் மாறிவிட்டார் சப்ரீனா.

பாலியல் தொழிலாளியான பெண்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் தற்போது முன் வைக்கிறார்.

சப்ரீனாவின் 12 வயதாக இருந்தபோது, அவரது அப்பா தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகு வாழ்க்கையே தடம் புரண்டது.

இரண்டு ஆண்டுகளில் தாய் மறுமணம் செய்து கொள்ள, அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்தில் வெலிங்டன் நகருக்கு இடம் பெயர்ந்தது. ஊர் மாறியதும் சப்ரீனாவின் வாழ்க்கையும் மாறியது.

சப்ரீனாவிடம் நேரிடையாக உரையாடிய எழுத்தாளர் ஜூலி பிந்தல், சப்ரீனாவின் கோணத்தில் அவரது வாழ்க்கையைக் கூறுகிறார்.

சப்ரீனாவின் கதை

இளம் பருவத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. எனது மாற்றுத் தந்தை மிகவும் கொடுமைக்காரர். அந்நாட்களில், என்னிடம் பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தவித்தேன்.

தொழில் முறை நடனக் கலைஞராக விரும்பிய நான், பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் பாலே நடன வகுப்பில் சேர்ந்தேன். லிம்ப்ஸ் என்ற பிரபல நடனக்குழு எனக்கு நடனம் கற்றுக் கொடுத்தது.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைPA

ஒருநாள் பள்ளியில் இருந்து ஒரு பூங்கா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் 100 டாலர் பணத்தைக் கொடுத்து, பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.

நானும் ஒப்புக்கொண்டு சென்றுவிட்டேன்.

நடனக்கலைஞராக விரும்பிய நான், சில நாட்களிலேயே வீதிக்கு வந்துவிட்டேன்.

பள்ளிச் சீருடையில் இருந்த நான் சிறுமி என்பது பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்தவருக்கு தெரியாது என்று கூறமுடியாது.

அவர் கொடுத்த, 100 டாலர் பணம் கையில் இருந்த தைரியத்தில் ஆக்லாந்துக்கு சென்று, அங்கு ஒய்.எம்.சி.ஏவில் அறை எடுத்துத் தங்கினேன்.

போலிசாரின் தேடுதல் வேட்டை

ஒருவரிடம் பண உதவி கேட்பதற்காக தங்கும் விடுதிக்கு அருகில் இருந்து பொதுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரின் தொலைபேசி பிசியாக இருந்தது. எனவே வெளியே நின்று கொண்டிருந்தேன்.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

அந்த வழியாக சென்று கொண்டிருந்த போலீசார் என்னிடம் விசாரித்தபோது உண்மையைச் சொன்னேன்.

தொலைபேசியை யாரும் பயன்படுத்தாதபோது நீ சொல்வதை எப்படி நம்புவது என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்ட அவர்கள், ஆணுறை வைத்திருக்கிறேனா என்று சோதனை செய்தார்கள்.

நான் பாலியல் தொழிலாளி என்றே போலீசார் முடிவு செய்துவிட்டார்கள்.

அதற்காக அவர்களை தவறு சொல்லமுடியாது.

ஏனெனில் விபச்சாரத்திற்கு பிரசித்தி பெற்ற காரைன்கைப் சாலைக்கு அருகில்தான் ஒய்.எம்.சி.ஏ தங்கும் விடுதி இருந்தது.

மூத்தவரின் அறிவுரை

போலீஸ்காரர்கள் என்னை சுவரில் சாய்ந்து நிற்கவைத்து சோதனை செய்தபோது பயமாக இருந்தது. ஆனால் அப்போதுதான் விபரீதமான யோசனை எனக்குள் தோன்றியது.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கையில் பணமே இல்லை, தொலைபேசியில் உதவி கேட்பவர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டால் தெருவில்தான் நிற்கவேண்டும்.

நான் பாலியல் தொழில் செய்கிறேனா என்று சந்தேகத்தில் என்னை சோதனை செய்கிறார்கள்.

ஏன் பாலியல் தொழிலிலேயே ஈடுபடக்கூடாது?

போலீசார் சென்ற திசைக்கு எதிர்புறமாக இருந்த பாலியல் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற காரைன்கைப் சாலை செல்லும் பாதையை நோக்கி நடந்தேன்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்டேன். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு இரண்டு அறிவுரைகளை அவர் சொன்னார்.

ஆணுறைகளை என்னிடம் கொடுத்து தொழிலுக்கு புதிதான எனக்கு, வாடிக்கையாளர்களிடம் கட்டணங்கள் நிர்ணயிப்பது, அவர்களை எதிர்கொள்வது ஆகியவை எப்படி என்று சொல்லிக்கொடுத்தார்.

வாடிக்கையாளருக்கு கொடுக்கத் தயாராக இருக்கும் சேவைகள் என்ன என்பதை முன்கூட்டியே அவர்களிடம் கூறிவிட வேண்டும் என்றும், எனது விருப்பத்திற்கு மாறான ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தினால் சண்டையிடாமல் அதை தவிர்க்கவேண்டும் என்பது அவர் சொன்ன இரண்டாவது அறிவுரை.

கேட்டதோ உதவி… கிடைத்ததோ ஆணுறை

அந்த பெண்மணி மிகவும் நல்லவர்.

அங்கு இருந்தவர்களிலேயே வயது குறைவானவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அங்கேயே இருந்தார்.

இரண்டு ஆண்டுகள் நான் காரைன்கைப் சாலையில் வசித்த பிறகு, 1989இல் கிரஸ்ட்சர்ச்சில் உள்ள நியூசிலாந்து புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் (NZPC) என்ற அமைப்பிற்கு சென்றுவிட்டேன்.

பாலியல் தொழிலாளி

பாலியல் தொழிலில் இருந்து வெளியேற விரும்பி உதவி தேடிய எனக்கு கிடைத்தது, என்னை மீண்டும் அந்தக் குழியிலேயே அழுந்தச் சொல்லும் ஆணுறைகளே!

வழக்கமாக வெள்ளிக்கிழமை இரவுகளில் நடைபெறும் வொயின் மற்றும் சீஸ் சமூக விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வரும்.

அந்த விருந்துகளில் பாலியல் தொழில் தொடர்பான விஷயங்கள் பற்றியும் அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றியும் பேசப்படும்.

இதில் விபரீதமான விஷயம் என்னவென்றால், பிற தொழில்களைப் போன்றதே பாலியல் தொழிலும் என்றே பேசப்படும். பாலியல் தொழில் சரியானதே என்று பாலியல் தொழிலாளிகள் நம்பவைக்கப்படுவார்கள்.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடல் வியாபாரம்

மசாஜ் பார்லர் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராகப் பணியில் சேர்ந்தேன்.

தரகர்கள் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள யாரையும் குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது, பாலியல் தொழில் தவறானது அல்ல என்ற பிரச்சாரத்தை மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுத்தேன்!

புரட்சி ஒன்று மலரப்போவதாக கற்பனை செய்து மகிழ்ந்தேன்.

பாலியல் தொழிலை 'குற்றத்தொழில்கள்' என்ற பட்டியலில் இருந்து வெளிக்கொணர்வது பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று நம்பினேன்.

எங்கள் கோரிக்கை வெற்றிபெற்று 2003இல் குற்றத் தொழில்கள் பட்டியலில் இருந்து பாலியல் தொழில் விலக்கப்பட்டது.

வெற்றியை கொண்டாட நியூசிலாந்து புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் ஏற்பாடு செய்த விருந்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டேன்.

ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை, வெற்றி ஏமாற்றமாக, கானல்நீராக மாறியது.

பாலியல் தொழில் சட்டபூர்வமான தொழில் என அனுமதித்த 'பாலியல் தொழில் சீர்திருத்த சட்டம்', பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் என்று புகழ்பெற்றது.

தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை

இங்கிலாந்தில், உள்துறை விவகாரங்களை நிர்வகிக்கும் குழு, பாலியல் தொழிலைப் பற்றி பல்வேறு அணுகுமுறைகளுடன் ஆலோசனை செய்தது.

அதில் குற்றப்பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்குவதும் ஒரு அம்சமாக இருந்தது.

ஆனால் நியூசிலாந்தில் இது ஒரு பிரச்சனையாகிவிட்டது, இந்த சட்டத்தால் தரகர்களும், வாடிக்கையாளருமே பயனடைந்தார்கள்.

இந்தச் சட்டம், பெண்களுக்கு அதிக நன்மைகளையும் உரிமைகளையும் வழங்கும், பெண்கள் அதிகாரம் பெறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ நேர் எதிராக இருந்தது.

பாலியல் தொழிலாளி

இந்த சட்டத்தின்படி, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் முதலாளி, வாடிக்கையாளர்களுடன் "அனைத்தையும் உள்ளடக்கிய" ஒப்பந்தங்களை செய்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை எப்படி வேண்டுமானாலும் தனது விருப்பப்படி கையாளலாம்.

"அனைத்தையும் உள்ளடக்கிய" என்ற அம்சம் சேர்க்கப்படாது என்று எங்களுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், எதுபோன்ற பாலியல் சேவைகளை வழங்குவது அல்லது மறுப்பது மற்றும் விலை நிர்ணயம் செய்வது போன்றவற்றை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் செய்யமுடியாது என்பதே "அனைத்தையும் உள்ளடக்கிய" என்பதன் பொருள்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களுக்கு உரிமைகளும் அதிகாரங்களும் தேவை என்பதுதான், குற்றப்பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்கும் கோரிக்கையின் அடிப்படையே.

ஆனால், அந்த அடிப்படைப் பாதுகாப்பையே இந்தச் சட்டம் வழங்கவில்லை.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைJUSTIN TALLIS/ GETTY

வேலை கோரி சென்றேன்...

நாற்பது வயதில் வெலிங்டனில் பாலியல் தொழில் நடத்தும் ஒரு விடுதியில் வேலை தேடிச் சென்ற எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அங்கு முதல் முறையாக பணிக்கு சென்றபோது, ஒரு அறையில் இருந்து ஒரு பெண் பயந்து போய் அழுதுகொண்டு ஓடிவந்தாள். அவளால் பேசவே முடியவில்லை. காரணத்தை விசாரிக்காமல், திரும்பி வேலைக்கு செல் என்று அங்கிருந்த வரவேற்பாளர் கூச்சலிட்டார்.

அதிர்ச்சியடைந்த நான், என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன். வெலிங்டன் புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பிடம் இதுபற்றி பேசினேன். இதில் நாம் என்ன செய்யமுடியும்? இதுபோன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று பேசினேன்.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைPA

என்னுடைய கேள்வி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. அதன்பிறகு அதுவரை எனக்கு ஆதரவு கொடுத்து வந்த ஒரே அமைப்பாக இருந்த புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.

என் கதை...

செல்வதற்கு எந்த இடமும் இல்லாமல் நிர்கதியாகத் தனித்து நின்றேன். இந்தத் தொழிலுக்கும், அந்த அமைப்பிற்கும் நானாகவே விரும்பித்தான் சென்றேன் என்றாலும், அந்த அமைப்பில் இருந்துதான் என்னுடைய தொழிலைத் தொடங்கினேன்.

நியூசிலாந்து புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் செய்தி ஊடகக் காட்சிகளைக் சேகரிப்பதும் என்னுடைய வேலைகளில் ஒன்றாக இருந்தது. அங்கு நான் படித்த ஒரு விடயம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

பாலியல் தொழிலில் இருந்து வெளியேறிய ஒருவர் காரணமின்றிக் கண்ணீர் விடுவதைப் பற்றிய செய்தி அது. பாலியல் தொழிலில் இருந்து வெளியேறும்வரை அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.

காரணமே இல்லாமல் இந்த செய்தி அடிக்கடி என் மனதில் தோன்றும். என்னைப்போலவே அவரும் உணர்ந்திருக்கிறார் என்பது மிக தாமதமாகவே எனக்கு புரிந்தது. அதன்பிறகு நான் பாலியல் தொழிலில் ஈடுபடவேயில்லை.

பெண்களின் உரிமைகளுக்கான இயக்கம்

பாலியல் தொழிலில் இருந்து 2011ஆம் ஆண்டில் விலகிய நான், புதிய வாழ்க்கையை துவங்கும் முடிவில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் குழப்பமும், மன அழுத்தமும் என்னை வாட்டின.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனது அண்டை வீட்டில் இருப்பவர், இணையதளத்தில் வெப்கேமரா மூலம் பாலியல் தொழில் செய்வதற்கு அழைப்பு விடுத்தபோது, அதை கண்ணியமாக மறுத்துவிட்டேன்.

நான் பாலியல் தொழிலாளி என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா என்ன?

என்னைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமடைந்தேன்.

கோரிக்கையை மறுத்த பிறகு அண்டை வீட்டுக்காரர் என்னை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்துவார்.

பெண்ணாக இருப்பது மட்டுமே இப்படி கூப்பிடுவதற்கு போதுமான காரணம் என்றும் புரிந்துக்கொண்டேன்.

பெண்களையும், பெண்ணியவாதிகளையும் ஆன்லைனில் சந்தித்து உரையாடுகிறேன். பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்காக பணிபுரிகிறேன்.

பாலியல் தொழிலாளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் தொழிலில் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் பிரிட்டனின் உள்விவகாரத்துறையின் குழு, பாலியல் தொழில் தரகர்களை குற்றவாளிகள் பட்டியலிலும், தொழிலாளிகளை குற்றவாளிகள் அல்ல என்றும் வகைப்படுத்தியிருக்கிறது.

மன உளைச்சல்

ஆஸ்திரேலியாவில் பெண்ணியவாதிகள் கொண்ட குழுவை நிறுவியிருக்கிறேன்.

ஒரு மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்தேன்.

ஆஸ்திரேலியாவில் பல மாநிலங்கள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கியுள்ள நிலையில் முதலாவது அடிமை எதிர்ப்பு நிகழ்வாக கடந்த ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை கூறலாம்.

1980களின் மத்தியிலேயே பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ தொழில் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டபோதிலும், அதற்கு எதிர்ப்புகளும் தொடர்கின்றன.

பாலியல் தொழிலாளி

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் நன்மைக்காக செயல்படத் தொடங்கியபோது, என்னுடைய புதிய வாழ்க்கை தொடங்கிவிட்டதை உணர்ந்தேன்.

இதனால் உணர்வு சிக்கல்களில் இருந்து வெளியேறிய நான், இப்போது உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் வலுவாகிவிட்டேன்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் சம்பவத்திற்கு பிறகு ஏற்படும் மன உளைச்சல் (Post-traumatic stress disorder) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்தன.

நோய்க்கு எதிரான போராட்டம்

பாலியல் தொழிலின் பரிசு நோய். அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அழுத்தங்களை எல்லாம் அழுத்தி வைத்திருந்ததன் விளைவுகள் அந்த நோய்கள். பின்விளைவாக ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு வருவதற்காக போராடிவருகிறேன்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவதும், என்னைப்போன்றே இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவதுமே எனது நோய்க்கான சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொழிலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மெளனம் காப்பவர்களுக்கு எதிராகவும் குரல் எழுப்புகிறேன்.

பாலியல் தொழிலில் ஈடுபடுங்கள் என்று ஊக்கமளிப்பதோ, இந்தத் தொழிலில் இருந்து வெளியேறுங்கள் என்று அறிவுறுத்துவதோ என் நோக்கம் அல்ல. பிற பெண்களுக்கு உதவுவதற்காக என்னால் முடிந்தவற்றை செய்யவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.

'த பிம்பிங் ஆஃப் பிராஸ்டிட்யூஷன்: அபாலிஷிங் த செக்ஸ் வொர்க் மித்' (The pimping of prostitution: Abolishing the Sex Work Myth) என்ற புத்தகத்தை எழுதியவர் ஜூலி பிந்தல்.

http://www.bbc.com/tamil/global-41514858

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளக்க எடுத்துவிட்டு  வெளிச்சத்தை கொடுங்கப்பா ஐ மீன் வேற ஏதாவது கொண்டு வந்து  இணைத்து விடுங்கள் 8ம் திகதி இணைத்ததை எட்டிப்பார்ப்பார் யாரும் இல்லை சும்மா இருட்டாவே கெடக்கு (கிடக்கு)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த விளக்க எடுத்துவிட்டு  வெளிச்சத்தை கொடுங்கப்பா ஐ மீன் வேற ஏதாவது கொண்டு வந்து  இணைத்து விடுங்கள் 8ம் திகதி இணைத்ததை எட்டிப்பார்ப்பார் யாரும் இல்லை சும்மா இருட்டாவே கெடக்கு (கிடக்கு)tw_blush:

வணக்கம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த விளக்க எடுத்துவிட்டு  வெளிச்சத்தை கொடுங்கப்பா ஐ மீன் வேற ஏதாவது கொண்டு வந்து  இணைத்து விடுங்கள் 8ம் திகதி இணைத்ததை எட்டிப்பார்ப்பார் யாரும் இல்லை சும்மா இருட்டாவே கெடக்கு (கிடக்கு)tw_blush:

அறிவு பசிக்கு பள்ளிக்கூடம்.
வயிற்று பசிக்கு அடுக்களை.
காம பசிக்கு பள்ளியறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம்.:)

ஒராள் இப்பதான் எட்டிப்பார்த்து வணக்கம் சொல்லிருக்கு அடுத்த ஆள் அரப்பா அது ??tw_blush:

 

13 hours ago, குமாரசாமி said:

அறிவு பசிக்கு பள்ளிக்கூடம்.
காம பசிக்கு பள்ளியறை.

பள்ளிக்கூடம் , பள்ளியறை ரெண்டும் ஒண்டா எனக்கு ஒண்டுமே வெளங்கல சாமி  முதலாவது வெளங்கிடுச்சி ரெண்டாவது பாடம் எடுத்தால் விடிஞ்சிடும் பதில் சொல்லுவியளா சாமி :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த விளக்க எடுத்துவிட்டு  வெளிச்சத்தை கொடுங்கப்பா ஐ மீன் வேற ஏதாவது கொண்டு வந்து  இணைத்து விடுங்கள் 8ம் திகதி இணைத்ததை எட்டிப்பார்ப்பார் யாரும் இல்லை சும்மா இருட்டாவே கெடக்கு (கிடக்கு)tw_blush:

நானறிய இங்க

இந்த  இடத்துக்கு வேறயாரும்tw_blush: வரத்தேவையில்லை...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

நானறிய இங்க

இந்த  இடத்துக்கு வேறயாரும்tw_blush: வரத்தேவையில்லை...:grin:

கெளம்புங்க அண்ண காத்து வரட்டும் மேலே ரெண்டு பேர் உள்ள வந்திருக்காங்கள்  நான் மட்டுமல்ல என்று கூறிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் நாணயத்தின் இரு பக்கம் போன்றது ....
ஒரு பக்கம் பாலியல் தொழிலாளிகள் என்றால் 
மற்றையது அவர்களது வாடிக்கையாளர்கள் 

இவர்களுக்குள் இருக்கும் இடர்பாடுகளை இலகுவாகுவாக தீர்க்க முடியாது 
என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். காரணம் இரு பகுதியும் குடும்ப உறவு 
சாதாரண சமூக வாழ்வில் இருந்து விலகியவர்கள். அன்பு பாசம் அரவணைப்பு 
என்பதை இழந்தவர்கள். வறுமையும் வாழ்க்கையின் வெறுமையுமே பெண்களை 
இந்த தொழிக்குள் தள்ளுகிறது என்றால் ...... பெண்களுடனான நேசம் என்பது 
இல்லாதவர்கள் வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள். இந்த வாடிக்கையாளர்கள்  பெண்களை 
காம உணர்ச்சியுடன் மட்டுமே பார்க்க கூடியவர்கள் ... அப்படி வாழ்வு அமைந்து விட்ட்டவர்கள் 
ஒரு பெண்ணின் உள்ளுணர்வை புரிந்துகொள்ள கூடிய மனோபக்குவம் இவர்களிடம் இருக்க 
வாய்ப்பே இல்லை என்பது இவர்கள் பக்கம் என்றால் ............. ஏற்கனவே பல ஆண்களின் 
காம வெறியால் நலிந்து போன தொழிலாளர்களுக்கு அவர்களுடைய முன்னைய அனுபவம் 
மறுபக்கத்தில் .....

இவற்றுக்கு பரந்துபட்ட சமூக சுற்று சூழலில்தான் விடிவு உண்டு 
கலாச்சார சமூக கட்டமைபுகள் ஆண்-பெண் இடையே ஆனா நட்பை வளர்த்து விடுவதில் 
கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாறாக பெண்கள் வயதுக்கு வந்ததுமே பிரித்து வைப்பதில்தான் 
அதிகமான சமூதாய கட்டமைப்புகள் கவனம் கொள்கின்றன. இதனால் பெண்கள் பற்றிய புரிதல் 
இல்லாத ஆண்களும் ............ ஆண்கள் பற்றிய புரிதல் இல்லாத பெண்களும் மட்டுமே சமூகத்தில் 
வளர்க்கிறார்கள் இது தான் பல குடும்ப பிரச்சனைகளுக்கு கூட அடிப்படை காரணம். சமூகத்தில் 
உள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து வன் கொடுமைக்கும் அதுதான் காரணம். இந்த வன் கொடுமையில் 
ஈடுபடும் ஆணின் வாழ்க்கையை எடுத்து பார்த்தால் அவருடைய வாழ்வில் பெண்கள் இருந்து இருக்கவே மாட்டார்கள். இதுவே ஒரு பரஸ்பர சிநேகிதத்தை ஒரு பெண்னுடன் பேணியவன் பெண்கள் மீது தனது பார்வையை மாற்றி கொள்கிறான் ...... தன்னுடைய இடர்பாடுகள் இடைஞ்சல்களை அவனது பெண் சிநேகிதி 
ஏற்கனவே இவனுடன் பகிர்ந்து கொள்வதால் ....... பெண்கள் பற்றிய கூடிய புரிதல் அவனுக்கு வருகிறது.
ஒரு ஆணின் அரவணைப்பு பெண்ணுக்கு தேவை எனும் எண்ணம் இயற்கையாக வருகிறது.

இங்கு எத்தனை பேர் இந்த செய்தி படித்தீர்களோ தெரியவில்லை ....
இப்போ கூடுதல் வட இந்திய கல்லூரிகளில் வாசல்களில் அதிக பெண் போலீசார் சேவையில் 
உள்ளார்கள் தவிர அண்டர் கவர் போலீசாக பள்ளி உடையில் பலர் வலம் வருகிறார்கள் 
பெண்களிடம் பாலியல் சேட்டை செய்பவர்களை கைது செய்கிறார்கள் .... பள்ளி மாணவிகள் மீதான 
பாலியல் பலத்தகாரம் கட்டுக்கு அடங்காது போனதால் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். 
இது கூட ஒரு நல்ல முடிவு அல்ல ......... இதன் பின் விளைவு மிகவும் பார தூரமானது.
சில சந்தர்ப்பங்களில் ஆண் மாணவர்கள் நேரம் கேட்க போனால் கூட சில மாணவிகள் புகார் செய்கிறார்கள் 
பின்னால் தொடர்ந்து சென்றால் அண்டர் கவர் பெண் போலீஸ் கைது செய்கிறார்கள் .... ஒரே பள்ளியில் 
படித்தால் ஒரே பாதையில்தானே செல்ல வேண்டும் ?
இந்த நெருக்கடிகள் ஆண் மாணவர்களை மாணவிகளிடம் இருந்து அந்நிய படுத்துகிறது 
இந்த ஆண்களிடம் பெண்கள் பற்றிய எந்த புரிதலும் இருக்க போவதில்லை ... தமது உடலோடு 
உள்ள காமத்தை தீர்க்கும் இடம் பெண் உடல் என்ற எண்ணம் மட்டுமே வாழ்கிறது. ஏற்கனவே ஆண் 
பெண் விரிசலால்தான் இந்தியாவில் பாலியல் வான் கொடுமை சாதாரணமாகி இருக்கிறது. இந்த சூழலில் 
வளரும் ஆண்கள் ஒரு பெண்ணுக்கு மிகுந்த அன்புடன் கூடிய அரவணைப்பு தேவை எனும் எண்ணமே 
வளர வாய்ப்பில்லை. ஒரு ஆண் பெண்ணுக்கு உண்மையாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் கூட 
பெண் சினேகிதிகளின் ஊடான உரையாடல் மூலமே அதிக ஆண்கள் புரிந்து கொள்கிறார்கள். அது இல்லாத சமயம் அவர்களை அது எந்த அளவில் பாதிக்கிறது போன்ற புரிதல் கூட வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்பவள் அவள்  தகளின் காம பசிக்கு மட்டுமே என்கிற நினைப்பு இருக்கும் ஆண்களால் தான் இந்த நிலை ஏற்படுகிறது ஆனால் இந்த காம வெறி கொண்ட சில ஜென்மங்களால் சின்ன குழந்தைகளும் அதனுள் சிக்கும் போதே நானும் ஓர் ஆண் என நினைக்கையில் வெட்கமாகவும் கூச்சமாகவும் இருக்கிறது  

இந்த பெண்களை தூண்டல் செய்ய காரணம் என்பதை அறிந்து கொள்ளுவோம் ஆனால் இது போன்ற பிரச்சினைகளீலிருந்து பெண்களை காக்கலாம்  ஆனால் சில பெண்கள் போதை போல காசுக்காகவும் செய்கிறார்கள்  என்ன செய்வது சிலருக்கு சில பிரச்சினைகள் 

 

நன்றி மருதர் உங்கள் விளக்கத்திற்கு 

Link to comment
Share on other sites

On 10/27/2017 at 2:33 PM, தனிக்காட்டு ராஜா said:

பெண் என்பவள் அவள்  தகளின் காம பசிக்கு மட்டுமே என்கிற நினைப்பு இருக்கும் ஆண்களால் தான் இந்த நிலை ஏற்படுகிறது ஆனால் இந்த காம வெறி கொண்ட சில ஜென்மங்களால் சின்ன குழந்தைகளும் அதனுள் சிக்கும் போதே நானும் ஓர் ஆண் என நினைக்கையில் வெட்கமாகவும் கூச்சமாகவும் இருக்கிறது  

இந்த பெண்களை தூண்டல் செய்ய காரணம் என்பதை அறிந்து கொள்ளுவோம் ஆனால் இது போன்ற பிரச்சினைகளீலிருந்து பெண்களை காக்கலாம்  ஆனால் சில பெண்கள் போதை போல காசுக்காகவும் செய்கிறார்கள்  என்ன செய்வது சிலருக்கு சில பிரச்சினைகள் 

 

நன்றி மருதர் உங்கள் விளக்கத்திற்கு 

நானும் ஆஜர் ஆகிவிட்டேன் தனி.. tw_blush:

இதற்கான சூழல் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது என நினைக்கிறேன். tw_anguished: மேலே குறிப்பிடப்பட்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் அவரது தந்தையின் இறப்பு ஒரு மையப்புள்ளியாக இருந்துள்ளது. வளர்ப்புத் தந்தைக்கு உண்மையான பாசம் இருக்குமா என்பது கேள்விக்குறி. அவர் அந்த விதவை தாயை விரும்பி அந்த வீட்டினுள் வந்தவர். :unsure:

இந்த நவீன காலத்தில் விவாக ரத்து என்பதை பலர் புரட்சியாக பார்க்கின்றனர். விடுதலை என்பது அடிப்படை உணர்வாக இருந்தபோதிலும் தாம் பெற்ற பிள்ளைகளை சரியாக வளர்த்து கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவருக்குமே உள்ளது. இதற்கிடையில், இரண்டாம், மூன்றாம் திருமணம் என்று போகும்போது பாதிப்பு குழந்தைகளுக்குத்தான். :unsure:

அண்மையில் பள்ளிக் குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் சாதாரணமாக நிகழும் வாக்கு வாதங்கள்கூட பிள்ளைகளின் மனதை பாதிக்கின்றது என்பதை கண்டறிந்து சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, திருமணம் செய்து குழந்தை பெறுவது மட்டும் போதுமானதல்ல. அவர்கள் சரியான முறையில் கரையேறுவதற்கு ஏதுவான சூழலை வீட்டிலும், வெளியிலும் அமைத்து தரவேண்டிய கடமை பெற்றோரை சார்ந்தது. :99_muscle:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இசைக்கலைஞன் said:

நானும் ஆஜர் ஆகிவிட்டேன் தனி.. tw_blush:

இதற்கான சூழல் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது என நினைக்கிறேன். tw_anguished: மேலே குறிப்பிடப்பட்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் அவரது தந்தையின் இறப்பு ஒரு மையப்புள்ளியாக இருந்துள்ளது. வளர்ப்புத் தந்தைக்கு உண்மையான பாசம் இருக்குமா என்பது கேள்விக்குறி. அவர் அந்த விதவை தாயை விரும்பி அந்த வீட்டினுள் வந்தவர். :unsure:

இந்த நவீன காலத்தில் விவாக ரத்து என்பதை பலர் புரட்சியாக பார்க்கின்றனர். விடுதலை என்பது அடிப்படை உணர்வாக இருந்தபோதிலும் தாம் பெற்ற பிள்ளைகளை சரியாக வளர்த்து கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவருக்குமே உள்ளது. இதற்கிடையில், இரண்டாம், மூன்றாம் திருமணம் என்று போகும்போது பாதிப்பு குழந்தைகளுக்குத்தான். :unsure:

அண்மையில் பள்ளிக் குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் சாதாரணமாக நிகழும் வாக்கு வாதங்கள்கூட பிள்ளைகளின் மனதை பாதிக்கின்றது என்பதை கண்டறிந்து சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, திருமணம் செய்து குழந்தை பெறுவது மட்டும் போதுமானதல்ல. அவர்கள் சரியான முறையில் கரையேறுவதற்கு ஏதுவான சூழலை வீட்டிலும், வெளியிலும் அமைத்து தரவேண்டிய கடமை பெற்றோரை சார்ந்தது. :99_muscle:

உன்மைதான் இசை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.