Jump to content

வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம்


Recommended Posts

வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம்

 

 

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை. இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக முடி­வெ­டுக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

rauff-hakeem.jpg

வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது. நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள், விட்டுக் கொடுப்­புகள் இடம்­பெற வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண் டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். 

அது தொடர்பில் கலந்­து­ரை­யாட முஸ்லிம் சகோ­தர்­க­ளுக்கு அழைப்பு விடு­கின்றோம். அதே­வே­ளையில் இணைந்த வடக்கு கிழக்­கிற்கு படித்த பக்­கு­வ­மான முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக்­கு­வதை எதிர்க்­கப்­போ­வ­தில்லை என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மன்­னாரில் தெரி­வித்திருந்தார்.

அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தலை­வர்­களுள் ஒரு­வரும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்தார். குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யான  ஒளிக்­கீற்கு என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக பேச­ப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இது இரண்டு சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இந்த விட­யத்தில் எமது கட்சி நீண்­ட­கா­ல­மாக ஒரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு அலகு அமை­ய­வேண்டும் என்று கொள்­கை­ய­ள­வி­லான முடி­வொன்றை எடுத்­தி­ருந்தார்.

இந்த தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வரையில் வில­க­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் தமிழ் சகோ­தர்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். நடத்­திக்­கொண்டும் இருக்­கின்றோம். மேலும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­சி­ய­மா­கின்­றன.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் ஒரு வகை மெத்­தனப் போக்­கையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக பதி­ல­ளித்து விட­மு­டி­யாது. இதற்கு கார­ணங்கள் உள்­ளன. 1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவர் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு மாகாண சபை முறை­மைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. 

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டன. ஒரு­வ­ரு­டத்­திற்குள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு நீடிப்­பதா? இல்­லையா? என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­து­வதன் ஊடாக இரண்டு சகோ­தர சமு­கங்­க­ளுக்கு இடையில் விப­ரீதம் ஏற்­ப­டுத்த அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான அர­சாங்கம் முயன்­றது. ஆனால் அத்­த­கைய நிலை­மைகள் எல்லாம் தெய்­வா­தீ­ன­மாக கடந்து போயின. 

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன. 

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது. அது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு இவ்­வாறு ஒரே நிரையில் பதி­ல­ளிப்­பது அவர்­களின் நிகழ்ச்­சிக்கு தூப­மி­டு­வ­தா­கவே அமையும்.தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையில் எந்­த­வி­த­மான நல்­லு­றவும் பேணப்­படக் கூடாது என்ற போக்­கையே இத்­த­கையோர் கொண்­டுள்­ளனர். இது பிழை­யான அணு­கு­மு­றை­யாகும். 

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டா­கவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க இரு மாகா­ணங்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னாலும் அது சாத்­தி­ய­மா­காது. இவ்­வா­றான சில காப்­பீ­டு­களும்  இருக்கும் நிலை­யிலே இந்த விட­யங்­களை சில தரப்­பினர் பெரி­து­ப­டுத்தி ஊதிப்­பெ­ரி­தாக்கி ஏதோ விப­ரீதம் நடந்­துது போல காட்டி  அர­சியல் பிழைப்பு நடத்­து­கின்­றனர். 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு பேசு­வது அர­சியல் பிழைப்­பு­வாத பேச்­சுக்கள் மட்­டுமேயாகும். ஒரே இரவில் அல்­லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்­து­வி­டு­வ­தைப்­போன்று பேசு­கின்­றனர். முஸ்­லிங்­களின் உடன்­பா­டின்றி இதனை செய்ய முடி­யாது. செய்­யவும் மாட்டோம் என சம்­பந்­தனே கூறி­யி­ருக்­கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும். 

பிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து

அவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன்  சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/25321

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன.

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு அவசியம்.
வரலாற்றுத் தவறுகளை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் மக்கள் இதை வரவேற்க வேண்டியது அவர்களது கடமை

Link to comment
Share on other sites

விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்த மு.கா தயார்

 
 
Untitled-1.jpg6987.jpg

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல.இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போன்று காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவாக குற்றஞ்சாட்டிய அவர், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தின் போது முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கு தமது தரப்பு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் கருத்தை வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தொடர்பில்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத விபரீதம் ஏற்படுத்த ஜே.ஆர் அரசு முயன்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புகள் மற்றும் விட்டுக் கொடுப்புகள் இடம் பெற வேண்டும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இது மேலும் தூபமிடுவதாகவே அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக்கூடாது என்ற போக்கையே இத்த கையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும் என்றும் அவர் கூறினார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகவும் கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது பற்றி வினவியதற்கு பதிலளித்த அவர்,

அது அவரின் சொந்தக் கருத்து .கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாக அமைந்து விடும்.இவற்றை தவிர்த்துக் கொள்வது உகந்தது என்றார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமே. நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப்போன்று பேசுகின்றனர்.

முஸ்லிம்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தன் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்வுக்கு வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்து இதனை பற்றி ஆராயலாம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 

http://www.thinakaran.lk/2017/10/05/உள்நாடு/20320

Link to comment
Share on other sites

2 hours ago, வாத்தியார் said:

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு அவசியம்.
வரலாற்றுத் தவறுகளை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் மக்கள் இதை வரவேற்க வேண்டியது அவர்களது கடமை

நானும் இதை வரவேற்கிறேன். ஆனால் இதன் எல்லை 1981இல் எப்படி இருந்ததோ அதன் படி தான் நிர்ணயிக்க வேண்டும், அதை தனி நிர்வாக அலகாக இல்லாமல் ஒரு தனி மாகாணமாக கூட பிரிக்கலாம், ஆனால் அதன் எல்லை விடயத்தில் எந்தவிதமான விட்டு கொடுப்பும் இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இப்பிடிச் சொல்லும் ஹக்கீம் நாளைக்கு வேறொன்றைச் சொல்லிக் குழப்புவார். அவர்களுக்கு உறுதியான நிலைப்பாடு ஒன்றுமில்லை. ஒவ்வொன்றயும் தங்களுக்கு சாதகமாக்க மாத்தி  மாத்திப் பேசுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத பாகிஸ்தானை காந்தி தனி அலகாக உருவாக்கி விட்டிட்டு அப்புறம்.. அதோட காந்தி தேசம் போர் செய்ய வேண்டி வந்து போல... காத்தான்குடியில் குடியமர விட்ட குற்றத்துக்காக.. இன்று வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தை இணைக்க இவைக்கு தனி அலகு இணாமாக கொடுக்க வேண்டும் என்பது... எந்த வகையில் நியாயம்.

இதே தனி அலகை தென்பகுதிகளில் உருவாக்கக் கேட்கலாமே..??!

கொழும்பில்.... அல்லது மலையகத்தில் தனி அலகு தமிழர்கள் கேட்டால் கிடைக்குமா..??!

இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு.. அதாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில் இணைக்கப்பட்டிருந்தது போல்.. வடக்கும் கிழக்கும் இயல்பாக இணையும். அதையிட்டு யாருக்கும் இணாம் வழங்கனுன்னு அவசியமில்லை.

வேண்டும் என்றால்.. முஸ்லீம் கோட்டங்கள் அல்லது வலயங்கள் உருவாக்கலாம்.  அதேபோல் வடக்குக் கிழக்கில் வாழும் சிங்கள பெளத்த மக்களுக்கும் கோட்டங்கள்.. வலயங்கள் உருவாக்கிக் கொடுக்கலாம். 

தனி அலகு என்ற அஷ்ரப்பின் மத அடிப்படைவாத பயங்கரவாதக் கொள்கைக்கு வடக்குக் கிழக்கு தான் கிடைச்சுதா.. அமுலாக்க. இதையே.. மத்திய மாகாணத்தில்...  மேற்குத் தெற்கில் கேக்கலாமே..?!

மதப்பரம்பலின் படி.. வடக்குக் கிழக்குக்கு வெளியில் தான் அதிகம் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள்.  :rolleyes:tw_angry:

இவைக்கு வடக்குக் கிழக்கில் தனி அலகு கேட்க உரிமை இருக்கோ இல்லையோ.. சொறீலங்காவின் பொருண்மிய முதுகெலும்பாக உள்ள மலைய மக்களுக்கு தனி அலகுக்குரிய அத்தனை தகுதியும் இருக்குது. இவைக்கு தனி அலகு என்றால்.. மலையகத்திற்கும் அது அமையனும். அந்த மக்கள் மறக்கப்பட முடியாது. வடக்குக் கிழக்கு மக்களோடு சேர்ந்து துன்பப்பட்ட மக்கள் அவர்கள். அவர்களுக்கு தனி அலகு கேட்க யாருமில்லை.. சம்பந்தனும்.. மாவையும் தங்கட வீட்டுக் கோடிக்குள்.. தனி அலகு கொடுப்பது போல..வடக்குக் கிழக்கில் தனி அலகு கொடுப்பம் என்று சூளுரைக்க.. இவைக்கு ஒன்றும் தமிழ் மக்களை ஆணை வழங்கவில்லை. 

Link to comment
Share on other sites

இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தனியலகை அமைத்துக்கொள்ளலாம்.

வடக்கு-கிழக்கில் இவர்கள் ஆக்கிரமித்துள்ள கள்ளக்காணிகளை மீட்டால் இவர்கள் 5% கூட தேறமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

தனி அலகை  கொடுத்து அப்படியே  விட வேண்டியதுதான்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.