Jump to content

தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர்


Recommended Posts

தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர் : ஏன் தெரியுமா?

 

தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர் : ஏன் தெரியுமா?

மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர் ஒருவர் தான் செய்த சேவைக்காக பிரித்தானிய பிரதமரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியமைக்காகவே அந்த மாணவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முழுநேர மருத்துவ பட்டப்படிப்பைத் தொடரும் ராதவன் குணரட்ணராஜா என்ற 24 வயது இளைஞர், Little Things என்ற பெயரில் தனது தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்றார்.

தன்சானியாவில் ஒரு மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தவர், மற்ற நாடுகளில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

இம் மாணவனின் தொண்டு மற்றும் நிதி திரட்டும் அமைப்பின் செயற்பாடுகள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தன்னார்வமாக பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் 787வது Point of Light விருதும் அந்த மாணவருக்கு, பிரித்தானிய பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் Little Things தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து ராதவன் மூன்று சுகாதார திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இந்த திட்டங்களுக்கு அவசியமான 95000 பவுண்ட் நிதி சேகரிப்பதற்காக பிரித்தானிய முழுவதும் உள்ள தன்னார்வ மாணவர்கள் உதவியுள்ளனர்.

இந்த தொண்டு நிறுவனத்திற்காக நிறுவனங்கள், பாடசாலை மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் ஆதரவுகள் பெற்று வரப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு அவரது முதல் திட்டமாக தன்சானியாவிலுள்ள கண் மருத்துவமனைக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு இலங்கை கிளிநொச்சி குழந்தை மருத்துவமனைக்கு உதவிகளை வழங்கியிருந்தார். தெல்லிப்பழை மருத்துவமனைக்கும் அவரது இரண்டாவது திட்டத்தின் ஊடாக உதவப்பட்டது.

தற்போது அவர் நேபாளத்தில் உள்ள Tamakoshi மருத்துவமனைக்கு உதவுவதற்காக 50000 பவுண்ட் நிதி சேகரித்து வருகின்றார்.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ராதவனுக்கு பிரதமரின் விருது மேலும் ஊக்கப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட சாதனை அல்ல எனவும் தனக்கு பின்னால் உதவுவதற்கு தன்னார்வமாக பலர் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ராதவனுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் அனுப்பிய பிரதமர் தெரசா மே, அவரது அளப்பரிய சேவைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதுடன், மற்றவர்களையும் சேவைசெய்ய ஊக்கப்படுத்துவதற்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/britain-prime-minister-honor-tamil-youth

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.