Jump to content

U -17 உலகக் கோப்பை சுவாரஸ்யங்கள்!


Recommended Posts

இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC

 

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி  தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. 

இந்தியா - #BackTheBlue

 

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்லும் கனவு இந்திய அணிக்கு இருந்தாலும், அது இரண்டாம்பட்சம்தான். ஏனெனில், இந்தச் சவால் நிறைந்த போர்க்களத்தில் இளம் இந்திய வீரர்கள் எப்படி தங்களை நிரூபிக்கப்போகின்றனர் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய கால்பந்து ரசிகர்களின் கேள்வி. இரண்டு வருடங்களுக்கும் மேலாக திறமையான இளம் இந்திய வீரர்கள், முன்னாள் இந்திய வீரரான அபிஷேக் யாதவால் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு கடினமான பயிற்சி வழங்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனை, பயிற்சிக்குப் பின் இந்திய அணியின் ஜெர்சியை அணிய தகுதியுடைய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். 

இந்த வீரர்களுக்கு கோடிகளைக் கொட்டி வெளிநாடுகளில் கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை வேறு எந்த விளையாட்டுக்கும், வேறு எந்த இளம் அணிக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இவ்வளவு செலவு செய்யவில்லை. இந்தத் தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளைப்போல, இந்திய அணிக்கு பழம்பெருமை வரலாறு எதுவும் இல்லைதான். ஆனாலும் நம் வீரர்கள், இந்தச் சவாலை `வெற்றி பெற வேண்டும்' என்ற கனவோடுதான் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கையிலிருப்பது இந்திய கால்பந்தின் எதிர்காலம் மட்டுமல்ல; இந்திய விளையாட்டுத் துறையின் எதிர்காலமும்தான்.

இந்தியா #BackTheBlue

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த  லூயிஸ் நார்டன் டி மடோஸின் பயிற்சியின் கீழ், 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து அணி எல்லா வகைகளிலும்  முழுமைபெற்ற ஓர் அணியாகவே விளங்குகிறது. தரவரிசை பற்றியெல்லாம் கவலைப்படாமல், களத்தில்  90 நிமிடமும் போராடி பந்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமே, பிற போட்டியாளர்களிடமிருந்து நம் அணியை வேறுபடுத்திக்காட்டுகிறது. சமீபத்தில் சிலி அணியோடு 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்த இந்திய அணியினரின் தைரியத்தைப் பார்த்த பயிற்சியாளர் நார்டன், `இந்திய அணி, எதிர்வரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் கால் இறுதி வரை முன்னேறும்' என உறுதியளித்திருக்கிறார். இந்திய அணி, தனிப்பட்ட ஒரு வீரரின் திறமையை நம்பாமல் கூட்டுமுயற்சியின் மூலமே வெற்றியை எதிர்நோக்கியிருந்தாலும்,  நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப்போகும் சில கீபிளேயர்களும் இருக்கிறார்கள்.

கோமல் தடால், இந்தியாவின் மிரட்டல் மிட்ஃபீல்டர்; பிளே மேக்கர், அட்டாக்கிங்கில் கில்லி. ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப வேகத்தை மாற்றி முடிந்தவரை பந்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் ஆற்றல்கொண்டவர். சிக்கிமைச் சேர்ந்த இவர்தான், கடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிக்ஸ் (BRICS) தொடரில் பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடித்தார். பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே இந்திய வீரரும் இவர்தான்.

‘டெட் பால் ஸ்பெஷலிஸ்ட்’ என்றழைக்கப்படும் சஞ்சீவ் ஸ்டாலின்தான் கடந்த செப்டம்பரில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் கோல் அடித்த முதல் இந்திய வீரர். பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட இவர், விங்கராகவும் ஸ்ட்ரைக்கராகவும் ஆடக்கூடியவர். தேவைப்பட்டால் டிஃபென்ஸிலும் தன் திறமையைக் காட்டுவார்.

இந்தியா

பஞ்சாப்பைச் சேர்ந்த டிபெண்டர் ‘உயர்ந்த மனிதன்’ அன்வர் அலி. பின் களத்தில் பட்டையைக் கிளப்பக்கூடியவர். கடந்த ஏப்ரலில்தான் அணியில் சேர்க்கப்பட்டாலும், அணியில் தன் இடத்தை முதலில் உறுதிசெய்தவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் ஐரோப்பாவில் இந்திய அணி விளையாடிய பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

உலக கால்பந்து மேடையில் தங்களது பெயரைப் பொறிக்க இதுவே சரியான தருணம் என்பதை நம் வீரர்கள் அறிவர். அதற்கு தயாரான நிலையில் முழுமையான ஓர் அணியாக வெற்றியை எதிர்நோக்கியிருக்கின்றனர். ஐரோப்பா மற்றும் தெற்கு அமெரிக்க அணிகளைப்போல் மாபெரும் பலமிக்க அணியாக இல்லாமல் இருந்தாலும், நம் வீரர்களுக்கு அனுபவம் குறைவு என்றாலும், உடல் தகுதியிலும் மனநிலையிலும் நம் வீரர்கள் வலுவாக இருக்கின்றனர். அதுவே அவர்கள் இந்தத் தொடரில் சாதிக்க ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

இந்தப் படை இளம் படை. போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் பயம் அறியாத படை. நம் வீரர்கள் திறமையானவர்கள்; தைரியமானவர்கள். வெற்றியைக் குறிக்கோளாகக்கொண்டிருகிறார்கள். இந்திய கால்பந்து ரசிகர்களான நாம்தான் அவர்களை வெற்றிக்காக உற்சாகப்படுத்தவும், தோல்வியின்போது ஆதரிக்கவும் வேண்டும். ஏனெனில், இந்தச் சவால் நம் ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுக்கானது. இவர்கள் பெறப்போகும் வெற்றி, நம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது.

http://www.vikatan.com/news/sports/103728-india-going-to-play-u-17-fifa-world-cup.html

Link to comment
Share on other sites

ஒன் அண்ட் ஒன்லி ரொனால்டினோ... U -17 உலகக் கோப்பை சுவாரஸ்யங்கள்! #BackTheBlue #FIFAU17WC

 
 

இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...

  • 1985-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை `FIFA U-17'  உலகக்கோப்பைத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. நான்கு குரூப்களில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றிருந்தன. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு 24 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள், ஆறு குரூப்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Back The Blue

 
  • இந்த U-17 உலகக் கோப்பைத் தொடரில், அமெரிக்கா மற்றும் பிரேசில் அணிகள் அதிகமுறை பங்கேற்றுள்ளன. இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடர், அந்த அணிகளுக்கு 16-வது முறை.
  • மற்ற கண்டங்களைவிட ஆசியாவில்தான் அதிக முறை  17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடந்துள்ளது. சீனா (1985), ஜப்பான் (1993), தென் கொரியா (2007) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (2013) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, உலகக்கோப்பையை நடத்தும் ஐந்தாவது ஆசிய நாடு, இந்தியா.
  • U-17 உலகக்கோப்பையை நைஜீரியா ஐந்து முறை (1985, 1993, 2007, 2013, 2015) வென்றுள்ளது. மூன்று முறை (1987, 2001, 2009) ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இந்த முறை அந்த அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.
  • பிரேசில் மூன்று முறையும் (1997, 1999, 2003), கானா (1991, 1995) மற்றும் மெக்ஸிகோ (2005, 2011) தலா இரண்டு முறையும் வென்றுள்ளன. சோவியத் யூனியன் (1987),  சவுதி அரேபியா  (1989), பிரான்ஸ்  (2001) மற்றும் சுவிட்சர்லாந்து (2009) அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன. 
  • கானா தொடர்ந்து நான்கு முறை (1991, 1993, 1995, 1997) ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. அதில் இரண்டு முறை (1991, 1995) சாம்பியன்.

Back The Blue

  • இந்தத் தொடரில் பங்கேற்கும் 18-வது ஆசிய நாடு, இந்தியா. #BackTheBlue
  • இந்தியாவில் நடக்கவுள்ள இந்தத் தொடரில், இந்தியா (போட்டியை நடத்தும் நாடு), நைஜர், நியூ கேல்டோனியா ஆகிய மூன்று நாடுகள் முதன்முறையாக `FIFA U-17' உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன.
  • `FIFA U-17' உலகக்கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள், FIFA உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியுள்ளனர்.
  • 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, FIFA உலகக்கோப்பை என இரண்டிலும் விளையாடியவர்களில்  மரியோ கோட்சே, இமான்யுல் பெடிட் மற்றும் ஆண்ட்ரஸ் இனியெஸ்டா ஆகிய மூன்று பேர் மட்டுமே, FIFA உலகக்கோப்பை ஃபைனலில் கோல் அடித்துள்ளனர்.
  • இரு உலகக்கோப்பைகளிலும் பங்கேற்றபோதிலும், உலகக்கோப்பை சாம்பியன் அணியின் கேப்டனாக இருந்தது ஸ்பெயின் வீரர் இகர் கஸியஸ் மட்டுமே. 

Back The Blue

 
  • FIFA நடத்தும் U-17 (1997) மற்றும்  FIFA World Cup Finals (2002) ஆகிய இரண்டு உலகக்கோப்பைகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே வீரர், பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டினோ மட்டுமே. 
  • 2011-ம் ஆண்டு, மெக்ஸிகோ சிட்டியில் உள்ள Azteca ஸ்டேடியத்தில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஃபைனல் நடந்தது. இதை 98,943 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இதுதான் அதிக ரசிகர்கள் நேரில் பார்த்த உலகக்கோப்பைப் போட்டி.
  • 2013-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தொடரில்தான் அதிகபட்ச கோல்கள் அடிக்கப்பட்டடன. 52 போட்டிகளில் 172 கோல்கள். சராசரியாக ஒரு போட்டிக்கு 3.31 கோல்கள்.
  • 1989, 1997,1999, 2007 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டிகளில் சாம்பியன் யார் என்பது, பெனால்டி ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டது.  
  • உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் பிரேசில் (166) முதல் இடத்திலும், நைஜீரியா (149) இரண்டாவது இடத்திலும் உள்ளன. 97 கோல்களுடன் உள்ள ஸ்பெயின், தற்போது நடக்கவுள்ள தொடரில் 100 கோல் இலக்கை அடையலாம். மெக்ஸிகோ 97, ஜெர்மனி 92, கானா 86 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • பிரேசில், நைஜீரியா ஆகிய இரு அணிகள் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளன. 1997-ம் ஆண்டில் எகிப்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, 1999-ம் ஆண்டில் நியூஸிலாந்தில் நடந்த தொடரிலும் சாம்பியன். 2013-ம் ஆண்டில் வென்ற சாம்பியன் பட்டத்தை, 2015-ம் ஆண்டில் தக்கவைத்தது நைஜீரியா.

கால்பந்து

  • இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரை உலகம் முழுவதும் 185 நாடுகளிலிருந்து 20 கோடி பேர் டிவி-யில் பார்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.  SONY TEN 2 மற்றும் SONY TEN 3 சேனல்கள் உலகக்கோப்பையை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளன. 
  • பிரான்ஸ் வீரர் ஃப்ளோரென்ட் சினாமா பாங்காலே, 2001-ம் ஆண்டு உலகக்கோப்பையின் கோல்டன் பூட், கோல்டன் பால்  இரண்டையுமே வென்றார். `ஒரே தொடரில் அந்த இரு விருதுகளையும் வென்ற முதல் வீரர்' என்ற பெருமை பெற்றார். 
  • 2003-ம் ஆண்டில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில், கானா நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஃப்ரெடி அடு முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார். அவரே 2007-ம் ஆண்டில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக் கோல் அடித்தார். இரு வேறு வயதினருக்கான உலகக்கோப்பையில் ஹாட்ரிக் அடித்தவர் இவர் மட்டுமே. 
  • நைஜீரியா வீரர்கள் நான்கு பேர் `கோல்டன் பால்' விருது வாங்கியுள்ளனர். பிலிப் ஒசுண்டோ (1987), சனி இமானுயல் (2009), கெலிச்சி இஹியனாசோ (2013), கெலிச்சி வகாலி (2015) ஆகியோர் கோல்டன் பால் விருது வென்ற நைஜீரியர்கள்.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/103754-facts-about-under-17-football-world-cup.html

Link to comment
Share on other sites

ப்ரோ, வேர்ல்ட் கப் ப்ரோ... அதுவும் இந்தியாவுல... விட்ற முடியுமா! #BackTheBlue #FIFAU17WC

 
 

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். 2014-ம் ஆண்டில் கால்பந்து உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்தது. பிரேசிலில் நடந்ததால், விடுதியில் இரவு 2 மணிக்கெல்லாம் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகளின் ஆட்டம் என்றால் மட்டும் சீனியர்கள் இருப்பார்கள். நான் மட்டும் மெக்ஸிகோ - கேமரூன், அல்ஜீரியா - ரஷ்யா போன்ற போட்டிகளுக்கும் கண்விழித்து உட்கார்ந்திருப்பேன். அந்த அணிகளின் வீரர்களைப் பற்றி பெரிதாகத் தெரியாதுதான். ஆனால், பிரேசிலின் பிரமாண்ட மைதானங்களில் அமர்ந்து 90 நிமிடமும் கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த ரசிகர்களைக் காண்பதற்காகவே எல்லா போட்டிகளையும் பார்ப்பேன். கால்பந்து அரங்கில் கேட்கும் அந்தச் சத்தம், இளையராஜாவின் இசை போல பிரமிப்பூட்டும். நொடிப்பொழுதில் மயக்கிவிடும். அந்த மயக்கம்தான் ஒவ்வொரு நாளும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது.

Back The Blue

 

கேலரியில் அமர்ந்திருப்போர் கண்களில், ஏனோ பிறவிப்பயன் அடைந்துவிட்ட மகிழ்ச்சி தெரியும். சிலரின் தோற்றமும் செயல்களுமே அவர்கள் எந்த நாட்டவர் என நமக்கு hint கொடுக்கும். குட்டி மூக்கு, இளஞ்சிவப்பு நிறம் - சீனாவாகவோ, ஜப்பானாகவோ இருக்கலாம். முகத்தில் `+' சிம்பள் வரைந்திருக்கிறான் - இங்கிலாந்துக்காரன். கோப்பையுடன் ஃபேபியோ கனவாரோ இருக்கும் புகைப்படம் ஏந்தியிருக்கிறான்... நிச்சயம், இவன் இத்தாலியன்.

பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அந்த `சம்பா' நாட்டுக்குள் படையெடுத்திருப்பார்கள் வெறியர்கள். ஆம், தன் நாட்டு அணி ஆடாத போட்டியிலும் கால்பந்து வெறியன் அமர்ந்திருப்பான்; வேற்று நாட்டு வீரனை ஊக்கப்படுத்துவான். கால்பந்தின் மீதான நேசம் அப்படியானது. கால்பந்து வெறியனிடமிருந்து மட்டுமல்ல, அந்த உற்சாகத்தை, கால்பந்தை சாதாரணமாகப் பார்க்கும் ஒரு ரசிகனிடத்திலும் கண்டுவிடலாம். ஏனெனில், கால்பந்து - ஒரு மாயகாந்தம். ஒரு வீரனின் ஒற்றை `மூவ்' நம்மை ஆட்கொண்டுவிடும். கோல்கள்கூடத் தேவையில்லை. அப்படி மயங்கிக் கிடந்ததால்தான் Internal test-கள் பற்றிக் கவலைப்படாமல் தினமும் மேட்ச் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

Back The Blue

துவண்டுபோயிருக்கும் அணியைத் தூக்கி நிறுத்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எழுந்து நின்று பாடுவார்கள். கிரிக்கெட்டுக்கு நேர்எதிர்! எதிரணி வீரர்களை உசுப்பேற்றவும் செய்வார்கள். அதெல்லாம் நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால், போட்டி முடிந்து நடக்கும் விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஆட்டம் முடிந்ததும் தங்கள் ரசிகர்களுக்கு கேலரியின் அருகில் சென்று நன்றி சொல்வது வீரர்களின் மரபு. தங்கள் அணி தோற்றிருந்தாலும் ரசிகர்கள், தங்கள் வீரர்களை அப்போது பாராட்டிக்கொண்டிருப்பார்கள். ரசிகர்களுக்கு மத்தியில் ஜெர்சியைக் கழட்டி வீசுவார் ஒரு வீரர். கடும் போட்டிக்குப் பிறகு அதைக் கைப்பற்றும் அந்த ரசிகனின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஊற்றாகப் பெருகும். தங்கள் அணி தோற்றுப்போனால் கதறி அழுவார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நமக்கே எமோஷன்ஸ் பொங்கும்; நம் கண்களும் கண்ணீர் சிந்தும். இதுபோன்ற காட்சிகளை கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் காண முடியாது. அப்போது முடிவெடுத்தேன், `உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும்'. எந்த அணி ஆடினாலும் சரி... ஒரு போட்டியாவது பார்த்திட வேண்டும். ஆனால், ஃபாரீன் போக வேண்டுமே! 2018-ம் ஆண்டில் ரஷ்யா, 2022-ம் ஆண்டில் கத்தார். பரவாயில்லை. இவற்றில் ஒரு போட்டிக்காவது போக வேண்டும். நாலு காசு சம்பாதித்து எப்படியாவது போக வேண்டும். அந்த கேலரியில் அமர்ந்து கால்பந்தின் அடிநாதத்தைச் சுவைத்திட வேண்டும். 

Back The Blue

சிறிது காலம் கழித்துத்தான் தெரியவந்தது இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை நடக்கப்போகிறது என்று. அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டில் கால்பந்து உலகக்கோப்பை நடக்கப்போகிறது. ஆம், நம் நாட்டில் நடக்கும் ஒரு கால்பந்து போட்டியை, மொத்த உலகமும் ரசிக்கப்போகிறது. நம்ப முடியவில்லைதான். போய்ப் பார்த்துவிடவேண்டும். 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக இருந்தாலும், அது football world cup. FIFA நடத்தும் போட்டி. உச்சகட்ட மகிழ்ச்சி. க்யூரியாசிட்டி கிளம்பியது. ரொனால்டோவோ, மெஸ்ஸியோ வரப்போவதில்லை. ஆனால், நான் இன்று பார்க்கும் வீரன் ஒருநாள் அவர்கள்போல் ஜொலிக்கக்கூடும். `பிரேசிலில் இருந்தது போன்ற உற்சாகம் இந்திய மைதானங்களில் இருக்குமா? இருக்கும். ISL தொடருக்கு உலகின் `Fourth most attended football league' என்ற பெருமையை ஒரே ஆண்டில் பெற்றுத்தந்த ரசிகர்கள் இவர்கள். போட்டி நடக்கும் கொல்கத்தா, கோவா, கவுகாத்தி போன்ற ஊர்களில் கால்பந்து ஏற்கெனவே பிரபலம். பிரேசிலில் இருந்த அந்த ஃபீல் கிடைக்காது என்றாலும், கால்பந்தை ரசித்துவிட முடியும்'. என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

வெளிநாட்டில்தான் நிறைவேறும் என்று நான் நினைத்திருந்த என் வாழ்நாள் ஆசை, நம் மண்ணிலேயே நிறைவேறப்போகிறது. யெஸ்... ஃபுட்பால் வேர்ல்டு கப் பார்க்கப்போகிறேன்! அப்போது, விடுதியில், நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்குக் காரணம் சொல்ல வேண்டும். போர்ச்சுகல் - ரொனால்டோ ஃபேன். அர்ஜென்டினா - மெஸ்ஸி ஃபேன். பிரேசில் - ரொனால்டினோ. ரொனால்டினோவின் ரசிகரான ஒரு சீனியர் இருக்கத்தான் செய்தார். அந்த பிரேசிலியன் மாயக்காரன் ஆயிற்றே!

``நீ எந்த டீமுக்கு சப்போர்ட் தம்பி?"

``இங்கிலாந்து ப்ரோ"...

கண்கள் விரிந்து நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். உலக அரங்கில் இங்கிலாந்தின் செயல்பாடு அப்படி. ``என்ன... ரூனி ஃபேனா?", ``இல்ல ப்ரோ, ஜான் டெர்ரி". ஒரு தடுப்பாட்ட வீரரை, அதுவும் ஓய்வுபெற்ற ஒரு வீரரை `ஃபேவரைட் வீரர்' எனச் சொல்லும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தானே பார்ப்பார்கள். ஆனால், இந்த முறை அப்படி யாரும் கேட்கப்போவதில்லை. ஏனெனில், நான் ஆதரிக்கப்போவது என் தேசத்தை. ஆம்... இந்தியா, கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடப்போகிறது!

கால்பந்து

87 ஆண்டுகால கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முதலாகப் பங்கேற்கிறது நம் இந்திய நாடு. கிரிக்கெட்டை Unofficial national game-ஆகக்கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில், இதுவே பெரிய சாதனை. ISL தொடர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூரில் பிரபலமடைந்துவரும் இந்த உலக விளையாட்டுக்கு, நம் தேசத்தில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இந்த உலகக்கோப்பை. மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் போட்டோக்களை Profile picture-ஆக வைத்துக்கொண்டு, மான்செஸ்டர் யுனைடெட், செல்சீ அணிகளின் ஜெர்சிகளைப் போட்டுக்கொண்டு தெருக்களிலும், பீச்களிலும் விளையாடிக்கொண்டிருக்கும் பல லட்சம் இந்திய சிறுவர்களுக்கும் யூத்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி இது. ப்ரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்களுக்கும், ஐ.டி இளைஞர்களுக்குமான கொண்டாட்டம் இந்தத் தொடர். 

Back The Blue

ஆனால், எப்படியான வெற்றியை இந்தத் தொடர் பெற்றிடப்போகிறது? அது விளையாடுபவர்களிடத்தில் இல்லை... 130 கோடி பிரஜைகளிடத்தில் இருக்கிறது; நாம் எப்படி இந்தத் தொடரை ஆதரிக்கிறோம் என்பதில் இருக்கிறது. பொடியன்கள் விளையாடப்போகிறார்கள். பெக்காம் போல் ஃப்ரீ - கிக்கோ, ஜிடேன் போன்ற மேஜிக்கல் பாஸோ இவர்களால் செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த முடியாது. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் அந்தத் தாகம், கால்பந்தின் மீதான காதல்... நிச்சயம் நம்மை வசீகரிக்கக்கூடும். குழந்தையின் கிறுக்கலை ரசிக்கும் நம்மால், அந்தச் சிறுவர்களின் ஆட்டத்தையும் ரசித்திட முடியும். அவர்கள் அடிக்கும் சாதாரண கோல்களையும் கொண்டாட முடியும். ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு நம் குரலையும், தடுக்கி விழுபவனுக்கு நம் கரங்களையும் கொடுத்திட முடியும். கிரிக்கெட் மைதானங்களில் நீல நிற உடைக்காகக் குரல்கொடுக்கும் நம்மால், அதே நீல உடையோடு ஆடப்போகும் 21 இந்தியச் சிறுவர்களுக்கும் குரல் கொடுக்க முடியும்.

Back The Blue

நான் நேசிக்கும் விளையாட்டை, நான் பிரமித்த ஒரு தொடரில் என் தேசம் விளையாடுவதைப் பார்க்கப்போகிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டாம். கோல் அடிக்கக்கூட வேண்டாம். ஆனால், ஆதரவளிக்கப்போகிறேன். உலக அரங்கில் முதன்முதலாக இந்திய உடை அணிந்து கால்பந்தை உதைக்கும் அந்த வீரர்களுக்குக் குரல் கொடுக்கப்போகிறேன். நாளை இந்தத் தேசத்தில் `கால்பந்து' என்னும் அற்புத விளையாட்டு எழுச்சிபெற வேண்டும் என்ற ஆசையில் குரல் கொடுக்கப்போகிறேன். கால்பந்து மைதானத்தில் இன்னும் கொஞ்ச நாள்களில் ``இந்தியா... இந்தியா..." என்ற குரல் கேட்கும். அந்த நிமிடத்தில், என் வாழ்நாள் ஆசை நிறைவேறிவிடும். ஆனால், எனது குரல் தாண்டிக் கேட்கும் உங்கள் குரல்தான், கால்பந்தை உதைத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் இந்தியக் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும்!

http://www.vikatan.com/news/sports/103911-lets-raise-our-voice-for-world-cup-football-in-india.html

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு சவாலான அணிகள் எவை? #FIFAU17WC #BackTheBlue

 
 

குரூப் - ஏ- இந்தியா

விரைவில் ஆரம்பமாக இருக்கிறது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர் கால்பந்து உலகக்கோப்பையின் 17 வயதுக்குட்பட்டோருக்கான வெர்ஷன். இந்தத் தொடர் நடைபெறப்போவது நம் நாட்டில். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இந்தத் தொடரில் கலந்துகொள்ளப்போகும் அணிகளில் இந்திய அணியும் ஒன்று. மொத்தம் 24 நாடுகள் இந்தத் தொடரில் கலந்துகொள்ளப்போகின்றன. அவற்றுள் `A' மற்றும் `B' பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளைப் பற்றிய குட்டி அலசல்...

 

உலகக்கோப்பை

GROPU - A

இந்தியா

தொடரை நடத்தும் நாடு என்ற முறையில் முதல்முறையாக இந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் இந்திய அணி கலந்துகொள்கிறது. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பைத் தொடரை இருமுறை வென்றுள்ள இந்திய அணி, 17 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. இந்தத் தொடரில் முத்திரை பதித்து கால்பந்து வரலாற்றில் தன் பெயர் பதிக்கக் காத்திருக்கிறது இந்திய அணி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் - போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த லுயிஸ் நார்டன் டி மடோஸ். இந்திய அணியின் கேப்டனாக மணிப்பூரைச் சேர்ந்த அமர்ஜித் சிங் கியாம் செயல்படப்போகிறார். ஸ்ட்ரைக்கர் அனிகேட் ஜாதவ், அட்டாக்கிங் மிட் ஃபீல்டர் கோமல் தடால் மற்றும் டெட் பால் ஸ்பெஷலிஸ்ட் சஞ்சீவ் ஸ்டாலின் ஆகியோர் இந்தியாவின் கீ பிளேயர்கள்.

அமெரிக்கா

ஜான் ஹேக்வொர்த் என்பவர்தான் அமெரிக்காவின் பயிற்சியாளர். வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பின் 2017 அண்டர் 17  சாம்பியன்ஷிப்  தொடரில் ஐந்து கோல்கள் அடித்துள்ள ஜோஷ் சார்ஜெண்ட், அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம். அண்டர் 17 உலகக்கோப்பையில் 15 முறை பங்கேற்றபோதிலும், அவர்களால் கோப்பையை வெல்ல இயலவில்லை. அண்டர் 17 அமெரிக்க அணிக்காக, 25 போட்டிகளில் 24 கோல்கள் அடித்து அசத்தியுள்ள ஆயோ அகினோலா ஜோஷ் சார்ஜென்டோடு இணைந்து அசத்தினால் முதல்முறையாகக் கோப்பையை முத்தமிடலாம்!

கொலம்பியா

2009-ம் ஆண்டுக்குப் பிறகு கொலம்பிய அணி இப்போதுதான் இந்தத் தொடரில் பங்கேற்கிறது. ஸ்ட்ரைக்கர் ஜமிண்டன் கேம்பாஸின் தலைமையில் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்கள் அந்த அணியின் இளம் புயல்கள். க்ரியேட்டிவ் மிட் ஃபீல்டரான ஆண்ட்ரஸ் மொஸ்க்வேராவும் புயல் வேக ஸ்டீவன் வெகாவும் மற்ற அணிகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குவர். இதுவரை ஐந்து முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள கொலம்பியா, கோப்பையை வென்றதில்லை. தன் வாழ்க்கையில் தொழில்முறை கால்பந்து விளையாடிய அனுபவம் இல்லாத ஆர்லாண்டோ ரெஸ்ட்ரெப்போதான் கொலம்பியா அணியின் பயிற்சியாளர்.

இந்தியா

கானா

கானா அணி மிகவும் இளம் வீரர்கள் நிறைந்த அணி. இந்த அணியின் பயிற்சியாளர் - பா க்வசி ஃபாபின். தன் நாட்டவரையே பயிற்சியாளராக நியமித்துள்ளது கானா. எரிக் அயியா அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கானா அணி 1991-ம் ஆண்டிலிருந்து 1997 வரை தொடர்ச்சியாக நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இரண்டு முறை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின்  ‘கப் ஆஃப் நேஷன்ஸ்' தொடரையும் வென்று அசத்தியுள்ளது கானா.

GROUP - B

இந்தியா

பாராகுவே

முன்னாள் பாராகுவே மிட் ஃபீல்டரான கஸ்டவோ மொரினிகொதான் பாராகுவே அணியின் பயிற்சியாளர். பிரேசில் மற்றும் சிலி அணிகளுக்கு எதிராக கோல் அடித்து அசத்திய மார்டின் சாஞ்செஸ், ராபெர்டோ ஃபெர்னாண்டஸ் மற்றும் ஃபெர்னாண்டோ ரோமெரோ ஆகியோர் பாராகுவே அணியின் கீ பிளேயர்கள். இதுவரை மூன்று முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள பாராகுவே அணி, ஒருமுறை மட்டும் கால் இறுதிக்குத் தகுதிபெற்றது.

 மாலி

ஆப்பிரிக்கன் `கப் ஆஃப் நேஷன்ஸ்' தொடரைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாகக் கைப்பற்றிய தெம்போடு இந்தியாவில் இறங்கியுள்ளனர் மாலி வீரர்கள்.  இதுவரை நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள மாலி, 2015-ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இறுதிப்போட்டியில் நைஜீரியாவிடம் 2 - 0 எனத் தோற்க, பதக்க வாய்ப்பு பறிபோனது. ஜோனஸ் கொகூ கொம்லாவின் பயிற்சியின்கீழ் இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடுவது எனத் தீவிரமாகப் பயிற்சி எடுத்துவருகின்றனர் மாலி வீரர்கள்.

நியூசிலாந்து

ஏழு முறை அண்டர் 17 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணி,  ஒரு முறைகூட இரண்டாம் சுற்றைக் கடந்ததில்லை. அந்தக் குறையைப் போக்க, நியூசிலாந்து சீனியர் அணியின் முன்னாள் டிஃபண்டர் டேனி ஹே,17 வயதுக்குட்பட்ட நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் கேப்டன் கிளாய்டன் லீவிஸ். ஒசெனியா கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்பட்ட அண்டர் 17 சாம்பியன்ஷிப் தொடரில் ஐந்து போட்டிகளில் ஏழு கோல்கள் அடித்த சார்லஸ் ஸ்ப்ராக் கவனிக்கப்படவேண்டிய வீரர். 

உலகக்கோப்பை

துருக்கி

 

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மெஹ்மெட் ஹசியோக்லுவின் பயிற்சியின்கீழ் இந்தத் தொடரில் கலந்துகொள்கிறது துருக்கி அணி. இவர் 2014- ம் ஆண்டிலிருந்தே துருக்கி அண்டர் 17 அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். ஸ்ட்ரைக்கர் மாலிக் கராஹ்மெத்தான் துருக்கியின் நம்பிக்கை. அண்டர் 17 உலகக்கோப்பையில் மூன்றாவது முறையாக பங்கேற்கவுள்ள துருக்கி அணி, 2005-ம் ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்தது. அதுவே அந்த அணியின் சிறந்த செயல்பாடு.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/103935-a-look-at-teams-participating-in-under-17-world-cup-part1.html

Link to comment
Share on other sites

அமர்ஜித் சிங் - இந்திய அணியை வழிநடத்தும் மீன் வியாபாரியின் மகன்! #FIFAU17WC #BackTheBlue

 

FIFAU17WC

மணிப்பூரில் குளிரைப் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார் அந்தப் பெண். தௌபால் கிராமத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் இம்பாலுக்குச் செல்ல வேண்டும். தினமும் 40 ரூபாய் மிச்சம் செய்ய, அவரின் கணவர் சைக்கிளிலேயே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுகிறார். பேருந்தைப் பிடித்து சில மணி நேரத்தில் இம்பால் மார்க்கெட்டை அடைகிறார் அந்தப் பெண். மீன் வாங்கிச் சென்று அருகில் இருக்கும் வீதிகளில் அதை விற்க வேண்டும். மீன்களை நிரப்ப, நல்ல பைகள் இல்லை. தான் வைத்திருக்கும் சுமாரான பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிக்கொள்கிறார். அங்கே தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டுச் சொல்கிறார், “என் புள்ள, இந்திய கால்பந்து டீமோட கேப்டன்." அவர்தான் 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியக் கால்பந்து அணி கேப்டன் அமர்ஜித் சிங்கின் தாய். ஆம், உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியை முதன்முதலாக வழிநடத்தப்போகும் அந்தச் சரித்திர நாயகன் ஒரு விவசாயிக்கும் மீன் வியாபாரிக்கும் பிறந்தவர்!

 

அமர்ஜித்

முதல்முறையாக இந்தியாவில் நடக்கும், இந்தியா பங்கேற்கும் இந்த உலகக்கோப்பைக்காக, இந்திய அணி தீவிரமாகத் தயாரானது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சோதனை செய்யப்பட்டு, இறுதியில் 21 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் யாரை அணியின் தலைவராக நியமிப்பது? பயிற்சியாளர் நார்டனே அதைத் தேர்வுசெய்திருக்கலாம். ஆனால், அந்தப் பொறுப்பை தன் வீரர்களிடமே விட்டார். ஒவ்வொருவரும் ஓர் ஆளுக்கு ஓட்டு போட வேண்டும். தங்களுக்கேகூட ஓட்டு போட்டுக்கொள்ளலாம். 21 வீரர்களும் ஓட்டு போட்டு முடித்ததும், அதை எண்ணிப்பார்த்துவிட்டு அறிவிக்கிறார் நார்டன். “இந்திய உலகக்கோப்பை அணியின் முதல் கேப்டன்... அமர்ஜித் சிங் க்யாம்." இந்தியக் கால்பந்து எதிர்காலத்தின் முதல் பக்கத்தில், முதல் வரியில் அவனது பெயர் எழுதப்படுகிறது.

“நம்ப முடியவில்லை. நானே எனக்கு ஓட்டுப் போடவில்லை" என்று ஆச்சர்யப்படும் அம்ர்ஜித், அணியின் வயது குறைந்த வீரர்களில் ஒருவர். அணியில் இருக்கும் 21 வீரர்களில் அவருக்குப் பிறகு பிறந்தது கோல்கீப்பர் பிரபுஷ்கன் கில் மட்டுமே.

அமர்ஜித்துக்கு ஆதரவு குவிந்தது ஏன்?

அவரது ஆட்டமும் குணமும் அப்படி. களத்தில் அணியை ஒருங்கிணைப்பதிலும் ஆட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்துவதிலும் அவர் கில்லி. இனியஸ்டாவின் ரசிகன் ஆயிற்றே. அவரைப்போலவே இவரும் மிட்ஃபீல்டர். அவரைப் பார்த்து தன்னை தினம்தினம் வளர்த்துக்கொள்பவர். பார்சிலோனா அணியின் பாஸிங் கேமுக்கு அடிமை.

கால்பந்துக்காக ஒன்பது வயதிலேயே குடும்பத்தினரைவிட்டு சண்டிகர் சென்றார் அமர்ஜித். அங்கு தன் கால்பந்து திறனை வளர்த்துக்கொண்டார். ஒரு சமயம், CHFA அணிக்கும் 16 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குமான போட்டியில் ஹாட்ரிக் அடித்து, இந்திய அணியை 3 - 0 என்ற கோல்கணக்கில் வெற்றிகொண்டார். அவர்மீது அப்போதே பார்வை செலுத்தத் தொடங்கிவிட்டனர் இந்திய அணியின் தேர்வாளர்கள். உடனடியாக, கோவாவில் உள்ள AIFF-இன் அகாடமிக்குத் தேர்வானார். இன்று கேப்டனாக உயர்ந்திருக்கும் அமர்ஜித், அணியில் தேர்வுசெய்யப்பட்டது ரிசர்வ் பிளேயராகத்தான். அவரின் அதிரடி ஆட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு வியந்த முன்னாள் பயிற்சியாளர் நிகோலாய் ஆடம் இவரை ப்ரமோட் செய்ய, அதன் பிறகு அமர்ஜித்தின் பெர்ஃபாமன்ஸில் முன்னேற்றம் மட்டும்தான். 

CHFA அணியின் பயிற்சியாளர் ஹர்ஜிந்தர் சிங்தான், அமர்ஜித்தின் பயிற்சியாளர். அவரது முன்னேற்றங்களை உடனிருந்து கண்டவர். “அவர் மாபெரும் திறமைசாலி. எப்போதும் கூலாக இருப்பார். சண்டிகரில் அவருக்குத் தேசிய அணிக்கான செலெக்‌ஷன் இருந்தது. அப்போது என்னிடம் வந்து, `சண்டிகரில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்களெல்லாம் இருக்கின்றன?' என்று கேட்டார். செலெக்‌ஷன் பற்றிய பயம் அவரிடம் இல்லை. சில சமயங்களில் தேர்வை மறந்து கால்பந்தில் மூழ்கிவிடுவார்" என்று அவர் ஆற்றல் கண்டு வியக்கிறார் ஹர்ஜிந்தர். 

அமர்ஜித்

“நார்டனின் பயிற்சியின் கீழ் அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிறைய கற்றுக்கொண்டோம். வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றது, அணியினரின் மனவலிமையைக் கூட்டியுள்ளது. இந்தத் தொடரில் முழுத் திறனையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். எங்களால் நன்றாக விளையாட முடியும். நம் அணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் புதிய அணியாக இருந்தாலும், எந்தப் பலமான அணியைக் கண்டும் எங்களுக்குப் பயமில்லை" என்று நம்பிக்கையுடன் கர்ஜிக்கிறார் அமர்ஜித்.

இவரின் இந்த வளர்சிக்குக் காரணம், தன் பால்யத்திலிருந்தே இந்த விளையாட்டின் மீதுகொண்டிருந்த காதல். சந்திரமணி சிங் - அசாங்பி தேவி தம்பதியின் மூன்றாவது மற்றும் கடைசிக் குழந்தை அமர்ஜித். அவருக்கு ஒரு சகோதரன், ஒரு சகோதரி. தன் மாமா இவருக்குக் கால்பந்தைக் கற்றுக்கொடுக்க, அதையே தன் கனவாக்கிக்கொண்டார். அவர் குடும்பத்தின் ஏழ்மை, ஒருநாளும் அவர் கனவுகளைப் பாதிக்கவில்லை. ஒரு நாளைக்கு 250 - 300 ரூபாய்க்கு மீன் விற்று குடும்பத்தை நடத்திவந்தார் அசாங்பி தேவி. அமர்ஜித்தின் அப்பா விவசாயி. கொஞ்சம் நிலம் இருக்கிறது. அவ்வப்போது பயிர் செய்வார்கள். பயிர் செய்யாத நேரத்தில் அவர் தச்சு வேலைக்குச் சென்றுவிடுவார். குறைந்த வருமானம். ஐந்து பேர். இருப்பினும், அந்தக் குடும்பம் நிம்மதியாக இயங்கியது.

அமர்ஜித்

இந்திய உலகக்கோப்பை அணிக்கான தேர்வு. மீண்டும் சண்டிகர் செல்ல வேண்டும். செலவாகும். தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 6,000 ரூபாயை யோசிக்காமல் எடுத்து நீட்டுகிறார் அசாங்பி. 6,000 ரூபாய் இன்று சிறிய தொகையாகத் தெரியலாம். இந்தியா புதியதாக இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும் பழையதுதானே! அவர்களுக்கு அந்தத் தொகை பெரியதுதான். அந்தப் பணம்தான், அவரை சண்டிகர் செல்லவைத்தது; இந்திய அணிக்குத் தேர்வுசெய்தது; கேப்டன் ஆக்கியது; ஐரோப்பிய கண்டம் வரை அவர் அழைத்துச் சென்றது.

பயிற்சிப் போட்டிக்கு ஸ்பெயின் சென்றது அமர்ஜித்துக்கு மாபெரும் சந்தோஷம். தான் நேசிக்கும் பார்சிலோனா அணியின் பேருந்துக்கு முன்னாள் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அவர் ஹேப்பி! அம்மாவுக்கு? பரிசுகள் வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. இருக்கும் குறைந்த பணத்தில் அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? அம்மாவிடம் நல்ல பை இல்லை. அதை வாங்குவோம். மீன் விற்கவே பிளாஸ்டிக் பைகள்தானே எடுத்துச் செல்கிறார். தன் அம்மாவுக்கு ஒரு பை வாங்கிச் சென்றார். தான் இந்திய அணியை டெல்லி நேரு மைதானத்தில் வழிநடுத்துவதைப் பார்க்க வர வேண்டும் என்று அம்மாவுக்குச் செல்லக் கட்டளை. தன் மகன் சரித்திரம் படைக்கப்போகும் அந்தக் காட்சியைக் கண்டு பூரிக்கக் கிளம்பிவிட்டார் அந்தத் தாய், அவர் வாங்கிக் கொடுத்த பையை எடுத்துக்கொண்டு. அந்தத் தாய் சுமந்து செல்லும் பையை நிரப்பியிருப்பது, பணமோ, பண்டமோ அல்ல... தன் மகன் சேர்த்துக் கொடுத்த பெருமை!

 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..!

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/103941-indian-under-17-football-team-captain-amarjith-singh-is-son-of-a-fish-seller.html

Link to comment
Share on other sites

இந்த பாக்ஸையும் டிக் செய்யுமா ஜெர்மனி? #FIFAU17WC #BackTheBlue

 
 

17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளில் GROUP - C, GROUP - D பிரிவுகளில் இடம்பெற்றுள்ள அணிகளைப் பற்றி ஒரு பார்வை...

அண்டர் 17

 

GROUP - C

ஜெர்மனி

ஃபிஃபா உலகக்கோப்பை, கான்ஃபெடரேஷன் கோப்பை, அண்டர்-21 உலகக்கோப்பை அனைத்திலும் நடப்பு சாம்பியனாக வலம்வரும் ஜெர்மனி அணி, இதுவரை வென்றிடாத அண்டர்-17 போட்டியிலும் வெல்ல முனைப்புடன் வந்துள்ளது. ஜெர்மனியின் பயிற்சியாளரான கிறிஸ்டியன் வுக், அவரது காலத்தில் ஜெர்மனி அண்டர் 21 அணியில் பலமுறை விளையாடியவர். ‘ஜெர்மனி அண்டர் 16 அணி'க்கும் பயிற்சியாளராக இருந்தவர். ஒரு வீரராக இருந்ததைவிட பயிற்சியாளர் பதவியில் பெயரெடுத்தவர். ஜெர்மனி அண்டர் 17 அணிக்காக இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஜேன் ஃபியத் அர்ப், துடிப்பான டிஃபெண்டரான ஃப்ளோரியன் பாக் ஆகியோர் ஜெர்மனியின் நம்பிக்கை நட்சத்திரங்கள். 

கால்பந்து

கோஸ்டா ரிகா

முன்னாள் அர்ஜென்டினா மிட்ஃபீல்ட்ரான மார்செலோ ஹெரேராவிடமிருந்த கோஸ்டா ரிகா அணியின் பயிற்சியாளர் பதவியைப் பறித்துள்ளார்  பிரியென்ஸே கமாக்கோ. ஸ்ட்ரைக்கர்களான ரொடால்ஃபோ அல்ஃபாரோ மற்றும் ஆண்ட்ரஸ் கோமெஸ் மற்றும் ஜூலென் கார்டெரோ ஆகியோர்தான் கோஸ்டா ரிகா அணியின் கீ பிளேயர்கள். இதுவரை ஒன்பது முறை அண்டர் 17 உலகக்கோப்பையில் கலந்துகொண்டுள்ள கோஸ்டா ரிகா அணி, நான்கு முறை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

கினியா:

1985-ம் ஆண்டு முதல் அண்டர் 17 போட்டிகளில் பங்கெடுத்துவருகிறது கினியா. அந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் பிளேமேக்கர்  சொலைமான் கமாராதான் பயிற்சியாளர். கினியாவின் கீ பிளேயர் ட்ஜிப்ரில் ஃபஞ்சே டூர். இவர் `ஆப்பிரிகன் கப் ஆஃப் நேஷன்ஸ்' தொடரில் ஆறு கோல்கள் அடித்து, தங்க ஷூ விருதைத் தட்டிச்சென்றவர். இதுவரை நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்ட கினியா அணி, ஒரு முறை நான்காவது இடத்தைப் பெற்றது.

உலகக்கோப்பை

ஈரான்

ஏற்கெனவே `ஈரான் அண்டர் 20' அணிக்குப் பயிற்சியாளராக இருந்த அப்பாஸ் ஷமான்யனின் வழிநடத்தலில் களமிறங்குகிறது ஈரான். மிட்ஃபீல்டரான முகம்மது ஷரிஃபி, அணிக்குத் தலைமை. இதுவரை மூன்று முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்ட ஈரான் அணி, இரண்டாவது சுற்றைத் தாண்டியதில்லை. ஆனால், அண்டர் 16 ஆசியக்கோப்பையில் ஒரு முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

GROUP - D

பிரேசில்

20 வருடங்கள் பயிற்சியாளர் அனுபவம்கொண்ட பாஹியன் கார்லோஸ்தான் பிரேசிலின் பயிற்சியாளர். டிஃபெண்டரான லூகஸ் ஒலிவெய்ரா, மிட் ஃபீல்டரான கஸ்டவோ ஹென்ரிக்கே மற்றும் ஸ்டிரைக்கரான லின்கொல்ன் ஆகியோர் பிரேசிலின் `ட்ரிப்பிள் த்ரெட்'. அதிரடி ஸ்ட்ரைக்கர் ரியல் மாட்ரிட்டால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வினிஷியஸ் ஜூனியர் தொடரிலிருந்து விலகியது பேரிழப்புதான் என்றாலும், அதைச் சரிகட்டும் அளவுக்குத் திறமையானது பிரேசில் அணி. இதுவரை 15 முறை அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் கலந்துகொண்டுள்ள பிரேசில் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

பிரேசில்

ஸ்பெயின்

அண்டர் 17 உலகக்கோப்பையில் மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்று ஏமாற்றமடைந்த ஸ்பெயின் அணி, இந்தமுறை எப்படியேனும் கோப்பையை வென்றுவிட வேண்டுமென்ற நோக்கில் தீவிரமாகப் பயிற்சி செய்துவருகிறது. ஸ்பெயினின் ஓய்வுபெற்ற டிஃபெண்டரான சாண்டியாகோ டெனியா பயிற்சியாளர். இவரின் பயிற்சியின்கீழ்தான் ஸ்பெயின் அண்டர் 17 அணி டிக்கி-டாக்கா உத்தியில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. ஸ்பெயின் அண்டர் 17 அணிக்காக 19 கோல்கள் அடித்துள்ள, பார்சிலோனா யூத் அகாடமியின் வளர்ப்பான அபெல் ரூயிஸ் இந்தத் தொடரில் ரவுண்டுகட்டி அடிக்கலாம்.

நைஜெர்

நைஜெர் அணி, இப்போதுதான் முதல்முறையாக அண்டர் 17 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கிறது. ‘ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ்' தொடரில் நான்காவது இடம் பிடித்ததன் மூலம் இந்த வாய்ப்பை, இசமைலா டியெமகோ பயிற்சளித்துவரும் நைஜெர் அணி பெற்றுள்ளது. ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளிடம் பெரிய அடி வாங்கக்கூடும்.

ஸ்பெயின்

வட கொரியா

 

அனுபவமிக்க முன்னாள் கொரிய கால்பந்து வீரர் யுன் ஜோங் சூ பயிற்சியின் கீழ் பங்கேற்கும் வட கொரிய அணிக்கு, கிம் போம் ஹ்யோக்தான் கேப்டன். அட்டாக்கிங் மிட்ஃபீல்டரும் கேப்டனுமான கிம் போக் ஹ்யோக் மற்றும் தகுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த கைய் டாம் ஆகியோர் வட கொரியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.  நான்கு முறை அண்டர் 17 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள வட கொரியா அணி, ஒரு முறை மட்டுமே கால் இறுதியை எட்டியுள்ளது. இந்த அணி இரண்டு முறை ஆசியக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/104001-group-c-and-d-of-fifa-under-17-world-cup.html

Link to comment
Share on other sites

உலக கோப்பை துளிகள்

 

 
05CHPMUMASCOT

மஸ்கட்   -  PTI

1985-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 16 அணிகள் மட்டுமே உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றன. 2007-ம் ஆண்டு முதல் இது 24 அணிகளாக அதிகரிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரேசில் ஆகிய அணிகள் யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக 16 முறை பங்கேற்றுள்ளன.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆசியாவில்தான் அதிகபட்சமாக நடத்தப்பட்டுள்ளன. இந்தியா, இப்போட்டியை நடத்தும் 5-வது ஆசிய நாடாகும்.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நைஜீரியா அணி அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. 3 முறை அந்த அணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த உலகக் கோப்பைக்கு நைஜீரியா தகுதிபெறவில்லை.

பிரேசில் அணி 3 முறையும், கானா, மெக்சிகோ ஆகிய அணிகள் இரு முறையும் யு17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்றுள்ளன.

இந்திய அணி, யு-17 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 18-வது ஆசிய அணியாகும்.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நைஜர், நியூ காலிடோனியா ஆகிய அணிகள் முதல் முறையாக பங்கேற்கின்றன.

யு-17 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய 12 வீரர்கள் தங்கள் அணிகளுக்காக பிபா உலகக் கோப்பை போட்டியிலும் ஆடியுள்ளனர்.

உலகக் கோப்பை போட்டி (2002) மற்றும் யு-17 உலகக் கோப்பை (1997) ஆகிய இரண்டையும் வென்ற அணிகளில் இடம்பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை பிரேசிலின் ரொனால்டினோ பெற்றுள்ளார்.

2011-ம் ஆண்டு மெக்சிகோ மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டிதான் அதிக பார்வையாளர்கள் திரண்ட யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியாகும். மெக்சிகோ சிட்டியில் நடந்த இப்போட்டியை 98,943 ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.

2013-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்தான் அதிக அளவில் கோல்கள் அடிக்கப்பட்டன. இப்போட்டியில் 52 ஆட்டங்களில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டன.

இதுவரை நடந்த யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அதிகபட்சமாக 166 கோல்களையும், நைஜீரியா 149 கோல்களையும் அடித்துள்ளன.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 20 கோடி ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக தங்கக் காலணி மற்றும் தங்கப் பந்தை வென்ற வீரர் பிரான்சின் புளோரண்ட் சினாமா பொங்கோல் (2001-ம் ஆண்டு).

யு-17 உலகக் கோப்பை போட்டியில் நைஜீரிய வீரர்கள் அதிகபட்சமாக 4 முறை தங்கப் பந்து விருதை வென்றுள்ளனர். - பிடிஐ

 

 

 

உதைத்தெழு இந்தியா.. காத்திருக்கிறது உலகம்

 

 
05CHPMUAMARJITSINGH

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான அமர்ஜித் சிங், மோமல் தாடல், சஞ்ஜீவ் ஸ்டாலின்.   -  PTI

87 வருட பிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்தியா யு 17 தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இந்த உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. ஆனால் மற்ற 23 அணிகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தே இந்த மெகா தொடருக்குள் நுழைந்துள்ளன. நடப்பு சாம்பியனான நைஜீரியா இந்த தொடருக்கு தகுதி பெறாதது துரதிருஷ்டவசம்தான். இந்தியாவை போன்று, நைஜர், நியூ கேலிடோனியா ஆகிய அணிகளும் முதன்முறையாக அறிமுகமாகின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும்போது, உலக அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2-வது நாடாக விளங்கும் நாம், கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க அணிகளில் அதி சிறந்த வீரர்களின் விசிறிகளாகவும், அவர்களை ஆதரிப்பவர்களாகவுமே இருந்து வருகிறோம். ஆனால் இப்போது முதன்முறையாக இந்திய இளம் அணியை நாம் ஆதரிக்க உள்ளோம். அதிலும் நமது நாட்டில் நடைபெறும் ஆட்டங்களில் களத்தில் நேரடியாக அவர்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.

இந்தத் தொடரில் கால்பந்தையே உயிர் மூச்சாகவும், பாரம்பரிய விளையாட்டாகவும் கொண்டுள்ள பல்வேறு அணிகளுக்கு எதிராக இந்திய இளம் வீரர்கள் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பது ஆட்டம் தொடங்கிய பிறகே தெரியவரும்.

உலகக் கோப்பை திருவிழாவில் கலந்து கொள்ளும் 21 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் ஏழ்மை பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் 8 பேர் மணிப்பூரை மாநிலத்தை சேர்ந்தவர்கள். 21 பேர் கொண்ட இந்திய அணியின் தேர்வு அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. இதற்காக கடந்த சில வருடங்களாகவே இந்திய கால்பந்து சம்மேளனம் கூடுதலாகவே மெனக்கெட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து இந்திய அணி வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடினமான சூழ்நிலைகளில் ஆட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்ற நுணுக்கங்கள் குறித்து விஷேச பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்டின் மடோஸின் பயிற்சியின் கீழ் இளம் இந்திய அணி பட்டைத் தீட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் சிலி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதற்கட்டமாக எப்படியும் கால் இறுதிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை விதைத்தது. அணியில் வெற்றியை தேடிக் கொடுப்பவர்களாக நடுகள வீரர் மோமல் தாடல், ஜேக்சன் சிங், அமர்ஜித் சிங் மற்றும் தடுப்பாட்ட வீரர்களான சஞ்ஜீவ் ஸ்டாலின், அன்வர் அலி ஆகியோர் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கால்பந்தாட்ட டெக்னிக்கல் டைரக்டர் சேவியோ மெடிரா கூறும்போது, “கால்பந்து போட்டிகளில் நுட்ப ரீதியாக நமது வீரர்கள் பின் தங்கியிருந்தாலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நமது வீரர்கள் தயாராக உள்ளனர்” என்றார். அதேவேளையில் அகில இந்திய கால்பந்தாட்ட டெக்னிக்கல் துணைத் தலைவர் ஹென்ரி மெனிசெஸ் கூறும்போது, “17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அடுத்த தலைமுறைக்கான அணி, மக்களின் ஆதரவு மற்றும் சிறிது அதிர்ஷ்டம் இருப்பின் இந்திய கால்பந்து வரலாற்றில் ஆச்சர்யங்கள் நிகழக்கூடும்” என்றார்.

அதீத பலம், அனுபவம் ஆகியவற்றை இந்திய அணி கொண்டிருக்காவிட்டாலும் 90 நிமிடங்கள் களத்தில் போராடும் குணத்தை மூலதனமாக கொண்டு களமிறங்குகிறது. 1950-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற 4-வது உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு பிபா அழைப்பு விடுத்தது. போட்டிக்கான டிராவில் இந்தியா இடம் பெற்ற போதும், போக்குவரத்து செலவு காரணத்தை காட்டி உலகப் புகழ் வாய்ந்த இந்த தொடரில் பங்கேற்க இந்திய கால்பந்து சங்கம் மறுத்தது. ஒரு கட்டத்தில் போக்குவரத்து செலவில் பெரும் தொகையை ஏற்றுக்கொள்ள பிபா முன்வந்தது.

ஆனால் பயிற்சிக்கான போதிய நேரம், அணித் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்திலும் இந்திய அணி, பிபா உலகக் கோப்பையில் இருந்து பின் வாங்கியது. இதற்கு முன்னதாக நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டில் இந்திய கால் பந்து அணி, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் ஷூ அணியால் வெறும் கால்களுடன் விளையாடினார்கள்.

இதன் பின்னர் வெறும் கால்களுடன் விளையாடக்கூடாது என விதிகள் கொண்டுவரப்பட்டது. 1950-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா புறக்கணிக்க இதுவும் ஒரு காரணம் என கூறப்பட்டது. 1960 வரை இந்திய கால்பந்து அணி தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்தியா 4-வது இடத்தை பிடித்திருந்தது. கால்பந்து வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச உச்சம் என்பது 1951 மற்றும் 1962-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது தான்.

தற்போது நடைபெற உள்ளது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர்தான் என்றாலும் பிபா நடத்தும் தொடரில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கிறது இந்தியா. இது நம் வீரர்களின் எதிர்காலம் மட்டும் அல்ல. இந்திய கால்பந்து மற்றும் இந்திய விளையாட்டுத் துறை ஆகியவற்றின் எதிர்கால நலனும் அடங்கி உள்ளது. ரொனால்டினோ, மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட பெரும் நட்சத்திர வீரர்களும் தங்களது கனவுகளை யு 17 உலகக் கோப்பை தொடரின் வாயிலாகவே விரிவடையச் செய்தனர். இந்திய வீரர்கள் களத்தில் பந்துகளை வெற்றிக்கான வேட்கையுடன் உதைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

 

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: தீரஜ் சிங், பிரப்சுகன் கில், சன்னி தாலிவால்

தடுப்பாட்டம்: போரிஸ் சிங், ஜிதேந்திர சிங், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி அண்டனே, நமித் தேஷ்பாண்டே

நடுக்களம்: சுரேஷ் சிங், நிந்தோன்கன்பா மீதேய், அமர்ஜித் சிங் கியாம் (கேப்டன்), அபிஜித் சர்கார், கோமல் தாடல், லலேங்மாவியா, ஜேக்சன் சிங், நோங்டம்பா நயோரம், ராகுல் கன்னோலி பிரவீன், ஷாஜகான்

முன்களம்: ரஹிம் அலி, அங்கித் ஜாதவ்

ஸ்மார்ட்போனுக்கு கட்டுப்பாடு விதித்த சிலி அணி

05CHPMUMASCOT

மஸ்கட்   -  PTI

1993-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த சிலி அணி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களம் இறங்குகிறது. வரும் 8-ம் தேதி சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள தங்கள் முதல் போட்டியில், இங்கிலாந்தை எதிர்த்து சிலி ஆடவுள்ளது. இந்நிலையில் போட்டிகளின்போது கவனம் சிதறாமல் இருப்பதற்காக, சிலி வீரர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. “இந்த கட்டுப்பாடு விஷயத்தில் அணியின் பயிற்சியாளர் மிகவும் உறுதியாக இருக்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் வீரர்களின் கவனம் சிதறி பயிற்சி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று பயிற்சியாளர் நம்புகிறார்” என்று சிலி அணியின் நிர்வாகிகளில் ஒருவர் நிருபர்களிடம் கூறினார்.

உலகக் கோப்பைக்கு வீரர்களை தயார்படுத்த கால்பந்து பயிற்சியுடன் சேர்த்து ஹட யோகா பயிற்சி அளிப்பது, ‘சக் தே இந்தியா’ போன்ற விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் படங்களைப் பார்க்க வைப்பது போன்ற விஷயங்களையும் சிலி அணியின் பயிற்சியாளர் ஹெர்னான் கபுடோ செய்து வருகிறார். -பிடிஐ

 

 

யு-17 உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் அமெரிக்காவை அசத்துமா இந்திய அணி?

 

 
indian%20team

பயிற்சியில் இந்திய யு-17 கால்பந்து அணி

ஒரு முறை இந்திய கால்பந்து ஆற்றலை நோக்கி ஃபிபா கூறும்போது ‘ஸ்லீப்பிங் ஜெயண்ட்’ என்றது. ஆனால் இப்போதுதான் ஃபிபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி விளையாடுவதன் மூலம் விழித்துக் கொண்டுள்ளது.

உலகக்கோப்பையை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியா தானாகவே இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றது. பிரிவு ஏ-யில் இந்தியா, யு.எஸ்., கொலம்பியா, கானா ஆகிய அணிகள் உள்ளன, இதில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய அணி யு.எஸ்.ஏ அணியை எதிர்கொள்கிறது.

பெரும்பாலும் ஏழ்மைப் பின்னணியிலிருந்து வந்துள்ள வீரர்கள் என்பதால் அவர்களிடம் குன்றாத உத்வேகம் இருந்து வருகிறது, இதனால் தயாரிப்புகளும் சிறந்த முறையில் நடைபெற்றது. இருப்பினும் இந்திய அணி ‘அண்டர் டாக்’ என்ற அடையாளத்தின் கீழ்தான் களமிறங்குகிறது, இது ஒருவிதத்தில் அணியின் மீதான எதிர்பார்ப்புச் சுமையைக் குறைக்கும்.

நாளை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வீரருக்கு வீரர் ஒப்பிட்டால் அமெரிக்க அணி சிறப்பான அணியாகவே தெரியும். இவர்கள் அனைவரும் முக்கிய லீக் போட்டிகளில் ஆடுபவர்கள், இதில் இருவர் ஐரோப்பிய கால்பந்து கிளப்பிலும் ஆடத் தயாராகிவிட்டனர்.

இந்திய அணியின் கேப்டன் அமர்ஜித் சிங் மற்றும் இவரது சகாக்கள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

முதல் முதலாக ஃபிபா தொடர் ஒன்றில் ஆடுவதும் வீரர்களிடத்தில் தங்கள் திறமைகளைப் பதிய வேண்டும் என்ற உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

பிரச்சினை என்னவெனில் இந்த உயர்ந்த மட்டத்தில் சவாலான போட்டிகளில் இந்த அணி ஆடியதில்லை என்ற அனுபவமின்மைதான். அமெரிக்க அணி அப்படியல்ல.

மேலும் புதிய தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் நார்ட்டப் டு மேட்டோஸ் தலைமையில் ஒருங்கிணைந்து 7 மாதங்களே ஆகின்றது.

முந்தைய பயிற்சியாளரான ஜெர்மனியின் நிகோலய் ஆடம் பிப்ரவரி 2015-ல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் இவர் நாடு முழுதும் இளம் திறமைகளை அடையாளம் கண்டு திரட்டினார், இதற்காக தனது நேரத்தையும் ஆற்றலையும் அவர் செலவழித்தார். ஆனால் வீரர்களிடத்தில் முறையாக நடக்கவில்லை என்ற காரணத்தினால் நிகோலய் ஆடம் தன் பொறுப்பை இழந்தார்.

போர்ச்சுக்கல் பயிற்சியாளரான டி மேட்டோஸ் அணியில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தார், சுமார் 6 வீரர்களை களத்தில் முக்கிய நிலைகளுக்கு இவர் கோண்டு வந்தார்.

டி மேட்டோஸ் முன்னெச்சரிக்கையாக இந்த அணி அதிசயங்கள் எதையும் நிகழ்த்தி விடாது, நம் அணிக்கும் பிற அணிக்கும் பெரிய இடைவெளி உள்ளது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

எனவே எதிரணியினருடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவது கடினம், தடுப்பு வியூகத்தை வலுவாக வைத்து எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுப்பதுதான் பிரதான உத்தி என்கிறார் பயிற்சியாளர் டி மேட்டோஸ்

தீரஜ் சிங் கோல் கீப்பராக செயல்படுவார், இரண்டு செண்டர் பேக்ஸ் அன்வர் அலி மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் தடுப்பாட்டத்தில் உறுதி என்று தெரிகிறது.

சஞ்சீவ் ஸ்டாலின் லெப்ட் ஃபுல் பேக் நிலையில் ஆடுவார், ஹென்றி ஆண்டனி வலது புல் பேக் நிலையில் ஆடுவார்.

ஆறடி 2 அங்குல உயரமுடைய தடுப்பாட்ட நடுக்கள வீரர் ஜீக்சன் சிங் அணியில் மிக முக்கியமான வீரராகக் கருதப்படுகிறார். நடுக்களத்தில் இவர் கேப்டன் அமர்ஜித் சிங் மற்றும் சுரேஷ் சிங் வாஞ்சம் ஆகியோருக்கு உதவிகரமாக இருப்பார்.

பிரிக்ஸ் கோப்பையில் பிரேசிலுக்கு எதிராக கோல் அடித்த கோமல் தாட்டல் இடது புறத்தில் அருமையாக ஆடி வருகிறார், அனிகெட் ஜாதவ் மட்டுமே ஒரேயொரு ஸ்ட்ரைக்கர் அணியில் இருக்கிறார்.

அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஹேக்வொர்த் தன் அணி வலுவான அணி என்றாலும் ஆரவாரம் மிகுந்த இந்திய ரசிகர்களின் முன்னிலையில் முதல் போட்டியில் இந்திய அணியை வெல்வது சவால்தான் என்கிறார்.

டெல்லி நேரு விளையாட்டரங்கில் யு 17 உலகக் கோப்பை கால்பந்து நாளை தொடக்கம்: வரலாற்றில் முதன்முறையாக களமிறங்குகிறது இந்தியா

 

box%20f2col
05CHPMUCUP
05CHPMUFIX
05CHPMUYUBABHARATI

யு 17 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களில் ஒன்றான கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தின் ஏரியல் வியூ. இந்த மைதானத்தில் 66, 600 பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.   -  K_R_DEEPAK

box%20f2col
05CHPMUCUP

17 வயதிற்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நாளை தொடங்குகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த கால்பந்து திருவிழா வரும் 28-ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, நவி மும்பை, குவாஹாட்டி, மர்கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகின்றன.

கால்பந்து வரலாற்றில் பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவுக்கான உலகக் கோப்பையிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் நாடான இந்தியாவுடன், ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி, தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த அணிகளுடன் 6 பிரிவில் இருந்தும் சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு கால் இறுதிக்கு தகுதி பெற பலப்பரீட்சை நடத்தும். நாக்-அவுட் சுற்று போட்டிகள் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகின்றன. கால் இறுதி ஆட்டங்கள் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி அக்டோபர் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

தொடக்க நாளான நாளை மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் கொலம்பியா - கானா மோதுகின்றன. இதே நேரத்தில் மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து, துருக்கியை சந்திக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதே நேரத்தில் மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் பராகுவே - மாலி அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் கொலம்பியாவுடன் 9-ம் தேதியும், கானாவுடன் 12-ம் தேதியும் மோதுகிறது.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை: தொடக்க ஆட்டத்தில் கானா வெற்றி: நியூ. - துருக்கு ஆட்டம் டிரா

 

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் கானா 1-0 என கொலம்பியாவை வீழ்த்தியது.

 
U-17 உலகக்கோப்பை: தொடக்க ஆட்டத்தில் கானா வெற்றி: நியூ. - துருக்கு ஆட்டம் டிரா
 
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள கானா - கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

கானா வீரரான இம்ராஹிம் 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் கானா 1-0 என கொலம்பியாவை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து - துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் துருக்கி அணியின் அஹமது முதல் கோலை பதிவு செய்தார்.

201710062023578013_1_newszealand-s._L_st
நியூசிலாந்து - துருக்கி வீரர்கள் மோதிய காட்சி

58-வது நிமிடத்தில் நியூசிலாந்தின் மாடா பதில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
 

 

 

U-17 உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவிடம் இந்தியா 0-3 என தோல்வி

 

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 0-3 என அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவிடம் இந்தியா 0-3 என தோல்வி
 
17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. டெல்லி ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின.

வலுவான அமெரிக்க அணிக்கு இந்திய வீரர்கள் கடும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடினார்கள். முதல் 30 நிமிடம் வரை இந்திய வீரர்கள் கோல் ஏதும் வாங்காத நிலையில் இருந்தனர். 30-வது நிமிடத்தில் அமெரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அமெரிக்காவின் சர்ஜென்ட் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அமெரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் தர்கின் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அமெரிக்கா 2-0 என முன்னிலைப் பெற்றது.

201710062204043712_1_worldcup002-s._L_st

இந்திய வீரர்கள் பதில் கோல் அடிப்பதற்கு முயற்சி எடுத்தனர். பல வாய்ப்புகள் கிடைத்தும் அது கோலாக மாறமுடியாமல் போனது. அதன்பின் 84-வது நிமிடத்தில் கார்லெடன் மேலும் ஒரு கோல் அடிக்க அமெரிக்கா 3-0 என வெற்றி பெற்றது. இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது.

மற்றொரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பராகுவே - மாலி அணிகள் மோதின. இதில் பராகுவே 3-2 என வெற்றி பெற்றது.
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பிரேசில் அணிகள் வெற்றி

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி கோஸ்டாரிகாவையும், பிரேசில் ஸ்பெயின் அணியையும் வீழ்த்தின.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பிரேசில் அணிகள் வெற்றி
 
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இன்றைய 2-வது நாளில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கோவாவில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஏஆர்பி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கோஸ்டாரிகாவின் ஏ. கோமஸ் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். அதற்கு பலன் கிட்டவில்லை. இதனால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 89-வது நிமிடத்தில் ஜெர்மனியின் அவுக்கு கோல் அடிக்க ஜெர்மனி 2-1 என வெற்றி பெற்றது.

கொச்சியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு ஓன்-கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது.

201710071933384151_1_brazil-s._L_styvpf.
கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசில் வீரர்கள்

பின்னர் 25-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் லின்கோல் ஒரு கோலும், முதல் பாதி நேரத்தின் காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (46-வது நிமிடத்தில்) பவுலினோ ஒரு கோலும் அடிக்க முதல் பாதி நேரத்தில் பிரேசில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பிரேசில் 2-1 என வெற்றி பெற்றது.

கோவாவில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - கினியா அணிகளும், கொச்சியில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள கொரியா - நைஜர் அணிகளும் மோதுகின்றன.

 

 

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான், நைஜர் அணிகள் வெற்றி

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்றைய 2-வது நாளில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான், நைஜர் அணிகள் வெற்றி
 
புதுடெல்லி:

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்றைய 2-வது நாளில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

கோவாவில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இப்போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கொச்சியில் 5 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - ஸ்பெயின் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - கினியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஈரானின் அலாஹியர் சையத் முதல் கொல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

201710080012415305_1_u-17-1._L_styvpf.jp

அடுத்து ஈரான் அணியின் மொஹமது ஷரிபி 70-வது நிமிடத்திலும், சையித் கரிமி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன்மூலம் ஈரான் அணி 3-0 என முன்னிலை பெற்றது. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கினியாவின் ஃபண்ட்ஜே டூரே ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் ஈரான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கொச்சியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள வடகொரியா - நைஜர் அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் நைஜரின் சலிம் கொல் அடித்தார். அதன்பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் நைஜர் 1-0 என வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் ‘ஈ’ பிரிவு லீக் போட்டிகளில் நியூ கலிடோனியா - பிரான்ஸ், ஹாண்டுரஸ் - ஜப்பான் அணிகளும், ‘எஃப்’ பிரிவு லீக் போட்டிகளில் சிலி - இங்கிலாந்து, ஈராக் - மெக்சிகோ அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இந்தியா போராடி தோல்வி - அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.

 
 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: இந்தியா போராடி தோல்வி - அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது
 
புதுடெல்லி:

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இன்று மாலை இந்தியா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால், இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 69 வது நிமிடத்தில் கொலம்பியா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. இதனையடுத்து, 80 வது நிமிடத்தில் இந்தியா இந்த தொடரில் தனது முதல் கோலை அடித்தது.

சிறிது நேரத்திலேயே கொலம்பியா அணி மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து, கோல் அடிக்க இந்தியா எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. ஆட்ட நேர முடிவில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் அடுத்த சுற்று ஆட்டங்களுக்கு இந்தியா தகுதி பெறுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/09220952/1122179/FIFA-Under-17-World-Cup-Colombia-defeat-India-21.vpf

Link to comment
Share on other sites

 

Nervous moments from India defender Rahul KP's house as defender misses header in the second half. Rahul's mother (left) and father (in the background) react to the miss.

http://www.firstpost.com/sports/fifa-u-17-world-cup-2017-india-vs-colombia-football-match-score-jeakson-singh-scores-hosts-first-goal-but-lose-to-colombia-4125397.htmlc02ea298e7e807806111f07e4f1383e3.jpg

Link to comment
Share on other sites

இந்த உலகக் கோப்பையில் இவங்கதான் ஸ்டார்! #FootballTakesOver #FIFAU17WC #BackTheBlue

ஜோராக நடந்து வருகிறது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை (#FIFAU17WC). வரும் காலங்களில் கால்பந்து உலகை ஆளப்போகும் இளம் சூப்பர் ஹீரோக்களை அடையாளம் காணும் இந்தத் தொடரில் 24 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. அவர்களில் யாரெல்லாம் இந்திய மண்ணில் தங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறார்கள்? ரொனால்டோ, மெஸ்ஸி போன்றோர் இல்லாத இத்தொடரில் நாம் யாரைக் கண்டு மெய்சிலிர்ப்பது? இதோ இத்தொடரில் முத்திரை பதிக்கக்கூடிய சில இளம் நட்சத்திரங்கள் பற்றிய அப்டேட்...

#FIFAU17WC

 

ஜோஷ் சார்ஜென்ட் (அமெரிக்கா)

பிரேசிலின் விசினியஸ் பங்கேற்காத நிலையில், இந்தத் தொடரின் மிகப்பெரிய அட்ராக்சன் சார்ஜென்ட் என்பதில் சந்தேகமில்லை. CONCACAF தொடரில் 5 கோல்கள் அடித்து அமெரிக்க அணி உலகக்கோப்பைக்குத் தகுதிபெற முக்கியக் காரணமாக விளங்கினார். அதிக அனுபவத்துடன் இந்தத் தொடரில் கலந்துகொள்பவரும் இவர்தான். 17 வயதே ஆன சார்ஜென்ட் ஏற்கெனவே அண்டர்-20 உலகக்கோப்பையிலும் பங்கேற்றுள்ளார். காலிறுதியில் அமெரிக்கா தோல்வியடைந்தாலும், அந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். ஐரோப்பாவின் பல முன்னணி க்ளப்கள் இவரை ஒப்பந்தம் செய்ய தேர்வு நடத்திவருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தன் கோல் கணக்கைத் தொடங்கிவிட்டார். 

#FIFAU17WC

ஜேடன் சான்சோ (இங்கிலாந்து)

சில மாதங்களுக்கு முன் நடந்த அண்டர் 17 யூரோ கோப்பையின் ‘கோல்டன் பிளேயர்’ சான்சோ. 5 கோல்கள் அடித்து அசத்தியது மட்டுமல்லாமல், 5 அசிஸ்டுகளும் செய்து, இங்கிலாந்து அணி ஃபைனலுக்குள் நுழைவதற்குக் காரணமாக இருந்தார். மான்செஸ்டர் சிட்டி அணியின் யூத் டீமில் இருந்தவரை 10 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியது ஜெர்மனியின் முன்னணி அணியான பொருசியா டார்ட்மண்ட். அதோடு, அவருக்கு 7-ம் நம்பர் ஜெர்சியையும் அளிக்க, கால்பந்து ரசிகர்களின் புருவம் உயர்ந்தது. அவர்மீது அந்த அணிக்கு அவ்வளவு நம்பிக்கை. இங்கிலாந்து அணியும் அதே நம்பிக்கையை அவர்மீது வைத்திருந்தது. கடினமான F பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, சான்சோவின் பங்கு அவசியம். அணியின் தேவையைப் பூர்த்தி செய்யும் அனைத்துத் திறமையும் வாய்க்கப் பெற்றவர் இந்த இங்கிலாந்துக்காரர். இந்த உலகக் கோப்பையில் சிலிக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து, கவனிக்க வைத்துவிட்டார். 

#FIFAU17WC

அபெல் ரூயிஸ் (ஸ்பெய்ன்)

அண்டர் 17 யூரோ கோப்பையை வென்ற ஸ்பெய்ன் அணியின் கேப்டன் ரூயிஸ், இந்த உலகக்கோப்பையின் முக்கிய ஸ்டார். 2015-ல் இருந்தே 17 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடிவரும் ரூயிஸ், தன் அணியை உலக சாம்பியனாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறார். ஸ்பெய்ன் அண்டர் 17 அணிக்காக இதுவரை 19 கோல்கள் அடித்துள்ளார். யூரோ அண்டர் 17 தொடரில் 4 கோல்கள் அடித்து வெள்ளிக் காலணி விருதையும் வென்றார். இவற்றையெல்லாம் விட, அவரது பெருமையைப் பறைசாற்ற ஒரு செய்தி போதும். இவர், பார்சிலோனா – பி அணி வீரர்!

#FIFAU17WC

ஜேன்- ஃபிடே அர்ப் (ஜெர்மனி)

அண்டர் 17 யூரோ கோப்பையில் 4 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகள் அடித்து பட்டையைக் கிளப்பினார் ஃபிடே அர்ப். அதுவும் போஸ்னியா அண்ட்ட் ஹெர்சகோவினா அணிக்கு எதிராக, ஹாட்ரிக்கைப் பூர்த்தி செய்ய அவர் எடுத்துக்கொண்டது 13 நிமிடங்களே. ஜெர்மனி அணி பெரிதாக சோபிக்காத நிலையிலும், ஃபிடே அர்ப் தன் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் கவனம் பெற்றார். 21-ம் நூற்றாண்டில் பிறந்து ஜெர்மனியின் பண்டஸ்லிகா தொடரில் விளையாடிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்த அர்ப், இந்த உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக்குகள் நொறுக்கக் காத்திருக்கிறார். இவரே ஜெர்மனி அணியின் அடுத்த, மிரஸ்லேவ் க்ளோஸ் என்றும் ஆருடம் சொல்கிறார்கள் நிபுணர்கள். அந்த உலகக்கோப்பை நாயகனைப் போல் இவரும் உலகக்கோப்பையில் சாதிப்பாரா? 

அமைன் கௌரி (பிரான்ஸ்)

அமைன் கௌரி

யூரோ அண்டர் 17 தொடரின் சாதனை நாயகன். 9 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார், ஒலிம்பிக் லயான் கிளப்புக்கு ஆடிவரும் அமைன். உலகக்கோப்பைக்குத் தகுதிபெற ஹங்கேரி அணியுடன் பிளே-ஆஃப் போட்டியில் விளையாடியது ஃபிரான்ஸ். வெற்றி பெறும் அணி உலகக்கோப்பைக்குத் தகுதிபெறும். கோல்களே இல்லாமல் சென்ற அந்தக் கடினமான போட்டியின் ஒற்றைக் கோலை அடித்தது அமைன்தான். உலகக்கோப்பைக்குத் தங்கள் அணியை அழைத்துச்சென்ற அமைனை நம்பியே ஃபிரான்ஸ் அணி இந்தியாவில் அடியெடுத்து வைத்தது. நியூ கேல்டோனியாவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து தன் வருகையை அறிவித்துவிட்டார் அமைன்.

அனிகேத் ஜாதவ் (இந்தியா)

அனிகேத் ஜாதவ்

 

‘ஃபாரீன் பிளேயர்கள் சரி, இந்திய வீரர்களில் யாரைக் கவனிப்பது?’ என்னும் உங்களின் கேள்விக்கான பதில் அனிகேத் ஜாதவ். 2014-ம் ஆண்டு நடந்த பேயர்ன் முனிச் அணியின் யூத் கேம்பில் பங்கேற்றவர் என்பதே இவரது பெருமை சொல்லப்போதுமானது. விங்கராக ஆடிவந்தவரின் கோல் அடிக்கும் திறமையைப் பார்த்து, இவரை ஸ்ட்ரைக்கராக்கிவிட்டார் இந்திய அணியின் பயிற்சியாளர். எதிரணி டிஃபண்டர்களை ஏமாற்றி அவர்கள் பாக்சுக்குள் நுழைவதில் அனிகேத் கெட்டிக்காரர். கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கும் மாபெரும் வாய்ப்பு இவரது கால்களில்! இவரைத் தவிர்த்து நடுகள வீரர் கோமல் தடாலும் கவனிக்கப்பட வேண்டியவர்.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/104451-stars-to-watch-out-in-under-17-world-cup.html

Link to comment
Share on other sites

பிபா U-17 உலகக்கோப்பை: நைஜரை 4-0 என வீழ்த்தியது ஸ்பெயின்

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜர் அணியை 4-0 என வீழ்த்தியது ஸ்பெயின்.

 
பிபா U-17 உலகக்கோப்பை: நைஜரை 4-0 என வீழ்த்தியது ஸ்பெயின்
 
இந்தியாவில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான இன்று கொச்சியில் நடைபெற்ற போட்டியில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் - நைஜர் அணிகள் மோதின. ஸ்பெயின் நாட்டின் வீரர்கள் வேகத்திற்கு நைஜர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஸ்பெயின் அணி முதல் பாதி நேரத்தில் மூன்று கோல்கள் அடித்தது. அந்த அணியின் அபெல் ருயிஸ் 21-வது மற்றும் 41-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். கேசர் 45-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

201710102032588994_1_costarica-s._L_styv

ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தில் செர்ஜியோ கோமஸ் ஒரு கோல் அடிக்க ஸ்பெயின் 4-0 என நைஜர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் ஒரு வெற்றி, ஒரு டிரா தோல்வி மூலம் 3 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

கோவாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள கோஸ்டா ரிகா - கினியா அணிகள் மோதின. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டுகள் கோல்கள் அடிக்க போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

 

உலகக் கோப்பை நடத்த டெல்லி லாயக்கற்ற ஊர்! #BackTheBlue #FIFAU17WC

Chennai: 

2014-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைவிட அதிக ரசிகர்கள் பார்க்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறது பிரேசில். அசாதாரணமான அரசியல் சூழ்நிலை. எங்கெங்கும் போராட்டங்கள். அதுவரை இல்லாத வறுமையிலும் வறட்சியிலும் வாடுகிறார்கள் பிரேசில் மக்கள். அரசும் நிதியின்றி திக்கற்று நிற்கிறது. போதாதற்கு H1N1 வைரஸ் பரவி, பன்றிக்காய்ச்சல் முதலிய நோய்கள் வேகமாகப் பரவத் தொடங்கின. இந்நிலையில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தியாக வேண்டும். வரிசைகட்டிநின்றன பிரேசில் அரசுக்கான சவால்கள். என்ன செய்வது, போட்டிகளை எப்படி நடத்துவது, உலகக்கோப்பையை பிரச்னைகள் இன்றி நடத்திட முடியுமா? 

உலகக் கோப்பை

 

நடத்தி முடித்தார்கள். தங்கள் நாட்டின் பாரம்பர்ய விளையாட்டு. அதைக் கொண்டாடியாக வேண்டும். அந்தப் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதில்தான் அவர்களின் கெளரவம் அடங்கியிருக்கிறது. வெற்றிகரமாக நடத்திட வேண்டும். நடத்தினார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி, நாட்டு மக்கள் பலரின் எதிர்ப்பையும் தாண்டி போட்டியை வெற்றிகரமாக முடித்தது பிரேசில். எப்போதும்போல் அது ஒரு திருவிழாவாகவே நடந்தேறியது. பிரச்னைகள் ஒருபுறம் சூழ்ந்திருந்தாலும், மறுபுறம் கால்பந்துக்குத் தாங்கள் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தனர்.

பிரேசில்

ஒவ்வொரு வீடும் பிரேசில் தேசியக் கொடியின் பச்சை வண்ணத்துக்கு மாறியது. பிரேசிலின் சுவர்கள் அனைத்திலும் நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸியின் முகங்கள். உலகக்கோப்பை தொடங்குவதற்கு பல நாள்களுக்கு முன்னரே அணிகளின் ஜெர்சி விற்பனை ஜோராகத் தொடங்கியது. வீதியெங்கும் தோரணங்கள், அலங்காரங்கள். மாதிரி உலகக்கோப்பை பொம்மைகள், மாஸ்காட் fuleco-வின் பேனர்கள், பொம்மைகள் என மார்க்கெடிங்கில் பிரேசிலும் FIFA-வும் போட்டிபோட்டு செயல்பட, பிரச்னைகள் அனைத்தையும் தாண்டி கால்பந்து என்னும் விளையாட்டு மட்டுமே இரண்டு மாத காலங்கள் அங்கு காலூன்றி நின்றது.

இந்தியாவில் 2017-ல் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவிருப்பதாக, 2013 டிசம்பரில் FIFA அறிவித்தது. கிட்டத்தட்ட, பிரேசில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு 188 நாள்கள் முன்னதாகவே, இந்த அறிவிப்பு வந்துவிட்டது. அதன்பின்னர்தான் 2014 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியது பிரேசில். ஓர் உலகக்கோப்பையை எப்படி நடத்த வேண்டும் என்பதை பிரேசில்  நாட்டிடமிருந்து இந்தியா கற்றிருக்க வேண்டும்; எப்படியெல்லாம் `புரமோட்’ செய்யலாம் எனப் பாடம் பயின்றிருக்க வேண்டும். ஆனால்..?

ரசிகர்கள்

‘டிஜிட்டல் இந்தியா' என்ற வாசகத்தை ஒவ்வொரு மேடையிலும் கூவிக்கொண்டிருக்கும் இந்த அரசு,  டிஜிட்டல் தளத்தில் மட்டுமே இந்தத் தொடரை Promote செய்தது. நவம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ.எஸ்.எல் தொடருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே விளம்பரங்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றனர். உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய சோனி நிறுவனமோ ஏதோ கடனுக்கு உலகக் கோப்பையை ‛புரமோட்’ செய்தது. ட்விட்டரில் மட்டும் வீரர்களைப் பற்றிய குறிப்புகள், பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டது இந்தியக் கால்பந்து நிர்வாகம். பி.வி.சிந்து பிள்ளையார்சுழி போட, பிரபலங்கள் மத்தியில் கொஞ்சம் பாப்புலர் ஆனது `#JuggleLikeAChamp'. மூன்று கிரிக்கெட் அணிகளை நடத்திவரும் ஷாரூக் கானுக்கு, சோனு சூட் சவால் விட, மனிதன் கால்பந்தைப் பிரபலப்படுத்த மூச்சுகூட விடவில்லை. கடைசியில் அதுவும் ஒரு வாரத்தில் ஆஃப் ஆனது. கோலி, அக்‌ஷய் குமார் போன்றோர்கூட ட்விட்டரில் வீடியோ போட்டு வாழ்த்தினர். ஆனால், அரசு செய்த முயற்சிகள்? 

புதுடெல்லி அசோகா சாலையில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்துக்கும், உலகக்கோப்பை தொடங்கிய நேரு மைதானத்துக்கும் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம். வழிநெடுக அத்வானி, மோடி, உள்ளூர் பா.ஜ பிரஜைகளின் முகங்கள் அலங்கரிக்கும் பேனர்கள். மாபெரும் ஒரு தொடர் நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எங்குமே இல்லை. ஒரு பேனர்... ஒரு போஸ்டர்... எதுவும் இல்லை. அந்தக் கட்சி அலுவலகத்துக்கும் நேரு ஸ்டேடியத்துக்கும் நடுவில்தான் `இந்தியா கேட்'. டெல்லியின் மிக முக்கிய சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் இடம். அங்குகூட உலகக்கோப்பைக்கான விளம்பரம் ஏதும் இல்லை. கால்பந்து உலகக்கோப்பை நடப்பதாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரே போர்டு, மாநகரக் காவல்துறை வைத்திருந்த `Parking' தொடர்பான போர்டு மட்டுமே.

விளம்பரம்

கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் யூரோ கோப்பை நடந்தது. ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும், வெற்றி பெற்ற நாட்டின் கொடியைக் குறிக்கும் வகையில் ஃபிரான்ஸ் நாட்டின் மாபெரும் நினைவுச்சின்னமான `ஈஃபிள் டவர்' வண்ண விளக்குகளால் ஜொலித்தது. 2014 உலகக் கோப்பையின்போதும்  பிரேசிலின் ‘கிறிஸ்ட் தி ரெடீமர்’ சிலையும் வெற்றிபெற்ற நாடுகளின் கொடி நிறத்தைச் சுமந்தது. இப்படிப் போட்டியை நடத்திய நாடுகள், தங்களால் எப்படியெல்லாம் போட்டியைப் பிரபலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் பிரபலப்படுத்தின. இங்கும் மத்திய அரசும் டெல்லி அரசும் சோடைபோயின. பயணிகள் வந்துபோகும் ரயில் நிலையங்களில்கூட இந்தப் போட்டிக்கான விளம்பரங்கள் எங்கும் இல்லை. 

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு, இந்தப் போட்டிக்காகச் சிறிதும் மெனக்கிட்டதுபோல் தெரியவில்லை. யூனியன்பிரேதசம்தானே... தனிப்பிரதேசம் இல்லையே? சுமார் 27,000 பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் முதல் உலகக்கோப்பைப் போட்டியை நேரடியாகக் காணவிருந்ததால், அவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றியதும், பாதுகாப்புக்கு போலீஸாரை அனுப்பியதும் மட்டுமே டெல்லி அரசு உலகக்கோப்பைப் போட்டிக்குச் செய்த உதவி. டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், வெடிகள் ஏதுமின்றி ரசிகர்களின் கோஷத்துக்கு இடையில்தான் போட்டி தொடங்கியது. ப்ரோ கபடிப் போட்டிகள் சென்னைக்கு முதல்முதலாக வந்தபோதுகூட அதன் வரவேற்பு இதைவிடச் சிறப்பாக இருந்தது.

இந்தியா

தொலைக்காட்சி, ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் மூழ்கிக்கிடந்த டெல்லிவாசிகளுக்கு மட்டுமே கால்பந்து உலகக்கோப்பை தங்கள் ஊரில் நடப்பது தெரிந்தது. புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு அருகில் ரிக்‌ஷா ஓட்டுபவர்களுக்கு, ஆங்கிலம் தெரியாததால் ‘ஓலா ஆப்'பிலும் இந்தியையே பயன்படுத்தும் டிரைவர்களுக்கு, நிர்வாகப் பயிற்சிக்காக ஒரு மாதம் விடுதியில் தங்கிப் பயின்றுவந்த தமிழருக்கு, ஹோட்டலில் வேலைசெய்யும் `ரூம் பாய்'க்கு எனப் பலருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடக்கிறது என்பதே தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியாவால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொண்டுசேர்த்திட முடியுமா? இந்தத் தொடர், நம் நாட்டு கால்பந்து வீரர்களுக்கான அங்கீகாரம், ஒரு FIFA தொடரை நடத்துவது என்பது மாபெரும் பெருமை. தன் தேசத்து மக்களுக்கே தெரியாமல் ஒரு தொடரை நடத்திக்கொண்டிருக்கிறது நம் அரசு! 

இந்தியா

தூய்மை இந்தியா... ஊர் ஊராக துடைப்பத்தை எடுத்துக்கொண்டு திரிந்த படை ஒருமுறை மைதானம் பக்கம் போய் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சாலையின் ஒருபுறம் மாணவர்கள் மைதானத்துக்கு நடந்துகொண்டிருக்க, மறுபுறம் புழுதி பறக்க சுத்தம்செய்துகொண்டிருந்தார்கள் துப்புரவுப் பணியாளர்கள். உலகக்கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர்வரை சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது மைதானம் அமைந்திருக்கும் இடம். மைதானத்துக்கு உள்ளே இன்னும் மோசம். நாற்காலிகளில் படிந்திருந்தது ஒரு வாரத் தூசு. தாங்கள் கொண்டுவந்திருந்த கைக்குட்டை, பேப்பர் போன்றவற்றை உபயோகித்துதான் அமரவேண்டியதாக இருந்தது. அந்த நாற்காலிகளின் நடுவே ஸ்டேடியத்தின் ஸ்க்ரீன் சைஸில் வைக்கப்பட்டிருந்தது `ஸ்வச் பாரத்' விளம்பரப் பதாகை. இவர்கள் மைதானத்துக்கு வெளியே உலகக்கோப்பையைப் பற்றி ஒரு பேனர்கூட வைக்கவில்லை. 

நாற்காலி

வந்திருந்த 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதைக் கொடுக்க சரியான ஸ்டால்கள் இல்லையே. மொத்த மைதானத்திலும் வெறும் மூன்று - நான்கு இடங்களில் மட்டுமே வைத்துக்கொடுக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் முட்டிக்கொள்ள, பெரும் போராட்டமே நடந்தது. தண்ணீர் இல்லை. அங்கு விற்கப்படும் தண்ணீர் ஒரு லிட்டர் 50 ரூபாய்! இலவச டிக்கெட் கொடுத்து மாணவர்களைக் கூட்டிவந்தோம் எனப் பெருமை பேசியவர்கள், 15 வயது சிறுவர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் தரவில்லை.

சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அந்த அட்டைகளை எங்கு போடுவது? குப்பைத்தொட்டிகள் ஒழுங்காக அமைக்கப்படவில்லை. குப்பைத்தொட்டியானது மைதானம். நடக்கக்கூட முடியாத அளவுக்கு வழியெங்கும் குப்பைகள். அடுத்த இரண்டு நாள்களில் அடுத்த போட்டி. அதற்குள் அந்த மொத்த மைதானத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும். திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்களின் வாசலிலேயே தோற்றுப்போனது `ஸ்வச் பாரத்'.

குப்பை

20,000 பள்ளிச் சிறுவர், சிறுமியர் போட்டியைக் கண்டுகளித்தனரா... இந்திய அணிக்கு ஆதரவு அளித்தனரா? தண்ணீர், சிற்றுண்டி என வெளியே போக, உள்ளே வர, கடைசி வரை அவர்கள் அனைவரும் மைதானத்துக்குள் அமர்ந்திருந்த தருணங்கள் குறைவே. மேற்குவங்கம்கூட 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், கால்பந்து ஆர்வம் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் அவர்கள் தீர்க்கமாக உள்ளனர். மைதானத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சரி, மைதானப் பணியாளர்களுக்கும் சரி, சிரமத்தை உண்டாக்கியதுதான் மிச்சம். இவர்கள் பள்ளி வேனிலிருந்து இறங்கி மைதானம் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது பள்ளிக்கூடம் போகாத சிறுவர்கள் சிலர் ஏக்கத்தோடு இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒருவன், தான் அணிந்திருந்த ரியல் மாட்ரிட் ஜெர்சியில் தன் வியர்வையைத் துடைக்க, பிர்லோவைப்போல் `அவுட்-ஃபூட்டில்' கல்லை உதைத்துக்கொண்டிருந்தான் இன்னொருவன். இவர்களுள் கால்பந்து உலகக்கோப்பையைப் பார்க்கத் தகுதியானவர்கள் யார்? அதைப் பார்ப்பதற்கான தகுதி படிப்பா... விளையாட்டின் மீதான காதலா?

டிக்கெட் வாங்கி வந்தவர்களுள் பலரும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள், அங்குமிங்கும் நடந்து செல்ஃபி எடுப்பது, வெளியிலிருந்து கோக் வாங்கிக்கொண்டு வருவது என மூவிங்கிலேயே இருந்து கால்பந்துக் காதலர்களை ரணமாக்கினர். இந்திய அணி மூன்றாவது கோல் வாங்கியபோது அரங்கத்தில் பாதிக்கும்மேல் காலியானது. கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்தவர்கள்போல், தோல்வியை நோக்கி அணி பயணித்ததும் கிளம்பிச் சென்றார்கள். அதுவா கால்பந்துக்கு அழகு? ஆட்டம் முடிந்த பிறகு, ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் வீரர்களைப் பாராட்டுவதும், வீரர்கள் அணிவகுத்து ரசிகர்களுக்கு நன்றி சொல்வதும்... அதுவே கால்பந்தின் அழகான நெகிழ்ச்சியான தருணம். அந்த 17 வயது இளம் வீரர்கள் தோல்விக்குப் பிறகு கேலரியில் ரசிகர்களை நோக்கி நடந்தபோது அங்கிருந்தது சுமார் பத்து முதல் பதினைந்தாயிரம் ரசிகர்களே. அவர்களுள் பெரும்பாலானோர் கால்பந்தை மிகவும் நேசிக்கும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 

டெல்லி ரசிகர்களைக் குற்றம் சொல்லியும் தப்பில்லை. அங்கு கால்பந்து கலாசாரம் என்பது அறவே கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலோ, கொல்கத்தா, கோவா, கொச்சி போன்ற நகரங்களிலோ இருப்பதுபோல் அங்கு கால்பந்தைக் காதலிக்கும் வெறியர்கள் இல்லை. கால்பந்தின் பிதாமகன் டீகோ மரடோனா கொச்சினுக்கோ, கொல்கத்தாவுக்கோ வருவதற்கான காரணம் அதுதான். கோடி ரூபாய் கொடுத்தாலும் கால்பந்து ரசிகர்கள் இல்லாத டெல்லி போன்ற ஊர்களில் உலகக்கோப்பை வாங்கிய அந்தக் கால்கள் களமிறங்காமல், கொல்கத்தா, கோவா, கொச்சி, கவுஹாத்தி எனக் கால்பந்தைக் கொண்டாடும் இடங்களிலும் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தலாம்.

தூய்மை இந்தியா

அப்படியிருக்கையில் ஏன் இந்திய அணியின் மூன்று போட்டிகளிலும் டெல்லியிலேயே நடக்க முடிவுசெய்யப்பட்டது?
FIFA-வின் ஆலோசனைப்படி ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு மைதானம் என முடிவுசெய்யப்பட்டது. போட்டியை நடத்தும் அணி எப்போதும் ஏ பிரிவில்தான் இடம்பெறும். முதலில் ஏ பிரிவுக்கான போட்டிகள் நடத்த முடிவுசெய்யப்பட்ட இடம் மும்பை. இந்தியாவில் போட்டி நடக்கிறது. பிரதமர், முதல் போட்டியில் பங்கேற்றாக வேண்டும். போட்டிகள் டெல்லிக்கு மாற்றப்படுகின்றன. போட்டியைத் தொடங்கிவைத்த பிரதமர், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப்  போட்டியைக் காண இரண்டு மணி நேரம்கூட ஒதுக்காமல் கிளம்பிப் போகிறார். இனி ரசிகர்களைக் குறை கூறி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் வெறும் பொழுதுபோக்காகத் தெரிந்தாலும், அது ஒரு நாட்டின் கெளரவம். கத்தார் - 2022 உலகக்கோப்பையை நடத்தும் நாடு. பல ஊழல்கள் நடந்துதான் கத்தாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஓர் உலகக்கோப்பைப் போட்டி நடத்துவதற்கு எத்தனையோ கோடிகள் கொட்டியது கத்தார். வெறும் விளையாட்டுத் தொடர்தான். அதற்காக ஏன் அத்தனை ஊழல்கள் செய்து, பல நாட்டு அதிபர்களை வளைத்துப்போட்டு, பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும்? காரணம், உலகக்கோப்பைக் கால்பந்தை நடத்துவது அந்நாட்டின் மரியாதையை உலக அளவில் பல மடங்கு அதிகரிக்கும். அதை கத்தார் நன்கு அறிந்திருந்தது. வெறும் எண்ணெய் விற்கும் நாடாக மட்டும் அறியப்படாமல், பன்முக அடையாளம் வேண்டும் என்று நினைத்த அந்நாட்டு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தது, FIFA உலகக்கோப்பை தங்களின் எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்று. 

கத்தார்

சிறப்பாக நடத்தியிருக்கும்பட்சத்தில் இந்தியாவுக்கும் இது பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும். வெறும் தலைநகரம் என்பதற்காக அல்லாமல், அந்த விளையாட்டை மதிக்கும், விளையாடும் வீரர்களை கெளரவப்படுத்தும் இடத்தில் நடத்துவதே அந்த விளையாட்டுக்குத் தரும் மரியாதை. அந்த வகையில் கால்பந்து உலகக்கோப்பை என்னும் மாபெரும் தொடருக்கு, அதை நேசிக்கும் ரசிகர்களுக்கு, அங்கு விளையாடிய 21 இந்தியர்கள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் டெல்லி இழைத்தது அவமானமே! முதல் உலகக்கோப்பைத் தொடர் என்பதற்காக இந்தக் குறைகளைச் சகித்துக்கொள்ளவும் முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே காமென்வெல்த் போட்டியை நடத்திய ஊர். பல உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியவர்கள். அடிப்படை வசதிகளைச் சரிசெய்து, `நாங்களும் போட்டி நடத்துகிறோம்' என்ற அளவுக்காவது நடத்தியிருக்கலாமே?

 

இவற்றையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லக் காரணம் இல்லாமல் இல்லை. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கிறது 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை. அந்தத் தொடரையும் நடத்த முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது இந்தியா. அப்படி அந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பைப் பெறும்போதாவது, ஓர் உலகக்கோப்பைக்குத் தரவேண்டிய மரியாதையை நாம் தரவேண்டும். இல்லையேல், உலக அரங்கில் நமக்கான மரியாதையையும் இழக்க நேரிடும்.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/104587-the-digital-india-and-swach-bharat-campaigns-went-useless-in-delhi-during-under-17-world-cup.html

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி

 

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி பெற்றன.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி
 
 
புதுடெல்லி:
 
இந்தியாவில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று கொச்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள வடகொரியா - பிரேசில் அணிகள் மோதின. இரு அணிகளும் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கவில்லை. 
 
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் பிரேசிலின் லின்கன் முதல் கோல் அடித்து அவரது அணிக்கு முன்னிலை கொடுத்தார். அடுத்து 61-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பாலினோ தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதன்மூலம் பிரேசில் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
 
இருப்பினும் வடகொரியா அணியின் அனைத்து கோல் போடும் வாய்ப்பையும் பிரேசில் அணியினர் தடுத்தனர். அதனால் அந்த அணியால் இறுதிவரை எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
 
201710110610088226_1_u17-brazil._L_styvp
 
கோவாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான், ஜெர்மனியை எதிர்கொண்டது. ஈரான் நாட்டின் வீரர்கள் வேகத்திற்கு ஜெர்மனி அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. 
 
ஈரான் அணி முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்தது. அந்த அணியின் யூனெஸ் டெல்ஃபி 6-வது மற்றும் 42-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். ஆட்டத்தின் 2-வது பாதி நேரத்தின் 49-வது நிமிடத்தில் ஈரானின் அலாஹ்யர் சையத் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, ஈரானின் வாஹித் நம்தாரி 75-வது நிமிடத்தில் நான்காவது கோல் அடித்தார். இதன்மூலம் ஈரான் அணி 4-0 என ஜெர்மனி அணியை வீழ்த்தியது. 
 
முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்பெயின் 4-0 என நைஜர் அணியை வீழ்த்தியது. கோஸ்டா ரிகா - கினியா அணிகள் மோதிய போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.
 
இன்று (11-ம் தேதி) நடைபெறும் ‘ஈ’ பிரிவு லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஜப்பான், ஹாண்டுரஸ் - நியூ கலிடோனியா அணிகளும்,  ‘எஃப்’ பிரிவு லீக் போட்டிகளில் இங்கிலாந்து - மெக்ஸிகோ, ஈராக் - சிலி அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாண்டுரஸ், ஈராக் அணிகள் வெற்றி

 

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாண்டுரஸ், ஈராக் அணிகள் வெற்றி பெற்றன.

 
 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து, ஹாண்டுரஸ், ஈராக் அணிகள் வெற்றி
ஹாண்டுரஸ் அணியினர்
 
புதுடெல்லி: 
 
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. இன்று (11-ம் தேதி) நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
 
கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜப்பான் - பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணியின் அமைன் கவுரி 13-வது மற்றும் 71-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். ஜப்பான் அணியின் மியாஷிரோ 73-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
 
201710112340191747_1_u17-france._L_styvp
கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள்
 
கொல்கத்தாவில் 5 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள மெக்சிகோ - இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் பிரிவ்ஸ்டர் 39-வது நிமிடத்திலும், போடன் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்தின் ஜேடன் சஞ்சோ 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். மெக்சிகோ அணியின் தியகோ லயனெஸ் 65-வது நிமிடத்திலும், 72-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணியினரும் வேறு கோல்கள் அடிக்கவில்லை. இதையடுத்து இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
 
201710112340191747_2_u17-england._L_styv
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர் 
 
கவுஹாத்தியில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஹாண்டுரஸ் - நியூ கலிடோனியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஹாண்டுரஸ் 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. ஹாண்டுரசின் கார்லொஸ் மெஜியா, பாட்ரிக் பாலசியோஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். ஜோசுவா கேனல்ஸ் ஒரு கோல் அடித்தார்.
 
கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈராக் - சிலி அணிகள் மோதின. இப்போட்டியில் ஈராக் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈராக் அணியின் மொகமத் தாவுத் இரண்டு கோல்கள் அடித்தார். சிலி அணியின் தியாகொ வெலன்சியா, எதிர் அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.
 
201710112340191747_3_u17-iraq._L_styvpf.
 கோல் அடித்த மகிழ்ச்சியில் ஈராக் அணியினர்
 
நாளை (12-ம் தேதி) நடைபெறும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகளில் கானா - இந்தியா, அமெரிக்கா - கொலம்பியா அணிகளும், ‘பீ’ பிரிவு லீக் போட்டிகளில் நியூசிலாந்து - மாலி, பராகுவே - துருக்கி அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/11234018/1122571/france-england-honduras-and-iraq-won-u17-world-cup.vpf

Link to comment
Share on other sites

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து: கானாவிடமும் வீழ்ந்தது இந்திய அணி

 

 
13CHPMUERICAYIAH

கோல் அடித்த மகிழ்ச்சியில் கானா அணி வீரர்கள்.   -  படம்: பிடிஐ

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடமும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிமுடம் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி நேற்று டெல்லியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான கானா அணியுடன் மோதியது.தொடக்கம் முதலலே கானா அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் தீரஜ் முறியடித்தார். எனினும் அந்த அணி தொடர்ந்து அச்சுறுத்தியது.

43-வது நிமிடத்தில் எரிக் ஆயியா, இந்திய அணியின் பலவீனமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் கானா 1-0 என முன்னிலை பெற்றது. 52-வது நிமிடத்தில் எரிக் ஆயியா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இம்முறையும் இந்திய தடுப்பாட்ட வீரர் செய்த தவறை அவர், சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கானா அணி மேலும் இரு கோல்கள் அடித்து அதிர்ச்சி கொடுத்தது.

அந்த அணி வீரர்களான தன்சோ 86-வது நிமிடத்திலும், டோகு 87-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.

கடைசி வரை முயன்றும் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கானா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.

http://tamil.thehindu.com/sports/article19851440.ece?homepage=true

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றி

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

 
 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றி
 
புதுடெல்லி:

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்று (14-ம் தேதி) நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஹாண்டுரஸ் - பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. பிரான்ஸ் தரப்பில் இசிடோர் (14-வது நிமிடம்), ஃப்லிப்ஸ் (23-வது மற்றும் 64-வது நிமிடம்), கவுரி (86-வது நிமிடம்), அட்லி (90+6-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஹாண்டுரசில் மேஜியா 10-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈராக் - இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கோமெஸ் (11-வது நிமிடம்), ஸ்மித் ரோவே (57-வது நிமிடம்), லோடர் (59-வது மற்றும் 71-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

201710150123428313_1_u17-mexico._L_styvp

கொல்கத்தாவில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜப்பான் - நியூ கலிடோனியா அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஜப்பானின் நாகுமுரா 7-வது நிமிடத்திலும், நியூ கலிடோனியாவின் ஜெனோ 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

கவுஹாத்தியில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள மெக்சிகோ - சிலி அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணியினரும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை, இதனால் இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது.

லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இரண்டாம் கட்டமாக நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. நாளைய ஆட்டங்களில் கொலம்பியா - ஜெர்மனி, பராகுவே - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/15012341/1123120/france-and-england-won-u17-world-cup-league-matches.vpf

Link to comment
Share on other sites

யு-17 உ.கோப்பை; ஜெர்மனி மாஸ்டர் கிளாஸ்: கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி

 

 
germany

பிபா யு-17 உலகக்கோப்பை: கொலம்பியாவுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜெர்மனி அணி வீர்ர்கள்.   -  படம். | ஏ.பி.

ஜெர்மனிக்கும் கொலம்பியாவுக்கும் இடையே நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் 4-0 என்று ஜெர்மனி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அபாரமானத் திறமையுடன் தன் சக்தியையும் பயன்படுத்தினர் ஜெர்மன் வீரர்கள். கேப்டன் மற்றும் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஜான் ஃபியட் ஆர்ப் 7வது மற்றும் 65வது நிமிடங்களில் கோல் வலையைத் தாக்க, யான் பைசக் 39-வது நிமிடத்திலும் ஜான் யெபோவா 49வது நிமிடத்திலும் கோல்களை அடித்து காலிறுதிக்கு ஜெர்மனியை இட்டுச் சென்றனர்.

காலிறுதியில் பிரேசில் அல்லது ஹோண்டுராஸ் அனியை அக்டோபர் 22-ம் தேதி ஜெர்மனி அணி எதிர்கொள்கிறது.

பிரேசில், ஹோண்டுராஸை வீழ்த்தி விட்டால் பிறகு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பிரேசில் அணிகள் மோதும் போட்டியில் ரசிகர்கள் விருந்துக்கு குறைவிருக்காது.

ஆனால் கொலம்பிய தடுப்பாட்ட வீரர்கள் 4 பேர் மற்றும் கோல் கீப்பர் கெவின் மையர் ஆகியோர் செய்த தவறுகளே 4 கோல்கள் விழுந்ததற்குக் காரணம்.

சில வேளைகளில் தடுப்பாட்ட வீரர்களின் தவறுகள் காமெடியாகக் கூட ஆனது. இந்திய அணியை 2-1 என்று வீழ்த்திய கொலம்பிய அணிக்கு இந்தப் போட்டி மறக்க வேண்டிய போட்டியாக மாறிப்போனது.

இன்னொரு முக்கிய வீரர் லியாண்ட்ரோ கம்பாஸ், இவரும் அன்று இடது புறத்தில் இந்திய அணிக்கு எதிராக பயங்கரமாக ஆடினார், ஆனால் அவரை இரண்டாவது பாதியில்தான் கொலம்பியா களமிறக்கியது, ஆனால் இவர் இறங்கும்போதே கொலம்பிய அணி 0-2 என்று கோல்களில் பின் தங்கியிருந்தது.

இன்றும் காம்பாஸ் அருமையான சில மூவ்களில் அபாயகரமாகத் திகழ்ந்தார், ஆனால் ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்கள் சுவராக நின்றனர்.

உடலளவில் நன்கு வளர்ந்திருந்த ஜெர்மனி வீரர்கள், கொலம்பியர்களின் தந்திரமான தொலைதூர பாஸ் ஆட்டத்தை முறியடித்தனர், தூக்கி அடித்த ஷாட்களில் பல ஜெர்மனி வசம் சிக்கியதே நடந்தது.

ஜெர்மனி வலது புற வீர்ர் யெபோவா மற்றும் இடது புற வீரரான டெனிஸ் ஜாஸ்ட்ரெசெம்ப்ஸ்கி இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இருவரும் இருபுறமும் அபாயகரமாக, வேகமாக ஆடினர். கேப்டன் ஆர்ப் எப்போதும் போல் மிகச்சிறப்பாக ஆடினார். கொலம்பியர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

தொடக்கத்தில் யெபோவா பாஸை கேப்டன் ஆர்ப் எடுத்துக் கொண்டு சென்ற போது கொலம்பிய கோல் கீப்பருடன் ஒன் டு ஒன் என்ற நிலை ஏற்பட்டது. இதில் முதல் ஷாட்டை கோல் கீப்பர் சரியாக சேகரிக்கவில்லை, பந்து மீண்டும் ஆர்ப்பிடம் வர இடது காலால் ஒரே உதையில் வலையின் இடது மேல் மூலைக்கு பந்து கதறிக்கொண்டு கோல் ஆனது. ஜெர்மனி முன்னிலை பெற்றது.

14வது நிமிடத்தில் கொலம்பியா ஒரு அருமையான நகர்வில் பந்தைக் கொண்டு செல்ல அந்த அணியின் ராபர்ட் மேஜிஸ் இடது காலால் அடித்த ஷாட் கடினமான கோணமாக அமைந்ததால் கோலைத் தவறவிட்டது.

கொலம்பிய கோல் கீப்பர் மையர் பல தருணங்களில் பந்தைப் பிடிக்கத் திணறினார். இவரது திணறல் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்துக்கு மேலும் உற்சாகம் அளிப்பதாக அமைந்தது.

39வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் யான் பைசெக்கை கொலம்பிய வீரர்கள் கவர் செய்யவில்லை, மார்க் செய்யப்படாத அவர் சக்தி வாய்ந்த தலை ஷாட்டினால் 2-வது கோலை அடித்தார்.

இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி ஆதிக்கம் தொடர, கொலம்பிய தடுப்பாட்டம் சொதப்ப ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

4-வது கோல் காமெடியான தடுப்பாட்டத்தினால் வந்ததுதான். கொலம்பிய வீரர் கில்லர்மோ டெகு, பந்தை தங்கள் கோல் கீப்பருக்கு பின்-பாஸ் செய்யும் முயற்சியில் பந்தை ஜெர்மன் கேப்டன் ஆர்ப்பின் உடலில் வாங்கச் செய்தார், ஆர்ப் விடுவாரா கோல் கீப்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை கோலாக மாறியது.

http://tamil.thehindu.com/sports/article19871955.ece?homepage=true

Link to comment
Share on other sites

விறுவிறுக்கும் உலகக்கோப்பை... கிறுகிறு நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பம்! #FIFAU17WC #FootballTakesOver

 
Chennai: 

உலகக்கோப்பை (U-17) குரூப் சுற்றுப் போட்டிகள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்களாக நடந்த இந்தப் போட்டிகளில், போட்டிக்குத் தலா 3.5 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. இனி அனைத்தும் நாக் அவுட் போட்டிகள். தோல்வியடைந்த அணி நடையைக் கட்ட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் கோல் அடிக்கவில்லை எனில், ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். இதுவரையிலான போட்டிகளில் பெரிதாக ஒரு ஸ்டார் உருவாகவில்லை. ஆனால் இனி ஒருவர் உருவெடுக்க வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை

 

 

போட்டி 1 : அக்டோபர்  16

கொலம்பியா - ஜெர்மனி

இரண்டில் எது வெற்றிபெறும் எனக் கணிக்க முடியாது. இரண்டு அணிகளுமே குரூப் சுற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைக் குவித்துள்ளன. இருந்தாலும், கொலம்பியாவின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் குரூப் சுற்றின் கடைசிப்போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய விதம் பாராட்டுக்குரியது. போட்டி நடக்கும் டெல்லி நேரு மைதானம் அவர்களுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயம். ஜெர்மனியையும் குறைத்து மதிப்பிட முடியாது.

நேரம்: 5 மணி

இடம்: டெல்லி

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: ஜுவான் பெனலஸா (கொலம்பியா)

கால்பந்து

போட்டி 2 : அக்டோபர்  16

பராகுவே - அமெரிக்கா

இந்தப் போட்டியில் கோல் மழையை எதிர்பார்க்கலாம். இரு அணிகளும் அட்டாக்கிங்கில் மிரட்டும். அதேநேரத்தில் சிறுபிள்ளைத்தனமாக எதிரணியைக் கோலடிக்கவும் விட்டுவிடுவார்கள். பராகுவே விளையாடிய மூன்று போட்டியிலுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால், அவர்களது கை ஓங்கியிருப்பது போலத் தெரிகிறது.

நேரம்: இரவு 8 மணி

இடம்: டெல்லி

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: ஆலன் ராட்ரிகஸ் (பராகுவே)

 

போட்டி 3: அக்டோபர் 17

ஈரான் - மெக்ஸிகோ

இந்தப் போட்டியில் ஈரான்தான் வெல்லும் என அடித்துச் சொல்லலாம். ஜெர்மனிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபின், அவர்கள்தான் இந்த டோர்னமென்ட்டின் சிறந்த டீம் என உருவெடுத்துள்ளது. எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாமல் இந்தச் சுற்றுக்குள் நுழைந்துள்ள ஒரே அணி மெக்ஸிகோதான். எனவே ஈரானுக்கு பெரிதாக வேலை இருக்காது. எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கலாம்.

நேரம்: 5 மணி

இடம்: கோவா

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: யுனெஸ் டெல்ஃபி (ஈரான்)

பிரான்ஸ்

போட்டி 4: அக்டோபர் 17

பிரான்ஸ் - ஸ்பெயின்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த மேட்ச்தான். இதுவரையில் அதிகக் கோல்கள் அடித்திருப்பது பிரான்ஸ் அணிதான். அந்த அணியின் அமைன் கௌரிதான் இதுவரை இத்தொடரில் அதிகக் கோல்கள் அடித்தவர். ஸ்பெயின் நன்றாக ஆடினாலும் அவர்களால் இந்தியச் சூழலுக்கு இன்னும் முழுமையாகத் தங்களைத் தயார் செய்துகொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு கெளகாத்தியும் உஷ்ணமாக இருக்கும். இரு அணிகளும் இதுவரையிலும் தங்கள் முழு வேகத்தைக் காட்டவில்லை. இந்த மேட்ச்சில் அதை எதிர்பார்க்கலாம். 

நேரம்: 5 மணி

இடம்: கெளகாத்தி

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: அமைன் கெளரி(பிரான்ஸ்)

 

போட்டி 5: அக்டோபர் 17

இங்கிலாந்து - ஜப்பான்

இங்கிலாந்து குரூப் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, அதிக கோல் அடித்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘டீம் பிளே’ விளையாடுவதில் இங்கிலாந்து அணி பக்கா. ஈராக், மெக்ஸிகோ, சிலி அணிகளைத் தோற்கடித்த விதமே அதற்கு சான்று. அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கரும் அதிக கோல் அடித்தவருமான ஜேடன் சான்சோ,  டார்ட்மண்ட் க்ளப்புக்குத் திரும்பியது அணிக்குச் சற்றுப் பின்னடைவு. இருந்தாலும் ஜப்பான் குழுவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை. ஆட்டம் பெனால்டி வரை சென்றால் மட்டுமே இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு தடைபடும்!

நேரம் : இரவு 8 மணி

இடம்: கொல்கத்தா

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: ஏஞ்சல் கோமஸ் (இங்கிலாந்து)

கோமஸ்

போட்டி 6: அக்டோபர் 17

மாலி – ஈராக்

இலக்கை நோக்கி ஷாட்களை அடித்தவகையில் கணக்கிட்டால், இந்தத் தொடரில் மாலி அணிதான் பெஸ்ட் அட்டக்கிங்கைப் பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்களில் அவர்கள் இலக்கை நோக்கி அடித்த ஷாட்கள் 85. தவிர, பந்தைக் கடத்திச் செல்லும் வேகம், அவர்களது ஆட்டம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஈராக் அணி அவர்களுடைய டாப் ஸ்கோரர் முகமது தாவூத் இல்லாமல் களமறிங்குகிறது. இது மாலி அணிக்குச் சாதகமாக இருக்கும். மாலி வெற்றிபெறுவதில் சிரமம் இருக்காது என்றே தெரிகிறது.

நேரம்: இரவு 8 மணி

இடம்: கோவா

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: ஜெமோசா  ட்ரயோரே (மாலி)

 

போட்டி 7: அக்டோபர் 18 

கானா - நைஜர்

தங்களால் எவ்வளவு உக்கிரமாக விளையாட முடியும் என்பதை இந்தியாவுக்கு எதிராகக் காட்டிவிட்டது கானா அணி. வேகம், நேரடித் தாக்குதல், அட்டாக்கில் ஒழுங்கு, டிஃபன்ஸில் கெத்து என எல்லா பாக்ஸையும் டிக் அடித்திருந்தது. அந்த அணியின் வீரர்கள் தங்களால் யாரையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

நேரம்: மாலை 5 மணி

இடம்: மும்பை

கவனிக்கப்பட வேண்டிய வீரர்:  எரிக் அயியா (கானா)

பாலின்ஹோ

போட்டி 8: அக்டோபர் 18 

பிரேசில் - ஹோண்டுரஸ்

சொல்லவே வேண்டியதில்லை. பிரேசில் கண்டிப்பாக வெற்றிபெறும். ஹோண்டுரஸ் கடந்த மூன்று போட்டிகளில் 10 கோல்கள் வாங்கியுள்ளது.  அந்த எண்ணிக்கை 15 ஆக உயரவும் வாய்ப்புள்ளது. காரணம், பிரேசில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இருந்தாலும், கால்பந்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே!

நேரம்: இரவு 8 மணி

இடம்: கொச்சி

 

கவனிக்கப்பட வேண்டிய வீரர்: பாலினியோ (பிரேசில்)

http://www.vikatan.com/news/sports/105153-the-knock-out-rounds-of-fifa-under-17-football-world-cup-begins-from-today.html

Link to comment
Share on other sites

வியா ஹாட்ரிக் கோல்... கால் இறுதியில் அமெரிக்கா, ஜெர்மனி! #FootballTakesOver #FIFAU17WC

17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் கால் இறுதிப் போட்டிக்கு, அமெரிக்காவும் ஜெர்மனியும் தகுதி பெற்றுள்ளன. டெல்லி நேரு மைதானத்தில் நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில், முறையே பராகுவே மற்றும் கொலம்பியாவை அந்த அணிகள் வீழ்த்தின.

ஜெர்மனி

 

மாலை 5 மணிக்கு நடந்த `First Round of 16' போட்டியில் ஜெர்மனி - கொலம்பியா அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஜெர்மனி அணியின் கை ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கொலம்பியா கோல்கீப்பர் கெவின் மியர் தவறிழைக்க, அதைப் பயன்படுத்தி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் ஜெர்மனி அணியின் கேப்டன் ஜான் ஃபிடே ஆர்ப். அதன் பிறகும் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 39-வது நிமிடத்தில் சவேர்தி செடின் அடித்த கார்னரை தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தார் ஜெர்மனி வீரர் யான் பிஸ்ஸெக். முதல் பாதியில் 2 - 0 என முன்னிலை பெற்றது ஜெர்மனி.

இரண்டாம் பாதி தொடங்கியதும் கொலம்பியாவுக்கு மேலும் அதிர்ச்சியளித்தனர் ஜெர்மனி வீரர்கள். ஆட்டம் மீண்டும் தொடங்கிய 4-வது நிமிடத்தில், கேப்டன் ஃபிடே ஆர்ப் கொடுத்த பாஸை கோலாக்கினார் ஜான் எபோவா. அவரது ஆட்டம் கொலம்பிய வீரர்களை ஆட்டுவித்தது. முதல் பாதியிலேயே அவர் பல கோல்கள் அடித்திருப்பார். ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில்கூட, அவர் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டுத் திரும்பியது.

ஜெர்மனி

75-வது நிமிடத்தில் ஃபிடே ஆர்ப் தனது இரண்டாவது கோலை அடிக்க, 4 - 0 என்ற முன்னிலை பெற்றது ஜெர்மனி. லீக் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட கொலம்பிய அணி, ஜெர்மனி வீரர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு முன் நிலைகுலைந்துபோனது. இந்தப் போட்டியில் மஞ்சள் அட்டை பெற்ற அமெரிக்க வீரர் டெனிஸ் ஜாஸ்ட்ரம்ப்ஸ்கி, கால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது. ஜெர்மனி அணி கால் இறுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசில் அல்லது ஹோண்டுராஸ் அணியைச் சந்திக்கும். அந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும்.

அமெரிக்க அணி Round of 16' போட்டியில் பராகுவேவைப் பதம்பார்த்தது. இரவு 8 மணிக்கு நடந்த இந்தப் போட்டியில் அமெரிக்க அணி 5 - 0 என வெற்றி கண்டது. அந்த அணி வீரர் டிம் வியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இங்கிலாந்து - ஜப்பான் போட்டியில் வெல்லும் அணியுடன், அமெரிக்கா கால் இறுதியில் மோதும். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறும். 

அமெரிக்கா - பராகுவே மோதிய போட்டியில், 19-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்படும் வரை ஆட்டம் சமமாகத்தான் சென்றது. அமெரிக்காவின் வியா அந்த கோலை அடித்த பிறகும்கூட, பராகுவே அணி நம்பிக்கையுடன் போராடியது. அடிக்கடி அமெரிக்க அணியின் பகுதியை டார்கெட் செய்தனர் பராகுவே வீரர்கள். ஆனால், அவர்களால் கோல்தான் அடிக்க முடியவில்லை. அமெரிக்காவும் அவ்வப்போது கவுன்ட்டர்  அட்டாக்கில் ஈடுபடத் தவறவில்லை. முதல் பாதி 1 - 0 என முடிவுக்கு வந்தது.

அமெரிக்கா

இரண்டாம் பாதி தொடங்கியதும் வியாவையும் அமெரிக்காவையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பராகுவேயின் தடுப்பாட்டத்தை அவர்கள் தகர்த்தெறிந்தனர். 53-வது நிமிடத்தில் அமெரிக்க இரண்டாவது கோலை அடித்தது. பாக்ஸுக்கு வெளியில் இருந்து வியா அடித்த பந்து, யாரும் நம்பாத வகையில் வலைக்குள் புகுந்தது. பராகுவே வீரர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த 10 நிமிடத்திலேயே அணியின் மூன்றாவது கோல் அடித்தார் சார்லேடன். நட்சத்திர நாயகன் சார்ஜென்டும் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, 77-வது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலை அடித்து அசத்தினார் வியா. இறுதியில் 5 - 0 என அபார வெற்றி பெற்றது அமெரிக்கா.

 

இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. கோவாவில் 5 மணிக்கு நடக்கும் போட்டியில் ஈரான் - மெக்ஸிகோ ஆட்டம் நடக்கிறது. 8 மணிக்கு அதே மைதானத்தில் மாலி - ஈராக் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5 மணிக்கு கவுஹாத்தியில் நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. கொல்கத்தாவில் 8 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து - ஜப்பான் அணிகள் கால் இறுதி வாய்ப்பை எதிர்நோக்கி மோதுகின்றன.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/105221-germany-and-usa-entered-quarter-finals-of-the-under-17-football-world-cup.html

Link to comment
Share on other sites

ஈரான் எதிர் மெக்சிக்கோ 2- 1 என்ற கோல் கணக்கில் ஈரான் வென்று முதன் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஈரான், ஸ்பெயின், மாலி, இங்கிலாந்து அணிகள் வெற்றி

 

 
 

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ஈரான், ஸ்பெயின், மாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

 
 
 
 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஈரான், ஸ்பெயின், மாலி, இங்கிலாந்து அணிகள் வெற்றி
இங்கிலாந்து வீரர்கள்
 
புதுடெல்லி: 
 
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் கடந்த திங்கள்கிழமை (16-ம் தேதி) தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) நான்கு போட்டிகள் நடைபெற்றது.
 
கோவாவில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் ஈரான், மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 7-வது நிமிடம் ஜெர்மனியின் ஈரானின் ஷரிஃபி பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். அடுத்து 11-வது நிமிடமே ஈரானின் சையத் கோல் அடித்தார். அடுத்து 37-வது நிமிடம் மெக்சிகோவின் டி லா ரோசா தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் ஈரான் 2-1 என முன்னிலை பெற்றது.
 
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதன்மூலம் ஈரான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
 
201710180822121560_1_u17-iran._L_styvpf.
 
கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் மாலி - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் மாலி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. மாலி அணியில் திராமே (25), நிதியாயே (33, 90+4), கொனேட் (73) மற்றும் கமரா (87) ஆகியோர் கோல் அடித்தனர். ஈராக் தரப்பில் கரீம் 85-வது நிமிடம் கோல் அடித்தார். இதன்மூலம் மாலி அணியும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
 
201710180822121560_2_u17-mali._L_styvpf.
 
கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய போட்டியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்தன. பிரான்சின் பிண்டோர் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஸ்பெயினின்  மிராண்டா 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் இரண்டாம் பாதி நேர ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அபுல் ருயிஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
 
201710180822121560_3_u-17-spain._L_styvp
 
கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியின் முழுநேர முடிவில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
 
இன்று நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கானா - நைஜர், பிரேசில் - ஹாண்டுரஸ் அணிகள் மோதுகின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/18082203/1123615/iran-spain-mali-england-won-u17-fifa-worldcup-league.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.