Jump to content

U -17 உலகக் கோப்பை சுவாரஸ்யங்கள்!


Recommended Posts

பிரேசிலின் ஹோம் கிரவுண்டான கொச்சி... அடிபொலி ரெஸ்பான்ஸ்! #FIFAU17WC #FootballTakesOver

 

Chennai: 

கேரளா, கடவுளின் தேசம் மட்டுமல்ல, கால்பந்தின் தேசமும்கூட. ஐ.எஸ்.எல் தொடரின் ஒவ்வொரு போட்டியின்போதும் 60,000 இருக்கைகள் கொண்ட கொச்சி ஜவஹர் லால் நேரு மைதானம் மஞ்சள் மயமாகக் காட்சியளிக்கும். இதோ, அதே மஞ்சள் ஜெர்ஸியுடன் தற்போது கொச்சியில் நடந்துவரும் உலகக் கோப்பையிலும் (FIFAU17WC) மைதானத்தை நிறைக்கின்றனர் கேரள ரசிகர்கள். இந்தியா, உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பின், கொச்சி ரசிகர்கள் ஏகமனதாக பிரேசிலை ஆதரிக்க முடிவுசெய்துவிட்டனர். பிரேசில் அணியும் கொச்சியில் விளையாடுவதை, பிரேசிலில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் விளையாடுவதைப்போல உணர்கிறது. அதனால்தான் கொச்சியில் நடந்த மூன்று போட்டிகளிலும் அவர்களால் வெல்ல முடிந்தது. 

FIFAU17WC

 

புதன்கிழமை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் - ஹோண்டுராஸ் அணிகள் மோதின. இது, பிரேசில் அணி கொச்சியில் விளையாடும் கடைசிப் போட்டி. அதுவும் நாக் அவுட் சுற்று. பார்க்காமல் இருக்க முடியுமா. ஹோண்டுரஸை பிரேசில் எளிதில் வீழ்த்திவிடும் எனத் தெரியும். வீழ்த்தினால், கொல்கத்தாவில் நடக்கவுள்ள காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும் பிரேசில். அந்தப் போட்டியைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியாது. அதனால்,  ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே, மைதானத்தை முற்றுகையிட்டனர் ரசிகர்கள். அதில் சில டீன் ஏஜ் சிறுவர்கள் கன்னத்தில் பிரேசில் தேசியக்கொடியை வரைந்து, கையில் ஒரு பேனருடன், பிரேசில் அணியின் பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த பேனரில்  `‛We’ll miss you Brazil’ என எழுதப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்தச் சிறுவர்களை அங்கிருந்து விரட்டிக்கொண்டேயிருந்தனர். காவலர்கள் வேறு பக்கம் சென்றதும், மீண்டும் அந்த கேட் அருகே கொடிப்பிடித்து நின்றனர் சிறுவர்கள். மீண்டும் போலீஸார் விரட்டினர். மீண்டும் சிறுவர்கள் முற்றுகையிட்டனர்.

ஒருவழியாக, பிரேசில் அணியின் பஸ் வந்துநின்றது. மொதுமொதுவென சிறுவர்கள் அங்கு படையெடுத்தனர். சிறுவர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் கூடிவிட்டனர். கும்பல் இப்போது கூட்டமாகிவிட்டது. போலீஸாரால் அவர்களை விரட்டமுடியவில்லை. மாறாக, அவர்களும் பிரேசில் வீரர்கள் பஸ்ஸில் இருந்து இறங்குவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவுட் ஆஃப் போக்கஸ் என்றாலும் சிறுவர்கள் செல்ஃபி எடுக்கத் தவறவில்லை. இந்தியாவில், அதுவும் கொச்சியில் தங்களுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைப்பதை எதிர்பார்த்திராத பிரேசில் வீரர்கள், சிறுவர்களை நோக்கி தம்ஸ் அப் காட்டியவாறு மைதானத்தை நோக்கிச் சென்றனர். மறுபுறம் இன்னொரு பஸ்ஸிலிருந்து  ஹோண்டுரஸ்  அணி சத்தமின்றி இறங்கிச் சென்றது. 

FIFAU17WC


மேட்ச் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அப்படியே விளையாடியது பிரேசில். பிரென்னர் 11வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கினார். முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மார்கஸ் ஆன்டோனியா ஒரு கோல் அடிக்க பிரேசில் 2-0 என முன்னிலை. இரண்டாவது பாதி தொடங்கிய 10 நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார் பிரென்னர். பிரேசில் அணி கோல் மழையால் ரசிகர்களை நனைத்தது. மைதானத்துக்குள் பட்டாசுகளைக் கொண்டுவரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதானத்துக்கு வெளியே லைவ் ஸ்ட்ரீமிங்கில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கைகளில் பட்டாசு இருந்தன. மைதானத்துக்குள் ஒரு கோல் அடித்ததும், வெளியே இருந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். ஒவ்வொரு கோலுக்கும் சரவெடி. பிரேசில் மொத்தம் அடித்தது மூன்று கோல்கள். ஆனால், அவர்களிடம் 10 கோல்களைக் கொண்டாடும் வகையில் வெடி இருந்தது. அவர்கள் எதிர்பார்த்த கோல்கள் அடிக்கப்படாததால், மீதமிருந்த மொத்த வெடிகளையும் போட்டி முடிந்தபின் வெடித்தனர். 

கோல்களைக் கொண்டாடிய ரசிகர்கள், பிரேசில் வீரர்கள் தங்களுக்குள் பாஸ் செய்து, நேரத்தை வீணடித்ததால் உச் கொட்டினர். ஹோண்டுரஸ் வீரர் லூயிஸ் பல்மா அடித்த ஷாட், கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியபோது பெருமூச்சுவிட்டனர். மற்றொரு கோல் வாய்ப்பை பிரேசில் கோல் கீப்பர் கேப்ரியல் பிரஸோ தடுத்தபோது, கைதட்டி வரவேற்றனர். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் பிரேசில் ரசிகர்களாகவே மாறி இருந்தனர் கொச்சி ரசிகர்கள். அவர்களைப் பொறுத்தவரை, இன்னும் நான்கைந்து கோல்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால், ஜெர்மனிக்கு எதிரான காலிறுதியைக் கருத்தில்கொண்டு, இரண்டாவது பாதியில் கீ பிளேயர்களை பெஞ்சில் உட்கார வைத்தார் பிரேசில் பயிற்சியாளர் கார்லஸ் அமடேயு. வீரர்கள் மைதானத்தில் இருந்து பெஞ்சுக்குத் திரும்பும்போது, ஒவ்வொருவருக்கும் எழுந்துநின்று கைதட்டி மரியாதை செலுத்தினர் ரசிகர்கள்.

FIFAU17WC

 


இந்த உலகக் கோப்பையில் விளையாடிய பல பிரேசில் வீரர்கள், எதிர்காலத்தில் சீனியர் அணியில் இடம்பெறவாய்ப்பிருக்கிறது. அவர்களது வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும் வகையிலான வரவேற்பைக் கொடுத்திருக்கிறது கொச்சி. காலிறுதி நடக்கவுள்ள கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்னும் அனல் பறக்கும் என்றாலும், பிரேசில் அணி நிச்சயம், கொச்சி ரசிகர்களை மிஸ் செய்யும்.

 

 

http://www.vikatan.com/news/sports/105344-kochi-fans-support-brazil-football-team.html

Link to comment
Share on other sites

ஈரான் இந்தியாவில் ஜொலிப்பது ஏன்? #FIFAU17WC #FootballTakesOver

இந்தியாவில் நடந்துவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை (#FIFAU17WC) வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெர்மனியை 4-0 எனப் பந்தாடியது ஈரான். கால்பந்து உலகின் மொத்தப் பார்வையும் ஈரான் மீது திரும்பியது. விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி. அடித்தது 12 கோல்கள். கன்சீட் செய்தது இரண்டு கோல்கள் மட்டுமே. FIFA U-17 உலகக் கோப்பையில் ஈரான் அணியின் இந்த செயல்பாட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோவாவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறிவிட்டது ஈரான். இதுபோன்ற பெரிய தொடரில் காலிறுதிக்கு முன்னேறுவது ஈரான் கால்பந்து வரலாற்றில் இதுவே முதன்முறை. யார் கண்டது, காலிறுதியில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து, அரையிறுதிக்கு முன்னேறினாலும் ஆச்சர்யமில்லை.

FIFAU17WC

 

இந்த உலகக் கோப்பைக்கு முன் ஈரான்...
3 ஆட்டங்கள்
பெஸ்ட் ரிசல்ட்: ரவுண்ட் ஆஃப் 16
3 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி
அடிக்கப்பட்ட கோல்கள் :10
வாங்கிய கோல்கள்: 14
 
இந்த உலகக் கோப்பையில் ஈரான்...

4 போட்டிகள் 

4 வெற்றி

அடித்த கோல்கள்: 12
வாங்கிய கோல்கள் : 2

பயிற்சியாளர் அப்பாஸ் சமனியன் தலைமையில் ஈரான் அணி ஜொலிக்க என்ன காரணம்? எந்தெந்த விஷயங்களில் ஈரான் மற்ற அணிகளிடம் இருந்து வேறுபடுகிறது. ஓர் அலசல்...

1. துரிதமாக கேம்பிளானை மாற்றுவது... 

ஈரானின் வெற்றி ரகசியம் சிம்பிள். அலட்டல் இல்லாமல் பேசிக் கேம் பிளானுடன் விளையாடுகின்றனர். கோல் ஏதும் வாங்காமல் இருப்பதே அவர்களது முதல் இலக்கு. கோல் அடிப்பது இரண்டாம் பட்சம்தான். வாய்ப்பு கிடைத்து கோல் அடித்து விட்டால், அந்த அட்வான்டேஜை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் திட்டம். கிட்டத்தட்ட, இது ஸ்பெயினில் உள்ள அட்லெடிகோ மாட்ரிட் கேம் பிளான் ரகம். எதிரணியினர் வசம் பந்து இருந்தால், பந்தைப் பிடுங்க ரொம்ப மெனக்கிடக் கூடாது. தங்கள் எல்லையிலேயே நின்றுகொண்டு, எதிரணி பந்தைக் கடத்திச் செல்வதற்கான இடத்தை வழங்காமல், அவர்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளனர். அதேநேரத்தில், எதிரணி தவறு செய்யும்வரை காத்திருந்து, கவுன்ட்டர் அட்டாக் மூலம், குறைவான பாஸ், மின்னல் வேகத்தில் கோல் அடிப்பது ஈரான் வீரர்கள் ஸ்டைல். அந்த ஸ்டைலுக்கு ஏற்றாற்போல விளையாடக் கூடிய யூனிஸ் டெல்ஃபி, அலாயர் சயத் ஆகியோரை ஸ்ட்ரைக்கர்களாகக் கொண்டிருப்பது அணியின் ப்ளஸ். 

FIFAU17WC

2. கூட்டு முயற்சியும் ஒற்றுமையும்

ஈரான் அணியிடம் வியக்கும் இன்னொரு விஷயம், அணியில் உள்ள 21 வீரர்களும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், களத்தில் 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் வெறியாக இருக்கின்றனர். இந்த டீம் ஸ்ப்ரிட்தான் அவர்களுக்கு இங்கே அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்க உதவியாக இருக்கிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு சப்ஸ்டிட்யூட் வீரர்கள், பிளேயிங் லெவனில் உள்ள வீரர்களை முடிந்தவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இது அரிதான செயல். ஏனெனில்,  பெஞ்சில் இருக்கும் ஒவ்வொரு வீரனும், களத்தில் இருப்பவன் எப்போது தவறு செய்வான் எனக் காத்திருப்பான். அந்த ஏக்கம், காழ்ப்புணர்ச்சி எதுவும் ஈரான் வீரர்களிடம்  இல்லை. “நாங்கள் ஓரே அணி. ஒற்றுமையாலும் கூட்டு முயற்சியாலும் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துள்ளோம்.’’ எனும் முகமது கோபெய்ஷாவியின் வார்த்தைகளில் மிளர்கிறது அணியின் டீம் ஸ்பிரிட்.

3. Possession இல்லாவிடினும் கட்டுப்பாடு

கால்பந்தில் பந்தை நீண்ட நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (possession) மிக முக்கியம். possession சதவிகிதம் அதிகம் வைத்திருக்கும் அணி, ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும். விதிவிலக்காக, possession சதவிகிதம் குறைவாக வைத்திருந்து, டெக்னிக்கல் மூவ் மூலம் சிலர் கோல் அடிப்பர். ஈரான் அணியைப் பொறுத்தவரை நான்கு போட்டிகளிலும் possession, எதிரணியைவிடக் குறைவாகவே வைத்திருந்தது. “பந்து எங்கள் வசம் இல்லாதபோது எதிரணியிடம் இருந்து ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயல்வது மிகவும் கடினம். பந்தைக் கட்டுக்குள் கொண்டுவர அதிக ஆற்றலை இழக்க நேரிடும். ஆனால், நாங்கள் எங்களின் முழு சக்தியையும் கொடுத்து வருகிறோம். அதனால்தான், possession அதிகமாக இல்லாதபோதும் வெற்றிபெறமுடிகிறது ’’ என்றார் மிட்ஃபீல்டில் அணியை வழிநடத்தும் முகமது ஷர்ஃபி.

Possession விகிதம்

ஈரான்  40 % – 60 % கினியா

ஈரான் 43 % – 57 % ஜெர்மனி

ஈரான் 48 % – 52 % கோஸ்டா ரிகா

ஈரான் 35 % – 65 % மெக்ஸிகோ

FIFAU17WC

4. ஒவ்வொரு பொசிஷனிலும் தேர்ந்த வீரர்கள்

ஈரானின் முதல் போட்டியில் நடுகளத்தில் பட்டையைக் கிளப்பி வெற்றிக்கு வழிவகுத்தார் முகமது ஷர்ஃபி. இரண்டாவது போட்டியில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது சய்யத், டெல்ஃபி அடங்கிய முன்கள கூட்டணி. கோஸ்டா ரிகாவுக்கு எதிரான மேட்ச்சில் நாயகனாக உருவெடுத்தார் கோபெய்ஷாவி. கடைசிவரை கோல் கம்பத்தை முற்றுகையிட்ட மெக்ஸிகோ அணியின் வெற்றியைத் தடுத்து, ஈரான் காலிறுதிக்கு நுழைய முக்கிய காரணமாக இருந்தார் கோல் கீப்பர் அலி கோலம் ஜடேயா. 

கூட்டு முயற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது ஈரான் அணியின் தாரக மந்திரமாக இருந்தாலும், மிட்ஃபீ்ல்ட், டிஃபன்ஸ், ஃபார்வேர்டு, கோல் கீப்பிங் என ஒவ்வொரு பொசிஷனிலும் தேர்ந்த வீரர்களைப் பெற்றிருப்பது ஈரானுக்கு ப்ளஸ்.

 

ஒன்று மட்டும் நிச்சயம். வரலாறு படைப்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/105400-iran-minnows-in-football-history-is-determined-to-make-history-of-their-own.html

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை: நேரில் ரசித்த ரசிகர்களின் வருகை 10 லட்சத்தை தாண்டியது

 

இந்தியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து ரசித்துள்ளனர்.

 
 
U-17 உலகக்கோப்பை: நேரில் ரசித்த ரசிகர்களின் வருகை 10 லட்சத்தை தாண்டியது
 
இந்தியாவில் முதன்முறையாக பிஃபா நடத்தும் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லி, கொல்கத்தா, கோவா, கேரளாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் போட்டியில் மூழ்கி இருக்கும் இந்திய ரசிகர்கள், கால்பந்திற்கு ஆதரவு கொடுப்பார்களா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரையிலான போட்டிகளை 10 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ரசித்து அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

201710202106432857_1_fifa002-s._L_styvpf.jpg

இதுவரை 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை 10 லட்சத்து 7 ஆயிரத்து 396 பேர் ரசித்துள்ளனர். இன்னும் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 1985-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற தொடரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 976 ரசிகர்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/20210629/1123981/FIFA-U17-World-Cup-Stadium-attendance-crosses-1-million.vpf

Link to comment
Share on other sites

பிபா யு 17 உலக கோப்பை கால்பந்து: அரை இறுதிச் சுற்றில் நுழைவது யார்? -இங்கிலாந்து - அமெரிக்கா இன்று பலப்பரீட்சை

 

 
21CHRELMALI

குவாஹாட்டியில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட மாலி அணி வீரர்கள்.   -  படம்: ரிது ராஜ் கன்வார்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று அமெரிக்க அணியை எதிர்த்து இங்கிலாந்து களம் இறங்குகிறது. மற்றொரு கால் இறுதிப் போட்டியில் கானாவும் மாலியும் மோதுகின்றன.

பிபா யு 17 கால்பந்து தொடரில் கோவாவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் கால் இறுதிப் போட்டியில் வலிமையான அணிகளாகக் கருதப்படும் இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோதுகின்றன. வலுவான கால்பந்து பின்னணியைக் கொண்ட இந்த இரு அணிகளும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அதனால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜப்பானை 5-3 என்ற கோல்கணக்கில் பெனாலிடி ஷூட் அவுட்டில் வென்று, இங்கிலாந்து அணி கால் இறுதியில் தடம் பதித்துள்ளது. கடந்த போட்டியில் ஜப்பானின் கோல் அடிக்கும் முயற்சிகளை சாதுர்யமாக தடுத்த கோல் கீப்பர் கர்டிஸ் ஆண்டர்சனை இப்போட்டியில் இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஏஞ்சல் கோமஸ், ஹட்சன் ஒடோய், பிலிப் போடன் ஆகியோர், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் தங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடும்.

இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கூப்பர், “இந்தத் தொடரில் இதுவரை நாங்கள் தோல்வியே தழுவதில்லை. இது எங்கள் ஆற்றலைப் பறைசாற்றும் வகையில் உள்ளது. அமெரிக்காவை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர். இப்போட்டியில் நாங்கள் தாக்குதல் ஆட்ட முறையை பயன்படுத்துவோம்” என்றார்.

இங்கிலாந்து அணியைப் போலவே அமெரிக்க அணியும் இன்றைய கால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியும் என்று தீவிரமாக நம்புகிறது. கேப்டன் ஜோஷ் சார்ஜெண்ட், டிம் வியா, அயோ அகினோலா ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவது அதன் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜான் ஹாக்வொர்த், “இந்தத் தொடரில் முதல் முறையாக ஒரு ஐரோப்பிய அணியை எதிர்த்து ஆடவுள்ளோம். இங்கிலாந்து அணி வலிமையானது என்பதையும், இத்தொடரில் அந்த அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். அதற்கு ஏற்றவாறு இன்றைய ஆட்டத்தில் வியூகங்களை வகுப்போம்” என்றார்.

 

கானா - மாலி மோதல்

குவாஹாட்டியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு கால் இறுதிப் போட்டியில், ஆப்பிரிக்க அணிகளான கானாவும், மாலியும் மோதுகின்றன.

யு17 தொடரில் ஏற்கெனவே 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கானா அணி, 3-வது முறை பட்டம் வெல்லும் கனவுடன் இருக்கிறது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தின் இறுதி ஆட்டத்தில் ஏற்கெனவே மாலி அணியை கானா 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இது கானா அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக எரிக் அயியா உள்ளார்.

“எங்கள் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் ஆடி கோப்பையை வெல்ல முயற்சிப்போம். எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழையும் எங்கள் வீரர்கள், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறி விடுகின்றனர். அதை சரிசெய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். கால் இறுதிப் போட்டியில் எங்கள் வீரர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று கானா அணியின் பயிற்சியாளர் சாமுவேல் பாபியன் கூறியுள்ளார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இராக்கை 5-1 என்ற கணக்கில் வென்றதால், கால் இறுதிப் போட்டியை அதிக தன்னம்பிக்கையுடன் மாலி அணி எதிர்கொள்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரரான லசானா டியாயே இந்த தொடரில் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளார். அதனால் அவரை மையமாக வைத்தே மாலி அணி செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article19894426.ece

Link to comment
Share on other sites

பூகம்பத்தை வென்ற 21 சிறுவர்கள்... மெக்சிகோ எழுகிறது! #FIFAU17WC #FuerzaMéxico

செப்டம்பர் 7, இரவு 11.49 மணியளவில் மெக்சிகோவின் சியாபஸ் மாநிலத்தைத் தாக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோல் 8.1 எனக் காட்டியது. மெக்சிகோவின் வரலாற்றில் இரண்டாவது சக்திவாய்ந்த பூகம்பம். இந்த நூற்றாண்டில் மெக்சிகோ கண்ட மிகப்பெரிய பூகம்பம். இந்த நிலநடுக்கம் நூறு மைல் தூரம் உணரப்பட்டது. 41,000 வீடுகள் சேதமடைந்தன. 98 பேர் உயிரிழந்தனர். சுனாமி எச்சரிக்கை, ஆறடி உயர அலைகள், நிலநடுக்கத்துக்குப் பிறகான 3,831 அதிர்வுகள் என மெக்சிகோ கொஞ்சம் ஆடிப்போயிருந்தது. 

கால்பந்து

 


20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி அவதிப்பட்டனர். ஹார்வி புயலின்போது தாங்கள் அமெரிக்காவுக்கு உதவியதால், பதில் உதவியை எதிர்பார்த்தனர் மெக்சிக்கர்கள். 'போன் சிக்னல் கிடைக்காததால்' (அப்படித்தான் காரணம் கூறினார்) ஒரு வாரம் கழித்து அனுதாபத்தைப் பதிவுசெய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். "அவர்கள் குற்றவாளிகள், போதை மருந்து கடத்துபவர்கள், ரேபிஸ்ட்ஸ்" என்று மெக்சிகர்களை தன் வாக்குசேகரிப்பின்போது வசைபாடிய மனிதனிடம் மனிதத்தை எதிர்பார்ப்பது சரியா? நம் தேசத்தைத் நாம்தான் தூக்கி நிறுத்த வேண்டுமென்பதை உணர்ந்துகொண்ட மக்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி எழுந்தனர்.

செப்டம்பர் 19, 32 ஆண்டுகளுக்கு முன்னர், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கிய பூகம்பத்தின் நினைவு தினத்தைக் காலை 11 மணியளவில் அனுசரித்துக்கொண்டிருக்கிறது மெக்சிகோ நகரம். நிலநடுக்கம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான விழிப்பு உணர்வுப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு மணி நேரத்தில், 1.14 மணியளவில் உணரப்பட்டது அந்த நிலநடுக்கம். சுமார் 20 விநாடிகள் தொடர்ந்து அதிர, ரிக்டர் அளவுகோளில் 7.1-ஆகப் பதிவானது. இம்முறை பாதிப்பு அதிகம். மக்கள் அதிகம் வசிக்கும் தலைநகர் என்பதால் உயிரிழப்பும் அதிகம். 370 பலிகள். 6011 பேர் காயம். மொத்தமாக ஸ்தம்பித்தது நிர்வாகம். கேஸ் லீகேஜ், தரைமட்டமான சர்ச், பள்ளிகள், மைதானங்கள் என பேரிழப்பு. இஸ்ரேல், துருக்கி, ஜப்பான் நாடுகள் மெக்சிகோவுக்கு மீட்புப் படைகள் அனுப்ப இறுதியாய் உதவிக்கரம் நீட்டியது அமெரிக்கா. ஆனாலும் தாமாகவே எழத் தொடங்கினார்கள். 

 

ஆயிரக்கணக்கான மக்கள், சாலைகளில் படுக்கை அமைத்து அங்கேயே உறங்கினர். சுயநலமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, வேகமாக மீண்டெழுந்தது மெக்சிகோ. 'திடமாக இரு மெக்சிகோ' என்பதை உணர்த்தும் #FuerzaMéxico என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரை நனைத்தது. "எல்லாம் முடிந்துவிட்டது" என்று அவர்கள் முடங்கிவிடவில்லை. இந்தச் சமயம் ஸ்பெயினில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள், மெக்சிகோ அணியின் அண்டர் 17 கால்பந்து அணி வீரர்கள். குடும்பத்துக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றம். அவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், பாதிப்புகள், தங்களின் இருப்பிடம் இருக்கிறதா. ஸ்பெயினிலிருந்து மெக்சிகோவுக்குத் திரும்பிப் போனால் தங்குவதற்கு வீடு இருக்குமா, உற்றார் உறவினர்கள் இருப்பார்களா, இல்லை திரும்பவும் இன்னொரு பூகம்பம்தான் தாக்காமல் இருக்குமா? 17 வயதுச் சிறுவர்கள் இந்த அதிர்ச்சிகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?

மெக்சிகோ

இன்னும் 17 நாள்களில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடங்கப் போகிறது. அக்டோபர் 8, ஈராக் அணியுடன் முதல் போட்டி. 4-ம் தேதி கொல்கத்தாவில் இருக்க வேண்டும். கலங்கவில்லை அந்தச் சிறுவர்கள். இந்தியா வந்திறங்கினார்கள். பலமான அணி. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாகக் கூட கருதப்பட்டது. ஆனால், குரூப் பிரிவே மிகவும் கடினமாக அமைந்தது. இங்கிலாந்து, சிலி, ஈராக் அணிகளுடன் மல்லுக்கட்டவேண்டும். தயாரானார்கள் அந்தப் போராளிகள். தங்கள் தேசத்துக்கு ஆதரவளிக்க, இந்தியாவிலிருந்த மெக்சிகோ நாட்டவர் அனைவரும் கொல்கத்தாவில் ஒன்று திரண்டனர்.

ஈராக்குடன் முதல் போட்டி. 16-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது ஈராக். சுதாரித்து எழுந்தனர் மெக்சிகோ வீரர்கள். அதன்பிறகு ஆட்டம் முழுதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான். 63 சதவிகித நேரம் பந்து அவர்களிடம்தான் இருந்தது. ஆனால், ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்ததால் ஆட்டம் டிராவானது. அடுத்து இன்னும் பலம் வாய்ந்த இங்கிலாந்து. 55 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசரடித்திருந்தனர் இங்கிலாந்து வீரர்கள். மீண்டு வருவதுதான் இவர்களுக்குப் பழக்கமாயிற்றே. அடுத்த அரை மணி நேரம் ஆட்டம் அப்படியே தலைகீழாய் மாறியது. இங்கிலாந்து கத்துக்குட்டி அணிபோல் தெரியுமளவு இருந்தது மெக்சிகோவின் வெறித்தன ஆட்டம். 2 கோல்கள் மட்டும் கிடைக்க தோல்வி. சிலியுடன் 65 சதவிகித நேரம் பந்தைக் கட்டுக்குள் வைத்திருந்தும் கோல் அடிக்க முடியாததால் மீண்டும் டிரா. ஆனாலும் அடுத்த சுற்று வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

இந்தியா


காலிறுதிக்கு முந்தைய சுற்று. இரண்டு சிறு தவறுகள். 11 நிமிடத்துக்குள் 2 கோல்கள். பின்தங்கிவிட்டது மெக்சிகோ. மூன்றுமுறை தொடர்ந்து அரையிறுதியை எட்டிய அணி, ஈரானிடம் காலிறுதி வாய்ப்பை இழந்துகொண்டிருந்தது. கால்பந்தில், 11 நிமிடத்தில் இரண்டு கோல்கள் வாங்கிய ஒரு அணி, அதன்பிறகு மீண்டுவருவதென்பது சற்றுக் கடினமே. அவர்களின் நம்பிக்கை குலைந்திருக்கும். எதிரணி இன்னும் ஆக்ரோஷம் காட்டி, ஆட்டத்தை முழுதும் கன்ட்ரோல் செய்ய நினைக்கும். எப்படி தோல்வியிலிருந்து மீண்டு வருவது, அதுவும் ஈரானுக்கு எதிராக, லீக் சுற்றில் ஜெர்மனியை 4-0 என பொசுக்கிய அணி. மீள்வது கடினம். ஆனால், மீண்டு வரப் போராடினார்கள் அந்த 17 வயதுப் போராளிகள். ஒரு மாதத்துக்கு முன்பு இரட்டை பூகம்பத்தைக் கண்டவர்கள். அதிலிருந்து மீண்டு வந்து விளையாடிக்கொண்டு.... இல்லை போராடிக்கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டு கோல்களா அவர்களை முடக்கிவிடும்?

வழக்கம்போல் அடிபட்ட சிங்கங்கள் கடைசி கட்டத்தில் கர்ஜனையோடு பாய்ந்தது. ஜெர்மனி அணியிடம்கூட அந்த வேகத்தைக் கண்டிராத ஈரான் அணி சற்று ஆடித்தான் போனது. ஷார்ட் பாஸ், லாங் பால், த்ரூ பால், ப்ரஸ்ஸிங், கவுன்ட்டர் அட்டாக் என கால்பந்தின் சகல கலைகளையும் ஈரானுக்குக் கற்பித்தனர். ஆனால், முடிவு மட்டும் வழக்கம்போல் அவர்களுக்கு எதிராகவே அமைந்தது. ஈரான் கோல்கீப்பர் அலி கோலம் ஆபத்பாந்தவனாய் உருவெடுக்க, மெக்சிகோவின் தாக்குதலைச் சமாளித்து வெற்றிகண்டது அந்த அணி. அதோடு மெக்சிகோவின் உலகக்கோப்பைக் கனவும் முடிவுக்கு வந்தது.

mexico


4 போட்டிகள். ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. வருத்தம்தான். ஆனால், அவர்கள் தோற்றவர்கள் இல்லை. கொல்கத்தாவில் வந்து தரையிறங்கியபோதே அந்த 21 சிறுவர்களும் வாழ்க்கையை வென்றுவிட்டனர். இனி இவர்கள் சீனியர் உலகக்கோப்பையைக் கூட வெல்லலாம். ஆனால், இந்த இந்தியப் பயணம்தான் அவர்களின் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி. விளையாடிக் கிடைப்பதல்லவே வெற்றி. போராடிக் கிடைப்பதுதான் வெற்றி. அந்த வகையில் இந்த 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையின் முதல் வெற்றியாளர் போட்டியை நடத்திய, முதல் உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்தியா இல்லை. மெக்சிகோதான்.

earthquake

 


அவர்கள் விளையாடிய போட்டிகளை பெரும்பாலும் அந்தத் தேசம் நேரில் கண்டிருக்காது. தொலைக்காட்சிகள் நொறுங்கிக்கிடக்கின்றன. தொலைக்காட்சிகள் இருக்கும் இடங்களில் மின்சாரம் இல்லை. live streaming பார்ப்பதற்கு நெட்வொர்க் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனானப்பட்ட ட்ரம்புக்கே கிடைக்காத நெட்வொர்க், சாமானிய மக்களுக்குக் கிடைத்துவிடுமா என்ன? அவர்கள் இந்தியாவில் விளையாடியதைப் பார்க்கவில்லை. ஆனால், தன் நாட்டுச் சிறுவர்கள் இந்தியாவில் போராடுகிறார்கள் என்ற செய்தி கேட்டு, அவர்களும் போராட எழுந்துவிட்டனர். இதோ...மெக்சிகோவும் எழுந்து கொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/105481-the-mexican-under-17-football-team-showed-guts-after-the-nation-was-attacked-by-twin-earthquakes.html

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: மாலி 2-1 என கானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்

 

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி போட்டியில் மாலி 2-1 கானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 
 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: மாலி 2-1 என கானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்
 
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் மாலி - கானா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

201710211922585206_1_football001-s._L_styvpf.jpg


ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் மாலி வீர்ர எச். ட்ரேம் முதல் கோலை பதிவு செய்தார். 61-வது நிமிடத்தில் ஜேமவுசா ஒரு கோல் அடிக்க மாலி 2-0 என  முன்னிலைப் பெற்றிருந்தது.

அதன்பின் 70-வது நிமிடத்தில் கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் மொகமது கோல் அடித்தார். இதனால் மாலி 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

201710211922585206_2_football002-s._L_styvpf.jpg

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் மாலி அணி வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/21192257/1124182/Mali-beat-Ghana-to-become-the-first-team-to-reach.vpf

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது காலிறுதி போட்டியில் ஸ்பெயின் 3-1 என ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்
 
 
கொச்சி:
 
இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில், மூன்றாவது காலிறுதி போட்டி கொச்சியில் 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
201710221954437768_1_football1._L_styvpf.jpg
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீர்ர அபெல் ருயிஸ் முதல் கோலை பதிவு செய்தார். 60-வது நிமிடத்தில் செர்ஜியோ கோமெஸ் இரண்டாவது கோல் அடித்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் ஃபெரான் ஒரு கோல் அடிக்க  ஸ்பெயின் 3-0 என முன்னிலைப் பெற்றது.
 
அதன்பின் 69-வது நிமிடத்தில் ஈரான் அணியின் எஸ்.கரிமி கோல் அடித்தார். இதனால் கோல் வித்தியாசம் 3-1 என ஆனது.
 
201710221954437768_2_football2._L_styvpf.jpg
 
அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. வருகிற 25-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மாலி அணியை எதிர்கொள்கிறது.
 
அடுத்ததாக கொல்கத்தாவில் 8 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி போட்டியில் ஜெர்மனி - பிரேசில் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி 25-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

http://www.maalaimalar.com/

இன்னும் ஒரு கால் இறுதி போட்டியில் பிரேசில்க்கு எதிரான ஜெர்மனி  விளையாடுகிறது.

ஜெர்மனி 1 கோல் அடித்து முன்னிலையில் உள்ளது.

 
Turnier in Indien1:0 - U17-WM im Live-Ticker: Arp trifft für Deutschland gegen Brasil
 
Guinea v Germany - FIFA U-17 World Cup India 2017
Link to comment
Share on other sites

U-17 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

 

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

 
U-17 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 
கொல்கத்தா:

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில்,ஈரானை விழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் 21-வது நிமிடத்தில் ஜெர்மன் அணி கேப்டன் ஜான் பிடே ஆர்ப் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

முதல் 70 நிமிடங்களில் ஜெர்மன் கைகளில் இருந்த ஆட்டத்தை அதன்பின் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது பிரேசில் அணி. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் வீவர்சன் 71-வது நிமிடத்திலும், பவுலின்ஹோ 77-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், பிரேசில் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/23011047/1124393/Brazil-beat-Germany-21-to-set-up-semifinal-clash-with.vpf

Link to comment
Share on other sites

யு 17 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கால்பதிப்பது யார்?- பிரேசில் - இங்கிலாந்து அணிகள் கொல்கத்தாவில் இன்று பலப்பரீட்சை

 

பியா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

பிரேசில் அணி தனது கால் இறுதியில் 1-0 என பின்தங்கிய நிலையில் விவெர்சன், பவுலின்ஹோ ஆகியோரது அசத்தல் ஆட்டத்தால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் லீக் சுற்றில் ‘எப்’ பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 3 லீக் ஆட்டங்களிலும் அந்த அணி 11 கோல்கள் அடித்திருந்தது. வெறும் 2 கோல்கள் மட்டுமே வாங்கியிருந்தது.

நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணி, ஜப்பானுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடிக்கத் தவறினாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கால் இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் இங்கிலாந்து பந்தாடியிருந்தது. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த ரியான் ப்ரூஸ்டர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

யு 17 உலகக் கோப்பையில் முதன்முறையாக அரை இறுதியை சந்திக்கும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேடன் சான்சோ இல்லாமல் களமிறங்குகிறது. தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் நடுகள வீரரான அவர், லீக் சுற்றுடன் வெளியேறினார். ஜெர்மனியில் உள்ள கிளப் அணிக்காக விளையாடுவதற்கு தேசிய அணியில் இருந்து விலகி உள்ளார். ஏனினும் பில் போடன், ஹட்சன், ஜார்ஜ் மெக்கெரான் உள்ளிட்ட நம்பிக்கை அளிக்கும் வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணியின் திறன் பாதிக்கப்படாது என்றே கருதப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் சான்சோவுக்கு பதிலாக ஏஞ்சல் கோம்ஸ் களமிறங்கினார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

யு 17 உலகக் கோப்பையில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, 7-வது முறையாக அரை இறுதி ஆட்டத்தை சந்திக்கிறது. நட்சத்திர வீரர்களான பவுலின்ஹோ, ஆலன், லிங்கன் ஆகியோர் எந்த நொடியிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். மேலும் கோல்கீப்பர் கேப்ரியல் பிரேசோ அணிக்கு பெரிதும் பலம் சேர்ப்பவராக உள்ளார். ஜெர்மனிக்கு எதிரான கால் இறுதியில் தொடர்ச்சியான பெனால்டி வாய்ப்புகளில் இருந்து அணியை காப்பாற்றினார். இதனால் இவரின் தடுப்பை மீறி இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் ஸ்பெயின் - மாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

http://tamil.thehindu.com/sports/article19916662.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து- 3 பிறேசில்- 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று இறுதி சுற்றுக்கு செல்கிறது.ஸ்பானியா/மாலி போட்டியில் வெல்பவர்கள் இங்கிலாந்துடன் இறுதி சுற்றில் மோதுவார்கள்.

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
 
கொல்கத்தா:
 
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றன.
 
பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ப்ரீவெஸ்டர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.
 
U-17 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அரை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த பீலே-வுக்கு அடுத்ததாக ப்ரீவெஸ்டர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/25194443/1125019/Rhian-Brewster-scored-hattricks-in-the-semifinal.vpf

Link to comment
Share on other sites

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஸ்பெயின்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் மாலி அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 
U-17 உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஸ்பெயின்
 
நவிமும்பை:

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவிமும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது.

மாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 19-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் அபெல் ருயிஸ் முதல் கோல் அடித்தார். அடுத்து 43-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அபெல் ருயிஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

201710252250018994_1_u17-spain1._L_styvpf.jpg

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் ஃபெரான் ஒரு கோல் அடித்தார். அடுத்து 74-வது நிமிடம் மாலி அணியின் தியாயே ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

201710252250018994_2_u17-spain2._L_styvpf.jpg

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி, பிரேசில் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வருகிற 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகளும், மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் மாலி - பிரேசில் அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/25224952/1125037/Spain-enters-into-finals-of-u17-fifa-world-cup.vpf

Link to comment
Share on other sites

சிங்கிளாக பிரேசிலை சாய்த்த புரூஸ்டர்... ஃபைனலில் இங்கிலாந்து..! #FIFAU17WC #FootballTakesOver

ஸ்போர்ட்ஸைப் பொறுத்தவரை கொல்கத்தா வந்தாரை வாழவைக்கும் பூமி. அங்கு ஸ்போர்ட்ஸ் பிரியர்களை விட, வெறியர்கள் அதிகம். விளையாட்டு கலாசாரம் நிறைந்த ஊர். அதனால்தான்,  வேறு எங்கோ ஒரு மைதானத்தில் பிரச்னை என்றால், உடனடியாக அந்தப் போட்டியை கொல்கத்தாவுக்கு மாற்றிவிடுகின்றனர். கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, கால்பந்தாக இருந்தாலும் சரி.  2016 டி-20  கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் முதலில் தரமசாலாவில் நடப்பதாக இருந்தது. பாதுகாப்பு பிரச்னை காரணமாக மேட்ச் அங்கிருந்து, கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு மாற்றப்பட்டது. இதோ, தற்போது நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பையிலும் (FIFAU17WC )  திடீரென ஒரு போட்டி, கெளகாத்தியில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

FIFAU17WC

 

கால்பந்து கலாசாரம் கோலோச்சும் நகரங்களில் கொல்கத்தாவுக்கு சற்றும் குறைந்ததல்ல கெளகாத்தி. ஐ-லீக், ஐ.எஸ்.எல், சந்தோஷ் டிராபி, ஃபெடரேஷன் கோப்பை என எந்தப் போட்டியானாலும், பிள்ளை குட்டியுடன் மைதானத்தை நிறைத்து விடுவர் வடகிழக்கு மாநிலத்து மக்கள். சிலிகுரியில் நடக்கும் சந்தோஷ் டிராபி ஃபைனலுக்கு, அஸ்ஸாமில் இருந்து மைல் கணக்கில் பயணிப்பர். சென்னையோ, கொச்சியோ வடகிழக்கு மாநில அணி எங்கு விளையாடினாலும், அங்கு தங்கள் அணிக்கு ஆதரவாக பேனர் பிடித்து நிற்பது அவர்கள் ஹாபி. ஏனெனில், கால்பந்து அவர்களின் டி.என்.ஏ. அதனால்தான், வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை அரையிறுதியை கெளகாத்தியில் நடத்த தீர்மானித்திருந்தது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA). மனிதர்களின் திட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்வதுதானே இயற்கை! ஆம், கெளகாத்தியில் கடந்த ஒரு வாரமாக அடைமழை பெய்ய, அரையிறுதிப் போட்டி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்துக்கு மாறியது.

Rhian Brewster - FIFAU17WC

சால்ட் லேக் மைதானத்தின் மொத்த இருக்கைகள் 66,000. கெளகாத்தியில் இருந்து போட்டி இடம் மாறியது தெரிந்தவுடன் 64,000 டிக்கெட்டுகள் ஒரே நாள்களில் விற்றுத்தீர்ந்தது. இந்தியா அல்லாத வேறொரு அணி விளையாடுவதைக் காண இவ்வளவு பேர் திரண்டது ஆச்சர்யம்.  அதுவும் கால்பந்துக்கு என்பதே இங்கு விநோதம் ( புனேயில் நேற்று நடந்த இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய  கிரிக்கெட் போட்டிக்குக் கூட மைதானம் முழுமையாக நிரம்பவில்லை). காரணம், அரையிறுதியில் ஆடுவது தங்களுக்குப் பிடித்த பிரேசில் அணி. நிறங்களில் மஞ்சளுக்கு வசீகரிப்பு அதிகம். அதனால்தான், மஞ்சள் ஜெர்ஸி அணிந்த பிரேசில் அணிக்கு உலகெங்கும் ரசிகர்கள். பிரேசில் மீதான ஈர்ப்புக்கு நிறம் மட்டுமே காரணம் அல்ல, அவர்கள் ஆட்டம் அப்படி. சீனியர் உலகக் கோப்பையில் அவர்கள் ரெக்கார்டு அப்படி! 

Rhian Brewster - FIFAU17WC

இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றில் மூன்று போட்டிகளையும் பிரேசில் அணி கொச்சியில் விளையாடியது. ஒவ்வொரு போட்டிக்கும் அவ்ளோ கூட்டம். கொச்சி ஜவஹர்லால் நேரு மைதானத்தைப் போலவே, நேற்று, சால்ட் லேக் மைதானத்திலும் எங்கெங்கும் மஞ்சளின் வசீகரம். பிரேசிலுக்கு ஏகோபித்த ஆதரவு. ஆனால், மேட்ச் முடியும் நேரத்தில் அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றது ஓர் இங்கிலாந்து வீரனை... அவன் பெயர் புரூஸ்டர்... ரியான் புரூஸ்டர். லிவர்புல் ப்ராடெக்ட். செல்சியின் வார்ப்பு. இங்கிலாந்தின் எதிர்காலம்.

அண்டர் செவன்டீன் மேட்ச்தானே என அசால்ட்டாக நினைத்துவிடக்கூடாது. இங்கிருந்துதான் அடுத்த ஜாம்பவான்கள் உருவாகின்றனர். நெய்மர், இனியஸ்டா, ரொனால்டினோ, லூயிஸ் ஃபிகோ, டெல் பியாரோ,  டோனி க்ரூஸ், இகர் கேஸியஸ், ஜாவி, ஜேம்ஸ் ராட்ரிகஸ்... இந்த வரிசையில் நிச்சயம் இடம்பிடிப்பான் இந்த புரூஸ்டர். இந்த உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் கோல்கள். அதுவும் நாக் அவுட் சுற்றில். அதுமட்டுமல்ல, இந்தத் தொடரில் ஏழு கோல்கள். டாப் ஸ்கோரர் ஆஃப் தி டோர்னமென்ட்.

லீக் சுற்றுவரை சைலன்டாகத்தான் இருந்தான் புரூஸ்டர். காரணம், இங்கிலாந்து அணி 'ஜேடன் சான்சோ' எனும் கோல் மெஷினை மையாமக வைத்து இயங்கிக்கொண்டிருந்தது. அவன் ஆடும், பொருசியா டார்ட்மன்ட் அணி அழைத்ததால், பாதியிலேயே இந்தியாவுக்கு டாடா காட்டி, ஜெர்மனி புறப்பட்டான். 'இனி இங்கிலாந்து காலி' என்றார்கள். பலம் வாய்ந்த அமெரிக்க அணியுடன் காலிறுதியில் மோதல்.  பதினான்கே நிமிடத்தில் புரூஸ்டரிடம் சரண் அடைந்தது அமெரிக்கா. ஆம், அதற்குள்ளாகவே இரண்டு கோல்கள் அடித்திருந்தான். கடைசி நிமிடத்தில் ஒரு பெனால்டி கோலும் அடிக்க, ஹாட்ரிக் கோலடித்தவர்கள் வரிசையில் இணைந்துகொண்டான். ஒரு உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றில் ஹாட்ரிக் கோல் அடிப்பதொன்றும் சாதாரண விஷயம் அல்ல. கிரிக்கெட் உலகக்கோப்பை ஃபைனலில் 200 ரன்கள் அடிப்பதற்குச் சமம்.

ஆனால், அந்த அசாதாரண சாதனையை நேற்று இரண்டாவது முறையாக நிகழ்த்தி, கால்பந்து உலகின் ஹீரோவானான் புரூஸ்டர்.  எதிரணி பிரேசில்.பலம் வாய்ந்த டிஃபன்ஸ். இத்தொடரில், அதுவரை  5 போட்டிகளில் இரண்டே கோல்கள்தான் விட்டிருந்தது. "இருந்துட்டுப்போ!" என்பதுபோல் தொடக்கம் முதலே பலமான பிரேசிலின் டிஃபன்சை பதம்பார்த்தான். இடது விங்கிலிருந்து Air-ல் வந்த க்ராஸில் முதல் கோல், வலது விங்கில் இருந்து வந்த 'லோ' க்ராஸில் இரண்டாவது கோல். முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து. காலிறுதியில் ஜெர்மனியுடன் 0-1 எனப் பின்தங்கியிருந்த நிலையில், கடைசி 20 நிமிடங்களில் ஆட்டம் காட்டி வெற்றி பெற்றது பிரேசில். மீண்டும் அதுபோல் நடக்கலாம். ஆனால், இங்கிலாந்து மீண்டும் புரூஸ்டர் வாயிலாக அட்டாக் செய்தது. இரண்டாவது பாதியில் வலது விங்கில் இருந்து மீண்டும் அதேபோன்ற ஒரு மூவ்... அற்புத ஃபினிஷ்....உலகக்கோப்பையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக். அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை என்பதை எட்டி நின்றே பார்த்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியை, பிரேசில் எனும் அரக்கனை வீழ்த்தி ஃபைனலுக்குள் எடுத்துச் சென்றுவிட்டான். அதுவும் தனி ஆளாக...

Rhian Brewster - FIFAU17WC

 

இன்று உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வெல்வதற்கு, சாம்பியன்ஸ் லீக் தொடரில் அவர் தொடர்ந்து அடித்த இரண்டு ஹாட்ரிக் கோல்களே காரணம். இதோ, இன்று புரூஸ்டர், உலக கால்பந்தின் கண்களில், எதிர்காலத்துக்கான நட்சத்திரமாய் ஜொலிக்கிறான். இன்னும் ஒரே போட்டிதான். ஒரே வெற்றிதான். உலகக்கோப்பை என்னும் மாபெரும் தொடரைத் தன் தேசத்துக்கு வென்றுகொடுத்துவிடுவான். அதுவும் தனி ஒருவனாய். அது எளிதல்ல. கோப்பைக்கும் தங்களுக்கும் இடையில் நிற்பது ஸ்பெயின். இந்த ஆண்டு அண்டர் 17 யூரோ கோப்பை ஃபைனலில் தங்களை வென்ற அதே அணி. கவனமாக விளையாட வேண்டும். ஸ்பெயினையும் அடித்துவிட்டால், ரியான் புரூஸ்டர்தான் கால்பந்தின் கதாநாயகன்!

http://www.vikatan.com/news/sports/106011-rhian-brewster-hattrick-helps-england-to-enter-under-17-worldcup-final.html

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து (17 வயது): ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து

 

இங்கிலாந்து  5

ஸ்பெயின் 2

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயினை 5-2 என வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்

Link to comment
Share on other sites

பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி: இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம்

 

 
fifa

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிஃபா சார்பில் நடத்தப்படும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. இதில் ஸ்பெயின் அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.  

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த தொடர், கடந்த 6- ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி தில்லி, குவகாத்தி, கொல்கத்தா, நவி மும்பை, கோவா, கொச்சி ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வந்தது. இதன் பைனலில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் துவக்கம் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் முதல் பாதியின் 10,30 வது நிமிடத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ கோமஸ் இரட்டை அடி கொடுத்தார்.

இப்போட்டியில் இங்கிலாந்து 5, ஸ்பெயின் 2 என மொத்தமாக 7 கோல்கள் அடிக்கப்பட்டது. இதன்மூலம் உலகக்கோப்பை (17 வயது) அரங்கில் அதிக கோல் அடிக்கப்பட்ட பைனல் போட்டி என்ற புதிய சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 1995ல் நடந்த பைனலில் கானா 3 பிரேசில் 2 என மொத்தமாக 5 கோல்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

http://www.dinamani.com/latest-news/2017/oct/28/பிஃபா-உலக-கோப்பை-கால்பந்து-தொடரின்-இறுதிப்-போட்டி-இங்கிலாந்து-அணி-சாம்பியன்-பட்டம்-2797569.html

Link to comment
Share on other sites

ஃபிபா யு-17 உலகக்கோப்பையை வென்று இளம் இங்கிலாந்து அணி வரலாறு

 

 

 
england

கோப்பையை வென்ற இங்கிலாந்து யு-17 அணி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக யு-17 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இடைவேளை வரை ஸ்பெயின் ஆதிக்கம் இருந்தது, அதாவது 2-1 என்று ஸ்பெயின் முன்னிலை வகித்தது, ஆனால் இடைவேளைக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இங்கிலாந்து 4 கோல்களைத் திணித்து 5-2 என்று ஸ்பெயினுக்கு கடும் அதிர்ச்சியளித்து கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டிக்கு வருகை தந்த ரசிகர்கள் எண்ணிக்கை 66,684 என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆர்வத்தை இரு அணிகளும் ஏமாற்றவில்லை.

தொடக்க கணங்களில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் முதல் அரைமணி நேரத்தில் 2-0 என்று முன்னிலை பெற்றது. செர்ஜியோ கோம்ஸ் இரண்டு கோல்களையும் அடித்தார். வேகத்திலும் துல்லியத்திலும் இங்கிலாந்தை முறியடித்தது ஸ்பெயின். இந்நிலையில் இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 10-வது நிமிடத்தில் லெஃப் பேக் வீரர் யுவான் மிராண்டா கேப்டன் அபெல் ருய்ஸ் இருவரும் தங்களுக்குள் ஆடி பந்தை எடுத்துச் செல்ல கோம்ஸ் பினிஷ் செய்தார்.

மீண்டும் ஸ்பெயின் கேப்டன் மிக அருமையாக இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர்களிடத்தில் இடைவெளியைக் கண்டுபிடித்து பந்தை சீசர் கெலாபெர்ட்டிடம் கொடுக்க இவர் பாக்ஸ் முனையிலிருந்து தயாராக கோம்ஸ் இடது புறம் நகர கெலாபர்ட், கோம்சிடம் பந்தை அடிக்க அவர் தன் 2-வது கோலை அடித்தார், மிக அருமையான தன்னலமற்ற ஆட்டம்.

2 கோல்களை வாங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் இடைவேளைக்கு சற்று முன் மாற்றம் ஏற்பட்டது. 43-வது நிமிடத்தில் புரூஸ்டர் இங்கிலாந்தின் எண்ணிக்கையை அருமையான கோல் மூலம் தொடக்கினார். 58-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. இம்முறை ஃபோடன் என்ற மிக அருமையான நடுக்கள வீரர் திறமையுடன் செசெக்னனிடம் ஸ்பானியர்களின் கடும் தடுப்பாட்ட சுவரின் ஊடே செசெக்னனிடம் பாஸ் செய்தார், அதனை செசக்னன், கிப்ஸ்-ஒயிட்டிடம் அடிக்க சமன் கோல் விழுந்தது.

பிறகு 69-வது நிமிடத்தில் ஃபோடன் தன் பங்குக்கு ஒரு கோலை அடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்று 3-2 என்று இருந்தது. 73-வது நிமிடத்தில் ஏறக்குறைய ஸ்பெயின் 3-வது கோலை அடித்து சமன் செய்திருக்கும், கேப்ரன் ரூய்ஸின் ஷாட்டை செசக்னன் தடுத்தார்.

இந்நேரத்தில் இடது புறத்தில் இங்கிலாந்து வீரர் ஹட்சன்-ஓடோய் சமாளிக்க முடியாத ஒரு வீரராகத் திகழ்ந்தார். 84-வது நிமிடத்தில் இவர் ஃப்ரீ கிக்கில் 4-வது கோலுக்கான ஷாட்டை அடிக்க அதனை இங்கி. கேப்டன் லாட்டிபூதியர் கட்டுப்படுத்த, மார்க் குயேஹி கோலாக மாற்றினார், இங்கிலாந்து 4-2 என்று முன்னிலை.

88-வது நிமிடத்தில் ஹட்சன் - ஓடோய் கிராஸ் செய்ய ஃபோடன் அதனை கோலாக மாற்ற இங்கிலாந்து இளம் சாம்பியன் ஆனது. ஏற்கெனவே யு-20 உலகக்கோப்பையையும் இங்கிலாந்து வென்றிருந்தது, இப்போது இன்னொரு மகுடம் இந்தியாவில் கிடைத்துள்ளது.

விருதுகள்:

கோல்டன் பால்: பிலிப் ஃபோடன் (இங்கிலாந்து), 2. செர்ஜியோ கோம்ஸ் (ஸ்பெயின்), 3. ரியன் புரூஸ்டர் (இங்கிலாந்து)

கோல்டன் பூட்: ரியான் புரூஸ்டர் (இங்கிலாந்து, 8 கோல்கள் பெனால்டி 1), லசானா டியாயே (மாலி, 6 கோல்கள்), ஆபெல் ரூயிஸ் (ஸ்பெயின், 6, பெனால்டி 2).

கோல்டன் கிளவ்: கேப்ரியல் பிராஸோ (பிரேசில்)

நியாயமான முறையில் ஆட்டம்: பிரேசில்

http://tamil.thehindu.com/sports/article19943822.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இங்கிலாந்து.

பினந்தங்கி.. முன்வந்து வென்றமை.. சுவாரசியமாக இருந்தது.

இங்கிலாந்து.. மாஸுப்பா.. tw_blush:

Link to comment
Share on other sites

அண்டர் 17 சாம்பியனானது இங்கிலாந்து - த்ரீ லயன்ஸின் மிரட்டல் கம்பேக்! #FIFAU17WC

கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் குழுமியிருந்த 60,000-கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவில், ஃபில் ஃபோடன் இரண்டு கோல்கள் அடித்து அசத்த, ரியான் ப்ரூஸ்டர் இந்த உலக்கக்கோப்பையில்  தனது எட்டாவது கோலை அடித்து மிரட்ட,  5-2 என்ற கோல் கணக்கில் அசுர பலம் கொண்ட ஸ்பெயின் அணியை வீழ்த்தி, 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை (FIFAU17WC) தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது இங்கிலாந்து. ஆட்டத்தின் முதல் பாதிக்கு சற்று முன்னர் வரை 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்டீவ் கூப்பரின் இந்த இளம் ஆங்கிலப்படை, மெர்சல் கம்பேக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

FIFAU17WC

 

`கோப்பை நமக்குத்தான்' என்ற ஸ்பெயின் அணியின் எண்ணத்தில் மண்ணைப்போட்டு மூடியவர்கள் மான்செஸ்டர் சிட்டியின் பிளேமேக்கர் ஃபில் ஃபோடனும், லிவர்பூல் ஸ்டிரைக்கர் ரியான் ப்ரெஸ்டரும். ஆட்டம் முதல் பாதியை நெருங்கிய சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு ப்ரூஸ்டரின் சூப்பர் ஹெடர் மூலம் கிடைத்த முதல் கோல் நம்பிக்கையளிக்க, இரண்டாவது ஈக்வலைசர் கோலை அடித்து ஸ்பெய்ன் மீது ப்ரஷரைக் கூட்டினார்  மோர்கன் கிப்ஸ் ஒயிட். பினிஷிங் டச்சாக இரு சூப்பரான கோல்களை அடித்து ஃபில் ஃபோடன் வெற்றிக்கு அடித்தளமிட, ஸ்பெயினின் கோல்பாக்சிற்குள்ளே மிகக் குறுகிய தொலைவிலிருந்துகொண்டு பந்தை வலைக்குள் அனுப்பி வெற்றிக்கோட்டையை கட்டியெழுப்பினார் டிஃபெண்டர் மார்க் கியூஹி. ஸ்கோர்போர்டில் பெயர் வராவிட்டாலும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர்கள் செல்சீ வீரர்களான ஹட்சன் ஒடாய் மற்றும் செசக்னன் ஆகியோர் தான். இரண்டு கோல்களை வாங்கி துவண்டிருந்த இங்கிலாந்து அணியை தட்டியெழுப்பி ஒரு கம்பேக் கொடுத்து உற்சாகப்படுத்தியது இவர்கள் இருவரின் துல்லியமான கிராஸ்கள் தான்.

ப்ரூஸ்டர்

மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவு பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில், முதல் நிமிடத்திலிருந்தே அனல் பறந்தது. இது உண்மையிலேயே அண்டர் 17 உலகக் கோப்பைதானா என ரசிகர்கள் ஆச்சரியப்படுமளவுக்கு சீனியர் வீரர்களைப் போலவே டஃப் கொடுத்தனர். முதல் 10 நிமிடங்களில் இரு அணிகளின் கோல் பாக்சுக்குள்ளும் பந்து பல ரவுண்டுகள் சென்று வந்தது. 10 வது நிமிடத்தில் சூப்பரான பேக் ஹீல் கிக் மூலம் இங்கிலாந்து கீப்பர் ஆண்டர்சனை ஏமாற்றி பந்தை போஸ்டுக்குள் திணித்து முதல் கோலை அடித்தார் ஸ்பெயின் வீர்ர் செர்ஜியோ கோமெஸ். பதில் கோல் திருப்ப இங்கிலாந்து வீரர்கள் என்னதான் ஸ்பெயின் கோல் பாக்சிற்குள் மேஜிக் காட்டினாலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.ஸ்பெயினும் பேக் டூ பேக் கவுண்டர் அட்டாக்குகளால் இங்கிலாந்தை பதற்றத்திலேயே வைத்திருக்க, ஆட்டமும் விறுவிறுப்பாகவே இருந்தது. 31 வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் பாக்சிற்கு வெளியே வலப்புறத்திலிருந்து பாக்சிற்குள் இருந்த சீசருக்கு பாஸ் செய்தார் ஸ்பெய்ன் கேப்டன் அபெல் ரூயிஸ். இங்கிலாந்து டிபென்ஸை ஏமாற்றி பாக்சிற்குள்ளே இடப்புற மூலையிலிருந்த செர்ஜியோ கோமெஸுக்கு அவர் பாஸ் செய்ய, அதை தனது இடது காலால் அற்புதமாக கோலாக்கி ஸ்பெயினுக்கு 2 கோல் முன்னிலை அளித்தார்.அபெல் ரூயிஸ், சீசர் மற்றும் செர்ஜியோ கோமெஸ் என மூவருமே வெரைட்டியான ஸ்கில்களில் வெளுத்துக்கட்டினர். முதல் பாதி இறுதி கட்டத்தை அடைந்தபோது, அட்டாக்கில் வேகங்கொண்டனர் இங்கிலாது வீரர்கள். ஹட்சன் அடித்த ஷாட் வலப்புற கோல்கம்பியில் பட்டு வெளியேறிவிட அடுத்த நிமிடத்திலேயே தங்களுது முதல் கோலை அடித்தது இங்கிலாந்து. செசக்னன் கொடுத்த அருமையான கிராஸை லோ ஹெடர் மூலம் கோலாக்கி இந்த உலகக் கோப்பைத்தொடரில் தனது எட்டாவது கோலைப் பதிவு செய்தார் ரியான் ப்ரூஸ்டர். முதல் பாதியின் முடிவில் 2-1 என ஸ்பெய்ன் முன்னிலை வகித்தது.

அண்டர் 17

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளுமே அட்டாகிங் கேமையே கையாண்டனர். குறிப்பாக இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டு வர வெகுவாகப் போராடியது. போராட்டத்தின் பலனாக இங்கிலாந்து அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. ஃபோடன் மற்றும் மோர்கன் கிப்ஸ் ஒயிட்டின் ஷாட்டுகள் வீணாகினாலும், 58-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை சமன்படுத்தியது இங்கிலாந்து. மீண்டும் ஒரு சூப்பரான கிராஸ் மூலம் செசக்னன்,  பந்தை ஸ்பெய்ன்  கோல்போஸ்டிலிருந்து ஆறு யார்டுகள் தொலைவிலிருந்த மோர்கன் கிப்ஸ் ஒயிட்டுக்கு கடத்த, அதை அவர் அழகாக கோலாக்கினார். இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக ஆட, ரசிகர்களுக்கு ஆரவாரம் குறையவே இல்லை. தொடர்ந்து மிரட்டிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் விரைவில் கைகூடி வந்தது. 69 வது நிமிடத்தில் ஸ்பெய்ன் டிஃபன்ஸை ஏமாற்றி, இங்கிலாந்தில் ஹட்சன் ஒடாய் கொடுத்த லோ கிராஸை கோலாக்கி இங்கிலாந்துக்கு ‘லீட்’ கொடுத்தார் ஃபில் ஃபோடன். தொடர்ந்து கிடைத்த சில வாய்ப்புகளை ஸ்பெய்ன் அணியினர் வீணடிக்க, அவர்களின் அனைத்து கவுன்டர் அட்டாக்குகளையும் உடைத்தனர் இங்கிலாந்து டிஃபண்டர்கள். ஆட்டம் கடைசி பத்து நிமிடங்களுக்கு வந்தபோது ஆட்டத்தில் ஆக்ரோசம் அதிகமானது. 84 வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மீண்டும் ஹட்சன் ஒடாய் ஸ்பெயினின் கோல்பாக்சுகுள் கிராஸ் செய்ய இம்முறை பந்து இங்கிலாந்து டிஃபெண்டரான மார்க் கூஹி காலில் சிக்க, 4 வது கோலை பதிவுசெய்து அமர்க்களப்படுத்தியது இங்கிலாந்து. நான்கு நிமிடங்கள் கழித்து இந்த ஆட்டத்திற்கும் ஸ்பெயின் அனியின் உலகக் கோப்பைக் கனவிற்கும் தனது இரண்டாவது கோலால் ‘எண்ட் கார்ட்’ போட்டு முடித்துவைத்தார் ஃபில் ஃபோடன். இம்முறையும் ஹட்சன் ஒடாயின் துல்லியமான கிராஸ்தான். அதை ‘நீட்டாக’ ஃபினிஷ் செய்தார் மிரட்டல் ஃபார்மிலிருந்த ஃபில் ஃபோடன். ஆட்டமே முடிந்தாற்போல மொத்த அணியும் கூடி நின்று கொண்டாடி மகிழ்ந்த்து. கூடுதல் நேரத்தில் அங்கங்கு வீரர்கள் லேசாக உரசிக் கொண்டாலும் ஆட்டம் நல்லபடியாகவே முடிந்தது.

FIFAU17WC

 

வெற்றி இங்கிலாந்தின் கைகளில் விழுந்து விட்டது. முதல் பாதி முடியுமுன்னரே ஸ்பெயின் இரண்டு கோல் வித்தியாசத்தில் லீடிங்கில் இருந்தாலும் தங்களது போராட்டக்குணத்தால் சதித்துவிட்டனர் இளம் இங்கிலாந்து வீரர்கள். ஸ்பெய்ன் வீரர்களைச் சொல்லியும் குற்றமில்லை. முடிந்தவரை முயற்சித்த அவர்களும் திறமை மிக்கவர்களே. இருந்தாலும் அட்டாக்கிங் மற்றும் டிபெண்டிங்கில் ஒரு முழுமை பெற்ற அணியாக விளங்கிய இங்கிலாந்து அணியில் அனைவரின் ஆட்டமும் ரசிக்கும்படியாக இருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் 8 கோல்களை அடித்த இங்கிலாந்தின் ரியான் ப்ரெஸ்டர் தங்க ஷூ விருதைப் பெற்றார். பிரேசில் கோல்கீப்பர் ப்ரசாவோ சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளவுஸ் விருது வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருதை ஃபில் ஃபோடன் வென்றார். 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைத்தொடரின் இறுதிப்போட்டி இதற்குமேலும் ஒரு தரமான போட்டியாக இருந்துவிட முடியாது. அதில் போராடி வென்ற இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்துக்கு தகுதியான அணிதான். இவ்வெற்றியின் மூலம் மீண்டும் சர்வதேச கால்பந்து உலகில் இங்கிலாந்து தன் ஆதிக்கத்தை மீட்டெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். 3 Lions are back!

http://www.vikatan.com/news/u-17-fifa-wc/106267-england-won-the-under-17-world-cup-final.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.