Jump to content

குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும்


Recommended Posts

குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும்

நல்லூர் பிரதேச சபைச் செயலர் சுட்டிக்காட்டு

 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்­பா­ணம், நல்­லூர் பகு­தி­யில் கஞ்சா விற்­ப­வர்­க­ளை­யும், வாளு­டன் நட­மா­டு­ப­வர்­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு நன்கு தெரி­யும். அவர்­களே அதைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம். அதை விடுத்து 50 குழுக்­கள் அமைத்­தா­லும் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

இவ்­வாறு நல்­லூர் பிர­தேச சபைச் செய­லர் தெரி­வித்­தார்.
யாழ்ப்­பா­ணத்­தின் சிவில் நிலமை தொடர்­பான கூட்­டம் யாழ். மாவட்டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்த­தா­வது-:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பர­வ­லாக குற்­றச் செயல்­கள் நடக்­கின்­றன. நல்­லூர் பகு­தி­யி­லும் கஞ்சா விற்­பனை, மண் கடத்­தல், சட்­ட­வி­ரோத மதுப் பாவனை, வாள்­வெட்டு என்­பன இடம்­பெ­று­கின்­றன. அவற்­றைச் செய்­ப­வர்­க­ளை­யும், வாளு­டன் நட­மா­டு­ப­வர்­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு நன்கு தெரி­யும். அவர்­களே இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்.

நல்­லூர், அரி­யா­லைப் பகு­தி­யில் நடக்­கும் குற்­றச் செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த அங்கு ஓர் பொலிஸ் காவ­ரண் அமைக்க வேண்­டும் என்று நீண்­ட­கா­லம் கோரப்­பட்­டது. தற்­போது அங்கு ஒரு காவ­ல­ரண் அமைக்­கப்­பட்­டது. ஆனால் அரி­யா­லைப் பகு­தி­யில் நடக்­கும் குற்­றச் செயல் தொடர்­பில் அங்கு சென்று உடன் தக­வல் வழங்­கி­னால் பொலிஸ் நிலை­யம் சென்று முறை­யி­டு­மாறு கூறப்­ப­டு­கின்­றது.

இரவு நேரத்­தில் மணல் கடத்­தல், சமூக விரோ­தச் செயல் இடம்­பெ­றும்­போது பொலிஸ் நிலை­யத்­துக்­குத் தக­வல் வழங்­கி­னால் அவர்­கள் மணல் ஏற்­றிய வாக­னத்­தின் இலக்­கம், சார­தி­யின் பெயர், வீட்டு முக­வரி என அனைத்­தை­யும் தக­வல் வழங்­கு­ப­வ­ரி­டமே கோரு­கின்­ற­னர். அவ்­வா­றி­ருந்­தால் யார் தக­வல் வழங்க முன்­வ­ரு­வார்­கள்?- என்­றார்.

http://newuthayan.com/story/34075.html

பாடசாலை வளாகத்திற்குள் வைத்து கஞ்சா பாவிக்கும் மாணவர்கள்-யாழில் அதிர்ச்சி தகவல்!

 

யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு போதிய முயற்சிகள் எவரும் எடுப்பதில்லை எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை வளாகத்திற்குள் வைத்து கஞ்சா பாவிக்கும் மாணவர்கள்-யாழில் அதிர்ச்சி தகவல்!

அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.

யாழ் மாவட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் பாடசாலை வளாகத்தின் உள்ளேயே கஞ்சா பாவிக்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இது மிகவும் வேதனைக்குரியதும் அதிர்ச்சிக்குரியதுமாகும்.

ஆனால் இதற்கு சரியான தீர்வை எவரும் முன்னிறுத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் எடுக்காமல் செயல்படுகின்றனர்.

அதாவது கஞ்சா பாவித்தால் உடனடியாக பாடசாலை அதிபர் அந்த மாணவனை பாடசாலையை விட்டு இடை நிறுத்துகிறார்.

இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

மேலும் மாணவர்களுக்கு எங்கிருந்து இந்த போதை பொருட்கள் கிடைக்கின்றன என்பதை இதுவரை பொலிஸார் கண்டுபிடிக்கவும் இல்லை ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் இல்லை.

மீண்டும் மீண்டும் ஒரே பிரச்சனையை கதைப்பதில் பயன் இல்லை. ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அவசியம் ஆகும்.

மேலும் கோட்டை மற்றும் பேருந்து நிலையம் ரயில் நிலையம் என்பவற்றில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

ஆனால் பொலிஸார் இது தொடர்பில் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பொலிஸ் காவலரன் அமைக்குமாறு கேட்டிருந்தும் இதுவரை நடைபெறவில்லை.

பொலிஸாருக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் என்ன தடைகள் உள்ளன என எமக்கு தெரியவில்லை.

ஆனால் இந்த விடயம் கவனிப்பாரற்று பாரிய சமூக பின்னடைவுக்கு எம் இளையவர்வளை இட்டு செல்கிறது என குற்றம் சுமத்தியிருந்தனர்.

கஞ்சா தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நேரம் அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில்
முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/cannabis-are-using-jaffna-student-in-school-place-

Link to comment
Share on other sites

23 minutes ago, நவீனன் said:

குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும்

 

 

பாம்பின் கால் பாம்பறியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 
பொலிஸாரை நன்கு தெரியும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்செயல் நடைபெறும் தமிழ் பிரதேசங்களைத் தெரிந்து சமூக அக்கறையும் நேர்மையுமுள்ள தமிழ் பொலீசாரை அங்கே சேவையில் ஈடுபடுத்தினால் குற்றச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்படும். இதைத்தான் விக்கியரும் பலகாலமாக சூட்சுமமாக சொல்லிவருகிறார் எவரும் கேட்பதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95ம் ஆண்டிலிருந்து எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.சுலபத்தில் விட்டு விடுவார்களா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 
பொலிஸாரை நன்கு தெரியும்! 

நான் அங்கை ஊரிலை இருக்கேக்கையெல்லாம் பாத்திருக்கிறன்....கள்ளச்சாராயம் விக்கிற கடைக்கு முன்னாலை பொலிஸ்ஜீப் சும்மா படங்கள்லை வந்து நிக்கிறமாதிரி வந்த சடன் பிரேக் போட்டு நிக்கும். கடை முதலாளி சாராயப்போத்திலை பழைய வீரகேசரி பேப்பராலை சுத்தி மறைச்சுக்கொண்டு வந்து குடுப்பார்.......அதுக்குப்பிறது தேத்தண்ணி குடிக்கிற மாதிரி கடைக்கு வெளியிலை வைச்சும் கள்ளச்சாராயத்தை கடலை வடையோடை ரசிச்சு ருசிச்சு மகிழலாம். பாட்டும் அந்தமாதிரி சவுண்டாய் போடுவாங்கள்....

பொலிசு சாராயப்போத்தில் வாங்கிக்கொண்டு போனாப்பிறகு கடைக்காரர் தான் அந்த ஏரியாவுக்கே பொலிசு......ஏனெண்டால் இந்த பொலிசுக்கு அந்த பொலிசை நல்லாய்த்தெரியும் எண்டுறதை விட...நல்ல பழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2017 at 5:21 PM, குமாரசாமி said:

நான் அங்கை ஊரிலை இருக்கேக்கையெல்லாம் பாத்திருக்கிறன்....கள்ளச்சாராயம் விக்கிற கடைக்கு முன்னாலை பொலிஸ்ஜீப் சும்மா படங்கள்லை வந்து நிக்கிறமாதிரி வந்த சடன் பிரேக் போட்டு நிக்கும். கடை முதலாளி சாராயப்போத்திலை பழைய வீரகேசரி பேப்பராலை சுத்தி மறைச்சுக்கொண்டு வந்து குடுப்பார்.......அதுக்குப்பிறது தேத்தண்ணி குடிக்கிற மாதிரி கடைக்கு வெளியிலை வைச்சும் கள்ளச்சாராயத்தை கடலை வடையோடை ரசிச்சு ருசிச்சு மகிழலாம். பாட்டும் அந்தமாதிரி சவுண்டாய் போடுவாங்கள்....

பொலிசு சாராயப்போத்தில் வாங்கிக்கொண்டு போனாப்பிறகு கடைக்காரர் தான் அந்த ஏரியாவுக்கே பொலிசு......ஏனெண்டால் இந்த பொலிசுக்கு அந்த பொலிசை நல்லாய்த்தெரியும் எண்டுறதை விட...நல்ல பழக்கம்.

இப்பவும் அதுதான் நடக்குது ...
மண் ஏத்துறவன் ... கஞ்சா கடத்துறவன்தான் ஊருக்கு போலீசு 

Link to comment
Share on other sites

On 10/3/2017 at 9:59 PM, நவீனன் said:

இரவு நேரத்­தில் மணல் கடத்­தல், சமூக விரோ­தச் செயல் இடம்­பெ­றும்­போது பொலிஸ் நிலை­யத்­துக்­குத் தக­வல் வழங்­கி­னால் அவர்­கள் மணல் ஏற்­றிய வாக­னத்­தின் இலக்­கம், சார­தி­யின் பெயர், வீட்டு முக­வரி என அனைத்­தை­யும் தக­வல் வழங்­கு­ப­வ­ரி­டமே கோரு­கின்­ற­னர். அவ்­வா­றி­ருந்­தால் யார் தக­வல் வழங்க முன்­வ­ரு­வார்­கள்?

மக்களே இதை செய்தால் அங்கு சிங்கள அரசின் போலீசுக்கு வேலையில்லை. தகவல் வழங்கும் மக்களுக்கு அரசாங்கம் மாதாந்த சம்பளம் வழங்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.