Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா T20 தொடர் செய்திகள்


Recommended Posts

ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள்: இந்திய அணியில் நெஹ்ரா, கார்த்திக், தவண்

 
nehra

டி20 அணியில் ஆஷிஷ் நெஹ்ரா.   -  படம்.| ஏ.பி.

அக்டோபர் 7-ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஷிஷ் நெஹ்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் ஆடினார்.

மீண்டும் ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பில்லை. ரஹானே, பவுலர் ஷர்துல் தாக்குர் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை.

அணி விவரம்:

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, அக்சர் படேல்.

 

http://tamil.thehindu.com/sports/article19783946.ece?homepage=true

Link to comment
Share on other sites

நெஹ்ரா கம்பேக்; அஷ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு: ஆஸி. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

nehra_17461.jpg

 


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதையடுத்து வரும் 7-ம் தேதி தொடங்கும் டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான தொடர்களில் புறக்கணிக்கப்பட்ட முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த முறையும் அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும், ஆஸ்திரேலிய தொடரில் 4 அரை சதங்கள் விளாசிய அஜிங்கியா ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் ஆஸ்திரேலிய டி20 தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 


அதேபோல், மனைவியின் உடல்நலக் குறைவால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த ஷிகர் தவான் அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். இளம் வீரர் ரிஷாப் பாண்ட் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நியூசிலாந்து ஏ அணிக்கெதிராக இந்திய ஏ அணி பங்கேற்கும் தொடரில் விளையாட இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

38 வயது ஆசிஷ் நெஹ்ரா அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து பேசிய பி.சி.சி.ஐ வட்டாரங்கள், இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த வருடத் தொடக்கத்தில் நடைபெற்ற தொடரில் நெஹ்ரா விளையாடினார். அதற்கடுத்து சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலும் அவர் பங்கேற்க இருந்தார். ஆனால், ஐ.பி.எல் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் நெஹ்ராவால் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாட முடியவில்லை. பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்கள் வெளிநாட்டில் நடந்ததால் அவரைத் தேர்வு செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர். யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரது செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால், அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பெயர்களை பி.சி.சி.ஐ பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்திய அணி விபரம்: 

 

விராட் கோலி (கேப்டன்) , ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, மணீஷ் பாண்டே, மகேந்திரசிங் தோனி, குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல். 
 

http://www.vikatan.com/news/sports/103856-ashish-nehra-makes-a-comeback-for-t20i-series-against-australia.html

Link to comment
Share on other sites

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

 
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
 
ராஞ்சி:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடக்கிறது.

ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்திய அணியினர் தங்களது ஆதிக்கத்தை தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா (296 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலித்து தொடர்நாயகன் விருதை பெற்ற ஹர்திக் பாண்ட்யா, சுழலில் மிரட்டிய குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் 20 ஓவர் போட்டியிலும் அசத்துவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

201710070136527834_1_t20-cricket._L_styv

38 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா, இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விக்கெட் கீப்பர் டோனியின் சொந்த ஊர் என்பதால், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டுகளை காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதால் ஒரு நாள் தொடரில் ஒதுங்கி இருந்த ஷிகர் தவான் அணிக்கு திரும்பி உள்ளதால் லோகேஷ் ராகுலுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறி தான்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்கு பரிகாரம் தேடுவதற்கு முனைப்பு காட்டும். அந்த அணி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஒரு நாள் தொடரில் நல்ல தொடக்கம் கிடைத்தும் மிடில் வரிசை சொதப்பியதால் அவர்களால் எழுச்சி பெற முடியவில்லை. ஆனால் 20 ஓவர் போட்டிக்கு என்று 5 வீரர்கள் வருகை தந்திருப்பதால் மோசமான நிலைமையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

ராஞ்சியில் நேற்று பிற்பகலில் பலத்த மழை பெய்ததால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உள்அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றும் பிற்பகலில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ஆட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ராஞ்சியில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் அணிகளின் தரவரிசையில் இந்தியா 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் ஊதித்தள்ளினால், தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறும். இதே முடிவு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தால் அந்த அணி 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஆஷிஷ் நெஹரா அல்லது புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ் அல்லது கிளைன் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், டிம் பெய்ன், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா, கனே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரென்டோர்ப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/07013649/1121749/First-T20-Australia-tour-of-India-at-Ranchi.vpf

Link to comment
Share on other sites

காயம் காரணமாக ஆஸி.திரும்புகிறார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

 
STEVESMITH

ஸ்டீவ் ஸ்மித்.   -  படம்.| கே.முரளிகுமார்.

தோள்பட்டைக் காயம் காரணமாக ஆஸ்திரேலியா திரும்புகிறார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் டேவிட் வார்னர் தலைமை பொறுப்பேற்கிறார்.

ஸ்மித்துக்குப் பதிலாக அணியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று 5-வது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்த போது தோள்பட்டைக் காயம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய அணி மருத்துவர் ரிச்சர்ட் ஷா தெரிவித்தார்.

சீரியசான காயம் இல்லை என்றாலும் ஆஷஸ் தொடரை முன்னிட்டு காயம் தீவிரமடைந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article19818224.ece?homepage=true

Link to comment
Share on other sites

ராஞ்சி டி20 கிரிக்கெட்: டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

 
 
ராஞ்சி டி20 கிரிக்கெட்: டி.எல். விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
 
ராஞ்சி:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு தவான் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 8 ரன்களில் புவனேஸ்வர் பந்தில்  ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.

அடுத்து பிஞ்ச் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் பிஞ்ச் குல்தீப் யாதவின் 10-வது ஓவரின் 5-வது பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார். பிஞ்ச் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.

பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே மந்தமானது. ஹென்ரிக்ஸ் 8 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பெய்ன் ஸ்டம்பை பறிகொடுத்தார். 4-வது பந்தில் கவுல்டர்-நைல் போல்டானார்.

201710072307391546_1_india-cric._L_styvp

19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் கிறிஸ்டியன் ரன்அவுட் ஆனார். இந்தியா 18.4 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் இத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளபட்டு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுல்டர்-நைல் வேகத்தில் போல்டானார். அடுத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5.3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. தவான் 12 பந்துகளில் 15 ரன்களுடனும், கோலி 14 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது டி-20 போட்டி வருகிற 10-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/07230736/1121905/india-beat-australia-by-9-wickets-in-ranchi-t20.vpf

Link to comment
Share on other sites

எங்களுக்கு டக்வொர்த் முறை உண்மையில் புரியவில்லை: விராட் கோலி

 

 
kohli

விராட் கோலி.   -  படம். | ஏ.பி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் கணக்கீட்டு முறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எடுத்து வெற்றி பெற்றதையடுத்து ‘உள்ளபடியே டக்வொர்த் முறை எங்களுக்குப் புரியவில்லை’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்த டி20 வெற்றி இந்திய அணியின் 50வது டி20 வெற்றி, இந்தச் சாதனையை நிகழ்த்தும் 3-வது அணியாகும் இந்திய அணி.

ஆட்ட முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறும்போது,

“டாஸ் வென்று பவுலிங் எடுத்த பிறகு இத்தகைய ஒரு முயற்சி தேவைப்படுகிறது. டக்வொர்த் லூயிஸ் முறையைப் பற்றி உள்ளபடியே எங்களுக்குப் புரியவில்லை என்றே கூற வேண்டும். 40 ரன்கள் இலக்காக இருக்கும் என்று நினைத்தோம், 48 என்பது கொஞ்சம் ‘ட்ரிக்கி’ இலக்குதான். வீரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும் இது. அதே போல் நிர்வாகத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தந்த வடிவங்களுக்கு ஏற்ற சிறப்பு வீரர்களைத் தேர்வு செய்தனர். புதிர் வீச்சாளர்களைத் தேர்வு செய்த்து பாராட்டுக்குரியது.

இத்தகைய புதிர் வீச்சாளர்கள் ஒரு போட்டியில் ரன்களைக் கொடுப்பார்கள், ஆனால் மீண்டெழுந்து சாதிப்பார்கள். குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் புவனேஷ், பும்ரா இப்போதெல்லாம் மிகவும் சிறப்பாக வீசி வருகின்றனர். யார்க்கர்கள், ஸ்லோ பந்துகளை வீச சிறப்புத் திறமையும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

ஒருநாள் தொடரை தவண் இழந்தது துரதிர்ஷ்டமே, ஆனால் இந்த 15 ரன்கள் கூட அவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும்” என்றார் விராட் கோலி

http://tamil.thehindu.com/sports/article19822964.ece

Link to comment
Share on other sites

ராஞ்சி டி20: ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாத ஆஸ்திரேலியா

 

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய அணி சரிவை சந்தித்தது தெரியவந்துள்ளது.

 
ராஞ்சி டி20: ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாத ஆஸ்திரேலியா
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ராஞ்சியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

அதன்பின் இந்தியாவிற்கு 6 ஓவரில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிரிக்கெட் விதிமுறையில் ஐ.சி.சி. பல மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் இந்த தொடருக்கு விதிமுறை நடைமுறை படுத்தப்படாது என்று கூறப்பட்டது.

ஐ.சி.சி.யால் மாற்றப்பட்ட விதிமுறையில் பேட்டின் அளவு, பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்தல், பேட்ஸ்மேன்கள் ஓடும்போது க்ரீஸ் கோட்டை தொடுவதில் மாற்றம் என பல்வேறு அம்சங்கள் அடங்கும். அதில் ஒன்று மழைக் காரணமாக ஓவர் குறைக்கப்பட்டால் ஒரு பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களுக்கு குறையாமல் பந்து வீசலாம். இந்த விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பந்து வீசிய ஆஸ்திரேலியா 6 ஓவரை மூன்று பந்து வீச்சாளர்களுக்கு பிரித்து கொடுத்திருக்க முடியும். ஆனால் கவுல்டர் நைலுக்கு மட்டும் இரண்டு ஓவர் கொடுக்கப்பட்டது. பின்னர் புதுமுக வீரர் பெரெண்டர்ஃப், சம்பா, டை, கிறிஸ்டியன் ஆகியோர் பந்து வீசினார்கள்.

201710081647085144_1_bumrah-s._L_styvpf.

ஆஸ்திரேலிய வீரர்கள் யாருக்கும் புது விதிமுறை தெரியவில்லை. இதனால் ஐந்து பந்து வீச்சாளரை பயன்படுத்தியது. பெரெண்டர்ஃப் சிறப்பாக பந்து வீசியும் ஒரு ஓவருடன் நிறுத்தப்பட்டார். ஒருவேளை விதி தெரிந்திருந்தால் பெரெண்டர்ஃப்க்கு மேலும் ஒரு ஓவர் கொடுக்கப்பட்டிருக்கும். சம்பாவும் ஒரு ஓவர் கூடுதலாக வீசியிருப்பார். இப்படி இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக போட்டி இருந்திருக்கும். அது இல்லாமல் போய்விட்டது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் ‘‘புதிய விதிமுறை குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. 5-வது ஓவரின்போது ஸ்மித் ட்ரிங்ஸ் கொண்டு வந்தார். அப்போது எங்களிடம் ஸ்மித் கூறியபோதுதான் எங்களுக்கு தெரிய வந்தது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/08164707/1121988/Aaron-Finch-rues-mixed-and-matched-rules-for-India.vpf

Link to comment
Share on other sites

தொடரை வெல்லுமா இந்தியா? இன்று இரண்டாவது டி20 போட்டி !

 

இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி டி20 ஓவர் போட்டியின் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆடியது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு அதன் முயற்சியைக் கட்டுப்படுத்திவிட்டது. 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதனால், டக்வொர்த் லீவிஸ் விதியின்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள்  இலக்காக வைக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அந்த ரன்களை எடுத்தது இந்திய அணி. இதன்மூலம் அதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது. 

 
 

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி, இன்று கௌகாத்தியில் நடைபெறவிருக்கிறது. இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில், தொடரை வெல்ல இந்தியாவும், முதல் வெற்றியைப் பெற ஆஸ்திரேலியாவும் முயற்சி செய்யும் என்பதால், நிச்சயம் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. 

http://www.vikatan.com/news/sports/104541-second-t20-against-australia-will-be-played-today.html

Link to comment
Share on other sites

#IndVsAus: இந்திய டாப் ஆர்டர் சொதப்பல்... ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கலக்கல்!

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

1_21166.jpg

 

ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய இன்றைய போட்டியில் இந்திய அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பந்துவீச தீர்மானித்தார் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவர்கள் 100 ரன்களை தாண்டுவார்களா என்றே ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுந்தது. ஜாதவ் மற்றும் பாண்டியா முறையே 27 மற்றும் 25 ரன்கள் அடித்து, அணி 118 ரன்கள் எடுக்க வித்திட்டனர். ஆஸ்திரேலியா சார்பில், Jason Behrendorff 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப்போது பேட்டிங்கை தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

http://www.vikatan.com/news/sports/104638-india-sets-target-of-119-runs-in-second-t20-match-against-australia.html

Link to comment
Share on other sites

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன் செய்த ஆஸ்திரேலியா

 

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

aus2_22585.jpg

 

ஒருநாள் தொடரை 1-4 என இழந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் வென்ற இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. 

aus1_22428.jpg

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் வார்னர் , முதலில் பந்துவீச தீர்மானித்தார். இந்த முடிவு அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த அணியின் ஜேசன் பெஹெரெண்டோர்ஃப் அபராமாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்திய அணி தொடகத்தில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் பாண்டியா மற்றும் ஜாதவ் ஆகியோரின் உதவியுடன் இந்தியா 100 ரன்களை கடந்தது. அதிகபட்சமாக ஜாதவ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. 

aus_22184.jpg

பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. 13 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் மற்றும் ஹெட் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 15.3 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 46 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். 

http://www.vikatan.com/news/sports/104640-australia-levels-the-t20-series.html

Link to comment
Share on other sites

தோல்வி எதிரொலி: ஆஸி. வீரர்கள் பேருந்து மீது கல் வீச்சு! 

 

 
bus1

 

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் போட்டி முடிந்து தங்களுடைய நட்சத்திர விடுதிக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த பேருந்தின் மீது பெரிய கல் ஒன்று வீசப்பட்டுள்ளது. கல் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சிதறியுள்ளது. இதனால் ஆஸி. வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைக் கவலையுடன் பகிர்ந்துள்ளார் ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச். இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்கமுடியாத ரசிகர் ஒருவர்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது.   

வீசப்பட்ட கல், கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரிதாக இருந்துள்ளது. பேருந்தின் வலது பக்கத்தில் வீசப்பட்ட கல் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே விழுந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக அந்த ஜன்னலின் ஓரம் எந்த ஒரு வீரரும் அமர்ந்திருக்கவில்லை. இதனால் இந்தக் கல் வீச்சுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் வங்கதேசத்துக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அடுத்த ஐந்தாவது வாரத்தில் மீண்டுமொரு கல் வீச்சுச் சம்பவத்தை ஆஸி. வீரர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். 

குவாஹாட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆஸி. வீரர்களுக்குக் கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/11/rock-thrown-at-australian-team-bus-in-india-2788459.html

Link to comment
Share on other sites

‘முட்டை’ வாங்கியதிலும் சாதனை படைத்த கோலி!

 

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இ20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை (!) ஒன்றைப் படைத்தார்.

5_Kohli.jpg

அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான இ20 போட்டிகளில் விளையாடிய பின் முதன்முறையாக ‘முட்டை’ வாங்கிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதுவரை 46 இ20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, முதன்முறையாக நேற்று நடைபெற்ற 47வது போட்டியில் முதன்முறையாக ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.

இதற்கு முன் இந்தச் சாதனைக்கு பாகிஸ்தானின் சொஹைப் மாலிக்கே சொந்தக்காரராக இருந்தார். இவர், தான் விளையாடிய நாற்பதாவது போட்டியில்தான் முதன்முறையாக ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்துள்ளார்.

மேலும், இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 85 இ20 போட்டிகளில், முதன்முறையாக அணித் தலைவர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமும் இதுவே!

http://www.virakesari.lk/article/25622

Link to comment
Share on other sites

பெரண்டார்ஃப்... ஓவர்நைட்டில் ஃபேமஸானது எப்படி? #IndVsAus

 
 
Chennai: 

`விராட் கோலி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் டக் அவுட்டானார்; தோனி, முதன்முறையாக டி-20 போட்டிகளில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்; ஜஸ்ப்ரிட் பும்ரா, டி-20 போட்டியில் தன் ரன் கணக்கைத் தொடங்கினார். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டி -20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.' என கவுஹாத்தியில் நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா மேட்சில் ஏகப்பட்ட `முதல்’கள். இவை எல்லாவற்றையும் கடந்து, யாருடா அந்தப் பையன்... இந்தப் போடுபோடுறான்?’ என வியக்கவைத்தார் பெரண்டார்ஃப். ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ரோகித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, மனீஷ் பாண்டே என டாப் ஆர்டரை பதம்பார்த்து,  இந்திய அணியை ஆட்டம் காணச் செய்துவிட்டார். ஓவர்நைட்டில் பாப்புலராகிவிட்டார்.

பெரண்டார்ஃப்

 

இலை தழைகளை நீட்டி ஆட்டின் கழுத்தை வெட்டுவதுபோல வெட்டிவிட்டார் பெரண்டார்ஃப். ஆட்டத்தின் முதல் பந்து ஃபுல்டாஸ். அதை அலுங்காமல் குலுங்காமல் கவர் திசையில் பெளண்டரிக்கு விரட்டினார் ரோகித் ஷர்மா. இரண்டாவது பந்து `ஃபுல் லெங்த்'. தடுத்தாடுகிறார். அடுத்த பந்தும் அதே லெங்த். ஆனால், கொஞ்சம் வெளியே போன பந்தை மிட் ஆஃப் திசையில் பெளண்டரியாக்கினார். நான்காவது பந்து. லெஃப்ட் ஆர்ம் ஓவர் ஸ்டிக்கிலிருந்து வீசுகிறார். மிடில் ஸ்டிக் லைனில் பிட்சான பந்து ஆஃப் ஸ்டிக்குக்கு நேராகவோ, அதற்கு வெளியேவோ சென்றிருக்க வேண்டும். மாறாக, `இன்ஸ்விங்' ஆகி ரோகித்தான் pad-யைப் பதம்பார்த்தது. ஆஸி. வீரர்கள் அப்பீல் செய்த மறுகணமே விரலை உயர்த்தினார் நடுவர். ரோகித் அவுட். களம் புகுந்தார் கேப்டன் விராட் கோலி. டி-20 போட்டிகளின் நம்பர் 1 பேட்ஸ்மேன். 54-க்கும்மேல் சராசரிகொண்டிருந்தவரை, இரண்டாவது பந்திலேயே வெளியேற்றினார். ரோகித்தைக் காலிசெய்த அதே பந்து. ஆஃப் ஸ்டிக் திசையில் வரும் எனக் கணித்து ஸ்கொயர் லெக்கில் ஆட கோலி முற்பட, மீண்டும் ஸ்விங். பந்து pad-ல் பட, ஆஸி. வீரர்கள் குதித்து அப்பீல் செய்கிறார்கள். அம்பயரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், ஓடிப்போய் பந்தைப் பிடிக்கிறார் பெரண்டார்ஃப். இப்போதும் விரலைத் தூக்கிவிட்டார் அம்பயர். கேட்சா அல்லது எல்.பி.டபிள்யூ-வா? ரிவ்யூ வேண்டாம் என தவான் சொல்ல, நடையைக்கட்டினார் கோலி. டி20-யில் முதல்முறையாக பூஜ்ஜியத்தோடு.

அப்போதே மொத்த தேசமும் ஆட்டம் கண்டது. இதுவரை நாம் பார்த்திடாத ஓர் ஆள், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை ஆட்டம் காணவைத்துவிட்டாரே! இத்தனைக்கும் அதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீசிய இரண்டாவது ஓவர்! ஃபீல்டிங்குக்காக பெரண்டார்ஃப் பெளண்டரி எல்லையை நோக்கிச் சென்றபோது அவரைக் கண்ட கோடிக்கண்களிலும் ஆச்சர்யம். அது அகல்வதற்கு முன்பே அதிர்ச்சியைப் பரிசளித்தார் பெரண்டார்ஃப். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை `தேர்டு மேன்' திசையில் பெளண்டரி அடித்தார் மனீஷ். ஆனால், அவரை அடுத்த பந்திலேயே பெவிலியனுக்கு பார்சல் செய்தார் பெரண்டார்ஃப். ரோகித், கோலியைப்போல் அல்லாமல் மனீஷ் ஸ்விங்குக்கு ஆட, பந்து ஸ்விங் ஆகாமல் வெளியே சென்றது. அடிப்பதா, விடுவதா என்ற குழப்பத்தில் அவர் ஃப்ரீஸாகி நிற்க, பேட்டை முத்தமிட்டுச் சென்று கீப்பரின் க்ளவுஸில் தவழ்ந்தது பந்து. 

பெரண்டார்ஃப்

14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. ஷிகர் தவான், கேதர் ஜாதவ் இருவரும் அணியை மீட்பார்கள் என நம்பி இருந்தார்கள் ரசிகர்கள். கூல்டர்நைல் வீசிய அடுத்த ஓவரில் ஜாதவ் அற்புதமாக புல் ஷாட்டில் சிக்ஸர் அடிக்க, 11 ரன்கள் கிடைத்தன. இந்திய ரசிகன் ஆசுவாசப்பட்ட நொடியில் மீண்டும் பெரண்டார்ஃப். கவனமாகக் கையாண்டார் தவான். பெரண்டார்ஃப் லெங்தை மாற்றி மாற்றி வீச, இந்த மாயக்காரனின் வலையில் தவானும் வீழ்ந்தார். ஓவர் பிட்ச் பாலை லாங் ஆஃப் திசையில் விளாச முற்பட, நன்றாகப் படாமல் எல்லைக்கோட்டுக்கு முன்பாகவே தரை இறங்கியது பந்து. லாங் ஆன், லாங் ஆஃப் ஃபீல்டர்கள் இல்லை. விக்கெட் போக வாய்ப்பே இல்லை. ஆனால், திடீரென அங்கு அட்டெண்டன்ஸ் போட்டார் வார்னர். மிட் ஆன் திசையில் நின்றவர் இங்கு எப்படி? பிடிக்க வாய்ப்பே இல்லாத கேட்சை பின்னோக்கி ஓடிவந்து, அற்புதமாகக் கணித்து, அநாயசமாகப் பிடித்து அசத்தினார் வார்னர்? இந்தியா 27/4. பெரண்டார்ஃப் ஹீரோவாகிவிட்டார். இந்தியப் படகில் அவர் ஓட்டை போட்டுவிட்டார்.

தோனி, ஜாதவ் இருவரும் கைகோக்க ஆறு ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள். இந்தியாவை மொத்தமாக முடித்துக்கட்ட நினைத்த வார்னர், பெரண்டார்ஃப் கையில் மீண்டும் பந்தைக் கொடுத்தார். தோனி மிகவும் கவனமாக ஆட, இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை எப்படியோ தாக்குப்பிடித்தது இந்தியா. கடைசிப் பந்தில் ஜாதவையும் தன் பாக்கெட்டில் மடித்துச் சென்றிருப்பார். நல்லவேளை ஜாதவ் தப்பித்தார். இல்லையேல், அது அவருக்கு ஐந்தாவது விக்கெட்டாக அமைந்திருக்கும். 4 ஓவர்கள், 21 ரன், 4 விக்கெட். 24 பந்துகளில் 17 `டெட் பால்'கள். ஜேசன் பெரண்டார்ஃப், கடந்த சில வாரங்களில் முதல்முறையாக இந்திய மண்ணில் ஆஸி. கொடியைப் பறக்கவிட்டவர். இந்திய வீரர்களை ஸ்தம்பிக்கவைத்தவர். 7-வது ஓவரின் முடிவில் தனது பணியை செவ்வென முடித்து, தன் அணிக்கு அப்போதே வெற்றியையும் பரிசளித்தவர்.

பெரண்டார்ஃப்

 

 அதன் பிறகு, இந்தியா மீளவுமில்லை; ஆஸி-யை மிரட்டவுமில்லை. பெரண்டார்ஃபின் ஸ்பெஷல் முடிந்தபோதே, அவரிடம் சரண்டர் ஆகியிருந்தது மென் இன் ப்ளூ. ``நான்கு ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று புருவங்கள் உயர்த்திய பெரண்டார்ஃப், மற்ற ஆஸி. வீரர்களைப்போல் வாய்ச்சண்டையில் ஈடுபடுவதை விரும்பாதவர். ``எப்போதும் என் பந்துவீச்சுதான் பேச வேண்டும்" என்று கூறுபவர், தன் இரண்டாவது போட்டியிலேயே உரக்கமாகப் பேசிவிட்டார் தன் பந்துவீச்சின் மூலம்! 

http://www.vikatan.com/news/sports/104726-jason-behrendorff-scalped-4-wickets-in-2nd-t20-vs-india.html

Link to comment
Share on other sites

ஆஸி. - இந்தியா மோதும் இ–20 தொடரின் இறுதிப் போட்டி இன்று

 

 

இந்­திய – அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைத­ரா­பாத்தில் இன்று நடை­பெ­று­கின்­றது. 

இரு அணி­களும் தொடரை வெல்­லப்­போகும் ஆர்­வத்­துடன் உள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி இந்­தி­யாவில் சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இரு அணி­க­ளுக்­கி­டை­யே­யான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்­தியா 4–-1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

மூன்று போட்டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் ராஞ்­சியில் நடந்த முதல் ஆட்­டத்தில் இந்­தியா 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­திலும், குஹாத்­தியில் நடை­பெற்ற 2ஆ-வது ஆட்­டத்தில் அவுஸ்­தி­ரே­லியா 8 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­திலும் வெற்றி பெற்­றன. இதனால் தொடர் 1-–1 என்ற கணக்கில் சம­நி­லையில் உள்­ளது.

இந்­நி­லையில் இந்­திய –- அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி ஹைத­ரா­பாத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. 

ஒருநாள் தொடரை வென்ற இந்­திய அணி இரு­ப­துக்கு 20 தொட­ரையும் வெல்ல வேண்டும் என்ற வேட்­கையில் இருக்­கி­றது. 

ஒருநாள் தொடரை இழந்த அவுஸ்­தி­ரே­லிய அணி இரு­ப­துக்கு 20 தொட­ரை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற ஆர்­வத்தில் உள்­ளது. இரு அணி­களும் சம­ப­லத்­துடன் மோது­வதால் தொடரை வெல்­லப்­போ­வது யார் என்று ஆவ­லுடன் எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது.

இரு அணி­களும் இன்று மோது­வது 16ஆ-வது இரு­ப­துக்கு 20 போட்­டி­யாகும். இது­வரை நடைபெற்ற 15 போட்டிகளில் இந்தியா பத்து போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/25700

Link to comment
Share on other sites

வந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா!? #IndVsAus

இந்தியா - ஆஸ்திரேலியா (#IndVsAus) அணிகளுக்கு இடையிலான 3-வது டி 20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதுடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரன் விருந்தாகவும் இருக்கலாம்.

IndVsAus

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4-1 எனக் கைப்பற்றி அசத்தியது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ராஞ்சியில் நடந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது இந்திய அணி. ஆனால், கெளகாத்தியில்  நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வியைப் பரிசளித்தது. எனவே, கடந்த போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்திலும், டி 20 தொடரை வெல்லும் முனைப்புடனும், டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் அனைத்துத் துறைகளிலும், முழுவீச்சுடன் செயல்படத் தவறிய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, டி 20 தொடரையும் வெல்ல முயற்சிக்கும்.

இந்திய அணியின் ப்ளஸ், மைனஸ் 

கடந்த போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டரை, ஆஸ்திரேலியாவின்  இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெகண்டார்ஃப்,  தொடக்கத்திலேயே வெளியேற்றிவிட்டார். எனவே, அவரது பந்துவீச்சை, இந்திய அணி வீரர்கள் கவனமுடன் எதிர்கொள்வார்கள் என நம்பலாம். போட்டியை வெல்வதற்கு ஏதுவாக, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து, இன்றாவது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் வெளிப்பட வேண்டும்.

#IndVsAus

மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர், இதுவரை நிலைத்து நின்று விளையாடவில்லை என்பது மைனஸ். சுரேஷ் ரெய்னா இல்லாதது தெரிகிறது. இச்சமயங்களில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளித்தாலும், அவருக்குப் பக்கபலமாக யாரும் அடித்து ஆடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. எதிரணியை குறைத்து மதிப்பிட்டு,  அதிகப்படியான தன்னம்பிக்கையினால் செய்யக்கூடிய தவறுகளை, இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

கடந்த போட்டியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள், விரைவாகவே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றி, ரன்குவிப்பைத் தடுத்தனர்.  ஆனால், அதை சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் குல்தீப் யாதவ், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதுடன், அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தனர் (7.3 ஓவர்களில் 75 ரன்கள்). எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்த இருவரில் ஒருவர் வெளியே அமர வைக்கப்பட்டு, அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்படலாம்.

 

Ashish nehra

 

அதேபோல புவனேஷ்வர் அல்லது பும்ரா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகும் ஆசிஷ் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இதுபோன்ற எந்தப் பிரச்னைகளும், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் இல்லை என்பது ஆறுதல். தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சேர்க்கை, இன்று அணியில் அதிரடி மாற்றங்களாக இருக்கலாம்.

ஆஸ்திரேலிய அணியின் பலம், பலவீனம்

கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதத்தில், பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிடும்போது, ஆக்ரோஷமாக அணியை வழிநடத்துகிறார் டேவிட் வார்னர். எனவே, ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்குப் பதிலடியாக, இன்றைய போட்டியில் வென்று, டி-20 தொடரையும் வெல்வதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக இருக்கிறது.

#IndVsAus

 

ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, இதே மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடிய வார்னர், இன்று தேசிய அணிக்காக ஆரோன் ஃபின்ச் உடன் சேர்ந்து அதே அதிரடியைத் தொடர்ந்தால், அது இந்திய அணிக்கு மைனஸ்தான். ஒன் டவுனில் களமிறங்கும் வீரரைப் பொறுத்தே, இந்த அணியின் ரன்குவிப்பு அமையும் எனலாம். கடந்த போட்டியில் விராட் கோலி ரிவ்யூ கோராததால், ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிப் பிழைத்த ஹென்ட்ரிக்ஸ், இன்றும் ஒரு நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்தலாம். 

கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அதிரடிக்குப் பெயர்பெற்ற க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், போட்டியின் முடிவை தனியாளாக மாற்றக்கூடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டேனியல் க்றிஸ்டியன் என டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற பேட்டிங் வரிசை இருந்தாலும், இவர்கள் வடிவேலு சொல்வது போல, ''ஒன்னு தூங்குற, இல்ல தூர் வாருற'' என்ற ரகத்திலேயே இருக்கின்றனர். ஆனால், இன்றைய போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விளையாடுவர்கள் எனத் தெரிகிறது.

 

#IndVsAus

 

தன் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஜேசன் பெகண்டார்ஃப், இன்றும் மீண்டும் இந்தியாவுக்கு தலைவலியாக அமையலாம். இவருக்கு நாதன் கோல்டர்நைல் மற்றும்  ஆண்ட்ரூ டை ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர். பனிப்பொழிவு இருந்தாலும், கடந்த போட்டியின் முக்கியமான நேரத்தில், தன் சுழற்பந்து வீச்சால் ஜாதவ் மற்றும் தோனியின் விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஜாம்பா, வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வித்தியாசத்தைக் கொண்டுவருகிறார். 

ஹைதராபாத் மைதானம் எப்படி?

ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர், ஹென்ரிக்ஸ் - தவான், புவனேஷ்வர் ஆகியோருக்கு, இன்றைய டி20 போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி மைதானம், மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. இது வழக்கமாகவே ரன்குவிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி, தாராளமாக இங்கே ரன்களைக் குவிக்க முடியும்.

#IndVsAus

எனவே, இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து, முதன்முறையாக இங்கே சர்வதேச டி 20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று ஹைதராபாத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி, முதல் டி 20 போட்டியைப் போல மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ஆசிஷ் நெஹ்ரா.

 

India_Australia_Crick_velu_(7)_14342.jpg

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் பெகண்டார்ஃப், டேனியல் க்றிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெய்ன், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர்நைல்.

http://www.vikatan.com/news/sports/104915-will-australia-dethrone-india-and-win-t20-cup-in-style.html

Link to comment
Share on other sites

டி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிப்பு: ரசிகர்கள் - வெறியர்களானது காரணமா?

 

 
cricket_fights

 

இந்தியா சுற்றுப்பயணம் செய்த ஆஸ்தேரலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. மேலும் இதன்மூலம் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. 3-ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கமாக ரசிகர்கள் முன்பு மைதானத்திலேயே இதுபோன்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கை. ஆனால் இம்முறை வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் இந்தக் கோப்பை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த 3-ஆவது போட்டி கைவிடப்பட்டதை கூட வீரர்கள் தங்கள் விடுதிக்குச் சென்ற பின்பு தான் அறிவிக்கப்பட்டது. 

 

ரசிகர்கள் - வெறியர்கள் ஆன கதை தெரியுமா?

விளையாட்டு என்றாலே வெற்றியும், தோல்வியும் அடங்கியது தான். இதில் போட்டியிடும் இரு அணிகளில் ஏதேனும் ஒன்று வெற்றிபெற வேண்டுமானால் அடுத்த அணி தோல்வியடையத்தான் வேண்டும். இதில், ரசிகர்கள் தங்கள் தாய்நாட்டு அணி அல்லது விருப்ப அணி வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நிதர்சனம். ஆனால், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத மனநிலை வளர்ந்தால் மட்டுமே ஆபத்து மேலோங்கும். 

குறிப்பாக தங்கள் அணி வெற்றியடைந்தால் அதை தலைமேல் வைத்து கொண்டாடுவதும், தோல்வியுற்றால் ரகளையில் ஈடுபடும் நிலைமை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு எந்த விளையாட்டும் விதிவிலக்கல்ல. விளையாட்டு என்றால் ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வென்பது மறைந்து எதிர்தரப்பு போட்டியாளரை வாழ்நாள் எதிரியாக பார்ப்பதே காலக்கொடுமை.

ஒற்றுமையும், சமத்துவமும் மேலோங்க வேண்டிய கலை மற்றும் விளையாட்டுத்துறையில் அரசியல் லேலோங்குவது வேடிக்கைதான். இது அவ்விளையாட்டில் பங்கேற்கும் போட்டியாளருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவது போன்று அமைந்து விடுகிறது. மேலும் அந்தப் போட்டியாளர் விரும்பி விளையாட வேண்டியதை கட்டாயமாக விளையாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற விளையாட்டாக இருக்கும் கால்பந்து ஆட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது இதற்குச் சான்றாகும். இதில் வீரர்களும் தங்கள் மாண்பு குறையும் விதமாக நடந்துகொள்கின்றனர். இந்த மிருகத்தனம் தற்போது கிரிக்கெட் விளையாட்டையும் மெல்ல ஆட்கொண்டு வருகிறது.

இந்தியாவும், கிரிக்கெட்டும் என்றும் பிரிக்க முடியாத அங்கமாகி  தலைமுறைகள் ஆகிறது. முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு இந்தியர்கள் ரசிகர்களாய் இருந்தது கடந்து இப்போது வெறியர்களாக உருவெடுத்து வருகின்றனர். இதற்கு அச்சாரமிட்டது 1996 உலகக் கோப்பை. இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தது. இதை சற்றும் சகித்துக்கொள்ளாத ரசிகர்கள் மைதானத்திலேயே ரகளையில் ஈடுபட்டு வெறியர்களாகத் தொடங்கினர்.

பின்னர் நடைபெற்ற 2001, 2007 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி தோல்விகளைச் சந்தித்தபோது எல்லாம் அவர்களின் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபடுவதும், கல்வீச்சு சம்பவங்களை அரங்கேற்றுவதுமாக வெறித்தனம் வளர்ந்தது. குறிப்பாக பாகிஸ்தானுடன் தோல்வி என்றால் சொல்லத்தேவையில்லை.

இதனால் வீரர்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், கூடுதல் நெருக்கடிக்கும் ஆளாகினர். வெளிநாட்டுத் தொடர்களில் சரிவர சோபிக்கத் தவறினால், இந்தியாவில் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு தரும் நிலை ஏற்பட்டது. இதற்கு சற்றும் சளைக்காத சம்பவம்தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத் தொடரிலும் அரங்கேறியது.

2-ஆவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்து. இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் விடுதிக்குத் திரும்பும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதுவே இந்த டி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிக்கப்பட காரணமாக அமைந்தது. ஹைதராபாத்தில் நடைபெற இருந்த 3-ஆவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைக் கூட இரு நாட்டு வீரர்களும் பத்திரமாக விடுதிக்குத் திரும்பிய பின்னர் தான் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் கோப்பையும் விடுதியிலேயே வழங்கப்பட்டது. இங்கு ரசிகர்கள் யாரும் ரகளையில் ஈடுபடவில்லை என்றாலும் முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும், இதுநாள் வரையில் சென்னையில் மட்டும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் இருப்பது தனிச்சிறப்புதான். சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எந்த அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களைப் பாராட்டத் தவறியதில்லை. பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக இதே சேப்பாக்கம் மைதானத்தில் 196 ரன்கள் விளாசியபோது ரசிகர்கள் அவருக்கு ஏகோபித்த வரவேற்பை அளித்தது சிறந்த உதாரணமாகும். சென்னையைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ரசிகர்களின் இந்த நற்பண்பு தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/14/indian-cricket-fans-slowlely-forgetting-that-its-just-a-game-and-sports-is-all-about-both-win-lose-2790262.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.