Jump to content

ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன்


Recommended Posts

ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன்

 

சித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்...

பசியாற சோறு 

 

“நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன். மதியம் 12 மணிக்கு ஜி.ஹெச் வந்திருங்க, பார்க்கலாம். அங்கேதான் சோறு போட்டுக்கிட்டு இருப்பேன்" என்று  தகவல் சொன்னார். அவர் சொன்ன நேரத்துக்குச் சென்றோம். ‘பசியாற சோறு’ என்ற பெயர் தாங்கிய ஆட்டோவின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள் மக்கள். சிலர் கையில் பாத்திரங்களும், சிலர் கையில் பாலித்தீன் பைகளும் இருந்தன. அனைவரின் முகத்திலும் பசியின் கொடுமையும் வறுமையும் தெரிந்தன.

தான் வைத்திருந்த பாலித்தீன் பையில் சோறு வாங்கிய ஒரு பெண்மணி, ``இன்னும் கொஞ்சம்  கிடைக்குமா சார்?'' என்று தயக்கத்துடன் கேட்க, “எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கங்கம்மா… ரசத்துக்குத் தனியா கவர் வெச்சிருக்கீங்களா?'' என்றபடி இன்னும் இரண்டு கரண்டி சேர்த்து அள்ளிப்போட்டுவிட்டு, “போதும்மாம்மா..?''  என்றார் ராஜா சேது முரளி. பதில் சொல்ல வார்த்தை கிடைக்காமல் வாய் நிறைய புன்னகை உதிர்த்து,  தலையை ஆட்டிய அந்தப் பெண்மணியின் முகம்,  பசியின் சித்திரம். இப்படி எத்தனையோ மனிதர்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் அரசு மருத்துவமனை வாயில்களிலும், கோயில்களிலும், பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்திலும் ஒட்டிய வயிற்றுடன், `யாரோ ஒருவர் பசியாற்றுவார்' என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறார்கள். புதிய இந்தியா பிறந்தும் பழைய காட்சிகள் மாறாததுதான் இங்கு எவ்வளவு பெரிய துயரம்!

சோறு கிடைத்த சந்தோஷத்தில் பகைவென்ற வீராங்கனைபோல் வந்த அந்த அம்மாவிடம் பேசினேன். “என் பேரு சுசிலா. ஊரு கூடலூர். எனக்கு ஒரே மகன். என் வீட்டுக்காரர், என் மகன் சின்ன வயசா இருக்கும்போதே செத்துப்போயிட்டார். நான் படிச்சது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. அங்கன்வாடியில வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். மாசம் 2,500 ரூபா சம்பளம். பஸ்ஸுக்கே அதுல பாதி காசு போயிரும். அதனால, அந்த வேலை வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டு, லோக்கல்ல கிடைக்கிற கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தை ஓட்டினேன்.

எம் மகன், மேஸ்திரி வேலைக்குப் போயிக்கிட்டிருந்தான். குடும்பத்தை ஓட்டுற அளவுக்கு வருமானம் வந்தது. அவனுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் மகனுக்கு திடீர்னு மூலம் வந்திருச்சு. அதனால, பொண்டாட்டி அவனை விட்டுட்டு ஓடிட்டா. குடும்பம் சிதைஞ்சிருச்சு. டாக்டருங்க, `அவனுக்கு ஆபரேஷன் பண்ணாத்தான் குணமாகும்'னு சொல்லிட்டாங்க. சேர்த்துவெச்சிருந்த 4,000 ரூபாயோடு இங்கே வந்து 15 நாளாச்சு. மூணு வேளையும் கடையில சாப்பாடு வாங்கி கட்டுப்படியாகலை. இருந்த காசு எல்லாம் தீர்ந்துடுச்சு. இங்கே ஃப்ரீயா சோறு போடுறாங்கனு இன்னிக்குதான் தெரியும். அதான் ராத்திரிக்கும் சேர்த்து வாங்கிவெச்சுக்கிட்டேன். இதுவும் இல்லைன்னா பட்டினிதான்'' என்று அவர் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. இதுபோன்று வரிசையில் நின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கும்  துயரக்கதையை நினைத்து உடல் வெடவெடத்துப்போனது.

பசியாற சோறு கோவைபசியாற சோறு கோவை

எல்லோருக்கும் சோறு போட்டு முடித்த பிறகு ராஜா சேது முரளியிடம் பேசினோம். “நான் சின்ன வயசுல அனுபவிச்ச கஷ்டம்தாங்க, என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. என்கூட பொறந்தது மொத்தம் அஞ்சு பேர். அப்பா, பயங்கர குடிகாரர். அம்மா, கூலி வேலை செய்துதான் எங்களுக்கு சோறு போடுவாங்க. பல நாள்  சாப்பாடு இல்லாம பசியில தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்திருக்கேன். பசியின் அவஸ்தை எனக்கு நல்லாத் தெரியும். பெரிய ஆளாகி வேலைக்குப் போனதும், கஷ்டப்படுறவங்களுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து திருப்தியடைஞ்சுக்குவேன். கருத்துவேறுபாட்டால் என் மனைவி என்னைவிட்டு பிரிஞ்சுட்டாங்க. என்கூட பிறந்தவங்களும் அவங்கவங்க தனித்தனியா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நானும் அம்மாவும் மட்டும்தான் ஒண்ணா இருக்கோம்.

ஆட்டோ ஓட்டுறதுதான் என் தொழிலா இருந்துச்சு. வாழ்க்கை, எதை நோக்கிப் போகுதுனு தெரியாம சுற்றிக்கிட்டிருந்த சமயத்துல, ஒருநாள் கோவையில் இருக்கும் ‘சிநேகாலயா ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டோர் காப்பகத்துல திவ்யானு ஒரு குழந்தை சீரியஸா இருக்கு'னு சொன்னாங்க. ஆட்டோ எடுத்துட்டுப் போனேன். அங்கே அடிக்கடி இதுமாதிரி உதவிக்குப் போறது வழக்கம். அந்த குழந்தையைக் காப்பாற்ற முடியலை. கோவை ஜி.ஹெச்-லதான் பத்து நாளைக்குமேல வெச்சிருந்தோம். நான்தான் பக்கத்துலேயே இருந்து கவனிச்சுக்கிட்டேன். அப்போதான் இங்கே வர்றவங்க சாப்பாட்டுக்காகப் படுற கஷ்டத்தைப் பார்த்தேன். என்னோட சின்ன வயசு பசி, எனக்கு ஞாபகத்துக்கு வந்திருச்சு. அரசு மருத்துவமனைக்கு ஏதோதோ பிரச்னைகளோடு வரும் ஏழைகளுக்கு உதவணும்னு முடிவுபண்ணேன். என் ஆட்டோவுல ஏறுகிற எல்லார்கிட்டயும் இதைப் பற்றிச் சொல்லி, `உங்க வீட்டுல ஏதாவது விசேஷம் நடந்தா, அப்போ மிச்சமாகும் சாப்பாட்டைக் கொடுங்க'னு கேட்டேன். கொஞ்ச கொஞ்சமா ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சது.  கல்யாண வீட்டுச் சோறோ, கருமாதி வீட்டுச் சோறோ... எந்தப் பாகுபாடும் கிடையாது. எந்த விசேஷங்கள்ல மிச்சமானாலும் எனக்கு போன் வர ஆரம்பிச்சது. அன்னூர் வடவெள்ளினு கோவையைச் சுற்றி எங்கிருந்து போன் வந்தாலும் போயிடுவேன். சாதம், ரசம்னு இருக்கிறதை வாங்கிக்கிட்டு மதியானம் இங்கே ரீச் ஆகிடுவேன்.  பல இடங்கள்ல பெட்ரோல் காசையும் அவங்களே கொடுத்திருவாங்க.

பசியாற சோறு கோவை

இதுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கணும்னு சமீபத்துலதான் ‘பசியாற சோறு'னு பேருவெச்சேன். ஹாஸ்பிட்டல்ல  என் போன் நம்பர் இருக்கு. அங்கே டிஸ்சார்ச் ஆனாலும், அடுத்து வர்றவங்ககிட்ட தகவலைச் சொல்லி, என் நம்பரைக் கொடுத்திருவாங்க. ‘இன்னைக்கு சோறு இருக்கானு?' தினமும் போன் பண்ணிடுவாங்க. பல நாள் சோறு இருக்கும்; சில நாள் சோறு இருக்காது. இல்லாதபோது ‘இல்லை'னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். தயங்கித் தயங்கித்தான் சொல்லுவேன். பிறந்தநாள், நினைவு நாளுக்கெல்லாம்கூட என்கிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து சோறு போடச் சொல்றாங்க. அது மாதிரியான நேரத்துல, நானே ஆள்வெச்சு சமைச்சுக் கொண்டு வந்து போட்ருவேன்'' என்று சொல்லும் ராஜா சேது முரளியிடம், “உங்க வாழ்க்கைக்கான பணத்துக்கு என்ன பண்ணுவீங்க?'' என்று கேட்டால், “பல நல்ல உள்ளங்கள் இருக்காங்க. ஒருத்தர் மாசத்துல ஒரு நாள் பெட்ரோல் ஃபுல் பண்ணி கொடுத்திருவார். கிடைக்கிற நேரத்துக்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்டி, அதுல வர்ற வருமானத்துலதான் வாழ்க்கையை ஓட்டுறேன்'' என்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி, நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 150 பேரைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார் ராஜா சேது முரளி.

 

விடைபெறும்போது, “பசியைவிட பெரிய கொடுமை வேற இல்லீங்க. உங்களால முடிஞ்சா சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்துப்பாருங்க. அதுல கிடைக்கிற திருப்தியே தனி” என்றார் மனநிறைவுடன்.

http://www.vikatan.com/news/coverstory/103716-an-auto-driver-who-provides-food-at-free-cost-for-poor.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.