Jump to content

’பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி!’ - கலகலத்த ரஜினிகாந்த்


Recommended Posts

’பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி!’ - கலகலத்த ரஜினிகாந்த்

 

‘துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது’ என்று நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசியுள்ளார். 

rajinikanth

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில்  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது பலமுறை நிரூபணமாகியுள்ளது. காலகாலத்துக்கும் உயர்ந்து நிற்கப் போகும் இந்த மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் சக்ரவர்த்தி. நடிப்பில், பாவனையில்,வசன உச்சரிப்பில், நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்தபோது சிவாஜி ஆன்மீக படங்களிலும் நடித்தவர்’ என்றார். 

இதனிடையே சிவாஜியின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசிய ரஜினிகாந்த் ’அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் அரசியலில் வெற்றி பெறும் ரகசியத்தை கமல்ஹாசன் கூறியிருப்பார் ’ என்று குறிப்பிட்டார். அப்போது அரங்கமே சிரிப்பு ஒலியில் நிறைந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/103781-sivaji-ganesan-memorial-rajinikanth-comments-about-paneerselvam.html

Link to comment
Share on other sites

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

 

சினிமாவில் கிடைத்த பெயரும் புகழும் மட்டும் போதாது, அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் என்று சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு
 
சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.

இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவைனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி.

201710011306081321_1_RajiniKanth-Sivaji3

அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி. ஏன் அவருக்கென்று மணிமண்டபம், ஏன் அவருக்கென்று சிலை என்று சொன்னால் நடிப்பு துறையில் இருந்து, அவரது நடிப்பு ஆற்றலில் இருந்து சுதந்திரத்துக்கு பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், அவர்களுடைய வரலாற்றை யும் படமாக்கி அவர்களின் கதையை தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று சேர்த்தவர்.

சிவபுராணம், கந்த புராணம், போன்ற படங் களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த் தவர். அதனால் தான் அவருக்கென்று இந்த மணி மண்டபம்.

201710011306081321_2_RajiniKanth-Sivaji-

கடவுள் மறுப்பு கொள்கை உச்சத்தில் இருந்த போது நெற்றியில் விபூதிபோட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டார் சிவாஜி. அதற்காக இந்த மணிமண்டபம்.

நாம் இறந்த பிறகு மண்ணுடன் மண்ணாய் செல்வதை பார்க்கிறோம். இறந்த பிறகு சாம்பலாவதை பார்க்கிறோம். ஆனால் பல கோடியில் ஒருவர் தான் இறந்த பிறகு சிலையாக போவார்கள். அவரவர் வீட்டில் சிலை வைத்துக் கொள்ளலாம். அது இல்லை. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிலை. அப்படிப்பட்ட ஒரு மகானுடன் நாம் பழகி இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.

இது அரசியல், சினிமா துறை இரண்டும் கலந்த ஒரு விழா. சிவாஜி நடிப்பில் மட்டும் இல்லை அரசியலிலும் அவர் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டு சென் றிருக்கிறார். அவர் அரசியலில் நின்று அவரது தொகுதி யிலேயே தோற்றுபோய் விட்டார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தி சொல்லிவிட்டு போயிருக்கிறார். அரசியலில் இருந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா, பெயர், புகழ், செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்தாலும் எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை 2 மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ?

201710011306081321_3_RajiniKanth-Sivaji2

இல்லண்ணே. நீங்கள் திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் திரை யுலகில் உங்களுக்கு தம்பி என்று சொன்னால் என்கூட வா சொல்கிறேன் என்கிறார்.

இது ஒரு அருமையான விழா. இந்த மணி மண்டபத்தை கட்டிக்கொடுத்த அமரர் புரட்சித்தலைவிக்கு திரையுலகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அந்த சிலையை உருவாக்குவதற்கு காரணமான கலைஞருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த மணிமண்டபம் உருவாவதற்கும் சிலை உருவாவதற்கும் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு ஆகியோரின் விடா முயற்சி தான் காரணம். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/01130606/1110771/KamalHaasan-knows-how-to-win-says-Rajinikanth.vpf

Link to comment
Share on other sites

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறந்துவைப்பு

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார்.

''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.

ரஜினி, கமல் பங்கேற்பு

'அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரியும்'

சிவாஜி சிலையமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மேலும் உரையாற்றுகையில், '' சிவாஜி தேர்தலில் நின்று தோல்வியுற்றது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. மக்களுக்குத்தான் அது அவமானம்'' என்று தெரிவித்தார்.

அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், தனக்கு தெரியாது என்று கூறிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் Image captionதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், அவரது பெயரை இந்த மணி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ''தனது திரையுலக வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளவர் சிவாஜி கணேசன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் போன்றோரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி'' என்று சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.

http://www.bbc.com/tamil/india-41458074

Link to comment
Share on other sites

எந்த அரசாக இருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும்: கமல்ஹாசன் 

 

 
kamal
 
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

மாநில, தேசிய, ஆசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். தமிழர்கள் எப்போதும் சிவாஜி கணேசனை நினைவில் கொள்வர்.

ஒரு வேளை நான் நடிகராக இல்லாவிட்டால் ஒரு ரசிகனாக இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எந்த அரசாக இருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனை போன்றதொரு கலைஞரை மதித்தே ஆக வேண்டும்.

இதற்காக யாரிடமும் கெஞ்சி மன்றாட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

http://www.dinamani.com/latest-news/2017/oct/01/எந்த-அரசாக-இருந்தாலும்-நடிகர்-சிவாஜி-கணேசனை-மதித்தே-ஆக-வேண்டும்-கமல்ஹாசன்-2782552.html

கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது மணிமண்டபத்தில் வையுங்கள்: பிரபு கோரிக்கை

 

 
pribu
 
 

சென்னை அடையாறில் அமைக்கப்பட்ட சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார்.

அப்போது விழாவில் பேசிய சிவாஜியின் இளைய மகன் பிரபு, நான் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் பெரியப்பா என்று தான் அழைப்பேன். சிலையை நிறுவிய கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது மணிமண்டபத்தில் வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

சிவாஜி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் பல்வேறு கட்சியினரும் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் நேரத்தில் சிவாஜியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது என் பணி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. 

http://www.dinamani.com/latest-news/2017/oct/01/கருணாநிதியின்-பெயரை-ஒரு-ஓரத்திலாவது-மணிமண்டபத்தில்-வையுங்கள்-பிரபு-கோரிக்கை-2782551.html

Link to comment
Share on other sites

சென்னை:அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு சூடு வைக்கும் வகையில், ''சினிமா செல்வாக்கால், அரசியலில் ஜெயிக்க முடியாது; அதற்கு மேல் ஒன்று உண்டு. அது, என்ன என மக்களுக்குத்தான் தெரியும்,'' என, சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், ரஜினி பேசினார். 'முரசொலி' பவள விழாவில், 'தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' என, சீண்டிய கமலுக்கு பதிலடியாக அமைந்த ரஜினியின் பேச்சு, விழாவை விவாத மேடையாக்கியது.

 

அரசியல், களமிறங்க,ஆயத்தமாகும்,கமலுக்கு,ரஜினி, சூடு!

சென்னை, அடையாறில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு, 2.8 கோடி ரூபாயில், மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணி மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது:

சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் பங்கேற்றதன் மூலம், நாம் அனைவரும் பெருமை அடைந்துள்ளோம். அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றவர்களால், பாராட்டப் பட்டவர் சிவாஜி.
 

பல உதவிகள்


வரலாற்று தலைவர்கள், கடவுள்களை நாம் நேரில் பார்த்தது இல்லை. அவர்களை, நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. செவாலியே உள்ளிட்ட பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்.

திரையுலகில், மூன்றாவது தலைமுறையாக, அவரது குடும்பத்தினர் சிறப்பு சேர்த்து வருகின்றனர். தமிழக அரசு, திரைத் துறைக்கு, பல உதவிகளை செய்து வருகிறது. 1993 முதல், சிவாஜி கணேசன் பெயரில் விருதையும் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
 

நடிகர் ரஜினி பேசியதாவது:


மணிமண்டபத்தை திறந்து வைத்த

பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி; அது, பல , தடவை நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கும் இந்த சிறப்பை, பன்னீர்செல்வம் பெற்றது பாக்கியம். நடிப்புலக சக்கரவர்த்தியாக விளங்கிய சிவாஜி கணேசன் நடை, உடை, பாவனை என, அனைத்திலும் புரட்சி செய்தார்.உலக அளவில், இவரைப் போல் யாரும் நடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றவர். வெறும் நடிப்பு மட்டுமே, இவருடைய சிறப்பு இல்லை. வரலாற்று நாயகர்கள், புராணத் தலைவர்களை மக்களின் கண் முன் நிறுத்தியவர்.

அதனாலேயே, இவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது, நெற்றியில் திருநீறு பூசி நடித்து வெற்றி கண்டவர்.
 

பெருமையானது


இறந்த பின், சிலர் மண்ணாவர்; சிலர் சாம்பல் ஆவர். ஆனால், சிலையான சிவாஜியுடன் பழகி இருப்பது, நமக்கு பெருமையான விஷயம். அரசியல், சினிமா இரண்டும் இணைந்த விழா இது. நடிப்பு மட்டுமின்றி,அரசியல் பாடத்தையும், சிவாஜி சொல்லி கொடுத்து உள்ளார். சிவாஜி தனி கட்சி துவங்கி, தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோற்றார். அது, அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல; அத்தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், செல்வாக்கு, பணம் மட்டும் போதாது. அதற்கு மேல் ஒன்று உண்டு. அது என்னவென மக்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது; அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்து இருக்கலாம் என, நினைக்கிறேன்.அதை, இப்போது கேட்டால் சொல்ல மாட்டார்; 'என்னுடன் வா சொல்கிறேன்' என்கிறார். ஒரு வேளை இரண்டு மாதத்திற்கு முன் கேட்டு இருந்தால், சொல்லியிருப்பார் என, நினைக்கிறேன். சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு நன்றி.இவ்வாறு ரஜினி பேசினார்.
 

தன்மானம்


'சினிமா செல்வாக்கால் ஜெயிக்க முடியாது' என்ற ரஜினியின் பேச்சு,அரசியலில் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு, சூடு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆக., 10ல், சென்னையில் நடந்த, 'முரசொலி'

 

பவள விழாவில், ரஜினி மேடையில் அமராமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். கமல், தன் பேச்சில், 'எனக்கு தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' எனபேசி, ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விழாவில் ரஜினி பேசியுள்ளார். சிவாஜி மணி மண்டப திறப்பு விழா, அரசியல் விவாத மேடையாகி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
 

நடிகர் கமல் பேசியதாவது:


மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த உலக நடிகர் சிவாஜி. நான் நடிகனாகவில்லை என்றால், ஒரு ரசிகனாக வெளியே இருந்து, இந்நிகழ்ச்சியை பார்த்து இருப்பேன். நடிப்பை கற்றுக் கொடுத்து, என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய, கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.

எத்தனை அரசுகள் வந்தாலும், சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். இதை, வற்புறுத்தியோ, கெஞ்சியோ, மிரட்டியோ கேட்க வேண்டியதில்லை. மணி மண்டபம் அமைத்து,விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் பிரபு பேசுகையில்,''சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழாவால், ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளது. சிவாஜி சிலையை அமைத்த, கருணாநிதியின் பெயரும், கல்வெட்டில் இடம் பெற வேண்டும்,'' என்றார்.விழாவில், அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜு, பாண்டியராஜன், பெஞ்சமின், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நட்ராஜ், நடிகர்கள் நாசர், விஷால், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

எதிரும், புதிரும் கைகோர்ப்பு


* எதிரும், புதிருமாக கடுமையாக விமர்சித்து கொண்ட அமைச்சர் ஜெயகுமாரும், நடிகர் கமலும், மேடையில், கை குலுக்கி, சிரித்து பேசினர். கமலுக்கு, ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
* மணிமண்டபம் திறப்பு விழா முடிந்து, வி.ஐ.பி.,க்கள் சென்றதும்,
ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், சிவாஜி சிலை முன் நின்று, புகைப்படம் எடுத்தனர். சில ரசிகர்கள், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்
* மெரினா கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை, மணிமண்டபத்தின் வெளியே நிறுவப்படாமல், உள்ளே நிறுவப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* மணிமண்டபத்தின் உள்ளே, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில்
பிரபலமான நடிகர்களுடன், சிவாஜி கணேசன் உள்ள புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது
* மணிமண்டப வாசல், வடக்கு திசை பார்த்து, வாஸ்து அடிப்படையில்அமைக்கப்பட்டுள்ளது.
சிலையும், வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடற்கரை சாலையில், சிவாஜி சிலை, வடக்கு நோக்கியே நிறுவப்பட்டிருந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1866620

Link to comment
Share on other sites

 

கமலை மறைமுகமாக தாக்கிய ரஜினி | JV Breaks

ரஜினியின் பேச்சுக்கள் கமலை தாக்குதல் செய்யும் வகை போல உள்ளதே. கமலை சீண்டுகிறாரா ரஜினி? இருவரில் அரசியலுக்கு முதலில் வர போவது யார் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.