Sign in to follow this  
நந்தி

தித்திக்கும் முத்தத்தின் தித்திப்புகள் எத்தனை ?

Recommended Posts

 அறிந்ததுதான்,மேலும் அறியுங்கள்,உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.முத்த சாகரத்தில் மூழ்கித் திளையுங்கள்.


“மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று…” ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது.

முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது.

முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என தெரியுமா?

இதயத்துடிப்பு!
ஒரு நீண்ட முத்தமிட்டுக் கொள்வது (லிப்லாக்) உங்கள் சர்குலர் சிஸ்டத்திற்கு நன்மை விளைவிக்கும். இதனால் உங்கள் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 110 முறை துடிக்கும். இது இதயத்திற்கு ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

நுரையீரல்!
முத்தமிட்டுக் கொண்ட பிறகு நுரையீரல் வலிமையாக இயங்க துவங்கும். நிமிடத்திற்கு 20 முறை என்பதை தாண்டி 60 முறை மூச்சு விடுவீர்கள். இதனால் நுரையீரல் பிரச்சனை வாய்ப்புகள் குறையும்.

எச்சில்!
வாயில் எச்சில் சுரக்க வேண்டியது அவசியம். இது உணவில் செரிமானம், வாயின் ஆரோக்கியம் என பலவற்றுக்கு உதவும். முத்தமிட்டுக் கொள்வதால் வாயில் எச்சில் அதிகம் சுரக்கும் என பல் மற்றும் வாய் ஆரோக்கிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தம்!
மூன்று நிமிடத்திற்கும் மேலாக முத்தமிட்டுக் கொள்வது மன அழுத்தம் மற்றும் அதன்பால் ஏற்படும் விளைவுகளை குறைய செய்கிறது. மேலும், முத்தமிட்டுக் கொள்வதால் ஏற்படும் பயோ-கெமிக்கல் ரியாக்ஷன்கள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அழிக்குமாம்.

ஆயுள்!
தினமும் துணையை முத்தமிட்டு வழியனுப்பும் தம்பதிகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஐந்து ஆண்டுகள் அதிகம் ஆயுள் பெறுகிறார்களாம். அப்பறம் என்ன காசா, பணமா.. தினமும் ஒன்னு கொடுத்து அனுப்புங்க.


சுய மரியாதை!
முத்தமிட்டுக் கொள்வது ஒருவரின் சுய மரியாதை நிலையை ஊக்குவிக்கிறது. இதனால் அவரின் மனநல அளவு மேலோங்கும். மேலும், இது ஒருவகையான பாராட்டும் கருவியாக திகழ்கிறது.


கலோரிகள்!
ஒரு நிமிட முத்தம் இரண்டு முதல் மூன்று கலோரிகளை கரைக்க செய்கிறது. இரட்டிப்பு மடங்கு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. அன்பாக வெளிப்படும் முத்தம் குறைந்தது 20 நொடிகளாவது நீடிக்கும்.

மன பாரம்!
மன பாரத்தை குறைக்க முத்தம் ஒரு சிறந்த கருவி. இது ஒருவரின் கோபம், மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை அழித்தல், நல்ல எண்ணங்கள் மனதில் அதிகரிக்க செய்தல் என பல வகையில் உதவுகிறது.


தசைகள்!
முத்தமிட்டுக் கொள்ளும் போது முகத்தின் முப்பது தசைகள் செயல்படுகின்றன. இதில் எட்டு, முகத்தின் சருமம் இறுக்கமடைய உதவுகிறது. இதனால் கன்னம் தொங்காது, சருமம் மிருதுவாகும். முகத்தின் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதயம்
முத்தம் இதயத்திற்கு ஒரு நல்ல தோழன். இது இதயம் நன்கு பம்ப் ஆக உதவும் அட்ரினலின் உருவாக்குகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்தல், இதய இயக்க நலன், இரத்த அழுத்தம் குறைய, கொலஸ்ட்ரால் குறையவும் முத்தம் பலனளிக்கிறது.

அடிக்கடி முத்துமிட்டுக் கொள்வதால் நீங்கள் பெறும் இதர நலன்கள்…

1. வயிற்றுவலி வராது,
2. இரத்தத்தில் இன்பெக்ஷன் ஏற்படாது,
3. இயற்கையாக எச்சிலில் இருந்து ஆன்டி- பயாடிக்ஸ் உற்பத்தி ஆகும்.,
4. மனநலம் மேம்படும்,
5. நிம்மதி உணர்வீர்கள்!

Share this post


Link to post
Share on other sites
On 10/1/2017 at 4:07 AM, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி நந்தி! 

 

On 10/1/2017 at 8:28 AM, நந்தி said:

நன்றிக்கு நன்றிகள் குமாரசாமி அண்ணன்.

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

Share this post


Link to post
Share on other sites

முத்தம் என்று இங்கே குறிப்பிடுவது,  "கன்னத்தில்...  முத்தம் இடுவதையா...." 
அல்லது...  "பிரெஞ் கிஸ்"  எனப்படும், உதட்டுடன்... உதடு சேர்த்து  முத்தமிடுவதையா... கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். 
எதையும்... விளக்கமாக சொன்னால் தானே, நாமும்...  பயன்  பெற முடியும். 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

தம்பி சும்மா அந்த மனுசன் நன்றிச் சொல்லி இருக்கு  உன்மை நிலை நான் அறிவேன் :10_wink:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

முத்தம் என்று இங்கே குறிப்பிடுவது,  "கன்னத்தில்...  முத்தம் இடுவதையா...." 
அல்லது...  "பிரெஞ் கிஸ்"  எனப்படும், உதட்டுடன்... உதடு சேர்த்து  முத்தமிடுவதையா... கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். 
எதையும்... விளக்கமாக சொன்னால் தானே, நாமும்...  பயன்  பெற முடியும். 

கேட்டாலும் கேட்டீர்கள் ஒரு கேள்வி நச்சென்று தமிழ்சிறி.அதாகப்பட்டது அண்ணலும் துழாவ,அவளும் துழாவ, செம்புலப் பெயர் நீர் போல் தாம் கலக்கும் அசைவ முத்தம்.

6 hours ago, குமாரசாமி said:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

குமாரசாமி அண்ணன் உங்களுக்குத் தெரியாததா,பாம்பின்கால் பாம்பறியும்.

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

வந்துட்டாங்கள்......எங்கையெண்டு பாத்துக்கொண்டிருந்தவங்கள் வந்துட்டாங்கள்....:grin:

சும்மா ஒரு புதுனம் பார்க்க வெளிக்கிட்ட நான் தான் பாருங்க சாமி   bursting-head-smiley-emoticon.gif

7 hours ago, நந்தி said:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

என்ன ஐயா இப்படி கேட்டு ப்புட்ட 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, நந்தி said:

என்ன செய்வது தனிக்காட்டு ராஜா, குமாரசாமி அண்ணனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே அதுதான்...

எல்லாம் சரி....மடத்துக்கும்  பயிர்ப்புக்கும் விண்ணாண விளக்கம் கோரப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி....மடத்துக்கும்  பயிர்ப்புக்கும் விண்ணாண விளக்கம் கோரப்படுகின்றது.

ஐயையோ இதைத்தான் சொல்லுவது நுணலும் தன் வாயால் கெடும் என்று.எப்படியோ அறிந்ததை சொல்லுறன்.

அச்சம் 
---------
அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது. 

மடம் 
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை. 

நாணம் 
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம். 

பயிர்ப்பு 
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this