Jump to content

எமக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்கள்


Recommended Posts


வேலை தேடுபவர்களையும் , வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்விகள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்களையும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்களையும் இணைக்கும் பாலமாக இத்திரியினைத் தொடர்வோம் உறவுகளே. எமக்குத் தெரிந்த தகவல்களை நாம் பகிர்வதன் மூலம் புலத்து உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவோம்.

Link to comment
Share on other sites

Sitzwache

அண்மையில் எனது நண்பன் ஒருவரை சந்தித்த பொழுது , அவர் தற்சமயம் தான் செய்யும் ஒரு பகுதி நேர வேலை தொடர்பாகச் சொன்னார். அதன் விபரங்களை நான் உங்களுடன் பகிர்கிறேன் .

வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு இல்லை கண்கானிப்பு எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

உங்கள் வேலை
நோயாளரை கண்கானித்தல், அவர் ஏதும் உங்களுடன் கதைத்தால் நீங்கள் கதைக்க வேண்டும், அவர் நீர் ஏதாவது கேட்டால் அவருக்குக்  கொடுக்க வேண்டும் , நோயாளர் ஏதும் அமைதியின்மையாக இருந்தால் தாதிகளுக்கு அறிவிக்க வேண்டும். மற்றும் படி , நோயாளருக்கு மல சலம் துப்பரவு செய்தல் ஒன்றும் உங்கள் வேலை இல்லை அதனை தாதிகள் செய்வார்கள், நீங்கள் நோயாளரை தொடுவதற்கு அனுமதியில்லை .

இவ்வேலையை ஏஜன்சி மூலம் தான் நீங்கள் பெறலாம், நேரடியாக வைத்தியசாலையூடாகப் பெறமுடியாது, ஏஜன்சியில் நீங்கள் உங்களைப் பதிந்து உங்களால் வரக்கூடிய நேர எல்லையையும் கொடுத்தால் அவர்கள் தேவைப் படும் போது உங்களை அழைப்பார்கள்.
நண்பர் கூறினார் நல்ல வேலை என , வேலை நேரத்தில் நீங்கள் புத்தகம் வாசிக்கலாம்,  i padஅல்லது phone இல் படம் பார்க்கலாம், இயர் போனை ஒரு காதில் மட்டும் தான் கொழுவ அனுமதி மற்றய காது free  ஆக இருக்க வேண்டும் நோயாளர் சத்தம் ஏதும் போட்டால் அது உங்களுக்கு கேட்க வேண்டும்.நோயாளர் ஆழ்ந்து உறங்கும் போது நீங்களும் லைட்டா தூங்கி வழியலாம்,  (உங்களைப் போலவே வேலை செய்யும் சக Sitzwache ஐ நண்பர் ஆக்கினால் எல்லமே எளிது).

பல பல்கலைக்கழக மாணவர்கள் இந்த தொழிலைச் செய்வதாகச் சொன்னார், அவர்கள் பணத் தேவயை பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் அந்த அமைதியான இடத்தில் படித்துக் கொண்டும் இருப்பார்களாம் நண்பர் அங்கே வைத்து தனது மகனுக்கு  ரீயுசன் சொல்லித்தர ஒரு பல்கலை மாணவனையும் ஒழுங்கு செய்து விட்டார்(  கவனியுங்கள் வல்லவிகளுக்கு தான் இந்த உலகம்)


மேலதிக விபரங்களுக்கு கீழே அந்த ஏஜன்சியின் விபரம் தந்துள்ளேன் தொடர்பு கொண்டு விபரம் அறியுங்கள்


வேலை நேரம்

ஒரு நாளின் 24 மணித்தியாலமும் ( உங்கள் வசதிப்படி)

சம்பளம்
மணித்தியால சம்பளம்

ஒரு மணித்தியாலத்திற்கு 25/பிராங்கள், (ஞாயிற்றுகிழமைகளில் 30 பிராங்கள்/ஒரு மணித்தியாலம்)

https://www.phsag.ch/

https://www.phsag.ch/care-jobs/stellenvermittlung.html?L=0

சூரிச்சில்

PHS AG
Buckhauserstrasse 36
Postfach
8048 Zürich

Telefon 058 204 70 70
Telefax 058 204 70 71
zuerich@phsag.ch

அறோவில் (Argau)

PHS AG
Steinackerstrasse 15
8957 Spreitenbach

Telefon 058 204 74 74
Telefax 058 204 74 75
aargau@phsag.ch

அவர்களுடன் தொலை பேசியிலும் கதைக்கலாம், நேரே அலுவலகத்திற்கும் செல்லலாம், உங்களிடம் நோயாளர் பராமரிப்பு அனுபவம் ஏதும் இருக்கா எனக் கேட்பார்களாம், நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமர்த்த அனுபவம் இருந்தால் அதனைக் குறிப்பிடலாம் எனச் சொன்னார்

Sitzwache இந்த சொல்லுக்குரிய சரியான ஆங்கில மொழிப்பெயர்ப்பு தெரியவில்லை , மற்றய நாடுகளில் உள்ளவர்கள் ,இப்படி ஏஜன்சிகளைத் தேடிப் பாருங்கள், அல்லது வைத்தியசலை ரிசப்சனில் இந்த ஏஜன்சிகள் தொடர்பாக கேட்டு பாருங்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள வேலை...  வசதியான நேரத்தில், நல்ல சம்பளத்துடன்  செய்யக் கூடிய வேலை போலுள்ளது.
நல்ல பதிவு ஆதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குள்ள ஏதாவது பகுதி நேர வேலை கிடைக்குமா  சும்மா பகிடிக்கு 

வெளிநாட்டில் வேலை இல்லமல் திரிபவர்களுக்கு உதவலாம் நல்லது இணையுங்கோ ஆதவன் சார் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்குள்ள ஏதாவது பகுதி நேர வேலை கிடைக்குமா  சும்மா பகிடிக்கு 

வெளிநாட்டில் வேலை இல்லமல் திரிபவர்களுக்கு உதவலாம் நல்லது இணையுங்கோ ஆதவன் சார் tw_blush:

இலங்கையில்... பகுதி நேர வேலை செய்பவர்களைப்  பற்றி, நான் இது வரை அறியவில்லை.
சிலர்...  வேறு உத்தியோகம் பார்த்துக் கொண்டு, தமது சொந்தத்  தோட்டம் போன்றவற்றை  பராமரிப்பார்கள்.
ஆனால்... அதனை, இங்கு செய்யும் பகுதி நேர வேலையுடன் ஒப்பிடுவது சரியல்ல என நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... பகுதி நேர வேலை செய்பவர்களைப்  பற்றி, நான் இது வரை அறியவில்லை.
சிலர்...  வேறு உத்தியோகம் பார்த்துக் கொண்டு, தமது சொந்தத்  தோட்டம் போன்றவற்றை  பராமரிப்பார்கள்.
ஆனால்... அதனை, இங்கு செய்யும் பகுதி நேர வேலையுடன் ஒப்பிடுவது சரியல்ல என நினைக்கின்றேன். :)

தற்போது பகுதி நேர வேலைகள் பலவற்றை ஆரம்பித்து விட்டார்கள் அண்ண கொழும்பில் சாதாரணம் வ்ட கிழக்கில் இன்னும் சில காலங்களில் நடக்கும்  வருமானம் பெற சிலர் தோட்டங்கள் , மற்றும் பகுதி நேர கடை வியாபாரங்களில் போய் நிற்பது போல் கொஞ்சமாக மாறி வருகிறது 

Link to comment
Share on other sites

On 10/2/2017 at 6:00 PM, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்குள்ள ஏதாவது பகுதி நேர வேலை கிடைக்குமா  சும்மா பகிடிக்கு

நீங்கள் பகிடிக்கு கேட்டாலும் நான் சீரியசாகத் தான் பதில் சொல்வேன்.

ஐந்தாறு பேர் சேர்ந்து ஒரு சிறிய கடையை நடாத்தலாம் அல்லது ஒரு பேக்கரியைத் திறக்கலாம் சென்னையில் தரமான ,குறுகிய கால பேக்கரி பயிற்சி வகுப்புகள் உள்ளன , வித்தியாசமாக சோளமா பாண், குரக்கன் பாண் ,பணிஸ் என அசத்தலாம்.

வேலைக்குச் செல்லாத நாட்களில் ஆட்டோ ஒன்றைச் சொந்தமாக வாங்கினால் வீட்டில் வைத்தே ஒடலாம்.

Driving school வைத்து கார் பழக்கலாம் ஏன் மொட்டார் சயிக்கிள் கூட பழக்கலாம் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிந்து முறையாக பயிற்சி பெற்று வடிவாகச் செய்யலாம்

வெளிநாட்டுக்காரர் பெருமளவில் ஊருக்கு வரும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆட்டு இறைச்சி நல்ல விலையாமே, அந்தக் காலப் பகுதியை குறி வைத்து கிடாய் ஆடுகள், குட்டிகளை வாங்கி வளர்க்கலாம்

கொண்டாட்டங்களுக்கு மணவறை, பந்தல்கள் வாடகைக்கு விடலாம்

உங்கள் பகுதிகளில் கிடைக்கும் விளை பொருட்களை வெளி மாவட்டங்களில் விற்கலாம் (மீன் ,கருவாடு, தேன்.......) ஊரில் எமது வீட்டில் பாக்கு வாங்குவது ஒரு பல்கலைக்கழக மாணவன் தான்.

வெளிநாட்டினர் கூடுமிடங்களில் கைப்பணிப் பொருட்கள் விற்கலாம்

saree secondhand shop :இங் கே வெளிநாடுகளில் பல குடும்பங்களிடம் ஏராளமான பாவித்த சாறிகள் உள்ளன கேட்டால் இலவசமாகவே தருவார்கள் , அனேகமானவை ஒரு சில தடவைகள் தான் கட்டப்பட்டிருக்கும், பார்த்தால் புத்தம் புதிதாகவே இருக்கும், பெறுமதியான சாறிகள் , பிளவுஸ் துணி மட்டும் இருக்காது , அதற்குரிய பிளவுஸ் துணிகளை அங்கே ஒழுங்கு செய்து வடிவாகச் secondhand shop செய்யலாம் நடாத்தலாம்.........

பேர்ணில் அகர்வால் எனும் இந்தியப் பெடியன் 84, 85 களில் (அப்போது அவருக்கு ஒரு இருபது வயது கூட இருக்காது) பெருமளவில் எம்மவர் குடியேறிய ஆரம்பக் காலப்பகுதியில் தான் நண்பர்களுடம் தங்கியிருந்த ஒரு சிறிய அறையில் ஒரு மூலையில் சிறிய தட்டடித்து இந்தியாவிலிருந்து தபால் மூலம் எடுத்து மிளகாய்த்தூள், சீரகம், வெந்தயம் விற்கத் தொடங்கியவர் ..... இன்று சுவிஸ் யோகற் கம்பனிகளுக்கே இந்தியாவிலிருந்து  தொன் கணக்கில் பழக்கூழ்கள், பழக்கழிகள் கொடுக்கிறார், பல ஆசியன் கடைகள் ,கிந்தி திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு சகலவசதிகளும் செய்து கொடுக்கும் சேவை வியாபாரம், hotel கூட சொந்தமாக  வைத்திருக்கிறார் என நினைக்கிறேன் .....,

இப்படிக் கணக்க எழுதலாம்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.