Jump to content

நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்


Recommended Posts

நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.

நுகரும் திறனை இழக்கிறீர்களா? மறதி நோய் எச்சரிக்கை!படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வின் இறுதியில் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேற்கண்ட பொருட்களில் ஒன்று அல்லது இரண்டின் மணங்களை மட்டுமே நுகர்ந்து உணர முடிந்தவர்களில் 80% பேருக்கு அந்நோய் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மணங்களை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலிமையான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயந்த் பின்ட்டூ கூறினார்.

பிரிட்டனில் உள்ள அல்சைமர் சொசைட்டியின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிக்கெட், ஆரம்பகட்டத்தில் டிமென்ஷியா மனிதர்களின் நுகரும் திறனை பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு கூடுதல் ஆதாரமாக இருந்தாலும், இந்த ஆய்வுகள் இன்னும் துல்லியமானவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஜீரியாட்ரிக்ஸ் சொசைட்டி என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/science-41453615

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.