Jump to content

Recommended Posts

இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை  நன்றியுடன் போற்றும்  தினமாகும்.  இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ்  பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை  பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது  என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல் எந்தஒரு விளக்கவுரைக்கும் அவசியமல்லாமல் இன்றும் அனைவராலும் இலகுவாக புரிந்துகொள்ளும் மொழிநடையில்  உள்ளது.  


சரி, இந்தப்பாடலின் கருப்பொருளை எனக்குப் புரிந்தபடி பின்வருமாறு கூறலாம்: பல்வேறு கலை வடிவங்களாகவும், உயிரினங்களின்  மொழியாகவும், வேதம் முதலானவற்றின் உட்பொருளாகவும் விளங்கும் கலைமகள் இன்பமே உருவாகி நிற்கின்றாள் என்பதாகும். வீணை ஒலி, கவிஞர்  உள்ளம், வேதத்தின் பொருள், முனிவர் வாக்கு, பெண்கள் பாடும் பாடல், மழலை, கிளி இவற்றின் பேச்சு, சிற்பம் என்பன கலைமகளின் உறைவிடம் என்று  பட்டியலிட்ட பாரதியார் ஆனந்தமே வடிவாகினாள் என முடிக்கின்றார். எல்லையற்ற ஆனந்தம் தான் ஆன்மா இறையுடன் ஒன்றிய நிலை என நினைத்து எழுதினாரோ என நாம் அறியோம்!


இது நிற்க, இப்பாடலை பல்வேறு கர்நாடக சங்கீதப் பாடகர்களும், மற்றோரும் பாடியுள்ளமையும், பல்வேறு இசைக்கருவிகள் வாயிலாக இசைக்கப்பட்டுள்ளமையும் மேலும் சிறப்பு. எத்தனை முறை செவிமடுத்தலும் சலிக்காத இப்பாடலை, இவ்வாறாக பல்வேறு குரல்களிலும், இசை வடிவங்களிலும் கேட்பது புதுவித அனுபவம்; இவை ஒவ்வொன்றும் கலைமகளின் தனித்துவமான வெளிப்பாடுகளோ?!  இப்பாடல்கள் சிலவற்றுக்கான  இணைப்பினை கீழே பதிந்துள்ளேன்.


இன்னொரு விடயம்; இப்பாடலை கலை நயத்துடன் நோக்கினால் கலைகளை போற்றும் பாடலாகவும், பக்தியுடன் நோக்கினால் எல்லாம் இறைமயம் என்று சொல்வது போன்றும்   தோன்றினாலும், கலைமகள் பற்றி பாரதியார் எழுதிய காதல் கவிதையாகவும் கொள்ளலாம்! 


நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் குரலில்:
https://www.youtube.com/watch?v=BamHj90DSkE
பம்பாய் ஜெய்ஸ்ரீ அவர்களின் குரலில்:
https://www.youtube.com/watch?v=u84HlNMd_aE
மண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மண்டலின் இசையில்:
https://www.youtube.com/watch?v=SBw5BXzht34

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மல்லிகை வாசம்....!

இம்மாதிரிப் பாடல்களுக்கெல்லாம் கருத்திடுவது யானையை ஒவ்வோர் இடத்தில் நின்று தடவி கருத்து சொன்ன குருடர் போன்றதாகும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

21 hours ago, suvy said:

இம்மாதிரிப் பாடல்களுக்கெல்லாம் கருத்திடுவது யானையை ஒவ்வோர் இடத்தில் நின்று தடவி கருத்து சொன்ன குருடர் போன்றதாகும்.....!  tw_blush:

சரியாகச் சொன்னீர்கள், சுவி அண்ணா! :) இந்தப் பாடல் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். நேரச் சுருக்கத்தில் எழுதியதைப் பகிர்ந்துள்ளேன். பாடல்களை ஆற அமர்ந்து ரசித்த்து ஒரு காலம். முகநூல் உலகில் அந்த வழக்கம் மிக அருகியது கொடுமை.

ஊக்கத்திற்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டைப் பற்றி கு.சா... இசை போன்றோரால் நிறைய சொல்ல முடியும் என்ன இன்னும் அவர்கள் டேபிளுக்கு பைல் போகவில்லை போலிருக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

18 hours ago, suvy said:
18 hours ago, suvy said:

இந்தப் பாட்டைப் பற்றி கு.சா... இசை போன்றோரால் நிறைய சொல்ல முடியும் என்ன இன்னும் அவர்கள் டேபிளுக்கு பைல் போகவில்லை போலிருக்கு.....!  tw_blush:

அப்படியானால், அவர்களின் பார்வையிலும் இப்பாடல் பற்றிய விளக்கத்தினை எதிர்பார்க்கிறேன். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.