Jump to content

சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி


Recommended Posts

சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்.ஜி, யுவுான்டஸ் அணிகள் வெற்றி பெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

 
சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி
 
ஐரோப்பிய நாடுகளில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடைபெறும்.

நேற்று 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என செல்சியா வெற்றி பெற்று அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 40-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிரிஸ்மான் கோல் அடித்தார். அதன்பின் செல்சியாவின் மொராட்டா 59-வது நிமிடத்திலும், 94-வது நிமிடத்தில் பாட்ஷுயாயி கோல்அடிக்க செல்சியா வெற்றி பெற்றது.

201709280926445344_1_atledica-s._L_styvp

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியை வீழ்த்தியது. லூகாகு இரண்டு கோல்கள் அடித்தார்.

யுவான்டஸ் 2-0 என ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் - பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 3-0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா ஸ்போர்ட்டிங் சிபி அணியை 1-0 என வீழ்த்தியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/28092639/1110350/Champion-League-manchester-united-psg-won-atletico.vpf

Link to comment
Share on other sites

விறுவிறுப்பான போட்டிகளில் பார்சிலோனா, செல்சி மற்றும் PSG அணிகள் வெற்றி

img-1-696x464.jpg
 

UEFA சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3 போட்டிகளில் பார்சிலோனா அணி தாம் பெற்ற ஓவ்ன் (own) கோலினாலும், செல்சி அணி இறுதித் தருவாயில் பெற்ற கோலினாலும் PSG அணி, தமது முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டத்தாலும் தமக்கான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இத்தொடரின் இரண்டாம் கட்டத்தின் இறுதிக் கட்டப் போட்டிகள் 27ஆம் திகதி நடைபெற்றன. இதில் 3 முன்னணிக் கழகங்கள் மோதிய மிகவும் விறுவிறுப்பான 3 ஆட்டங்கள் இடம்பெற்றன.

 

 

பார்சிலோனா எதிர் ஸ்போர்டிக் (Sporting)

ஸ்போர்டிக் அணியின் அரங்கமான ஜோஸ் அல்வலாடே (Jose Alvalade) அரங்கில் நடைபெற்ற இப்போட்டியை கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த போட்டியாக குறிப்பிடலாம்.

போர்த்துக்கல் நாட்டின் கழகமான ஸ்போர்டிக் அணியின் ஆதரவாளர்கள், போர்த்துக்கலின் பிரபல வீரரும் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படத்துடனான “உலகத்தின் சிறந்த கால்பந்து வீரர்” என்று பொறிக்கப்பட்டிருந்த பதாதைகளுடன் பார்சிலோனா கழக வீரர்களை தமது அரங்கத்திற்கு வரவேற்றனர்.

அத்துடன் பார்சிலோனா அணியின் முன்னாள் பின்கள வீரர் ஜேரமி மெதீவ் (Jeremy Mathiew) ஸ்போர்டிக் அணியுடன் இணைந்ததன் பின்னர், பார்சிலோனா அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.

இந்நிலையில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 16ஆம் நிமிடத்தில் ஸ்போரட்டிக் அணியின் பின்கள வீரர் பிகினீ (Piccini) மூலம் கோலை நோக்கி முதல் முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் உதையப்பட்ட பந்து கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

போட்டியின் 18ஆம் நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ஜோடி அலபா (Jordi Alaba) வழங்கிய பந்தை, லியொனல் மெஸ்ஸி கோலை நோக்கி உதைந்த போதும் எதிரணி கோல் காப்பாளர் இலகுவாக பந்தை பற்றிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 28 ஆம் நிமிடத்தில் பூரூனோ பெர்னான்டஸ் (Bruno Fernandez) மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து உதையப்பட்ட பந்தை பார்சிலோனா கோல் காப்பாளர் சிறப்பாகத் தடுத்தார்.

 

 

முதல் பாதியின் இறுதி முயற்சியானது முன்னணி வீரர் மெஸ்ஸி மூலம் எடுக்கப்பட்டது. பிகே (Pique) மூலம் மத்திய களத்திலிருந்து வழங்கப்பட்ட பந்தை சுவாரெஸ் (Suarez) தனது கால்களுக்கிடையால் மெஸ்ஸிக்கு வழங்க, அவர் பெனால்டி எல்லையில் பெற்ற பந்தை கோலை நோக்கி உதைந்தார். எனினும், ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ஸ்போர்டிக் அணி வீரருமான பெபியோ கோன்டெரோ (Fabio Contero) சிறப்பாக பந்தை தடுத்தார்.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 0 ஸ்போர்டிக்

போட்டியின் இரண்டாம் பாதியை ஆரம்பித்த பார்சிலோனா அணி, 48ஆம் நிமிடத்தில் ஸ்போர்டிக் அணியின் பின்களத்தின், வலது பக்கத்திலிருந்து ப்ரீ கிக் வாய்ப்பை பெற்றது.

அந்த உதையைப் பெற்ற மெஸ்ஸி பந்தை எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பியபோது, தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின்போது, ஸ்போர்டிக் அணியின் மத்தியகள வீரர் மார்கஸ் அகுனா (Marcus Aquna) மூலம் ஓவ்ன் கோல் (Own) பெறப்பட்டதால் பார்சிலோனா அணி போட்டியில் முன்னிலை பெற்றது.

போட்டியின் 70ஆம் நிமிடத்தில் ஸ்போர்டிக் அணிக்கு போட்டியை சமப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிட்டியது. பார்சிலோனாவின் மத்திய களத்தில் விடப்பட்ட தவறால் பாஸ் டொஸ்ட் (Bas Dost) தனக்கு வழங்கப்பட்ட பந்தை பார்சிலோனாவின் பெனால்டி எல்லையில் பெற்று, பந்தை வலது பக்கத்திலிருந்த பெப்ரிகாஸிற்கு வழங்கினார். பெப்ரிகாஸ் பந்தை கோலை நோக்கி உதைந்தபோதும், பார்சிலோனா கோல் காப்பாளர் சிறப்பாக பந்தை தடுத்தார்.

போட்டியின் 86ஆம் நிமிடத்தில் சுவாரெஸ், ஸ்போர்டிக் அணியின் பின்கள வீரர்களிடமிருந்து கைப்பற்றிய பந்தை போலினோவிற்கு (Paulinho) வழங்கினார். பந்தைப் பெற்ற போலினோ பெனால்டி எல்லை வரை கொண்டு சென்றபோதும், ஸ்போர்டிக் அணியின் கோல் காப்பாளர் முன்னேறிச் சென்று பந்தை தடுத்தார்.

ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

முழு நேரம்: பார்சிலோனா 0 – 0 ஸ்போர்டிக் 

 

 

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அன்றைய தினம் அட்லடிகோ மெட்ரிட் அணியின் புதிய அரங்கமான வன்டா மட்ரோபோலினோவில் நடைபெற்றது.

போட்டியில் இரு அணிகளும் சமமான ஆதிக்கத்தையே வழங்கின. எனினும் 40ஆம் நிமிடத்தில் பெற்ற பெனால்டி வாய்ப்பின் மூலம் அன்டோனியோ கிரிஸ்மன் (Antonio Grizemen) அட்லடிகோ மெட்ரிட் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: செல்சி 0 – 1 அட்லடிகோ மெட்ரிட் 

அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் அல்வாரோ மோராடா (Alvaro Morata) தனது தலையால் முட்டி பெறப்பட்ட கோலினால் போட்டி சமநிலைப் பெற்றது. வன்டா மட்ரோபோலினோ அரங்கில் மோராடா பெற்ற கோலானது அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிராக தனது புதிய அரங்கில் பெறப்பட்ட முதல் கோலாகும்.

போட்டியின் இறுதித் தருணமான 93ஆம் நிமிடத்தில் அட்லடிகோ அணியின் பெனால்டி எல்லைக்குள் தரைவழியாக மார்கோ அலன்ஸோ (Marc Alonso) மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை மாற்று வீரராக களமிறங்கிய மிசி பட்சூயாயி (Michy Batshuyaei) கோலாக்கினார். இதன் மூலம் இறுதித் தருவாயில் செல்சி அணி வென்றது.

முழு நேரம்: செல்சி 2 – 1 அட்லடிகோ மெட்ரிட்  

 

 

 பரிஸ் செய்ண்ட் ஜெய்ன்ட் (PSG) எதிர் பயர்ன் முனிச்

இவ்விரு அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சையும் அன்றைய தினம் PSG யின் அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரடியாக ஆடிய PSG 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வென்றது. PSG அணிக்காக டேனி அல்வெஸ் (Dani Alves) இரண்டாம் நிமிடத்திலும், எடிஸன் கவானி (Edison Cavani) 31ஆம் நிமிடத்திலும், நெய்மர் JP 63ஆம் நிமிடத்திலும் கோல்களை பெற்றனர். அத்துடன் கெய்லன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது அணி இரு கோல்களை பெற காரணமாக அமைந்தார்.

போட்டியில் பயர்ன் முனிச் கழகத்தால் அதிக ஆதிக்கம் செலுத்தப்பட்டது. எனினும், கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில் பயர்ன் முனிச் அணி வீரர்கள் தோல்வி கண்டனர்.

பயர்ன் அணியின் கோல் காப்பாளரான மனுவேல் நெயுர் (Manuel Neuer) உபாதைக்குள்ளாகி விளையாடாத தருணத்தில், அவ்வணியின் முக்கிய வீரர்களான பிரன்க் ரிபரி (Frank Ribery) மற்றும் அயர்ன் ரொபின் (Arjen Robben) ஆகியோர் இப்போட்டியின் முதல் பதினொரு வீரர்களில் அடங்காதது ஆச்சரியமாகவே காணப்பட்டது.

முழு நேரம்: PSG 3 – 0 பயர்ன் முனிச்

மேலும் சில போட்டி முடிவுகள்

மெ.யுனைடட் 4 – 1 மொஸ்கோ

செல்டிக் 3 –  0 அன்டலர்ச்சட்

பார்சல் 5 – 0 பெனிவீசியா  

ஜுவன்டஸ் 2 – 0 ஓலிம்பியாஸஸ்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.