Jump to content

ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு?


Recommended Posts

ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு?

 

 

ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

10_Kurdh.jpg

ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள்.

இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர். 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவுகள் மூலமாக அன்றி, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றும் அவர் கோரியிருந்தார்.

எனினும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

“சுயாட்சிக்கு ஆதரவாக முடிவுகள் வந்திருப்பதையடுத்தே பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகியிருக்கிறது” என்று குர்திஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு?

 

 

ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

10_Kurdh.jpg

இந்த மக்கள் சொந்த மண்ணில் காலூன்றி நிற்க ஒரு பிடி நிலமாவது கிடைக்கட்டும்.

எமக்கு கிடைத்த சம்பந்தன் மாவை சுமந்திரன் போன்றோர் அவர்கள் சமூகத்தில் அவதரிக்காதது...... அவர்களின் பிறவிப்பலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

இந்த மக்கள் சொந்த மண்ணில் காலூன்றி நிற்க ஒரு பிடி நிலமாவது கிடைக்கட்டும்.

எமக்கு கிடைத்த சம்பந்தன் மாவை சுமந்திரன் போன்றோர் அவர்கள் சமூகத்தில் அவதரிக்காதது...... அவர்களின் பிறவிப்பலன்.

இதைத்தான், பல சிங்கள அறிவுஜூவிகள் சொல்கிறார்கள்.

புதிய அரசியலமைப்பை சிங்களம் நிராகரித்தால், தமிழர்கள் சுஜநிர்ணய வாக்களிப்பு கோருவதை தடுக்க முடியாது.

இவர்கள் சொல்வது செவிடர் காதில் மட்டும் விழவேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த குர்திஸ்தான் என்பது ஏற்கனவே உள்ள மூன்று நாடுகளால் பிரிக்கப்பட்டுள்ளதாக படித்த நினைவு. இப்போது ஈராக்கின் பகுதியை மட்டும் பிரித்து கொடுக்கிறார்கள் போலுள்ளதே?

Link to comment
Share on other sites

குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கைக்கான வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவு

Kurds2.jpg

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து  இடம்பெற்ற  பொது வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க  கோரி பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியின,ர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். எனினும்  குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்ட நிலையில் தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

இத்ததகைய ஒரு சூழலில்  கடந்த திங்கட்கிழமை  பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள், தனி நாடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் என  குர்திஷ்  அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை ஈராக்   பிரதமர் ஹைதர் அல் அபாதி, குர்திஸ்தான் பிராந்திய அரசு பொதுவாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவற்றை வெளியிடக்கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kurds-1.jpg

ஈராக்கில்   குர்து இனமக்களின் தனி நாட்டு கோரிக்கை தொடர்பான வாக்கெடுப்பு ஆரம்பம்

Sep 25, 2017 @ 07:42

iraq-2.jpg

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து  இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.  ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க  கோரி பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியின,ர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர்.

எனினும்  குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்ட நிலையில் தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும்;, அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.

இத்ததகைய ஒரு கு10ழலில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெறுகின்றது.     ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்களும்  வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில்  இது  சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும்  என கருதப்படுகின்றது.

iraq-6.jpgiraq-1024x429.jpgiraq3.jpg

http://globaltamilnews.net/archives/42512

Link to comment
Share on other sites

சுதந்திர குர்திஸ்தான்: கருத்து வாக்கெடுப்பில் அமோக ஆதரவு

குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்க வடக்கு இராக் மக்கள் அமோகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய கருத்து வாக்கெடுப்பில் சுதந்திர குர்திஸ்தான் கோரிக்கைக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது.

திங்கள் கிழமை நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகுப கிர்குக்கின் தெரு ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குர்துக்கள்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதிங்கள் கிழமை நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகுப கிர்குக்கின் தெரு ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குர்துக்கள்.

3.3 மில்லியன் குர்து மற்றும் குர்து அல்லாத வாக்காளர்களில் 92 சதவீதம் பேர் குர்திஸ்தான் பிரிவினையை ஆதரிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்து வாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்யும்படி இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி விடுத்த கடைசி நேர கோரிக்கையையும் மீறி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பிரிந்துபோவதற்குப் பதில், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் குர்துக்கள் ஈடுபடவேண்டும் என்று அல்-அபாதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தனி நாட்டுக்கு ஆதரவான இந்த வாக்களிப்பு, பாக்தாத்தில் உள்ள மத்திய அரசுடனும், அண்டை நாடுகளுடனும் பிரிவினை பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையைத் தங்களுக்கு வழங்கும் என குர்து தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் வளமிக்க கிர்குக்

இதனிடையே குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க 'கிர்குக்' உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்புமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குர்திஸ்தான் பகுதியைக் காட்டும் இராக் வரைபடம்.

பல்வேறு இனத்தவர் வாழும் கிர்குக் பகுதி மீது அராபியர்களால் ஆளப்படும் பாக்தாத் மத்திய அரசும், குர்துக்களும் உரிமை கொண்டாடுகின்றனர். தற்போது குர்திஷ் பேஷ்மேர்கா போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது கிர்குக்.

குர்திஸ்தான் பகுதியைச் சேர்ந்த மூன்று இராக்கிய மாகாணங்களிலும், இப் பகுதியின் நிர்வாகத்துக்கு வெளியே உள்ள குர்திஸ்தான் பகுதிகளிலும் கருத்து வாக்கெடுப்பு நடந்தது.

"28,61,000 பேர் சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவாகவும், 2,24,000 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர்; வாக்களிக்க உரிமை உள்ளவர்களில் 72.61 சதவீதம் பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்," என்று இர்பிலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வாக்கெடுப்புக்கு இராக்கில் உள்ள மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். படைக்கு எதிரான போரை இது பலவீனப்படுத்துவிடும் வாய்ப்பு குறித்து சர்வதேச சமூகம் கவலை தெரிவித்து வருகிறது.

இர்பில் சர்வதேச விமான நிலையம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇர்பில் சர்வதேச விமான நிலையம்.

குர்திஸ்தான் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள குடிமக்களைப் பாதுகாப்பதே தமது முன்னுரிமை என்று பிரதமர் அபாதி தெரிவித்துள்ளார். "அரசமைப்புச் சட்டத்தின் பலத்துடன் கூடிய இராக்கின் ஆட்சியை இப் பகுதியின் எல்லா மாவட்டங்களிலும் அமல்படுத்துவோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இர்பில் மற்றும் சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை வெள்ளிக்கிழமைக்குள் பாக்தாத்திடம் ஒப்படைக்காவிட்டால், குர்திஸ்தான் பகுதிக்கு நேரடியாக இயக்கப்படும் சர்வதேச விமானங்களைத் தடுக்கப் போவதாக மீண்டும் கூறியுள்ளார் அபாதி.

ஏற்கெனவே இராக்கி சிவில் விமான ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு விமான நிலையங்களை அவர்களிடம் நாங்கள் எப்படி ஒப்படைப்பது என்று கேட்டுள்ளார் குர்திஸ்தான் வட்டார அரசின் போக்குவரத்து அமைச்சர் மௌலுத் முர்தாத்.

இந்த கருத்து வாக்கெடுப்பால் "மிகவும் ஏமாற்றமடைந்துள்ள" அமெரிக்கவும் சர்வதேச விமானங்களை தடுக்கப்போவதாக அபாதி விடுத்துள்ள மிரட்டலை கேள்வி கேட்டுள்ளது.

நாடாளுமன்ற அவைத்தலைர் சலீம் அல்-ஜுபோரியை புதன்கிமை சந்தித்த இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி (இடது)படத்தின் காப்புரிமைEPA Image captionநாடாளுமன்ற அவைத்தலைர் சலீம் அல்-ஜுபோரியை புதன்கிமை சந்தித்த இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி (இடது)

மத்திய கிழக்கில் குர்துக்கள் நான்காவது பெரிய மக்கள் தொகை உடைய மரபினம். எனினும் அவர்களுக்கென ஒரு நிரந்தர தேசிய அரசும் இல்லை. இராக் மக்கள் தொகையில் குர்துக்கள் 15 முதல் 20 சதவீதம் பேர் உள்ளனர். 1991ல் இராக்கில் உள்ள தங்கள் பகுதிக்கு தன்னாட்சி உரிமை பெறும் வரையில் அவர்கள் பல பத்தாண்டுகளாக ஒடுக்குமுறைகளை சந்தித்துவந்தனர்.

http://www.bbc.com/tamil/global-41425468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த குர்திஸ்தான் என்பது ஏற்கனவே உள்ள மூன்று நாடுகளால் பிரிக்கப்பட்டுள்ளதாக படித்த நினைவு. இப்போது ஈராக்கின் பகுதியை மட்டும் பிரித்து கொடுக்கிறார்கள் போலுள்ளதே?

https://ta.wikipedia.org/wiki/குர்திசுத்தான்

குர்துக்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையைக் கண்டிப்பதாக சிறிலங்கா எதிர்க்கட்சித்தலைவர் என்று அறிக்கை விட்டாலும் விடுவனே ஒழிய .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஸ்தான் அமைந்தால் அதை சுற்றியுள்ள நாடுகள் அமைதியடையும். வேண்டுவதும்  அதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

குர்திஸ்தான் அமைந்தால் அதை சுற்றியுள்ள நாடுகள் அமைதியடையும். வேண்டுவதும்  அதே.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர்...பாலஸ்தீனத்தை உடைத்து...இஸ்ரவேலை உருவாக்கியதன் விளைவுகளை...இப்போது தான் காண்கிறோம்!

குர்திஸ்தான் பிறப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடையும்...அதே வேளை....இந்தோனேசியாவிடமிருந்து , கிழக்குத் தீமோரைப் பிரித்தெடுத்து...அதன் கடலடி எண்ணெய் வளங்களை...அவுஸ்திரேலியக் கொம்பனிகள் உறிஞ்சுவது போல..இதுவும் முடிந்து விடக் கூடாது!

இதனால் தான்....விடுதலைப் புலிகள்...தாங்களாகவே விடுதலையைப் பெற வேண்டும் என்று முனைந்து நின்றார்கள்!

மற்றைய வல்லரசு நாடுகள்...தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தால்...அந்த நாடுகளுக்கு ....அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்திருந்தார்கள்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.