Jump to content

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்


Recommended Posts

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்
Feature-image-5-1068x650.jpg

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது.

 

கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்துடன், டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரன் அவுட், பிடியெடுப்பு மற்றும் துடுப்பாட்ட மட்டைகளின் எடை ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பு மட்டைகளின் அளவுகள்

Bat sizesபோட்டிகளின்போது வீரர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுபட்ட அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகளுக்குப் பதிலாக ஒரே தரத்திலான ஒரே அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 40 மில்லி மீற்றர் தடிப்பத்தையும் மற்றும் 67 மில்.மீற்றர் அகலத்தையும் கொண்டதாக புதிய துடுப்பு மட்டைகள் இருக்கும்.   

ஓடும் போது ஆட்டமிழப்பு (ரன்அவுட்)

New cricket rules to be introduced from 28th Septemberவீரரொருவர் ஓடும்போது ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கும் போது, அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே துடுப்பு மட்டையை வைத்த சந்தர்ப்பத்தில் அது ஒரு தடைவ எல்லைக் கோட்டை தொட்டு மீண்டும் மேலே உயர்ந்தால் அதனை ஆட்டமிழப்பு அல்ல என அறிவிக்க முடியும்.  

சிவப்பு அட்டை

Red Cardபோட்டியின் போது மைதானத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்களை சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், அவ்வாறு நடந்துகொண்ட குற்றத்திற்காக மேலதிக (போனஸ்) புள்ளியொன்றை வழங்கவும் நடுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய டி.ஆர்.எஸ் முறை (DRS)

DRSடி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி LBW ஆட்டமிழப்பிற்கு கேட்கப்படும் வேண்டுகோள், இனிமேல் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அதாவது, LBW மீதான வேண்டுகோள் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது.  

அதேபோல, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது. இதன்படி ஒரு இன்னிங்ஸிற்கு 2 ரிவ்யூக்கள் மாத்திரமே அணியொன்றுக்கு வழங்கப்படும்.

 

வீரர்களின் நடத்தை விதிகள், நடுவரின் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பாட்ட மட்டைகளின் அளவுகள் மீதான புதிய விதிகள் என்பன ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. எனினும், செப்டம்பர் 27ஆம் திகதி பங்களாதேஷ்தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அந்த தினத்திலிருந்து புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு .சி.சி தீர்மானித்துள்ளது.

ஆனாலும் தற்போது நடைபெற்றுவருகின்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் T-20 தொடரில் இப்புதிய விதிகள் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புதிய கிரிக்கெட் விதிமுறைகள் அனைத்தும் எம்.சி.சியின் சட்டக்கோவையிலும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

கிரிக்கெட் வீரர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டால் ரெட் கார்டு: 28-ல் இருந்து புது ரூல்ஸ்

 

கிரிக்கெட் மைதானத்தில் இனிமேல் வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டால், நடுவர் ரெட் கார்டு காண்பித்து வெளியே அனுப்பும் விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

 
கிரிக்கெட் வீரர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டால் ரெட் கார்டு: 28-ல் இருந்து புது ரூல்ஸ்
 
கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி மிகுதியால் வீரர்கள் அந்த விதிமுறையை மீறுவது உண்டு. வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் அது எல்லை மீறுவதும் உண்டு.

தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.

201709261851368567_1_mcgrath001-s._L_sty

எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விதிமுறையை ஐசிசி நடைமுறைப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் (செப்டம்பர் 28-ந்தேதி) முதல் இது அமலுக்கு வருகிறது. அதன்பின் வீரர்கள் மைதானத்தி்ல் கடுமையாக நடந்து கொண்டால் ரெட் கார்டு பெற்று உடனடியாக வெளியே செல்ல வேண்டியதுதான். இதனால் வீரர்கள் கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/26185133/1110084/ICC-Introduces-New-Rules-Players-Will-be-Sent-Off.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.