Jump to content

ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது


Recommended Posts

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. 
அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவியுடன், வெளிநாட்டைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, மத்திய அரசின், அன்னிய முதலீட்டு வாரிய அனுமதியை, முறைகேடாக பெற்றுத் தந்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்கி கணக்குகள் முடக்கம்



இந்த வழக்கில், தேடப்படும் நபராக கார்த்தியை அறிவித்து, சி.பி.ஐ., பிறப்பித்த நோட்டீசும், அக்டோபர், 4 வரை நீட்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின்முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், கார்த்தி மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கார்த்திக்கு சொந்தமான, 1.16 கோடி ரூபாய்

மதிப்பிலான வங்கிக் கணக்குகளை, அதாவது, அசையும் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதற்கான உத்தரவை, அத்துறையின் இணை இயக்குனர், ராஜேஷ்வர் சிங் பிறப்பித்து உள்ளார். இவர், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் உள்ளார். 
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கார்த்தி தன் வங்கியில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள, 90 லட்சம் ரூபாய், அவரது கட்டுப்பாட்டிலுள்ள, ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள, 26 லட்சம் ரூபாய் ஆகியவை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் முடக்கப்பட்டு உள்ளன.
'ஏர்செல்' நிறுவனம், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பெற்ற பின், ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, 26 லட்சம் ரூபாய் அளித்துள்ளது. ஏ.எஸ்.பி.சி.எல்., நிறுவனம், பாஸ்கரராமன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவரை, தன் கணக்கு தணிக்கையாளர் என, கார்த்தி கூறியுள்ளார்.
இதேபோல், கார்த்தி, அவரது உறவினர் பழனியப்பன் ஆகியோரது, சி.எம்.எஸ்.பி.எல்., என்ற நிறுவனத்துக்கு, 2 லட்சம் அமெரிக்கா டாலரை, அதாவது, 1.30 கோடி ரூபாயை, 'மேக்சிஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது. சட்ட நுணுக்கம் தொடர்பான, மென்பொருள் தயாரித்து கொடுத்ததற்காக, இத்தொகை தரப்பட்டதாக, மேக்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், அந்த மென்பொருள், இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது; மலேஷியாவில் பயன்படுத்த முடியாது என்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், 2013ல், ஹரியானா மாநிலம் குர்கானில், தனக்கு சொந்தமான சொத்தை, பன்னாட்டு நிறுவனத்துக்கு, கார்த்தி, வாடகைக்கு விட்டிருந்தார். அந்த சொத்தை, சமீபத்தில், விற்று விட்டார்.

 
Advertisement

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்புடைய, தன் வங்கிக் கணக்கையும், கார்த்தி மூடிவிட்டார்; மற்ற வங்கி கணக்குகளையும் மூட, அவர் முயற்சித்தார். இந்த வழக்கில், வெளிநாடுகளில் இருந்து, முறைகேடாக ஆதாயங்கள் பெறப்பட்டது குறித்து, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளது.
 

புது விசாரணை


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், கார்த்திக்கு எதிராக, புது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி கொடுத்த சூழ்நிலைகள் குறித்தும், அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதித்துள்ளது. ஆனால், 600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க, நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், '180 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம்' என, அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்திடம் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்தை, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுக்கு, வாரியம் அனுப்பவில்லை எனவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
 

என்னை அச்சுறுத்த முயற்சி


இது குறித்து அவர் கூறுகையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பொய்யான குற்றச்சாட்டு மற்றும் தவறான யூகங்களின் வினோத கலவை, என்னை அச்சுறுத்தவும், மவுனம் ஆக்கவும், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1862905

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. 

 

ஏர்செல்,மேக்சிஸ்,முறைகேட்டில்,கைது,கார்த்தி சிதம்பரம்

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அந்த நடிகையின் சாபம் சும்மா விடாது....:grin:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

அந்த நடிகையின் சிரிப்பழகே தனது தூக்கத்தை கெடுத்ததாக சொல்வாராமே, சின்ன செட்டியார். :grin: 

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

நாதம்.. யார் அந்த நடிகை? :unsure:

பிள்ளையும் பெத்து, குடித்தனம் நடுத்துறா.... பெயர் சொல்ல வேண்டாமாம் எண்டு, அண்ண, தனிக் கடதாசி போட்டு இருக்கிறார்.... அது தான் யோசிக்கிறேன்...

எதுக்கும் தனி மடல் போடுகிறேன்... :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.