Jump to content

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்


Recommended Posts

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்

 

புலம்பெயர் புலிகளின் ஊதுகுழலாக விக்னேஸ்வரன்; திஸாநாயக்க சாடல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடுகின்ற கருத்துக்களுக்குப் பின்னால் புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் உந்துசக்தியளிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்த உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் மட்டும் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2017ஆம் ஆண்டிற்கான தேசிய செவிப்புலனற்றோர் தின விழா இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

செவிப்புலனற்றோர் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியொன்று இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

இப்பேரணி யாழ் நகரூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்தில் நிறைவடைந்து அங்கு செவிப்புலனற்றோர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாடெங்கிலுமிருந்து சமார் இரண்டாயிரம் செவிப்புலனற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் சான்றிதல்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தான் ஏற்கப்போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் முதலமைச்சரின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க “முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் தொடர்பாக நான் மிகவும் கவலையடைகிறேன். முதலமைச்சரது அறிவிப்புக்கள் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் குரல் என்பதை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். முதலமைச்சர் ஸ்ரீலங்காவின் சிரேஷ்ட முன்னாள் நீதியரசர் அதுபோல அவரது பிள்ளைகள் வாசுதேவ நாணயக்கார, குணசேகர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பிள்ளைகளையே திருமணம் முடித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் இளைஞர்களின் மூளையைச் சலவைச் செய்யவும், தற்காலிக பிரபல்யத்திற்காகவுமே அவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுகிறார். இதுகுறித்து எனது அதிருப்தியை நான் வெளியிடுகின்றேன். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்ததோடு ஏனைய தமிழ்க் கட்சிகளும், ஆதவளித்தன. முஸ்லிம் கட்சிகள் ஆரம்பத்தில் எதிர்த்தாலும் இறுதியில் அவர்களும் இணங்கினர். இது வடக்கு, தெற்கு உட்பட நாட்டு மக்களுக்கே நன்மைகிடைக்கும் விடயமாகும். விருப்பு வாக்குகளுக்குப் பின்னால் செல்கின்ற, பணக்காரர்களுக்கு அடிபணிகின்ற, கடத்தல்காரர்களுக்கு அடிமையாகின்ற தேர்தல் முறையை மாற்றிவிட்டு தொகுதிவாரி தேர்தல் முறைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு வெளியிடுவதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது” என்றார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கும் வியூகத்தில் அக்கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுவருவது கவலையளிப்பதாகவும் கூறினார்.

“மஹிந்த ராஜபக்ச இப்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு விரும்புகிறார். மஹிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1978ஆம் ஆண்டிலிருந்தே விருப்பு வாக்கு முறையற்ற, தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்துமாறு கோரிவருகிறோம். அதனை கட்சியின் முன்னாள் சிரேஷ்ட தலைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே முதலில் அதனை கோரத்தொடங்கினார். அவருடன் மிகநெருக்கமாக இருந்த மஹிந்த ராஜபக்ச, விருப்புவாக்கு முறையை நீக்கிவிட்டு தொகுதிவாரி தேர்தல் முறையையே தினமும் கோரிவந்தார். அவரது 2 தேர்தல்களிலும்கூட தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்படுத்துவதாகவே கூறியிருந்தார். ஆனால் இன்று அதனை எதிர்க்கின்றார். எனவே அடுத்த தேர்தல்களில் சுதந்திரக் கட்சியை தோற்கடிப்பதற்கே அவர் இதனை கூறுகின்றார். மஹிந்த ராஜபக்ச எமது கட்சியின் தலைவராக இருமுறை இருந்தவர் என்ற வகையில் சுதந்திரக் கட்சியையே தோற்கடிக்க அவர் நினைப்பதையிட்டு நாங்கள் கவலையடைகிறோம்” என்று தெரிவித்தார்.

 

https://news.ibctamil.com/ta/politics/SB-Dissanayake-comment-on-CV

Link to comment
Share on other sites

ஏன் சிங்களவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்படவில்லையா?? வை.கோவை சூழ்ந்து கேள்வி கேட்டவர்களும் மூளை சலைவை செய்யப்பட்ட இனவாதிகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.