Jump to content

வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை


Recommended Posts

வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை

 

வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை

 

 
 
வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் காசீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர்.

ஆனால், விசேடமான வெற்றி கிடைத்தது. அதேபோன்று உள்ளுராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடாது தேசிய கட்சி மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து போட்டியிடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களையும் உள்வாங்குவதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை.

ஆனால் இந்த விடயம் குறித்து பலமுறை கலந்துரையாடி உள்ளோம்.

இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தேசத்தின் கீழ் ஒன்றுபட்டு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களான ஆறுமுகம் ஜெகன், எஸ்.மாசிலாமணி மற்றும் ஏறாவூர் பிரதேச கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், கட்சியின் செயற்பாடுகள் பற்றியும், அமைப்பாளர்கள் நியமிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=95779

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.