Jump to content

‘தமிழ்,முஸ்லிம் மக்கள் அஞ்சத் தேவையில்லை’


Recommended Posts

‘தமிழ்,முஸ்லிம் மக்கள் அஞ்சத் தேவையில்லை’
 

image_206f8f316d.jpg“அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பில், சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்ப தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தொடர்ந்து கருத்துரைக்கையில்,   

“அரசமைப்பின், 20ஆவது திருத்தம், மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது அவை தொடர்பில், சிறுபான்மைக் கட்சிகள் சில அந்த சட்டத்தில் திருத்த வேண்டிய விடயங்கள் சேர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன் வைத்தன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“அந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கமைவாக, அதனை திருத்துவதற்கு எமது அரசாங்கம் மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்ததுடன் எல்லோரும் திருப்தியடையக் கூடிய மாதிரி அனைவரின் ஆலோசனையையும் பெற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. அது பெரும் வெற்றியாகும். இது நமது நாட்டுக்கு ஒரு பெரும் வெற்றியாகும்”என்றார்.   

அனைவரினது ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கின்ற ஒரு தலைவராக எமது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார்.   

“இந்த சட்ட மூலத்துக்கு, சகல சிறுபான்மை கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை நாங்கள் மறக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் எந்தவொரு தேர்தலுக்கும் அச்சப்படவில்லை. எந்தத் தேர்தலையும் நாங்கள் முகம் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

“எமது ஐக்கிய தேசியக் கட்சியே 2015ஆம் ஆண்டு விரும்பித் தேர்தலை கேட்டது. அதனால், எமக்கு தேர்தல்கள் சவாலே கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலத்த போட்டி போட்டது. ஆனால், அது வெற்றியடையவில்லை. அதில் ஐக்கிய தேசியக் கட்சிதான் நாடாளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிம் நாம் வெற்றியடைவோம். நாம் இந்த நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அதனால், நமது வெற்றியை விட தேசத்தின் வெற்றி முக்கியமானதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நல்ல சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இந்த நாட்டிலுள்ள இரண்டு பெரிய தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும் அதற்காக, அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்”என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.   

 “எங்களுக்கு ஆதரவில்லை நாங்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற மாட்டோம் என எதிரணியில் சிலர் கூறினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்று நாங்கள் எமது ஆதரவை நிரூபித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.   

“நாம், இலங்கையர் என்ற ரீதியில் இப்போது தான் நாங்கள் சுதந்திரமான சுவாசக் காற்றை சுவாசிக்கின்றோம். இந்த நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களவர் மற்றும் பறங்கியர் அனைவரும் அனைத்து உரிமையுடனும் பெருமையுடனும் வாழக் கூடிய சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம் அதுதான் எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்” என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்தார்.   

“ஆட்சியை பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகள் சில பிரச்சினைகள் காணப்பட்டன. இன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை கட்சிகளின் வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இதுவே முதல் தடவையாகும்.   

“ஐக்கிய தேசியக் கட்சி சாதி, சமயம் மற்றும் இன பேதங்களை பார்க்கவில்லை அனைவரும் இக் கட்சியினூடாக முன்னேற முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-முஸ்லிம்-மக்கள்-அஞ்சத்-தேவையில்லை/175-204414

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.