Jump to content

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது


Recommended Posts

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது

 

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரம் அதன் போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதி­கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில், கடந்த இரு­தி­னங்­க­ளில் 12 சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு­வி­னால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரத்­தி­னால் 27 கைதி­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் சிறைச்­சா­லைக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­திய இரா­ணுவக் கொமாண்டோப் படைப் பிரி­வின் ஆயு­தங்­கள் தொடர்­பில் குற்­றப் புல­ன­ாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ர­ணையை ஏற்­க­னவே தனி­யாக ஆரம்­பித்­துள்­ளது.

சிறைச்­சாலைக் கல­வ­ரத்தை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி நுழைந்த பிரி­கே­டி­யர் ஒரு­வ­ரின் கீழான சிறப்­புக் கொமாண்டோப் படை­யணி உள்­ளிட்ட 175 இரா­ணுவ வீரர்­கள் கொண்டு சென்ற ஆயு­தங்­கள், கொல்­லப்­பட்ட 27 கைதி­க­ளி­ன­தும் உயி­ரி­ழப்­புக்கு ஏது­ வான கார­ணம், அதற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள துப்­பாக்கி ஆகி­ய­வற்­றைக் கண்­ட­றிய விசா­ர­ ணை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. அதற்கு மேல­ தி­க­மாகச் சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த விசா­ர­ணை­க­ளின் போது 2 ஆயி­ரம் பேரி­டம் வாக்­கு­மூ­லம் பெற­வேண்டி ஏற்­ப­டும் என்று குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் குறிப்­பி­டு­ கின்­ற­னர்.

வெலிக்­கடைச் சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்குச் சட்ட மா அதி­ப­ரின் ஆலோ­ச­னை­க­ளும் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட நிலை­யில், அடுத்த இரு வாரங்­க­ளுக்­குள் வெலிக்­க­டைச் சிறைக் கல­வ­ரத்­தின்போது இரா­ணுவக் கொமாண்டோப் படைப் பிரி­வுக்குத் தலைமை தாங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டும் பிரி­கே­டி­யர் தர அதி­கா­ரி­யை­யும், குறித்த விட­யம் தொடர்­பில் செயற்­பட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­ப­ரை­யும் விசா­ரணை செய்ய குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளது விசா­ர­ணை­கள் ஊடாகக் கிடைக்­கும் தக­வல்­களை மற்­றும் சாட்­சி­யங்­களை ஆராய்ந்து, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச, முன்­னாள் இரா­ணுவத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய, அப்­போ­தைய உள­வுத் துறை தொடர்­பி­லான முன்­னாள் பிர­தானி கபில ஹெந்­த­வித்­தா­ரன உள்­ளிட்­டோ­ரி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, கோட்டை ரஜ­மஹா விகா­ரை­யில் இருந்த 6ஆம் புவ­னே­க­பாகு என்று அறி­யப்­ப­டும் செண்­ப­கப் பெரு­மாள் எனும் மன்­ன­னின் வாளினைத் திரு­டச் சென்று அங்­கி­ருந்த தேரர்­கள் இரு­வ­ரைக் கொலை செய்த சந்­தேக நபர்­க­ளும் வெலிக்­க­டைச் சிறைப் படு­கொ­லை­யில் உள்ளடங்­கு­வர்.

இந்த வெலிக்­கடைக் கல­வ­ரம் குறித்த சம்­ப­வத்­தின் சந்­தேக நபர்­கள் உண்­மையை வெளிப்­ப­டுத்­தா­மல் இருப்­ப­தற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்ற பர­வ­லான நிலைப்­பாடு நில­வும் நிலை­யி­லேயே தற்­போது குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு அதன் உண்­மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

வெலிக்­க­டைச் சிறைச்­சாலைக் கல­வ­ரத்­தின் பிர­தான சாட்­சி­யா­ள­ராகக் கரு­தப்­ப­டும் சுரேஷ் நந்­தி­மா­லின் மொறட்­டுவை வீட்­டின் மீது துப்­பாக்­கிப் பிர­யோ­கம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி ருந்­த­து­டன், அவர் சேவை­யாற்­றும் ரயில்வே திணைக்­க­ளத்­தின் உயர் அதி­காரி ஊடாக விடுக்­கப்­பட்ட உயிர் அச்­சு­றுத்­தல் தொடர்­பி­லும் அவ­ரால் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை யி­லேயே பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரிவு விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்­ளது.

http://newuthayan.com/story/31598.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கு, றக்பி வீரர், தாஜூடீன் கொலை சகலமும், வேண்டுமென்றே இழுத்தடிக்கப் பட்டு, இப்போது புதிய அரசியலமைப்பு விவகாரம் சூடு பிடிக்கும் போது, வேகமெடுப்பதன் காரணம், ராஜபக்சே கூட்ட எதிர்ப்பினை மழுங்கடிக்கவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.