Jump to content

எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்


Recommended Posts

எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

Published by Kumaran on 2017-09-23 15:11:57

 

கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

7_Sampanthar.jpg

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார்.

காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

தற்போது நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித ஆலையினை கொரிய நிறுவனம் ஒன்று புனரமைத்து 20 வருட குத்தகை அடிப்படையில் செயற்படுத்த முன்வந்துள்ளதாகவும், அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி ஆலையினை இயங்க வைப்பதில் தாமதம் காட்டுவதாகவும் ஊழியர்கள் இரா.சம்பந்தனிடம் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சாலை இயங்காமல் இருப்பதற்காகச் சிலர் மறைமுகமாக  நிர்வாக ரீதியாகத் தலையீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மீண்டும் ஆலையினை இயங்க வைப்பதால் பிரதேசத்தில் 1200 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பு கிடைப்பதுடன்  5000 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்கு வழியமைக்கக் கூடியவாறு இருக்கும் என்று ஊழியர்கள் இதன்போது கூறினர்.

இவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்ட சம்பந்தன், மிக விரைவில் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேசி கொரிய நிறுவனம் இங்கு வந்து முதலீடு செய்து இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்போம் என்றார்.

http://www.virakesari.lk/article/24839

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா  எதிர்க்கட்சித்தலைவர்

தனது  கட்சி  உறுப்பினரின் அழைப்பை  ஏற்று

மட்டக்களப்பு சென்றது 

தமிழீழம் செய்த  தவமாகும்........tw_angry:

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

சிறீலங்கா  எதிர்க்கட்சித்தலைவர்

தனது  கட்சி  உறுப்பினரின் அழைப்பை  ஏற்று

மட்டக்களப்பு சென்றது 

தமிழீழம் செய்த  தவமாகும்........tw_angry:

தேர்தல் வரபோகுதெல்லே அது தான் களத்தில இறங்கீட்டர்

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்

மேலும், தொழிற்சாலை இயங்காமல் இருப்பதற்காகச் சிலர் மறைமுகமாக  நிர்வாக ரீதியாகத் தலையீடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தொழிற்சாலையை இயங்காமல் செய்து, அதற்குரிய வசிப்பிட வீடுகளையும் சுவீகரித்து அதனை ஒரு இனத்தின் கிராமமாக்குவதற்குரிய வேலைகள் 1995ம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அறிப்படுகிறது. அதன் ஒரு கட்டமாகவே தொழிற்சாலையின் கழிவுநீரால் அருகேயுள்ள வாவி மாசடைவதாக காரணம்காட்டி வைக்கோலிலிருந்து கடதாசி செய்வது நிறுத்தப்பட்டது. அதன்பின் மகிந்த காலத்தில் ஆலை நிர்வாகத்திற்கு காலத்திற்குக் காலம் நியமிக்கப்பட்டவர்களால் ஆலை இயந்திரங்கள் களவாடப்பட்டு ஆலை முற்று முழுதாக இயங்கமுடியாத நிலையை எட்டியுள்ளது. இந்தநிலமையானது, ஆலையைக் கிராமமாக்குவதற்குரிய வேலைகளுக்குப் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது.

எதிர்கட்சித் தலைவரைப் புடுங்கினாலும்.... எதிர்கட்சித் தலைவரால் எதனையும் அங்கு புடுங்க முடியாது.!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு.. எந்தக் கண்டத்திலையப்பா இருக்குது..??! சொறீலங்காவின் எதிர்கட்சி தலைவர் அபூர்வ விஜசம் செய்திருக்காப் போல. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மொக்கு சனத்தை திருத்த இயலாது வாழைச்சேனை எதனோல் சாலைக்கு இந்த யோகேஸ்வரந்தான் ஆர்ப்பாட்டம் நடத்தி திறக்க விடாமல் செய்தார் உன்மையில் யோகேஸ்வரனால் ஆர்ப்பாட்டமும்  அடிக்கல்லும் ,ற்பன் வெட்டமட்டுமே முடிந்தது 

 

எதனோல் சாலை திறப்பதால்  பல அரிசி ஆலைகளுக்கு நெல் கிடைக்காது ஆனால் நெல் விலை அதிகரிக்கும் விவசாயிகள் நன்மை பெறலாம் அந்த நெல் எதனோல் சாலைக்குகு போகுமாக இருந்தால் அவர்களின் அரிசி ஆலைகளில் தொழில் படுத்துவிடும் என்பதற்க்காக பல முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கல் இந்த விளக்கம் தெரியாமல் ஐயர் வாழ் வேற போய் குடை பிடித்தாரு மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 மதுபான கடைகள் உள்ளது இந்த கடைகளால் கெடாமலாடா எதனோல் சாலையால் மக்கள் கெட போகிறார்கள்  ஆலைகள் வந்தாலும் கொடி பிடிக்கிறீர்கள் ஆலைகள் வராவிட்டாலும் கொடி பிடிக்கிறீர்கள்  உங்களை திருத்தவே முடியாது

வாழைச்சேனை காகித ஆலையில் பல பொருட்கள் திருடு போனது  கன வருடங்களுக்கு முன்பு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.