Jump to content

விழித்துக்கொள்வோம் விவாதிப்போம்


Recommended Posts

விழித்துக்கொள்வோம் விவாதிப்போம்

 
 
 
 
  •  
  •  
  •  
  •  
  •  

நீண்ட இழு­ப­றி­கள், சிக்­கல்­கள், அழுத்­தங்­க­ளுக்­குப் பின்­னர் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது. பிரிட்­டி­ஷா­ரின் அடி­மைத்­த­னத்­தில் இருந்து இலங்கை விடு­விக்­கப்­பட்­ட­தன் பின்­னர் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள மூன்­றா­வது அர­ச­மைப்பு இது.

இதற்கு முன்­னர் உரு­வாக்­கப்­பட்ட இரு அர­ச­மைப்­பு­க­ளை­யும் முற்­றாக நிரா­க­ரித்­த­தைப் போன்று அல்­லா­மல் தமி­ழர் தரப் பின் பங்­க­ளிப்­பு­டன், உள்­ளீ­டு­க­ளு­டன் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற முதல் அர­ச­மைப்பு இது. எனவே இது உறு­தி­யான ஒன்­றா­கப் பரி­ம­ளிப்­ப­தற்­கான வாய்ப்பு அதி­க­முள்­ளது.

இந்த இடைக்­கால அறிக்­கையை உரு­வாக்­கிய வழி­ நடத்தல் குழு­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நீண்ட பழுத்த அர­சி­யல் அனு­ப­வ­சா­லி­யும் இதற்கு முன்­னர் இரு அர­ச­மைப்­புக்­கள் உரு­வாக்­கப் பட்­ட­ போ­தும் அர­சி­ய­லில் இருந்­த­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னும் நீண்ட பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளார். எனவே இந்த அர­ ச­மைப்பு நிறை­வே­றும்­போது அதனை நிரா­ க­ரிக்க முடி­யாத, அதன் பின்­ன­ரும் சிங்­க­ளத் தரப்­பு­களை மட்­டும் குறை­சொல்ல முடி­யாத நிலை­யைத் தமி­ழர்­கள் எட்­டு­வர்.

இத்­த­கைய உறு­தி­யான ஓர் அர­சி­யல் கள­நி­லை­யில் புதிய அர­ச­மைப்­புக் குறித்து ஒவ்­வொரு தமி­ழர்­க­ளும் அக்­கறை செலுத்த வேண்­டி­ய­தும் அது பற்­றிக் கலந்­து­ரை­யாடி தேவை­யான அர­ச­மைப்பை உரு­வாக்­கிக்­கொள்­ள­வேண்­டி­ய­தும் அவ­சி­யம். இது அர­சி­யல் கட்­சி­க­ளின் கடமை என்று எல்­லாப் பொறுப்­பை­யும் அவற்­றி­டம் மட்­டுமே விட்­டு­வைத்­து­விட்டு, இறு­தி­யில் அர­சி­யல்­வா­தி­கள் எம்மை ஏமாற்­றி­விட்­டார்­கள் என்று புலம்­பு­வ­தில் அர்த்­த­ மில்லை.

அதற்கு இடம்­கொ­டாத வகை­யில் அர­ ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்த கலந்­து­ரை­யா­டல்­கள் மக்­கள் மத்­தி­யில் பர­வ­லாக நடக்க வேண்­டும். அத­ன­டிப்­ப­டை­யில் அர­ச­மைப்­புக்­கான இறுதி வடி­வம் தாயா­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான அழுத்­தம் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

அப்­படி மக்­கள் மத்­தி­யில் நன்கு கலந்­து­ரை­யா­டப்­பட்டு முன்­மொ­ழி­யப்­ப­டும் ஒரு அர­ச­மைப்பு வரைவு கொழும்பு ஆட்­சி­யா­ளர்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் அத்­த­கைய அரை­கு­றைத் தீர்வை வழங்­கும் அர­ச­மைப்பை நிரா­க­ரிப்­பது தமிழ் மக்­க­ளுக்­கும் இல­கு­வாக இருக்­கும். அத்­த­கைய ஒரு தீர்­மா­னத்துக்கு வரு­வ­தற்கு முன்­னர் இடைக்­கால அறிக்­கையை முழு­வ­து­மா­கப் படித்­துப் பார்ப்­ப­தும் அது பற்­றிய விவா­தங்­களை நடத்­து­ வ­தும் ஆய்வு செய்­வ­தும் விழிப்­பு­ணர்­வைப் பெறு­வ­தும் கட்­டா­யம்.

நாளை உங்­கள் வாழ்க்­கை­யை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் உங் கள் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­தை­யும் நல்ல வழி­யிலோ கெட்ட வழி­யிலோ பாதிக்­கப்­போ­கும் இந்த விட­யம் குறித்து ஒவ்­வொரு தமிழ் மக­னும் அக்­க­றைப்­ப­ட­வேண்­டும்,இல்­லை­யேல் அதன் விளை­வு­க­ளை­யும் நாமே அனு­ப­விக்­கப்­போ­கின்­றோம். அத்­த­கைய கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும் ஆய்­வு­க­ளை­யும் ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்கு உத­யன் தயா­ரா­கவே இருக்­கின்­றது.

முன்­வைக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கை­யில் நல்ல விட­யங்­கள் பல­வும் இருக்­கின்­றன. தமிழ் மக்­கள் ஏற்­றுக் கொள்ள முடி­யாத விட­யங்­க­ளும் இருக்­கின்­றன. தமி­ழர்­கள் எதிர்­பார்த்­த­வை­கள் இல்­லாத நிலை­யும் இருக்­கின்­றன. இவை­யெல்­லா­வற்­றை­யும் சீர்ப்­ப­டுத்­து­வ­தற்கு, அர­ சி­ய­லுக்கு அப்­பால், அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு அப்­பால், சுய­ந­லத் திசைப்­ப­டுத்­தல்­க­ளுக்கு அப்­பால் நேர்­மை­யாக இந்த ஆவ­ணத்தை அணு­கு­வ­தும் ஆராய்­வ­தும் முக்­கி­யம்.

மக்­கள் விழித்­துக்­கொள்­ளும் போதே அது நடை­பெற முடி­யும். இப்­போ­தும் விழிக்­கத் தவ­று­ வோ­மா­னால் இன்­னு­ மொரு அரை நூற்­றாண்டு காலத்துக்கு நாம் பின்­ன­டை­வு­ க­ளையே சந்­திக்­க­வேண்­டி­யி­ருக்­கும். எனவே இப்­போதே விழித்­துக்­கொள்­வோம். விவா­திப்­போம்.

 
 
  •  
  •  
  •  
  •  
  •  

 

http://newuthayan.com/story/30889.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.