Jump to content

கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம்


Recommended Posts

கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம்

konjam-1-673x400.jpg

பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் 

கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா  மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, 
 
உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . 
 
கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில்,
 
 வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) 
 
அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல் . 
 
konjam-9.jpg இந்த நிலையில் தமிழ்நாட்டில்  ஊரில்  திருவின்அக்கா திலகவதிக்கு (பிரியா மோகன்) திருமணம் செய்து வைக்க முடிவாகிறது. திரு ஊருக்குப் போகிறான் . 
திருமணம் நிச்சயம் ஆகிறது . 
 
அக்காவின் ஆசைப்படி அவளுக்கு பண்பலை வானொலி வசதியோடு ஒரு செல்  போன் வாங்கித் தருகிறான் திரு . 
 
போனை சார்ஜ் செய்தபடி ஹெட் போன் மூலம் அவள் பாட்டுக் கேட்கையில் செல்போன் வெடித்து  காது இரண்டிலும்  செவிப்பறை கிழிந்து செவித்திறன் இழக்கிறாள் அக்கா . 
 
 திருமணம் நின்று போகிறது . 
 
மழை நாளில் வழுக்கி விழுந்து கல்லில்  தலை அடிபட்டு  விதவை அம்மா இறக்கிறார் .  அக்காவை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கே வருகிறான் திரு  .  
konjam-3.jpg
 
தான் வேலை செய்யும் பழைய பேப்பர் கோடவுனிலேயே  அக்காவுடன் தங்குகிறான் . நண்பர்கள் தாங்களும் அக்காவாக  ஏற்கிறார்கள் .
 
இடைப்பட்ட காலத்தில் காதலி போன இடம் தெரியவில்லை . 
 
அக்காவின் சிகிச்சைக்கு மருத்தவரை  பார்க்க , அவர் காது கேட்கும் கருவிக்கு ஒரு  லட்ச ரூபாய் செலவாகும் என்கிறார் . பணம் இல்லாத நிலை.
 
அந்த நிலையிலும் மருத்துவமனையில் கிடக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை எடுத்துத் தருகிறான் திரு  . 
 
நகைக்கு சொந்தக்காரரான ஒரு கல்லூரி பெண் முதல்வர் திருவை பாராட்டி சில ஆயிரங்கள் பரிசு அளிக்கிறார் .konjam-6.jpg
 
அதோடு பதவி ஒய்வு பெறும் தனது பிரிவு உபச்சார விழாவில் திருவை கவுரவிக்க அழைப்பு வைத்து விட்டுப் போகிறார் . 
 
இதற்கிடையே அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி தனது செல்போனை தொலைக்கிறாள் .
 
திருவையும்  அவனது செவித்திறன் பாதிக்கப்பட்ட அக்காவையும் குற்றவாளி என்று ஸ்டேஷனில் வைத்து அடிக்கிறான்  இன்ஸ்பெக்டர்   .
 
அக்காவின் காலையும் உடைக்கிறான்  . 
 
பிறகு மனைவி போனை கண்டு பிடித்த பிறகும் குற்ற உணர்ச்சி இன்றி தமிழர் மீதான துவேசம் காரணமாக மேலும் அடித்தே அனுப்புகிறான் இன்ஸ்பெக்டர் . konjam-8.jpg
 
கல்லூரி முதல்வரின் விழாவில் திருவுக்கான விருதை வழங்க அந்த இன்ஸ்பெக்டரே வந்திருக்க , அவன்  கொடுப்பதை வாங்க  மறுக்கிறான் திரு . 
 
இதற்கிடையில் திரு சுயமாக கண்டு பிடித்த — குரல் அறிவிப்போடு எடை சொல்லும் கருவியை —
 
இரண்டாயிரத்துக்கு வாங்கிக் கொண்டு போகிறார் தொழில் அதிபரான கொடுமுடி பாபு (மன்சூர் அலிகான்) .
 
திருவின் காதலியும் இணைகிறாள் . 
 
அக்காவின் காது கேட்கும் கருவி வாங்கத் தேவையான ஒரு லட்ச ரூபாயை முதல் பரிசாக அறிவித்து நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்க ,
 
அதில் கலந்து கொள்ள பயிற்சி பெறுகிறான் திரு . 
konjam-7.jpg
 
ஆனால் அந்தப் போட்டியை நடத்தும் மலையாள அமைப்புக்கு தமிழன் என்றாலே பிடிக்காது .
 
எனவே திட்டமிட்டு திருவை ஆட விடாமல் செய்து , முதல் பரிசை இன்ஸ்பெக்டரின் மகனுக்கு தருகிறார்கள் . 
 
வஞ்சகத்தை தட்டிக் கேட்கும் திருவும் அவன் அக்காவும் அவமானப் படுத்தப்படுகிறார்கள் . இனி எதுவுமே செய்ய முடியாத நிலை . 
 
அக்காவுக்கு செவித்திறன் கருவியை திருவால் வாங்கித்தர முடிந்ததா ? இல்லை எனில்  ஏன் ? ஆம் எனில் எப்படி ? என்பதே இந்த ‘கொஞ்சம் கொஞ்சம்’ 
 
பாசாங்கோ பூச்சோ இல்லாத  மிக எளிமையான படமாக்கல் இந்தப் படத்தின் பெரும்பலம் . அதற்கேற்ற உயிர்ப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் நிக்கி கண்ணம்.konjam-4.jpg
 
”உங்க அம்மா அப்பாவுக்கே நான்தான் கல்யாணம் பண்ணி வச்சேன் . உங்களுக்கும் நான்தான் பண்ணி வைப்பேன் ” என்று,
 
 திலகாவிடமும் திருவிடமும் சொல்லி உறவு கொண்டாடும் அந்த – உடன் பிறவா – தாய்மாமன் கேரக்டர் அருமை . 
 
இதுவும் , அப்புகுட்டி கேரக்டரும் திருவின் நண்பர்கள் கேரக்டரும் , அப்புகுட்டியின் நண்பராக வரும் மலையாளியின் கேரக்டரும் ஈர்க்கின்றன . 
 
எல்லா கதாபாத்திரங்களுக்கும் மிகப் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய விதத்தில் கவர்கிறார் இயக்குனர் 
 
அக்கா திலகவதியாக நடித்துள்ள பிரியா மோகன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . செவித்திறன் பாதிக்கப்பட்டவராக அவரது நடிப்பு அபாரம் .konjam-2.jpg
 
திருவாக நடித்துள்ள கோகுலும் நன்றாக நடித்துள்ளார். 
 
ஆனால் கதை திரைக்கதையில்தான் புதுமையோ இயல்போ பெரிதாக சுவாரஸ்யமோ இல்லை .
 
முப்பது வருடத்துக்கும் முன்பு வந்திருந்தாள் சுமாராகப் போயிருக்க வாய்ப்புள்ள படம் இது . 
அக்காவுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்ட உடனேயே அம்மா வழுக்கி விழுந்து சாவது …..  தன் காதலனுடன் ஒரு பெண்  நிற்பதாலேயே,
 
 அவள் அவனது அக்கா என்று உணராமல் தப்பாக நினைத்துக் கொண்டு கதாநாயகி பேசாமல் போவது….
 konjam-5.jpg
 
நடன  வாய்ப்பு மறுக்கப்பட திரு,  மழையில் ஆடுவது….. கூடவே வந்து அக்காவும் ஆடுவது ….  இதுஎல்லாம் எந்தக் கால சினிமா ?. 
 
அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும்,  ‘கேரளாவில் உள்ள பெரும்பாலான மலையாளிகள்,  தமிழர்கள் என்றாலே தேவையற்ற வன்மம் பாராட்டும்,
 
 அரக்கர்களாகவே உள்ளனர்’ என்ற உண்மையை அழுத்தமாக சொன்ன இயக்குனரின் கருத்து நேர்மைக்கு பாராட்டுக்கள் . 
 
கதாநாயகியை விட அக்காவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பகுதியில்,   அதிக காட்சிகள் கொடுத்து ,
 
அக்கா தம்பி பாசத்தை ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகவாவது சொல்லி இருப்பதும் பாராட்டுக்குரியது . 
 
கொஞ்சம் கொஞ்சம் ….. தேவை இன்னும் நிறைய நிறைய மெனக்கெடல்

 

 

http://nammatamilcinema.in/konjam-konjam-movie-review/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.