Jump to content

வல்லதேசம் திரை விமர்சனம்


Recommended Posts

வல்லதேசம் திரை விமர்சனம்
card-bg-img
 

ஆக்‌ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் இறக்கப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்சியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்ல தேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோசமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது எப்படியோ தெரியவர போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர்.

அப்போது படைவீரர்களுடன் அனுப்பப்படும் அனு டாஸ்கை வெற்றி கரமாக முடிக்கிறார். ஆனால் எதிர்பாரத விளைவால் இவருக்கு கிடைக்கும் பரிசு சஸ்பெண்ட் ஆர்டர். பின் தன் கணவர், மகளுடன் லண்டன் செல்கிறார். அங்கு செல்லும் இவரின் வாழ்நாள் பெரும் சவாலாகி விடுகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த வில்லன் டேவிட் லண்டனில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் வியாபாரம் மூலம் ஆதிக்கம் செலுத்துகிறார். இவர் யார், எதற்காக இப்படி செய்கிறார், இவரின் பின் புலன் எனப்து ட்விஸ்ட்.

தீடீரென மர்ம கும்பல் ஒன்று இவர்களை நோட்டம் விட, அவரின் கணவரை கொலை செய்துவிடுகிறது. இவரையும் துப்பாக்கியால் சுட, மகள் அஞ்சலி காணாமல் போகிறாள். போலிஸாரால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அனு மீண்டு எழுந்து மகளை காணாது தவிக்கிறார். ரகசியமாக இருந்து வரும் அவர் விஸ்வரூபம் எடுக்கிறார்.

இவ்விசயம் இந்தியா, லண்டன் பெரும் பரபரப்பை ஏற்படுத்த எடுக்க கதை சூடுபிடிக்கிறது. அஞ்சலி என்ன ஆனாள், யார் அந்த மர்ம கும்பல், அனுவின் திட்டம் நிறைவேறியதா என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அனுஹாசன் கதையின் ஹீரோ. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ரோலில், அதிலும் ஆக்‌ஷனில் தயிரியமாக இறங்கியுள்ளார். குடும்பம் என்று வந்த போது மென்மையான மனதும், ஆர்மி என வந்தால் தில்லு என இரட்டை ரோல் போல ஸ்கிரீன் பிளே செய்திருக்கிறார்.

என்ன இன்னும் கொஞ்சம் இளமை கூடியிருந்தால் அவருக்கும், ரோலுக்கும் இன்னும் அழகாக இருந்திருக்குமோ என தோன்றும். நாசர் வழக்கம் போல என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பேன் என நிரூபித்துள்ளார். அவருக்கு என்னவோ எல்லா கெட்டப்பும் பொருந்தி விடுகிறது.

இப்படத்தில் சிறு ரோல் என்றாலும் கடைசி வரை இவரின் அழுத்தம் கதையில் இருக்கிறது. இயக்குனர் நந்தா கதையின் நீளத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம் என சின்னதாக ஒரு ஃபீல். கதையில் கொஞ்சம் கூடுதலாகவே ட்விஸ்ட். ஆனால் முதல் பாதியில் வில்லனின் பின்னனி என்ன என்பதை யூகித்து விடலாம்.

ஆனால் சஸ்பென்ஸ் வைத்து படத்தை நிரப்பிவிட்டார்கள். முதலில் சில நிமிடங்கள் வேகமான காட்சி நகர்வுகள் இருப்பதால் இயற்கைவே இப்படி அமைத்திருக்கிறார்களா, இல்லை கதையின் நீளத்தை சுருக்கவதற்காகவா என சற்று யோசிக்கவைக்கிறது.

டேட்டா பேஸ் மேனேஜ்மண்ட், சாட்டிலைட் கம்யூனிகேஷன், ஃபேஸ் ரிக்ககனிஷன் என பல கான்சப்டை டச் செய்து இப்போதைய டெக்னாலஜிக்கு படத்தை பொருத்தியிருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

அனுஹாசனின் நடிப்பை பாரட்டலாம். அவர் டையலாக் டெலிவரி, இயல்பாக நடித்திருப்பது ஒகே.

அஞ்சலி பாப்பாவின் நடிப்பு ஓகே. கன்னத்தில் முத்தமிட்டால் கீர்த்தனவின் ஃபிளாஷ் வந்துபோகும்.

படத்திற்கேற்ப ஒரு சிச்சுயேஷன் சாங். போதுமான பின்னணி இசை.

பல்ப்ஸ்

வழக்கமாக இருக்கும் விசயங்களில் ஒன்றாக ட்விஸ்ட், ட்விஸ்ட் என ஒரு சில இடங்களில் குழப்பமடையெ செய்வதுதான்.

அம்பானி போன்ற தோற்றத்தில் இருப்பவரை உடனே வில்லனாக பார்க்க சிறு தயக்கம்.

இயக்குனர் இன்னும் வேகப்படுத்தியிருந்தால் கதை ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம் போல மாறியிருக்கும்.

 

மொத்ததில் பெண்ணிற்கு வீட்டில் மட்டுமல்ல, ஆணுக்கு நிகராக நாட்டிலும் பொறுப்பு இருக்கிறது என சொல்லும் வல்ல தேசம். பெண்ணியம் பேசும் தேசம்.

Cast:

http://www.cineulagam.com/films/05/100865?ref=review_section

Link to comment
Share on other sites

‘விவேக’த்துக்கு முன்னோடி இந்த ‘காவியம்’! - வல்லதேசம் விமர்சனம்

 

`அணு அளவும் பயமில்லை' அனு நாயகியாக நடித்து வெளியாகியிருக்கும் படம் `வல்லதேசம்'. ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம்,  இதேபோன்று ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட வேறொரு படத்தையும் நினைவுபடுத்துகிறது. ஆமா நண்பா... `விவேகமே'தான்.

வல்லதேசம்

 

பல்கேரியாவில் மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட `விவேகம்' படத்துக்கும், லன்டனில் எடுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ரிலீஸாகாமல் இருந்த `வல்லதேசம்' படத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வெறியேறாமல் படிக்கவும் நண்பா.

இரண்டு படங்களின் முக்கியமான கதாபாத்திரங்களும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள். அதில் அஜித் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாடில் ஏஜென்டாக இருப்பார். இதில் அனு `என்.எஸ்.எஸ்' வீராங்கனையாக இருக்கிறார். என்.எஸ்.எஸ் என்றதும் பள்ளி, கல்லூரிகளில் சாயங்கால நேரத்தில் கிரவுண்டை சுற்றி ஓடிக்கொண்டிருப்பார்களே... `நேஷனல் சர்வீஸ் ஸ்கீம்', அவர்கள் என நினைத்துவிடாதீர்கள். இங்கே என்.எஸ்.எஸ் என்றால் நேஷனல் செக்யூரிட்டி சர்வீஸ்!  

இரண்டு படங்களிலும் வில்லன் வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவை அழிக்கவே முயற்சிக்கிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் உள்ளது. ஹேக்கிங், ட்ராப்பிங், மானிட்டரிங் போன்ற ஐயிட்டங்களும் இரு படங்களிலும் இருக்கின்றன. இந்த இடத்தில், `விவேகம்' முன்பே `வல்லதேசம்' தயாராகிவிட்டது என்பதை கூறிக்கொண்டு... 

வல்லதேசம்

உலகின் மோஸ்ட் வான்டட் கிரிமினல் டேவிட். `பில்லா' டேவிட் பில்லா மாதிரி எப்போதும் கோட் ஷூட், கூலர்ஸோடு திரியும் கூல் வில்லன்.  இந்தியாவின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டம் தீட்டுகிறான். சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த, அவனது ஆட்கள் பின்னி மில்லை உள் வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். அது என்.எஸ்.எஸ்-ன் மூத்த அதிகாரி நாசருக்கு தெரியவர, தனது டீமை அனுப்பி தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறார். இவர்களின் மூளையாக செயல்படும் டேவிட்டை பிடிக்க, ஸ்பை ஒருவரையும் லண்டனுக்கு ஃப்ளைட் ஏற்றிவிடுகிறார். அந்த ஸ்பை டேவிட்டைப் பிடித்தாரா, அல்லது டேவிட் ஸ்பையின் கதையை முடித்தாரா என்பதே மீதிக்கதை.

நாயகியாக அனு ஹாசன். சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமில்தான் வருகிறார். ஆனாலும், நடிப்பு சிறப்பு. மற்ற நடிகர்களின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே நான் ஸின்க்கில் இருக்கிறது. `ட்ராலி ஃபார்வார்ட்' என்பதை கூட வசனமாக பேசியிருப்பார்கள் போல தெரிகிறது. இதுபோன்ற படங்களில் கணேஷ் வெங்கட்ராமை அதிகம் காணலாம். அவர் கால்ஷீட் கிடைக்காததாலோ என்னவோ அவரைப் போலவே வேறொருவரை புக் செய்திருக்கிறார்கள். அவருடைய கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும்போது நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்தது போலவே இருக்கிறது. ஒளிப்பதிவு பக்கா. இயக்குநர் என்.டி.நந்தாவே ஒளிப்பதிவையும் கையாண்டிருக்கிறார். சில காட்சிகள் உண்மையிலேயே ஹாலிவுட் படங்களைப் பார்த்தைப் போன்ற ஃபீல் தருகின்றன.

எடிட்டிருக்கு லண்டனை மிகவும் பிடித்துபோயிருக்கிறது. ஒளிப்பதிவாளரும் அதற்கேற்ப லண்டனின் அனைத்து பஞ்சாயத்து வார்டுகளிலும் ஹெலிகேமை பறக்கவிட, நடிகர்களைவிட லண்டனைத்தான் படம் முழுக்க வெட்டி ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர். எல்.வி.முத்துகுமாரசாமியின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. `விவேகம்' மற்றும் `வல்லதேசம்' படங்களிடையே மேலும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று, இரண்டு படங்களின் பெயர்களுமே `V' என்ற எழுத்தில் ஆரம்பித்து `M' என்ற எழுத்தில் முடிகிறது. அடுத்தது, இரண்டு படங்களுக்கும் ஒரே ரிசல்ட்தான். லலலலலாலாலா சர்வைவா...

http://cinema.vikatan.com/movie-review/103150-valladesam-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.