Jump to content

தெரு நாய்கள் திரை விமர்சனம்


Recommended Posts

தெரு நாய்கள்
card-bg-img
 

தமிழ் சினிமாவில் படங்களை வெளியிடுவதில் கூட போட்டிகள் உண்டு. பெரிய படஜெட் படங்களுக்கு வழிவிட்டு சிறிய பட்ஜெட் படங்கள் களம் காணத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில படங்களுக்கு நடுவே ஒரு படமாய் வந்துள்ளது தெரு நாய்கள்.

இந்த படம் எப்படியிருக்கிறது, என்ன மாதிரியான கதை என பார்க்கலாம்.

கதைக்களம்

அறிமுக நடிகர் ராம் பிரதீக் இமான் அண்ணாட்சியின் பலகாரக்கடையில் வேலை செய்கிறார். அவருடன் இருக்கும் நால்வர் அவருக்கு நண்பர்கள். நன்றாக போய்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசுகிறது.

இமான் தன் நண்பருடன் வெளியே சென்றவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிடுகிறார்கள். தன் முதலாளியின் இழப்பை தாங்காத இவர்கள் அனைவரும் ஒன்று கூடி வேறு பாதையில் செல்கிறார்கள்.

இதற்கிடையில் நடிகர் சாய் தீனா, சேட் என்னும் ஒருவரின் கூட்டணியில் சேர்ந்து நல்ல விஷயங்களை எதிர்த்து வருகிறார். ஊரில் தேர்தல் வரப்போகிறது. எம்.எல்.ஏ அரசியல்வாதி ஒருவருக்கும் சேட் கும்பலுக்கு நிறைய கருத்து வேறுபாடுகள்.

திடீரென எம்.எல். ஏ. கடத்தப்பட, சேட் தான் இதை செய்தார் என எம்.எல்.ஏவின் கூட்டாளிகள் ஒரு கட்டத்தில் சேட் கும்பலை போட்டு தள்ள சதி செய்கிறார்கள். ஆனால் சேட் தப்பி விடுகிறார்.

இமானை ஏன் கொன்றார்கள், எம்.எல்.ஏவை கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள், அவர் என்ன ஆனார், அந்த நால்வர் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ புதுமுகம் என்றாலும் ஓகே. இன்னும் பயிற்சிகள் தேவை. ஹீரோயின் என ஒருவர் இருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற ஜோடி போல தெரியவில்லை. அவ்வபோது காதல். அதுவும் ஒரு சில காட்சிகள் தான்.

மைம் கோபி ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்கள். அவரை வேலை செய்யவிடாமல் சிலர் தடுக்க அவர் ஒதுங்கி விடுகிறார். இதனால் கதையில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாதது தொங்கி நிற்கிறது.

அப்புக்குட்டி இவர் தான் அவர் நண்பர்களுக்கு இன்ஃபர்மேஷன் பாஸர். இவர் இருப்பது ஆங்காங்கே சிரிக்க வைப்பது படத்தை கொஞ்சம் கிரிஷ்ப் ஆக்குகிறது. வில்லன் அரசியல்வாதி ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் சிக்க, அவர் பேசுவது ரோலிலிருந்து விலகியது போல உள்ளது.

கிளாப்ஸ்

இவர்களது முயற்சியை வரவேற்கலாம். கதையை சுருக்கி, காட்சியை கிரிஷ்ப்பாக்கியிருந்தால் படத்திற்கு பலம் சேர்க்கும். விவசாயிகளின் நிலையை கையில் எடுத்ததது ஓகே.

விஜய லட்சுமியின் கண்கள் பேசுதேனோ பாடல் படத்திற்கு கொஞ்சம் பிளஸ்.

ஹீரோ, ஹீரொயின் ரொமான்ஸ் ஒரு சீன் என்றாலும் ஓகே.

பல்பஸ்

படத்திற்காக சில விசயங்களை கதையில் திணித்தது போல சில இடங்களில் தெரிகிறது.

முதல் பாதி கதை நகர்விற்கும் இரண்டாம் பாதியில் கதை நகர்விற்கு நிறைய வித்தியாசங்கள்.

 

மொத்தத்தில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் பல படங்கள் வருகின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கதையையும், படத்தையும் அமைத்தால் அது வெற்றி கொடுக்கும்.

http://www.cineulagam.com/reviews

Link to comment
Share on other sites

தெரு நாய்கள் @ விமர்சனம்

theru-1-676x400.jpg

ஸ்ரீ புவல் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் சுஷில் குமார் ஜெயின் மற்றும் உஷா தயாரிக்க,

அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், பிரதீக், ஆறு பாலா , பாவல் நவகீதன், மைம் கோபி மற்றும் பலர் நடிப்பில் ,

ஹரி உத்தரா என்பவர் இயக்கி இருக்கும் படம் தெருநாய்கள் . வசூல் வேட்டையாடுமா ? பார்க்கலாம் . 

மன்னார்குடியில் ஐந்து   நபர்கள் (அப்புக்குட்டி, ராம்ஸ், ஆறு பாலா , பிரதீக் ) ஒன்று சேர்ந்து , தேர்தல் முடிந்து,
theru-5.jpg
 
வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கும்போது , வாக்குப் பெட்டிகளை தூக்குகின்றனர் . 
 
சிட்டிங் எம் எல் ஏ வுக்கும்  பணக்கார சேட் ஒருவருக்கும் இடையே உள்ள பகையை திட்டமிட்டு வளர்க்கின்றனர் .
 
அவர்களுக்குள் சண்டை பெரிதாகும்போது , எம் எல் ஏ வைக் கடத்துகின்றனர் . 
 
சேட்டுதான் கடத்தி இருப்பான் என்று எம் எல் ஏ வுக்கு விசுவாச போலீஸ் (மைம் கோபி) நினைக்க,
theru-4.jpg
 
இரண்டு குழுவும் அடித்துக் கொண்டு சாகட்டும் என உயர் போலீஸ் அதிகாரி நினைக்கிறார். சரி எம் எல் ஏவைக் கடத்தக் காரணம்?
 
மீத்தேன் திட்டம் கொண்டு வரக் காரணமான கட்சியைச் சேர்ந்தவர் அவர். பணத்துக்காக அதில் அதீத ஈடுபாடு காட்டியவர் .
 
விவசாயிகளின் நிலங்களைப் பறித்து எரிவாயு  கேஸ் குழாய் பதிக்கக் காரணமாக இருந்தவர் . theru-6.jpg
 
எம் எல் ஏவை கடத்தும் இந்த ஐந்து நபர்களுக்கும் பலகாரக் கடை ஒன்றில் வேலை கொடுத்து சொந்தத் தம்பிகள் போல பார்த்துக் கொண்ட ,
 
ஒரு நல்லவரின் (இமான் அண்ணாச்சி )  நிலத்தை குழாய் பதிப்புக்க எம் எல் ஏ   வாங்க நினைக்க, விவசாயத்தை நேசிக்கும் அவர் கொடுக்க மறுக்க , 
 
அவருக்கும் அவர் அண்ணனுக்கும் சண்டை மூட்டியதோடு அவரை சேட்டு கொலை செய்யவும் காரணமாக இருந்தவர் இந்த எம் எல் ஏ .
 
ஐவரில் ஒருவனின் காதலும் இதில் பாதிக்கப்படுகிறது .theru-7.jpg
 
கடத்திய எம் எல் ஏ யை ஒரு  நிலையில் எரித்துக் கொல்கிறார்கள் . அவர்களைக் கண்டு பிடிக்கும் போலீஸ் ஐவரையும் என்ன செய்தது என்பதே இந்த தெரு நாய்கள் . 
 
மீத்தேன் வாயு எடுப்பதின் அபாயம், எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதிப்பதால் வாழ்விழந்த விவசாயிகள், குழாய் வெடித்து இறக்கும் அப்பாவிகள்,  
 
மலடாகும் நிலம், தாய்ப்பால் உட்பட உணவு வழியே எல்லாமும் விஷமாகும் அவலம் இவற்றை சில காட்சிகளில் சொல்கிறார்கள் . 

theru-2.jpg

அது இந்தப் படத்தின் பாரட்டுக்குரிய அம்சம் . ஆனால் அது மட்டுமே !
 
அதைக் கூட திரை வழியே அழுத்தமாக பார்ப்போர் பதைத்துப் பயந்து விழிப்புணர்வு பெறும் வகையில் சொல்லவில்லை . ஜஸ்ட் வசனமாக வந்து போகிறது 
 
மேற்சொன்ன விசயங்களில் சில கட்டுரைகள் ஏற்படுத்திய பாதிப்பைக் கூட படம் ஏற்படுத்தவில்லை . 
 
இதைச்  சொல்ல வருவதற்குள் அரசியல்வாதி, ரவுடி, போலீஸ் கட்ட பஞ்சாயத்து , கள்ளக் காதல் , ஒரு வழக்கமான நல்ல காதல் , என்று எங்கெங்கோ சுற்றுகிறது கதை . 

theru-3.jpg
 
அட்லீஸ்ட் எம் எம் ஏவைக் கொல்வதையாவது மீத்தேன்  முதலிய இயற்கை வாயுக் குழாய் விபத்தில் சாவது போல,
 
 அல்லது அதனால் விஷமான தண்ணீர் குடித்து சாவது போல காட்டி இருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருந்து இருக்கும் . அதுவும் செய்யவில்லை . 
 
வெற்றிப் படமாக்குவதற்கு வெறி பிடித்தது போல  உழைத்து இருக்க வேண்டும் . 

http://nammatamilcinema.in/theru-naaigal-review/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.