Jump to content

இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு


Recommended Posts

இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு

 

'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு

 
rauff-hakeem_19092017_KAA_CMY.jpg

எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார்.

அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம்.

பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது என்றார்.

அதேநேரம், தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் அரசியலமைப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20088

 

 

இனவாத கோணத்தில் அரசியலமைப்பை தயாரிக்க கூடாது

 

 

Anura-Kumara-Dissanayake-3.png

இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நோக்கத்தின் ஊடாகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவது மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவது என்ற இரண்டு விடயங்களும் ஒரே பாதையில் கொண்டுசெல்லக் கூடிய விடயங்கள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதி முறையை பலப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என அவர் விமர்சித்தார்.

நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

அரசியலமைப்பு தயாரி்க்கும் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே கலந்துகொண்டுள்ளோம். இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயம் கோட்பாடாக கொள்ளப்பட வேண்டும். அதனைவிடுத்து கலந்துரையாடல்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றார்.

மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாகவே கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு வெளியே கொண்டுவரப்படும் எந்தவொரு பாராளுமன்ற திருத்த யோசனைகளுக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்கப்போவதில்லையெனக் கூறினார்.

இலங்கை பல் இன சமூகத்தைக் கொண்ட நாடாகும். எனவே சகல இன, மத மக்களும் சமமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து ஒரு சமூகத்துக்கு உயர்ந்த அங்கீகராமும், ஏனைய சமூகங்களுக்கு அல்லது இனங்களுக்கு இரண்டாம் பட்ச அங்கீகாரமும் வழங்கப்படக்கூடாது. சகல மக்களின் இன, மொழி, கலாசார உரிமைகள் மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் கூறினார்.

இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகள் என்பன அரசியலமைப்பின் முக்கிய காரணங்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் இனவாத கோணத்தில் நோக்கப்படக்கூடாது.

இனவாத கண்ணோட்டத்தினூடாக அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் எவரும் பங்கெடுக்கக் கூடாது என்பதுடன், அவ்வாறான எவரும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20086

 

 

தமிழரின் சுயமரியாதையை உறுதிப்படுத்தும் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்

 
 
 
sambanthan_tna_10082017_KAA_CMY.jpg

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும்.

இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

எமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

இரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும்.

அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது.

1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் சரத்துக்களால் அது வலுவிழந்தது.

அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.

தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20089

தொடரும்

Link to comment
Share on other sites

’13ஐவிட மேம்பட்டால் வரவேற்போம்’
 

"எம்மைப்பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கான புதிய அரசமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால் அதை வரவேற்போம்" என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று அரசமைப்பு பேரவையில் தெரிவித்தார்.

"தமிழ் மக்கள், தாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை  முன்னாள் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே, எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழி நடத்தல் குழுவினால் வரைவு செய்யப்பட்ட புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அரசமைப்புச் சபையில் பிரதமர் சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

அரசமைப்பு வரைபு மீதான தமது அபிப்பிராயங்களை முன் வைத்து கருத்துத் தெரிவித்த டக்ளஸ் எம்.பி மேலும் கூறியதாவது,

"இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேற முடியும் என்று நம்பினோம். அதையே எமது மக்களிடமும் கூறினோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு சாத்தியப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தாம் இலங்கையராக இருப்பதற்கு தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும் என்றோ, தமிழராக இருப்பதற்கு இலங்கையர் என்பதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.

"இலங்கையராகவும், தமிழராகவும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழவே விரும்புகின்றார்கள். எனவே பிரதமர், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்வதை நாம் வரவேற்கின்றோம்.

"முக்கியமாக புதிய அரசமைப்பானது, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' ஏன்ற கோட்பாட்டுக்கு அமைவாக, இலங்கைத் தாய் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதாக அமையவேண்டும்.

"மேல்சபை அமையப்பெற வேண்டும், அதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்க வேண்டும் என்றும்,  பொலிஸ் உட்பட முப்படைகளிலும் இனவிகிதாசாரம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலில் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும்" என்று டக்ளஸ் எம்.பி வலியுறுத்தினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/13ஐவிட-மேம்பட்டால்-வரவேற்போம்/175-204297

Link to comment
Share on other sites

பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க அனுமதியோம்

 
Untitled-23625.jpg
 
 

அரசியலமைப்பு தொடர்பில் கட்சிகளிடையே உடன்படாத பல விடயங்கள் காணப்படுகின்றன.பரந்த மக்கள் கருத்து இங்கு கவனிக்கப்படவில்லை.சிறு குழுவொன்றின் அறிக்கையை மனதில் வைத்துக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வழிபடுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்,

அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்கமுடியாத விடயங்களும் இருக்கின்றன.

இந்த அறிக்கையில் சகல மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.மக்கள் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களல்ல.

இங்கு நாம் 14 அம்சங்களை முன்வைத்திருந்தோம்.ஒற்றையாட்சி என்பது தொடர வேண்டும்.ஆனால் இதனை ஆங்கிலத்தில் ஒருவாரும் தமிழில் வேறு விதமாகவும் அர்த்தம் கற்பித்திருப்பது கநாடகமாகும்.ஒற்றையாட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்த வேண்டும்.உப குழுக்களில் எமது எம்.பிகளின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.சர்வாதிகாரமாக யாப்பு உருவாக்க முடியாது.பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.

அவரின் கருத்திற்கு ஆளுந்தரப்பு எம்பிகள் எதிர்ப்பு வெ ளியிட்டதோடு அவர் சபையை தவறாக வழிநடத்துவதாக குறிப்பிட்டனர்.

அவரின் உரையினால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அடுத்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் நானும் வழிப்படுத்தல் குழுவில் அங்கம் வகிக்கிறேன். இந்த அறிக்கையினூடாக யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அல்ல.புத்த மதத்திற்கு உள்ள முன்னுரிமை அணுவளவும் குறைக்கப்படவில்லை.

எனக்கு பேச இடமளிக்காதிருப்பது எனது இனத்திற்கு செய்யும் அநீதியாகும் என்றார்.

http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20087

Link to comment
Share on other sites

ஒற்றையாட்சியினை பாதுகாக்கவேண்டும்

Nimal-023-cf5c4ba94e73a54635199239740d7af860fba514.jpg

 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் நிலைக்க  வேண்டும் ; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அதி­கா­ரங்­களை பகிர்­வதை ஸ்ரீலங்கா சுதந்­
திரக் கட்சி ஒரு­போதும் எதிர்க்­க­வில்லை. எனினும், நாட்டை பாது­காக்க வேண்­டு­மா யின் ஒற்­றை­யாட்சி பாதுகாக்­கப்­பட வேண்டும். அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நிலைக்க வேண்டும்.அப்­ப­டி­யா­னால்தான் அதி­கா­ரத்தை பகிர்ந்த பின்­னரும் 

 நல்­லி­ணக்கம் ஏற்­படும். இதுவே சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­ப­டாகும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழு தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடி­யது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் சுதந்­திரக் கட்சி சார்­பாக உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

தேசிய பாது­காப்பு மற்றும் ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு சகல மக்­களின் வாக்­கு­க­ளாலும் ஜனா­தி­பதி ஒருவர் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­கான தேசிய பொறி­மு­றை­யொன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது அவ­சியம்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒருவர் இருப்­பதன் ஊடா­கவே நாட்டில் இன, மத ரீதி­யான முரண்­பா­டு­களை களைந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும்.

சகல அர­சியல் கட்­சி­களும் தமது நிலைப்­பாட்டை தெரி­வித்து அது­பற்றி நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­து­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுத்­தமை பாராட்­டத்­தக்­கது. தேர்­தல்­மு­றையை மாற்­று­வது உள்­ளிட்ட பல்­வேறு நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தில் இணைந்­து­கொண்­டது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளுக்கு வட்­டார முறையை உள்­ள­டக்­கிய கலப்­பு­முறை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. நேற்­றை­ய­தினம் (புதன்­கி­ழமை) மாகாண சபைத் தேர்­தல்­க­ளிலும் கலப்பு தேர்தல் முறை­மை­யொன்றை கொண்­டு­வர முடிந்­துள்­ளது. ஆகவே, பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்கும் இவ்­வா­றான கலப்­பு­மு­றை­யொன்று உட­ன­டி­யாக கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

ஒற்­றை­யாட்சி முறை, பௌத்த மதத்­துக்­கான முக்­கிய இடம் என்­ப­வற்றில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்சி உள்­ளது. ஏனைய எந்­த­வொரு கட்­சியும் முன்­வைக்­காத யோச­னை­களை நாம் முன்­வைத்­துள்ளோம்.

அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­ற­மொன்று உச்­ச­நீ­தி­மன்­றத்தால் அமைக்­கப்­பட வேண்டும், இரண்­டா­வது சபை அமைக்­கப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை நடை­மு­றையில் இருக்க வேண்டும்

அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வதை நாம் எதிர்க்­க­வில்லை. தேசிய பாது­காப்பு, ஒற்­றை­யாட்சி என்­ப­வற்றைப் பாது­காப்­ப­தற்கு சகல மக்களின் வாக்குகளால் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான தேசிய பொறிமுறையொன்று அவசியம். இதற்காக ஜனாதிபதியின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளோம். இதனூடாகவே இன, மத ரீதியான வேறுபாடுகளிலிருந்து பிரிந்து நிற்காமல் சகலருக்கும் ஒரு ஜனாதிபதி என்ற நிலைப்பாட்டில் போட்டியிட முடியும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-1

 

Link to comment
Share on other sites

பௌத்த மத முன்னுரிமைக்கு அனைவரும் இணக்கம் : தினேஷுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமையை இல்­லாமல் செய்யும் திட்­டத்­திற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என்று கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்த

கருத்­துக்கு, பெளத்த மதத்திற்கான முன்னுரி மையை

 இல்­லாமல் செய்யும் நோக்­க­மில்லை.

 பெளத்த மத முன்­னு­ரிமை அனை­வ­ரி­னதும் இணக்­க­பாட்­டிற்கு வந்­துள்ள விட­ய­மாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் பதி­ல­ளித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடி­யது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி உரை­யாற்றி கொண்­டி­ருக்­கை­யி­லேயே இரு­வ­ருக்­கு­மி­டையில் வாதபிரதிவாதம் ஏற்­பட்­டது.

இதன்­போது தினேஷ் குண­வர்­தன தனது உரையில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை இல்­லாமல் செய்­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம் என கூறிய போது, தற்­போது உங்­களின் நேரம் நிறை­வ­டைந்து விட்­டது. அம­ருங்கள் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறினார்.

இத­னை­ய­டுத்து 54 உறுப்­பி­னர்­களின் சார்­பாக நான் கதைக்­கின்றேன். எனக்கு இடம் வழங்­குங்கள். எப்­போதும் எனக்கு நீங்கள் தடை­வி­திப்­பது நியா­ய­மில்லை. 54 உறுப்­பி­னர்­களை கொண்ட குழுவின் தலைவரான எனக்கு இறு­தி­யாக உரை­யாற்ற இடம் வழங்­கு­கின்­றீர்கள் என தினேஷ் குண­வர்­தன எம்.பி கார­சா­ர­மான வாதத்தை முன்­வைத்தார்.

இதன்­போது இடை­ந­டுவே எழுந்த ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி

நாமும் இலங்­கை­யர்­களே. பெரி­தாக 54 பேர் என்று மார்­தட்டி கொண்­டாலும் நேற்­றைய (நேற்று முன்­தினம்) மாகாண சபை தேர்­தல்கள் திருத்த சட்­ட­ மூ­லத்தின் மீதான வாக்­கெ­டுப்பில் 37 பேரே இருந்­தனர் என்றார்.

இத­னை­ய­டுத்து எழுந்த அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர,

தினேஷ் குண­வர்­தன எம்.பி சபை­யி­னதும் மக்­க­ளி­னதும் கவ­னத்தை திசை­தி­ருப்ப பார்­கின்றார்.

இதன்­போது தனக்கு பேச சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு அமைச்சர் மனோ கணேசன் கூறி­ய­தனை அடுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சந்­தர்ப்பம் வழங்­கினார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மனோ கணேசன் கூறு­கையில்,

நானும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ராவேன். எனக்கு பேச சந்­தர்ப்பம் வழங்­கா­விடின் நான் பிர­தி­நி­தி­யாக இருப்­பதில் பய­னில்லை. இன்று (நேற்று) சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை இறுதி தீர்­மானம் அல்ல. அது தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கும் தெரியும். எனினும் தற்­போது இணக்­கப்­பாட்­டிற்கு வந்துள்ள விடயங்களில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையும் ஒன்றாகும். நாம் பெளத்த மத முன்னுரிமையை நீக்கமாட்டோம் என்றார்.

இதன்போது ஆளும் கட்சி எம்.பிக்கள் மேசையில் தட்டி ஆரவாரமிட்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-1

Link to comment
Share on other sites

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­வோம்..இரா.சம்­பந்­தன்

 

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­ டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் அறிக்கை நேற்று அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் (நாடா­ளு­மன்­றில்) முன்­வைக்­கப்­பட்­டது. அதில் உரை­யாற்­றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். இரா.சம்­பந்­தன் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அனை­வ­ரும் ஏற்­கும்
அர­ச­மைப்பு உரு­வா­கும்

இடைக்­கால அறிக்­கை­யி­லும் அத­னோடு சேர்த்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள இணைப்­புக்­க­ளி­லும் அடங்­கி­யுள்ள விட­யங்­கள் பற்­றிய கருத்­துக்­க­ளைத் தற்­பொ­ழுது கூறு­வது எனது எண்­ண­மல்ல. அத்­த­கைய நோக்­கத்­துக்­காக அர­ச­மைப்­புச் சபை­யின் எதிர்­கா­லத்­தில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டங்­க­ளில் அந்த விட­யங்­கள் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

நாங்­கள் ஈடு­பட்­டுள்ள செயன்மு­றை­யின் சில விட­யங்­க­ ளின் அவ­ச­ர­மான தொடர்பு மற்­றும் முக்­கி­யத்­து­வம் பற்­றியே குறிப்­பிட்­டுக் கூற விரும்­பு­கின்­றேன். எமது நாட்­டுக்­கான அர­ச­மைப்பை உரு­வாக்­கும் செயன்மு­றை­யி­லேயே நாம் அனை­வ­ரும் ஈடு­பட்­டுள்­ளோம். அடிப்­படை மீயு­யர் சட்­ட­மா­கிய இலங்­கை­யின் அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மக்­க­ளின் சார்­பாக நாம் அனை­வ­ரும் ஈடு­பட்­டுள்­ளோம்.

பிள­வு­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத ஐக்­கிய இலங்கை என்ற உறு­தி­யான கட்­ட­மைப்­புக்­க­மை­வாக இது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்­தக் கட்­ட­மைப்­பின்­ப­டியே நாங்­கள் யாவ­ரும் சுய­மாக விரும்பி ஒப்­புக்­கொள்­ள­வும் ஏற்­றுக்­கொள்­ள­வும் கூடிய வகை­யில் அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும்.

பிரிக்­கப்­ப­டாத
இலங்கை தொட­ரும்

நியா­ய­மான, ஏற்­பு­டை­ய­தான, போதி­ய­ள­வான தேசிய ஒருங்­கி­சை­வின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­ப­டும் அர­ச­மைப்­புச் செயற்­பா­டு­கள் வெற்­றி­க­ர­மாக முடி­வு­றும்­போது அது இந்­தப் பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான முடி­வைக் கொண்­டு­வ­ரும். நாட்­டின் மீயு­யர் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லும், அதன் மக்­க­ளு­டைய சுய­வி­ருப்­பத்­து­ட­னும், சம்­ம­தத்­து­ட­னும் இலங்கை ஐக்­கி­ய­மான, பிள­வு­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யா­த­தா­கத் தொடர்ந்­தும் இருக்­கும்.

வித்­தி­யா­ச­மான அடை­யா­ளங்­க­ளைக் கொண்­டுள்ள வேறு­பட்ட மக்­க­ளான சிங்­க­ள­வர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லிம்­கள் மற்­றும் பறங்­கி­யர் போன்­றோர் வாழு­கின்ற நாடாக இலங்கை உள்­ளது. இலங்கை பல்­வேறு அர­சி­யற் கட்­சி­கள் செயற்­ப­டு­கின்ற சன­நா­ய­கம் தொழிற்­ப­டு­கின்ற நாடா­கும். முதன்மை அர­சி­யற் கட்­சி­கள் இரண்­டும் மாறி­மாறி இந்த நாட்­டின் அரசை அமைத்து ஆட்சி செய்­தி­ருக்­கும் அதே­வேளை, ஏனைய கட்­சி­க­ளும் தங்­க­ளு­டைய வகி­பா­கத்­தைக் கொண்­டி­ருந்­தன.

தமி­ழ­ரின் ஆத­ரவு
கிட்­ட­வில்லை

இலங்­கை­யில் இது­வரை கட்­ட­மைக்­கப்­பட்ட அர­ச­மைப்­புக்­கள் எது­வும் அதன் வேறு­பட்ட மக்­க­ளின், குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளின் இரு­த­ரப்பு ஒருங்­கி­சை­வைப் பெற்­றி­ருக்­க­வில்லை. அல்­லது இரு முதன்­மைக் கட்­சி­க­ளின் மற்­றும் ஏனைய அர­சி­யற் கட்­சி­க­ளின் இரு­த­ரப்பு ஒருங்­கி­சை­வை­யும் பெற்­றி­ருக்­க­வில்லை.

அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் தற்­போ­தைய செயற்­பா­டு­கள் அதற்­கான ஒரு வாய்ப்பை முதல் தட­வை­யா­கத் தந்­துள்­ளன. அத்­த­கைய நியா­ய­மான ஒருங்­கி­சை­வின் அடிப்­ப­டை­யி­லான அர­ச­மைப்பே நாட்­டின் அடிப்­ப­டை­யான மீயு­யர் சட்­ட­மாக நாட்­டின் அர­ச­மைப்­புக்­குத் அவ­சி­ய­மா­கத் தேவை­யா­க­வுள்ள சட்­ட­ரீ­தி­யான தகு­தி­யை­யும் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் பெற்­றுத்­த­ரும்.

அர­ச­மைப்பை அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளின் பிடிக்­குள் இருந்து வெளியே கொண்டு வந்து, இலங்­கையை ஒரு தேச­மா­க­வும் இலங்­கை­யர் என்ற அடை­யா­ளத்­தை­யும் காட்­டும் பண்­பு­களை உரு­வாக்­கக்­கூ­டிய அர­ச­மைப்­பைப் பெற்­றுத் தரும். இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த எழு­பது ஆண்­டு­க­ளாக இந்த நில­மையை அடைய எம்­மால் முடி­ய­வில்லை.

கடந்த கால
தீர்வு முயற்­சி­கள்

1987 – 1988 ஆண்டு தொடக்­கம் அர­ச­மைப்பு உரு­வாக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­கின்­றன. செயல்­வலு குறைந்­த­தாக இருந்­த­போ­தும், அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தமே கொழும்­புக்­கும் மாகா­ணங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான அதி­கா­ரப் பங்­கீட்டை முதல் தட­வை­யாக அர­ச­மைப்­புக்­குள் உள்­ள­டக்­கி­யது. அப்­பொ­ழுது தொடக்­கம் பின்­வந்த அரச தலை­வர்­க­ளும், அர­சு­க­ளும் தேசி­யப் பிரச்­சி­ னைக்கு இறு­தித் தீர்­வைக் காண்­ப­தற்­குப் பங்­க­ளிப்­புச் செய்­யக்­கூ­டிய முன்­னேற்­ற­க­ர­ மான பிரே­ர­ணை­களை முன்­வைத்­த­னர்.

அரச தலை­வர் ஆர்.பிரே­ம­தாஸ ஆட்­சிக் காலத்­தில் மங்­கள முன­சிங்க தெரி­வுக்­கு­ழு­வின் பிரே­ர­ணை­கள் வந்­தன. முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­ வின் ஆட்­சிக் காலத்­தில் அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­தி­யு­டன் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அர­ச­மைப்­புப் பிரே­ர­ணை­கள் நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் அவ­ரால் நிய­மிக்­கப்­பட்ட பல்­லின நிபு­ணர்­க­ளின் பிரே­ர­ணை­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தோடு, பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ர­ண­வைத் தலை­வ­ரா­கக் கொண்ட சகல கட்­சி­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் குழு அதன் அறிக்­கையை அரச தலை­வர் மகிந்­த­வி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. இப்­போ­தைக்கு அவை பற்­றிய விவ­ரங்­க­ளுக்­குள் நான் போக­வில்லை.

வெற்­றிக்கு சாத­க­மான
நில­மை­கள் உள்­ளன

அத்­த­கைய பிரே­ர­ணை­கள் பல்­வேறு புறம்­பான கார­ணங்­க­ளுக்­காக அர­ச­மைப்­பு­டன் சேர்க்­கப்­ப­டா­விட்­டா­லும் அந்­தப் பிரே­ர­ணை­கள் தொடர்­பா­கக் கணி­ச­மான ஒருங்­கி­சைவு காணப்­பட்­ட­தென்­ப­தைத் தெரி­விப்­பது போது­மா­ன­தென எண்­ணு­கி­றேன்.

உண்­மை­யில் இது­முன்­னைய செயற்­பா­டு­க­ளின் தொடர்ச்­சி­யெ­னக் குறிப்­பிட்­டுக் கூறு­வ­தோடு, இந்­தச் செயற்­பாடு முழு­மை­யாக வித்­தி­யா­ச­மான ஒரு சூழ்­நி­லை­யில் இடம்­பெ­று­வ­த­னால், இந்­தச் சந்­தர்ப்­பத்­தைத் தவ­ற­வி­டக் கூடா­தென எல்­லோ­ரும் நியா­ய­மா­க­வும் உறு­தி­யு­ட­னும் இருந்­தால், இது வெற்­றி­ய­டை­யக் கூடிய எல்­லாச் சாத­க­மான நில­மை­க­ளும் உள்­ளன.

தமது அடை­யா­ள­மும், மதிப்­பும் ஒப்­பு­த­ல­ளிக்­கும் நியா­ய­மா­ன­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக் கூடி­ய­து­மான அர­ச­மைப்பு ஏற்­பா­டு­களே தமிழ்­பே­சும் மக்­க­ளின் நீண்­ட­கால வேண­வாக இருந்து வரு­கின்­றது. உல­கத்­தில் பர­வ­லாக இத்­த­கைய ஒழுங்கு முறை­கள் இருக்­கின்­றன. தீர்வு காணப்­ப­டாத நில­மை­க­ளின் விளை­வாக முழு நாட்­டுக்­கும், தமிழ் மக்­க­ளுக்­கும் பல்­வேறு பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

கல்­வி­ய­றி­வு­டைய தகு­தி­வாய்ந்த இந்த நாட்­டின் குடி­மக்­கள், குறிப்­பா­கத் தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் நாட்­டை­விட்டு வெளி­யேறி பிற நாடு­க­ளில் புக­லி­டம் பெற்­றுள்­ள­த­னால் இந்த நாடு திற­மை­யா­ன­வர்­களை இழந்­துள்­ளது. பல்­வேறு வழி­க­ளி­லும் இந்த நாட்­டின் எதிர்­கா­லத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும் வகை­யில் பன்­னாட்டு ரீதி­யில் நாட்­டின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

ஒன்­றி­ணைந்து
செயற்­ப­டு­வோம்

நாங்­கள் எமது நாட்­டின் நற்­பெ­யரை மீட்­டெ­டுத்து பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மதிப்­பைப் பெற­வேண்­டி­யது தேவை உள்­ளது. எமது பொரு­ளா­தா­ரம் பெரி­ய­ள­வில் குறை­பா­டு­டை­ய­தாக உள்­ள­தோடு, முன்­னர் எமது வாழ்க்­கைத் தரத்தை விடப் பின்­தங்­கிய நிலை­யில் இருந்த இந்­தப் பிராந்­தி­யத்­தின் ஏனைய நாடு­கள் வேக­மாக முன்­னேற்­ற­ம­டைந்து இன்று நாம் வாழும் வாழ்க்­கைத் தரத்­தை­விட மிக உயர்ந்த வாழ்க்­கைத் தரத்­தைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றன. பொரு­ளா­தார ரீதி­யில் நாம் மிக­வும் பின்­ன­டைந்­துள்­ளோம். பாது­காப்­புச் செல­வி­னங்­க­ளுக்­காக பெரிய தொகை­யைச் செல­விட வேண்­டி­யுள்­ள­தால் முக்­கி­ய­மான துறை­க­ளில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள வளப் பற்­றாக்­குறை தடை­யாக உள்­ளமை பின்­ன­டை­வுக்­குக் கார­ண­மா­கின்­றது.

இத்­த­கைய கார­ணி­களே புதிய மீயு­யர் அடிப்­ப­டைச் சட்­டத்­தின் மீது ஒரு புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­கப் முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம் – என்­றார்.

http://newuthayan.com/story/30948.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.