Jump to content

வெளி­யா­னது இடைக்­கால அறிக்கை எந்­தக் கட்­சிக்­குமே இணக்­க­மில்லை


Recommended Posts

வெளி­யா­னது இடைக்­கால அறிக்கை எந்­தக் கட்­சிக்­குமே இணக்­க­மில்லை

 

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார்.

இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது.

வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்கு முன்­மொ­ழிந்­துள்­ளது.

காணிப் பயன்­பாட்டு அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்க யோசனை முன்­வைத்­துள் ளது. பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தற்கு மத்­திய அர­சுக்­குக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கும் யோச­னை­க­ளும் வைக்­கப்­பட்­டுள்­ளன. மாகா­ணப் பிர­தி­நி­தி­ க­ளைக் கொண்ட இரண்­டா­வது சபை ஒன்றை நிறு­வ­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்டை வழிப்­ப­டுத்த அர­ச­மைப்­புப் பேரவை ஒன்றை அமைப்­ப­தற்­கான முன்­மொ­ழி­யும் உள்­ளது. பெண்­க­ளுக்கு 50 வீத இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­ப­டு­வ­தற்கு வகை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள் ளது.

இணக்­க­மில்லை

புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­னர்­கள் இடையே இந்த இடைக்­கால அறிக்கை தொடர்­பில் இணக்­கம் ஏற்­ப­ட­வே­யில்லை. அவர்­க­ளின் கருத்­துக்­கள் மட்­டுமே இடைக்­கால அறிக்­கை­யா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல விட­யங்­க­ளு­ட­னும் ஒவ்­வொரு கட்­சி­யும் இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்றை தத்­த­மது தனிப்­பட்ட அறிக்­கை­க­ளில் பின்­னி­ணைப்­பா­கச் சேர்த்­துள்­ளன.

பின்­னி­ணைப்­பு­க­ளைச் சேர்த்­துப் பார்க்­கும்­போது இடைக்­கால அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள சிறப்­பான விட­யங்­கள் எவை­யுமே இணக்­கம் காணப்­ப­டா­தவை என்­பது தெளி­வா­கின்­றது.

116 பக்க அறிக்கை

அறிக்கை 116 பக்­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் 44 பக்­கங்­கள் மட்­டுமே வழி­காட்­டல் குழு­வால் தயா­ரிக்­கப்­பட்­டவை.

மிகுதி 70 பக்­கங்­க­ளும் கட்­சி­க­ளின் இணைப்­பு­க­ளால் நிரப்­பப்­பட்­டுள்­ளன. இத­னை­யும் உள்­ள­டக்­கிய 12 பகு­தி­க­ளாக அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு எப்­ப­டிப்­பட்ட அடிப்­ப­டை­க­ளு­டன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­கான வரை­ய­றையை இந்த அறிக்கை கட்­ட­மைத்­துள்­ளது.

இலங்கை ஒற்­றை­யாட்சி நாடாக இருக்க முடி­யாது என்று அது தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்­குப் பதி­லாக சிங்­க­ளத்­தில் ஏகிய ராஜ்­ஜிய என்­ப­தும் தமி­ழில் ஒரு­மித்த நாடு என்­ப­தும் பயன்­ப­டுத்­த­ப­டும் பதங்­க­ளாக இருக்­கும்.

அதன் பொருள் பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாடு என்­ப­தா­கும் என்­றும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரப் பகிர்வு

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் சாத­க­மான நிலைப்­பா­டு­கள் காணப்­பட்­டா­லும், தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்க்­கைக்­கு­ரிய வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு இந்த அறிக்­கை­யில் இல்லை.

ஆனால், அது பற்றி வழி­காட்­டல் குழு தொடர்ந்து பரி­சீ­லிப்­ப­தற்கு அறிக்­கை­யில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் மூன்று தெரி­வு­களை அறிக்கை முன்­வைத்­துள்­ளது.

தற்­போ­துள்ள அர­ச­மைப்­பில் சொல்­லப்­பட்­டுள்­ள­மை­போன்ற மாகா­ணங்­களை இணைப்­பது குறித்த முடிவை அந்த மக்­க­ளி­ட­மி­ருந்தே பெறு­வது, அதா­வது இணைப்­புத் தொடர்­பில் மக்­கள் கருத்தை அறி­வது, மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­குப் புதிய அர­ச­மைப்­பில் இடம் வழங்­கக்­கூ­டாது, வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பதை புதிய அர­ச­மைப்பு உறு­திப்­ப­டுத்­து­வது ஆகிய தெரி­வு­கள் ஆரா­யப்­பட்­டன என்று அறிக்கை கூறு­கின்­றது. ஆனால் அது பற்­றிய இறுதி முடிவு எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அந்­தந்­தப் பகு­தி­க­ளில் உள்ள சிறு­பான்மை மக்­க­ளின் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டு­வதை அர­ச­மைப்பு உறுதி செய்­ய­வேண்­டும் என்று மக்­கள் பேர­வை­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன என்­கிற விட­யம் அறிக்­கை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

அதே­நே­ரம், குடி­ய­ர­சின் ஆட்­புல எல்­லைக்­கும் அதன் இறை­மைக்­கும் தெளி­வான ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற ஆயு­தக் கல­வ­ரத்­தையோ அல்­லது கிளர்ச்­சி­யையோ ஊக்­கு­விக்­கின்ற அல்­லது அர­ச­மைப்பு மீதான ஒரு சர்­வ­தேச மீற­லில் ஈடு­ப­டு­கின்ற நிலை­மை­யொன்று மாகாண சபை­யால் தோன்­றும்­போது தலைமை அமைச்­ச­ரின் ஆலோ­ச­னை­யின் பேரில் அரச தலை­வ­ரின் அறி­விப்பு ஒன்­றின் மூலம் மாகாண நிர்­வா­கத்­தின் அதி­கா­ரங்­களை அரச தலை­வர் பொறுப்­பேற்­க­லாம் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லாது, அவ­சி­ய­மா­கும் பட்­சத்­தில் மாகாண சபை­யைக் கலைக்­க­லாம் என்­றும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை

இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மதங்­கள் சம­மாக மதிக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தா­லும் பௌத்­தத்­தைப் பாது­காப்­ப­தும் பேணு­வ­தும் அர­சின் கடமை என்று சொல்­லப்­பட்­டுள்­ளது. ஏனைய மதங்­க­ளின் விட­யத்­தில் இவ்­வாறு கூறப்­ப­ட­வில்லை.

தேசி­யம், மாகா­ணம், உள்­ளு­ராட்சி ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டும் என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

அது எப்­ப­டிப்­பட்ட விதத்­தில் அமைந்­தி­ருக்­கும் என்­ப­தை­யும் விளக்­கு­கி­றது. உள்­ளு­ராட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் மாந­க­ரம், பிர­தே­சம் ஆகிய இரு பகு­தி­கள் மட்­டுமே இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நகர சபை­கள் தகுதி நீக்­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

அதி­கா­ரங்­கள் தேசிய நிரல், மாகாண நிரல் என்­கிற அடிப்­ப­டை­யில் பகி­ரப்­ப­டும். ஒருங்­கியை நிரல் வேண்­டாம் என்று கூறி­னா­லும் சில­வற்றை ஒருங்­கியை நிர­லில் வைத்­துப் பரி­சீ­லிப்­ப­தற்­கான அனு­ம­தி­யை­யும் அறிக்கை வழங்­கி­யுள்­ளது.

மாகாண ஆளு­ந­ரின் அதி­கா­ரங்­கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவர் ஒரு நிகழ்­வு­க­ளுக்­கான தலை­வ­ராக மட்­டுமே இருப்­பார்.

பாது­காப்பு, பொரு­ளா­தார ஒருங்­கி­ணைப்பு, இறைமை, ஆள்­புல ஒருமை ஆகிய விட­யங்­கள் தேசிய நிர­லுக்­கு­ரி­யவை என்­றும் ஏனை­யவை மாகாண நிர­லுக்­கு­ரி­யவை என்­றும் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால், தேசிய தரம் என்ற வகை­யில் ஏனைய விட­யங்­க­ளில் தேசிய அரசு தலை­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மா­கக் கல்வி, சுகா­தா­ரம் போன்­ற­வற்­றின் தேசிய தரத்தை தேசிய அரசே தீர்­மா­னிக்­கும்.

பிரி­வினை பற்­றிப் பேசவே கூடாது
எந்­த­வொரு கட்­டத்­தி­லும் பிரி­வினை தடுக்­கப்­ப­டு­கி­றது. பிரிந்து செல்­லு­தல் குறித்­துப் பேசவே முடி­யாது என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

எந்­த­வொரு மாகா­ணத்­தையோ பகு­தி­யையோ தனி­நா­டாக்­கு­வ­தற்­காக வாதா­டு­வதோ அதற்­காக நட­வ­டிக்கை எடுப்­பதோ செய்­யப்­ப­டக்­கூ­டா­தவை என்­கி­றது அறிக்கை.

அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டும் என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

காணி­கள் அனைத்­தும் தேசிய அர­சுக்­கு­ரி­யவை எனி­னும் மாகா­ணங்­க­ளுக்கு உட்­பட்ட காணி­கள் அனைத்­தை­யும், தேசிய அர­சின் தேவைக்­கா­கக் குறித்­தொ­துக்­கப்­பட்­டவை தவிர – அதா­வது நீர்ப் பயன்­பாடு போன்ற விட­யங்­க­ளில் தேவைக்­காக, பயன்­ப­டுத்­தும் உரிமை மாகா­ணங்­க­ளுக்­கு­ரி­யது.

அரச காணி­கள் தனி­யா­ருக்கு வழங்­கப்­ப­டும்­போது காணி­யற்ற நபர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும்.

அதி­லும் முத­லில் அந்த மாவட்­டத்­தைச் சேர்ந்த குறிப்­பிட்ட உப பிரி­வு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும், அடுத்து மாவட்­டத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­கும், அடுத்து மாகா­ணத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு இறு­தி­யாக ஏனை­ய­வர்­க­ளுக்­கும் வழங்­கப்­ப­டும்.

காணி அதி­கா­ரம்

காணி விட­யத்­தில் மத்­திய மாகாண அர­சு­க­ளுக்கு இடை­யில் பிணக்கு ஏற்­பட்­டால் அத­னைத் தீர்ப்­ப­தற்கு நியாய சபை ஒன்ற அரச தலை­வ­ரால் அமைக்­கப்­ப­டும்.

அதில் மத்­திய அர­சின் தலைமை அமைச்­சர், மாகாண முதல் அமைச்­சர் ஆகி­யோ­ரின் பிர­தி­நி­தி­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர்.

தேசிய பாது­காப்­புக்­காக நியா­ய­மான கார­ணங்­க­ளைக் குறிப்­பிட்டு தலைமை அமைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் பேரில் அரச தலை­வர் காணி­களை மத்­திய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வ­ர­மு­டி­யும். தேசிய காணி ஆணைக்­குழு ஒன்று உரு­வாக்­கப்­ப­டும்.

பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­கள் மாகாண சபை­க­ளி­டம் இருந்து ஒரு­த­லைப்­பட்­ச­மா­கத் திரும்­பப் பெறப்­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்­வ­தற்­காக, அர­ச­மைப்பு ரீதி­யா­கப் போதிய காப்­பு­களை கடைப்­பி­டிக்­கா­மல் மத்­திய அரசு மாகாண சபை நிர­லில் உள்ள கரு­மங்­கள் மீதான சட்­ட­வாக்­கத்தை அத்­த­கைய சட்­ட­வாக்­கத்­து­டன் உடன்­ப­டாத மாகா­ண­சபை ஏதே­னும் தொடர்­பாக அமைக்­கக்­கூ­டாது என்­றும் அறிக்கை கூறு­கின்­றது.

இரண்­டா­வது சபை

பெரும்­பா­லும் மாகாண சபை­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் இரண்­டா­வது சபை ஒன்றை உரு­வாக்­க­வும் அறிக்கை பரிந்­து­ரைக்­கி­றது. மாகா­ணங்­க­ளில் இருந்து 45 உறுப்­பி­னர்­க­ளை­யும் நாடா­ளு­மன்­றம் நிய­மிக்­கும் 10 உறுப்­பி­னர்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய 55 உறுப்­பி­னர்­களை அந்­தச் சபை கொண்­டி­ருக்­கும்.

சட்­ட­வாக்­கத்தை நிறுத்­தும் அதி­கா­ரம் இந்­தச் சபைக்­குக் கிடை­யாது என்­ற­போ­தும் அதனை நாடா­ளு­மன்­றத்­திற்­குத் திருப்பி அனுப்ப இந்­தச் சபை­யால் முடி­யும்.

அர­ச­மைப்­புத் திருத்­தங்­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றால் இரண்டு சபை­க­ளி­லும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற­வேண்­டும்.

நேரடி மற்­றும் விகி­தா­சார முறை­களை உள்­ள­டக்­கிய கலப்­புத் தேர்­தல் முறை­மை­யொன்றே பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. நாடா­ளு­மன்­றம் 233 ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

அதில் 140 ஆச­னங்­கள் நேரடி தேர்­தல் மூல­மும் 93 ஆச­னங்­கள் விகி­தார பிர­தி­நி­தித்­து­வம் மூல­மும் தெரிவு செய்­யப்­ப­டும். இடம்­பெ­யர்­வு­க­ளால் ஏற்­பட்­டுள்ள ஆள்­கு­றை­வைக் கணக்­கில் எடுத்து குறிக்­கப்­பட்ட காலத்­திற்கு வடக்கு மாகா­ணத்­திற்கு மேல­திக ஆச­னங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும்.

நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை நீக்­கப்­ப­ட­வேண்­டும், மாகா­ணங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட அதி­கா­ரங்­கள் அரச தலை­வ­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும், அரச தலை­வரை நாடா­ளு­மன்­றமே நிய­மிக்க வேண்­டும் என்­கிற பரிந்­து­ரை­க­ளும் செய்­யப்­பட்­டுள்­ளன.

அர­ச­மைப்­புப் பேரவை

அர­ச­மைப்­புப் பேரவை ஒன்றை உரு­வாக்­க­வும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளின் உறுப்­பி­னர்­களை நிய­மிப்­பது மற்­றும் பொதுச் சேவை, நீதிச் சேவை­க­ளில் உள்ள உயர் பத­வி­க­ளுக்கு அதி­கா­ரி­களை நிய­மிப்­பது ஆகி­ய­வற்­றைச் செய்­வ­தற்­காக இந்­தப் பேரவை உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

50 வீதத்­திற்கு மேற்­பட்ட பெண்­கள் பிர­தி­நித்­து­வக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தும் தேவை­யைக் கருத்­தில்­கொண்டு ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

எனி­னும் பின்­னி­ணைப்­பு­க­ளா­கக் கொடுக்­கப்­பட்­டுள்ள கட்­சி­க­ளின் அறிக்­கை­க­ளில் இந்த விட­யங்­க­ளில் பல­வற்­று­டன் ஒவ்­வொரு கட்­சி­யும் தமது உடன்­பா­டின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஒவ்­வொரு கட்­சி­யும் சில விடங்­க­ளில் இணக்­கத்தை வெளிப்­ப­டுத்­திய போதும் முக்­கிய விட­யங்­க­ளில் இணக்­கம் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதை இணைப்­பு­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

http://newuthayan.com/story/30801.html

Link to comment
Share on other sites

ஒற்­றை­யாட்­சியை நீக்க சுதந்­தி­ரக் கட்சி எதிர்ப்பு

 

புதிய அர­ச­மைப்­பில் இருந்து இலங்கை ஒற்­றை­யாட்சி நாடு என்ற பதத்தை நீக்கி ஒரு­மித்த நாடு என்ற பதத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது. இடைக்­கால அறிக்­கை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள அந்­தக் கட்­சி­யின் அறிக்­கை­யில் இது தெளி­வா­கக்குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்­பில் தமிழ் மொழி­யி­லும் சிங்­கள மொழி­யி­லும் இலங்கை ஒற்­றை­யாட்சி அரசு என்­பது குறிப்­பி­டப்­ப­டு­வதோ அதன் பொருள்­கோ­டல் சிங்­கள மொழி­யில் இடப்­பட்­ட­தா­கவே இருத்­தல்­வேண்­டும் என்று அந்­தக் கட்­சிக் குறிப்­பிட்­டுள்­ளது.

வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை தொடர்­பில் அந்­தக் கட்சி முக்­கி­ய­மா­கத் தெரி­வித்­துள்­ள­தா­வது
இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்கை என்று குறிப்­பி­டக்­கூ­டாது.

கலந்­து­ரை­யா­டப்­பட்ட உரு­வாக்­கங்­கள், கோட்­பா­டு­கள் பற்­றிய இடைக்­கால அறிக்கை என்றே முன்­பக்­கத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டும். (அறிக்­கை­யில் அந்­தத் திருத்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது) இது தொடர்­பில் அறிக்­கை­யில் குறிப்­ப­டப்­பட்­டுள்ள எந்­த­வொரு மாற்று முன்­மொ­ழி­வுக்­கும் கட்சி உடன்­ப­ட­வில்லை.

தற்­போ­தைய அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் உன்­பாடு உண்டு. இன மற்­றும் மத அடி­ப­டை­யில் அடிப்­படை வாதக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தல் மற்­றும் நடை­மு­றைப்­ப­டுத்­த­லைத் தடுக்­கும் சட்ட ஏற்­பா­டு­கள் அர­ச­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­டு­தல் வேண்­டும்.

அர­ச­மைப்பு நீதி­மன்­ற­மா­னது உயர் நீதி­மன்­றத்­தால் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற நீதி­ப­தி­க­ளால் நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக இருக்­க­வேண்­டும்.

தேசிய கொள்­கை­களை இயற்­று­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்­திற்கு உள்ள அதி­கா­ரம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­லா­காது. வைபவ ரீதி­யான ஆளு­நர் என்­ப­தற்­கும் கட்சி இணங்­க­வில்லை.

தேசிய பாது­காப்­புக்­குக் காணி­க­ளைப் பெறு­வ­தற்கு மத்­திய அர­சுக்­குள்ள அதி­கா­ரம் எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. மாகா­ணங்­க­ளில் மக்­க­ளைக் குடி­ய­மர்த்­து­தல் குறித்து ஒரு கொள்கை தயா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும்.

ஆகிய கருத்­துக்­களை அந்­தக் கட்சி முன்­வைத்­துள்­ளது. வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யு­டன் இந்த விட­யங்­க­ளில் அனே­க­மா­னவை முரண்­ப­டு­கின்­றன.

அத­னா­லேயே கட்­சி­கள் இடை­யி­லான இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்கை என்று குறிப்­பி­டப்­ப­டக்­கூ­டாது என்று கட்சி வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

http://newuthayan.com/story/30811.html

Link to comment
Share on other sites

வடக்கு – கிழக்கு இணைந்தகூட்­டாட்சித் தீர்வு அவ­சி­யம்

கூட்­ட­மைப்­பின் பின்­னி­ணைப்­பில் வலி­யு­றுத்து

 

வடக்கு – கிழக்கு இணைப்பு, கூட்­டாட்சி என்­பன புதிய அர­ச­மைப்­பில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டும் எனத் தெரி­வித்து, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இடைக்­கால அறிக்­கைக்கு பின்­னி­ணைப்பு வழங்­கி­யுள்­ளது.

பின்­னி­ணைப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது:1. இலங்கை மாகா­ணங்­க­ளின் ஒன்­றி­ய­மாக ஒன்­றாக இருத்­தல் வேண்­டும். இலங்கை ஓர் ஐக்­கி­ய­மான – பிரி­ப­டாத மற்­றும் பிரிக்க முடி­யாத நாடு என்­னும் சட்­ட­கத்­தி­னுள் கூட்­டாட்சி அர­சொன்­றாக இருத்­தல் வேண்­டும். அர­ச­மைப்­பின் ஏற்­பா­டு­க­ளுக்கு இணங்க மத்­தி­யும் மாகா­ணங்­க­ளும் தமது தக­வுப் பிர­தே­சங்­க­ளில் முழு­மை­யான அதி­கா­ரத்­தைப் பிர­யோ­கித்­தல் வேண்­டும்.

2. இலங்கை மதச்­சார்­பற்ற நாடாக இருத்­தல் வேண்­டும். பெரும்­பான்­மைக் கருத்­தொ­ரு­மிப்பு பௌத்த மதத்­துக்கு முதன்­மைத் தானம் வழங்­கப்­ப­டு­வ­தற்கு சார்­பாக இருக்­கு­மா­யின், அது தொடர்­பான நிய­தி­க­ளும், நிபந் தனைகளும் குறித்­து­ரைக்­கப்­ப­டு­தல் வேண்­டும்.

3. வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் ஒரு மாகா­ண­மாக அமை­தல் வேண்­டும். வர­லாற்று ரீதி­யாக வடக்­கி­லும் கிழக்­கி­லும் தமிழ் பேசும் மக்­கள் குடி­யி­ருப்­ப­து­டன் கூறப்­பட்ட இரண்டு மாகா­ணங்­க­ளும் அந்த மாகா­ணங்­க­ளி­லுள்ள ஒவ்­வொரு மாவட்­ட­மும் குடித்­தொகை மாற்­றங்­க­ளுக்கு மத்­தி­யி­லும், இன்­றும் பெரு­ம­ளவு தமிழ்ப் பேசும் பிர­தே­சங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

எவ­ருக்­கும் அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தை­யும் அனைத்­துக் குடி­மக்­க­ளும் சம­மான நடத்­து­கை­யைப் பெற்­றுக் கொள்­வ­தை­யும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கப் போதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் உள்­ள­டக்­கப்­ப­டு­தல் வேண்­டும்.

4. மாகா­ணங்­க­ளுக்கு குறித்­தொ­துக்­கப்­ப­ட­ வுள்ள தத்­து­வங்­க­ளும் பணி­க­ளும்மங்­கள -முனசிங்க தெரி­வுக்­கு­ழு­வின் அறிக்கை, அர­ச­மைப்பு சட்­ட­வ­ரைவு, 2000, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வால் நிய­மிக்­கப்­பட்ட பல்­லின நிபு­ணர்­கள் குழு­வின் அறிக்கை மற்­றும் மகிந்த ராஜ­பக்­ச­வால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தும், பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ர­ணவை தவி­சா­ள­ரா­கக் கொண்­ட­து­மான அனைத்­துக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் குழு­வின் அறிக்கை ஆகி­ய­வற்­றின் விதப்­பு­ரை­க­ளுக்கு இசை­வா­ன­தா­கவோ இருக்க வேண்­டும்.

மேற்­படி முன்­மொ­ழி­வு­கள் பற்­றிய பரந்த மற்­றும் கணி­ச­மா­ன­தொரு கருத்­தொ­ரு­மிப்பு கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது.

5. பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைப் பிர­ப­யோ­கிப்­ப­தற்குத் தேவைப்­ப­டும் நிதி­க­ளைத் திரட்­டு­வ­தற்கு அவ­சி­ய­மான தத்­து­வங்­களை மாகா­ணங்­கள் கொண்­டி­ருத்­தல் வேண்­டும்.

6. மாகா­ணம் ஒன்­றின் ஆளு­நர், அரச தலை­வ­ரின் பிர­தி­நி­தி­யாக மத்­திக்­கும் மாகா­ணங்­க­ளுக்­கும் இடை­யில் சீரான தொழில் உற­வு­மு­றை­யொன்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­ப­டு­தல் வேண்­டும் என்­ப­து­டன் மாகா­ணத்­தின் நிறை­வேற்­றுத் தத்­து­வத்­தின் பிர­யோ­கத்­தில் தலை­யி­டு­வ­தற்­கான தத்­து­வ­மெ­த­னை­யும் கொண்­டி­ருத்­தல் ஆகாது. ஆனால் ஆளு­ரின் தத்­து­வங்­கள் அர­ச­மைப்­பில் தெளி­வாக வரை­ய­றுக்க வேண்­டும்.

7. மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த பிர­தி­ நி­தி­க­ளைக் கொண்ட பிர­தி­நி­தித்­து­வக் குழு­வொன்­றாக செனட் (இரண்­டாம் சபை) இருத்­தல் வேண்­டும் என்­ப­து­டன் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளி­லி­ருந்து திருப்பி எடுத்­துக் கொள்­ளல் அல்­லது அவற்­றைக் குறைப்­ப­தற்­கான சாத்­தி­யம் ஆகி­ய­வற்றை மேற்­பார்வை செய்­வ­தற்­கான தத்­து­வங்­கள் இதற்கு அளிக்­கப்­பட்­டி­ருத்­த­லும் வேண்­டும்.
8. அர­ச­மைப்பு மீயு­யர் சட்­ட­மாக இருத்­தல் வேண்­டும் என்­ப­து­டன் அர­ச­மைப்­புத் தொடர்­பான அனைத்து விட­யங்­க­ளை­யும் பொருள்­கோ­டல் செய்­வ­தற்கு அனைத்­துப் பிணக்­கு­க­ளை­யும் தீர்த்து வைப்­ப­தற்­கும் அர­ச­மைப்பு நீதி­மன்­றம் பொறுப்­பாக்­கப்­ப­டுத்­தல் வேண்­டும்.

9. ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தொரு கருத்­தொ­ரு­மிப்பை அடை­வ­தற்­கான நலன்­க­ருதி, இடைக்­கால அறிக்­கை­யில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முதன்­மைக் கோட்­பா­டு­கள் இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தாக இருக்­கு­மா­யின், அவற்­று­ட­னான இணக்­கத்­தைப் பரி­சீ­லிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ராக உள்­ளது.

http://newuthayan.com/story/30837.html

Link to comment
Share on other sites

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

p8-d93fbd333b6839c4d7cd9f0dd7bdc2130f49bb7e.jpg

 

கட்சிகளின் பின்னிணைப்பில் இணக்கப்பாடு இல்லாத தன்மை 
(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப் பிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு பேரவையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை பேரவையின் தலைவர் கரு ஜய சூரிய தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. 

இதன்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அக்குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவை க்கு சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

யின் பாராளுமன்றக் குழு தலைவரும் அமைச்சரு

மான நிமல் சிறிபால டி சில்வா, ஈழமக்கள் ஜன

நாயக்க கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான அநுரகுமார திஸாநயக்க எம்.பி, கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள்.

வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையானது தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 1 மற்றும் 2 ஆகியவற்றினால் உள்ளடக்கப்படும் விடயங்கள், அதிகாரப்பகிர்வு கோட்பாடுகள், அரச காணி, மாகாண நிரல் விடயங்கள் பற்றி மத்திய அரசாங்க சட்டம் இயற்றுதல், பிரதான ஆட்புலம், இரண்டாம் சபை, தேர்தல் முறைமை, ஆட்சித்துறை, அரசியலமைப்பு பேரவை, பெண்களின் பிரதிநிதித்துவம், பொதுமக்கள் பாதுகாப்பு, வழிப்படுத்தற்குழு உறுப்பினர்களின் அவதானிப்புகளும் கருத்துக்களும் ஆகிய 12 பிரிவுகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் அத்தியாயம்1இல் மக்களும்,அரசும், இறைமையும் ஆகிய விடயங்களும் அத்தியாயம் 2 இல் பௌத்த மதம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விடயம் உட்பட மேற்குறித்த பிரிவுகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ள விடையங்களாவன,

மக்களும்,அரசும், இறைமையும்

இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும். அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும்.

இலங்கையானது அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு தத்துவங்களை பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு எனும் குடியரசாக இருத்தல் வேண்டும்.

இந்த உறுப்புரையின் ஏக்கிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும்.

அதேநேரம் அரசியலமைப்பின் 5 ஆம் உறுப்புரையின் கீழ், எந்தவொரு மாகாண சபையோ அல்லது அதிகாரசபையோ இலங்கையினது ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாக பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து விலகித் தனியாவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என்று முன்மொழியப்பட்டள்ளது.

பௌத்த மதம்

9 ஆவது உறுப்புரையில் விதந்துரைத்துள்ள பௌத்த மதம் தொடர்பாக , இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10 ஆம், 14 (1) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என்றும்,

அவ்வாறில்லாத பட்சத்தில், இலங்கையில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும். எல்லா மதங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் மற்றும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கும் அதேவேளையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் என்றும் இரு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மாகாண அதிகாரப் பகிர்வு

அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவானது வழிநடத்தல் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களை இணைத்தல் தொடர்பில், இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மக்களது தீர்ப்பொன்றும் அவசியம் என்ற மேலதிக தேவையுடன் வைத்திருத்தல், இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பில் அங்கீகரித்தல் ஆகிய தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைகளின் கீழ் தொழிற்படும் அரசாங்கத்தின் மூன்றாவது மட்டமொன்றாக உள்ளூர் அதிகாரசபைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். நிதி போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் உள்ளூர் அதிகார சபைகள் தொடர்பிலான மாகாண சபைகளின் மேற்பார்வைத் தத்துவங்களை பாதிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு ஆக்கப்பட வேண்டும்.

மாகாண ஆளுநர் அரசியலமைப்பினால் அவருக்கு குறிப்பாக அதிகாரமளிக்கப்பட்ட விடயங்களை தவிர அமைச்சர்கள் சபையின் மதியுரையின் மீது அவர் தொழிற்படுத்தல் வேண்டும்.

ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தினை வழிநடத்தல் குழு கொண்டிருக்கின்றது.

பொதுவான கரிசனைக்குரிய விடயங்களை கலந்துரையாடுவதற்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் பிரதமரையும் அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்களையும் உள்ளடக்கிய முதலமைச்சர்களின் மாநாடொன்று கிரமமான இடைவேளைகளில் கூடுவதற்கு ஆணையளிக்கப்பட வேண்டும்.முதலமைச்சர்களின் அந்த மாநாட்டுக்கு பிரதமர் தலைமை தாங்குவார்.

இரண்டாம் சபை

மாகாண சபைகளில் இருந்து பெறப்பட்ட 45 உறுப்பினர்கள் (ஒரு மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு அடிப்படையில் ஒவ்வொரு மாகாண சபையும் அத்தகைய மாகாண சபையின் 5 உறுப்பினர்களைப் பெயர் குறித்து நியமித்தல்) மற்றும் மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு அடிப்படையில் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் என 55 உறுப்பினர்களை கொண்ட இரண்டாம் சபையொன்று இருக்க வேண்டும்.

பாராளுமன்றம் மற்றும் இரண்டாம் சபை ஆகிய இரண்டினாலும் விசேட (மூன்றில் இரண்டு) பெரும்பான்மைகளுடன் நிறைவேற்றப்பட்டாலன்றி எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் சட்டவாக்கம் செய்யப்படலாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை

தேர்தல் முறைமையானது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி ஆசனங்களை கொண்டுள்ள அதேவேளை இறுதி முடிவின் விகிதாசாரத்தை உறுதிப்படுத்துவதை எதிர்பார்க்கும் (ஆசன ஒதுக்கீடு) ஒரு கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையாக இருத்தல் வேண்டும்.

பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையானது தொகுதிவாரி அடிப்படையில் 140 (60 சதவீதம்) அத்துடன், இறுதி முடிவு விகிதாசாரத்தை பிரதிபலிப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் இழப்பீட்டு ஆசனங்களாக 93 (40 சதவீதம்) என பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 233 ஆக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை

தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்னும் பொதுவான கருத்தொருமிப்பு காணப்பட்டது. குறித்துரைக்கப்பட்ட நிலைமைகளில் மாகாண சபைகளுடன் தொடர்புடையவை உள்ளடங்கலான தத்துவங்கள் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுதல் வேண்டும். ஜனாதிபதியானவர் நிலையான பதவிக்காலம் ஒன்றுக்கு பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

பிரதமர் நியமனம்

பிரதமரின் நியமனத்திற்கான செயன்முறை தொடர்பில், பிரதமரின் நேரடித் தீர்வு, பிரதமரின் முன் பெயர்குறித்த நியமனம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமை ஆகியன பரிசீலிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு விசேட அதிகாரம்

மாகாண அரசாங்கமொன்று குடியரசின் ஆட்புல எல்லைக்கும் அதன் இறைமைக்கும் தெளிவான ஆபத்தை ஏற்படுத்துகின்ற ஆயுதக் கலவரத்தையோ அல்லது கிளர்ச்சியையோ ஊக்குவிக்கின்ற அல்லது அரசியலமைப்பு மீதான ஒரு சர்வதேச மீறலில் ஈடுபடுகின்ற நிலைமையொன்று தோன்றும் போது பிரதமரின் ஆலோசனையின் பேரிலான ஜனாதிபதி பிரகடனமொன்றின் மூலம் மாகாண நிர்வாகத்தின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்கலாம். அது மட்டுமல்லாது, அவசியமாகும் பட்சத்தில் மாகாண சபையை கலைக்கலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

சாச்சைக்குரிய பிரதான விடயங்கள் தொடர்பாக இத்தகைய முன்மொழிவுகள் காணப்படுகின்ற அதேநேரம் இவ்விடயங்கள் தொடர்பில் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட விடயங்கள் பின்ணிணைப்பாக செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சி

இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும். - தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஒற்றையாட்சி என்ற சொல் குறிப்பிடப்படுவதோடு, அதன் பொருட்கோடல் சிங்கள மொழியில் இடப்பட்டதாகவே இருத்தல் வேண்டும். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

அதிகாரப் பகிர்வின் பிரதான கோட்பாடாக மாகாணம் விளங்குதல் வேண்டும் என்பதை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்கின்ற போதிலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களை இணைத்து மாகாண அலகுகளை உருவாக்குவது தொடர்பில் எவ்வித உரிமையும் வழங்கப்படக் கூடாது என்றும் இன்றளவில் அரசியலமைப்பிலும் மாகாண சபை சட்டத்திலும் உள்ள அவ்வாறு ஒன்றிணைவதற்கான உறுப்புரைகளை அச் சட்டக் கட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அடிப்படைவாத கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலை தடுக்கும் சட்ட ஏற்பாடுகளை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அது உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்படுகின்ற நீதிபதிகளை கொண்டதொரு நீதிமன்றமாக இருக்க வேண்டும்.

மாகாண ஆளுநர் சம்பிரதாயபூர்வமான கடமையை மாத்திரம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தாங்கள் இணங்கவில்லை.

தேசிய பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான காணிகள் பற்றி மேற்கொள்ளப்படும் நிறைவேற்றுத் தீர்மானங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவாலுக்கு உட்படுத்தப்படக் கூடாது.

அதுமட்டுமல்லாது, தற்போது காணப்படும் அளவிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை முழுமையாக நீக்குவது தொடர்பில் ஆட்சேபம் வெ ளியிடுகின்றோம் என்று அக்கட்சி முன்மொழிவுகளை மேற்கொண்டுள்ளதோடு இக்கட்சியின் பிரதிநிதிகளான அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா, ஏ.டி,சுசில் பிரேமஜெயந்த, டிலான் பெரேரா ஆகியோர் சமர்ப்பிப்புக்களை செய்துள்ளனர்.

ஜே.வி.பி.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக நீக்கப்பட வேண்டும் எனினும், அதற்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை உருவாக்கக் கூடாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் நிலையில் மாகாண சபைகளை பேணிவரும் போது ஆளுநரின் அதிகாரங்களை பலவீனப்படுத்தக் கூடாது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களை ஒரு அலகாக ஒன்றிணைப்பதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக்கூடாது.

அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை தனியாக ஸ்தாபிப்பதற்கு பதிலாக தற்போது காணப்படும் உயர்நீதிமன்றத்தையே விஸ்தரித்து அமுல்படுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநயக்க, பிமல் ரட்நாயக்க ஆகியோர் சமர்ப்பிப்புக்களை செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை மாகாணங்களின் மாநிலங்களின் ஒன்றியமாக ஒன்றாக இருத்தல் வேண்டும். இலங்கை ஓர் ஐக்கியமான பிரிபடாத நாடு என்னும் சட்டகத்தினுள் சமஷ்டி அரசொன்றாக இருத்தல் வேண்டும்.

இலங்கை மதச் சார்பற்ற நாடொன்றாக இருத்தல் வேண்டும். பெரும்பான்மையான கருத்தொருமிப்பு பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுவதற்கு சார்பாக இருக்குமாயின், அது தொடர்பான நியதிகளும் நிபந்தனைகளும் குறித்துரைக்கப்படுதல் வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக மாநிலமாக அமைதல் வேண்டும். மாகாண ஆளுநராக இருப்பவர் மாகாணத்தின் நிறைவேற்றுத் தத்துவத்தின் பிரயோகத்தில் தலையிடுவதற்கான தத்துவமெதனையும் கொண்டிருக்கலாகாது.

ஆளுநரின் தத்துவங்கள் அரசியலமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும்.

மாகாணங்கள் மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளை கொண்ட பிரதிநிதித்துவக் குழுவொன்றாக செனட் (இரண்டாம் சபை) இருத்தல் வேண்டும் என்ற முன்மொழிவுகள் உள்ளடங்கிய கூட்டமைப்பின் யோசனையை தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய

சமஷ்டி முறையென்ற கருத்தானது பெரும்பாலும் அரசியல் கோரிக்கையாகவும் போராட்டச் சுலோகமாகவுமே இருக்கின்றதே தவிர, உண்மையான சிக்கல்களுக்காகவும் தேவைகளுக்காகவும் பெற்றுக்கொடுக்கப்பட்ட தர்க்க ரீதியான தீர்வு கிடையாது.

இலங்கையின் இன ரீதியான பிரச்சினைகளையும் அபிலஷைகளையும் தீர்ப்பதில் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மறுசீரமைப்புகள் பயனுள்ளதாக அமையுமே தவிர மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாரப்பகிர்வு கிடையாது.

உள்ளூராட்சி ஆளுகைப் பிரதேசத்தினையே பன்முகப்படுத்தலுக்கான அலகாக நாங்கள் கருதுகின்றோம்.

அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கான தேவை எழாது என்பது எமது நிலைப்பாடு.

இரண்டாவது சபையொன்றை ஸ்தாபிப்பது காலத்தையும் பணத்தையும் தேவையின்றி வீணடிக்கும் விடயமாகவே அமையும் உள்ளிட்ட முன்மொழிவுகளை ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சமப்பித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சியானது ஒற்றை ஆட்சி அரசு என்பது மும்மொழிகளிலும் இடம்பெறவேண்டும்.

ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது உட்பட உப குழுக்களின் அறிக்கைகள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், பொதுமக்கள் கருத்துக்கள் மறுக்கப்பட்டுள்ளமை, இராணுவத்தினர் பாதுகாக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விமர்சன ரீதியிலான கருத்துக்களையும் ஒட்டுமொத்தமாக இடைக்கால அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் வகையிலுமே கூட்டு எதிரணியின் முன்மொழிவுகள் அமைந்துள்ளன. கூட்டு எதிர்க் கட்சி சார்பில் தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த சமர்ப்பிப்புக்களைச் செய்துள்ளனர்.

நான்கு கட்சிகளின்

கூட்டு முன்மொழிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினது முதன்மை அவதானிப்புகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றினது கூட்டு முன்மொழிகள் உள்ளடங்கிய சமர்ப்பிப்பை அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்துள்ளார்.

அதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒரு மாகாண சபையாக இணைப்பதற்கான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கின்றது.

தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது மாற்றங்களின்றி அதே வடிவத்திலேயே இருக்க வேண்டும் என்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.

இலங்கை 26 நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு கரையை அடிப்படையாகக் கொண்ட ஒலுவில் மாவட்டம் 26 ஆவது நிர்வாக மாவட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரும்புகின்றது என்றாவான முன்மொழிவுகள் கட்சியை மையப்படுத்தியுள்ளன.

அதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றினது கூட்டு முன்மொழிவில்,

எந்தவொரு மாகாண சபையோ அல்லது ஏதாவது அரசியல் கட்சியோ அல்லது ஏதாவது அமைப்போ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வௌியிலோ நேரடியான அல்லது மறைமுகமான வழிகள் மூலம் இலங்கையில் ஏதாவது அரசியல் அல்லது ஏனைய இலக்குகளை அடைவதற்கு ஆயுதச் செயற்பாட்டினை நோக்கிய முன்னெடுப்பினை முயற்சிக்கவோ அல்லது ஆதரித்து வாதாடவோ கூடாது.

இலங்கை யுனைடெட் ரிபப்ளிக் ஒப் சிறிலங்கா என அறியப்படும் சிறிலங்கா எக்சத் ஜனரஜய எனச் சிங்கள மொழியிலும் ஐக்கிய இலங்கை குடியரசு என தமிழ் மொழியிலும் அது அறியப்படும்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் மூலமான முன்மொழிவுகளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். 3 உப ஜனாதிபதிகள் இருத்தல் வேண்டும். அவர்கள் சிங்களம், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையத் தமிழர் ஆகிய சமுதாயங்களை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் . உப ஜனாதிபதி பதவியை வகிப்போர் ஜனாதிபதியாக இருப்பவரின் சமுதாயத்தினை சாராதவராக இருத்தல் வேண்டும்.

பாராளுமன்றம் இரு சபைகளை கொண்டிருத்தல் வேண்டும். அதில் முதலாவது சபை 245 உறுப்பினர்களையும் இரண்டாவது சபை இனத்துவ அடிப்படையில் 36 உறுப்பினர்களையும் (18 சிங்களம், 6 இலங்கைத் தமிழர்கள், 6 முஸ்லிம்கள் மற்றும் 6 மலையக தமிழர்கள்) கொண்டிருத்தல் வேண்டும்.

அரசியலமைப்பின் 18 ஆவது உறுப்புரையின் தற்போதைய வடிவமானது சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருக்கும் என திருத்தப்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் அவ்வாறே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு எண்ணக்கரு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதுள்ளிட்ட 13விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவைச் செய்துள்ளார்.

மேலும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலமைப்பு கோட்பாடுகள், சனசமூக சபைகள், அரச காணிகள், தேர்தல் முறை, இரண்டாவது சபை, நிறைவேற்று பதவி ஆகிய விடயப்பரப்புக்கள் தொடர்பிலான முன்மொழிவுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-1

Link to comment
Share on other sites

862_content_ranil_thinakkural_22-09-2017

 

தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 1 மற்றும் 2 ஆகியவற்றினால் உள்ளடக்கப்படும் விடயங்கள்:

உறுப்புரைகள் 1 மற்றும் 2


* இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாயிருப்பதோடு, பாராதீனப்படுத்த முடியாததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.


* இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும்.


* பிரிந்து செல்லுதலை (நாட்டைக் கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்


* அதி கூடிய பகிர்வு வழங்கப்படல் வேண்டும்.


* அரசியலமைப்பு இலங்கையின் மீயுயர் சட்டமாயிருத்தல் வேண்டும்.
அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் (தேவைப்படுமிடத்து) மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.


விடயங்கள்:


ஜனாதிபதி அரசியலமைப்பு சபையை தாபிப்பதற்கான தீர்மானம் பற்றி உரையாற்றுகையில்; தெற்கில் உள்ள மக்கள் "பெடரல்' (Federal)  எனும் பதம் தொடர்பாக அச்சமடைந்திருக்கும் வேளையில் வடக்கில் மக்கள் "யுனிற்றரி' (Unitary) எனும் பதம் தொடர்பிலும் அச்சமடைந்திருந்தனர் எனக் கூறினார்.

அரசியலமைப்பானது மக்கள் அச்சமடைய வேண்டிய ஆவணமொன்று அல்ல. "யுனிற்றரி ஸ்ரேற்' (Unitary State) எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடியதாயுள்ளது. எனவே, ஆங்கிலப் பதமான "யுனிற்றரி ஸ்ரேற்' (Unitary state) இலங்கைக்குப் பொருத்தமற்றதாயிருக்கும்.


பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான "ஏகிய இராஜ்ஜிய' நன்கு விபரிக்கிறது. இது தமிழ் மொழியில் "ஒருமித்த நாடு' என்பதற்கு சமனாகும்.


இத்தகைய சூழமைவுகளில் பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


ஸ்ரீலங்கா (இலங்கை) அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு எனும் குடியரசாகும். 


இந்த உறுப்புரையின் ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன் அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.


உறுப்புரை 3
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


 இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். அத்துடன் ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும். 


உறுப்புரை 4
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


மக்களின் சட்டமாக்கல், ஆட்சித்துறை, நீதி முறைத் தத்துவங்கள் அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறாக பிரயோகிக்கப்படல் வேண்டும். 


உறுப்புரை 5
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


 இலங்கையின் ஆள்புலம், அரசியலமைப்பின் அட்டவணை ஙீஙீஙீ இல் வழங்கப்பட்டவாறாக மாகாணங்கள் உள்ளடங்கலாக மற்றும் அதன் ஆள்புல நிலப்பரப்புகள் மற்றும் வான் பரப்பு, அத்துடன் எதிர்காலத்தில் பெறப்படக் கூடியவாறான அத்தகைய மேலதிக ஆள்புலம் உள்ளடங்கலாக சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவாறாக அதன் புவியியல் ஆள்புலத்தைக் கொண்டிருக்கும்.

இலங்கை அதன் ஆள்புலத்திற்குரிய சட்டத்தினால், வழக்கத்தினால் மற்றும் பயன்பாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.


எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை இலங்கையின் ஆள்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரடகனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து விலகித் தனியாவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது.


உறுப்புரை 6
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


 இலங்கையின் தேசியக் கொடி இரண்டாம் அட்டவணையில் குறித்து வரையப்பட்டிருக்கும் சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும். 
கொடி தற்போது அங்கீகரிக்கப்படுகின்றவாறு இருத்தல் வேண்டும்.


உறுப்புரை 7
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


இலங்கையின் தேசிய கீதம் "ஸ்ரீலங்கா மாதா/ ஸ்ரீலங்கா தாயே' என்பதாக இருத்தல் வேண்டும். அதன் சொற்களும் இசையமைப்பும் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்.


தேசிய கீதம் அரசியலமைப்பின் சிங்கள மற்றும் தமிழ் வடிவங்களில் தற்போது அங்கீகரிக்கப்படுகின்றவாறு இருத்தல் வேண்டும்.


உறுப்புரை 8
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


 இலங்கையின் தேசிய தினம் பெப்ரவரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும். 


அத்தியாயம் II /உறுப்புரை 9
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:


இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க 10 ஆம் 14(1) (உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.


அல்லது


இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும். எல்லா மதங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் மற்றும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.


II. அதிகாரப் பகிர்வு கோட்பாடுகள்
1. துணையாக்கக் கோட்பாடு பிரயோகிக்கப்படும்


வழிப்படுத்தற்குழு, உபகுழுக்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் குழுவினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சமர்ப்பிப்புகளில் துணையாக்கற் கோட்பாடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. (கீழ் மட்டத்தில் கையாளப்பட வேண்டிய ஏதுவாக இருந்தாலும் அதிகாரமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்).


மத்திய  சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கை, உள்ளூர் அதிகார சபைகளுக்கும் அதிக தத்துவமும் அதிகாரமும் பகிரப்பட வேண்டுமென்று விதந்துரைக்கிறது.


அரசாங்கத்தின் மூன்று மட்டங்களுக்குமிடையில் விடயங்களையும் பணிகளையும் ஒதுக்குவது பற்றி தீர்மானிக்கும் போது குறித்த கோட்பாடு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.


2. மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக இருக்கும்
இதுவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையாகும். முதலமைச்சர்கள் மாகாண சபையின் மற்றும் பல்வேறு உபகுழுக்களின் சமர்ப்பிப்புகள் இந்த அடிப்படையிலேயே முன்வைத்துள்ளன.

அரசியல் கட்சிகளும் இந்தக் கோட்பாட்டை பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ளன. மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கையில் மத்திய  சுற்றயல் உறவுகள் தொடர்பான உபகுழு அறிக்கையில் குறிப்பாக விதந்துரைக்கின்றன.


அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை வழிப்படுத்தும் குழு ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்பு (அட்டவணையூடாக) புவியியல் பரப்பு/ ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அதேபோன்று பிரதான ஆட்புலத்தின் புவியியல் பரப்பு ஆகியவற்றை அடையாளம் காணவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகிறது.


பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன :
இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் ங்உறுப்புரை 154அ(3)சி உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.


இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும்.


சமூகப் பேரவைகள்


அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு புவியியல் பிரதேசங்களிலும், அத்தகைய பிரதேசங்களுள் சிறுபான்மையினராகவுள்ள சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆக்கப்படுதல் வேண்டும்.


2.1 மாகாண சபைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு


அத்தகைய மாகாணங்களின் நிறைவேற்றுப் பகுதிக்குள் வரும் விடயங்கள் தொடர்பாக மாகாணங்களுக்கிடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு பற்றி தெளிவான குறிப்பீடுகளை அரசியலமைப்பில் உள்ளடக்க விதந்துரைக்கப்பட்டது.


2.2 பிரிந்து தனியாவதற்கெதிரான காப்பீடுகள்


பிரிந்து தனியாவதற்கெதிரான காப்பீடுகளையும் உள்ளடக்கிய ஒரு வாசகத்தை (வாசகங்களை) அரசியலமைப்பு உள்ளடக்க வேண்டுமென விதந்துரைக்கப்படுகின்றது.


இலங்கை அரசு "பிரிக்கப்படாதது மற்றும் பிரிக்கப்பட முடியாதது' என அரசியலமைப்பு குறப்பிட்டுக் கூறுதல் வேண்டும்.


"எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகாரசபை, இலங்கையின் ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ, இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது' இந்த அரசியலமைப்பு பொதுமக்களின் பாதுகாப்புடன் போதுமானளவு காப்பீடுகளை வழங்கும். யோசனை கோட்பாடுகள்/ உருவாக்கங்கள் என்பன இந்த அறிக்கையின் 44 ஆம் பக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளன.


3. உள்ளூரதிகார சபைகள்


3.1 மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ளூர் அதிகார சபைகள் 3 ஆம் மட்டமாக இருத்தல்


மாகாண சபைகளின் கீழ் தொழிற்படும் அரசாங்கத்தின் மூன்றாவது மட்டமொன்றாக உள்ளூர் அதிகாரசபைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும், நீதி போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பிலான மாகாண சபைகளின் மேற்பார்வைத் தத்துவங்களைப் பாதிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு ஆக்கப்பட வேண்டுமெனவும், விதந்துரைக்கப்படுகின்றது.

அத்தகைய உள்ளூர் அதிகார சபைகள் சட்டவாக்கத் தத்துவத்தைப் பிரயோகிக்காத அதேவேளை, சட்டத்தால் விதந்துரைக்கப்பட்டவாறாக அவை மத்திய மற்றும் மாகாணங்கள் ஆகிய இரண்டிலும் குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்கான அமுலாக்கல முகவராண்மையொன்றாகக் காணப்படும்.


3.2 உள்ளூரதிகார சபைகளுடன் தொடர்பான சட்டகச் சட்டவாக்கம்


உள்ளூரதிகார சபைகளின் யாப்பு, தேர்தல், வடிவம், கட்டமைப்பு மற்றும் அதிகாரங்கள் தொடர்பாக சட்டகச் சட்டவாக்கம், சீர்மை என்ற விடயங்களை விதிப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் விதந்துரைக்கப்பட்டது.

எனினும் உள்ளூரதிகார சபைகளை தேசிய நியமம்/ சட்டகச் சட்டவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தரமுயர்த்தல் மாகாண சபைகளின் அதிகாரத்துக்குள் இருத்தல் வேண்டும். பல்வேறு வகையான உள்ளூரதிகார சபைகள் மற்றும் அவற்றின் வேறுபடும் அதிகாரங்களும் பணிகளும் பற்றிய மூலப்பிரமாணங்கள் தொடர்பாக ஏற்பாடுகளை வழங்குவதற்கு ஒரு சட்டம் சட்டமாக்கப்படலாம்.


சனத்தொகை / நிலப்பரப்பு போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட, இரண்டு வகையான உள்ளூர் அதிகாரசபைகள் (உதாரணம். மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள்) மாத்திரமே இருத்தல் வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது. வெவ்வேறு வகைகளிலான உள்ளூர் அதிகார சபைகளின் தத்துவங்களும் பணிகளும் (அமுலாக்கற் தத்துவங்கள் உள்ளடங்கலாக) வேறுபடும். அத்தகைய வகைப்படுத்தல்/ தத்துவங்களின் விபரங்கள் ஆக்கப்படவுள்ள சட்டக சட்டவாக்கத்தினால் தீர்மானிக்கப்படும்.


4. அரசாங்கத்தின் பல்வேறுபட்ட மட்டங்களுக்கான அதிகாரப் பகிர்வு தெளிவாகவும் ஐயமற்றதாகவும் இருக்க வேண்டும்.


4.1 வழிப்படுத்தும் குழு முன்னிலையில் சமர்ப்பிப்புகளை முன்வைத்த முதல் அமைச்சர்கள் மத்தியில் உள்ளடங்கலாக அதிகாரிகள் தெளிவாகவும் ஐயமின்றியும் பகிரப்பட்டு தற்போதுள்ள ஒருங்கியை நிரல் இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்ற பொதுவான இணக்கப்பாடு உள்ளது. பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையேயான உறவுகள் பற்றிய தற்காலிக உப குழுவின் அறிக்கையிலும் இது ஆலோசிக்கப்பட்டது.


4.2 இரண்டு நிரல்களை அறிமுகப்படுத்துமாறு விதந்துரைக்கிறது, அதாவது தேசிய நிரல் மற்றும் மாகாண சபை நிரல்சி அத்துடன் உள்ளூர் அதிகார சபை நிரல்.
தேசிய நிரலொன்றும் (ஒதுக்கிய நிரல்) மாகாண நிரலொன்றும் இருத்தல் வேண்டுமென்ற கருத்தை வழிப்படுத்தும் குழு கொண்டிருந்தது. ஒருங்கியை நிரலொன்றில் வைத்துக்கொள்ள வேண்டிய விடயப்பரப்புகளைக் குறித்துரைக்கும் ஒருங்கியை நிரலொன்றை வைத்துக் கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இலங்கையின் இறைமை, ஆள்புல எல்லை, பாதுகாப்பு/ தேசிய பந்தோபஸ்து மற்றும் பொருளாதார ஐக்கியம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான விடயங்களைத் தேசிய நிரல் உள்ளடக்கும்.


4.3 தேசிய நிரலிலுள்ள தெரிவு செய்யப்பட்ட விடயங்கள் மீதான மாகாணங்களின் தொழிற்பாடுகளின் அமுலாக்கத்தை பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யலாம்.


4.4 பாராளுமன்றம் அல்லது மாகாண சபைகள், தமது நோக்கெல்லையினுள் வரும் குறித்துரைக்கப்பட்ட தொழிற்பாடுகளின் அமுலாக்கம் உள்ளூர் அதிகாரசபைகளால் மேற்கொள்ளப்படுவதற்கு சட்டத்தினால்/ நியதிச்சட்டத்தினால் ஏற்பாடு செய்யலாம்.

 

http://www.thinakkural.lk/article.php?article/lc7lrfjgpq410577143919d19072nyhhp234297079f075357988f3bqvomo

 

Link to comment
Share on other sites

 

ஒற்றையாட்சித் தீர்வை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – யாழ். சிவில் சமூக அமைப்பு!

Kuruparan.jpg

 

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் கபடத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த ஜனநாயக மறுப்புக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது எனவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையானது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வறிக்கை தொடர்பாக நேற்று யாழ் ஊடக அமையத்தில் சிவில் சமூக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிவில் சமூக அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான குருபரன்,

தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி அடிப்படையிலான தீர்வு வருமாக இருந்தால் அதனை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனத்தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=79476

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் கோரிக்கையும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும்

 

புலி வரு­கி­றது, புலி வரு­கி­றது என்­பது போல் புதிய அர­சியல் யாப்­பிற்­கான இடைக்­கால அறிக்கை வரு­கி­றது என்ற சொற்­பதம் கடந்த வரு­டத்தின் நடுப்­ப­கு­தியில் தொடங்கி இலங்கை திரு­நாட்டை ஆக்­கி­ர­மித்து இருந்­தது. ஒரு வழி­யாக கிட்­டத்­தட்ட ஓராண்­டுக்கு பின்னர் கடந்த 21 ஆம் திகதி அர­சியல் நிர்­ணய சபையில் அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து ஒக்டோபர் மாதத்தில் விவாதம் நடை­பெறும் என்றும் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 

முக்­கிய மூன்று விட­யங்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில், பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைப்பு மற்றும் மாகா­ண­சபை உள்­ளிட்ட தேர்தல் முறை­க­ளுக்­கான மறு­சீ­ர­மைப்பு ஆகி­யவை நிறை­வேற்­றப்­பட்டு விட்­டது. மூன்­றா­வது விட­ய­மான இனப்­பி­ரச்­ச­ினைக்கு நிரந்­தர தீர்வை முன்­வைப்­பது மட்­டுமே எஞ்­சி­யி­ருந்த விட­ய­மாக இருந்­தது. இந்த விட­யத்தில் புதிய அர­சியல் யாப்பு உரு­வாக வேண்டும் என்றும் இருக்­கின்ற யாப்பில் திருத்­தங்­களை மேற் கொண்டால் போது­மா­னது என்றும் பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நடை­பெற்று வந்­தன. இந்த வாதங்­களை முன்­வைத்­த­வர்கள் சிங்­கள பௌத்த மேலாண்­மை­வா­தி­களும், அவர்­களின் தயவால் ஆட்சி நடத்­து­­பவர்­களும் என்­பதும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. 

ஒரு சில முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், வடக்கு - கிழக்கை இணைக்கக் கூடாது என்றும், ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் 19 ஆவது திருத்­தத்திற்கு மேலாக குறைக்­கப்­படக் கூடாது என்றும் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறித்து அவர்கள் பேசி­யி­ருப்­பது ஒரு பெரிய விட­ய­மல்ல. ஆனால் அவர்­க­ளது முக்­கி­ய­மான கோரிக்கை என்­பது வடக்கும், கிழக்கும் இணையக் கூடாது என்­பதே.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு என்­பதும், அந்த தேசிய இனத்தின் அடை­யா­ளத்தை கட்டிக் காப்­ப­தற்கும், அந்த தேசிய இனத்தின் ஆட்­பு­ல­னான வடக்கும்- கிழக்கும் இணைந்து இருப்­பது ஒன்றே நிரந்­தர தீர்­வுக்கு வழி­வ­குக்கும். இதனை பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் தலை­மைகள் காத்­தி­ர­மாக எடுத்துக் கூற  வேண்­டிய நிலையில், அதனை இடைக்­கால அறிக்­கையில் வெறு­மனே ஒரு பின்­னி­ணைப்பில் சேர்த்துக் கொண்­டுள்­ள­தோடு தமது கட­மை­களை சுருங்கிக் கொண்­டுள்­ளனர்.

வடக்கு- கிழக்கு இணைப்பு என்­பது சர்­வ­தேச ஒப்­பந்­தத்தின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட விடயம். கிட்­டத்­தட்ட ஒரு தசாப்­த­காலம் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஷ்டி அலகை நிறு­வ­தற்­கா­கவும், அதற்கு வாய்ப்பு இல்­லாத பட்­சத்தில் சர்­வ­தேச நிய­தி­க­ளுக்­குட்­பட்டு தமிழ்த் தேசிய இனம் தமக்­கென ஒரு இறை­மை­யுள்ள அரசை நிறுவிக் கொள்­வதை நோக்­க­மாக கொண்டும் இது­வரை காலமும் போரா­டி­யது. இதில் இலட்­சக்­க­ணக்­கான உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. பல இலட்­சக்­க­ணக்­கானோர் உயிர்­வாழ்­வ­தற்­காக நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர். இன்றும் கூட பல இலட்­சக்­க­ணக்­கானோர் தங்­க­ளது வீடு­க­ளையும், இதர உட­மை­க­ளையும் இழந்து சொந்த நாட்­டி­லேயே அகதி வாழ்க்கை வாழ்­கின்­றனர். இந்த காயங்­க­ளுக்கு மருந்­தி­டு­வ­தற்­கா­கவே சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்­தத்தின் பேரில், இனியும் கொடு­மைகள் தொடரக் கூடாது என்ற நோக்கில் புதிய அர­சியல் யாப்பின் ஊடாக ஒடுக்­கப்­பட்ட தேசிய இனத்­திற்கு தீர்வு வழங்க வேண்­டிய நிர்­ப்பந்­தத்தில் இலங்கை அர­சாங்கம் இருக்­கி­றது.

தனி­நாடு கேட்டு போரா­டிய ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதி செய்து கொள்­ளவும், தனது உரி­மை­களை நிலை­நாட்டிக் கொள்­வ­தற்கும், தமது ஆட்­புல ஒரு­மைப்­பாட்டு பிர­தே­சத்தில் தமக்­கு­ரிய அர­சியல் உரி­மை­யுடன் வாழ்­வ­தற்கும், தமது பிர­தேச அபி­வி­ருத்­தி­களை தாமே முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான உரி­மை­யையும் வலி­யு­றுத்­து­கி­றது. அதனை வழங்க வேண்­டி­யதும் அதற்கு அனு­ச­ர­ணை­யாக ஏனை­ய­வர்­களை இணங்கச் செய்ய வேண்­டி­யதும் இது­வரை காலமும் தமிழ் தேசிய இன­த்தை அடக்கி ஆண்­ட­வர்­களின் பாரிய பொறுப்பும் கட­மையும் ஆகும். ஆயுத போராட்ட காலத்தில் இணைந்த வடக்கு - கிழக்கில் ஒரு சமஷ்டி அலகை வழங்க தயா­ராக இருந்­த­வர்கள் இன்று அதி­லி­ருந்து விலகிச் செல்­வது என்­பது பல­ரையும் முகம் சுழிக்கச் செய்­தி­ருக்­கி­றது. 

தமிழ் மக்­களின் வீரம் செறிந்த போராட்­டத்­திற்கு, சாத்­வீக வடிவில் அழுத்­த­மாக செயல் வடிவம் கொடுக்க வேண்­டிய தமிழ் தலைமை குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இந்த விட­யத்தில் செயல் திற­னற்­ற­வரா­கவே தென்­ப­டு­கிறார். தென்­னா­பி­ரிக்க விடு­தலைப் போராட்­டத்தில் ஒரு மித­வாத அர­சியல் தலை­வ­ராக நெல்சன் மண்­டேலா எவ்­வாறு உறு­தி­யுடன் இருந்து, தனது கொள்­கையில் சம­ரசம் இன்றி ஆயுதப் போராட்­டத்­தையும் பக்­க­ப­ல­மாக இணைத்துக் கொண்டு வெற்றி பெற்­றாரோ அதைப் போன்று தனக்கு பின்னால் அணி­தி­ரண்டு இருந்த மக்கள் பலத்தைக் கொண்டு அர­சாங்­கத்­துடன் பேரம் பேசும் சக்­தியை கூட்­ட­மைப்பின் தலைவர் உரு­வாக்­கி­யி­ருக்க வேண்டும். இந்த இடத்தில் அவ­ரது செயற்­பாடு திருப்­தி­க­ர­மாக இல்லை.

இத்­த­கைய பின்­பு­லத்­தி­லேயே அர­சியல் தீர்வை மட்­டுமே மைய­மாகக் கொண்ட புதிய அர­சியல் யாப்­பிற்­கான இடைக்­கால அறிக்கை வந்­தி­ருக்­கின்­றது. இது விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டுமா?, அந்த விவா­தங்கள் இத­ய­பூர்­வ­மாக  நடை­பெ­றுமா?, பர­ஸ்­பர சகிப்­புத்­தன்மை- விட்டுக் கொடுப்பு- உண்­மை­யான தேச­பக்தி- பாதிக்­கப்­பட்ட மக்கள் அமை­தி­யான வாழ்­வ­தற்­கான உறுதி மொழி ஆகி­ய­வற்றைக் கொண்­ட­தாக அமை­யுமா? என பல கேள்­விகள் எழு­கின்­றன. இந்தக் கேள்­வி­க­ளுக்கு கார­ண­மாக அண்­மையில் ஜனா­தி­பதி ஐ.நா பொதுச் ­ச­பையில் ஆற்­றிய உரையும் அமை­கி­றது. எல்­லா­வற்­றையும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி ஊடா­கவும், மேம்­போக்­கான ஜன­நா­ய­கத்தின் ஊடா­கவும் மாற்றி விடலாம் என்று நினைப்­பது ஒரு போதும் பிரச்­ச­ினை­க­ளுக்கு தீர்­வாக அமை­யாது.  

பல்­லின கலா­சார மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில் மதச்­சார்­பின்மைக் கொள்­கையும், பல்­லின கலா­சா­ரங்­க­ளையும் சமத்­து­வ­மாக பார்க்­கின்ற ஒரு பார்­வை­யுமே அனை­வ­ரையும் அந்த நாட்டு குடி­மக்­க­ளாக உணர வைக்கும். அந்த வகையில் இந்த நாட்டில் வாழும் அனை­வரும் இலங்­கையர் என்ற செருக்­கு­டனும், பெரு­மை­யு­டனும் வாழ்­வ­தற்கு இந்த இலங்கைத் தீவும் மத­சார்ப்பு இன்­மை­யையும், பல்­லின கலா­சா­ரத்தை பேணும் முறை­மை­யையும் வளர்த்துக் கொள்­வது அவ­சியம். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் அதில் இந்த விட­யங்கள் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். ஆனால், புதிய அர­சி­ய­ல­மைப்பின் மத விவ­கா­ரத்தில் பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை அளிப்­பது என்­பது இந்த உத்­த­ர­வா­தத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.

புதிய அர­சியல் யாப்போ அல்­லது யாப்பு திருத்­தமோ எது­வென்­றாலும் கடந்த ஒரு தசாப்த கால­மாக நீடித்து வரு­கின்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்­டத்­திற்­கான தீர்­வாக அமை­ய­வேண்­டுமே தவிர, மீண்டும் மீண்டும் பிரச்­ச­ினை­களை கிளப்பக் கூடிய, விவாதத்தைத் தூண்டக் கூடிய விடயங்களை முன்வைப்பதால் எந்தப் பயனும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை. கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு சகல தரப்பினருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. அடிமைப்படுத்தியவர்களுக்கும், அடிமை வாழ்வை வாழ்பவர்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர நல்லிணக்கத்தையும், சகோதரத்தையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு.

 

இதனை நழுவ விடாமலும், வழுவிச் சென்று விடாமலும் காப்பாற்ற வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை. இதற்கு தனது கொள்கைகளிலும், விட்டுக் கொடுப்பின்றி இருக்கின்ற தமிழ் சந்ததியும், எதிர்கால சந்ததியும் இந்த நாட்டை தமது தாய் நாடாக போற்றி வாழ்வதற்கு உகந்த வழியை காண வேண்டியது தமிழ் தலைமைகளின் கடமை. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.வடக்குக் கிழக்கு இணைப்பு இல்லை.
2.சமஷ்டி என்ற சொல்லுக்கே இடமில்லை.
3.தமிழர்தாயகம்.தன்னாட்சி,சுயநிர்ணய உரிமை என்பன கிடையாது.
4.பௌத்தத்திற்கே முன்னுரிமை.
5.என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் ஒற்றையாட்சி என்றே பொருள் கொள்ளப்படும் அரசியலமைப்பு.
6.மாகாணங்களே உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு. இந்த மாகாணங்களின் அதிகாரம் உப்படிப்பட்டது என்பது ஏற்கனவே அறிந்ததுதான். மாகாண சபையின் எந்த முயற்சியையம் மத்திய அரசின் ஆளுநர் கட்டுப்படுத்தலாம்.
7. இந்த மாகாணசபையை அதிகாரமற்றது என்று தமிழரசுக்கட்சியே ஒருகாலத்தில் மாகாணசபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.
8.காணி ,பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது.
 அற்ப சொற்ப சலுகைகளுக்குhக சம்பந்தனும் ,சுமத்திரனும் அரசாங்கத்திடம் தமிழ்மக்களின் உரிமைகளை அடகு வைத்து விட்டார்கள். அதனை தமிழருக்கட்சியின்  உறுப்பினர்கள் அடுத்த தேர்தலிலும் சீற் வாங்குவதற்காக பேசாமடந்தைகளாகி ஊமையாகி நிற்கிறார்கள்.
தமிழருக்கட்சியை தமிழர் அரசியல் அரங்கிலிருந்து தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது.
இந்த அரசியலமை;பு சிறிலங்காவுக்கு உள்ளே தமிழ் பிரச்சினை;களைத் தீர்க்க முடியாது என்பதையும் வெளிச்சக்திகளின் உதவியுடன் அதனைப் பெறுவதற்குப் போராட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது.

Link to comment
Share on other sites

ஒற்றையாட்சி அடிப்படையிலான அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் சிங்கள மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் கபடத்தனமான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளமையை காட்டுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையம், இலங்கை ஆட்சியாளர்களின் ஜனநாயக மறுப்புக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உடந்தையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் சிவில் சமூக அமையம் சார்பாக அமையத்தின் ஊடகபேச்சாளரும், சட்ட விரிவுரையாளருமான கு.குருபரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒற்றையாட்சி அடிப்படையிலான அரசியலமைப்பு வருமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Unanimity-based-constitution-is-not-acceptable

Link to comment
Share on other sites

வழங்கும் அதிகாரத்தை திருப்பி எடுப்பதற்கு புதிய யாப்பில் ஏற்பாடு – ஜயம்பதி!

 

Link to comment
Share on other sites

புதிய அரசியலமைப்புக்கு தெளிவான பாதை திறப்பு

 
 

 

நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்புச் சபையின் வழி நடத்தல் குழு அதன் இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் கூடிய அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பித்திருக்கின்றது. குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 112 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களில் வழிநடத்தல் குழுவில் இனங்கப்பட்ட விடயங்களும், அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கி 12 பிரிவுகளின் கீழ் முன்மொழிவுகள் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இது எந்தவொரு தரப்பினரதும் தனிப்பட்ட ஆவணமல்ல, ஒவ்வொரு தரப்பும் முன்வைத்த யோசனைகளை உள்வாங்கி இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கின்றபோது இலங்கை ஒரே நாடு என்ற கோட்பாட்டை சகல கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டில் ஏற்றுக்கொண்டிருப்பதை கவனத்தில்கொள்ள முடிகிறது. பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிகளும், குழுக்கள் மற்றும் அமைப்புகளும் ஏற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து பலம் வாய்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த இடைக்கால அறிக்கையானது ஒரு சட்டமூலம் மாத்திரமே சட்டபூர்வ ஆவணமல்ல இறுதி ஆவணம் மக்களது அங்கீகாரத்துடனேயே தயாரிக்கப்படும். அதன் பின்னரே புதிய அரசியலமைப்பு உருவாகும் என்பதை பிரதமர் அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முரண்பாடுகள், பின்னடைவுகள் எதிர்காலத்திலும் தொடர இடமளிககப்படமுடியாது. இதன் காரணமாகவே புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் உணரப்பட்டது. 2015 ஜனாதிபதி தேர்தலின்போது இருபிரதான கட்சிகளும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படியே புதிய அரசியலமைப்புக்கான உத்தேச ஆவணம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்திற்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 12 பிரிவுகளைக் கொண்ட விடயங்கள் எதுவும் தனி நபராலேயோ, தனிக்கட்சியாலேயோ முன்மொழியபடவில்லை. சிலர் ஒன்றுபட்டும் சில கட்சிகள் தனியாகவும் யோசனைகளையும், பிரேரணைகளையும் முன்வைத்திருக்கின்றனர். அத்தோடு ஏற்கனவே முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்ட விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக முன்வைக்கப்பட்டுளள யோசனைகள், பிரேரணைகளும் அரசியலமைப்பு சபையில் ஆராயும் பொருட்டு உள்வாங்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான விடயம் பல விடயங்கள் தொடர்பில் சகல தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதுதான்.

இந்த அரசுக்கு எதிரான ஒரே சக்தியாக மஹிந்த தரப்பினரை மட்டுமே நோக்கவேண்டியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை எந்த நல்ல காரியமானாலும் அவற்றை எதிர்ப்பதும், நிராகரிப்பதும் தான் அவர்களது ஒரே நிலைப்பாடாகும். அது தான் இந்த விடயத்திலும் நடத்திருக்கின்றது. எமது நாட்டுக்கு பொருத்தமான, உறுதிமிக்கதானதொரு அரசியலமைப்பு, அனைத்து இன மக்களையும் உள்வாங்கியதான அரசியலமைப்பு மிக அவசியமானது என்பது உணரப்பட்டதன் காரணமாகவே இந்த புதிய யாப்பு தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாழும் சகல இன குழுக்களுக்கு தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டுமென நீண்டகாலமாகவே குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள அரசியலமைப்பும் சரி முன்னிருந்த யாப்புகளாக இருப்பினும் சரி குறைபாடுகள் உள்ளவையாகவே காணப்பட்டு வந்தன. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பொருட்டு சகல தரப்புகளையும் இணைத்து தேவைகளையும், இனைக்குழுக்களின் பிரேரணைகளையும் பெற்று அர்த்தபூர்வமான யாப்பொன்றைத் தயாரிப்பதில் சகல தரப்புகளும் ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்திருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும்.

நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்படவேண்டுமானால் அதற்கேற்ற விதத்தில் அரசியலமைப்பு காணப்படவேண்டும். அந்தக்குறை நீண்டகாலமாகவே காணப்பட்டு வந்தது நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஜனநாயகததைப் பலப்படுத்த உறுதிபூண்டது இதனை அரசு மட்டும் தவிர்த்துச் செய்யமுடியாதென்பதால் அரசியல் கட்சிகள், தனிநபர்கள், சிவில் அமைப்புகள், புத்தி ஜீவிகள் என சகல தரப்புக்களையும் இணைத்துத் திட்டத்தையும் தயாரித்துள்ளது.

அரசியலமைப்புச் சபை அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடாத நாட்களில் பாராளுமன்றத்தில் பலகட்டங்களாகக் கூடி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். நாட்டில் இன நெருக்கடி உட்பட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படவேண்டுமானால் ஆரோக்கியமானதொரு அரசியலமைப்பு அவசியமானதாகும். இந்த வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள், சிபாரிசுகள், யோசனை அதற்கு பலம் சேர்ப்பதாக அமையவேண்டும். இந்த விடயத்தில் காலம் கடத்தாமல் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைவதே மிக முக்கியமானதாகும்.

http://www.thinakaran.lk/2017/09/23/ஆசிரியர்-தலைப்பு/20099

Link to comment
Share on other sites

இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து

Link to comment
Share on other sites

சர்ச்சைக்குரிய தமிழ் பதம் மாறியது..... ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்று முன்மொழிவு

ஆளுநருக்கான அதிகாரம் முற்றாக நீக்கப்படவேண்டும்

தேசிய ஆணைக்குழுதாபிக்கபடவேண்டும்

 

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.