Jump to content

வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு!


Recommended Posts

வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri

 
 

சிவனை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் சிவராத்திரி. அதுபோலவே அம்பிகையைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்தது நவராத்திரி. சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி விரதம்.

நவராத்திரி

'நவ' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'ராத்திரி' என்றால் இரவு என்று பொருள்.  இவ்வாறு ஒன்பது இரவுகளைக் கொண்ட தினங்களையே நாம் 'நவராத்திரி' யாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக இரவு என்றால் இருள் என்று பொருள். ஒரு குழந்தை, இரவு வந்துவிட்டால் அம்மாவின் அணைப்பைத் தேடும். அதுபோல் இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் நாம் அகிலத்துக்கே அம்மாவான அம்பிகையை வழிபடுகிறோம். மேலும், இரவு என்னும் இருள் நம்முடைய அறியாமையையும் குறிக்கும். எனவே நமது 'அறியாமை' என்னும் இருளைப் போக்குவதற்கு அம்பிகையை வணங்குவதே நவராத்திரி ஆகும். எவ்வாறு ஒளியானது இருளை ஒரு நொடியில் போக்குகிறதோ, அவ்வாறே அம்பிகையின் அருளானது நமது அறியாமையைப் போக்குகிறது.

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி

ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும், நவராத்திரிக்கு விளக்கம் உண்டு. புரட்டாசி பிரதமைக்கு பிறகு வருவது 'ஆச்வின மாதம்' ஆகும். இந்தச் சமயத்தில் தொற்று நோய்கள்  பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவே உலகத்துக்கே அன்னையான அம்பிகையைப் பூஜிக்கிறோம். 

இந்த ஒன்பது தினங்களும் அம்பிகைக்கு பிரத்தியேகமான நைவேத்தியத்துடன்,  நவ தானியங்களில் ஏதாவது ஒன்றில் சுண்டல் செய்து, அதையும் அம்பிகைக்குப் நைவேத்தியம் செய்து, பின்னர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய் பரவாமல் தடுக்கலாம்.

அம்மன்

நவராத்திரி என்றாலே கொலுதான் பிரதானம். பொதுவாக நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கான முறைப்படி செய்ய வேண்டும். அப்போதே அந்த செயலானது முழுமை பெறும்.  நவராத்திரி கொலுவில் படி வைப்பதிலும் ஒரு முறை இருக்கிறது. ஒன்பது படிகள் வைப்பது சிறந்த முறையாகும். அவ்வாறு இயலாதவர்கள் ஒற்றைப் படை வரிசையில் அதாவது மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையிலும் வைக்கலாம்.

ஒன்பது படிகளில், 'முதல் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்றவற்றையும், இரண்டாம் படியில் ஈரறிவு உயிர்களான நத்தை, சங்கு முதலியவற்றையும் வைக்க வேண்டும். அதுபோல எறும்பு முதலிய மூன்றறிவு உயிர்களை மூன்றாம் படியிலும், நான்கறிவு உயிர்களான நண்டு போன்றவற்றை நான்காம் படியிலும் வைக்கவேண்டும். ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட பறவைகளையும், விலங்குகளையும், ஆறாம் படியில் ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளையும் வைக்க வேண்டும். ஏழாம் படியில்  மனிதகுலத்தை முன்னேற்ற பாடுபட்ட முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரின் பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்து எட்டாம் படியில் தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். இறுதியாக ஒன்பதாம் படியில் மும்மூர்த்திகளை அவர்களின் தேவியரோடு வைக்க வேண்டும். அவர்களுக்கு இடையில் அகிலத்திற்கே ஆதிசக்தியாக விளங்கும் அம்பிகையை வைக்க வேண்டும். அந்தப் படியில் நடுவில் கலசம் வைத்து அதில் அம்பாளை ஆவாஹணம் செய்யவேண்டும்.

(நவராத்திரி, முதல் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய தேவியையும் பற்றி  அறிய வீடியோவைப் பாருங்கள்!)

அதேபோல் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. 

நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் பொட்டுக் கோலமிடவேண்டும். அம்பாளின் பெயர் குமாரி. சுவாசிநி சைலபுத்ரி. இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை அருளும். முதல்நாள் அம்பிகைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யவேண்டும். சுண்டல் நம் விருப்பம்போலவோ அல்லது அந்தக் கிழமைக்கு எந்த கிரகம் அதிபதியோ அந்த கிரகத்துக்குப் பிரியமான நவதானியத்தில் சுண்டல் செய்து, அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, கொலுவைப் பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். இதனால் அளவற்ற நன்மைகள் நமக்கு ஏற்படும். முதல்நாள் அம்பிகையை குமாரியாக பூஜித்தால் நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் நமக்கு ஏற்படும்.

நவராத்திரியின் முதல் நாளுக்கு போடவேண்டிய கோலத்தைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த  கோலக்கலைஞர் சுபா. 

 

 

 

http://www.vikatan.com/news/spirituality/102862-navarathri-is-very-good-to-worship-durga.html

Link to comment
Share on other sites

நவராத்திரி தாம்பூலத்தில் என்னென்ன இருக்க வேண்டும? - 2-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

வராத்திரியின் முதல் நாளான நேற்று, கொலு வைப்பதற்கான முறை,  முதல்நாள் வழிபடும் தேவியைப் பற்றிப் பார்த்தோம். இரண்டாம் நாளான இன்று, நவராத்திரி  உருவான வரலாறு மற்றும் இன்றைய தேவியை வழிபடும் முறைகள் பற்றியும் பார்ப்போம்.

நவராத்திரி

முன்னொரு காலத்தில் எருமைத் தலையுடன், மனித உடலும் கொண்ட ஓர் அரக்கன் இருந்தான். அவன் பெயரே, மகிஷாசுரன். அவன் பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் இருந்தான். அவன் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்மதேவர், அவனுக்கு வரமளிக்க அவன் முன் தோன்றினார். மகிஷாசுரன் அவரை வணங்கித் தொழுதான். அவனிடம் பிரம்மதேவர், "உன் தவத்தால் யாம் பெரிதும் மகிழ்ந்தோம், வேண்டிய வரத்தைக் கேட்பாய்!" என்று கூறினார். இதைக் கேட்ட மகிஷன், 'மரணமே இல்லாத நிலை தனக்கு வேண்டும்' என்று கேட்டான். ஆனால், பிரம்மதேவர், 

 'உலகத்தில் பிறக்கும் அனைவருக்கும் நிச்சயம் இறப்பு என்பது உண்டு. பிறப்பு இறப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். அதை எம்மால் மாற்ற இயலாது. வேறு வரம் வேண்டினால் யாம் தருகிறோம்' என்றார். 

மகிஷாசூரன், ''அப்படியானால் எனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்படவேண்டும்'' என்று வரம் கேட்டான். பிரம்மதேவரும் அப்படியே வரம் கொடுத்து மறைந்தார்.

'பெண்கள் வலிமை குறைந்தவர்கள்; வலிமைமிக்க தன்னை அவர்களால் எதிர்க்கொள்ள முடியாது. அதையும் மீறி ஒருவேளை அவர்கள் தன்னை எதிர்கொண்டாலும், அவர்களால் தன்னை அழிக்கமுடியாது. எனவே தனக்கு மரணமே ஏற்படாது' என்பதுதான் அவனுடைய எண்ணம்.  

வராஹி அம்மன்

இப்படி எண்ணிய அவன் தலைக்கணத்துடன் திரிந்தான். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் பல துன்பங்களை விளைவித்தான். இதனால் மிகவும் அவதியுற்ற முனிவர்களும், தேவர்களும் மும்மூர்த்தியரிடம் சென்றனர். 'மகிஷாசுரன் தங்களுக்கு பல இன்னல்கள் விளைவிப்பதாகவும், மேலும் அவன் பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தின் காரணமாக தங்களால் அவனை எதுவும் செய்ய இயலவில்லை என்றும், தாமே அவனை அழித்து தங்களை காக்க வேண்டும்' என்று மும்மூர்த்திகளிடமும் அவர்கள் வேண்டினர்.

அவன் பெற்ற வரத்தைப் பற்றி அறிந்த சிவபெருமான், 'அவன் பெண்ணாலேயே அழிவான் என்றும், அவனை சக்திதேவியே அழிப்பாள் என்றும், நீங்கள் கவலையை விட்டு நிம்மதி கொள்ளுங்கள்' என்று கூறி அவர்களை அனுப்பினார்.

அவ்வாறே சக்திதேவியும் அவனை அழிக்க வந்தாள். அழகிய திருவுருவம் கொண்டு அவளை மணக்க விரும்பினான் மகிஷாசுரன். தன் விருப்பத்தையும் அவளிடம் தெரிவித்தான். ஆனால் "தன்னுடன் யார் போராடி தன்னை வெற்றி கொள்கிறாரோ, அவரையே தான் மணப்பதாக சபதம் செய்திருக்கிறேன்" என்று அவனிடம் உரைத்தாள் ஆதிசக்தி.

மதியிழந்த அந்த அரக்கன் அவளின் அழகில் மயங்கினான். தான் பெற்ற சாபத்தையும் மறந்தான். அவளுடன் போர் புரிய ஆயத்தமானான். இருவருக்கும் ஒன்பது நாட்கள் கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் அம்பிகையின் கையால் அந்த அரக்கன் அழிந்தான். தேவர்களும், முனிவர்களும் அம்பிகையைப் போற்றி வணங்கினர். 

அந்த அரக்கனை அழித்து அனைவரையும் காத்த அந்த தினங்களையே நாம் நவராத்திரியாக கொண்டாடுகிறோம். இதில் மற்றொரு தத்துவமும் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் காம, குரோத, மத, மாச்சர்யங்களை வெற்றி கொள்வதற்காகவும் நவராத்திரியின்போது அம்பிகையை வழிபடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

(நவராத்திரி, இரண்டாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பை பற்றி  அறிய வீடியோவைப் பாருங்கள்!)

நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று  அம்பிகையை மூன்று வயது பெண்ணாகப் பாவித்துப்  பூஜிக்கவேண்டும். அம்பிகையை 'த்ரிபுரா' அல்லது வராஹி  என்ற பெயருடன் இன்று வழிபட வேண்டும். சுவாசிநியின் பெயர், ப்ரஹ்மசாரிணீ ஆகும். காலையில் அம்பாளுக்கு நைவேத்தியமாக புளியோதரையை படைத்து, துளசி இலையினைக் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மாலையில் ஏதாவது நவதானியத்தில் செய்த சுண்டலை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அதை வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும். புல்லாங்குழலில் கல்யாணி ராகம் இசைப்பது மிகவும் சிறப்பானது. இவ்வாறாக இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வழிபட்டால் தனம், தானியம் மட்டுமின்றி புத்ரபாக்கியமும் கிட்டுவது உறுதி.

 

 

 

பொதுவாக நவராத்திரியின்போது அனைவர் வீடுகளிலும் கொலு வைத்து, தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் அளிப்பது வழக்கம். நம் முன்னோர்கள் எந்த செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அதுபோலவே நவராத்திரியில் கொடுக்கப்படும் தாம்பூலத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன.

'தாம்பூலம்' என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வெற்றிலையும் பாக்கும். வெற்றிலை அம்பிகையின் அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெற்றிலைப் பயன்படுகிறது.

கொலுவிற்கு வருவோருக்கு கொடுக்கும் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, புடவை, ரவிக்கைத்துணி, மருதாணி உள்ளிட்டப் பொருட்களை வைத்துக் கொடுக்கலாம்.  அவ்வாறு கொடுக்கப்படும் பொருட்களுக்கு கிட்டும் பலன்களை நாளை பார்க்கலாம்.   

 

நவராத்திரியின் இரண்டாம் நாளுக்கு போடவேண்டிய கோலத்தைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த  கோலக்கலைஞர் சுபா. 

 

 

http://www.vikatan.com/news/spirituality/navratri/102956-second-day-of-navratri---worshipping-goddess.html

Link to comment
Share on other sites

திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

வராத்திரியின்போது வீட்டுக்கு வரும் பெண்களுக்கு  தாம்பூலத்துடன் அளிக்கப்பட வேண்டிய பொருள்கள் பற்றி நேற்று பார்த்தோம். அப்படி நாம் தாம்பூலத்துடன் கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

நவராத்திரி

வெற்றிலையும் பாக்கும் சக்தியின் அம்சமாகத் திகழ்ந்து  தாம்பூலத்துக்கு ஒரு மரியாதையை அளிக்கிறது. தாம்பூலத்துடன்  மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு அளிப்பதால் திருமண வரம் கிடைப்பதுடன், சுமங்கலித் தன்மையும் நிலைத்திருக்கும். வளையல்கள் அளிப்பதால் மனச் சஞ்சலம் விலகும். சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களை வழங்கினால், கணவரின் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன் ஆயுள் விருத்தியும் உண்டாகும். 

பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள உபயோகப்படுத்தும் பொருட்களான கண்மை, மருதாணி, பூ போன்றவற்றை அளித்தால் திருஷ்டி படாது. நோய் நொடிகள் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பழங்கள் கொடுப்பதன் மூலம் அன்னதானம் செய்த பலனை நாம் பெறலாம். மேலும் தேங்காய் அளிப்பதன் மூலம் முற்பிறவியிலும்  இப்பிறவியிலும் செய்த பாவங்களில் இருந்து விடுபடலாம். புடவை அல்லது ரவிக்கைத்துணியை அளித்தால் வஸ்திர தானம் செய்த பலன் கிட்டும். கடவுளரின் ஸ்தோத்திரம் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தால் வித்யாதான பலன் கிடைக்கும்.

நம் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மேற்கூறிய பொருட்களில், நம்மால் முடிந்த பொருட்களை தாம்பூலமாக முழு மனநிறைவுடன் அளித்து, தேவியின் அருளைப் பெறுவோம்!

இந்திராணி

நவராத்திரியின் முதல் மூன்று தினங்களில் மலைமகளான பார்வதியின் அம்சமாக விளங்கும் துர்கையையும், அடுத்து வரும் மூன்று தினங்களில் அலைமகளான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று தினங்களில் கலைமகளான சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும் என்று பார்த்தோம்.

நவராத்திரியின் முதல் நாளில் துர்கையை சாமுண்டியாகவும், இரண்டாம் நாளில் வராகியாகவும், மூன்றாம் நாளில் இந்திராணியாகவும் எண்ணி வழிபட வேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில் மகாலட்சுமியை வைஷ்ணவி தேவியாகவும், ஐந்தாம் நாளில் மகேஸ்வரி தேவியாகவும், ஆறாம் நாளில் கௌமாரி தேவியாகவும் பாவித்து பூஜிக்க வேண்டும்.

அனைத்து கலைகளையும் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாளன்று சாம்பவியாகவும், எட்டாம் நாளன்று நரசிம்மதாரிணியாகவும், ஒன்பதாம் நாளன்று சரஸ்வதியாகவும் எண்ணி வழிபடுதல் வேண்டும்.

நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்கு வயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்து போல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரிய தேவி - இந்திராணி. குமாரியின் பெயர் - கல்யாணி. மந்திரம் ஓம் கல்யாண்யை நம: சுவாசினியின் பெயர் - சந்த்ர காண்டா. மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம:. நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல். வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் - வித்யை, ராஜ்யம், பதவிகள் கிடைக்கும்

இன்று நாம் வழிபடும் அம்பிகையான இந்திராணி கார்மேகம் போன்றவள்; ஒளிவீசும் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தன் தலையில் அணிந்த இவள் அழகிய வெள்ளை யானையின் மீது அமர்ந்திருப்பாள்; இனிய மணம் கமழும் மலர்களை தன் தலையில் சூடியிருக்கும் இவள் சப்தகன்னியரில் ஒருவள் ஆவாள்.. 

 

 

(நவராத்திரி, மூன்றாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)

அன்னை இந்திராணி தேவிக்கு  மாஹேந்திரி, ஐந்திரி தேவி போன்ற திருநாமங்களும் உள்ளன. இவளை வழிபடுவதால் யம பயம் நீங்குகிறது. அதுமட்டுமின்றி தன்னை முழுமனதோடு வணங்கும் பக்தர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையையும் தந்தருள்கிறாள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இன்று இந்திராணி தேவியை வணங்கினால் பல சிறப்புக் குணங்கள் பெற்றிருக்கும் கணவனைப் பெற்று, இனிமையான இல்லறத்தை மேற்கொள்ளலாம். மேலும் இந்திராணியை வழிபடுவதால் உயர்ந்த பதவிகளையும் அடையலாம்.

நவராத்திரி விரத பூஜை என்பது பெண்களுக்கான பூஜை மட்டுமே அல்ல. ஆண்களும் நவராத்திரி விரதம் இருந்து முறைப்படி அம்பிகையை வழிபட்டால், அனைத்து நலன்களையும் பெறலாம். 

இங்கே ஒரு கதையைப் பார்ப்போம்.

சுரதன் என்ற ஓர் அரசன் விதிப் பயனாக வேற்று தேசத்து மன்னனிடம் தன் ராஜ்யம், சொத்து, சுகம் அனைத்தையும் தோற்றுவிட்டான். இனி நாட்டில் இருந்தால் தனக்கு ஆபத்துதான் என்று நினைத்த மன்னன் காட்டுக்குச் சென்றுவிட்டான். காட்டில் ஒரு ரிஷியை சந்திக்க நேரிட்டது. அவருடைய பெயர் சுரேதஸ். மன்னனின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய மகரிஷி, 'மன்னா, நீ கவலைப்பட வேண்டாம். நீ என்னுடைய ஆசிரமத்திலேயே தங்கிக் கொள்ளலாம். நீ இங்கே இருக்கும் வரை உனக்கு ஆபத்து எதுவும் வராது'' என்று அடைக்கலம் கொடுத்தார்.

மகரிஷியின் ஆதரவில் மன்னன் காட்டிலேயே இருந்தான். ஆனாலும் எப்போதும் அவனுக்கு தான் இழந்த ராஜ்யத்தின் நினைவாகவே இருந்தது. ஒருநாள் அதே சிந்தனையுடன் அவன் ஒரு மரத்தினடியில் படுத்திருந்தான். 

அப்போது அந்த வழியாக ஒருவன் சோகம் கப்பிய முகத்துடன் வந்துகொண்டிருந்தான்.

 

( கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி மூன்றாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

மரத்தினடியில் படுத்திருந்த மன்னன், அவனிடம், 'ஐயா, தாங்கள் யார்? ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டான். அதற்கு அவன், 'என் பெயர் சமாதி. எனக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. ஆனால், எனக்கு வயதாகிவிட்ட நிலையில் என் பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ளாமல் உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால்தான் நான் அமைதியைத் தேடி காட்டுக்கு வந்துவிட்டேன்'' என்றான்.

அவனை அழைத்துக் கொண்டு மன்னன் ஆசிரமத்துக்குத் திரும்பினான். மன்னன் எப்போதும் தான் இழந்த ராஜ்யத்தையே நினைத்துக் கொண்டிருப்பதை அறிந்த மகரிஷி, அவனிடம் நவராத்திரி விரதத்தின்மகிமையைப் பற்றி விளக்கமாகச் சொல்லி, நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும்படிக் கூறினார். அப்படியே இருவரும் அம்பிகையை பூஜித்தனர். பூஜையின் நிறைவில் அம்பிகை அவர்களுக்கு தரிசனம் கொடுத்து, வேண்டும் வரங்களைக் கேட்கும்படிக் கூறினாள். மன்னன் தான் இழந்த ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டான். அம்பிகையும், 'கவலை வேண்டாம். உன் பகைவர்கள் உன்னிடமே சரண் அடைவர். நீயும் உன் ராஜ்யத்தைத் திரும்பப் பெற்று சுகமாக வாழ்வாய்' என்று வரம் தந்தாள். சமாதியோ தனக்கு ஞானம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். அம்பிகை அப்படியே வரம் தந்தாள். மன்னனுக்கு அவன் இழந்த ராஜ்யம் திரும்பக் கிடைத்தது. சமாதி விரும்பியபடியே அவனுக்கு ஞானம் கிடைத்தது. இத்தனை மகிமைகள் பொருந்திய நவராத்திரி வைபவத்தை நாமும் கொண்டாடி அம்பிகையின் அருளைப் பெறலாமே.

 

நவராத்திரி நான்காவது நாளில் நாம் எந்த தேவியை வழிபடவேண்டும் என்பதை நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/news/spirituality/navratri/103066-third-day-of-navratri-worshipping-goddess.html

Link to comment
Share on other sites

ராமருக்கு அருள் புரிந்த நவராத்திரி நாயகி!- 4-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

நவராத்திரி முதல் மூன்று தினங்களில் மலைமகளின் அம்சமான துர்கையை வழிபட்டோம். அடுத்த மூன்று தினங்களில் நாம் மகாலட்சுமியை வழிபடவேண்டும். நான்காம் நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.

நவராத்திரி

வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டபோது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண்குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபட வேண்டும். ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம். 

(நவராத்திரி, நான்காம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)

நான்காவது நாள்  காலையில் முழு அரிசியைக் கொண்டு படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டுப் பாடல்களைப் பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபடவேண்டும். 

மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்ப சாதமும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவேத்தியம் செய்து, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கவேண்டும். இன்றைய தினத்துக்கான குமாரியின் பெயர் -ரோஹிணி; மந்த்ரம் - ஓம் ரோஹிண்யை நம: சுவாசிநியின் பெயர் கூஷ்மாண்டா; மந்த்ரம் - ஓம் கூஷ்மாண்டாயை நம:

இன்று அம்பிகைக்கு கதிர் பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவள் அன்னை சக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்ச வடிவமாக விளங்கும் பெண்குழந்தைகளை நாம் பூஜிக்கிறோம். இதன் காரணமாக நம்மில் சிறியவரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்படுவதுடன், பூஜிக்கப்படும் குழந்தைகளின் மனதிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிவபெருமானும், ராமபிரானும்கூட நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

இன்று நாம் ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் குறித்துப் பார்ப்போம்...

தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர் ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார். 

சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது திரிலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். 

அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர்  பேசத் தொடங்கினார்...

''ரகுகுல திலகா! நீ வருத்தத்துடன் இருப்பதற்கான காரணத்தை நான் அறிவேன். திரிலோக சஞ்சாரியாக நான் சஞ்சரிக்கும் வழியில் சொர்க்கத்துக்கும் சென்று வந்தேன். அங்கே எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்'' என்று கூறியவர் தொடர்ந்து

 ''மகாலட்சுமியின் அம்சமான சீதை முற்பிறவியில் ஒரு முனிவரின் மகளாக வேதவதி என்ற பெயரில் தோன்றியவள். தவத்தில் இருந்தவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன், அவளை அடைய ஆசை கொண்டு அவளுடைய கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான். கோபம் கொண்ட வேதவதி, 'நாராயணனை மணக்க தவம் புரியும் என்னைக் கண்டு மோகித்து, என் கையையும் பிடிக்கத் துணிந்த உன்னை நான் கொல்வதற்காக மறுபடியும் கர்ப்பவாசம் இல்லாமல் பூமியில் தோன்றுவேன்' என்று சாபம் கொடுத்துவிட்டு, அக்னியில் விழுந்து உயிரை  மாய்த்துக் கொண்டாள். அவள்தான் சீதையாக அவதரித்து இருக்கிறாள். தான் அழிவதற்காகவே ராவணன் சீதையைக் கடத்திச் சென்றிருக்கிறான். மகாவிஷ்ணுவின் அவதாரமான நீயும் ரகுவம்சத்தில் தோன்றி இருக்கிறாய். உன்னால் ராவணன் அழியப்போவது உறுதி என்று நினைத்து தேவலோகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்'' என்று கூறியவர்,ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான வழியையும் விளக்கினார்.

( கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி நான்காம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

''ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பிகையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பாய்'' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார். 

நாரதர் கூறியபடியே நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம்  செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

 

நவராத்திரி ஐந்தாம் நாள் நாம் வழிபடவேண்டிய தெய்வம் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி நாளை பார்ப்போம்...

http://www.vikatan.com/news/spirituality/navratri/103122-fourth-day-of-navratri-worshipping-goddess.html

Link to comment
Share on other sites

சங்கடங்கள் தீர்த்து சந்தோஷம் அருள்வாள் சண்டிகா தேவி - 5-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

நவராத்திரியின் ஐந்தாவது நாள் நாம் வழிபடவேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்த மாதா என்றும் அழைக்கப்படுகிறாள். இவளை வழிபடும் ஐந்தாவது நாளுக்கு உரிய குமாரி - சண்டிகா தேவி; மந்திரம் - ஓம் சண்டிகாயை நம; சுவாசிநியின் பெயர் - ஸ்கந்தமாதா; மந்திரம் - ஓம் ஸ்கந்த மாதாயை நம: மலர் - சந்தன இலை; நைவேத்தியம் - தயிர்சாதம்; வாத்தியம் - ஜல்லரி; ராகம் - பந்துவராளி; இன்றைய தினம் கடலை மாவினால் பறவைக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை போடலாம். இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை நம்மால் முடிந்த அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை 'சண்டிகா' என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும். அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்யவேண்டும். நைவேத்தியம் செய்ததை அனைவருக்கும் அம்பிகையின் பிரசாதமாகக் கொடுக்கவேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், புத்திரபாக்கியமும் கிடைக்கும்.

நவராத்திரி

இன்று நாம் வழிபடும் குமாரியான சண்டிகா தேவி நவராத்திரி நாயகியரில் ஒருவர். சண்டிகா தேவியின் அவதாரம் பற்றி ஒரு புராணச் சம்பவம் சொல்லப்படுகிறது.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் நாம் சண்டிகா தேவியின் அவதார மகிமையை படிப்பதும், படிக்கக் கேட்பதும் அளவற்ற புண்ணியங்களைத் தரும்.

சண்டிகா தேவியின் புராண வரலாறு...

(நவராத்திரி, ஐந்தாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் அரக்க குணத்தால் அனைத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல தொல்லைகள் புரிந்து வந்தனர். அவர்களை அழிக்க மும்மூர்த்தியர்களும் தங்களிடம் இருக்கும் அனைத்து சக்தியையும் ஒன்றிணைத்து ஒரு மகாசக்தியை உருவாக்கினர். 

அவ்வாறு உருவாக்கப்பட்ட தேவியும் அரக்கர்களை அழிக்க வந்தாள். அழகு நிரம்பிய அவளை அரக்கர்களின் பணியாளர்களான சண்டன், முண்டன்  இருவரும் கண்டனர். இவ்வளவு அழகு கொண்ட பெண் தங்கள் மன்னர்களில் ஒருவரையே மணக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள், அவளிடம் சென்று, 'ஏய் பெண்ணே! இத்தனை அழகு கொண்ட நீ வனத்தில் அலைவதா? எங்கள் அரசரை மணம் புரிந்து எங்கள் அரண்மனையில் வாழ்வாய்!' என்று கூறினர்.

"யார் என்னை வெற்றிக்கொள்கிறார்களோ அவரையே மணப்பேன்" என்றாள் தேவி. அவ்வாறே போரிட்டு சண்டன், முண்டன் இருவரையும் வதைத்தாள். அதற்குள் இந்தச் செய்தியானது சும்பன், நிசும்பனை எட்டியது. தேவியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணிய அவர்கள், தேவியுடன் போர் புரிய ரக்தபீஜன் என்ற அரக்கனை அழைத்தனர்.

நவராத்திரி ஐந்தாம் நாள் கோலம்

இந்த ரக்தபீஜன் என்பவன் தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்பதற்காக ஒரு வரத்தினைப் பெற்றான். அந்த வரமானது, தன் உடலிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந் தும் ஒரு ரக்தபீஜன் உருவாக வேண்டும் என்பதேயாகும்.

தேவியும் அவனுடன் கடுமையாக போர் புரிந்தாள். ஆனாலும் அவன் உடலிலிருந்து வெளியேறிய ரத்தத்திலிருந்து பல்வேறு ரக்தபீஜன்கள் தோன்றினர். இதனைக் கண்ட தேவி மிகுந்த கோபம் கொண்டு தன்னுடைய அம்சமாக 'சண்டிகை'  என்னும் தேவியைத் தோற்றுவித்தாள். மேலும் ரக்தபீஜன் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தினை அவள் குடிக்க வேண்டும் என்றும், ஒரு சொட்டு ரத்தமும் கீழே விழக்கூடாது என்றும் கூறினாள். சண்டிகா தேவியும் அவ்வாறே செய்ய ரக்தபீஜனை எளிமையாக வதைத்தாள் ஆதிசக்தி.

அவனை அடுத்து சும்பன், நிசும்பன் அரக்கர்களை அழித்தவுடன் தேவியின் கோபமானது குறைந்தது. அவளிடம் வந்த சாமுண்டி தேவி தனது அடுத்த பணியினை வினவினாள்.

“என்னை வணங்கும் பக்தர்களுக்கு எனது அம்சமான நீ நல்லருள் புரிய வேண்டும். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வரங்களையும் அருள் புரிவதுடன், அவர்களுடைய சங்கடங்களை அகற்றி சந்தோஷமான வாழ்க்கையை அருளவேண்டும்” என்று கூறினாள்.

( கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

ஆதலால் இந்த நவராத்திரி நன்னாளில் ஐந்தாம் நாளான இன்று சண்டிகா தேவியை வணங்கி, அவளுடைய அவதார மகிமையை அறிந்து போற்றி வழிபடுவோ; அவளுடைய அருளால் நாம் சங்கடம் தீர்ந்து சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவோம்.

 

நவராத்திரியின் 6-ம் நாளான நாளை நாம் வழிபடவேண்டிய தெய்வம் பற்றி நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/news/spirituality/navratri/103123-fifth-day-of-navratri-worshipping-goddess.html

Link to comment
Share on other sites

எதிரிகளின் தொல்லை அகற்றி இன்பம் தருவாள் காளி! நவராத்திரி 6-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

வராத்திரிக் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இன்று நவராத்திரி ஆறாம் நாள். நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப்படுகிறாள்.

நவராத்திரி ஆறாம் நாள்

இவளை வழிபடும் ஆறாவது நாளுக்கு உரிய குமாரி - காளிகா தேவி; மந்திரம் - ஓம் காள்யை நம: சுவாசிநி- காத்யாயனி; மந்திரம் - ஓம் காத்யாயன்யை நம: மலர் - தும்பை; வாத்தியம் - பேரி; ராகம் - நீலாம்பரி; நைவேத்தியம் - தேங்காய் சாதம்; இன்றைய தினம் ஏழு வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை 'காளிகா' தேவியாக வழிபடவேண்டும். அம்பிகைக்கு தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்கவேண்டும்.  இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், எதிரிகளின் தொல்லை முழுமையாக விலகும்.

முப்பெரும் தேவியர்

இன்று நாம் குமாரியாக வழிபடும் காளிகா தேவிதான் பைரவரின் தோற்றத்துக்கும் காரணம் அது பற்றிய புராண வரலாறு இது... தாருகாசுரன் என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவன் முன் தோன்றி, விரும்பும் வரம் கேட்கும்படிக் கூறினார். தாருகனும் தனக்கு மரணமே வரக்கூடாது என்று வரம் கேட்டான். 

(நவராத்திரி, ஆறாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!) 

ஆனால், பிறந்த எவருமே இறக்கத்தான் வேண்டும் என்று சிவபெருமான் கூறி, வேறு வரம் கேட்கும்படிக் கூறினார். சற்று யோசித்துப் பார்த்த தாருகாசுரன், ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். 

வரம் பெற்ற தாருகாசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பலவாறாகத் துன்புறுத்தினான். முனிவர்களின் யாகங்கள் தடைப்பட்டதால் இயற்கையே பாதிப்பு அடைந்தது. மழை பொய்த்தது. எங்கும் வறட்சியே நிறைந்திருந்தது. வறட்சி காரணமாக பசி, பட்டினியால் மக்கள் வாடினர். மூன்று உலகங்களும் ஸ்தம்பித்தன. இதனால் தேவர்களும், முனிவர்களும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் சென்று முறையிட்டனர். அவர்கள் இருவரும் தங்களால் இயலாது என்றும், சிவனிடம் சென்று முறையிடலாம் என்றும், ஈஸ்வரனிடம் சென்றனர்.

நவராத்திரி ஆறாம் நாள் கோலம்

சிவபெருமான், அவன் தன்னிடம் இருந்து வரம் பெற்றுள்ளான் என்றும், தன்னால் அவனை அழிக்க இயலாது என்றும் கூறினார். 

ஆனால், 'அவனை அழிக்கவில்லை என்றால் பெரும் பிரளயமே ஏற்பட்டு, உலகமே அழிந்துவிடும்' என்று விஷ்ணு கூறினார். 

அவர் சொல்லியதில் இருந்த உண்மையை உணர்ந்துகொண்ட அன்னை பார்வதி, சிவபெருமானின் கண்டத்தில் இருந்த ஆலகாலத்தை உற்று நோக்கினார். அதில் இருந்து ஒரு சுடர் தோன்றியது. விஷத்தின் கறை படிந்த அந்தச் சுடரை ஒரு பெண்ணாக மாற்றி, காளி என்று பெயரிட்டு, தாருகாசுரனை அழிப்பதற்கு அனுப்பினர்.

 

காளிதேவியும் தன் வாயிலிருந்து அக்னியை வரவழைத்து அதைக் கொண்டு தாருகாசுரனை வதைத்தாள். பின் தன் வாயில் இருந்து தோன்றி, தாருகனை வதைத்த அந்தக் கனலை ஒரு குழந்தையாக  மாற்றினாள். பின்னர் சிவபெருமான் காளியையும், அவள் உருவாக்கிய அந்தக் குழந்தையையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். சிவன் காளி உருவாக்கிய அந்த குழந்தையைப் போல் எட்டு குழந்தைகளை உருவாக்கினார். அந்த எட்டு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக ஒன்றிணைத்து அந்தக் குழந்தைக்கு 'பைரவர்' என்று திருப்பெயர் சூட்டினார். நவராத்திரி நாயகியரில் 6-வது நாளில் நாம் வழிபடும் குமாரியான காளிகா தேவிதான் பைரவரின் தோற்றத்துக்கும் காரணம் என்பதில் இருந்தே இந்த தேவியின் மகிமையை நாம் உணரலாம்.

http://www.vikatan.com/news/spirituality/navratri/103278-sixth-day-of-navratri-worshipping-goddess.html

Link to comment
Share on other sites

சாம்பவியிடம் சரணடைந்தால் மாங்கல்ய பாக்கியம் மலரும்-நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

நவராத்திரி ஏழாம் நாள்

ராஜயோகம் தருவாள்; நிலைத்த புகழும் தருவாள் சாம்பவி தேவி! நாடெங்கிலும் நவராத்திரி வைபவம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுதோறும் கொலு வைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பதும், கொலு பார்க்க வரும் சிறு பெண்களைப் பாடச்சொல்லி அவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதும், கொலு பார்க்க வருபவர்களுடன் ஆன்மிக விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும் என்று ஊரெங்கும் நவராத்திரி கோலாகலம்தான். அம்பிகைக்கு விழா எடுப்பது என்றாலே அத்தனை கொண்டாட்டம் நமக்கு!

 

கடந்த ஆறு தினங்களாக வழிபடவேண்டிய நவராத்திரி தேவியரைப் பற்றியும் அவர்களை வழிபடுவதால், நாம் பெறக்கூடிய பலன்களைப் பற்றியும் பார்த்தோம். இன்று நாம் நவராத்திரி ஏழாம் நாள் வைபவத்தைப் பற்றியும், நவராத்திரி விரத மகிமை குறித்தும் பார்ப்போம்.

சாம்பவி

நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி. ஏழாவது நாளில் நாம் சரஸ்வதி தேவியை சாம்பவியாக வழிபடவேண்டும். சாம்பவியை வழிபடும் ஏழாவது நாளுக்கு உரிய குமாரி - சாம்பவி; மந்திரம் - ஓம் சாம்பவ்யை நம:; சுவாசிநியின் பெயர் - காலராத்ரி; மந்திரம் - ஓம் காலராத்ர்யை நம:; மலர் -பன்னீர் இலை; வாத்தியம் - கும்மி; ராகம் - புன்னாகவராளி; நைவேத்தியம் - எலுமிச்சை சாதம்.

(நவராத்திரி, ஏழாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!)  

இன்றைய தினம் எட்டு வயது பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கவேண்டும். இப்படி வழிபட்டால் என்றும் நிலைத்த புகழ் கிடைக்கும்.

அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரி நாள்களில் அம்பிகையை விரதமிருந்து வழிபட்டால், வேண்டிய வரங்கள் அனைத்தையும் அருள்வாள் அம்பிகை.

(நவராத்திரி ஏழாம் நாள் கோலம்)

 

நவராத்திரி வழிபாட்டின் மகிமையை விளக்கும் ஒரு கதையை இன்று பார்ப்போம்.

முற்காலத்தில் ஆங்கீரஸ முனிவர் என்பவர் வனத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது. அழுகைச் சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு குடிசையில் ஒரு பெண் தன் கணவரை மடியில் கிடத்தி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட முனிவர் வெளியில் இருந்தபடியே குரல் கொடுத்தார். முனிவரின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள்.

அந்தப் பெண்ணின் முகத் தோற்றத்தில் இருந்து அவள் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்று புரிந்துகொண்டார். அவளைப் பற்றிய விவரம் கேட்டார்.

அவள் தான் அந்த நாட்டின் அரசி என்றும், சதிகாரர்கள் என் கணவரை ஏமாற்றி ராஜ்யத்தைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டதாகவும், தன் கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப் பதாகவும் தெரிவித்தாள். தன் கணவர் நலமடைய வேண்டும் என்று முனிவரைப் பிரார்த்தித்தாள். மேலும் தாங்கள் இழந்த ராஜ்யம் திரும்பக் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு ஓர் ஆண்குழந்தை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.

அவளுடைய நிலைக்கு மனம் வருந்திய முனிவர், ஒன்பது தினங்கள் அம்பிகைக்கு பூஜை செய்யுமாறு கூறியதுடன், பூஜைக்கான முறைகளையும், மந்திரங்களையும் கூறினார். அவர்களுக்கு தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்று கூறிய முனிவர், அவர்களை தமது ஆசிரமத்திலேயே தங்கச் செய்தார்.

முனிவர் உபதேசித்தபடியே நவராத்திரி விரதம் அனுஷ்டித்து, தேவியை வழிபட்டாள். அவளின் பூஜையினால் மனம் மகிழ்ந்த தேவி, அவளுடைய கணவருக்கு பூரண ஆரோக்கியத்தையும், தேக வலிமையையும் தந்தாள். சில நாள்களிலேயே அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது. அவனுக்கு 'சூரிய பிரதாபன்' என்னும் பெயர் சூட்டிய முனிவர், அவனுக்கு சகல கலைகளையும் கற்பித்தார். தேவியின் அருளால் தங்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தில் இருந்து அரசி ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பூஜையைத் தொடர்ந்து செய்து வந்தாள்.

திறமையும், அறிவுக்கூர்மையும் மிக்க சூரிய பிரதாபன் இளம் வயதிலேயே போர்க்கலை உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். அதன் பிறகே முனிவர் அவனுடைய பெற்றோர்கள் பற்றியும், அவர்கள் சூழ்ச்சியினால் ராஜ்யத்தை இழந்தது பற்றியும் கூறினார். உடனே அவன் தன் நாட்டின் மீது தனக்கு உள்ள உரிமையைப் பெற போருக்குப் புறப்படத் தயாரானான். முனிவரும், பெற்றோரும் அவனுக்கு ஆசி வழங்கி அனுப்பினர். அவன்தான் தங்கள் இளவரசன் என்பதைத் தெரிந்துகொண்ட நாட்டு மக்கள் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அம்பிகையின் அருளால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றான். வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க ஆசிரமத்துக்கு விரைந்தான்.

அவனுடைய வெற்றிச் செய்தியைக் கேட்ட ஆங்கீரஸ முனிவர், அவனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டார். அவனையும் அவனுடைய பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்று ஒரு நல்ல நாளில் அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பெற்றோரையும் தன் நாட்டு மக்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான்.

முனிவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படியே நவராத்திரி விரதம் இருந்ததால், அவளுக்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, இழந்த ராஜ்ஜியம் அனைத்தும் கிட்டியது. இவ்வாறே நாமும் நவராத்திரி விரதம் மேற்கொண்டு அம்பிகையின் அருளைப் பெற்று நம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று மகிழ்வோம்!

அடுத்து எட்டாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகையைப் பற்றி நாளை பார்ப்போம்.

http://www.vikatan.com/news/spirituality/103387-seventh-day-of-navratri-worshipping-goddess.html

Link to comment
Share on other sites

துர்கா தேவியாக பாவித்துக் குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - நவராத்திரி 8-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

 

நவராத்திரி எட்டாம் நாள்

வராத்திரி எட்டாவது நாளில் நாம் வழிபடவேண்டிய தேவி நரசிம்ஹி. தன் பக்தன் பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வதற்காக பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. நரசிம்ஹி மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். இவளை வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பவள். இவளையே நாம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடவேண்டும். இன்றைய தினம் நாம் வழிபடவேண்டிய குமாரி - துர்கா தேவி; மந்திரம் - ஓம் துர்காயை நம:, சுவாசிநியின் பெயர் - மஹா கௌரி; மந்திரம் - ஓம் மஹா கௌர்யை நம:, மலர் - விபூதி பச்சை; நைவேத்தியம் - பால் பாயசம்.

 

இன்றைய தினம் ஒன்பது வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும். இப்படிச் செய்வதால், அம்பிகை மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள்.

நவராத்திரி விழாவில் நாம் வழிபடும் தேவியர் அனைவரும் அன்னை ஆதிசக்தியின் அம்சங்களே ஆவர். இவர்களை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அசுரர்களை அழிப்பதற்காகத் தோன்றிய நவதுர்கை சக்திகள்தான். நவ துர்கா தேவியரை நவராத்திரி நாள்களில் வேறு வேறு திருநாமங்களில் வழிபடும் நாம், நவதுர்கையர் தோன்றிய புராண வரலாற்றையும் இங்கே பார்ப்போம்.

துர்கா தேவி

சைலபுத்ரி, பிரம்ஹசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயணி, காலராத்ரி, மஹா கௌரி, ஸித்திதாத்ரி ஆகியோரே நவதுர்கைகள்.

சிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்களே நவதுர்கைகள். ஒவ்வொரு தாண்டவத்தில் இருந்தும் ஒரு துர்கை அவதரித்தார்கள்.

நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் அவதரித்தவள்தான் சைலபுத்ரி. ரிஷி மண்டல கோளத்தில் இருந்து சிவபெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தில் இருந்துதான் எழுத்துகள் தோன்றின. நவராத்திரி முதல் நாள் வழிபடும் சைலபுத்ரியை வழிபட, திருமணத் தடை நீங்கி, மங்களகரமான வாழ்க்கை அமையும்.

அடுத்து இரண்டாவது நாளில் ஆடப்பட்ட நடனம் திரிபுரதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தாண்டவத்தில் சிவபெருமான் தனது இடதுக் காலின் கட்டை விரலால் ஒரு கோலத்தினை வரைகிறார். அக்கோலத்துக்கு அஷ்டவசுக்கோலம் என்று பெயர். இந்தத் தாண்டவத்தில் அவதரித்தவள் பிரம்ஹசாரிணி. இவளை வழிபடுவதால் மனதில் உறுதி பிறந்து, எதையும் சாதிக்கும் துணிவு கிட்டும்.

மூன்றாவது நாள் ஆடப்பட்ட நடனத்தின் பெயர் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். இந்த நடனத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்தில் இருந்து தோன்றியவளே சந்த்ரகண்டா. சிவபெருமான் தனக்குப் போட்டியாக ஆடிய காளிதேவியை வெற்றி கொள்ள, தனது வலது காலை தரையில் ஊனறி, இடதுக் காலை தோளுக்கு இணையாக தூக்கி ஆடிய நடனம் ஆகும். சந்த்ரகண்டா எனப்படும் இந்த தேவியை வழிபடுவதால், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து, மனதிற்கு அமைதி கிடைக்கும்.

(நவராத்திரி, எட்டாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!) 

 

 

நான்காம் நாளில் வழிபடப்படும் கூஷ்மாண்டா தேவி ஸப்த ஒலிக்கோலத்திலிருந்து அவதரித்தவள் ஆவாள். இந்த கோலமானது சிவபெருமானால் இடது கால் விரல் கொண்டு வரையப்பட்டது ஆகும். இத்தாண்டவம் பகலும், மாலையும் இணையும் வேளையில் ஆடப்படுவதால் 'ஸந்தியா தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. கூஷ்மாண்டா தேவி நமக்கு அனைத்து வகையான செல்வங்களையும் அளிப்பவள். இவளை வழிபடுவதால் வறுமைத் துயரம் நீங்கும்.

புஜங்க தாண்டவத்தில் இருந்து வெளிப்பட்டவளே ஸ்கந்த மாதா ஆவாள். பாற்கடலில் இருந்து வெளியேறிய நஞ்சினை உண்டு ஆடிய ஆட்டம் ஆகும். இதில் வரையப்பட்ட கோலம் புஜங்கத் தாண்டவக் கோலம் ஆகும். இவளை வழிபடுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட்டு, நம் வம்சம் விருத்தியாகும்.

சிவனடியார்களில் ஒருவரும், மாபெரும் முனிவருமான பதஞ்சலி முனிவர் ஒரு சமயம் மிருதங்கம் வாசித்தார். தன் வாசிப்பிற்கு சிவபெருமான் ஆட வேண்டும் என்று ஈசனிடம் பணிந்து நின்றார். தன் பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானும் தாண்டவம் ஆடினார். அப்போது அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தேவியே காத்யாயணி ஆவாள். முனிவரின் இசைக்கேற்ப ஆடியதால் இது முனி தாண்டவம் என்று அழைக்கப்பட்டது. காத்யாயணி தேவியை நாம் வழிபட்டால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

(நவராத்திரி எட்டாம் நாள் கோலம்)

 

 

ஏழாம் நாளில் நாம் வழிபடும் தேவி காலராத்ரி ஆவாள். பூத உடல் கொண்ட அரக்கனை அழித்து அந்தச் சினம் தீர ஆடிய ஆட்டமே பூத தாண்டவம் ஆகும். இந்த தாண்டவத்தில் வரையப்பட்ட கோலமே பூத தாண்டவ கோலம் என அழைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்பட்ட தேவி காலராத்ரி ஆவாள். இவளை வழிபடுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் தீயவர்களும் பகைவர்களும் அழிவர்.

தண்டகாரண்யத்தில் வேள்வி செய்த முனிவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அரக்கர்களை ஒழிக்கவேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அரக்கர்களை அழித்த சிவபெருமான், பிறகு ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். இந்த சுத்த தாண்டவ கோலத்திலிருந்து வெளிப்பட்ட தேவி மஹா கௌரி. இந்த தேவியை வழிபடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சிவபெருமான் தன் முகத்தில் நவரசங்களையும் காட்டி நடனம் ஆடினார். அவர் வரைந்த நவரசக்கோலத்தில் இருந்து வெளிப்பட்டவளே சித்திதாத்திரி தேவி இவளை வணங்குவதால் அனைத்து யோகங்களும் நமக்கு கிடைக்கும்.

(கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி எட்டாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

 

 

இவ்வாறு இந்த ஒன்பது தினங்களில் நவதுர்கைகளை வணங்குவதால் சகல விதமான நன்மைகளைப் பெறுவதோடு, நம்மை சுற்றியிருக்கும் அனைத்து தீமைகளும் அன்னையின் அருளால் நீங்கிவிடும். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் வழிபடும் தேவியைப் பற்றி நாளை பார்ப்போம்.

நவசக்தி அருளும் நவதுர்கை வரலாறு...

நல்லருள் புரியும் நவதுர்கா தேவியர்...

 

எதிரிகள் தொல்லை இனி இல்லை... எட்டாவது நாள் நரசிம்ஹி வழிபாட்டின் மகிமை..!

http://www.vikatan.com/news/spirituality/navratri/103494-the-eighth-day-celebration-of-navratri-festival.html

Link to comment
Share on other sites

கல்வி, செல்வாக்கு, புகழ் அருளும் சரஸ்வதியை சரணடைவோம்! நவராத்திரி 9-ம் நாள் வழிபாடு! #AllAboutNavaratri

 
 

நவராத்திரி 9-ம் நாள்

வராத்திரியின் நிறைவு நாள் இன்று. முதல் மூன்று தினங்கள் துர்கை, அடுத்த இரண்டு தினங்கள் லட்சுமி, தொடர்ந்த மூன்று தினங்களில் சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரை பல்வேறு பெயர்களில் வழிபடும் விழாவே நவராத்திரி. கடந்த ஒன்பது நாள்களாக நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நவராத்திரி வைபவம், நாளை விஜயதசமியுடன் நிறைவு பெறுகின்றது. நவராத்திரி 9-ம் நாள்   இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி தேவி. குமாரியின் பெயர் - சுபத்ரா;, மந்திரம் - ஓம் சுபத்ராயை நம;, சுவாசிநியின் பெயர் - ஸித்திதாத்ரி; மந்திரம் - ஸித்திதாத்ரியை நம: மலர் - மருக்கொழுந்து;, நைவேத்தியம் - அக்காரவடிசல்;. இன்று பத்து வயது உள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை சுபத்ரா தேவியாக பூஜித்து வழிபட்டு, மங்கலப் பொருள்களை பிரசாதத்துடன் வழங்கி மகிழ்விக்கவேண்டும். இதன் மூலம் நமக்கு சகல விதமான நன்மைகளும் கிடைக்கும். செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும்.

 

நவராத்திரி 9-ம் நாள் இன்று நாம் சரஸ்வதி தேவிக்கு விசேஷமாக பூஜைகள் செய்து வழிபடுகிறோம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்களும்கூட சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரி 9-ம் நாள்

சரஸ்வதி பூஜையன்று காலையில் வீட்டைச் சுத்தம் செய்து, பூஜையறையில் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்தை நன்றாக அலங்கரித்து, தேவியின் திருவுருவப் படத்துக்கு முன் புத்தகங்கள், மற்றும் கல்விக்குப் பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்ற பொருள்களை வைத்து வழிபடவேண்டும். மேலும் சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப் பொருள்களையும் வைத்து பூஜை செய்யலாம்.

(நவராத்திரி, ஒன்பதாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  'சொல்லின் செல்வர்'  பி.என்.பரசுராமன் பேசும் வீடியோவைப் பாருங்கள்!) 

 

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தொழில் செய்வோரும் தங்கள் தொழிலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர் சாற்றி பூஜிப்பர்.

இறைவனையே வசப்படுத்தும் இசைக் கலைக்கும் அதிபதி சரஸ்வதி தேவியே என்பதால், சரஸ்வதி பூஜை நாளில் ராகங்கள் தோன்றிய புராண வரலாற்றைப் பார்ப்போம்.

(நவராத்திரி ஒன்பதாம் நாள் கோலம்)

 

 

தட்சனின் மகளாகப் பிறந்து சிவபெருமானை திருமணம் செய்துகொண்ட தாட்சாயணி, சிவபெருமானை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்துக்குச் சென்று அவமானப்பட்டு, யாகத் தீயில் விழுந்தாள். பிறகு அவள் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொண்ட புராணக் கதை நமக்குத் தெரியும். பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்டு, கயிலைக்குத் திரும்பும்போது, சங்கீதம் பாடி அவரை வரவேற்று மகிழ்விக்க தேவர்கள் விரும்பினர்.

(கர்னாடக இசைக்கலைஞர் பவ்யா கிருஷ்ணன் பாடிய நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான பாடலை இங்கு கேட்கலாம்)

 

அப்போது அங்கே வந்த நாரதர் தாம் சங்கீதம் இசைப்பதாகக் கூறினார். நாரதரின் இசையைக் கேட்கச் சகிக்காமல் ராகங்களே உரு மாறிவிட்டன. உடனே சிவபெருமான் தாமே இசைப்பதாகக் கூறி இசைத்தார். அப்போது ராகங்கள் தங்கள் இயல்புக்குத் திரும்பின. இப்படித்தான் ராகங்கள் உருவாகின.

சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி தேவியை பூஜித்து, கல்வியிலும், கலைகளிலும் புகழ் பெற்று சிறப்புற வாழ்வோம் ..

http://www.vikatan.com/news/spirituality/103601-let-us-worship-saraswathi-navaratri-series-day-9.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.