Jump to content

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100


Recommended Posts

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர்

 
 

எம்.ஜி.ஆர்

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!”

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா:

முனைவர் இராஜேஸ்வரி ஆங்கிலம் தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1992 முதல் அமெரிக்க ஐரோப்பிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். அவர்களில் சிலர் தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சிகள் செய்தபோது அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைத் திரட்டவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவியவர். பலதுறை நூல்களை மொழிபெயர்த்தவர்.  பல மொழிப்பயிற்சியிலும் ஆய்விலும் ஈடுபாடு கொண்டவர். 

இத்தொடர் எம்.ஜி.ஆரைப் பற்றிய தகவல் திரட்டு மட்டுமல்ல. அவரது ஒப்பனை வாழ்க்கையும் ஒரிஜினல் வாழ்க்கையும் இணைந்து எப்படி அவருடைய வெற்றியின் ஃபார்முலாவை உருவாக்கிக் கொடுத்தது என்பதையும் விளக்கும் சுவாரஸ்யமான தொடர்

இலக்கியமும் நாடகமும் திரைக்கலையும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழகத்தில், `எம்.ஜி.ஆர்' என்ற மூன்றெழுத்து நபர் நடத்தியிருக்கும் சாகசம், சரித்திரத்தில் இதுவரை காணப்படாத புதுமை. நாடகத்தில் ஆரம்பித்த அவரது வாழ்க்கைப் பயணம், திரையுலகில் கோலோச்சி, அரசியலில் நிறைவுபெற்றது. அவர் பிறந்து நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்த ஆண்டில், அவரின் வெற்றிக்கான சூட்சுமங்களில் சிலவற்றைக் காண்போம்...

ரசிகர் மன்றம்
‘நடிகன், நாடாள முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து தி.மு.க எள்ளி நகையாடியபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் அவரின் ரசிகர்கள்தான். இவர்கள்தான், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த `அண்ணா தி.மு.க' கட்சியின் தொண்டர்களாக தம்மை அறிவித்துக்கொண்டு கட்சிப் பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி நடத்தினர். கட்சி, அதற்கான கொள்கை, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை எனத் தொடங்கப்படும் முறைக்கு மாறாக, ரசிகர்களே தொண்டர்களாக மாறி எம்.ஜி.ஆரிடம் சென்று, `கட்சி தொடங்க வேண்டும்’ என வற்புறுத்தி, அவரைத் தம் தலைவராக ஏற்றுக்கொண்டது தமிழகத்தின் புதுமையான... மறக்க முடியாத வரலாறு.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்பது, தமது படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நடிகருக்காகத் தொடங்கப்பட்ட மன்றம் அல்ல. இந்த மன்றங்களை, நாம் சினிமா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. `கடவுள் இல்லை’ என்ற பாரம்பர்யத்தில் தோன்றிய தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கடவுள் பயம் இல்லாத கெட்டவர்கள், ஏழை ஏதிலி, படிக்காத பாமரர், ரெளடி, எம்.ஜி.ஆரை ரசிக்கும் பெண்கள் மோசமானவர்கள்... என்பதுபோன்ற எண்ணங்களும் பரவலாக இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவர்மீது தீவிர அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். 

எம்.ஜி.ஆருக்கு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர், தன் மனைவியின் தாலியை விற்று தொடங்கினார். அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் புற்றீசல்களாகத் தோன்றின. கோயில் இல்லாத ஊர் இருக்கலாம், குளம் இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் மன்றம் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் துளிர்த்தன.

எம்.ஜி.ஆர்
 

பிரதமர் திறந்துவைத்த மன்றம்!

எம்.ஜி.ஆருக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன.  ஆளும் கட்சியான காங்கிரஸ், எம்.ஜி.ஆருக்குச் சிறிதும் ஆதரவு காட்டாத காலத்திலேயே மக்களின் ஆதரவு எம்.ஜி.ஆருக்குப் பரிபூரணமாக இருந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள், அவரை வசூல் சக்கரவர்த்தியாக வைத்திருந்தன. அந்தமான் தீவில், எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயத்தில் அங்கு பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வருவதாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆர் ரசிகர்கள், பிரதமரைக் கொண்டே மன்றத்தைத் திறக்க முடிவுசெய்து, அதில் வெற்றியும் பெற்றனர். இந்திய வரலாற்றிலேயே, ஏன் உலக வரலாற்றிலேயே ஒரு பிரதமர் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தைத் திறந்துவைத்த பெருமை எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே. 

மன்றத்தைக் கலைத்துவிடு!

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் திரைப்படம் வெளியாகும் நாள்களில் கட் அவுட் வைப்பது, கூட்டமாகத் திரளும் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவது, இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை எதிரி ரசிகர்களிடமிருந்து பாதுகாப்பது... எனப் பல்வேறு பணிகளை அவர்கள் செய்துவந்தனர். ஒரு சமயம் எம்.ஜி.ஆருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாயிற்று. `தன்மீதான அதீத அன்பால் ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலபல வேலைகளில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டுவிடுகின்றனர்’ என்று கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அப்போது அவர்கள் தங்களின் உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக்கூறி, தங்களின் நியாயத்தை உணர்த்த முயன்றனர். எம்.ஜி.ஆருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. அவர்களைப் பார்த்து, `மன்றத்தைக் கலைத்துவிடுங்கள்' என்றார். 
கூட்டத்தில் இருந்த கோபக்கார ரசிகர், `அதைச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் சொல்லி நாங்கள் மன்றம் ஆரம்பிக்கவில்லை. படம் நடிப்பதுதான் உங்கள் வேலை. ரசிகர் மன்றம் நடத்துவது எங்கள் விருப்பம். எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்' என்றார். எம்.ஜி.ஆர் அசந்துபோய்விட்டார். ‘நம்மீது இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்களே... இவர்களது பாசத்தையும் பற்றையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே’ என நினைத்து, ‘இவர்கள்தான் தமது சொத்து, சுகம், வாழ்வு!' என்பதை உணர்ந்துகொண்டார். அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

எம்,ஜி.ஆர்

 

எங்க ஊர் எம்.ஜி.ஆர் இயேசுபுத்திரன்!
எம்.ஜி.ஆரையே தன் வாழ்வின் வழிகாட்டியாகக்கொண்டு வாழும் ரசிகர்கள் பல கோடிப்பேர் உண்டு. கன்னியாகுமரியைச் சேர்ந்த இயேசுபுத்திரன் என்பவர், கடலில் மூழ்கி இறக்க முயற்சி செய்பவர்களைக் காப்பாற்றுவதைத் தம் தலையாயக் கடமையாகக்கொண்டு வாழ்பவர்; கடலில் நீந்தும் ஆசையில் அங்கு இருக்கும் பாறைகளில் சிக்கி உயிரிழக்கும் பலரின் உடல்களைக் கரை சேர்த்தவர். அந்தப் பணிக்கான உந்துதல், எம்.ஜி.ஆர் நடித்த `படகோட்டி’ படம். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இயேசுபுத்திரன் ``சின்ன வயசுல இருந்து எம்.ஜி.ஆர்-னா எனக்கு அவ்வளவு ப்ரியம். படகோட்டியா நடிச்சதுல இருந்து அவரு மேல உசிராயிட்டு. எம்.ஜி.ஆர் மாதிரி சும்மா பேசினா லட்சியம் ஆகிடுமா? உதவின்னு வந்தா உதவணும் சார்'' என்று கூறும் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். ஏழைதான் என்றாலும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையே தன் கொள்கைகளாகக்கொண்டு வாழும் எளியவர், லட்சியவாதி.

ரத்தத்தின் விலை 15 ரூபாய்!
பழைய படங்களில், எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் மட்டுமே இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. மதுரை, சென்னை போன்ற பெரிய ஊர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் படங்கள் ஓடுவதைக் காணலாம். ரத்ததானம் பற்றிய விழிப்புஉணர்வு வந்த காலத்தில், அரசு மருத்துவமனைகளில் இளைஞர்கள் வந்து ரத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். சிலர் வாரம் ஒருமுறை வந்ததைக் கேள்விப்பட்ட மருத்துவர்கள், அதிர்ந்துபோயினர். அவர்களை விசாரித்தபோது எம்.ஜி.ஆர் நடித்த புதுப்படம் வெளியாகும் நாள்களில், இளைஞர் கூட்டம்  இவ்வாறு ரத்ததானம் செய்ய அதிக எண்ணிக்கையில் வந்த உண்மையைத் தெரிந்துகொண்டனர். இவர்கள், ‘நாம் சொன்னால் கேட்க மாட்டார்கள்’ எனக் கருதிய மருத்துவர்கள், அதை எம்.ஜி.ஆருக்குத் தெரியப்படுத்தினர். 

எம்.ஜி.ஆர் பதறிப்போய் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என் படத்தைப் பார்ப்பதற்காக  எவரும் உங்கள் ரத்தத்தை விற்கக் கூடாது. பணம் இல்லையென்றால், எனக்குத் தந்தி கொடுங்கள். நான் பணம் அனுப்பிவைக்கிறேன்’ என்றார். சிலர் அந்த வழியையும் கையாண்டனர். பணம் மணியார்டரில் வந்தது. படம் பார்த்து மகிழ்ந்தனர். ஆனாலும், ‘எம்.ஜி.ஆரிடமே பணம் வாங்கி அவர் படத்தைப் பார்ப்பதா!’ என்று மனம் வெதும்பினர். பிறகு, அவ்வாறு பணம் கேட்பதையும் ரத்தத்தை விற்பதையும் விட்டுவிட்டனர். 

எம்.ஜி.ஆர் ரசிகர்கள், `எம்.ஜி.ஆருக்கு, தாம் ஏதாவது செய்ய வேண்டும்' என நினைப்பார்களே தவிர, அவரிடம் எதையும் கேட்டுப் பெற விரும்புவதில்லை. `உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்று எம்.ஜி.ஆர் பலரிடம் கேட்டபோதும், ரசிகர்கள் `எங்களுக்கு எதுவும் வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்தாலே போதும் தமது ஜென்மம் பூர்த்தியடைந்துவிட்டதாகவே கருதினர். இதுவும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்.

எம்.ஜி.ஆர்

 

ரசிகையின் தீவிரப்பற்று!

‘எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கு, 1950 - 60களில் ‘அவள் நல்லவள் அல்ல’, ‘கடவுளுக்கு பயப்பட மாட்டாள்’ போன்ற அவப்பெயர்கள்  நிலவியபோதும் பெண்கள் தீவிர ரசிகையாகவே இருந்தனர். கிராமங்களில், `எம்.ஜி.ஆர் ரசிகையோடு வாழ மாட்டேன்’ என பஞ்சாயத்தைக் கூட்டிய வரலாறும் உண்டு. 

ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தில் தகராறு எனப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. கணவர், ``என் மனைவி எம்.ஜி.ஆர் படத்தைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை'' என்றார். மனைவியோ, ``இவருடன் நான் வாழ மாட்டேன். இவர் எப்போதும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறைத்துப் பேசுகிறார்'' என்றார். பஞ்சாயத்தார் கணவனிடம்,  ``எம்.ஜி. ஆரைப் பற்றி நீ எதுவும் குறைத்துப் பேசக் கூடாது. அவள் எம்.ஜி.ஆர் படம் பார்க்க நீ அனுமதிக்க வேண்டும். நீங்கள் தனித்தனியாக படம் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டில், வீட்டு விஷயம் மட்டுமே பேசுங்கள். சினிமா பற்றி இருவரும் பேசக் கூடாது'' என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

அரசியலில் ரசிகையர் புரட்சி! 
எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்து திண்டுக்கல்லில் முதல் தேர்தலைச் சந்தித்த நேரம். அப்போது அங்குள்ள காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் புது மருமகள் தலையில் இரட்டை இலையில் ரோஜா செருகியிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன... பொண்ணு அந்தக் கட்சியா?’ என்றார். அதில் வருத்தப்பட்ட பிரமுகரின் மகன், ‘ஆமாம். நமக்கு சரிவரலைன்னா திருப்பி அனுப்பிட வேண்டியதுதான்’ என்றார். அப்போது அங்கு வந்திருந்த பிரமுகர் ஒருவர் , இந்தப் பதிலால் அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘அதுதான் என் தலைவிதின்னா அப்படியே ஆகட்டும்’ என்றார். 

எம்.ஜி.ஆர்
 

இப்போது இரண்டாவது முறையாக அந்த விருந்தினருக்கு அதிர்ச்சி. ‘என்ன பெண் இவள், கணவர் சொல்படி கேட்காமல், அவர் வழிப்படி செல்லாமல் தனக்கென ஒரு கருத்து வைத்திருக்கிறாளே. அதுவும் `அப்படியே ஆகட்டும்' என்கிறாளே. ‘மன்னித்துவிடுங்கள். உங்கள் சொல்படி நானும் இனி காங்கிரஸ் அபிமானியாகவே மாறிவிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டாமா? அவளால் அவள் கணவருக்கு எவ்வளவு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் தன்னைப்போன்ற ஓர் அயலான் முன்னிலையில் அந்தப் பெண் இப்படிப் பேசியிருக்க வேண்டாமே’ என்று சங்கடப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் ரசிகைகள் இதற்கெல்லாம் அஞ்சுவது கிடையாது. பலர் பட்டென பதில் சொல்லிவிடுவர். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் அசந்துபோகும் அளவுக்குப் பெண்கள் தம் தலையில் இரட்டை இலையுடன்கூடிய பூவைச் சூடியபடி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளைப் பதிவுசெய்தனர். 

ரசிகைகள் முடிவுசெய்த ஆட்சி!
தம் ரசிகையரின் உள்ளக் கருத்தின் உறுதிப்பாட்டை நன்கு உணர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ஒரு பொதுக்கூட்டத்தில், `பெண்கள், தம் கணவர் சொன்னாலும் கேட்க மாட்டர்கள்; நான் சொன்னால் கேட்பார்கள். இது தாய்க்குலத்தின் கட்சி' என்றார். அதுபோல வேறு எவரும் நினைத்திருக்கக்கூட இயலாது. பெண்களும் அரசியல் மற்றும் ஆட்சி பற்றி தனித்து முடிவெடுக்க முடியும், அவர்களின் கருத்தும் சபையேறும், அதுவும் வெற்றிபெறும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகைகளே என்றால், அது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.

எம்.ஜி.ஆர்

பெண்களின் இந்த ரசிகப் பற்றுக்குக் காரணம் என்னவென்றால், படங்களில் அவர் பெண்களை மதித்த விதம் என்பது சத்தியவாக்கு. பல ஆண் விமர்சகர்கள், எம்.ஜி.ஆரை `ஆணாதிக்கவாதி' என்று குறை சொல்வதும் உண்டு. ஆனால், இலக்கியமும் திரைப்படங்களும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதே இந்தக் குற்றச்சாட்டுக்கான நேர்மையான பதில். சமூகத்தின் போக்கையும் மீறி எம்.ஜி.ஆர் தன் படங்களில் பெண்களை மன உறுதி படைத்தவர்களாக, செயல்திறன் படைத்தவர்களாகக் காண்பித்தது உண்டு. ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் மதனா (பானுமதி), ‘அரசகட்டளை’யில் வரும் அமுதா (சரோஜாதேவி), ‘அடிமைப்பெண்’ணில் வரும் ஜீவா (ஜெயலலிதா)... எனப் பல பெண் கதாபாத்திரங்களை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

 

- தொடரும்

http://cinema.vikatan.com/tamil-cinema/news/102811-i-shall-send-money-to-watch-my-movie-the-man-behind-the-mask-mgr-series-episode-1.html

Link to comment
Share on other sites

“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-2

 
 

எம்.ஜி.ஆர்

அத்தியாயம்-1 பகுதியை படிக்க க்ளிக் செய்க...

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.

திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

mgr

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென  ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார்.  எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.

எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

எம்.ஜி.ஆர்

அன்று அடிமைப்பெண்

`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

எம்.ஜி.ஆர்

`அடிமைப்பெண்'ணின் சாதனை

தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம்,  கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள்,  இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.

இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

எம்.ஜி.ஆர்

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’

‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.

பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'

`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவிஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

புஷ் குல்லா

`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.எம்.ஜி.ஆர்

1936-ம் ஆண்டில்  எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.

பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்

``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.

கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!

எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து  உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.

நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு

சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.

ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா

கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.

தாயின் வைராக்கியம்

வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.

சூரக்காடு ஏன்?

எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

ஜீவா – காதலின் கௌரவம்

எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர்  நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.

குழந்தைகள், ரசிகரான கதை

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.

`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.  

இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?

எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

எம்.ஜி.ஆர்

கட்சிக் கொள்கை

எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார்.  `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...'  போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.

`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார்.  பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.

பாடல் காட்சி மற்றும் சண்டைக்காட்சி வில்லியாக வரும் பவளவல்லி பாத்திரப்படைப்பு குறித்து, அடுத்த கட்டுரையில் காணலாம்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/103004-how-was-the-film-‘adimaippenn’-gets-succeeded-the-man-behind-the-mask-mgr-series-episode-2.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரைச் சந்திக்க ரசிகைகள் என்னவெல்லாம் செய்வார்கள்? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-3

 
 

MGR 100

அத்தியாயம்-2 பகுதியை படிக்க க்ளிக் செய்க...

 

‘எம்.ஜி.ஆர் வருகை என்பது, எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பது' எனச் சொல்வதைவிட, ரசிகர்களுக்கான திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள், மதுரையின் பிரதான சாலையில் குடியிருந்தோம். அந்த வழியாகத்தான் அவர் தங்கியிருக்கும் பாண்டியன் ஹோட்டல் மற்றும் சர்க்கியூட் ஹவுஸுக்குப் போய் வருவார். எம்.ஜி.ஆர் மதுரைக்கு வந்துவிட்டால், எங்கள் மனம் துள்ளும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவருடைய அன்றைய நிகழ்ச்சி விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களின் பணிகளை வரைமுறைப்படுத்திக்கொள்வர்.  எம்.ஜி.ஆர் அந்தச் சாலை வழியாக வரும்-போகும் நேரங்களில் அவரைப் பார்ப்பதற்காக தங்களைத் தயார்படுத்திக்கொள்வர்.

எம்.ஜி.ஆர்

எந்தப் பக்கம் உட்காருவார் எம்.ஜி.ஆர்?

எம்.ஜி.ஆர் கார் ஓட்டுநருக்கு அருகில் உட்கார மாட்டார். அவர் பின் இருக்கையில்  இடதுபுறம் மக்கள் தன்னைப் பார்க்க வசதியாக உட்கார்ந்து கும்பிட்டபடியோ, டாட்டா காட்டியபடியோ போவார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? எம்.ஜி.ஆர் பாண்டியன் ஹோட்டலுக்குப் போகும்போது எங்கள் வீட்டுப் பக்கமாக உட்கார்ந்திருப்பார். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் சுமார் 17 வீடுகள் இருந்தன. அடுத்த இரண்டு தெருங்களிலும் அதே மாதிரி பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. ஏறத்தாழ அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க நடைபாதையில் குழுமிவிடுவர். இதில் எங்கள் தெருக்காரர்கள் எம். ஜி.ஆர் எந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறாரோ, அந்தப் பக்கம் போய் நின்று அவரைப் பார்க்க ஆவலாகச் செயல்படுவார்கள்.

பைலட் வண்டி, சைரன் சத்தம் எல்லாம் சென்றபிறகு, எம்.ஜி.ஆர் கார் வரும் நேரத்தில், ஒருத்தி கைப்பிள்ளையோடு ரோட்டைக் கடந்து ஓடுவாள். பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ்காரருக்கு உயிரே போய்விடும். அடுத்து அவளின் சிறிய பிள்ளைகள் இருவர் ஓடுவார்கள். அதாவது இப்போது எம்.ஜி .ஆர் பாண்டியன் ஹோட்டல் அல்லது சர்க்கியூட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு செல்லப்போகிறார். அதனால் அவர் அந்தப் பக்கம் அமர்ந்து எதிர் நடைபாதையில் இருப்பவர்களைத்தான் பார்க்க வாய்ப்பு அதிகம். எனவே, ஆண்களும் பெண்களும் இந்த ஞாபகம் வந்தவுடன் இந்த பிளாட்பாரத்திலிந்து அந்த பிளாட்பாரத்துக்கு ஓடுவார்கள்.

ஒருமுறை கன்னியாகுமரிப் பகுதியைச் சேர்ந்த இளம் போலீஸ் ஒருவர் பந்தோபஸ்துக்கு வந்திருந்தார். அவருக்கு `சி.எம் வர்ற நேரத்தில் இந்தப் பெண்கள் ஏன் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்?' என்று புரியவில்லை. மக்களின் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. `எங்கு இருந்து பார்த்தாலும் எம்.ஜி.ஆர்-தானே!' என அவர் நினைத்தார். முடிந்தவரை அருகில் இருந்து பார்க்கும் மனதிருப்தி, தொலைவில் இருந்து பார்க்கும்போது கிடைக்குமா என்பது அந்த போலீஸ்காரருக்குப் புரியவில்லை. பெண்களிடம் திட்டு வாங்கினார்.

இரவில் வரும்  எம்.ஜி.ஆர்.

தேர்தல் பிரசாரப் பணிகளில் எம்.ஜி.ஆர் ஈடுபடும்போது, இரவு இரண்டு மூன்று மணிக்குக்குத்தான் இருப்பிடம் திரும்புவார். வயதானவர்களும் இளைஞர்களும் பத்து பதினொரு மணி வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். `சரி, போய் தூங்குவோம். அவர் வரும்போது வருவோம்!' என்று சொல்லிக்கொண்டே தூங்கப் போய்விடுவார்கள்.

மக்கள் ஆழ்ந்து உறங்கும் வேளையில் திடீரென சைரன் ஒலிக்கும். அவ்வளவுதான், சேலையை மேலிலும் தோளிலும் அள்ளிப் போட்டுக்கொண்டு பெண்கள் ஓடிவருவார்கள். அப்படி ஒரு பரபரப்பு. அம்மாவோடு தூங்கும் கைக்குழந்தைகளை அப்படியே கையில் ஏந்திக்கொண்டு வந்து நிற்பார்கள். இவர்கள் ஓடி வந்ததில் மற்ற பிள்ளைகளும் மாமியார் மாமனார்களும் விழித்தெழுந்து தட்டுத் தடுமாறி வந்துவிடுவார்கள். பிளாட்பாரத்துக்கு வந்த பிறகு, சேலை ரவிக்கையைச் சரிசெய்து சீலையை இழுத்துக்கட்டிக்கொள்வார்கள். குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொள்வார்கள். எம்.ஜி.ஆருக்குத் தெரியும், இங்கு நம் ரசிகர்கள், அபிமானிகள் நிற்பார்கள் என்பது.  சில மீட்டர் தொலைவிலேயே காருக்குள் லைட் போடப்படுவதைப் பார்க்கலாம். இங்கு நிற்கும் ரசிகர் ஒருவர், `எம்.ஜி.ஆர் வாழ்க' என்று கோஷம்போடுவார். எம்.ஜி.ஆரும் சிரித்தபடியே கையை அசைத்துச் செல்வார்.

எம்.ஜி.ஆர்

அப்பாடா... பார்த்துவிட்டோம்!

`எம்.ஜி.ஆரைப் பார்த்தாகிவிட்டது. இனி தூங்கப்போகலாமே!' என்று பெண்கள் வீட்டுக்குப் போக மாட்டார்கள். உடனே கணவன்மாரை காபி வாங்கி வரச் சொல்வார்கள். அந்தப் பகுதியில் காபி கடைகள் இரவு இரண்டு இரண்டரை மணி வரை திறந்திருக்கும். பிறகு, அதிகாலை நான்கு மணிக்குத் திறந்துவிடும். அதுவும் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார் என்றால், அவர் ஹோட்டலுக்குத் திரும்பிப் போகும் வரை திறந்துதான் இருக்கும். இனி சில்வர் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று பேர் காபி வாங்கி வருவார்கள். அதை ஆளுக்கு அரை டம்ளர் ஊற்றிக் குடிப்பார்கள். அரை மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு, `அவர் தூங்கட்டும் காலையில் வருவார் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு, தூங்கப் போய்விடுவார்கள்

இவ்வாறாக மதுரைக்கு வரும் எம்.ஜி.ஆர் ஒரு வாரம் வரைகூட இருப்பார். அந்த வாரம் முழுக்க மதுரை மக்களுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். அந்தச் சாலையில் நேருஜி, காமராஜர், இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, பக்ருதீன் அலி அகமது, நேப்பாளத்து ராஜா, தானே கார் ஓட்டிகொண்டு வந்த ராஜீவ் காந்தி, அண்ணா, கலைஞர், ஜெயலலிதா எனப் பலரையும் பார்த்திருந்தாலும் எம்.ஜி.ஆரின் வருகை மட்டுமே வீட்டு விசேஷம்போல கலகலப்பாக இருக்கும்.

`அடிமைப்பெண்' திரைப்பட விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர்

`அடிமைப்பெண்' படம் சிந்தாமணியில் வெளியிடப்பட்டு வெற்றிநடைபோட்டது. அப்போது எம்.ஜி.ஆர் மதுரைக்கு வருகை தருவதாக செய்தி வந்தது. எம்.ஜி.ஆருடன் நடித்த மற்ற கலைஞர்களும் மேடையில் தோன்றுவார்கள் என்பது தெரிந்ததும், எல்லோரும் ஜெயலலிதாவைப் பார்க்கத் தயாரானார்கள். மே தினத்தன்று (1969) வெளியான இந்தப் படம், 25 வாரங்கள் ஓடிய பிறகு அக்டோபர் 22 அன்று வெற்றி விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர்., விமான நிலையத்திலிருந்து நீல நிற வேனில் வந்துகொண்டிருந்தார். புஷ்குல்லா வைத்த எம்.ஜி.ஆர்.,  பச்சையும் இல்லாமல் நீலமும் இலாமல் ஒரு கலரில் சேலை கட்டி தலையில் பன் கொண்டை போட்ட ஜெயலலிதா, அவருக்குப் பின்னால் பண்டரிபாய் ஆகியோர் வேனில் வந்துகொண்டிருந்தனர். 

எம்.ஜி.ஆர்

ஜெயலலிதாவைப் பார்த்தோம்

`அடிமைப்பெண்' விழாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி ஜெயலலிதாவை சத்துணவுத் திட்டத்தில் ஈடுபடுத்திய சமயம். வெள்ளை நிறத்தில் கட்சி பார்டர் போட்ட சேலை அணிந்து எங்கள் பகுதி வழியாக ஒருநாள் காரில் சென்றார். அப்போது அவரை நன்றாகப் பார்த்தோம். அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் `வெள்ளி' என சிலர் சொல்ல, படித்த இளைஞர் ஒருவர் `அது பிளாட்டினம் தங்கத்தைவிட விலை அதிகம்' என்றார். எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சியோ மன நிறைவோ இல்லை. ஒருவித பயமும் அந்நியத்தன்மையும் ஏற்பட்டன. ஜெயலலிதா, காருக்குள் கைகுவித்து கும்பிட்டபடி உட்கார்ந்திருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி கார் சைடில் நின்றவர்களைப் பார்க்கவோ கை அசைக்கவோ இல்லை. அது, அன்று எங்கள் பகுதியினரால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ``அந்தப் புண்ணியவான் ராத்திரி எந்நேரமானாலும் முழிச்சு, கையைக் காட்டிட்டுப் போவாரு. இது என்ன திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குது!’’ என்று பேசினர்.

குங்குமப்பொட்டு வைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் வரும்போது அவரைப் பார்க்கும் பலருக்கும் `அவரைப் பார்த்துவிட்டோம்!' என்ற மகிழ்ச்சியும் மனதுக்குள் ஒரு துள்ளலும் ஏற்படுமே தவிர, என்ன பார்த்தோம், அவர் கறுப்பா சிவப்பா, என்ன சட்டை போட்டிருந்தார், என்ன வாட்ச் கட்டியிருந்தார் என்றெல்லாம் தெரிவது கிடையாது. அது ஒரு தெய்வ தரிசனம். என்ன பார்த்தோம் என்பது தெரியாது. ஆனால், பார்த்துவிட்டோம் என்ற பரவசம் தோன்றும். அது ஒரு மனநிறைவைத் தரும்.

இதில் நடுவயதுப் பெண் மட்டும் சற்று வித்தியாசமானவர். அவர் திருமணத்துக்கு முன்பு சிவாஜி ரசிகை. அவர் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். ஆனால், கணவர் எம்.ஜி.ஆர் ரசிகர். கணவரோடு சேர்ந்து மெள்ள மெள்ள ஒவ்வொரு எம்.ஜி.ஆர் படமாகப் பார்த்து எம்.ஜி.ஆர் ப்ரியர் ஆகிவிட்டார். இதற்கிடையே எம்.ஜி.ஆரும் முதலமைச்சராகிவிட்டார். இவர் கணவரும் கட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டார். எனவே, இந்தப் பெண் எம்.ஜி.ஆரை `பெரியாம்பிளை' என்றுதான் அழைப்பார். பெயர் சொல்லவும் பதவியை வைத்தும் குறிப்பிட மாட்டார்

இந்த நடுவயதுப் பெண் சில சமயம்  `எம்.ஜி.ஆர் வெற்றிலை போட்டிருக்கிறார். வாயெல்லாம் சிவந்திருக்கிறது' என்பார். சில சமயம் `பெரியாம்பிளை நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார்' என்பார். மற்றவர்கள் `ஐயய்யோ... அதை கவனிக்கவில்லையே!' என்பர். ஒருவேளை இவர் சிவாஜி ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் ரசிகர் ஆனதால், இவரால் மட்டுமே இப்படி கவனிக்க முடிந்ததோ என்னவோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி. என்.சிதம்பரம் செட்டியார், எம்.ஜி.ஆர் மதுரை வரும்போது மீனாட்சி அம்மன் கோயிலின் ஸ்தானிகபட்டர் விமான நிலையத்தில் அவருக்கு பூரணக் கும்பமரியாதை செலுத்தி திருவிளையாடல் புராணத்திலிருந்து...
  

மல்குக வேதவேள்வி வழங்குக சுரந்து வானம்

பல்குக வளங்கள் எல்லாம் பரவுக அறங்கள் இன்பம்

நல்குக உயிர்கட்கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்

புல்குக உலகமெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க 

என்ற பாடலைப் பாடி வாழ்த்தி, நெற்றியில் குங்குமம் இடுவாராம். அந்தக் குங்குமத்துடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கலாம். இவற்றைப் படித்த பிறகு, எம்.ஜி.ஆரின் நெற்றியில் குங்குமம் இருக்க வாய்ப்பு இருந்ததாக உணர்ந்தேன்.

எம்.ஜி.ஆர்

வெற்றிலை போட்டு வாய் சிவந்த எம்.ஜி.ஆர்

`எம்.ஜி.ஆர்., வெற்றிலை போடுவாரா... மாட்டாரா?' என்ற கருத்து எங்களிடம் இருந்ததால், அந்த நடுவயதுப் பெண் கூறியதை பலரும் அப்போது மறுத்துப் பேசினர். எம்.ஜி.ஆர் ஒருமுறை சாப்பாடு ஜீரணிக்கவேண்டி வெற்றிலை கேட்டிருக்கிறார். அப்போது வழியில் ஒரு பெண் வெற்றிலை விற்றதைப் பார்த்தவர்கள், அந்த அம்மாவிடம் சென்று `எம்.ஜி.ஆருக்கு வெற்றிலை வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்கள் . அந்த அம்மா காசு வாங்க மறுத்தும், கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு வெற்றிலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைப் படித்த பிறகு, `அவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதனால் அன்றுகூட அவர் வெற்றிலை போட்டிருக்கலாம்' என்று என் மனம் அமைதி அடைந்தது.

எம்.ஜி.ஆரின் கைராசி

எங்கள் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள், அக்காள் தங்கையை திருமணம் செய்துகொண்டு அசைவ உணவகம் ஒன்றை நடத்திவந்தனர். அந்தப் பெண்களில் இளையவர் எம்.ஜி.ஆர் ரசிகை. அவர் எம்.ஜி.ஆருடன் கை குலுக்க வேண்டும் என்று தன் கணவரிடம் தன் ஆசையைத் தெரிவித்தார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு, எம்.ஜி.ஆர் வரும் பாதையில் அவர் காரின் வேகம்  குறையும்படி தன் பணியாளர்களைக் கூட்டமாக நிற்குமாறு சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் வந்தார். கூட்டமாக நின்றவர்கள், எம்.ஜி.ஆரின் காருக்கு அருகில் ஓடினர். இந்தப் பெண்ணும் கூடவே ஓடிசென்று காருக்குள் இருந்த எம்.ஜி.ஆரிடம் கை கொடுத்தார். எம்.ஜி.ஆர் சிரித்துவிட்டார். இந்தப் பெண்ணுக்காகத்தான் இந்த ரகளை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. இந்தப் பெண் கை கொடுத்ததும் அந்தப் பணியாளர்கள் விலகி நின்றுவிட்டனர். எம்.ஜி.ஆர் கைராசி, இன்று அவர்கள் உணவகம் மதுரையிலேயே டாப் உணவகமாக இருக்கிறது. மதுரையின் நவீன அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரிடம் ஓர் ஆசை

ஒரு பெண்ணின் தாயார் மட்டுமல்ல, அவர் குடும்பமே  எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான்.  அவர்களும் எங்கள் பகுதியில்தான் குடியிருந்தனர். இந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் கணவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்களே. இந்தப் பெண்ணின் முதல் குழந்தைக்கு எம்.ஜி.ஆரின் அம்மா பெயரான `சத்யா' என்பதைச் சூட்டியிருந்தனர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகளில் பலருக்கு `சத்யா' என்று பெயர் சூட்டியிருப்பர்.

ஒருநாள் எம்.ஜி.ஆர் மதுரை வந்தபோது இந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியிடம் `வா, நாம் எம்.ஜி.ஆரைப் பார்த்து நம் சத்யாவை அவரிடம் கொடுத்து வாழ்த்து பெறலாம்' என்றார். இந்தப் பெண்ணும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கணவருடன் கிளம்பினார்.  அப்போது அவர் மனம் சலனமற்று இருந்தது. எம்.ஜி.ஆர் தன் அறையில் பல கட்சிக்கார்கள் சூழ, ஒளி பொருந்திய முகத்துடன் இருந்தார். அவரை நெருங்கியதும் இந்தப் பெண்ணுக்கு அந்தச் சூழ்நிலையே மறந்துவிட்டது. குழந்தை சத்யாவை எம்.ஜி.ஆர் காலடியில் போட்ட அந்தப் பெண், எம்.ஜி.ஆரை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டார். வெகுநேரம் அப்படியே இருந்தார். யார் விலக்கினார்கள். யார் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் என அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்ததும், ஏதோ பித்து பிடித்ததுபோல் இருந்தார். ஒரு வாரம், பத்து நாள் கழித்துதான் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவருக்கு அப்போதும் பெரிய கவலை, `எம்.ஜிஆரைக் கட்டிப்பிடித்தோமே, அப்படியே அவரைத் தூக்கி ஆலவட்டம் சுற்றியிருக்கலாமே!' என்று. எம்.ஜி.ஆரைப் பற்றி யார் அவரிடம் பேசினாலும், இந்தச் சம்பவத்தைச் சொல்லி மாய்ந்துபோவார்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/103228-what-all-the-women-fans-will-do-to-meet-mgr-the-man-behind-the-mask-mgr-series-episode-3.html

Link to comment
Share on other sites

‘எப்போதும் இளமைத் தோற்றம்!’ எம்.ஜி.ஆருக்கு சாத்தியமானது எப்படி? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-4

 
 

‘வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்...’ என்ற பாடல், எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளிவிளக்கு’ படத்துக்காக எழுதப்பட்டது (ஆனால் அது எதிர்நீச்சல் படத்தில் பயன்படுத்தப்பட்டது) எவ்வளவு பொருத்தம் என்பதை, அவரது சொந்த வாழ்க்கையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

MGR

 

எம்.ஜி.ஆர் பிறந்தது முதல் அவர் மரணிக்கும் வரை அவருக்கு வாழ்க்கை மலர்ப்படுக்கையாக இல்லை. சிறுவயதில் வறுமை, பிறகு தனிமை, திரைத்தொழிலில் லேட் பிக்கப். அதில் தாக்குப்பிடிக்க அவர் கையாண்ட உத்திகள் அல்லது சிரமங்கள், அரசியலில் நெருங்கியவர்களே எதிரிகளாக மாறியது, கடைசிக்காலத்தில் கட்சிக்காரர்களும் குடும்பத்தினரும் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டதால், அவர்களை தலையிடவிட வேண்டாம் என்று நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டது என, தொடர் போராட்டங்களாகவே எம்.ஜி.ஆர் வாழ்க்கை அமைந்துவிட்டது.

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

‘மர்மயோகி’ படத்தில் நடிக்கும்போது “இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்'' என்று அதன் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரம்பிள்ளை எம்.ஜி.ஆரிடமும் அவர் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, “நாற்பது வயதுக்குமேல்தான் எம்.ஜி.ஆருக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது'' என்றார். உடனே எம்.ஜி.ஆர் அவரிடம், “ஏன்யா வயசைப் பற்றி இப்போ பேசுற!'’ என்று அதட்டுகிறார். ‘மர்மயோகி’ 1951-ம் ஆண்டில் வெளிவந்தது. அதன் படப்பிடிப்பு 1950-ம் ஆண்டில் நடந்திருந்தாலும், அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது 40-க்குமேல். அதாவது 41 என்றுகூட வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தாலும் எம்.ஜி.ஆர் பிறந்தது 1910-ம் ஆண்டுக்கு முன்புதான் இருக்கவேண்டும். ஆக, அவர் பிறந்த வருடம் 1917 என்பது சரியல்ல. 

மேலும், ‘அவர் பத்து வருடங்கள் முந்திகொடுத்திருக்கிறார்' என்று எதிர் அணியினரின் விமர்சனத்தை மொத்தமாகவும் ஒதுக்கிவிட முடியாது. அவர் பரங்கிமலையில் தேர்தலைச் சந்தித்தபோது, அவர் தன் பிறந்த தேதியை வேட்பாளர் மனுவில் குறிப்பிடவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அப்போதுதான் இந்த 1917 விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. நம்முடைய தேடல், அவர் எப்போது பிறந்தார் என்பதல்ல. அவர் சினிமாவில் வலுவாகக் காலூன்றியபோது அவருக்கு வயது 44-க்குமேல் இருக்கலாம். ஏனென்றால், ‘மர்மயோகி’ வெற்றிபெற்ற பிறகும்கூட 1952, 1953-ம் ஆண்டில் வெளிவந்த படங்களைக் காட்டிலும் 1954-ம் ஆண்டில் ‘மலைக்கள்ளன்’ வெளியான பிறகுதான் அவருக்கு தொடர் வெற்றிகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர்

‘மலைக்கள்ள’னுக்குப் பிறகு

தமிழுக்கு ‘வெள்ளித் தாமரை’ விருது வாங்கித் தந்த படமும், தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளிவந்து வெற்றிவாகை சூடியதுமான ‘மலைக்கள்ளன்’ குறித்து, பிறகு விரிவாகப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர்., தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக, வெற்றி நாயகனாக மாறியபோது எதிர்ப்பும் அதன் கூடவே வந்தது. ஆரம்பம் முதல் அவரை ‘கிழவன்’ என்றே பலரும் விமர்சித்தனர். தங்கள் பேச்சில் எம்.ஜி.ஆரைக் `கிழவன்' என்றே குறிப்பிட்டனர். வசனமும் நடிப்பும் இளமையும் திரைத் துறைக்கு முக்கியம் எனக் கருதியவர்கள், காதல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மட்டுமே எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதி, அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘நேற்று இன்று நாளை’ படம் எடுத்த அசோகன்கூட, ‘கிழவன் ரொம்ப இழுத்தடிக்கிறான்’ என்று சொன்னது, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டிவிட்டது. ஆக, திரையுலகில் வெற்றிபெற்ற நாள் முதல் எம்.ஜி.ஆர், ‘கிழவன்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானார். அதை அவர் எதிர்கொண்டவிதம் ஆச்சர்யமானது. 

`மீனவ நண்பன்' வரை [முதலமைச்சராகும் வரை]

எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார். அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார். அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார். 

அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவர் கிட்டத்தட்ட எழுபது வயதை எட்டியிருந்தார்.

எம்.ஜி.ஆர்

கட்டுடல் பராமரிப்பில் தொடர் முயற்சி

எம்.ஜி.ஆர் ., வயதான காலத்திலும் தனக்கு வாய்ப்பு வந்தால் அதற்கு, தான் தகுதி உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதிலேயே குஸ்தி, சிலம்பம், பளுதூக்குதல். உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். ஐசோமெட்ரிக் பயிற்சிக்குரிய கருவி வாங்கக் காசு இல்லாத காரணத்தால், ஒரு மரத்தில் குனிந்து சாய்ந்து நின்று அந்தப் பயிற்சியைச் செய்து வயிற்றையும் மார்பையும் வனப்பாக வைத்திருந்தார். பளுதூக்குவதில் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றும் நம்பியாரைத் தோற்கடிக்கும்வகையில் அதிக பளுதூக்கிக் காட்டுவார். இதனால்தான் ‘அன்பே வா’ படத்தில் ‘ஃபைட்டிங் புல்’ என்ற வீரரை அவரால் உயரே தூக்கி கீழே எறிய முடிந்தது. வேறு பல சண்டைக் காட்சிகளிலும் அவர் வில்லனையும் ஸ்டன்ட் ஆள்களையும் முதுகில் தூக்கி கீழே எறிவது அவருக்கு சிரமமில்லாமல் இருந்தது. 

எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும், வடபழனியில் இடம் வாங்கி அங்கு மணல் கொட்டி தன் ஸ்டன்ட் நடிகர்களை வீர விளையாட்டுகளில் பயிற்சி பெறவைத்தார். இன்று அந்தத் திடல் அவர் பெயரில் `ஜானகி ராமச்சந்திரன் கலாலயம்' [ஜே. ஆர். கே] என்ற பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. தன்னைபோல தன் ஸ்டன்ட் பார்ட்டியும் தினமும் வீர விளையாட்டுகளில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்கவேண்டும் என்பதில் அக்கறைகாட்டினார். அவர்களுக்கு திருமங்கலத்தில் 48 வீடுகள் கட்டித்தரவும் முன்வந்தார். ஆனால், அவர்கள்தான் `அந்தப் பகுதி சிட்டியைவிட்டு தூரமாக இருக்கிறது' என மறுத்துவிட்டார்கள். 

யானைக்கவுனி பகுதியில் அவர் வாழ்ந்தபோது செய்த பயிற்சிகளை, தன்னுடன் சண்டைபோடும் சங்கர் போன்ற ஸ்டன்ட் நடிகர்கள் தொடர்ந்து செய்து பழக வேண்டும் என வலியுறுத்திவந்தார். அவர்களுக்கும் ஸ்டன்ட் திறமைகளை வளர்த்துவிட்டு அவர்களாலும் தனது சண்டைக்காட்சிகள் பிரமாதமாக அமையும்படி பார்த்துக்கொண்டார்.  கடின முயற்சிகளை மேற்கொண்டு, எம்.ஜி.ஆர் தன் முதுமையை வென்று காட்டினார். இந்த வகையில் அவர் விதியை தன் மதியால் வென்றார்.

எம்.ஜி.ஆர்

சுட்டதால் வந்த இளமை!

‘பட்டுச்சேலை காத்தாட...’ பாடல், மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து மாலைக்குள் ஷூட் செய்த பாடல். அதில் நடித்த எம்.ஜி.ஆர் ‘நான் ரொம்ப குண்டா இருக்கிறேன்ல’ என்று இந்தப் பாடல் காட்சியைப் பார்த்துச் சொன்னாராம். இவ்வாறு தன் உடல் எடைகுறித்து கவலைப்பட்ட எம்.ஜி.ஆருக்கு, உடல் எடை குறைப்பு தானாகவே ஏற்பட்டது. அதுதான் கடவுள் அளித்த கொடை. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் தங்கி இருந்த எம்.ஜி.ஆர் வீடு திரும்பியதும், அவர் எடை குறைந்து இளமைத் தோற்றத்துடன் காட்சியளித்தார். 

ஜெயலலிதாவுடன் நடிக்க உயரத்திலும் தோற்றத்திலும் நிறத்திலும் பொருத்தமாகத் தோன்றினார். ‘காவல்காரன்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது, அவரைப் பார்த்தவர்கள் இருபது வயது குறைந்ததுபோல தோன்றியதைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர். கடைசிவரை தன் எடை கூடாமல் பார்த்துக்கொண்டார். இப்படி இயற்கை அவ்வப்போது அவருக்கு சில வரங்களை அனுகூலமாக அளிக்கும். அது அவரது முற்பிறவி பலனோ அல்லது அவரது கொடையின் பலனோ தெரியவில்லை.

தலைமுடி பராமரிப்பு

எம்.ஜி.ஆர் படங்களில் விதவிதமான விக் வைத்திருப்பார். அவர் ஹேர்ஸ்டைலைப் பார்த்தவுடனேயே, ‘இது இந்தப் படம்’ எனச் சொல்லிவிடலாம்.  சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில், அவருக்கு தலைமுடியில் முன்பக்க கர்லிங் வரவேண்டும் என்பதற்காக அடுப்பில் கம்பியைக் காயப்போட்டு முடியில் நெட்டு நெட்டாக சூடு வைப்பாராம். இதனால் அந்த முடி சூடுபட்ட இடத்தில் கருகி, அதற்குமேல் வளராமல் நின்றுவிடும். இதை இப்போது `ஃபயரிங் டெக்னிக்' என்கின்றனர். அவருடைய வறுமையும் தொழில் பக்தியும்தான் இதுபோன்ற விஷப் பரீட்சைகளுக்கு இட்டுச்சென்றன. இவ்வாறு சூடு வைத்ததால், அவருக்கு தலைமுடி அவர் நினைத்தவகையில் அமையவில்லை. அங்கங்கே எரிந்து வளராமல் நின்றுவிட்டது. 

இதனாலும் முன் வழுக்கை விழத் தொடங்கியதாலும், அவர் ‘திருடாதே‘ படம் முதல் தொடர்ந்து விக் வைத்துக்கொள்ள தொடங்கினார். வெளியே விழாக்களுக்கு வரும்போது நிஜ முடியுடன்தான் வந்தார். ‘அடிமைப்பெண்’ வெற்றி விழாவுக்கு வரும்போது தலையில் புஷ்குல்லா வைக்க ஆரம்பித்திருந்தார். மொத்தமாக வழுக்கை விழுந்து விக் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக ஆரம்பத்திலேயே விக் வைத்து விதவிதமாக முடியலங்காரம் செய்துகொள்வது புத்திசாலித்தனமானது என்று எம்.ஜி.ஆர் கருதியிருக்கலாம். 

எம்.ஜி.ஆர்

இளமை உணர்வு

‘ஓர் ஆண், இளமையாக உணரும் வரை இளமையாக இருக்கிறான். ஒரு பெண்ணோ, இளமையாகத் தோன்றும் வரை இளமையாக இருக்கிறாள்’ என்பர். அதுபோல எம்.ஜி.ஆர் தான் படங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் தோற்றத்திலும் தான் இளைஞன் என்பதை உறுதிப்படுத்தும்விதமாகக் காட்டுவார். `அடிமைப்பெண்’ படத்தில் ராணி பவளவல்லி அவருக்கு தண்டனை கொடுக்கும் காட்சியில் அவர் ஆர்ம்ஸ் காட்டுவதை ரசிப்பதற்காக பலமுறை அந்தப் படத்தைப் பார்க்க திரை அரங்குக்குப் போனதாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதுபோன்ற காட்சிகள் இளைஞர்களைக் கவரும் என்பதால், எம்.ஜி.ஆர் இவற்றில் அதிக அக்கறை காட்டுவார். அரங்கில் இந்தக் காட்சிக்கு அதிக கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் இருக்கும். பாடல் காட்சி ஒன்றில்கூட எம்.ஜி.ஆர் சும்மா நிற்க மாட்டார். தனது காட்சி எதையும் வீணாக்க மாட்டார். ஒவ்வொரு காட்சியும் தனக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். இதை எடிட்டிங்கில் தானே ஈடுபடுவது மூலம் சாதித்துக்காட்டுவார்.

‘வேட்டைக்காரன்’ படக் காட்சிகளில் இவருடைய துள்ளல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். `மதுரை வீரன்' படத்தில் பொம்மியை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பிறகு டி.எஸ்.பாலையாவிடம் கேலி பேசும்போது அவர் துள்ளலும் குதியாட்டமும் அவர் வயதை மறைத்துவிடும். இந்தக் காட்சியை எதிரியும் வெகுவாக ரசிப்பர். அதுவும் அவர் சிரித்துக்கொண்டே இரண்டு கால்களையும் சேர்த்து ஒரு குதி குதிப்பார் பாருங்கள். அந்த முகபாவம், கலகலவென்ற சிரிப்பு. உண்மையில் ஒரு வாலிபன் அந்த இடத்தில் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பான். அவ்வளவு பொருத்தமான, உற்சாகச் சித்திரிப்பு மற்றும் காட்சியமைப்பு. 

எம்.ஜி.ஆர் டான்ஸ் மூவ்மென்ட்டுகளில் அவர் மண்டிபோட்டு ஆடும் ஸ்டெப்ஸ் மற்றவர்களைவிட அவரை வித்தியாசமாகக் காட்டும். இது வயதானவர்களால் போட முடியாத கடினமான ஸ்டெப்கள். அவர் மிகவும் எளிதாகப் போட்டுவிடுவார். இதனால் அவர் நிஜ வயதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் இளமை உணர்வை ஏற்படுத்துவார். அவர் படங்களில் பல்வேறு விசேஷ அம்சங்களுடன் நடனக் காட்சிகள் அமைக்கப்பட்டாலும், அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவை அவரது விரைவான உடல் அசைவும் துறுதுறுப்பும் சிரித்த முகமும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு முகம், உடல் அசைவு, துறுதுறுப்பு என அனைத்து அம்சங்களும் இளமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டதுதான் அவரை இளைஞராக உணர்த்தியது. 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை தானே பல முறை இயக்குவதன் ரகசியம், தன் இளமைத் தோற்றத்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதுதான். அவர் கேமரா கோணம், எடிட்டிங் போன்ற விஷயங்களை ஆரம்ப காலத்திலிருந்தே தெரிந்துவைத்திருந்ததால், தன் காட்சிகளைச் சிறப்பாகக் கொண்டுவருவதில் அவர் தேர்ச்சிபெற்றிருந்தார். தன் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுத்ததே இல்லை. தன்னை பற்றிய தவறான இமேஜை ஏற்படுத்தும் படங்களை, செய்திகளை யாராவது வெளியிட்டால், அவர்களை உண்டு இல்லை எனச் செய்வதிலும் அவர் தயங்கியதேயில்லை. எதிரிகளை ஒடுக்கிவைப்பதில், அவர் கடைசிவரை கவனமாகவே இருந்தார். அவர் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நம்பும் மக்களும், அவருக்கு ஆதரவாக நின்றனர். 

புறநானூற்று பாடல் ஒன்றில், ‘மன்னன் கரிகாலன், பகைவனுக்கு சுட்டெரிக்கும் சூரியனாகவும்... நண்பருக்கு குளிர் தரும் நிலவாகவும் விளங்கினான்' என்று புலவர் பாராட்டி பாடியிருப்பார். அதுபோல எம்.ஜி.ஆரும் ‘மர்மயோகி’ படத்தில் ``கரிகாலன், குறிவைத்தால் தவற மாட்டான்; தவறும் என்றால் குறிவைக்க மாட்டான்’’ என்று பேசிய வசனம், படத்துக்கு மட்டும் பேசிய வசனம் அல்ல; அவர் தன் வாழ்விலும் ஒரு மாமன்னனைப்போலவே வாழ்ந்தார்.

எம்.ஜி.ஆர்

தோற்றப் பொலிவு

எம்.ஜி.ஆர் தன் இமேஜைக் காப்பாற்றுவதில் காட்டிய கவனங்களில் உடை தேர்வும் முக்கியமானது. அவர் தன் முண்டா தெரியும்வண்ணம் கையை இறுக்கமாக வைத்து சட்டை போடுவார். எதிர் அணியினர், ‘ஜாக்கெட் போட்டிருக்கிறார்’ எனக் கேலி செய்தாலும், அது பற்றி கவலைப்பட மாட்டார். பேன்ட்டை உயர்த்திப்போடுவார்; இறக்கிப்போட மாட்டார். இதனால் அவருக்குக் கடைசி வரை தொந்தி விழவில்லை. உடற்பயிற்சியோடு உடை உடுத்தும் பாங்கும் ஒருவரின் தோற்றப்பொலிவுக்கு முக்கியம் என்பதை அவர் நன்கு உணர்ந்து அதன்படி செயல்பட்டார். 

இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதால், ஹெர்னியா பாதிப்பு வராமல் தவிர்க்கலாம் என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அதுவும் ஃபேமிலி ஹிஸ்டரி இருப்பவர்கள் நிச்சயமாக இதைப் பின்பற்றுவது நல்லது. இப்போது பேன்ட்டை மிகவும் இறக்கிப் போட்டு தொப்பை விழவைத்துவிட்டனர். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டும் என்பது உணவுக்கட்டுப்பாட்டை மட்டும் அல்ல, இடுப்பில் இறுக்கிக்கட்டும் உடை கட்டுப்பாட்டையும் சேர்த்து சொல்லும் முதுமொழி.

எம்.ஜி.ஆர்

பாடலும் உடையும்

1964, 65, 66-ம் ஆண்டுகளில் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் பாடல் காட்சிகளில் காலர் வைத்த டி-ஷர்ட் போட்டிருப்பார். இதை அவர் தனது ஸ்டைலாகவே பின்பற்றினார். `எனக்கொரு மகன் பிறப்பான்’ பாடல், ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்...’ பாடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த டி-ஷார்ட், அவரது கழுத்துச் சுருக்கத்தையும் மறைத்தது. உடம்பையும் கட்டுடலாகக் காட்டியது.  

பாடலாசிரியர்களையும் தன் இளமைத் தோற்றத்தை வர்ணிக்கும் பாடல்களை எழுதும்படி கவனித்துக்கொண்டார். இவர் படத்துக்குப் பாடல் எழுதும்போது பாடலும் பிரபலமானது; அதிக பணமும் கிடைத்தது. அதனால் பலரும் இவர் சொல்படி கேட்டனர். பணமும் புகழும் ஒருசேரக் கிடைக்கும்போது, மறுத்துச் சொல்ல எவருக்கும் மனம் வராது. அப்படி மறுத்தாலும் அவருக்குத்தான் நஷ்டமே! 
கண்ணதாசன் ‘குடும்பத்தலைவன்’ படத்தில் இவருக்காக எழுதிய,  
`கட்டான கட்டழகு கண்ணா - உன்னைக் 
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
பாடல் வரிகளும் `நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இவருக்காக எழுதிய
`தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது’ பாடல் வரிகளும் 
கவிஞர் முத்துலிங்கம் ‘மீனவ நண்பன்’ படத்தில் இவருக்கு எழுதிய 
`தங்கத்தில் முகம் எடுத்து
சந்தனத்தில் உடல் எடுத்து’ பாடல் வரிகளும் இவரது உடல் உறுதியை எடுத்துக் கூறுவதாக அமைந்தன. இவ்வாறு தன் படத்தில் பணியாற்றும் ஆள்களை தனக்கு ஏற்றபடி வளைக்கத் தெரிந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

எம்.ஜி.ஆர்

ஜோடி நடிகைகள்

எம்.ஜி.ஆர்., திருமணமான நடிகைகளை பெரும்பாலும் தனக்கு ஜோடியாகப் போடுவது கிடையாது. பானுமதி, சாவித்திரி இருவரும் அதற்கு விதிவிலக்கு. பானுமதியோடு அவரை ஜோடியாகப் போட்டபோது, பானுமதி திரையுலகில் உச்சத்தில் இருந்தார். அப்படியிருந்தும் அவரை தன் படமான ‘நாடோடி மன்னன்’ படத்தில் பாதியிலேயே நீக்கிவிட்டார். ‘மகாதேவி’ படம் கதையின் நாயகிக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்த காரணத்தால், சாவித்திரியை தயாரிப்பாளர் கண்ணதாசன் புக் செய்தார். சிவாஜி ரசிகர்கள் `எங்கள் நடிகையர் திலகம் சாவித்திரியோடு ஜோடி போட்டு நடிக்க முடியுமா?' என்று சவால்விட்டதற்கு பதில் சவால் விடும்வகையில், `வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். இரு தரப்பினரும் சவாலுக்குச் சவால்விடும் பழக்கம் இன்றும் இருந்துவருகிறது. கே.ஆர்.விஜயா தானே நெருங்கிவந்து நடிப்பார். மேலும், பெண் ரசிகைகளை ஏராளமாகக்கொண்டவர். குடும்பப்பாங்கான வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்பதால், அவர் திருமணமான பிறகும் சில படங்களில் எம்.ஜி.ஆர் அவரோடு நடித்தார். பொதுவாக, எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களைத் தவிர்த்து இளம் பெண்களோடு மட்டுமே நடித்துவந்தது தன் இளமை இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் என்பதில் ஐயமில்லை.

‘அரசகட்டளை’ படம் எடுத்து வெளிவருவதற்கு முன்பு சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டதால், அந்தப் படத்தில் அவரின் கேரக்டரைச் சாகடித்துவிட்டு ஜெயலலிதாவை தன் புதிய ஜோடி ஆக்கிவிட்டார். சரோஜாதேவியின் திருமணத்துக்கு முன்பு இந்தப் படம் வெளிவந்திருந்தால் அவர் முதன்மை கதாநாயகியாகவும் ஜெயலலிதா இரண்டாம் கதாநாயகியாகவும் இருந்திருப்பர். திருமணமாகாத இளம்பெண்களோடு நடித்தால் அது தன் இளமை இமேஜை உயர்த்தும் என்றும் நம்பிய எம்.ஜி.ஆர்., 1970-ம் ஆண்டுக்குப் பிறகு 16 முதல் 17 வயது பெண்களோடு நடிக்க ஆரம்பித்தார். அப்போது ஜெயலலிதா நடித்துக்கொண்டிருந்தாலும், எம்.ஜி.ஆர் அவரை தன் படங்களில் கதாநாயகியாகப் போடாததற்குக் காரணம் ஜெயலலிதா மிகவும் குண்டாகிவிட்டதுதான். ஆளும் குண்டு அதிகாரமும் அதிகம் என்ற நிலையில், அவருக்காக உருவாக்கியிருந்த கதாபாத்திரத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் சந்திரகலாவை நடிக்கவைத்தார். சந்திரகலாவோ, பாட்டி மாதிரி இருந்தது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் இவர்கள் எல்லாரும் துணைக்கருவிகள்தானே. முக்கியமானவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்பதால், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டாலும் மற்ற அம்சங்கள் படத்தை வெற்றிபெற செய்துவிடும்.

எம்.ஜி.ஆர்

வெளியிடங்களில் மனத்துணிவும் உடல்வலுவும்

எம்.ஜி.ஆரை எதிர் அணியினர் ‘டோப்பா தலை’ என்றும் ‘அட்டைகத்தி வீரர்’ என்றும் விமர்சித்தபோதும் அவர் தன் தொழில் உத்திகளை விடாமல் பின்பற்றிவந்தார். திரை பிம்பத்தில் அவர்  மிகவும் கவனமாக இருந்துவரும் அதே வேளையில், அவர் ஒரு நிஜ வீரர் என்பதை உறுதிப்படுத்தும் விஷயங்களும் நிஜ வாழ்வில் அவ்வப்போது நடக்கத்தான் செய்தன. 

ஒரு சமயம் அவர் மதுரைக்கு இரவில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள் அவரின் காரை வழிமறித்தனர். எம்.ஜி.ஆர்., ‘நீங்கள் கொள்ளையடித்துச் செல்ல என்னிடம் ஏதும் காசு பணம் இல்லை’ என்று சொல்லிப் பார்த்தார். அவருடன் பயணித்த சிரிப்பு நடிகர் தங்கவேலுவுக்கோ ஒரே நடுக்கம். இன்றைக்கு நம்மை இவர்கள் அடித்து உதைக்கப்போகிறார்கள் என அவர் பயந்துவிட்டார். சொன்னதைக் கேட்காமல் கொள்ளையர்கள், ‘காரைவிட்டு இறங்கு’ என்றதும் எம்.ஜி.ஆர் கீழே இறங்கி அவர்களுடன் சண்டைபோட தயாரானார். அவரது துணிச்சலைப் பார்த்து கொள்ளையர்கள் சற்று தயங்கினர். `யார் இவர், பெரிய பயில்வானோ! நாம் இத்தனை பேர் இருக்கிறோம், நம்மை எதிர்க்க முன்வருகிறாரே!' என்று தயங்கி நின்ற வேளையில் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், `இவர் எம்.ஜி.ஆர்’ என்பதை கண்டுபிடித்துவிட்டார். பிறகென்ன. மன்னிப்புகேட்டு தலை வணங்கி வழிவிட்டனர்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு ஜப்பானில் நடந்தபோது, ஒருவர் சந்திரகலாவிடம் சில்மிஷம் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர் பட்டென அவரை அடித்துவிட்டார். இது வெளிநாடு என நினைத்து அவர் தயங்கவில்லை. ‘உரிமைக்குரல்’ ஷூட்டிங்கின்போது ஓடிப்போய் இரு திசைகளிலும் பிரிந்து செல்லும் ஒரு மாமரக் கிளையின் நடுவே குதிக்கவேண்டிய ஷாட்டுக்கு டூப் நடிகர் தயாராக இருந்தபோதும் இவர் அவரை கையமர்த்திவிட்டு, தானே ஓடி குதித்தார். இதுபோன்ற ரிஸ்குகளை இவர் எடுத்து பொதுமக்கள் மத்தியில் தன்னை இளமையும் சுறுசுறுப்பும் குறையாதவர் என்று நேரில் நிரூபித்துக்கொள்வார். இது ரிஸ்கான ஷாட் என்பதால், டூப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் இவர் இப்படிச் செய்தது இயக்குநர் ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களின் உற்சாகம் இவரது இமேஜை உயர்த்தியது. 

எம்.ஜி.ஆர்

எதிரியைத் தேர்ந்தெடுத்தல்

`தனக்கு எதிரியாக இருப்பவன்கூட தனக்குச் சமமாக இருக்க வேண்டும்' என்று ‘சந்திரோதய’த்தில் வசனம் பேசிய எம்.ஜி.ஆர்., அதை தன் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றினார். எதிரியைத் தேர்ந்தெடுத்து தனக்கு அவரை எதிரியாகத் தக்கவைத்துக்கொள்வதிலும் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி என திரையுலகிலும் எம்.ஜி.ஆர்-கருணாநிதி என அரசியலிலும் தன் எதிரிகளை அவர் வரைமுறைப்படுத்திக்கொண்டார். தன் சக்தியை இவர்களை நோக்கியே செலுத்தினார். தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில்முறை எதிரிகள் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.  சில சமயம் இந்த எதிரித்தனம்கூட போலியானதோ என நினைக்கும்படி இவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. 

ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்றோர் எம்.ஜி.ஆரை எதிர்த்து நாவல்கள் எழுதியபோது, இவர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் துறைக்கும் நமது துறைக்கும் தொடர்பில்லை என விலக்கிவிட்டார். அவர்கள் நிஜத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறார்கள் என்று அவர்களை அலட்சியப்படுத்திவிட்டார். ஆனால், பத்திரிகையாளரிடம் இவர் மேம்போக்காக இல்லை. அவர்களிடம் தன் விஷயத்தில் கடுமையாகத்தான் நடந்துகொண்டார். எம்.ஜி.ஆர்., தான் சாதிக்கவேண்டிய திறமை பெற்றிருக்கும் துறைகளில் மட்டும் அதீத கவனம் செலுத்தி தன் நோக்கு நிலையை ஒருமுகப்படுத்தி எதிரிகளின் சவால்களை எதிர்கொண்டார்.

இவ்வாறு பல விஷயங்களிலும் எதிரிகளை வீழ்த்தும் வழிமுறைகளை தொடர்ந்து கையாளுவதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். திரையிலும் நிஜத்திலும் தம்மை ஒரே மாதிரி காட்டிக்கொண்டதால், எதிரிகள் இவரை கடைசி வரை ஜெயிக்கவில்லை.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/103456-tactics-used-by-mgr-to-make-sure-helooks-young.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் பாடல்களும், கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 5

 
 

எம்.ஜி.ஆர் பாடல்களில் பிரசார உத்தி :

MGR

 

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எம்.ஜி.ஆர் சிறு வயது முதல் நாடக மேடையில் நடித்துப் பழகியவர் என்பதால் பாடல்களின் செல்வாக்கு குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். பாடல்கள் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்ட விதத்தை அறிந்திருந்ததால் தேச விடுதலை போல சமூக விடுதலைக்கும் அவை நல்ல பிரசார உத்தியாகத் திகழும் என்று அவர் நம்பினார். இத்துடன் தன் சுய விளம்பரத்துக்கும் திரை இசைப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்த முன்னறிவுடன் அவர் பாடல் ஆசிரியர்களிடம் பாடல்களைக் கேட்டு எழுதி வாங்கினார். அவருக்கு உடன்பாடில்லாத எந்த ஒரு விஷயமும் அவர் பாடலில் இல்லாதபடி பார்த்துக்கொண்டார். எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் தன் விருப்பத்துக்கேற்றபடி பாடல் அமையாதவரை அவர் விடுவதேயில்லை. படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் தன் பாதையில் குறுக்கிடாதவரை அவர் எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். இருப்பினும் காதல் பாடல்களில் அவர்களின் விருப்பத்துக்கு இடம் அளித்த எம்.ஜி.ஆர், தத்துவப் பாடல் என்று ரசிகர்களாலும் வேறு பலராலும் அழைக்கப்படும் தனிப் பாடல்களில் அவர் பாடல் ஆசிரியரோடு எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை.

எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1947-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது. இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது. எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.

MGR-Karunanedhi

மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :

எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார். இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன. அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின. 

ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :

1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை. கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார். இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார். டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது. அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :

திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன.

எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார். தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார். 

MGR-Karunanedhi

எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை. அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம்  எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.

‘நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :

1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது. 'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது. எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.

‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார். இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல்  'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது. இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.

எம்.ஜி.ஆர்

தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :

1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன. 1963-ல் வெளிவந்த 'பணத்தோட்டம்' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்த புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள் 'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார். அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது. ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது. 

1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன  பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார். அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் -  தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்'  பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

1967-ல் வெளிவந்த 'அரசகட்டளை' படம் காங்கிரஸ் காலத்தில் தயாரிக்கப்பட்டதால், 'ஆடி வா...' பாடலில் 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நம் வரவேற்பதோ' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதில் முயல் கூட்டம் என்பது காங்கிரஸையும் சிங்கம் என்பது திமுகவையும் குறித்தது. 

திமுக புகழ் பாடும் பாடல்கள் : 

1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம். இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று. அடுத்த வீட்டுக்கு போகும்போது அங்கிருக்கும் பொம்மையை எடுத்து விளையாடும் பிள்ளைகள் அதை  என் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன் என்று அடம் பிடிப்பதை போல எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சில காலம் தன் வீட்டில் வைத்திருந்தார். 'காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் . வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை. மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.

1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார். அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் : 

சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார்  நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன. அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை  அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

கலைஞர் முதல்வர் ஆக்கப்பட்டார் : 

1969-ன் தொடக்கத்திலேயே அண்ணா காலமாகிவிட்டார். கலைஞர் எம்.ஜி.ஆரை அடிக்கடி சந்திக்கிறார். கட்சியின் அடுத்த தலைவர் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். 'தம்பீ வா... தலைமை ஏற்க வா...' என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் தன் ஆதரவாளர்களோடு 'தான் தன் அடுத்த முதல்வர்' என்ற நம்பிக்கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார். இச்சூழலில் எம்.ஜி.ஆர் தன் சத்யா ஸ்டூடியோவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி காங்கிரஸின் செல்வாக்கு இன்னும் முற்றிலுமாக ஒடுக்கப்படவில்லை, இந்நிலையில் படித்தவரைவிட காங்கிரஸை சமாளிக்கக் கூடியவரே கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்பது நல்லது என்று சொல்லி அனைவரையும் கலைஞருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் சம்மதிக்க வைத்து கலைஞருக்கு பிடித்தமான வால்நட் கேக்கை அவர் டிரைவரை விட்டு வாங்கிவரச் சொல்லி அவர் வாயில் ஊட்டினார்.

ஏமாற்றிய  ஆட்சி :

1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார். அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.

ஏமாற்றாதே ஏமாறாதே : 

'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது. படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை. இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :

'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.

எம்.ஜி.ஆர்

இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர். எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.

பாரத் விருது பெற்ற எம்.ஜி.ஆர் : 

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். உடல்நலத்தைப் பேணுவதில் சிறிதும் அக்கறை இல்லாத ஜெயலலிதா ரொம்பவும் குண்டாகிவிட்டார். 'பட்டிக்காட்டுப் பொன்னையா', 'அன்னமிட்ட கை' படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பெரியம்மா போலத் தோற்றமளித்தார். மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இவரைப் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பல் இந்நேரம் பார்த்து மஞ்சுளாவை அறிமுகம் செய்தது. சத்யா மூவிஸ் முலமாக 'ரிக்க்ஷாக்காரன்' படம் ஆர்.எம்.வீ அவர்களால் எடுக்கப்பட்டது. இதில் பணக்காரர்களின் அக்கிரமங்களுக்குத் துணை போகும் நீதித்துறையை எம்.ஜி.ஆர் சாடியிருந்தார். இதில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு'  என்ற பாடலில் 'நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா - அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று கேட்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகரான 'பாரத்' விருது கிடைத்தது. பின்பு அது கலைஞர் சிபாரிசால் கிடைத்தது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டியதும், எம்.ஜி.ஆர் அதைத் திருப்பிக் கொடுத்தார். இத்துடன் எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பு முடிவுக்கு வந்தது.  அடுத்த ஆண்டே (1971) கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போன்ற கதைகள் கேட்டு, தோற்றம், பாட்டு, டான்ஸ் எம்.ஜி.ஆர் போலவே உருமாற்றி திரைக்குக் கொண்டுவந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. 'சினிமாவுக்கு அதிகம் பேர் போகிறார்களே அவர்களை மடை மாற்றுவோம்' என்று கருதி அரசுக்கு வருமான தரக்கூடிய மதுக்கடைகளைத் திறந்தார்.

 

எம்.ஜி.ஆரையும் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகான தனது படங்களில் எம்.ஜி.ஆர் நேரடியாக திமுக எதிர்ப்பை வெளியிட்டார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/103917-mgr-songs-versus-karunanidhis-separation-mgr-100-episode---5.html?utm_content=social-ysnr2&utm_medium=social&utm_source=SocialMedia&utm_campaign=SocialPilot

Link to comment
Share on other sites

மறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6

 
 

46ddfd5c-881e-4178-8673-3a08997fd34d_173

 

அ.தி.மு.க கட்சி தோன்றியதும், அக்கட்சிக்கு ஆதரவாக முதலில் எழுதப்பட்ட பாடல், ‘’ஒரு வாலும் இல்ல நாலு காலும் இல்ல – சில மிருகங்கள் இருக்குது ஊருக்குள்ள – இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் -- அதைக்காட்டிலும் எத்தனையோ தேவலே’’. இந்தப் பாடல் ஒரு இடைச்செருகலாக, ‘இதயவீணை’ படத்தில் சொருகப்பட்டது. காட்டில் ஒளிந்து வாழும் எம்.ஜி.ஆர்  பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், தமிழ்நாட்டில் உள்ள சில பகைவர்களைக் காட்டு மிருகங்களோடு ஒப்பிட்டுப் பாடுவதாக இருந்தது.

 

இதைத் தொடர்ந்து, கட்சி வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் மக்களுக்கு ஊழலற்ற சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கையூட்டும் விதமாக பாடல்கள், பாடலாசிரியர்கள் உருவாகினர். எம்.ஜி.ஆர், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலானார். பகலில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அவர், இரவில் கட்சிக்காரர்களைச் சந்தித்து அரசியல் வியூகம் உருவாக்கினார். ‘அவருடைய இந்தத் திட்டமிடலையும் அந்தத் திட்டங்களை அவருடைய ஆட்களைக்கொண்டு செயல்படுத்திய முறைகளையும்வைத்து பார்க்கும்போது, அவர் ஒரு ராஜாங்கமே நடத்தியதுபோலதான் தோன்றிற்று’ என்றார் நடிகர் ஆனந்தன்.

பாடல்களின் உள்ளடக்கம்

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தோற்றத்துக்குப் பிறகு, தனது படங்களில் புதிய சமூகம் – சமத்துவம் – வர்க்க பேதம் இன்மை –  தி.மு.க அரசின் தீய போக்கு – புரட்சி [பொதுவுடைமை] – தன் புகழ் – தன் துணிவு – என உள்ளடக்க விஷயங்களில் முன்பைவிட அதிகம் கவனம்செலுத்தினார். பாடலாசிரியர்களிடம் சில கருத்துகளைச் சொல்லி, இவை இந்தப் பாட்டில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். சில வரிகள் அவர் நினைத்த கருத்தைத் தரவில்லை என்றால், பாடலாசிரியர்களிடம் அதைச் சொல்லி திருத்தித்தரும்படி கேட்டு மாற்றிக்கொண்டார். இவ்வாறு அவர் படப் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரது நேரடி கருத்தாகவே இடம்பெற்றன. 

எம்.ஜி.ஆர்

புதுக்கட்சி தொடங்க திட்டமிட்ட ரசிகர்கள்

1972 அக்டோபர் மாதம் 12-ம் நாள், அ.தி.மு.க உதயமாயிற்று. அதற்கு முன்பே, ரசிகர்கள் மதுரை போன்ற நகரங்களில் தாமரை படம் போட்ட கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிவிட்டனர். அதுவரை பிரபலமாகாத சில நாளிதழ்கள், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் தரும் உத்வேகம் பற்றி நிறையச் செய்திகள் வெளியிடலாயின. தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் புறப்பட்டு எம்.ஜி.ஆரின் சத்யா  ஸ்டுடியோவுக்கும் ராமாவரம் தோட்டத்துக்கும் சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.  ரசிகர்களும் பொதுமக்களும் இவ்வளவு ஆதரவு அளிப்பர் என்று எம்.ஜியாரோ கலைஞரோ அப்போது எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி. ஆருக்கு இனி அமைதியாக யோசித்துச் செயலாற்ற நேரமில்லாமல்போயிற்று. தி.மு.க மீதிருந்த வெறுப்பும் சேர்ந்துகொண்டதால், படித்தவர்களும் கட்சி சாராத பொதுமக்களும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆங்காங்கே ரசிகர்கள் தமக்குப் பிடித்த படங்களை தி.மு.க கொடியில் போட்டு புதுக் கொடியேற்றி தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டனர். 

கட்சியையும் சினிமாவையும் இணைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் தான் இதுவரை தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தமது படங்களில் வெளியிட்ட காட்சிகளும் பாடல்களும் வீணாகிவிடக்கூடாது என்று முடிவுசெய்தார். அவற்றையும் தன் வருங்கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கட்சியின் கொடி மற்றும் வண்ணத்தைத் தீர்மானித்தார். தி.மு.க கொடியின் நிறங்களுடன் பொதுவான ஒரு வெள்ளை நிறத்தை மட்டும் சேர்த்துக்கொண்டார். கட்சித்தலைவராக அறிஞர் அண்ணாவையும் அவர் உருவத்தையும் கொடியிலும் கட்சியின் பெயரிலும் இணைத்தார். ஆக, இப்போது அண்ணா ஆரம்பித்த தி.மு.க தான் இவருடைய அண்ணா தி.மு.க  என்பது போலவும் இவர் அக்கட்சியைப் பொதுச் செயலளாராக இருந்து நடத்துவது போலவும் ஒரு நிலையை உருவாக்கினார். இப்போது, இதுவரை அவர் தி.மு.க-வுக்கு ஆதரவாக அமைத்த காட்சிகளும் பாட்டுகளும் இனி இவருக்கும் பயன்படும். உதயசூரியனை வணங்குவது, போற்றுவது, பாராட்டுவது போன்ற காட்சிகள் மட்டும் பயன்படாது.

‘இதயவீணை’ படம், எம். ஜி.ஆரை தி.மு.க-வை விட்டு வெளியேற்றிய பிறகு வந்தாலும், அது மணியனின் நாவலை படமாக்கிய விதத்துக்காக ஓடி வெற்றிபெற்றது. அதில், அரசியல் பெரிதாகப் பேசப்படவில்லை. காஷ்மீரின் அழகிய காட்சிகள், மஞ்சுளா மற்றும் லட்சுமியின் அழகுத்தோற்றம், எம்.ஜி.ஆர் யேசுகிறிஸ்து போன்ற தோற்றத்தில். ஆனால், காவி உடுத்தி மாறுவேடத்தில் வந்து தங்கை லட்சுமியின் திருமணத்தில், ‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக’ என்ற பாடல் பாடியது ஆகியன இப்படத்தை வெற்றிபெறவைத்தன. 

எம்.ஜி.ஆர்

‘உலகம் சுற்றும் வாலிபன்’

1970-ல் உலகப் பொருள்காட்சியான எஃஸ்போவில் படம் பிடிக்கப்பட்டு, 1973ல் திரைக்கு வந்த படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்று தன் அதிகாரத்தை முழுதாக தி.மு.க செலுத்தியும், படப்பெட்டியை வைக்கோல் வண்டியிலும் பேருந்தில் இஞ்சின் இருக்கும் இடத்திலும் ஒளித்துவைத்து, சரியான நேரத்தில் படத்தை வெளியிட்டு, தி.மு.க-வினரை தன் முதல் முயற்சியிலேயே மண்ணைக் கவ்வவைத்தவர் எம்.ஜி.ஆர். இந்தப் படம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு இதன் அரசியல் சார்பற்ற ஆனால், அரசியல் வெற்றியை முன்னறிவுப்பாக வெளியிட்டதை மட்டும் காண்போம். இந்தப் படத்தில் பெயர் போடும்போது, அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்கும் காகிதப்பூ [போஹன்வில்லா] பின்புலத்தில் ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் – இப்படை தோற்கின் எப்படை வெல்லும் – நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை நிச்சயம் உலகம் பாராட்டும்’ என்ற பாடல், சீர்காழியின் கம்பீரக் குரலில் முழங்கிற்று. இன்றுவரை அ.தி.மு.க கட்சிக் கூட்டங்களில் இப்பாடல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

1974ல் படமும் பாட்டும்

1974ல் ‘நேற்று இன்று நாளை’, ‘உரிமைக்குரல்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘நாளை நமதே’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில், ‘சிரித்துவாழ வேண்டும்’ [ஜஞ்சீர்], ‘நாளை நமதே’ [யாதோங்கி பாரத்] ஆகிய இரு படங்களும் இந்திப் படத்தின் தழுவல்கள். ‘ நேற்று இன்று நாளை’ படத்தில், ‘தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து – அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று – என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும்  நாளை – இது அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை’ என்ற பாடல், அ.தி.மு.க பிரச்சாரப் பாடலாகவே எழுதி இசையமைக்கபட்டு, படத்தில் இடம்பெறச் செய்து, பெரும் வரவேற்பு பெற்றது.  இந்தப் பாட்டில் வரவேண்டிய கருத்துகளை எம்.ஜி.ஆர், வாலியிடம் எடுத்துரைத்தார். ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தில் ஊழல், தெரு விளக்கு போட தொழிலாளிகள் வேலைக்கு வந்ததாகப் பதிவேடு மற்றும் ஆவணங்களைத் தயாரித்து அறிவியல் பூர்வமாகச் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட மஸ்டர் ரோல் ஊழல்...  ஆகியவற்றைச் சொல்லும் வகையில்...
  
   ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே – தாம் 
  வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார்  நகரசபையிலே
  ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் – தாம் 
  வாழ்வதற்கு ஊர்ப்பணத்தில் வீடு கட்டினார்

இந்தப் பாட்டு நேரடியாக மக்களுக்கு எதிரான தி.மு.க-வின் போக்கை எடுத்துச்சொல்லும் பிரச்சாரப் பாடலாகவே அமைந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், அ.தி.மு.க பெற்ற வெற்றியும் ஒரு போஸ்டராக இப்படத்தில் ஒரு காட்சியில் காட்டப்பட்டது.  
   
ஒரு சம்பவம் என்பது நேற்று  -- நேற்று
அது சரித்திரம் என்பது இன்று --  இன்று 
அது சாதனை ஆவது நாளை  -- நாளை 
வரும் சோதனை தான் இடைவேளை 

என்று இப்பாடலை முடித்து, உடனே இடைவேளை விட்டதும் மக்கள் இப்பாடலின் உள்ளடக்கம்குறித்து விவாதிக்க நேரம் கிடைத்தது. பாடலை படத்தில் இடம்பெறச்செய்யும் இடமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பாடல் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர் அழகாகத் தோற்றமளிப்பார். அவரின் வயது தெரியாதபடி மேக்கப்பும் உடைகளும் வெகு பொருத்தமாக இருந்தது. மஞ்சுளா, லதா என இருவர் ஜோடிகளாக நடித்தனர். படம் தயாரித்த அசோகன், குடிகாரனாகவும் பிச்சைக்காரனாகவும் நடித்திருப்பார். 

எம்.ஜி.ஆர்

உரிமைக்குரல்

தெலுங்குப் படத்திலிருந்து கதை எடுத்து, தமிழில் உருவான ‘உரிமைக்குர'லில் ‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் – நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்க்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்’  என்ற பாட்டு  எம்.ஜி.ஆர் நல்ல மனிதர், ஆனால் அவரின் எதிரணியைச் சேர்ந்தவர் அப்படி அல்ல என்பதை நேரடியாகச் சுட்டியது. மேலும்  
     நல்லவன் இலட்சியம் வெல்வது நிச்சயம்
     அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம் 

என்றுதான் அண்ணாவின் வழிவந்தவன் என்பதை நிரூபிக்க முயன்றிருப்பார். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், தாய் மண்ணை மீட்க உயிரைக்கொடுத்தும் போராடுவேன் என்று எம்.ஜி.ஆர் பேசிய வீர வசனம், 'மக்களை தீய சக்தியிடமிருந்து மீட்பேன்' என்று எம் ஜி ஆர் வாக்குறுதி அளிப்பதாக இருந்தது.

நாளை நமதே 

எம்.ஜி.ஆர் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க ஆரம்பத்தில் தயங்கினார். இது, மியூசிக் சப்ஜெக்ட். இதில் எனக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது என்றார். ஆனால், அந்த ஃபேமிலி சாங் என்ற மியூசிக்கையே அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். அந்தப் பாட்டுதான்...
   
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த சொந்தங்கள் எல்லாம் 
ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே

இப்பாடலில், 'தி.மு.க-வை எதிப்பவர்கள் அனைவரும்  ஒன்று சேர்ந்தால் வென்றுவிடலாம்' என்ற நம்பிக்கையை ஊட்டினார். 

 

எம்.ஜி.ஆர்

இதயக்கனி

தமிழுக்கு முதல் பம்பாய் வரவான 'தோரஹா' புகழ் ராதா சலூஜா எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த படம். எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில், 'காவேரிக்கு இணையாக நீண்ட காலம் வாழ்க' என்று எம்.ஜி.ஆரை வாழ்த்துவதாக இடம்பெற்ற பாடல், அ.தி.மு.க பிரசாரப் பாடலாக அமைந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தேர்தல் பணிகளுக்கு வருகை தரும்போது ஒலிக்கும் பாடல்களில், இதுவும் ஒன்றாகும். இப்பாடல் காட்சியில்... இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து ஒருமையாக எம்.ஜி.ஆரை வாழ்த்திப் பாடுவர். இதுவும் கட்சிக்கு மத பேதம் கிடையாது என்பதை சுட்டிக்காட்டும் டெக்னிக்தான். மேலும், எம்ஜியார் சத்யா தோட்டம் என்று தன் காபி தோட்டத்தின் பெயரைக் காட்டும்போது, அங்கு கட்சி சின்னமும் இடம்பெற்றிருக்கும். 

1974ல் பல்லாண்டு வாழ்க

இப்படமும் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற இந்திப் படத்தின் மூலக்கதையைக்கொண்டு மட்டும் தயாரிக்கப்பட்டதாகும். ஐந்து பயங்கரமானவர்களை திருத்தும் சிறைத்துறை அதிகாரியாக  எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். இதில், ஒன்றே குலம் என்று பாடுவோம் –ஒருவனே தேவன் என்று போற்றுவோம் – அன்னை இதயமாக அன்பு வடிவமாக – வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம் என சர்வமத பிரார்த்தனைப் பாடல் ஒன்றை காட்சிப்படுத்தியிருப்பார். இதுவும் அ.தி.மு.க அனைத்து மதத்தினருக்குமான கட்சி என்ற கொள்கையை நிறுவ உதவியது. அதுபோல மக்கள் ஆதரவும் அ.தி.மு.க-வுக்கு வளர்ந்துவந்தது.

நினைத்ததை முடிப்பவன் – 1974

இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படம், இந்தியில் வெளிவந்த 'சச்சா ஜூட்டா' [உண்மையும் பொய்யும்] என்ற படத்தின் தமிழாக்கம். இதில், கண்ணை நம்பாதே என்ற பாட்டு, பிரசாரப் பாட்டாக அமைந்திருந்தது. அதில் ஒரு வரி, ‘வந்த வழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று பாடல் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்துப்பார்த்த எம்.ஜி.ஆர், தன் வழி என்பது நல்ல வழியாக இருக்கலாம் அல்லவா அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாதே. வந்தது நல்ல வழியாக இருந்து, இப்போது தவறான வழியில் போகின்றனரே என்பதுதான் நாம் சொல்லவேண்டிய கருத்து என்றார். உடனே பாடல் ஆசிரியர், ‘வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே’ என்று மாற்றி எழுதினார். எம்.ஜி.ஆரும் அந்த வரியை நடித்துக்காட்டும்போது, கையால் கண்ணை மூடிக்கொண்டு போவதை அபிநயித்துக் காட்டி, பாட்டை விளக்கியிருப்பார். அந்தப் பாடல் வரிகள்...
  
  வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே
  என் மனதை நானறிவேன் என் உறவை அறிவேன் 
  எதுவான போதிலும் ஆகட்டுமே 
  நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்
  என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.

உழைக்குக் கரங்கள்

கா. காளிமுத்து வசனம் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த பாடல். இந்து மதத்தில் உள்ள போலிச் சாமியார், கணவனை இழந்த இளம்பெண்ணை சீரழித்ததைத் தட்டிக்கேட்கும் பாத்திரமாகவும் தேவதாசி குலத்தில் பிறந்த பெண்ணைத் தொந்தரவுசெய்யும் மைனர்களை அதட்டிக் கேட்கும் பாத்திரமாகவும், ஆதரவற்ற பெண்குலத்தின் காவலனாகவும் நடித்திருந்தார். யேசுதாஸ் பாடிய, நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே -  உழைக்கும் கரங்களே  புரட்சி மலர்களே என்ற பாடலில் ‘’ ஏர் பூட்டி தோளில் வைத்து -  இல்லாமை வீட்டில் வைத்து – போராடும் காலம் எல்லாம் போனதம்மா-  எல்லார்க்கும் எல்லாம் உண்டு – என்றாகும் காலம் இன்று – நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா என்றும் விடியும் வேளை வரப்போகுது – தர்மம் தீர்ப்பை தரப்போகுது – நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை என்றும் நம்பிக்கை ஊட்டிய வரிகள் இடம்பெற்றன. 

நீதிக்கு தலை வணங்கு- 1976

'நீதிக்கு தலை வணங்கு' படம்,  தெரியாமல் ஒருவர்மீது காரை ஓட்டிக் கொன்றுவிட்ட தவறுக்கு, எம்.ஜி.ஆர் காவல்துறையிடம் தன்னையே ஒப்புவிக்கும் படம். இதில், ஏழைகளுக்கு பூசாரியாக இருந்துகொண்டு பெண்களுக்குத் துன்பம் தரும் தேங்காய் சீனிவாசனிடம் எம்.ஜி.ஆர் ‘’ நான் பார்த்தா பைத்தியக்காரன் என்று ஒரு பாட்டை பாடுவார். அதில், பெற்றெடுத்த தாயாக மற்றவரை நான் நினைத்து பிள்ளையென வாழ்பவன்டா – அவர் பெருமைகளைக் காப்பவன்டா என்று தாய்க்குலத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்திருப்பார்.

இன்று போல் என்றும் வாழ்க [1977]

தேர்தல் நெருங்கிவரும் காலகட்டமானதால், எம்.ஜி.ஆர் வெற்றிபெறுவதும் உறுதியாகிவந்த காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என பரபரப்படைந்தார்கள். தொழிலதிபர்கள், எம்.ஜி.ஆரை தேர்தலுக்கு முன்பே சந்தித்து, தனது ஆதரவைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவரைப் பார்க்க வந்து குழுமினர். இந்நிலையில், நடிக்கும் படங்களில் அ.தி.மு.க பிரசாரப் பாடல்களைப் புகுத்த, புதுப்புது பாடல் ஆசிரியர்களுக்கு பாடகர்களுக்கும் வாய்ப்பளித்துவந்தார்.  

தாம் அழைக்கும் நேரம் வந்து எவ்வளவு நேரமானாலும் இருந்து, தன் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடிய ஆட்களையே அவர் விரும்பினார். அந்தச் சமயம், ஒரு பாடல் காட்சி எடுத்தார். அதில்தான் தொழிலாளர் அனைவருக்கும் ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தினார். தொழிலாளர் கைகளைப் பற்றிய பாட்டாக இருந்தாலும், இதைக் கேட்கும்போதும் சில காட்சிகளில் தன் கையை உயர்த்தி க்ளோசப் காட்சியாக எடுத்ததாலும் இந்தக் கை பாடல், எம்.ஜி.ஆருக்குரிய போற்றிப் பாடலாகவே அமைந்தது.
    
   இது நாட்டை காக்கும் கை – உன் வீட்டை காக்கும் கை
    இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
    இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

என்று தொடங்கும் இப்பாட்டில், இது பெண்கள் தம் குலம் காக்கும் கை, இது திருடும் கை அல்ல என்று எதிரெதிர் கருத்துக்களாக அமைத்துப் பாடியிருப்பார். பிற்காலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 'கை சின்னம்' அமைந்துவிட்டதால், அவர்களுக்கும் பயன்பட்டது.

மீனவநண்பன் 

ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த இரண்டாவது எம்.ஜி.ஆர் படம். இதில் வலிமையான இரண்டு கொள்கைப் பாடல்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சிக்கு சவால் விடுவதைப் போல...
   
நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் 
   என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் 

எனத் தொடங்கும் பாடலில்  

மாறினால் மாறட்டும் இல்லையேல் மாற்றுவோம் – என்றும்
  நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள் சிறையாய் இருக்குதையா 
   நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும் நிறைவாய் இருக்குதையா

என்றும், இரு கட்சியினரின் இயல்பை விவரித்துப் பாடியிருப்பார். பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலம் இது எனற பாடலில், பல சமதர்மக் கருத்துகளைச் சொல்லியிருப்பார். ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி பிறக்கப்போகிறது என்ற தொனி, அ.தி.மு.க ஆரம்பித்த பிறகு வந்த பாடல்களில் ஒலித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூன் 29 அன்று இரவு முழுக்க நடந்தது. மறுநாள் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்க உள்ள நிலையிலும் தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டார். நள்ளிரவிலும் நீண்ட ஷூட்டிங்கில் அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வர வேண்டுமே என்ற பதற்றத்துடனே படக்குழுவினர் பரபரக்க, எம்.ஜி.ஆர் போகிற போக்கில் அனைத்தையும் ஓ.கே செய்தார்.

MGR_100_solo_songs_images_17107.jpg

முதல்வரான பிறகு வந்த படங்கள்

'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' [1978] என்ற படம் தமிழகத்தை சோழனிடமிருந்து பாண்டியனான எம்.ஜி.ஆர் மீட்டதாகப் பொருள் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, அவர் முதல்வர் ஆன பிறகு திரைக்கு வந்தது. இப்படம், தேர்தல் சமயத்தில் வந்திருந்தால், வெற்றிவிழா படமாக அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றபிறகு என்பதால், ரசிகர்களிடையே படபடப்புக் குறைந்து, ஒரு மிதப்பு ஏற்பட்டுவிட்டது. இப்படம், தமிழீழத்தின் விடுதலையும் தன்னுள் உள்ளடக்கியதாக பாடல்கள் அமைத்திருந்தன. விடுதலிப்புலிகள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க...
    
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை  
    தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் – எங்கள் 
    தாய்த்திரு நாட்டை உயர வைப்போம் 

என்ற பாடலில்...
   
வீரமுண்டு வெற்றி உண்டு 
   விளையாடும் களம் இங்கே உண்டு 
  வா வா என் தோழா  

என்ற வரிகள், போர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருந்தன.
   
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் 
   கொள்கை வீர தியாகங்களை ஏற்றிட வேண்டும்

இன்னொரு பாடலும் வீரம் புகட்டும் பாடலாக முன்னேற்றத்துக்கு வித்திட்ட பாடலாக அமைந்தது.
   
வீரமகன் போராட  வெற்றி மகள் பூச்சூட 
   மானம் ஒரு வாழ்வாக வாழ்வுநதி தேனாக
   முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்

இத்துடன், எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வு நிறைவுபெற்றாலும், அவர் தன் கட்சிக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் இதே திரைக்கலைஞர்களைக் கொண்டு...
  
இரட்டை இலை வெற்றி தந்த இலை – உயர்
  இலட்சியம் காத்திட வந்த இலை.  மற்றும்
  புரட்சி தலைவரின் வழி நடப்போம் –
  புதிய சமுதாயம் இனி அமைப்போம்

 

போன்ற பாடல்களை கேசட்டில் பதிந்து, தன் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி, கட்சிப் பணிகளுக்கு நல்ல பாடல்களைப் பயன்படுத்திவந்தார். இப்பாடல்களும் இன்னும் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/104465-mgr-does-shooting-inspite-of-chief-minister-procedures-mgr-series-episode-6.html

Link to comment
Share on other sites

சக ஊழியர்களுக்காக கைவண்டி இழுத்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-7

 
 

எம்.ஜி.ஆர்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

’ஏழைப் பங்காளன்’ என்று சைவ சமயக் குரவருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றித் துதிப்பார். அந்தச் சொல்லுக்கு அடையாளமாக எம்.ஜி.ஆர் அமைந்ததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவர் ஏழைகளுக்குத் தானாகப் போய் உதவியதும், உதவி எனக் கேட்டு வந்தவருக்கு உடனே கொடுத்து உதவியதும் ஆகும். இரண்டு, அவர் ஏழை எளிய வர்க்கத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர்களின் துன்ப துயரங்களைப் படத்தில் பிரதிபலித்து, அவர்களில் ஒருவனாகத் தன்னை வெளிப்படுத்தியது ஆகும்.

 

எம்.ஜி.ஆர்

கதாபாத்திரமும் காட்சிப்பாடலும்

தான் எந்தத் தொழிலாளி கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் அந்தத் தொழிலுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் வகையில் படத்தில் தொடக்கத்திலேயே ஒரு பாடலை அழைத்துத் தொழிலின் கஷ்ட நஷ்டங்களை விவரித்திருப்பவர் எம்.ஜி.ஆர். சில படங்களில் காட்சிகள் மூலமாகத் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுவார்.

பாட்டாளி பாத்திரப்படைப்பு

நாடோடி படத்தில் தெருப்பாடகனாக ஆயிரத்தில் ஒருவனில் நாட்டு மருத்துவராகப் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் பெயின்டர் மற்றும் கிணற்றில் தூர் வாருபவராக தனிப்பிறவியில் மெக்கானிக்காக, தேர்த்திருவிழா படத்தில் பரிசல் ஓட்டியாக, தொழிலாளி படத்தில் கைவண்டி இழுப்பவராக, பின்பு பஸ் கண்டக்டராக, படகோட்டி படத்தில் நாட்டுப் படகோட்டும் பரதவனாக, மீனவ நண்பனில் இயந்திரப் படகின் மீனவனாக மாட்டுக்கார வேலனில் மாடு மேய்ப்பவராக என் அண்ணனில் குதிரை வண்டிக்காரனாக எங்கள் தங்கத்தில் லாரி டிரைவாக விவசாயி படத்தில் படித்த விவசாயியாக ரிக்ஷாக்காரனில் ரிக்ஷா ஒட்டியாக எங்கவீட்டுப் பிள்ளையில் விவசாயியாக (ராமு) உழைக்கும் கரங்கள் படத்தில் ஊர் காக்கும் காவல்காரனாக நடித்திருப்பார்.

படித்தவராக எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் டாக்டராக தர்மம் தலைகாக்கும், புதியபூமி படங்களிலும் எஞ்சினீயராகக் கொடுத்து வைத்தவளிலும் வக்கீலாக நீதிக்குப் பின் பாசத்திலும் பத்திரிகை நிருபராக சந்திரோதயத்திலும் விளையாட்டு ஆசிரியர் மற்றும் கவிஞராக ஆனந்த ஜோதியிலும் முகராசி, காவல்காரன், பணத்தோட்டம், பரிசு, தெய்வத்தாய், தாய் சொல்லைத் தட்டாதே, என் கடமை, ரகசியப் போலீஸ் 115 போன்ற படங்களில் காவல்துறை அதிகாரி, சி.ஐ.டி படங்களில் காவல்துறை அதிகாரி, சி.ஐ.டி கதாபாத்திரங்களிலும் வன்னித்தாயில் மிலிட்டரி கமாண்டராகவும் நடித்திருப்பார்.

எம்.ஜி.ஆர்

நாட்டு மருத்துவர்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அறிமுகக் காட்சியில் எம்.ஜி.ஆர் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடித்த மகிழ்ச்சியுடன் ‘வெற்றி வெற்றி’ என்று கூறுவார். பின்பு பாம்பு தீண்டிய ஒருவருக்கு விஷத்தை உறிஞ்சி எடுக்கும் காட்சியில் ஜெயலலிதாவுக்கு அவர்மீது அபிமானம் ஏற்படும். இறுதிக்கட்டத்தில் மனோகர்மீது விஷம் தோய்த்த கத்தியை நம்பியார் வீசியதும் உடல் நலம் பாதித்துவிடும். உடனே எம்.ஜி.ஆர் விஷத்தை அகற்றுவார். படம் முடியும்போது நாட்டை மனம் திருந்திய மன்னனிடமே ஒப்படைத்துவிட்டு மருத்துவத் தொழிலுக்கே திரும்பிவிடுவார். தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு இவ்வகையில் இவர் நியாயம் செய்திருப்பார்.

ஆங்கில மருத்துவர்

தர்மம் தலைகாக்கும் படத்தில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவசேவை செய்வார். அந்த தர்மமே அவர் தலையை (உயிரை) ஒரு விபத்திலிருந்து காப்பாற்றியதாக எம்.ஆர்.ராதா ஒரு வசனம் பேசியிருப்பார். குண்டு சுட்டபோதும் சிறுநீரகமாற்று சிகிச்சையின்போதும் இவர் பிழைத்து எழுந்ததற்கு இவர் செய்த தர்மமே காரணம் என்று பொதுமக்கள் நம்பினர்.

புதியபூமி படத்தில் மந்திரவாதி ஒருவரின் ஏமாற்று சிகிச்சையில் அவதிப்படும் மலை கிராமம் ஒன்றிற்குப் பகுத்தறிவுப் பகலவனாக டாக்டர் கதிரவன் வந்து மருத்துவசேவை ஆற்றுவார். இவரது முறைப் பெண் டாக்டர் ஷீலா இவருக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விடுவார். நகரத்திலேயே ஒரு மருத்துவமனை கட்டி அங்கு டாக்டராக இருப்பார்.

டாக்டர் படிப்பு பெறுவோர் தம் வாழ்க்கையை ஏழை எளியோருக்கு சேவை செய்யும் வகையில் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முன்மாதிரி பாத்திரமாக எம்.ஜி.ஆரின் பாத்திரப்படைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

படகோட்டி

படகோட்டி படத்தில் அறிமுகப்பாடல் காட்சி கடலோடிகளின் துன்பத்தை பறை சாற்றுவதாக அமைந்திருக்கும்.

“தலைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்

கண்ணீரில் குளிக்க வைத்தான்

பாடல் தற்கால துயரத்தை வெளிப்படுத்தும் அந்தப்படம் முழுக்க படகோட்டிகளுக்கு அவர்கள் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவும் வந்து கந்து வட்டிக்காரர் கொடுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடையவும் உழைக்கும் மாணிக்கமாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பார். படம் நெடுக படக்கோட்டிகளின் அவலமும் பாடுகளும் அவநம்பிக்கையும் தொடரும் இறுதியில் இரண்டு மீனவ குப்பங்களும் ஒன்று பட்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று தனிநபர் கொடுமையிலிருந்து விடுபடும்.

எம்.ஜி.ஆர்

தொழிலாளி

தொழிலாளி படத்தில் படித்துப்பெற்ற எம்.ஜி.ஆர் வேலை எதுவும் கிடைக்காமல் கை வண்டியிழுக்கும்

தொழிலாளியாக வாழ்வார். பின்பு பேருந்து நடத்துநர் பணி கிடைக்கும் பேருந்தின் இருக்கைகள்

நிரம்பிவிட்டதால் நிறுத்தத்தில் நிற்கும் தன் தானியக்கூடப் பேருந்தில் ஏற்றமாட்டார். (அந்தக்காலத்தில்

பஸ்ஸுக்குள் ஸ்டாண்டிங் கிடையாது) தன் நேர்மையான உழைப்பால் முன்னேறி செக்கிங் இன்ஸ்பெக்டர்

ஆவார். அப்போது அதிக வேகத்தில் பேருந்தை ஓட்டி இன்னொரு பேருந்தை ‘ஓவர் டேக்’ செய்த

ஓட்டுநர் நம்பியாருக்கு எச்சரிக்கை கடிதம் அளிப்பார். பின்பு அந்த பஸ் நிறுவனத்தின் மேனேஜர் ஆவர்.

கதாநாயகி கே.ஆர். விஜயாவின் சிபாரிசும் இதற்கு முக்கியக் காரணம் ஆகும். அவரை ஒரு விபத்திலிருந்து எம்.ஜி.ஆர் காப்பாற்றியிருப்பார்.

இன்றைக்கு இந்த முன்னேற்றம் எளிதாகத் தோன்றலாம். 1960களில் அப்படியில்லை. கூலித்தொழிலாளி மேனேஜர் ஆவதெல்லாம் கனவிலும் கற்பனையிலும் மட்டுமே சாத்தியம். எனவே எம்.ஜி.ஆரது இந்தப் பாத்திரப்படைப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மேனேஜராக இருந்த எம்.ஜி.ஆரை முதலாளி வேலையை விட்டு நீக்கியதும் மீண்டும் எம்.ஜி.ஆர் கைவண்டி இழுத்து தன்னுடன் பணிபுரிந்து பழியேற்றப்பட்ட தொழிலாளிகளின் குடும்பங்களைக் காப்பாற்றி உதவுகிறார்.

குதிரை வண்டிக்காரன்

என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டிக்காரனாகவும் ஜெயலலிதா புல்லுக்கட்டுக்காரியாகவும் நடித்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. இப்படத்தில் இருவரும் முருகன் கோவிலில் சாமிகும்பிடும் காட்சியும் இடம் பெற்றது.

முதல் அறிமுகப் பாட்டிலேயே அவர் குதிரை வண்டி ஓட்டுவது லாங் ஷாட்டில் ரோப் வைத்தும் பிற காட்சிகள் ஸ்டூடியோவுக்குள் குளோஸ்அப் ஷாட்கள் வைத்தும் அந்தப் பாட்டைப் படமாக்கியிருப்பார்கள். புல்லுக்கட்டு விற்கும் பெண்களும் எம்.ஜி.ஆர் நடத்தும் போலி சல்லாபக் காட்சிகளில் குதிரைவண்டிக்காரனைப் போல இயல்பாக நடித்திருப்பார். ஜெயலலிதாவுக்கு ஆத்திரமூட்டுவதற்காக இந்த விளையாட்டை நிகழ்த்துவார்.

எம்.ஜி.ஆர்

ரிக்ஷாக்காரன்

இந்தப்படத்தில் ஆரம்பக்காட்சியில் ரிக்ஷா பந்தயத்தில் முதல்பரிசு பெறுவார். ஒரு நாள் உண்மையிலேயே பிற்பகல் வேலையில் எம்.ஜி.ஆர் கோடம்பாக்கம் சாலையில் ரிக்ஷா ஓட்டிவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் அவரைத் தேடி அலையும்போது அவர் வெளியே இருந்து ரிக்ஷா ஓட்டியபடி உள்ளே வந்தார்.

1964 இல் எம்.ஜி.ஆர் மழையில் நனைகிறார்களே என்று ரிக்ஷாக்காரர்களுக்கு ரெயின்கோட் இலவசமாக வழங்கினார். சத்யா ஸ்டூடியோவில் ஏராளமான டெய்லர்களை வாடகைக்கு அழைத்து வந்து ரெயின்கோட்கள் தைத்து, அவற்றை அண்ணா அவர்களின் திருக்கரத்தால் வழங்கினார். அன்று முதல் ரிக்ஷாக்காரர்கள் எம்.ஜி.ஆர்மீது தனி அன்பு வைத்திருந்தனர். 1971இல் ரிக்ஷாக்காரன் படம் வெளிவந்தபோது அதை வெற்றிவிழா படமாக உயர்த்தினார்.

ரிக்ஷாக்காரன் படத்திலும் எம்.ஜி.ஆர் படித்துப் பட்டம் வாங்கியவர் பட்டாளத்தில் பணிபுரிந்தவர் பின்பு ரிக்ஷா ஓட்டுவார். ரிக்ஷா ஓட்டுதலையும் கட்டண விவரத்தையும் வரன்முறைப்படுத்தி இத்தொழிலுக்கு ஒரு கௌரவம் அளித்திருப்பார். “ஏ ரிக்ஷா” என்று அழைப்பதைக் கூடக் கண்டிருத்திருப்பார்.

ரிக்ஷாவில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் சண்டை போடும் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் சங்கர் அமைத்திருப்பார். இக்காட்சியில் எம்.ஜி.ஆர் சிலம்பு சுற்றியபடியே ரிக்ஷாவில் சுற்றி சுற்றி வந்து சண்டைபோட்டு தன் ‘பேசஞ்சரான’ மஞ்சுளாவைக் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவது புதுமையான சண்டைக் காட்சியாக அமைந்து ரசிகர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது.

மற்ற சில தொழிலாளி கதாபாத்திரங்கள்

தேர்த்திருவிழாவில் பரிசல் ஓட்டிகளாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வந்து ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவர். மோதலில் தொடங்கிய பழக்கம் காதலில் நிறைவுறும் துள்ளல் பாடலும் பரிசலில் குழுநடனமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

முதல் காட்சியில் பெயர் போடும்போதே மாட்டின் பெருமையைப் பாடி மாட்டுக்காரனாக நடித்திருப்பார். மாட்டுக்காரவேலனில் மாட்டுக்காரன்தான் ஹீரோ தெருப்பாடகனாக (நாடோடி) வரும் எம்.ஜி.ஆர் நாட்டின் சிறப்பு குறித்த பாடல்களை சரோஜாதேவிக்குச் சொல்லிக்கொடுத்து பாடச் சொல்வார்.

நல்லநேரம் படத்தில் “நம்ம ஆடுற ஆட்டமும் பாடுற பாட்டும் நாட்டுக்கு படிப்பினை தந்தாகனும்” என்று பாடிய கருத்தை ‘நாடோடியிலும் செயல்படுத்தியிருப்பார்.

 

தனிப்பிறவியில் லேத் பட்டறையில் தொழிலாளியாக வரும் எம்.ஜி.ஆர் “உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே” பாட்டு மூலமாக உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருப்பார். ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவார்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105166-mgr-helps-his-co-workers-mgr-series-episode-7.html

Link to comment
Share on other sites

’எங்க மகன்...’ என எம்.ஜி.ஆர் பெயர் எடுத்தது எப்படி..!? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-8

 
 

எம்.ஜி.ஆர்

Chennai: 

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தாய்க்குலத்தில் ஏகோபித்த ஆதரவுடன் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் இயற்கையிலேயே தன் தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தைப் போல மற்ற தமிழகத்து தாய்மாரிடமும் அளவற்ற தாய்ப்பாசம் கொண்டிருந்தார். மூதாட்டியர் பலர் அவரைத் தன் மகன் போல அனைத்து கண்ணீர் விட்டு கலங்கி நிற்கும்போது அவர்களின் ஏழ்மைத் தோற்றத்தைக் கண்டு அருவருப்படையாமல் தன் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்து விட்டவர். எம்.ஜி.ஆர்.

 

எம்.ஜி.ஆர்

முதியோருக்கும் சத்துணவு

எம்.ஜி.ஆர் முதல்வரானதும் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது இது காமராஜர் தொடங்கிய திட்டம் தானே என்று சிலர் விமர்சித்தனர். அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவா? என்று கேட்டனர்.

இவர்களால் சத்துணவின் தன்மை அறியாதோர் என்று திட்டவட்டமாகச் சொல்லாம். எம்.ஜி.ஆர் தொடங்கிய சத்துணவு திட்டத்தில் அப்பகுதியில் வாழும் முதியோருக்கும் மதியஉணவு இலவசமாக சத்துணவு மையத்தில் வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகையும் உயர்த்தித்தரப்பட்டது. யாரும் இல்லாத முதியவர்கள், மருமகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் இந்த சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு பெற்றனர். இவர்கள் எம்.ஜி.ஆரை தம் மகனாகக் கருதி வந்தனர்.

இளம் தாய்மாரின் கண்ணீர் துடைத்த எம்.ஜி.ஆர்

இளம் பெண்கள் குழந்தை பெற்று நான்கு மாதம் முதல் அந்தக் குழந்தைககு சத்துணவு மையங்களில் சத்துமாவு உருண்டை வழங்கப்பட்டது. இந்த சத்துமாவு உருண்டையை இளம் தாய்மார் தம் குழந்தைகளுடன் சத்துணவு மையத்துக்கு வந்து வாங்கி அங்கேயே ஊட்டிவிட வேண்டும். பின்பு சத்துணவு சமையலர்களின் சோம்பேறித் தனத்தால் சத்துமாவு பாக்கெட்டை இளம் தாய்மாரிடம் கொடுத்து வீட்டுக்குச் சென்று கொழுக்கட்டை செய்து அனைவரும் சாப்பிட்டுத் தீர்த்து விட்டனர்.

என் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆர்

திருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார். நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா? ஏற்றுக்கொண்டார். இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி.

ஒரு மகன் பட்டாளம், ஒரு மகன் சினிமா

மாட்டுக்கார வேலன் ஷூட்டிங் வைகை அணையில் நடந்தபோது சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் வந்து அங்கேயே இரவுபகலாக அமர்ந்துவிட்டது. பகலில் படப்பிடிப்பு இடைவேளையின்போது ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று விசாரித்தார். அதற்கு அந்தத்தாய் எனக்கு இரு மகன்கள் ஒருவன் பட்டாளத்தில் இருக்கிறான். இன்னொருவன் சினிமாவில் நடிக்கிறான்” என்றார். சினிமாவா? யார் அவர்? எனக்குத் தெரியாமல் இருக்கிறது சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்டார். அதற்கு அந்தத் தாய் “நீ தானப்பா என் ரெண்டாவது மகன்” என்றார். எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். தேர்தல், பிரசாரப் பயணத்தின்போது இவர்களின் இந்த அன்பைப் பார்த்துத்தான் அவர் பல தருணங்களில் “இந்த மக்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கண்ணீர் விட்டிருக்கிறார். முதல்வரானதும் அதிகாரிகளின் மறுப்புக்கு அஞ்சாமல் நிதியை திரட்டி சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி குழந்தைகள் மற்றும் முதியவரின் பசிப்பிணியைப் போக்கினார்.

வருமான வரி பாக்கியை செலுத்த முன்வந்த தாய்

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆரைத் தனது தலைமகனாகத் நினைத்த ஒரு அன்புத்தாய் பற்றி கூறியிருப்பார். அவருக்குச் சொந்த மகன் இருந்தார். அ.தி.மு.க ஆரம்பித்த பிறகு தி.மு.க ஆட்சி எம்.ஜி.ஆரின் பெயரைக் கெடுக்க பல முயற்சிகளை எடுத்தது. அதில் ஒன்று அவர் வருமானவரி செலுத்தவில்லை என்ற புரளி. இதைக் கேட்ட இந்த முஸ்லிம் தாய் தன் மகனை அழைத்து ‘அப்பா, உன் அண்ணன் எம்.ஜி.ஆர் வரி கட்டாமல் இருக்கிறாராமே. ஆவர் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஊருக்குத் தர்மம் செய்துவிட்டு இன்று இந்த சோதனையில் சிக்கிவிட்டார். நாம் நம் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிவிடுவோம். அவர் நம் சொத்தை வருமானவரியை கட்டி விடட்டும் என்றார். மகனையும் தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியாகத்தானே அந்தத் தாய் வளர்த்திருப்பார். அப்படியிருக்கும்போது மகன் மறுப்பாரா சம்மதித்துவிட்டார். தங்கள் கருத்தை எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், அவர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து பதில் எழுதினார். சொத்துகளை மாற்றவேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டார். நேரில் போய் பார்த்து அந்தத்தாயாரிடம் பேசவும் விரும்பினார்.

ஒரு நாள் அந்தத் தாய் மரணப்படுக்கையில் இருப்பதால் கடைசியாக ஒருமுறை தன் மகனைப் பார்க்க விரும்புவதாக எம்.ஜிஆருக்குக் கடிதம் வந்தது. இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என்று எம்.ஜி.ஆர் புறப்பட்டுச் சென்று அந்த அன்புத்தாயை நேரில் சந்தித்தார். மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் அந்தத்தாய் தன் வாழ்வை நிறைவுசெய்தார்.

நீராகாரம் கொடுத்த தாய்

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பின்பு கொடி ஏற்றுவதாக அவரை தொண்டர்கள் தமது பகுதியின் சந்து பொந்து எல்லாம் அழைத்துச் செல்வது உண்டு. அவரும் போகுமிடம் எல்லாம் சாதிபேதம் பார்க்காமல் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் இருப்பார். ஒருமுறை ஒரு குடிசை வாசலில் கொடியேற்றச் சென்றபோது அங்கிருந்த ஒரு மூதாட்டி “அய்யா இந்த வேகாத வெயிலில் இப்படி சுற்றுகிறாயே இந்தா இதை குடிச்சிட்டு போ” என்று ஒரு சொம்பு நிறைய நீராகாரம் (முதல் நாள் மிஞ்சிய சோற்றில் ஊற்றி வைக்கப்படும் நீர்) கொடுத்தார். எம்.ஜி.ஆர் அதை வாங்கி கடகடவென்று குடித்துவிட்டார்.

மொட்டையடித்து கருமாதி செய்தோர்

எம்.ஜி.ஆர்

காதல் காட்சியில் பெண்களை ஏமாற்றி தன் பிம்ப வலைக்குள் சிக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர் என்று பாண்டியன் என்பவர் ஒரு நூல் எழுதியிருந்தார். அது பொய் என்று நிரூபித்தவர்கள் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அவருக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து மொட்டையடித்து கருமாதி செய்த பல்லாயிரம் ஆண்கள் ஆவர். எம்.ஜி.ஆரை விட சிவாஜி, ஜெமினி ஆகியோரின் காதல் காட்சிகளில் நடித்து பெரியளவில் ரசிகர்களைப் பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆரை பெண்கள் ரசித்தத்தற்கும் மதித்ததற்கும் அடிப்படை காரணம் அவர் ஒரு சிறந்த மனிதனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் பெற்றிருப்பதாக அவர்கள் நம்பியது மட்டுமே.

நடிகை பத்மினியுடன் எம்.ஜி.ஆர் ராணி சம்யுக்தாவில் நடித்தபோது பத்மினியை குதிரையில் வைத்து கடத்திச் செல்லவேண்டும். அப்போது பத்மினி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். அவரை முதலில் குதிரையில் அமர்த்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆர் பார்த்துப்பா பத்திரமாக செய்யுங்க என்று எச்சரித்துக்கொண்டே இருந்ததாக (பத்மினி) ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதர் என்றும் நற்சான்று அளித்து இருந்தார்.

தன் அன்பாலும் கருணையாலும் எம்.ஜி.ஆர் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்ததால் அவரைத் தம் மகனாகப் பலரும் கருதினர். எனவேதான், எம்.ஜி.ஆர் இறந்ததும் நீயும் மொட்டை அடிச்சுடுப்பா என்று தன் மகனிடம் கூறியபோது அந்த மகன்கள் தாயின் சொல்லை தட்டாமல் எம்.ஜி.ஆருக்காக மொட்டையடித்து கருமாதி செய்தனர். இது எம்.ஜிஆருக்குத் தெரியாது. ஆனால், எம்.ஜி.ஆரின் தாயன்புக்கு இது ஒரு சான்றாகும்.

தாயும் பிள்ளையும்

ஐந்து வயதில் தன் தாயைப் பிரிந்து வயிற்றுப் பிழைப்புக்காக பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்ட எம்.ஜி.ஆருக்கு தாய்மீதான ஏக்கம் மனதுக்குள் இருந்திருக்கும். வளர்ந்ததும் தான் தன் பிள்ளைகளைப் பிரியாமல் தன்னுடன் வைத்து அன்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் உறுதியாகத் தோன்றியிருக்கும். ஆனால், அவருக்குப் பிள்ளை இல்லை. “என் அண்ணனுக்கு ஒன்பது பிள்ளைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு பிள்ளை கொடுக்கவில்லையே என்று அருள்தாசிடம் சொல்லி ஒருநாள் வருத்தப்படுகிறார். அவருடைய மனைவி சதானந்தவதி இரண்டுமுறை கருவுற்றபோது கருக்குழாயில் கருதங்கி வளர்ந்ததால் அதை வளர்க்க முடியவில்லை. அவருக்கு பின்பு காசநோய் தாக்கியதும் அவர் குழந்தைபெறத் தடையாக அமைந்துவிட்டது.

எம்.ஜி.ஆருக்கு ஒரு குழந்தையை ஆண்டவன் கொடுத்திருந்தால் அவர் இறந்தபோது அந்த ஒரு மகன் இறுதிக் கடன்களை நிறைவேற்றி இருப்பார். ஆனால் ஒரு பிள்ளை கூட இல்லாததால் பல ஆயிரம் மகன்கள் அவருக்கு இறுதிக்கடன் செய்து கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றினர். எல்லோருக்கும் பிள்ளைகள் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், எம்.ஜிஆருக்கு தாய்மார்கள் கிடைத்ததால் பிள்ளைகளும் சேர்ந்து கிடைத்தார்கள். இது ஒரு அபூர்வு நிகழ்வு.

எம்.ஜி.ஆர் படத்தில் முத்தக்காட்சிகள்

எம்.ஜி.ஆர்

நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது அவர் எம்.ஜி.ஆர் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது. அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறை காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.

தெய்வத்தாய் படத்தில் இன்ஸ்பெக்டர் மாறனாக எம்.ஜி.ஆர் நடித்த படம் தெய்வத்தாய். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இரண்டு முத்தக் காட்சிகள் வரும். எம்.ஜி.ஆர், சரோஜாதேவியிடம் ‘அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளிவிடவா” என்று கேட்டதற்கு, அவர் கோபமாக ‘இந்த ஊரை’ எல்லாம் நானழைத்துச் சொல்லிவிடவா’ என்பார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘அல்லிவிழி துள்ளிவிழ கோபம் என்னவோ என்று ‘இதற்கு ஏன் கோபித்துக் கொள்கிறாய்’ என்பார். அதற்கு சரோஜாதேவி,

“அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ’ என்று பதில் கூறுவார். இந்தப் பாடலில் சரோஜாதேவி கோபிப்பதற்கான ‘லாஜிக்’ புரியவில்லை. ‘அத்திப்பழக் கன்னத்திலே’ பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இருபுறமும் கையை நீட்டி விரல்களைக் கோத்து  முகமுகமாகப் பார்த்து நிற்பார்கள். அப்போது எம்.ஜி.ஆரின் முதுகுப்பகுதி நமக்குத் தெரியும் இருவரின் முகமோ முகபாவங்களோ படம் பார்ப்பவருக்குத் தெரியவில்லை என்றாலும் அப்போது முதல் முத்தம் பரிமாறப்பட்டது என்பதை ஊகிக்கலாம் அடுத்து ஒரு காட்சியில் இருவரும் ஒரு மறைப்புக்குப் பின்னிருந்து வெளியே வருவார்கள் அப்போது முத்தம் பெற்றதற்கான முகபவாம் சரோஜாதேவியிடம் வெளிப்படும் காட்சியில் மகிழ்ச்சியுடன் தோன்றும் சரோஜாதேவி பாடலில் கன்னத்தில் கிள்ளியதற்கு கோபம் தெரிவிப்பது என்பது சமீப காலம் வரை புரியாத புதிராக இருந்தது.

அண்மையில் அத்திப்பழக்கன்னத்திலே என்ற பாடல் சென்சார் செய்யப்பட்ட பாடல் என்பதைப் படித்த பின்புதான் மூடிக்கிடந்த ரகசியம் வெளிப்பட்டது. ‘அத்திப்பழக் கன்னத்திலே முத்தம் இடவா’ என்று முதலில் பாடல் எழுதப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியும் எடுத்துவிட்டனர். அதனால் பாடல் காட்சியில் முத்தக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன. சென்சாரில் ‘முத்தம் இடவா’ என்ற தொடரை அனுமதிக்காததால் பின்பு ‘கிள்ளி விடவா’ என மாற்றினார்.

‘முத்தம் இடவா’ என்று கேட்டதற்கு சரோஜாதேவி கோபப்பட்டு, இந்த ஊரை எல்லாம் நான் அழைத்துச் சொல்லிவிடா’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மறுமொழியாக எம்.ஜி.ஆர் ‘ஏன் இந்த கோபம் என்று கேட்க திருமணம் செய்யாமல் இப்படி பயந்து பயந்து கொஞ்சிக் கொண்டிருக்க முடியுமா என்று பதில் அளித்துள்ளார். இப்போது பாட்டின் கருத்தும் கதாநாயகியின் கோபத்துக்குக் காரணமும் தெளிவாயிற்று.

பணக்காரக் குடும்பத்தில்

எம்.ஜி.ஆர்

'பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சி பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது. வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.

“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும். 

“அதுவரை வந்தால் போதும் போதும்

அடுத்தது என்னம்மா?

ஆர்த்தி மேளம் மணவறை கோலம்

வருமா சொல்லம்மா?

என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாக பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.

சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை

“அம்மம்மா இது புதுமை – நான்

அறியாதிருந்த …… (சிரிப்பார்)

பேச முடியாத பெருமை – இந்த

இனிமை இனிமை இனிமை

என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார். இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.

பணம் படைத்தவனில்

‘அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்” எனத் தொடங்கும் பாடல் எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் பாடுவதாக ‘பணம் படைத்தவர் படத்தில் இடம் பெற்றது. குளித்துக் கொண்டிருக்கும் விஜயா வீட்டுக்குள் வரும்வரை காத்திருந்தவரை அவர் சீவி முடித்து கொண்டைபோட்டு பூ வைத்து அழகாக சேலை கட்டி வந்தவுடன் ஒரு பீரோ மறைவில் அவருக்கு முத்தம் கொடுப்பார். இந்தக் காட்சியும் அந்த மறைவிடத்துக்குச் செல்வதும் பின்பு வெளியே வரும்போது அவர்களின் முகபாவமும் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க வைக்கும். இந்த ஊகத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரேடியோவில் கேட்ட பாடல் வரிகள் அமையும்.

“அம்மம்மா என்ன சுகம்

அத்தனையும் கன்னி சுகம்’

என்று எம்.ஜி.ஆர் பாடுவது ஊகித்தது சரிதான் என்று உறுதிப்படுத்தும். ஆனால், சென்சார் இந்த வரிகளை அனுமதிக்கவில்லை எனவே படத்தில் இவை.

“அம்மம்மா என்ன சொல்ல

அத்தனையும் கண்டதல்ல”

என்று மாற்றப்பட்டிருக்கும் இதுபோன்ற சென்சார் தொல்லைகள் காங்கிரசார் காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏராளமாக இருந்தது.

‘அன்னமிட்ட கையில்’

'அன்னமிட்டகை' படத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக வரும் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் ஒரு மலையருவியில் நனைந்து மகிழ்ந்தபடி ‘அழகுக்கு மறுபெயர் பெண்ணா’ என்ற பாடலைப் பாடுவர். அப்போது ஒரு பாறையில் இருவரும் சாய்ந்து நின்றபடி முகமுகமாக முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறும். ஜெயலலிதாவின் முகம் தெரியாமல் முதுகு படம் பார்ப்பவருக்கு தெரியும் வகையில் இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது எம்.ஜி.ஆரை ஒருதலையாகக் காதலிக்கும் டாக்டர் பாரதி இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாவார். இதனால் பார்வையாளர் இக்காட்சியை ரசிக்க முடியாதபடி பின்னால் இசையும் நம்முள் அதிர்ச்சி உணர்வுகளை பரப்பிவிடும்.

இதயக்கனியில்

எம்.ஜி.ஆர்

இதயக்கனி படத்தில் ஆடியில் அவசரக் கல்யாணம் முடித்து ஆவணி மாதம் ‘அஞ்சாம் தேதிக்கு’க்

காத்திருக்கும் இளம் தம்பதிகளாக எம்.ஜி.ஆரும் ராதா சலூஜாவும் நடித்திருப்பர். ஆவணி மாதம்

ஐந்தாம் தேதி பிறந்ததும் விமானத்தில் தேனிலவுக்குப் பறந்துவிடுவர் அடுத்து ‘இன்பமே உந்தன்

பேர் பெண்மையே” என்ற பாடல் உச்சஸ்தாயியில் தொடங்கும்” இந்த பாடல் தொடங்குவதற்கு

முன்பு ஒரு முத்தச்சத்தம் கேட்கும். கேட்காதவர்கள் இனிக் கேட்டுப்பாருங்கள். இந்தப் பாடல்

காட்சியில் எம்.ஜி.ஆர் தன் கைகளால் இருவரின் வாய்ப்பகுதியையும் மூடியபடி காட்டப்படும்

காட்சியில் அவர் ராதா சாலூஜாவுக்கு முத்தம் கொடுப்பார். இந்தக் காட்சிகள் ஏறத்தாழ நொடிக்

காட்சி போலவே அமைந்திருக்கும்.

‘இதழே இதழே தேன் வேண்டும்’

‘இதயக்கனி’யில் மனைவியைச் சிறையில் அடைத்ததும் அவரோடு இருந்த சந்தோஷ தருணங்களை எம்.ஜி.ஆர் நினைத்துப் பார்க்கும் காட்சி ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்ற முதலிரவுக் காட்சி ஆகும். இப்பாடலில் சோபாவில் உட்கார்ந்திருக்கும் தன் மனைவியை நோக்கி முகம் குனிந்த எம்.ஜி.ஆர் நிமிரும்போது அவரைப் பார்த்து ராதா சலூஜா கேலியாக சிரிப்பார். காரணம், ராதா சலூஜாவின் நெற்றிப் பொட்டு எம்.ஜி.ஆரின் நெற்றியில் ஒட்டியிருக்கும். அந்தக்காட்சி முத்தம் கொடுக்கப்பட்டதை நமக்குக் குறிப்பாக உணர்த்தும்.

சிரிப்பும் சிலிர்ப்பும்

‘குடியிருந்த கோயில்’ படத்தில் “நீயே தான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைபிடிக்கும் சீமாட்டி” என்ற பாடலில் செடி மறைவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு முத்தமிட நெருங்கும்போது ஜெயலலிதா சட்டென்று விலகிவிடுவார். செடியிலிருந்த ரோஜாப்பூ தான் எம்.ஜி.ஆர் வாயில் சிக்கும். எம்.ஜி.ஆர் ரோஜாமலரைக் வாயில் கவ்வியபடி செடியிலிருந்து வெளியே நகர்வார். இது ஒரு சிரிப்புக் காட்சியாக அமைந்துவிட்டது.

இதுவரை எம்.ஜி.ஆர் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த மறைமுகக் காட்சிகளை பார்த்தோம். இனி எம்.ஜி.ஆருக்குக் கதாநாயகி முத்தம் கொடுக்கும் காட்சியை பார்ப்போம். அன்னமிட்ட கையில் எம்.ஜி.ஆர் ஒரு காட்சியில் ஜெயலலிதா அவருக்கு கன்னத்தில் முத்தமிடுவதாக நாம் உணரத்தக்க வகையில் நடித்திருப்பார். அப்போது முத்தம் பெற்ற கூச்சத்தில் தன் கண்ணைச் சட்டென்று மூடி இதழ்க் கடையோரத்தில் ஒரு புன்னகை காட்டி முத்தத்தினால் பெற்ற சிலிர்ப்பை ஒர் இளைஞரைப் போல தன் முகபாவத்தால் உணர்த்துவார். அனைவரும் ரசிக்கத் தக்க காட்சியாக அது அமைந்திருக்கும்.

ஸ்ரீதேவி ஏன் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகள் ஸ்வீட்டாக இருக்கும் என்றார் என்பது இப்போது புரிகிறதா.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105259-mgr-is-our-kid-mgr-series-episode-8.html

Link to comment
Share on other sites

’அன்பே வா’ முதல் ’உலகம் சுற்றும் வாலிபன்’ வரை... எம்.ஜி.ஆர் படங்களின் சிம்பிள் சிங்கிள் கரு! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 9

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். என்னுடைய அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.

 

எம்.ஜி.ஆர்

அகம்-புறம் 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங்கள் தம் பாடுபொருளை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்துள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்குரிய இந்தப் பண்டைய இலக்கண நூல்கள் உலகில் வேறு எந்தச் செவ்வியல் மொழியிலும் இல்லாத தனிப்பெரும் பண்பாக, மனித வாழ்க்கையின் செயற்பாடுகளுக்கு வகுத்துள்ளன. அந்த இலக்கண வகைப்படி இலக்கியங்கள் அகம், புறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் universal எனப்படும் love and war-ஐ குறிப்பவையாகும்.

அகத்தினை

மனிதனின் அந்தரங்க வாழ்வு அல்லது காதல் வாழ்க்கை அகத்திணை எனப்படும். இதற்கு சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.

 

எம்.ஜி.ஆர்

பூத் தரு புணர்ச்சி

அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத் தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்தரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும. சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆர் ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.

புனல் தரு புணர்ச்சி

சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.

மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.

இருவருக்கு இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல் தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.

எம்.ஜி.ஆர்

மதுரை வீரன் கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது.

களிறு தரு புணர்ச்சி

களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர்

‘நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.

‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்.

ஆக காதல் என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் ரசிக்கப்படுவது போல எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுகிறது. எனவே எம்.ஜி.ஆர் தன் படத்தில் சொந்தம், பந்தம் பாசம் போன்றவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் - காதல் பாடல்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

புறத்திணை 

புறத்திணை என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.

உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.

கிரேக்க இலக்கியத்தில் the trojan warபேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஒருவன் பத்துப்பேரை அடிப்பதா?

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் படத்தில் அவர் ஒருவரே பத்துப்பேரை அடித்து உதைத்து ஓடவைப்பது சாத்தியமா? என்று அவரிடம் கேட்டதற்கு புராணத்தில் அர்ஜூனன் இதே செயலைச் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறீர்களே என்றார். அந்த இதிகாச புராண நாட்டுப் புறக் கதைத் தாக்கமே எம்.ஜி.ஆர் படங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது.

மேனாட்டறிஞர் ஒருவர் ஹீரோ என்பதற்கு இலக்கணம் வகுக்கும்போது, “ஒரு மனிதனால் செய்யக்கூடியதை, ஆனால் எல்லா மனிதராலும் செய்ய இயலாததைச் செய்பவனே ஹீரோ” என்கிறார். இந்த இலக்கணம் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தும். அவர் செய்யும் சண்டைக்காட்சி ஒரு வீரமும் விவேகமும் உடைய மனிதனால் செய்யக்கூடிய வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

சுவரை உடைத்து உள்ளே செல்வதா?

எம்.ஜி.ஆர் படங்களில் கதவை உடைத்து உள்ளே போகும் காட்சிகள் உண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்து பலருக்கும் ஐயம் தோன்றுவதுண்டு. கராத்தே மணி என்பவர் சண்டைப் பயிற்சிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு படத்தில் சுவரை உடைக்கும் காட்சியில் நிஜமான சுவரை உடைத்துக் காட்டினார். ஆனால் இவர் சும்மா சொல்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கருதிய கேமராமேன் கேமராவை இயக்காமல் இவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதை கராத்தே மணி ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆக சுவரை உடைப்பதும், கதவை உடைப்பதும் ஒரு மனிதனால் செய்யக்கூடியதுதான் என்பது நிரூபணமாகிவிட்டது. கராத்தே மணி மாதிரி ஒருவர் செய்யக் கூடியதைத்தான் எம்.ஜி.ஆர் தனது படங்களில் செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் ஹீரோதான்.

காதலும் போரும்

காதலும் போரும் எல்லாக் காலத்திலும் மனித இனத்துக்குப் பரவசமூட்டுவதாக இருப்பதற்கு முக்கிய காரணம் இரண்டுமே மனித உயிர் சார்ந்ததாகும். காதலால் மனித உயிர் ஜனிக்கிறது போரால் மனித உயிர் மரிக்கிறது. இந்த இரண்டுமே மனிதனை மிகுந்த பரவசத்துக்குள்ளாக்குகின்றன. எனவே மனிதர் வாழும் காலம் எல்லாம் ஆண்-பெண் ஈர்ப்பும், ஆண் - ஆண் மோதலும் மனிதர்களுக்கு அலுக்கவே அலுக்காத நிரந்தரப் பரவசங்கள் ஆகும்.

உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்

எம்.ஜி.ஆர்

காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
 ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.

சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.

தேடல் என்ற அடிநாதம்

காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.

 

உலகில் ஓர் ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர் ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105451-the-one-line-of-mgr-movies-mgr-series-episode-9.html

Link to comment
Share on other sites

‘இதழே இதழே தேன் வேண்டும்..!’ எம்.ஜி.ஆர் பட முத்தக்காட்சி மேக்கிங் விசேஷம்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 10

 
 

எம்.ஜி.ஆர்

 

நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது அவர் எம்.ஜி.ஆர் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது. அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

எம்.ஜி.ஆர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

எம்.ஜி.ஆர்

தெய்வத்தாய் படத்தில் இன்ஸ்பெக்டர் மாறனாக நடித்தார் எம்.ஜி.ஆர். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இரண்டு முத்தக் காட்சிகள் வரும். எம்.ஜி.ஆர், சரோஜாதேவியிடம் ‘அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளிவிடவா” என்று கேட்டதற்கு, அவர் கோபமாக ‘இந்த ஊரை’ எல்லாம் நானழைத்துச் சொல்லிவிடவா’ என்பார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘அல்லிவிழி துள்ளிவிழ கோபம் என்னவோ என்று ‘இதற்கு ஏன் கோபித்துக் கொள்கிறாய்’ என்பார். அதற்கு சரோஜாதேவி,

“அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ’ என்று பதில் கூறுவார். இந்தப் பாடலில் சரோஜாதேவி கோபிப்பதற்கான ‘லாஜிக்’ புரியவில்லை. ‘அத்திப்பழக் கன்னத்திலே’ பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இருபுறமும் கையை நீட்டி விரல்களைக் கோத்து முகமுகமாகப் பார்த்து நிற்பார்கள். அப்போது எம்.ஜி.ஆரின் முதுகுப்பகுதி நமக்குத் தெரியும் இருவரின் முகமோ முகபாவங்களோ படம் பார்ப்பவருக்குத் தெரியவில்லை என்றாலும் அப்போது முதல் முத்தம் பரிமாறப்பட்டது என்பதை ஊகிக்கலாம் அடுத்து ஒரு காட்சியில் இருவரும் ஒரு மறைப்புக்குப் பின்னிருந்து வெளியே வருவார்கள் அப்போது முத்தம் பெற்றதற்கான முகபவாம் சரோஜாதேவியிடம் வெளிப்படும் காட்சியில் மகிழ்ச்சியுடன் தோன்றும் சரோஜாதேவி பாடலில் கன்னத்தில் கிள்ளியதற்கு கோபம் தெரிவிப்பது என்பது சமீப காலம் வரை புரியாத புதிராக இருந்தது.

அண்மையில் அத்திப்பழக்கன்னத்திலே என்ற பாடல் சென்சார் செய்யப்பட்ட பாடல் என்பதைப் படித்த பின்புதான் மூடிக்கிடந்த ரகசியம் வெளிப்பட்டது. ‘அத்திப்பழக் கன்னத்திலே முத்தம் இடவா’ என்று முதலில் பாடல் எழுதப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியும் எடுத்துவிட்டனர். அதனால் பாடல் காட்சியில் முத்தக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன. சென்சாரில் ‘முத்தம் இடவா’ என்ற தொடரை அனுமதிக்காததால் பின்பு ‘கிள்ளி விடவா’ என மாற்றினார்.

‘முத்தம் இடவா’ என்று கேட்டதற்கு சரோஜாதேவி கோபப்பட்டு, இந்த ஊரை எல்லாம் நான் அழைத்துச் சொல்லிவிடா’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மறுமொழியாக எம்.ஜி.ஆர் ‘ஏன் இந்தக் கோபம் என்று கேட்க திருமணம் செய்யாமல் இப்படிப் பயந்து பயந்து கொஞ்சிக் கொண்டிருக்க முடியுமா என்று பதிலளித்துள்ளார். இப்போது பாட்டின் கருத்தும் கதாநாயகியின் கோபத்துக்குக் காரணமும் தெளிவாயிற்று.

பணக்காரக் குடும்பத்தில்

எம்.ஜி.ஆர்

'பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது. வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.

“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும். 

“அதுவரை வந்தால் போதும் போதும்

அடுத்தது என்னம்மா?

ஆரத்தி மேளம் மணவறை கோலம்

வருமா சொல்லம்மா?

என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.

சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை

“அம்மம்மா இது புதுமை – நான்

அறியாதிருந்த …… (சிரிப்பார்)

பேச முடியாத பெருமை – இந்த

இனிமை இனிமை இனிமை

என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார். இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.

பணம் படைத்தவனில்

எம்.ஜி.ஆர்

‘அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்” எனத் தொடங்கும் பாடல் எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் பாடுவதாக ‘பணம் படைத்தவர் படத்தில் இடம் பெற்றது. குளித்துக் கொண்டிருக்கும் விஜயா வீட்டுக்குள் வரும்வரை காத்திருந்தவரை அவர் சீவி முடித்து கொண்டைபோட்டு பூ வைத்து அழகாக சேலை கட்டி வந்தவுடன் ஒரு பீரோ மறைவில் அவருக்கு முத்தம் கொடுப்பார். இந்தக் காட்சியும் அந்த மறைவிடத்துக்குச் செல்வதும் பின்பு வெளியே வரும்போது அவர்களின் முகபாவமும் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க வைக்கும். இந்த ஊகத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரேடியோவில் கேட்ட பாடல் வரிகள் அமையும்.

“அம்மம்மா என்ன சுகம்

அத்தனையும் கன்னி சுகம்’

என்று எம்.ஜி.ஆர் பாடுவது ஊகித்தது சரிதான் என்று உறுதிப்படுத்தும். ஆனால், சென்சார் இந்த வரிகளை அனுமதிக்கவில்லை எனவே படத்தில் இவை.

“அம்மம்மா என்ன சொல்ல

அத்தனையும் கண்டதல்ல”

என்று மாற்றப்பட்டிருக்கும் இதுபோன்ற சென்சார் தொல்லைகள் காங்கிரஸார் காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏராளமாக இருந்தன.

‘அன்னமிட்ட கையில்’

'அன்னமிட்ட கை' படத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக வரும் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் ஒரு மலையருவியில் நனைந்து மகிழ்ந்தபடி ‘அழகுக்கு மறுபெயர் பெண்ணா’ என்ற பாடலைப் பாடுவர். அப்போது ஒரு பாறையில் இருவரும் சாய்ந்து நின்றபடி முகமுகமாக முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறும். ஜெயலலிதாவின் முகம் தெரியாமல் முதுகுப் படம் பார்ப்பவருக்குத் தெரியும் வகையில் இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது எம்.ஜி.ஆரை ஒருதலையாகக் காதலிக்கும் டாக்டர் பாரதி இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாவார். இதனால் பார்வையாளர் இக்காட்சியை ரசிக்க முடியாதபடி பின்னால் இசையும் நம்முள் அதிர்ச்சி உணர்வுகளைப் பரப்பிவிடும்.

இதயக்கனியில்

இதயக்கனி படத்தில் ஆடியில் அவசரக் கல்யாணம் முடித்து ஆவணி மாதம் ‘அஞ்சாம் தேதிக்கு’க் காத்திருக்கும் இளம் தம்பதிகளாக எம்.ஜி.ஆரும் ராதா சலூஜாவும் நடித்திருப்பர். ஆவணி மாதம் ஐந்தாம் தேதி பிறந்ததும் விமானத்தில் தேனிலவுக்குப் பறந்துவிடுவர் அடுத்து ‘இன்பமே உந்தன் பேர் பெண்மையே” என்ற பாடல் உச்சஸ்தாயியில் தொடங்கும்” இந்தப் பாடல் தொடங்குவதற்கு முன்பு ஒரு முத்தச்சத்தம் கேட்கும். கேட்காதவர்கள் இனிக் கேட்டுப்பாருங்கள். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் தன் கைகளால் இருவரின் வாய்ப்பகுதியையும் மூடியபடி காட்டப்படும் காட்சியில் அவர் ராதா சாலூஜாவுக்கு முத்தம் கொடுப்பார். இந்தக் காட்சிகள் ஏறத்தாழ நொடிக் காட்சி போலவே அமைந்திருக்கும்.

‘இதழே இதழே தேன் வேண்டும்’

எம்.ஜி.ஆர்

‘இதயக்கனி’யில் மனைவியைச் சிறையில் அடைத்ததும் அவரோடு இருந்த சந்தோஷ தருணங்களை எம்.ஜி.ஆர் நினைத்துப் பார்க்கும் காட்சி ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்ற முதலிரவுக் காட்சி ஆகும். இப்பாடலில் சோபாவில் உட்கார்ந்திருக்கும் தன் மனைவியை நோக்கி முகம் குனிந்த எம்.ஜி.ஆர் நிமிரும்போது அவரைப் பார்த்து ராதா சலூஜா கேலியாகச் சிரிப்பார். காரணம், ராதா சலூஜாவின் நெற்றிப் பொட்டு எம்.ஜி.ஆரின் நெற்றியில் ஒட்டியிருக்கும். அந்தக்காட்சி முத்தம் கொடுக்கப்பட்டதை நமக்குக் குறிப்பாக உணர்த்தும்.

சிரிப்பும் சிலிர்ப்பும்

‘குடியிருந்த கோயில்’ படத்தில் “நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டு கைபிடிக்கும் சீமாட்டி” என்ற பாடலில் செடி மறைவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு முத்தமிட நெருங்கும்போது ஜெயலலிதா சட்டென்று விலகிவிடுவார். செடியிலிருந்த ரோஜாப்பூ தான் எம்.ஜி.ஆர் வாயில் சிக்கும். எம்.ஜி.ஆர் ரோஜாமலரைக் வாயில் கவ்வியபடி செடியிலிருந்து வெளியே நகர்வார். இது ஒரு சிரிப்புக் காட்சியாக அமைந்துவிட்டது.

இதுவரை எம்.ஜி.ஆர் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த மறைமுகக் காட்சிகளைப் பார்த்தோம். இனி எம்.ஜி.ஆருக்குக் கதாநாயகி முத்தம் கொடுக்கும் காட்சியைப் பார்ப்போம். அன்னமிட்ட கையில் எம்.ஜி.ஆர் ஒரு காட்சியில் ஜெயலலிதா அவருக்குக் கன்னத்தில் முத்தமிடுவதாக நாம் உணரத்தக்க வகையில் நடித்திருப்பார். அப்போது முத்தம் பெற்ற கூச்சத்தில் தன் கண்ணைச் சட்டென்று மூடி இதழ்க் கடையோரத்தில் ஒரு புன்னகை காட்டி முத்தத்தினால் பெற்ற சிலிர்ப்பை ஓர் இளைஞரைப் போல தன் முகபாவத்தால் உணர்த்துவார். அனைவரும் ரசிக்கத் தக்க காட்சியாக அது அமைந்திருக்கும்.

 

ஸ்ரீதேவி ஏன் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகள் ஸ்வீட்டாக இருக்கும் என்றார் என்பது இப்போது புரிகிறதா..!!

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105684-making-of-romantic-scenes-in-mgr-movies-mgr-series-episode-10.html

Link to comment
Share on other sites

‘குறியீடுகளின் குரு!’ எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் குறியீடுகள்...! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 11

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்புகளுக்கும் அவரது தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தந்தை அன்பை அறியாதவர். தாயால் வளர்க்கப்பட்டவர். தாயாரின் கண்டிப்பு மொழிகளும் வசைமொழிகளும் அவரது நினைவில் நின்றன. அண்ணனின் பாசமும் அன்பும் ஏழு வயது முதல் அவரை திரையுலகம் வரை அரவணைத்துக் கொண்டு சென்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் ஈடுபாட்டில் அவர் அண்ணனுக்கு பெருவிருப்பம் கிடையாது. அம்மா, அண்ணன், அண்ணி, மனைவி குழந்தைகள் மட்டுமே அவரது குடும்பம் திரையுலகிலும் அரசியலிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். நலம் விரும்பிகள் இருந்தனர். அடி வருடிகள் இருந்தனர். எதிரிகளும் துரோகிகளும் அவரைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவரைப் பகைத்துக் கொண்ட சில அப்பாவிகளும் இருந்தனர். அவரது ரசிகர்கள் அவரது ரத்தத்தின் ரத்தமாக விளங்கினர். அவரது உயிர்நாடியாக இருந்தது உழைக்கும் வர்க்கத்தினரும் தாய்மாரும் பெண்களும் ஆவார். இவர்களை மையப்படுத்தியே அவரது படத்தலைப்புகள் வைக்கப்பட்டன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்பு சில இலக்கியச்சான்று உடைய தலைப்புகளைப் பற்றி காண்போம்.

 

ஆயிரத்தில் ஒருவன்

எம்.ஜி.ஆர்

1965ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் நாள் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். கம்ப இராமயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த போது கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறுபாட்டுக்கு ஒரு பாட்டாகப் புகழ்ந்திருந்தார். அதனைக் கேட்ட சபையினர் ‘இராமகாதையில்’ (கம்பர் சூட்டிய பெயர்) நரஸ்துதி (மனிதனைப் புகழ்வது) அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். உடனே கம்பர் சரி நான் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடலாக சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறேன் என்றார். மேலும், சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் அல்லர் அவர் ஆயிரத்தில் ஒருவர் என்றார். இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பெயர் எம்.ஜி.ஆரின் படத்துக்கு சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆரின் கதை இலாகாவில் இருந்த வித்வான் வே. இலட்சுமணன் எம்.ஜி.ஆர் கம்பராமாயணம், தொல்காப்பியம் போன்றவற்றைப் படிக்க உதவினர். மேல்சபைத் தலைவராக இருந்த மா.பொ.சி. அவருக்குச் சிலப்பதிகாரச் சுவையைப் புகட்டினார்.

கம்பன் விழா ஒன்றில் சிறப்புரை ஆற்றிய எம்.ஜி.ஆரை வியப்புடன் பார்த்த மு.மு. இஸ்மாயில் அவர்கள் ‘நீங்கள் கம்பனை எங்குக் கற்றீர்கள்?’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் சிறுவயதில் சம்பூர்ண இராமாயணத்தில் நடித்த காலத்தில் இருந்தே எனக்கு கம்பராமாயணத்தில் பரிச்சயம் உண்டு என்றார்.

கம்பன் விழாவில் பங்கேற்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு கம்பராமாயணம் தெரிந்திருந்தது. அவர் படத்துக்கு அவருடன் இருந்த இலக்கிய இதிகாசத் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் காட்சி சித்தரிப்பு. வசன உதவி, பெயர் சூட்டல் ஆகியவற்றிற்கு உதவினர். ஆஸ்தான நாத்தகி, கவிஞர் என்பவை எல்லாம் அவர் முதலமைச்சர் ஆன பிறகு நடைமுறைக்கு வந்ததற்கு அடிப்படை காரணம் அவர் சினிமாவில் இருக்கும் போதே இலக்கியம் இதிகாசம், இசை, நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை தன்னுடன் வைத்திருந்ததே ஆகும்.

ஆசை முகம்

எம்.ஜி.ஆரின் தேர்தல் நிதியை விட அவர் தன் முகத்தை ஒருமுறை மக்களிடம் வந்து காட்டினாலே போதும் திமுக அதிக ஒட்டுகளை பெற்று வெற்றி வாகை சூடும் என்றார் அறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரின் மலர்ந்த முகத்தைப் பார்க்க மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தனர். இதனால், ஆசை முகம், முகராசி என்ற பெயர்கள் அவர் படங்களுக்கு சூட்டப்பட்டன.

ஆசை முகம் (10-12-65) படம் தமிழில் வந்த முதல் முகமாற்று அறுவை சிகிச்சை படம் ஆகும். ராம்தாஸ் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக எம்.ஜி.ஆர் முகம் போல மாற்றிக் கொள்ளும் படம் ஆசைமுகம். ரேவதியும் அவர் கணவரும் இதே கதையமைப்பில் ஒருபடம் எடுத்தபோது ‘புதியமுகம்’ என்று பெயரிட்டனர். இது அறிவியல் சாதனையைக் குறிக்கும் பெயர். ஆனால் எம்.ஜி.ஆர் முகம் ‘செண்டிமெண்ட்’ சார்ந்தது. அது “ஆசைமுகம்”.

பாரதியார் பாடல்களில் காதலி ஒருத்தி

“ஆசைமுகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல் வேண்டி தோழி”

என்று காதலனின் முகம் மறந்துவிட்டதை பற்றி தன் தோழியிடம் கூறுவாள். இந்த ‘ஆசை முகம்’ என்ற பெயர் ரசிகர்கள் ஆவலோடு பார்க்க விரும்பும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு ஏற்ற பெயராகவும் கதையோடு பொருந்திச் செல்கின்ற பெயராகவும் அமைந்தது.

முகராசி

எம்.ஜி.ஆர்

1966ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் நாள் தேவர்  ஒரு படம் வெளியிட்டார். எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்த இப்படத்துக்கு அவர் ‘முகராசி’ என்று பெயரிட்டார். படம் அமோக வெற்றி. குறைந்த செலவில் எடுத்து நிறைய இலாபம் கிடைத்த படம் முகராசி. இதில் ஜெயலலிதா சிலம்பு சுற்றுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.ஜி.ஆர் அவருக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை எடுத்துரைப்பார். அமெரிக்க மாணவிகள் இப்படத்தைப் பார்த்தபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தை ‘Empowered Woman' எனப் பாராட்டினார்.

குடியிருந்த கோயில்

எம்.ஜி.ஆர் படங்களில் தாய்க்குலம் விரும்பும் வகையில் தாய்ப்பாசம் இடம் பெற்று இருக்கும். தந்தைப் பாத்திரம் புதியபூமி, விவசாயி, பணக்காரக்குடும்பம் போன்ற சில படங்களில் மட்டுமே காணப்படும்.

தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெரியவர்களின் கதைகள் நமக்கு நினைவுக்கு வரும். உலகத்தையே வெறுத்த துறவிகளால் கூட தாய்ப்பாசத்தை துறக்க இயலவில்லை. நபிகள் நாயகம் தாயின் காலடியில் உன் சொர்க்கம் இருக்கிறது என்றார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது தன் சீடர்களைப் பார்த்து ‘இதோ உன் தாய்’ என்று தன் தாயாரை பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறார். சங்கரர் தன் தாய்க்கு இறுதிக்கடன் தீர்க்க எங்கிருந்தாலும் வந்துவிடுவேன் என்கிறார். ஒரு தாய்க்கு மகன் செய்யும் கடமையை அவர் மறக்கவில்லை. பட்டினார்த்தார் தன் தாயின் சிதைக்கு தீ மூட்டிய பிறகு குடியிருந்த கோயிலை தீக்கு இரையாக்கிவிட்டேனே என வருந்துகிறார். இங்கு தாயை இவர் ‘குடியிருந்த கோயில்’ என்று குறிப்பிட்டது, எம்.ஜி.ஆர் படத்துக்கு பொருத்தமான தலைப்பாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் இதற்கு ‘சங்கமம்’ என்றுதான் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அதைவிட குடியிருந்த கோயில்’ என்ற பெயரை எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாகத் தோன்றியது. படமும் வெள்ளிவிழா கொண்டாடியது.

உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர்

தமிழ்மொழி அகராதியைத் தொகுத்த ஏ.சிதம்பரநாதன் செட்டியார் உலகநாடுகள் பலவற்றைச் சுற்றிவந்து உலகம் சுற்றிய தமிழன் என்று ஒரு நூல் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் இத்தலைப்பை உலகம் சுற்றும் வாலிபன் என்று தனக்கேற்றபடி மாற்றிக் கொண்டார்.

காவல்காரன்

1967-ல் திமுக வெற்றி பெற்றதும் செப்டம்பர் ஏழாம் நாள் வெளிவந்த திரைப்படம் இது. இந்தப் படத்துக்கு முதலில் “மனைவி” என்று பெயர் சூட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி குழந்தை பெறும் படமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளித்து “மனைவி” என்று பெயர் சூட்டப்பட்டது.

விளம்பர ஸ்டில்கள் எடுத்த போது “ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கையில் டார்ச் லைட்டும் மறுகையில் சிறு தடியுமாக இரவில் காவல்பணி மேற்கொள்ளும் ரோந்துப் போலிஸ் போலத் தோன்றினார். அதைப்பார்த்த கவிஞர் வாலி இந்தப் படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயரிடலாமே என்றார். எம்.ஜி.ஆருக்கும் சரியனப்பட்டது ஏனென்றால் இப்படத்தில்

“என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும்
நான் தான் காவலடி”

என்று பாடல்வரிகள் அமைந்திருக்கும். எனவே மனைவிக்கும் காதலிக்கும் நானே காவல்காரன் என்ற பொருளில் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்ததால் ‘காவல்காரன்’ என்பதே பொருத்தமான தலைப்பாகத் தோன்றியிருக்கும்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத சிலர் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவை கழற்றிவிடத் திட்டமிட்டனர். ‘மனைவி’ என்ற பெயரை நீக்கிட்டாலும் பிடிவாத குணம் உடைய ஜெயலலிதா அடுத்தடுத்த படங்களில் கணவன் கண்ணன் என் காதலன் படத்தலைப்புகளில் தன் முக்கியத்துவத்தை நிறுவி அடிமைப்பெண்ணில் தன் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்டார்.

திருடாதே

‘பாக்கெட் மார்’ என்ற இந்திய படத்தைப் பார்த்து எடுக்கப்பட்ட திருடாதே படம் 1958ல் தொடங்கி 1961-ல் வெளிவந்தது. இப்படத்துக்கு “நல்லவனுக்குக் காலமில்லை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இத்தலைப்பு எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரே நல்லவனுக்கு காலமில்லை என்று சொல்லிவிட்டார். இனியெதற்கு நல்லவனாக வாழவேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை இத்தலைப்பு உருவாக்கிவிடும் என்று எம்.ஜி.ஆர் தான் குழுவினரிடம் தெரிவித்தார். பின்பு “அந்தப் படக்குழுவினரைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்பவர் (இவர் வித்வான் வே. லட்சுமணன் கிடையாது) ‘திருடாதே’ என்ற பெயரைக் கூறினார். எம்.ஜி.ஆருக்கு இந்தப் பெயர் பிடித்திருந்ததால் அவருக்கு ரூ.500 அன்பளிப்பாகக் கொடுத்தார். படத்தில் வரும்

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

என்ற பாடல் படத்தலைப்புக்கு வலுச் சேர்த்தது. ‘திறமை இருக்கு’ என்று பாடியது வறுமையில் உழன்றவருக்கு உழைத்து வாழும் நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்தியது.

நல்லவன் வாழ்வான்

எம்.ஜி.ஆர்

‘திருடாதே’ படத்துக்கு ‘நல்லவனுக்குக் காலமில்லை’ என்று முதலில் சூட்டியிருந்த பெயர் சரியில்லை என்று மாற்றிய எம்.ஜி.ஆர் தன் அடுத்த படத்திற்கு ‘நல்லவன் வாழ்வான்’ என்று பெயர் வைத்தார். இது அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம். அண்ணா தனது இதயக்கனி எம்.ஜி.ஆர் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதனால் இதயக்கனி என்று ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரிட்டார். பணத்தோட்டம், பணம் படைத்தவன், பணக்காரக் குடும்பம் ஆகியவை பணக்காரனின் முகத்திரையைக் கிழித்த படங்கள்.

திமுக ஆட்சியில்

திமுக அரசாட்சி அமைந்ததும் தமிழ் நாட்டில் பொற்காலம் பிறந்துவிட்டதாகக் கருதும் வகையில் புதியபூமி, ஒளிவிளக்கு தேர்த்திருவிழா, ஒரு தாய்மக்கள், நல்லநேரம், போன்றவை வெளிவந்தன. புதியபூமி என்பது கிறிஸ்தவக் கோட்பாடான ‘புதிய வானம், புதிய பூமி’ என்பதைச் சார்ந்ததாகும். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது இந்துமத, எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதை நம்பிய கிறிஸ்தவர்கள் பலர் அவரை Secret Christian என்றே நம்பினார். அவர் தினமும் பைபிள் வாசித்து ஜெபம் செய்வார் என்றும் கூறி வந்தனர். தென் தமிழகத்தில் இவருக்கு இருந்த ஆதரவைப் பார்த்ததால் இவரை வைத்து ‘பரமபிதா’ என்ற படத்தை எடுக்க முன் வந்தனர். கேரளாவில் எம்.ஜி.ஆர் இயேசு கிறிஸ்து வேடத்தில் இருக்கும் படத்தை தம் வீட்டில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர். படகோட்டி படப்பிடிப்புக்கு கொல்லத்துக்குப் போயிருந்த எம்.ஜி.ஆரிடம் இத்தகவலைத் தெரிவித்ததும் அவர் என்னப்பா உயிரோடு இருக்கும்போது எனக்கு பூ, மாலை, மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்களோ என்று சொல்லிச் சிரித்தாராம்.

அண்ணாவின் தலைப்புகள்

அறிஞர் அண்ணாவைத் தன் தலைவராகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவரது கதைகளின் தலைப்புகளைத் தன் படங்களுக்குச் சூட்டி தன்னை ஒரு திமுக காரர் என்று பறைசாற்றிக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் துணிச்சலுடன் எம்.ஜி.ஆர் செயல்பட்டதற்கு படத்தலைப்புகளும் நற்சான்றாக அமைந்தன. அவரது நாவல்களின் தலைப்புகளான குமரிக்கோட்டம் பெரிய இடத்துப் பெண் என்ற பெயர்களில் படம் எடுத்து வெளியிட்டு வெற்றிவாகை சூடினார்.

தனக்கான பெயர்கள்

தனது பெயரையும் புகழையும் உயர்த்தும் வகையில் தன்னை நேசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில படங்களுக்குப் பெயர் சூட்டினார். அவற்றுள் சில, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, என் அண்ணன், அன்னமிட்ட கை, தனிப்பிறவி, முகராசி, நினைத்தை முடிப்பவன், கருணாநிதிக்கு இலவசமாக நடித்துக் கொடுத்த கலைஞரின் எங்கள் தங்கம், தர்மம் தலை காக்கும் ஆகியன. இவை எம்.ஜி.ஆரின் மீதான நல்லவன், வல்லவன், கொடையாளி என்ற கருத்துக்களை மேலும் வலுப்படுத்த உதவிய படத்தலைப்புகள் ஆகும்.

திமுக ஆட்சிக்கு முன்

எம்.ஜி.ஆர் பட வரலாற்றை திமுக ஆட்சிக்கு முன்பு, திமுக ஆட்சியின் போது, அதிமுக ஆரம்பித்த பிறகு என்று மூன்றாகக் பகுக்கலாம். 

புதிய பூமி

எம்.ஜி.ஆர்

கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

அதிமுக தோன்றிய பின்பு...

அதிமுக ஆட்சியில் சேர்ந்து தன்னைப் பின்பற்றுவோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் படத்தலைப்புகளை அமைத்தார். முதலில் நேற்று இன்று நாளை, பின்பு அதைத் தொடர்ந்து உரிமைக்குரல், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க நிறைவாக மதுரையை (தமிழகத்தை) மீட்ட (திமுகவிடம் இருந்த) சுந்தரபாண்டியன் (அழகான தலைவன் எம்.ஜி.ஆர்). இப்படத்துடன் அவர்காலத்திய அவரது திரையுலக வரலாறு நிறைவு பெற்றது. அவர் காலத்திற்குப் பின்பு அவர் நடித்த அவசரப்போலீஸ் படம் வெளி வந்தது. எம்.ஜி.ஆர் நடித்த இரண்டு பாடல்காட்சிகளும் சில வசனக்காட்சிகளும் மட்டுமே அப்படத்தில் இருந்தன.

அதிமுக தொடங்கிய பிறகு நல்லதை நாடு கேட்கும், உன்னை விட மாட்டேன், புரட்சிப் பித்தன் போன்ற படங்கள் எம்.ஜி.ஆர் நடித்த வரவேண்டியவை. ஆனால் அவர் முதல்வராகி விட்டதால் வரவில்லை.

ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்

ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் பாட்டாளிகளில் ஒருவராகத் தான் நடித்து பணக்கார முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்கியதால் பலரும் எம்.ஜி.ஆரை தம் பங்காளியாகவும் தம் ரட்சகராகவும் பார்த்தனர். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் இறையம்சம் பொருந்தியவராகவே எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே எம்.ஜி.ஆர் ‘உங்களில் ஒருவன் நான்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலான உழைக்கும் வர்க்கத்தினரின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். தன் படங்களுக்கும் உழைப்பவரின் பெயரையே சூட்டினார். ஆட்டோகிராஃப் போடும்போதும், ’உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
தொழிலாளி, படகோட்டி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், உரிமைக்குரல் என்று தன் படங்களுக்குப் பெயர் சூட்டினார்.

1001 அரபுக்கதைகள்

மேடை நாடகமாக குலேபகாவலி நாடகம் ‘பகடை 12’ என்ற பெயரில் நடைபெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இதை எம்.ஜி.ஆர் நடித்து ராமண்ணா தனது ஆர் ஆர் பிக்சர்ஸ் மூலமாக படமாக எடுத்தார். ஆயிரத்தோரு அரபுக்கதைகளைச் சேர்ந்த குலேபகாவலி, பாக்தாத் திருடன், அலிபாபாவும் 40 திருடர்களும் படங்கள் எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

 

படத்தலைப்பு என்பது ஒரு படத்துக்கு முகம் போன்றது எனவே எம்.ஜி.ஆர் மிகவும் ஆலோசித்து படத்தலைப்பைச் சூட்டியுள்ளார்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105885-reason-behind-mgr-movie-titles-mgr-series-episode-11.html?artfrm=related_article

Link to comment
Share on other sites

டான்ஸுக்காக வியர்வை சிந்திய எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-12

 
 

46ddfd5c-881e-4178-8673-3a08997fd34d_173

 

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வித்தியாசமான நடனக்காட்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆகவே அவருடன் நடிக்கும் நடிகையாரும் நடனப்பயிற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். மந்திரிகுமாரி பட நாயகி சரோஜா (உதயசங்கரின் மாணவி) முதல் பத்மினி, ஜெயலலிதா, லதா எனப் பலரும் நடனத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். சரோஜாதேவி ‘குரூப் டான்சராக’ இருந்து கதாநாயகி ஆனவர். கே.ஆர். விஜயா ‘ஸ்ட்ரீட் டான்சராக’ இருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் ‘சினிமா டான்ஸ்’ ஆடுவதில் வல்லவர்களாக இருந்தனர். இவர்கள் தவிர சிறந்த நாட்டியக்காரர்களான E.V. சரோஜா, எல் விஜயலட்சுமி, ஹெலன் (ஹிந்தி) ஆகியோரையும் எம்.ஜி.ஆர் தனது பாடல் காட்சிகளில் பயன்படுத்தினார். நடனக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் தனது உடையும் நடையும் வெகுப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

 

jaya5_120516104419_20117.jpg

கதாநாயகியின் தகுதி

கதாநாயகியாக நடிக்க விரும்புவோர் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழைத் தெளிவாகப் பேசவேண்டும் என்று ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் நடனத்தை அடிப்படைத் தகுதியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சுளாவை ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது அவருக்குத் தனி ஆசிரியர் வைத்து நடனம் கற்பிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நடனப்பயிற்சியே கதாபாத்திரத்தின் உணர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு கண்களாலும் முகபாவத்தாலும் உடல்மொழியிலும் அவற்றைப் பிரதிபலிக்க உதவும் என்பதில் எம்.ஜி.ஆர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நடிப்பில் அவர் தன் உடல்மொழியோடு நயனபாஷையையும் பொருத்தமாகச் சேர்த்திருப்பார். பாடல் காட்சிகளில் அவர் கண் அசைவு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

காவல்காரன் படத்தின் காவல்நிலையக் காட்சியில் நம்பியார்தான் நிரபராதி என நிரூபிக்க முயலும் போது எம்.ஜி.ஆருக்கு அதிக வசனமே இருக்காது. அவரது கண் அசைவும் தலை அசைவும் அவர் பேசவேண்டிய வசனங்களைப் படம் பார்ப்போருக்கு உணர்த்திவிடும். திரை அரங்கில் ரசிகர் இக்காட்சியை மிகவும் ரசித்துப் பார்ப்பர்.

சினிமாவில் நடனக்காட்சி

எம்.ஜி.ஆர் தன் படங்களில் பல வகையான நடனங்களை இடம்பெறச் செய்தார். அவர் ஒவ்வொரு ரசிகரும் அந்த நடனத்தை ரசிக்கும்படி மாற்றியமைத்தும் இருப்பார். நடனத்தில் இலக்கணம் நடன மேடையில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்குப் பொருந்தும். ஆனால், திரைப்படக்கலை மக்களின் ரசனை சார்ந்தது என்பதால் நடன இலக்கணத்தை விட படம் பார்ப்போரின் ரசனையோ முக்கியமாகும். அவர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்படி நடனக்காட்சி அமையக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்.

நடனப்பயிற்சி

எம்.ஜி.ஆர் சாஸ்திரீயக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அதனால், நாடகங்களில் நடிக்கும் போது கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றார். அவர் காரில் போகும்போது தியாகராஜ பாகவதர் பாபனாசம் சிவன், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் பாடல்களை விரும்பிக் கேட்பார். அதுபோல நடனப் பயிற்சியும் பெற்றார். குமாரன் ஆசான் என்பவரிடம் முறைப்படி நடனம் பயின்றார். ஸ்ரீ முருகன் படத்தில் நடிகை மாலதியோடு இணைந்து சிவதாண்டவம் ஆடினார்.

நாடகங்களில் பெண்வேஷம் ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது மேக்கப்மேனாக வைத்துக்கொண்ட ராம்தாஸ் என்பவருடன் இணைந்து ஒரு நாடகத்தில் இருவரும் ஊர்வசியும் மேனகையுமாக நடனம் ஆடினர். மேடையில் மக்கள் முன்னிலையில், (சினிமாவில் இருக்கும் ‘ரீடேக்’ வசதிகள் இன்றி) நேரடியாக அழகாக நடனம் ஆடத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் சினிமாவிலும் நடனக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தேவைப்படும்போது உரிய நடனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

வழுவூர் ராமையாபிள்ளை ஒரு பேட்டியில் சிறந்த”எம்.ஜி.ஆர் நடனக்கலைஞர் அவரது நடனங்களை அவரே பெரும்பாலும் அமைத்துக் கொள்வார். நாங்கள் சொல்லித்தர வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நடன வகைகள்

Capture_20206.JPG

எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்

Enga-Veettu-Pillai-3_20357.jpg

எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

பங்க்ரா நடனம்

2003011400070202_20012.jpg

பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

மேலை நாட்டு நடனம்

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்

55-614x345_20177.jpg

டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

டான்ஸ் மாஸ்டர்கள்

எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார். 

ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.

 

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/106150-dance-movements-performed-by-mgr-mgr-series-episode-12.html

Link to comment
Share on other sites

''எனது குரலை ரசிகர்கள் ஏற்காவிட்டால், நடிக்க மாட்டேன்..!’’ - குண்டடிபட்டபின் எம்.ஜி.ஆர்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-13

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் பரங்கிமலை சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது அவர் பிரசாரம் செய்யப் புறப்படும் வேளையில் எம்.ஆர் ராதாவும் தயாரிப்பாளர் வாசுவும் அவரைப் பார்க்க வந்தனர். அப்போது எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரை காதோரத்தில் சுட்டார். வழக்கு நடந்தது. எம்.ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. நன்னடத்தை காரணமாக நான்கரை ஆண்டுகளில் விடுதலை ஆனார். அவருக்காக தமிழறிஞரும் பொதுவுடைமை கட்சி வழக்கறிஞருமான நா.வானமாமலை வாதாடினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு கிளம்பியபோது எம்.ஜி.ஆருக்குக் குரல் நன்றாக இருந்தது. பின்பு எப்படி மாறியது என்று தெரியவில்லை, என்கிறார் அவர்களுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவர்.

 

டப்பிங் வைக்கலாமா?

எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆருக்குக் குரலில் தெளிவில்லை என்பதால் வேறொருவரைக் கொண்டு பின்னணிக் குரல் கொடுக்கலாமா என்று ஆலோசித்தனர். ஆனால் எம்.ஜி.ஆரோ அந்த யோசனையை முற்றிலுமாக மறுத்துவிட்டார். “எனது குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் நடிக்கிறேன். இல்லையென்றால் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்’ என்று கடுமையாகக் கூறிவிட்டார். அவர் உயிர் பிழைத்து வந்ததே பெரியது என்று நினைத்த அவரது ரசிகர்கள் அவரது குரல் பிரச்னையை பெரிதாகக் கொள்ளவில்லை. அவர் முகம் முன்பை விட அழகாகவும் உடல் மெலிந்து இளமையாகவும் தோற்றமளித்ததை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர்.

காவல்காரன் படத்தில் சில ஒலிகள் தெளிவற்றிருந்ததை அறிந்த எம்.ஜி.ஆர் தெளிவாக முன்பு பேசிய சொற்களை cut and paste முறையில் தானே எடிட்டிங் செய்து சரி செய்தார். இருப்பினும் முன்பு அந்தச் சொல் பேசியிருக்கவில்லை என்றால் அது தெளிவற்று ஒலிப்பதை ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்படியே விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

வராத வளைநா ஒலிகள்

தமிழில் வளைநா ஒலிகள் (retroflex sounds)  அல்லது நாவளை ஒலிகள் எனப்படும். ட,ர,ற,ல,ழ,ள ஆகியவற்றில் ஒலிப்பதில் எம்.ஜி.ஆருக்கு சிரமம் ஏற்பட்டது. மற்ற ஒலிகளை ஒலிப்பதில் அவருக்குச் சிரமம் இல்லை. நாக்கு வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதாலும் தடவுவதாலும் இந்த வளைநா ஒலிகள் ஒலிக்கின்றன.

குரல் பயிற்சி

எம்.ஜி.ஆர் தன் உதவியாளர்களுடன் அதிகாலையில் கடற்கரைக்குச் சென்று குரல் பயிற்சி பெற்றிருக்கிறார். இருவர் இரண்டுபுறமும் நின்று கைகளைப் பிடித்துக்கொள்ள கழுத்துவரை கடல் நிரலில் நின்று சத்தமாகப் பேசிப்பழகி குரல் பயிற்சி மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கு 1958ல் நாடக மேடையில் கால் ஒடிந்த போது பாலமேடு கிராமத்தைச் சேர்ந்து எலும்புநோய் நிபுணர் டாக்டர் நடராஜன் அவருக்கு சிகிச்சை அளித்தார். கால் எலும்பு ஒன்று சேர்ந்ததும் டாக்டர் எம்.ஜி.ஆரிடம் நீச்சல் பயிற்சி கால் எலும்புகளுக்கு நல்ல பலமளிக்கும் என்றார். உடனே எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டில் ஒரு நீச்சல்குளம் கட்டி அதை டாக்டரிடம் காண்பித்தார். பின்பு அதில் தினமும் நீச்சல் பயிற்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் தன் உடல் மற்றும் குரல் செழுமை பெற முறையான பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டார். Practice makes Perfection என்பதில் நம்பிக்கை கொண்டு உழைத்தார்.

ரிக்ஷாக்காரனில் ஓரம்… ஓரம்...

எம்.ஜி.ஆர்

தமிழில் வளைநா ஒலிகளில் ‘ரா’ என்பதும், ஒன்று. இது வருடொலி (Trilled sound) எனப்படும். நாக்கு நுனியால் மேல் அண்ணத்தை வருடும்போது ‘ர’ என்ற ஒலி தோன்றும். இது குரல்வளை ஒலி (gutteral) ஆகும். அதாவது ஒலிப்பு முயற்சியில் போது மூச்சை குரல்வளைப் பகுதி வழியாக வெளியே விடவேண்டும். ங, ஞ, ண, ந, ன என்ற மூக்கொலிகளுக்கு மூக்கு வழியாக மூச்சை விட வேண்டும். கசடதற என்ற வல்லொலிகளுக்கு மூச்சை நிறுத்தி வெடிப்பொலியமாக (explosive) வெளியே விட வேண்டும்.

ரிக்ஷா ஓட்டும்போது வழி கேட்டு பாதசாரிகளை, ஓரமாகப் போகும்படி சொல்வதாக ‘ஓரம் ஓரம்’ என்று எச்சரித்துக்கொண்டே ரிக்ஷாக்காரர் வண்டி ஓட்டுவார்கள். இந்தச் சொல்லை எம்.ஜி.ஆர் சொல்லும்போது நாக்கு வளையாமல் ‘ர’ ஒலிக்காமல் ‘ஓயம் ஓயம்’ என்றே கேட்கும். இதை எதிரணியினர் தம் விருப்பம் போல் ஒலித்து எள்ளி நகையாடினர். ஆனால் எம்.ஜி.ஆரைத் தன் வீட்டுப் பிள்ளையாக கருதியதால் மக்களும் எம்.ஜி.ஆர் ரசிகரும் இதைப் பெரிய குறைபாடாகக் கருதவில்லை.

உலகம் சுற்றும் வாலிபனில் ‘முருகன்’...

எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் ஏற்று நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆரின் பெயர் முருகன். ஆனால் அதை அவர் சொல்லும்போது ‘முய்ஹன்’ என்று கேட்கும். முதலில் படம் பார்ப்பவருக்கு மோகனாக இருக்குமோ அதைஏன் மூகன் என்கிறார் எனத் தோன்றும். ‘ர’ ஒலிப்பிலா ஒலியாகிவிடும்.

படிப்பும் பண்பும்...

எம்.ஜி.ஆரின் குரல் பிரச்னையை கேலி செய்பவர்கள் இன்னொரு தொடரை எடுத்துக் கூறுவதுண்டு. அதில் படிப்பு, பண்பு என்று இரண்டு சொற்கள் இடம் பெறும். இவற்றில் ட மற்றும் ண ஆகியன வளைநா ஒலிகள் என்பதால் எம்.ஜி.ஆரால் அவற்றைச் சரியாக ஒலிக்க இயலாது. படிப்பு என்பது பஇப்பு என்றும் பண்பு என்பது பம்பு என்றும் ஒலிக்கக் கேட்டவர்கள் “படிப்பு இருக்கும் இடத்தில் பண்பு இருக்கும் ‘என்ற தொடரை “பைப் இருக்குமிடத்தில் பம்ப் இருக்கும்’ என்று கேலி பேசினர்.

திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை...

எம்.ஜி.ஆர்

அதிமுக கட்சி ஆரம்பித்ததும் ஆறே மாதத்தில் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வந்தது. இத்தேர்தலில் தி.மு.க (உதய சூரியன்), இந்திரா காங்கிரஸ் (பசுவும் கன்றும்) ஸ்தாபன காங்கிரஸ் (ராட்டை) ஆகிய மூத்த கட்சிகளும் போட்டியிட்டன. அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. எம்.ஜி.ஆர் மேடைகளில் தேர்தல் பிரசாரம் செய்தபோது இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றது ராட்டையிலே ஓட்டுப் போடுங்கள் என்று பொருள் கொள்ளப்படலாம் என்பதால் தன் இரண்டு விரல்களை அகல விரித்து for victory என்பது போலக் காட்டினார். இந்த சைகை வெற்றியையும் வேண்டியது, இரட்டை இலை என்பதையும் குறித்தது. மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்தன. அதிமுக வெற்றி பெற்றது.

சிறுநீரக சிகிச்சைக்குப் பின்பு

 

எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று மூன்றாவது முறை முதலமைச்சராகத் திரும்பியபோது அவரது முகமும் கோணி குரலும் கெட்டுவிட்டது. அவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை. தன் அன்பை வெளிப்படுத்த கைகளைப் பிடித்துக் குலுக்கினார், சைகை மூலமாகப் பேசினார். அதிகாரிகளையும் முக்கியஸ்தர்களையும் தவிர்த்தார். ஏழை மக்களைச் சந்தித்தார். கோட்டை வாசலில் வந்து அமர்ந்துகொண்டு மனுக்களை வாங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். ஏழைமக்கள் அவரை தம் வீட்டுப் பிள்ளையாகக் கருதியதால் அவர்கள் எம்.ஜி.ஆரால் சரியாகப் பேச முடியாததைப் பெருங்குறையாகக் கருதாமல் அவரது அன்புள்ளத்தைத் தொடர்ந்து நேசித்து ஆதரவளித்தனர். மதுரை மாநாட்டில் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் பேசிய போது கூட அதை மக்கள் தவறாகக் கருதவில்லை. தனது பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு ஓர் உறைவிடப் பள்ளியை ஏற்படுத்தும்படி உயில் எழுதி வைத்தார்.

http://cinema.vikatan.com/tamil-cinema/news/106349-will-not-act-if-fans-dont-accept-my-voice-mgr-series-episode-13.html

Link to comment
Share on other sites

வசூல் மன்னர் எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்... என்ன காரணம்? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-14

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி, மினிமம் கேரன்  ராமச்சந்திரன் என்று படத்தின் வெற்றியால் பெயர் பெற்றிருந்தாலும் சில படங்கள் 100 நாள்கள் ஓடவில்லை. வசூலை அள்ளிக் குவிக்கவில்லை அதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய முனைகிறது.
ஓர் அரசியலில் கட்சியின் வெற்றிக்கு அதன் தொண்டர்கள் அனுதாபிகள் ஆதரவு மட்டும் போதாது. அரசியல் கட்சி எதையும் சாராத பொதுவானவர்களின் வாக்குகள் மிகவும் அவசியமாகும். அதுபோல ஒரு படத்தின் வெற்றிக்கும் அந்த நடிகர், இயக்குநர் போன்றோரின் ரசிகர்கள் ஆதரவு தருவதில் வியப்பேயில்லை. ஆனால், இது மட்டும் போதாது.

 

ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்குக் காரணம் அதை சிவாஜி ரசிகர்களும் விரும்பிப் பார்த்ததுதான். உலகம் சுற்றும் வாலிபனின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணம் பொதுமக்களும் சிவாஜி ரசிகர்களும் சேர்ந்து வந்து பார்த்தது என்றால் மிகையில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர். அதனால், அவை 100 நாள்கள் ஓடவில்லை. இவர்கள் ஒரே நாளில் இரண்டு, மூன்று காட்சிகளோ அல்லது ஒரே வாரத்தில் இரண்டு மூன்று தடவையோ (நாள்களோ) வந்து படம் பார்க்காதது ஏன் என்பதை அறிந்துகொள்ள முயல்வோம்.

100 நாள் ஓடாத படங்கள்

எம்.ஜி.ஆர்

பாசம், தாயின் மடியில், என் கடமை, மாடப்புறா, நான் ஆணையிட்டால், ராஜாதேசிங்கு, பட்டிக்காட்டு பொன்னையா, ராணி சம்யுக்தா, நீரும் நெருப்பும், கலையரசி, தலைவன் போன்றவை 100 நாள்கள் ஓடவில்லை. மறுவெளியீடுகளில் வெற்றிவாகை சூடும் அரசகட்டளை, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படங்கள் முதல் வெளியீட்டின்போது பெருவேற்றி பெறவில்லை.  

பாசம், ராஜா தேசிங்கு, நீரும் நெருப்பும், ராணி சம்யுக்தா போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் இறந்து விடுவதாகக் கதை அமைந்திருந்ததால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. என் கடமை, அரசியல் காரணத்தால் பாதியிலேயே திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டது. தாயின்மடியில், பட்டிக்காட்டுப் பொன்னையா தனிநபர், ஒழுக்க மீறல் காரணமாக ஓடவில்லை. கலையரசி, தலைவன் படங்கள் அறிவியல் புரட்சி செய்திருந்தாலும் மக்கள் அவற்றை நம்பத் தயாராக இல்லாததால் அவையும் பெருவெற்றி பெறவில்லை.

பிற்காலப் படங்களான இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம் போன்றவற்றில் எம்.ஜி.ஆர் ஹேர் ஸ்டைல், பெல்ஸ் பாட்டம் உடை ஆகியவற்றை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. இதயக்கனி, உரிமைக்குரல் ஹேர்ஸ்டைல் மற்றும் பேண்ட் சூட் ஆகியவற்றை ரசித்து வெள்ளிவிழா படமாக்கினர்.

எம்.ஜி.ஆர் சாவதா?

எம்.ஜி.ஆர்

காலத்தை வென்றவனாகவும் வெற்றித் திருமகனாகவும் நம்பப்பட்ட எம்.ஜி.ஆர் நிஜத்தில் சாவார் என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லாத காலத்தில் படத்தில் அவர் சாவார் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதைப் பாசம் படத்தின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவிடம் எம்.ஜி.ஆர் கூறியபோது அவர் மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் சாவதைப் பார்த்த இரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து திரையைக் கிழித்தனர். திரையரங்கு உரிமையாளர் படத்தை எடுத்துவிட்டார். பாசம் படத்தில் ஆறு பாடல்களும் தேனாறுகளாகப் பாய்ந்தும் எம்.ஜி.ஆரை படம் முழுக்க அழகற்றவராக, திருடனாக, இடதுகை பெருவிரல் நகத்தைக் கடிப்பவராக, நண்பனின் தங்கையை ஒருதலையாகக் காதலிப்பவராக, தன்னை காதலிக்கும் நாட்டியக்காரி மஞ்சுவை (சரோஜாதேவி) ஏற்க மனமில்லாதவராக வந்ததால் ரசிகர்களால் படத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வசூல்ரீதியாக படம் தோற்றாலும் எம்.ஜி.ஆரின் “திருவாய்க்கு மறுவாய் ஏது" என்ற நிலை தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் கருத்துக்கு எதிர்கருத்து தோன்றவில்லை.

ராஜா தேசிங்கு படத்தில்

ராஜா தேசிங்கு படத்தில் நண்பன் மகமத்கான் பாத்திரப்படைப்பின் முக்கியத்துவம் குறைந்துவிடும்படி தேசிங்குக்கு மூத்த அண்ணனாக இன்னொரு எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. படத்தின் இறுதியில் இந்த இரண்டு எம்.ஜி.ஆர்களும் (ஒருவரின் தாய் முஸ்லீம், அடுத்தவரின் தாய் இந்து) சண்டையிட்டு இறந்துவிடுவர். சண்டைக்காட்சி வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் முடிவு மரணம் என்பதால் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. எம்.ஜி.ஆருக்கு இப்படத்தில் ஜோடியாக வரும் பானுமதி அவருக்குப் பெரியவர் போலக் காட்சி அளிப்பார். ரசிகர்களால் அதையும் ரசிக்க இயலவில்லை.

கண்ணதாசன் கதை, வசனம் எழுதி இந்தப் படம் தொடங்கப்பட்டபோது தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும். எண்ணம் இருந்தது. தமிழில் தேசிங்காக எம்.ஜி.ஆரும் மகமத்கானாக என்.டி.ராமாராவும் நடிக்க இருந்தனர்.  இவர்களுக்கு ஜோடியாக பத்மினியும் பானுமதியும் ஒப்பந்தமாகி இருந்தனர்.  மகமத்கான் பேச வேண்டிய வசனங்களைப் படித்துப் பார்த்த கலைவாணர், எஸ். எஸ் ஆரால் மட்டுமே இந்த வசனங்களைச் சிறப்பாகப் பேசமுடியும் என்று சொல்லி என். டி. ஆரை மாற்றி எஸ். எஸ் ஆரைக் கொண்டு வந்தார்.

என்.டி.ஆர் அதன் பின்பு தமிழ்த்திரையை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்.  எஸ்.எஸ். ஆர் வந்ததும் எம்.ஜி.ஆர் தன் வேடத்தை இரட்டைவேடமாக வளர்த்துக்கொண்டார்.  இப்போது கதையின் ஹீரோவும் எம்.ஜி.ஆர், வில்லனும் எம்.ஜி.ஆர். இரண்டு எம்.ஜி.ஆர்கள் தமக்குள் பகை கொண்டு சண்டைபோடும் படங்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை.  இதற்கு இன்னோரு உதாரணம் நீரும் நெருப்பும்.

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்

மணிவண்ணன், கரிகாலன் என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த நீரும் நெருப்பும் படம் அவரது இளமைக்காலக் கனவுப்படம் ஆகும். தன் குருநாதரின் மகன் எம்.கே.இராதா நடித்த இரு சகோதரர்கள் படத்தைப் பார்த்த ரசித்த எம்.ஜி.ஆர் தான் அப்படத்தின் கதையில் நடித்து வெளியிட்டார்.  கரிகாலன் எம்.ஜி.ஆர் வில்லன் கதாபாத்திரமாக நடித்ததை மக்கள் ரசிக்கவில்லை. சகோதரனின் காதலியிடம் அவர் முறை தவறி நடக்க முயற்சிப்பதை ரசிகர்கள் ஏற்க மறுத்து பார்க்க மறுத்தனர். படத்தில் அருமையான பாடல்கள் இருந்தும் இறுதிக்காட்சியில் கரிகாலன் செத்ததும் மணிவண்ணன் மகுடம் சூடியதும் மக்களுக்கு உவப்பாக இல்லை. ஒரு எம்.ஜி.ஆர் வலது கையாலும் அடுத்தவர் இடது கையாலும் வாளைச் சுழற்றி சண்டை போட்ட அருமையான காட்சிகள் இருந்தாலும் படம் வெற்றியடையவில்லை.

அறிவியல் புரட்சி

1963ல் எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து கலையரசி என்றோரு படம் வந்தது.  இதில் எம்.ஜி.ஆர் வேற்றுலகவாசியாகவும் ஒரு கதாபாத்திரம் ஏற்றிருப்பார்.  எரிகல் மோதி உயிர் இழப்பார். இப்படத்தில் வீணை வாசிக்கும் பானுமதியை சந்திரமண்டலத்துக்கு பறக்கும் தட்டில் வைத்து நம்பியார் கடத்திக்கொண்டு போய் விடுவார்.  எம்.ஜி.ஆர் போய் மீட்டுக் கொண்டு வருவார்.

கலையரசியில் புதுமுகமாக ராஜஸ்ரீயை அறிமுகம் செய்தனர்.  அவர் சந்திரமண்டலத்து இளவரசியாக நடித்திருப்பார்.  (பின்பு இவர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் மறு பிரவேசம் செய்தார்)  இந்தப்படம் பார்த்த பலருக்கும் இது நம்பக் கூடியதாக இல்லை.  பறக்கும் தட்டு, சந்திரமண்டலம் என்றவை கட்டுக்கதையாகத் தோன்றியதால் வசூல் குறைந்தது.

எங்கள் தங்கம் (9-10-1970) படத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்ததை ஒரு நையாண்டி காலட்சேபமாக எம்.ஜி.ஆர் செய்வதை ரசிகர்கள் ரசித்தனர்.  முதலில் மனிதன் சந்திரமண்டலம் போனதை நம்பாதவர்கள் இப்போது அவன் சந்திரமண்டலம் போனதை நம்பினர் அதை நம்பால் பேசும் பத்தாம் பசலிகளைக் கேலி செய்து ரசித்தனர். காலம் மாறியிருந்தது.

 

1970ல் தலைவன் என்றோரு படத்தில் ஹடயோகம் மூலமாக உடலை உயர்த்தி  இலகுவாக்கி காற்றில் மிதக்கலாம் என்று எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.  சித்தவைத்தியம், யோகா பற்றி அப்போது அவர் காட்டியதை எவரும் நம்பவில்லை அதனால் படத்தில் கதையும் பாடல்களும் சிறப்பாக இருந்தும் படம் 63 நாட்களே ஓடின.  வண்ணப்படங்கள் வந்துவிட்ட காலத்தில் இது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்ததும் ஒரு காரணமாகும். ஆனால் இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நல்ல இலாபம் கிடைத்தது அவர் அதைக்கொண்டு திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்டி அதற்கு எம் ஜி ஆர் நிலையம் என்று பெயர் சூட்டினார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/106509-reasons-behind-lowest-box-office-movies-of-the-hit-king-mgr-mgr-series-episode-14.html

Link to comment
Share on other sites

வசூல் மன்னர் எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்..! என்ன காரணம்..? (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-15

 
 

எம்.ஜி.ஆர்

வசூல் மன்னர் எம்.ஜி.ஆரின் வசூலாகாத படங்கள்’ என சென்ற பகுதியில் நாம் பார்த்த விஷயங்களின் தொடர்ச்சிதான் இந்தப் பகுதியும்...
எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் மினிமம் கேரன்ட்டி ராமச்சந்திரன் என்றும் படத்தின் வெற்றியால் பெயர் பெற்றிருந்தாலும் சில படங்கள் நூறு நாள்கள் ஓடவில்லை. வசூலை அள்ளிக் குவிக்கவில்லை அதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய முனைகிறது. 

 

ஒழுக்கமீறலால் வசூலை இழந்தவை

தாயின் மடியில், பட்டிக்காட்டுப் பொன்னையா, மாடப்புறா போன்றவை மக்கள் எதிர்பார்த்தபடி எம்.ஜி.ஆரின் ஒழுக்கம் அமையாததால் வசூலைப் பெறவில்லை. மாடப்புறாவில் அவர் காதலிப்பது ஒருத்தியாகவும் ஆனால் அவர் சந்தர்ப்ப சூழலால் திருமணம் செய்வது மற்றொருத்தியாகவும் அமைந்துவிடும். கதையின் வேகமும் காட்சியமைப்பும் சுமாராகவே இருந்ததால் படமும் சுமாராகவே ஓடியது.
தாயின் மடியில் படத்தில் இரண்டு முக்கியக் கோளாறுகள் காணப்பட்டன. ஒன்று எம்.ஜி.ஆரின் பிறப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு படத்தின் முக்கியத்திருப்பமாக அவர் தன் தங்கையையே காதலிப்பதாகக் கதையை அமைத்திருந்தது. (கடைசியில் தங்கை இல்லை என்பது தெரியவரும்). யாரோ பெற்று அனாதையாகப் போட்டுவிட்டு போன குழந்தையை (எம்.ஜி.ஆர்) ஒரு பணக்காரர் எடுத்து வளர்ப்பார். அவர்தான் குழந்தையைக் கண்டெடுத்த நாளை குழந்தையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவார். எம்.ஜி.ஆர் வளர்ந்த பிறகும் இக்கொண்டாட்டம் தொடரும். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் கடுமையான கேலி கிண்டலுக்கு உள்ளாவார். இதை ரசிகர்கள் விரும்பவில்லை.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் வேளையில் இருவரும் ஒரு தகப்பன் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தகவலறிந்து எம்.ஜி.ஆர் தன் காதலைக் காரணம் சொல்லாமல் முறித்து விடுவார். பின்பு ஒரு நாள்  இந்தக் காரணத்தைச் சொன்னதும் இருவருமே தற்கொலை செய்துகொள்ளத் துணிந்து விடுவர். பின்பு இருவரின் தந்தையும் வெவ்வேறு நபர்கள் என்ற உண்மையை நாகேஷ் இவர்களுக்கு எடுத்துச்சொல்லி தற்கொலையைத் தடுப்பார். இது ரசிகர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. பாடல்கள் அருமையாக இருந்தும் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துவிட்டது.

நாடோடி

நாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து பணக்காரரால் வளர்க்கப்பட்டவர். அதனால் அவர் காதலியை மணம் முடித்துத்தர அவளது தந்தை மறுத்துவிடுவார். காதலி தற்கொலை செய்துகொள்வார். இவளது தங்கை அக்காவின் காதலனை சாதிமறுப்புத் திருமணம் செய்யப் போவதாக சபதம் செய்வாள். படத்தில் இவளும் (சரோஜாதேவியும்) எம்.ஜி.ஆரும் பாதிநேரம் குருடாக்கப்பட்டு பிச்சையெடுக்கும் காட்சிகளில் நடித்திருப்பதைப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டவே, எதிரணியினர் இப்படத்தை விரும்பிப் பார்த்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கண் தெரியாத எம்.ஜி.ஆரைப் பார்க்க பிடிக்கவில்லை. மேலும், பிறப்பும் தாழ்ந்ததாகச் சித்திரிக்கப்பட்டதும். திருமணம் மறுக்கப்பட்டதும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.  பாட்டும், படிப்பும் சிறப்பாக இருந்தும் படம் வசூலில் நிமிர்ந்து நிற்கவில்லை.

பட்டிக்காட்டுப் பொன்னையா

எம்.ஜி.ஆர்

பட்டிக்காட்டு விவசாயி, பட்டணத்துக்கல்லூரி வாலிபன் என இரண்டு வேடங்களில் சகோதரர்களாக எம்.ஜி.ஆர் இரட்டைவேடமிட்டு நடித்திருந்தார். படம் உலகம் சுற்றும் வாலிபன் வந்து மூன்றுமாதம் கழித்து (10-8-73) வெளிவந்தது. ஜெயலலிதா மற்றும் ராஜாஸ்ரீ கதாநாயகிகளாக நடித்தனர்.

கல்லூரி மாணவனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு மழையில் காதலியுடன் நனைந்து மகிழ்ந்த வேளையில் அவளிடம் வரம்பு மீறி நடந்துவிடுவார். இதனால் ஊரில் இருக்கும் தந்தைக்குக்கூடத் தெரிவிக்காமல் அவளை அவசரத் திருமணம் செய்து வீட்டு மாப்பிள்ளையாகி அவமானப்பட்டு வெளியேறுவார். இந்த எம்.ஜி.ஆரை பெண்களும் ரசிக்கவில்லை ஆண்களும் ரசிக்கவில்லை.

அரசியல் காரணங்கள்

எம்.ஜி.ஆர் படங்கள் சில வெள்ளிவிழா கொண்டாடாததற்கு சில பல அரசியல் காரணங்களும் உண்டு. கட்சிக்காரர்களின் தொல்லை அதிகமாக இருப்பதைக் கண்ட பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தன் தம்பியிடம் சொல்லி அவர் வகித்துவந்த மேல்சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யச் சொன்னார்.  எம்.ஜி.ஆர் அண்ணனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். மாலைமுரசில் செய்தி வந்தது. என் கடமை படம் அப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற திமுகவினர் பலர் மாலைமுரசு செய்தி கேட்டதும் வரிசையிலிருந்து வெளியே வந்துவிட்டனர். அண்ணா கொடுத்த எம்.எல்.சி பதவியை எம்.ஜி.ஆர் உதறித் தள்ளுவதா? என்ன ஆணவம் என்று விமர்சித்தனர். பின்பு பலரும் வேண்டிக் கொண்டதனால் எம்.ஜி.ஆர் இராஜினாமாவைத் திரும்பப் பெற்றார். அப்போது (1964) தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. அண்ணா மிகுந்த செல்வாக்குடன் இருந்த காலம். இளைஞர்கள் அண்ணாவின் தம்பிகளாகத் தங்களை அறிவித்திருந்த காலம். திமுகவா? எம்.ஜி.ஆரா? என்று கேட்டால் தி.மு.க என்று நெஞ்சு நிமிர்த்திய காலம். பின்பு 1972ல் காலம் மாறிவிட்டது. திமுகவா எம்.ஜி.ஆரா? என்றால் இலட்சக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் வந்தனர்? இதற்காக எம்.ஜி.ஆர் காத்திருந்தார். மெள்ள மெள்ள காய்களை நகர்த்தினார். “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு’’ என்று பொறுமையாக நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். வாய்ப்பும் வந்தது.

அரசகட்டளை

எம்.ஜி.ஆர்

மறு வெளியீடுகளில் இன்றளவும் வசூலை வாரிக் குவிக்கும் அரசகட்டளை படம் காங்கிரஸ் - திமுக தேர்தல் (1967) காலத்தில் வந்திருந்தால் அது ஒரு வெள்ளிவிழா படமாக அமைந்திருக்கும். ஆனால், அப்படத்தின் காட்சிகளை அண்ணனும் தம்பியும் திரும்பத் திரும்ப எடுத்ததில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி இயக்கித் தயாரித்த படம். அவர் தன் தாயார் பெயரில் சத்யராஜா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். சரோஜாதேவிக்குத் திருமணம் ஆனதும். ஒரு தடங்கலாகிவிட்டது.
எம்.ஜி.ஆர் குண்டடிபட்டு பிழைத்து திமுக வெற்றிபெற்ற பிறகு படம் ரிலீசாயிற்று. இப்படத்தில் இருந்த புரட்சிப் பாடல்கள், காட்சிகள் ஆகியன இப்போது காலத்துக்குப் பொருந்தாதவை ஆகிவிட்டன. குண்டடிபட்ட பின்பு சரோஜாதேவியின் தாயார் ஒரு பேட்டியில் இனி எம்.ஜி.ஆரோடு என் மகள் நடிக்கமாட்டாள் என்றார். இதுவும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர் தரப்பினரும் மிகவும் ஆத்திரப்பட்டனர். இதனால் அரசகட்டளையின் இறுதிக் காட்சியில் சரோஜா தேவி இறந்துவிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் காட்சிகள் அதிகமாக்கப்பட்டு முடிவில் அவரைத் திருமணம் செய்வதாகக் காட்டப்பட்டது. கதை முழுக்கப் போராடிய இளவரசியான சரோஜாதேவி இறந்ததும் பொருத்தமான முடிவாக அமையவில்லை. 

நாடோடிமன்னன் படத்தில் சரோஜாதேவியைக் கொண்டுவர பானுமதி எப்படி வெளியேற்றப்பட்டாரோ அதே வழியில் அரசகட்டளையில் சரோஜாதேவியும் வெளியேற்றப்பட்டார். வரலாறு திரும்பியது. தான் வந்த வழியிலேயே அவர் வெளியேறினார். இதன் பின்பு ஜெயலலிதாவின் சீசன் களைகட்டத் தொடங்கியது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

 

காங்கிரஸிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை அரசகட்டளை திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்கும் கதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். ஆனால், இரண்டுமே அதற்கான போராட்டம் நடக்கும்போது வரவில்லை. போராட்டம் முடிந்தபிறகு வந்ததால் அவை பழங்கதையாய் போயிற்று. வெற்றி பெற்ற பின்பு யாராவது பழைய போராட்டங்களைப் பற்றி பேசுவார்களா? எனவே, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு வந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/106743-reasons-behind-lowest-box-office-movies-of-the-hit-king-mgr-mgr-series-episode-15.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் - ஜானகி காதல் வளர்ந்த கதை..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-16

 

எம்.ஜி.ஆர் தொடர்

 

திமுக பிரமுகர்களின் முக்கியஸ்தர்களின் பெயர்களும் அவர்களது மனைவிமார்களின் பெயர்களும் வெகு பொருத்தமாக இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. அண்ணாதுரை - ராணி அம்மையார் அடுத்ததாக கருணாநிதி - தயாளு அம்மாள், பின்பு நெடுஞ்செழியன் - விசாலாட்சி (இது முரண் வகையைச் சேர்ந்தது) என்ற  பெயர்களின் வரிசையில் ஜானகி - ராமச்சந்திரனும் இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்தது. கருணாநிதியும் (தட்சணாமூர்த்தி) நெடுஞ்செழியனும் தம் இயற்பெயரை, கட்சிக்கு வந்ததும் மாற்றிக்கொண்டனர். ஆனால் ஜானகி - ராமச்சந்திரன் என்ற பெயர்கள் பெற்றோரால் அவர்களுக்குச் சூட்டப்பட்ட இயற்பெயர்கள் ஆகும்.

 

எம்.ஜி.ஆர் - ஜானகி

ஜானகி அறிமுகம்

வி.என். ஜானகி கேரளாவில் உள்ள வைக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர். நாராயணனின் மகள். பிராமண குலத்தில் பிறந்தவர். இவரது தந்தையின் சகோதரரான (சித்தப்பா) பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத நிபுணர். பல பாடல்களை எழுதி இசையமைத்தவர். இவர் சில காலம் பாபநாசத்தில் வசித்ததால் அந்த ஊர்ப்பெயர் அவர் பேயரோடு ஒட்டிக்கொண்டது. கலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி தோழிப்பெண் வேடத்தில் நடிக்கத் தொடங்கி ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆர் திரையுலகில் வாய்ப்புத்தேடிக்கொண்டிருந்த போது ஜானகி பெரிய ஸ்டாராக விளங்கினார்.  இவர் 1950ல் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இருவரது சந்திப்பும் தொடங்கியது.

எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால சினிமா பயணம்

1936-ல் சதிலீலாவதி படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகமானார். இந்தப் படம் காப்புரிமை மீறலைப் பற்றிய படம். 28-3-1936இல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து சிறு வேடங்களை ஆனால் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களை ஏற்று எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். 1947ல் ராஜகுமாரியில் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. ஆனால்,அதன் பிறகும் அவர் அபிமன்யூவில் (1948) அர்ச்சுனன் வேடம், ராஜமுக்தியில் தளபதி வேடம் ரதன்குமாரில் (1949) பாலதேவன் என்ற துணை கதாபாத்திரங்களில்தான் நடித்தார்.

முதல் ஜோடிப் படம்

ராஜகுமாரிக்கு அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த படம் மோகினி. இதில் வி.என்.ஜானகி இவருக்கு ஜோடியாக நடித்தார்.  டி.எஸ்.பாலையா வில்லனாக நடித்தார். படம் திட்டமிடப்பட்ட போது எம்.ஜி.ஆர் வில்லனாகவும் பாலையா கதாநாயகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர் மனதை மாற்றி ஜானகியை ஜோடியாக ஏற்றார். அப்போதே அவருக்கு ஜானகியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவருடன் பேச முடியாதபடி அவருக்குக் காவல் பலமாக இருந்தது. அவருடைய தாய்மாமா ஜானகியைக் கைதி போல நடத்தினார். ஜானகிக்கு ஓர் ஆண் குழந்தையும் இருந்தது.

எம்.ஜி.ஆர் - ஜானகி

மருத நாட்டு இளவரசி (1950)

காண்டிபன் என்ற சாதாரணக் குடியானவனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். மாறுவேடத்தில் காட்டுக்கு வந்து அவரைக் காதலிக்கும் இளவரசியாக ஜானகி நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதியை திருவாரூரிலிருந்து வரவழைத்த எம்.ஜி.ஆர் இயக்குநர் காசிலிங்கத்திடம் அறிமுகப்படுத்தி அவரையே கதை,வசனம் எழுத வைத்தார்.  இந்தப் படம் ஏறத்தாழ அடிமைப் பெண்ணுக்கு முன்னோடி எனலாம். இதில் ஜானகி எம்.ஜி.ஆருக்கு சண்டைப் பயிற்சி அளித்து அவரை ஒரு வீரராக மாற்றுவார். இந்தப் படத்தின் படப்படிப்பின் போது எம்.ஜி.ஆர் ஜானகி காதல் வளர்த்தார். அவரையும் அவர் மகன் சுரேந்திரனையும் கடைசிவரை கண்கலங்காமல் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஜானகியின் கொடுமைக்கார மாமாவிடமிருந்து வெளியே கொண்டுவர முனைந்தார். பல பிரச்னைகளை, தடைகளைச் சந்தித்தார்.

தேவகி படப்பிடிப்பில் ஜானகி

ஜானகியும் எம்.ஜி.ஆரும் நேரில் சந்தித்துக் காதலை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். ஜானகி தேவகி படத்தில் நடிக்க மைசூர் புறப்பட்டபோது அவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இயக்குநர் ஜரூபிடர்சோமுவிடம் ஒப்படைத்தார். சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த நாள்களில் அவர் கவனித்துக்கொண்டார். மைசூருக்கு அவுட்டோர் படப்பிடிப்புக்கு ஜானகியுடன் அவரால் போகஇயலவில்லை.  மைசூரிலிருந்து ஜானகி எம்.ஜி.ஆருக்கு தினமும் கடிதம் எழுதினார். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னாடி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் குழுவினருடன் சேர்ந்து மறுநாள் சென்னைக்கு வர விரும்பாமல் அன்றே எம்.ஜி.ஆரைப் பார்க்க கிளம்பி வந்து விட்டார்.

திருமணப் பேச்சுவார்த்தை

எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பதை அறிந்த அவர் மாமா சில நிபந்தனைகளை விதித்தார். ஜானகி அதிக சம்பளம் பெறும் டாப் ஸ்டார் என்பதால் அவரது வருமானம் முழுக்க எம்.ஜி.ஆர் தனக்கும் தன் அண்ணனின் பெரிய குடும்பத்துக்கும் (சக்கரபாணிக்கு 9 பிள்ளைகள்) செலவழித்து விடுவாரோ என்று பயந்த ஜானகியின் மாமா எம்.ஜி.ஆரோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். தனது பயம் நியாயமானது என்பதையும் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தில் ஜானகி தொடர்ந்து திருமணத்துக்குப் பிறகு நடிக்கலாம். பத்து வருடங்கள் வரை மாமா சொல்லும் படங்களில் ஜானகி நடித்துவர வேண்டும். வருமானத்தையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் கொதித்தெழுந்தார். ஜானகி படத்தில் நடிப்பதை அவரோ விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவள் படத்தில் நடிக்கமாட்டாள் என்று எம்.ஜி.ஆர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் - ஜானகி

படப்பிடிப்பில் பேசாத ஜானகி

எம்.ஜி.ஆர் ஜானகியின் மாமாவிடம் கோபித்துக்கொண்டு வந்தபிறகும் இருவரும் இணைந்து நடிக்கும்போதும் ஜானகி எம்.ஜி.ஆரிடம் எதுவும் பேசுவதில்லை. எம்.ஜி.ஆரிடம் பேசுவதில்லை என்று தன் மாமாவிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், வேலைக்காரப் பையனிடம் “அவர் சாப்பிட்டு விட்டாரா" என்று கேட்டபிறகே, தான் சாப்பிடுவார். புதன், சனிக்கிழமைகளில் “எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்" என்று சொல்லி அனுப்புவார். ஜானகியின் மாமா கால தாமதம் செய்து வருவதற்கான காரணம் எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் பலதாரமணத் தடை சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஜானகியைத் திருமணம் செய்வது நடக்காத காரியம். எனவே எம்.ஜி.ஆர் தன்னிடம் பேசாத ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார். இதற்கிடையே ஜானகியின் மாமா ஜானகியின் வங்கியிருப்பு போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றிவிட்டார். எம்.ஜி.ஆர் வக்கீலிடம் ஆலோசித்து எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போடாதே என்று எச்சரிப்பதற்கு முன்பே மாமா பல பத்திரங்களில் ஜானகியிடம் கையெழுத்து வாங்கிவிட்டார். சொத்தும் பணமும் கைமாறிவிட்டது. பலதாரமண தடைச் சட்டமும் அமலாகிவிட்டது. அதன்பின்பு படப்பிடிப்பின்போது ஜானகியோடு அவரது தந்தை வி. இராசகோபலய்யர் வந்திருக்கிறார். ஜானகியிடம் கால்ஷீட் பெறுவதில் கூட பல பிரச்னைகள் தோன்றின. 

ஜானகியைக் காதலித்தது ஏன்?

எம்.ஜி.ஆர் ஜானகி காதலுக்கு அவரது வீட்டுச் சூழ்நிலையும் முக்கியக் காரணமாக இருந்தது. ஜானகிக்கு அவரது மாமாவால் நிம்மதி இல்லை. எம்.ஜி.ஆருக்கு வேறு சிக்கல். அவரது மனைவி சதானந்தவதிக்கு கருக்குழாயில் கருத்தங்கி வளர்வதால் கருச்சிதைவு செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகும் நிலை. இதைத் தொடர்ந்து அவருக்குக் காச நோயும் வந்துவிட்டது. அன்பும் அழகும் பொறுமையும் கொண்ட சதானந்தவதிக்கு எம்.ஜி.ஆரால் உடனிருந்து பணிவிடை செய்ய முடியாத சூழல். அந்தச் சமயத்தில் அவருடன் படங்களில் நடித்த ஜானகி போகக்போக அவருடன் நட்பாகிறார். அப்போது சதானந்தவதியை ஜானகி உடனிருந்து கவனிக்கத் தொடங்கினார்.  ஜானகிமீது அவர் காதல் கொண்டதற்கு இதுவும் ஓர் அடிப்படைக் காரணம்.

எம்.ஜி.ஆர் வீட்டில் ஜானகி

எம்.ஜி. சக்கரபாணிக்குத் தன் தம்பி ஜானகியை விரும்புவதும் திருமணம் முடிக்கத் துடிப்பதும் விருப்பமில்லை என்றாலும் தம்பியின் காதலுக்கு அவர் தடை விதிக்கவில்லை. எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிப்பதால் தன் வீட்டுக்கு எதிரே ஒரு வீட்டில் ஜானகியைக் குடியமர்த்தியதை ஏற்றுக்கொண்டார். 1958ல் நாடகமேடையில் எம்.ஜி.ஆர் காலில் அடிப்பட்டதும் எம்.ஜி.ஆர் படுத்த படுக்கையானார். அப்போது அவர்களைப் புரிந்து கொண்ட சக்கரபாணி, எம்.ஜி.ஆர் ஜானகியை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு சம்மதித்தார். ஜானகியும் சதானந்தவதியும் எம்.ஜி.ஆரின் அண்ணன் அண்ணி பிள்ளைகளும் பல வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்தனர். 

எம்.ஜி.ஆர் - ஜானகி

எம்.ஜி.ஆர் மனைவி மரணம்

சதானந்தவதி காசநோயால் மிகவும் அவதிப்பட்டபோது எம்.ஜி.ஆரின் குடும்ப வைத்தியர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஒரு முரட்டு வைத்தியம் செய்தார். காசநோய் நிபுணர்கள் கைவிட்ட நிலையில் பி.ஆர்.எஸ் போட்ட ஊசிகள் சதானந்தவதியின் ஆயுளைப் பல வருடங்கள் நீடித்தன. கேமராமேன் நாகராஜராவும் எம்.ஜி.ஆரும் தங்கள் மனைவிமாருக்கு ஒரே டாக்டரிடம் காட்டி சிகிச்சையளித்தனர். பிழைத்துக் கொள்வார் என்று சொல்லப்பட்ட நாகராஜராவின் மனைவி மரணம் அடைந்தார். இறந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட கதானந்தவதி பிழைத்துக் கொண்டார். 1962ல் எம்.ஜி.ஆர் கலைஞருக்காக தஞ்சையில் பிரசாரம் (பரிசுத்த நாடாரை எதிர்த்து) செய்தபோது சதானந்தவதி இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. அவர் காருக்குப் பின்னால் ஒரு காரில் விரட்டி வந்து நள்ளிரவில் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். கலங்கிய எம்.ஜி.ஆர் கலைஞரின் பிரசாரக் கூட்டத்தில் பேசி நண்பருக்குரிய கடமையை முடித்துவிட்டு மனைவிக்குரிய இறுதிக்கடனை நிறைவேற்ற சென்னைக்குப் புறப்பட்டார். 

12 வருடம் காத்திருந்த காதலர்கள்

1950ல் காதலிக்கத் தொடங்கி 1962ல் சதானந்தவதி மறைந்த பிறகு இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) தலைமையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் ராமாவரம் தோட்டத்துக்குத் தனிக் குடித்தனம் நடத்தக் கிளம்பினர். 1967க்குப் பிறகு ஜெயலலிதா சிலகாலம் வந்து ராமாவரத்தில் தங்கியிருந்தபோது ஜானகி சக்கரபாணி குடும்பத்துடன் தங்கும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இப்போதும் சக்கரபாணியால் தன் தம்பியைக் கண்டிக்க முடியவில்லை. ஜெயலலிதா ராமாவரத்தை விட்டு வெளியேறியதும் ஜானகி தான் இனி, தனியாளாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தன் அண்ணன் பிள்ளைகளைத் தன்னுடன் வீட்டில் வைத்து வளத்தார்.

எம்.ஜி.ஆர் - ஜானகி

ராமாவரம் தோட்டத்தில்

ஜானகியின் சகோதரருக்கு லதா, சுதா, கீதா, பானு, ஜானகி என ஐந்து பெண் குழந்தைகள். இவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர் தன் ராமாவரம் வீட்டை உயில் எழுதி வைத்தார். இவர்களுக்கென்று தனித்தனி பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்து அவற்றை அன்னை சத்யா அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். இவர்களில் சுதாவின் கணவர் விஜயனை பானு ஓர் அடியாள் மூலம் கொலை செய்துவிட்டு இப்போது சிறையில் இருக்கிறார்.

இந்தப் பெண்களுடன் பிறந்த தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) ஜெயலலிதா (ராணுவ ரேக்கில்) எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு ஏறிய போது கையைப் பிடித்து கீழே இழுத்துவிட்டார். எம்.ஜி.ஆர் உயிலில் சொல்லியிருந்தபடி இப்போது ராமாவரம் தோட்டத்தில் காதுகேளாதோர் வாய்பேச இயலாதோர் பள்ளியை ஜானகியின் அண்ணன் மகள் சுதா ராஜேந்திரன் நடத்தி வருகிறார்.

பெண் முதலமைச்சர் ஜானகி

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மையார் தமிழகத்தை 28 நாள்கள் ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகிக்கு ராஜீவ்காந்தியும் காங்கிரஸும் சட்டசபையில் ஆதரவு தராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று அவர் பதவியிழந்தார். தன் பேரில் இருந்த (கட்சி அலுவலகமாக) கட்டடத்தை அதிமுக கட்சி பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் சம்மதித்தார். அவர் இறந்ததும் அவர் உடல் ராமாவரம் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் ஜானகிக்கு ஜோடி சிலை

ஜானகியின் சகோதரர் ஜானகி பிறந்த ஊரான வைக்கத்தில் எம்.ஜி.ஆர் - ஜானகி ஜோடியாக நிற்பது போல சிலையமைத்துள்ளார். இதுபோன்ற நடிகர்கள் மற்றும் முதல்வர்கள் சிலை உலகத்திலேயே இது ஒன்று மட்டுமே. “ ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா - தர்மம் வெல்லும் என்று சொன்னவனே ராமச்சந்திரா" என்ற திரைப்பாடல் இப்போது நம் காதுகளில் ஒலிக்கிறது.

ஜானகியின் மகன் சுரேந்திரன்

 

ஜானகியைத் திருமணம் செய்து எம்.ஜி.ஆர் அழைத்து வந்த போது அவர் மகன் சுரேந்திரனையும் சேர்த்து அழைத்து வந்தார். தன் அண்ணன் சக்கரபாணியின் குழந்தைகளுடன் சுரேந்திரனும் சேர்ந்து படித்து வளர்ந்தார். அவருக்கு ஒளிப்படத்துறையில் அபார அறிவு இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படம் பிடிக்கும்போது கப்பல் அசைவதைக் காட்டுவதற்கான கேமரா உத்தி ஒன்றை சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுரேந்திரன் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவருடைய குழந்தைகளுக்கு செங்குட்டுவன், இளங்கோ, கவிதா என்று எம்.ஜி.ஆர் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். அவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்துள்ளார். எம்.ஜி.ஆரை நம்பி வந்த ஜானகியின் மகனும் அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்லநிலையில் உள்ளனர். எம்.ஜி.ஆரின் ஆதரவில் சிறப்பான வாழ்வைப் பெற்றனர். அவரை நம்பிக் கெட்டவர் எவரும் இல்லை என்ற தொடர் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் சுயசரிதமான நான் ஏன் பிறந்தேன் நூலின் பதிப்புரிமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது மனைவி ஜானகிக்கும் அதன் பின்பு ஜானகியின் மகனான சுரேந்திரனுக்கும் சட்டப்படி மாறியுள்ளது. அந்நூலில் சுரேந்திரனின் குடும்பத்தார் படங்களும் இடம் பெற்றுள்ளன. 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/106967-mgr-series-episode-16.html

Link to comment
Share on other sites

 

'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17

 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் தாமரை மணி மாலை அணிந்து கதருடுத்தி கோயிலுக்குப்  போய்வந்தார். தன் இறை நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தார். ‘ஆண்டவன் வழிவிடுவான்’, ‘ஆண்டவனுக்குத் தெரியும்’ என்று எதற்கெடுத்தாலும் ஆண்டவன், ஆண்டவன் என்று இவர் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ‘ஆண்டவன்’ என்றே பட்டப்பெயர் வைத்துவிட்டனர். படப்பிடிப்புத்தளத்தில், ‘ஆண்டவன் எங்கேய்யா? ஆண்டவனுக்கு கார் போய்விட்டதா’ என்று எம்.ஜி.ஆரை ‘ஆண்டவன்’ என்ற பட்டப்பெயரால் குறிப்பிட்டு பேசினார். தன்னை ஆண்டவனே என்று அழைத்துப் பேசுவோரிடம் எம்.ஜி.ஆரும் பதிலுக்கு ‘ஆண்டவன்’ என்றே அவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பின்பு ஆண்டவனே என்று அவர் மற்றவர்களை அழைத்துப் பேசுவதில்லை. மற்றவர்கள் பழைய பழக்கத்தின் காரணமாக எம்.ஜி.ஆரை ‘ஆண்டவனே’ என்று அழைப்பதை நிறுத்தவில்லை. ஆண்டவன் என்ற பெயரால் எம்.ஜி.ஆரை இவர்கள் தொடர்ந்து அழைத்து வந்தனர்.

 

திமுக-வில் எம்.ஜி.ஆர்

அண்ணாவினால் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்த பின்பு கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார். ஒருமுறை திருப்பதிக்குப் போய் கடவுளைப் பார்க்க முடியாத காரணத்தால் இனி கோயிலுக்குப் போவதில்லை என்று முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். இதனால் இவர் தெய்வமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக திமுகவினர் அகமகிழ்ந்தனர். அதே வேளையில் திமுகவில் அப்போது இருந்துவந்த சிவாஜிகணேசன் தன் குடும்பத்தாருடன் திருப்பதிக்குப் போய் வந்ததால் திமுகவினர் அவரை கொள்கை விரோதியாகப் பார்த்தனர். ‘திருப்பதி கணேசா, திரும்பிப் போ’ எனச் சொல்லி திமுகவிலிருந்து அனுப்பிவிட்டனர். ஆக இப்போது திமுக உறுப்பினரான எம்.ஜி.ஆர் கோயில் போகும் பழக்கம் இல்லாதவர். திரைப்படங்களிலும் சாமி படங்களைக் கூட வணங்காதவர் என்ற எண்ணம் அவரது கட்சியினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஜெயலலிதாவின் ஆளுமை

பத்மினி, சரோஜாதேவி உடன் ஜோடியாக நடிக்கும்போது எம்.ஜி.ஆர் கோயிலுக்குப் போனதாகவோ வீட்டில் தெய்வ வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவோ (1953இல் ‘ஜெனோவா’ படத்தில் அவர் பைபிள் வாசிக்கும் காட்சி இருந்தது.) காட்சிகள் வைக்கப்படவில்லை. நான் ஏன் பிறந்தேன் படத்தில் கே.ஆர்.விஜயா சுமங்கலி பூஜை செய்து அழும்போது பூஜை முடியும் தருணத்தில் எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிடுவார். விஜயா தன் கையில் எடுத்திருந்த மலர்களை எம்.ஜி.ஆரின் கால்களில் போட்டு வணங்குவார்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் முருகன் கோயிலில் நின்று இருவரும் சாமி கும்பிடுவதாகக் காட்சிகள் இடம்பெற்றன. ‘உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கும்போது அதை வெளிக்காட்ட தயங்குவது ஏன்? என்ற வினாவே எம்.ஜி.ஆரை கோயில் காட்சிகளில் நடிக்க வைத்தது என்று துணிந்து கூறலாம். அதுவரைஅவர் மருதமலைக்குப் போனது, நம்பியாருக்கு சபரிமலையாத்திரையின் போது முதல் மாலை அனுப்பியது என ஆன்மிக ஆர்வம் இருந்தாலும் அவர் அதைத் தன் படங்களில் வெளிப்படுத்தவில்லை.

எம்.ஜி.ஆர்

காஞ்சித்தலைவன் படத்தில் எம்.ஜி.ஆர் போருக்குப் புறப்படும் முன்பு கொற்றவையை வழிபடுவதை நேரடியாகக் காட்டாமல் கோயில் வாயிலிலிருந்து அவர் தேரில் கிளம்பிச் செல்வதாகக் காட்டுவார்கள். அதைப் போல மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அவர் கோயில் திருப்பணிகளுக்குப் பணம் வழங்கியதை கோபுரங்களின் மீது தங்கக் காசுகள் கொட்டுவதாக ‘டபுள் எக்ஸ்போஷர்’ முறையில் காட்டியிருப்பார்கள். ஆனால், ஜெயலலிதாவுடன் நடிக்கும் படங்களில் மட்டுமே இருவரும் ஜோடியாகக் கோயிலில் இருப்பார்கள்.

என் அண்ணன் படத்தில்…

குதிரை வண்டிக்காரனான எம்.ஜி.ஆரும் புல்லுக்கட்டுக்காரியான ஜெயலலிதாவும் முருகன் கோயிலில் நின்று கைகூப்பி கண்மூடி சாமி கும்பிடுவார்கள். பின்பு கண்ணைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் நீ என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டதற்கு ஜெயலலிதா நமக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகக் கூறுவார். ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் இதே கேள்வியைக் கேட்டதற்கு எம்.ஜி.ஆர், தன் தங்கைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டியதாகக் கூறுவார். இறைவனிடம் பக்தியோடு வேண்டிக்கொண்டால் அந்தக் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை இந்தப் படக்காட்சியில் எம்.ஜி.ஆர் பகிரங்கமாக தெரிவித்திருப்பார்.

நம்நாடு படத்தில்

எம்.ஜி.ஆர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா முருகன் கோயிலில் போய் வேண்டிக்கொள்வார். பின்பு எம்.ஜி.ஆரை வில்லன்கள் அடித்துப் போட்டதும் அதே கோயிலில் இருவரும் தஞ்சம் புகுந்த போது பூசாரி அவர்களை வெளியேறும்படி சொல்லிவிடுவார். அப்போது எம்.ஜி.ஆர் ஆண்டவன் இப்போது கோயிலை விட்டு வெளியேறி விட்டான் என்று விரக்தியுடன் ஒரு வசனம் பேசுவார்.

எம்.ஜி.ஆர்

தனிப்பிறவி படத்தில் ‘முருகனாக’

முருகனின் தீவிர பக்தரான தேவர், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த படம் தனிப்பிறவி. இருவரும் இவர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு கஷ்டப்பட்ட காலங்களில் எம்.ஜி.ஆர் ஆண்டவனே என்று எதற்கெடுத்தாலும் சொல்வதைப் போல தேவர் முருகா என்று சொல்வார். மற்றவர்களைக் கூட முருகா என்றுதான் அழைப்பார். கோபம் வந்தால் என்ன முருகா இப்படிச் செய்கிறாய் என்று கேவலமாக வசை மொழிகளைப் பயன்படுத்தித் திட்டுவார். இவரது தனிப்பிறவிப் படத்தில் ஒரு பாடல்காட்சியில் எம்.ஜி.ஆர் முருகன் வேடமிட்டார். ஜெயலலிதா வள்ளி, தெய்வானை என்ற இருவராகவும் வந்தார். அவர் ஏகாதிபத்திய உணர்வு கொண்டவர் அல்லவா? எனவே வள்ளி, தெய்வானை என இரண்டு வேடங்களையும் அவரே ஏற்று நடித்தார்.

சிவபெருமானாக எம்.ஜி.ஆர்

அதிமுக தொடங்கிய பின்பும் எம்.ஜி.ஆர் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ளவராகவே இருந்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் போலிச்சாமியார் ஒருவர் இளம்பெண்களை மதுகலந்த தண்ணீரை தீர்த்தம் எனக் கொடுத்து மயங்க வைத்து கெடுப்பதை நேரடியாகக் காட்டி, அந்தச் சாமியாரை காலால் எட்டி உதைத்து ‘துவம்சம்’ செய்திருப்பார்.

இப்படத்தில் சிவபெருமான வேடத்தில் ‘ருத்ரதாண்டவமும்’ ஆடியிருப்பார். சிவபெருமானே நேரில் வந்து வில்லன்களை உதைத்து அடிப்பதாக அக்காட்சி அமைந்திருக்கும். மதுரைவீரனுக்கு பூஜை போடும் பாடல்காட்சியும் இப்படத்தில் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர்

ஸ்ரீமுருகன் (1946) படத்தில் மாலதி பார்வதியாகவும் நடித்தார். அவர்கள் ஆடிய சிவதாண்டவக் காட்சி அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பார்க்க மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த பிலிம் சேதம் அடைந்ததால் அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் மூகாம்பிகை வழிபாடு

1995ல் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் வரை அவர் கோயிலுக்குச் சென்றதாகவோ பூஜை, யாகங்கள் நடத்தியதாகவோ பெரியளவில் தகவல்கள் இல்லை. தோல்விக்குப் பின்பு அவர் பெயரில் பிரத்யிங்கரா தேவி கோயிலிலும் மற்றும் சத்ரு சங்கார பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. இதன் விளைவாகவோ என்னவோ அவருக்கு அடுத்த தேர்தலில் வெற்றியும் கிடைத்தது. ஆனால் எம்.ஜி.ஆர் பதவியில் இருக்கும்போதே தன் அண்ணனின் சம்பந்தியும் இயக்குநருமான சங்கருடன் சேர்ந்து தன் தாய் சொல்லிச் சென்றிருந்த கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வழிபாடு செய்தார். தனக்கு நாடோடி மன்னன் படவெற்றிவிழாவில் மதுரையில் வைத்து மதுரை முத்துவால் வழங்கப்பட்ட நூறு பவுன் தங்கவாளையும் மூகாம்பிகைக்குக் காணிக்கையாக வழங்கினார். அந்த வாளை இப்போது மூலஸ்தான விக்ரகத்தின் அருகில் காணலாம். அந்தக் கோயிலில் அவர் ஆதி சங்கரரின் தியான அறைக்குள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்வந்ததை அறிந்த அதிமுகவினர் அந்தக் கோயிலுக்குப் போய்வரத் தொடங்கினர். தமிழில் மூகாம்பிகை பற்றிய திரைப்படங்கள் வரத் தொடங்கின. அடிமட்டத் தொண்டர்களும் மாதந்தோறும் பணம் செலுத்தி மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை என ‘டூர்’ போய்வரத் தொடங்கினர். ஆன்மிக சிந்தனையும் ஸ்தல யாத்திரைகளும் தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் புத்துயிர் பெற்றன. கோவிலுக்குப் போவது முட்டாள்தனம் என்ற எண்ணம் பரவியிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் மூகாம்பிகை பக்தி தெய்வநம்பிக்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

எம்.ஜி.ஆரின் உடல்நலம் தேற பிரார்த்தனை

1952ல் திமுக பெற்ற முதல் வெற்றி முதல் 1972ல் அதிமுக பெற்ற வெற்றி வரை தமிழகத்தில் இந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஓர் இருண்ட காலத்தில்தான் இருந்துவந்தது. நாத்திகர் வெற்றி பெற்றால் ஆத்திகர் தோல்வி அடைவது சகஜம் தானே. திமுகவினர் உச்சித் திலகத்தை ரத்தம் என்று கேலி செய்வர். திருமண் இட்டால் நூற்றிப்பதினொன்று என்று நையாண்டி செய்வர். விபூதி பூசினால் பட்டை என்றும் சாம்பல் என்றும் ஏளனம் செய்வர்.

கலைஞர் கருணாநிதியே நேரடியாக இந்தக் கேலியில் இறங்கியதால் இந்துமத அடையாளங்கள் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாயின. இந்த நிலை எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதும் மாறியது. மேலும் எம்.ஜி.ஆர் உடல்நலமின்றி அமெரிக்காவில் இருந்த போது அவரது ரசிகர்கள் நடத்திய வழிபாடுகள் தமிழகத்தில் மாபெரும் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தின.

ஆன்மிகப் புரட்சி

எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். அவரது பிணத்தை வைத்து ஓட்டுக் கேட்கிறார்கள் என்று 1984ல் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். மக்கள் இரண்டுமுறை எமன் கையில் இருந்து பிழைத்த எம்.ஜி.ஆர் இந்த முறையும் பிழைத்து விடவேண்டும் என்று மனமுருக வேண்டினர். பால்குடம் எடுத்தனர். காவடி எடுத்தனர். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தபடி கோவில்களுக்குப் போய் சாமி கும்பிட்டனர்.

எம்.ஜி.ஆர்தான் ‘வாத்தியார்’ ஆச்சே, அவர் தான் சாகப்பிழைக்கக் கிடந்தால் அனைத்துத் தரப்பினரும் அவரவர் முறைப்படி கடவுளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும் என்று ‘ஒளிவிளக்கு’ படத்தில் எடுத்துக்காட்டியிருந்தார் அல்லவா! அவர் காட்டிய வழியில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் முழு நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினர். முதலில் இந்துமதத்தின் அடித்தட்டு மக்கள் ஆரம்பித்து வைத்த நாட்டுப்புறத் தெய்வவழிபாடு மெள்ள மெள்ள பெருங்கோவில்களில் பூஜைகளாக பரிணமித்தன.

கோயில்களில் நடந்த தெய்வ வழிபாடுகள் தேவாலயம், மசூதி என விரிவு பெறத் தொடங்கின. தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் அவர்களுக்கு ஏற்ற முறையில் முழு விசுவாசத்துடன் கடவுளை வணங்கினர். இவர்களின் விசுவாசம் இவர்களைக் காத்தது. எம்.ஜி.ஆர் உயிரோடு திரும்பினார். பேச்சில் ஏற்பட்ட குறையை மக்கள் பொருட்படுத்தவில்லை. பிழைத்து வந்ததே போதும் என்று மனமகிழ்ந்தனர்.

 

அப்போது பல இடங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஒரு கோயிலில் பார்த்து மற்றொரு கோயில் ஒரு தேவாலயத்தைப் பார்த்து மற்றொரு தேவாலயம் என மக்கள் கூடி வழிபாடு செய்தனர். மக்களிடம் பெரிய அளவில் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டிருப்பதைப் பார்த்து கலைஞர் கருணாநிதியும் ஆத்திகவாதியாகி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ‘பிரார்த்தனையால் எம்.ஜி.ஆர் பிழைத்துவிடுவார் என்றால் நானும் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்துமக்களின் ஓட்டுக்காக நடத்திய சாகசச் செயல் என்றாலும் அப்போது ஏற்பட்ட ஆன்மிகப் புரட்சியில் கலைஞரும் பங்கேற்றார் என்பதை மறுக்க இயலாது.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/107192-spiritual-roles-played-by-mgr-mgr-series-episode-17.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.9.2017 at 5:20 PM, நவீனன் said:

“ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர்

எம்ஜிஆர் நல்லவர் தான்.
எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் வறுமையில் வாடி சிதைந்து போனகதை யாருக்காவது தெரியுமா? படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வரும் ரசிகர்களை கவர வேட்டி சால்வை சேலை என தயாரிப்பாளரை வாங்கி வருமாறு பணிப்பாராமே!!! :cool:

Link to comment
Share on other sites

சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-18

 
 

எம்.ஜி.ஆர்

 

 

 

 

1940களில் தமிழ் திரையுலகம்

எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

“கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

பி.யு. சின்னப்பா

பி.யு. சின்னப்பா

முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

ரஞ்சன் என்ன ஆனார்?

ரஞ்சன்

“சந்திரலேகா” படம் ஜெமினி தயாரிப்பில் ஐந்து கோடி செலவில் உருவான படமாகும். அதில் எம்.ஜி.ஆரின் நாடகத்தந்தை எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே. ராதா கதாநாயகனாகவும் ரஞ்சன் வில்லன் சசாங்கனாகவும் நடித்திருந்தனர். இருவருமே தமிழ்த்திரையுலகின் தன்னிகரற்ற நடிகர்களாக வந்திருக்க வேண்டும். ஆனால் விதி யாரை விட்டது?

1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் (1956) ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

கலைவாணரின் ஆளுமை

கலைவாணர்

கலைவாணர் சிறையிலிருந்து 1946-ல் வந்த பின்பு பல படங்களை தயாரித்து நஷ்டப்பட்டார். அந்த துக்கத்திலேயே காலமானார். இவர் மரணத்துக்குப் பின்பு எம்.ஜி.ஆர் அவர் மகன்களை டாக்டர் மற்றும் எஞ்ஜினியர் ஆக்கினார். மகள்களுக்கு முன்னின்று செலவு செய்து  ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் எம்.ஜி.ஆர் 1956-ல் ‘மதுரை விரன்’, 1957-ல் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படங்களில் நடித்தார். ராஜா தேசிங்கு படத்தில் மகமத் கானாக நடிக்க இருந்த என்.டி. ராமராவை மாற்றி எஸ்.எஸ்.ஆருக்கு கலைவாணர் அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். பின்பு எம்.ஜி.ஆரும் தன் பங்குக்குச் சில மாற்றங்களைச் செய்தார். படம் வெளி வருவதற்குள் என்.எஸ் கே. 1957-ல் காலமாகிவிட்டார். பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் 1960-ல் வெளிவந்தது. எஸ்.எஸ். ஆரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறாதபடி எம்.ஜி.ஆரின் இரட்டை வேடம் அமைந்தது.

ராஜாதேசிங்கு வெளியாவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ வந்து அவரது அதிகாரத்தையும் செல்வாக்கையும் தமிழ்த் திரையுலகில் ஆழமாக வேரூன்றிவிட்டது. அவரின் படங்களில் இனி மாற்றம் சொல்ல என்.எஸ். கேயும் இல்லை என்ற நிலையும் உருவாகி விட்டது.

எம்.பி. ஆனார் எஸ்.எஸ்.ஆர்

எஸ்.எஸ்.ஆர்

திமுக ஆதரவு நடிகர்களாகப் பலர் தமிழ்த் திரையுலகில் இருந்தாலும் எம்.ஜி.ஆரும் எஸ். எஸ். ஆரும் தொடர்ந்து திரையுலகில் நிலைத்திருந்து வெற்றிவாகை சூடினர் எஸ்.எஸ்.ஆர். எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிவாஜி கணேசனுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்தும், தனியாகக் கதாநாயகனாகவும் நடித்துவந்தார். இவர் சிவந்த முகமும் சுருள் முடியும் நல்ல தமிழ் உச்சரிப்பும் புராணப்படங்களில் நடிப்பதில்லை என்ற இலட்சிய வேகமும் கொண்டவர். திமுக கொடியை முதன்முதலாக தனது சொந்தப் படமான ‘தங்கரத்தினத்தில்’ காட்டியிருந்தார். இந்திய நடிகர்களில் முதலில் சட்டமன்றத் (1962) தேர்தலில் நின்று வெற்றி பெற்று பெருமை உடையவர். ‘சேடப்பட்டி சிங்கக்குட்டி’ என்று அவரது சொந்தஊர்ப் பெயரால் அழைக்கப் பெற்றவர்.

கலைஞர் கருணாநிதி முதல்வரானபோது எஸ்.எஸ்.ஆருக்கு பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி) பதவியை வழங்கி அவரை டில்லிக்கு அனுப்பி வைத்தார். எஸ்.எஸ்.ஆர் நடிக்கவில்லை. மேல்சபை உறுப்பினரானதும் சிவாஜி வருத்தப்பட்டார். “திரையுலகில் நல்ல செல்வாக்குடன் இருக்கும்போது நீ ஏன் எம்.பி. பொறுப்பை ஏற்றுக் கொண்டாய்? இதனால் தமிழ்த் திரையுலகுக்கு குறிப்பாக எனக்கு மிகவும் நஷ்டம். இது வயதான பின்பு பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு” என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார். 1969க்கு பிறகு திரைப்படங்களில் நடித்து எம்.ஜி.ஆர் அரசியலில் தனிப்பெரும் செல்வாக்கு பெற்றவரானார். (எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கிய பின்பு எஸ்.எஸ்.ஆர் அக்கட்சியில் சேர்ந்து எம்.எல்ஆகி எம்.ஜி.ஆரிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டார்.)

 

எஸ்.எஸ்.ஆர் தமிழ்த்திரையுலகை விட்டு வெளியேறி எம்.பி.ஆனதும் (திமுக) அரசியல் செல்வாக்குள்ள தனிப்பெரும் நடிகராக எம்.ஜி.ஆர் தமிழ்த்திரையுலகின் உச்சத்தை தொட்டார். பாகவதர் சிறை சென்றதும் பி.யு. சின்னப்பாவின் திடீர் மரணமும் என்.எஸ்.கேயின் நோயும் மரணமும் ரஞ்சனின் தோல்விகளும் எஸ்.எஸ்.ஆர் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினரானதும் எம்.ஜி.ஆருக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளாக அமைந்து திரையுலகில் தனிப்பெரும் செல்வாக்கைப் பெறவைத்தன.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/107437-mgr-filled-void-in-kollywood-mgr-series-episode-18.html

Link to comment
Share on other sites

வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-19

 
 

எம்.ஜி.ஆர்

 

பழந்தமிழ் இலக்கியங்களில், தலையேழு வள்ளல்கள் இடையேழு வள்ளல்கள் மற்றும் கடையேழு வள்ளல்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவள்ளல், கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு வேலையாளிடம் சொல்லி ஒரு பந்தல் போடச் சொல்லாமல், உடனே தன் தேரை அங்கே நிறுத்தி, அந்த முல்லைக்கொடியை அதில் படர விட்டுவிட்டுத்தான் நடந்தே இல்லம் வந்து சேர்ந்தான் என்று படித்திருக்கிறோம். அதுபோல, துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது எம்.ஜி.ஆரின்  சிறந்த பண்பாகும் . எம்.ஜி.ஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கினார். எம். ஜி. ஆர் வலியப் போய் உதவியதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். இந்த ஓர் அத்தியாயம் மட்டுமே ஒரு நூலாக விரிவடையும் என்றாலும், சில சான்றுகளை மட்டும் இங்கு காண்போம்.

 

வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்

மனிதர்களுக்கு உதவியதைப் பார்ப்பதற்கு முன், வண்டுக்கு உதவிய ஒரு நிகழ்ச்சியை அறிந்துகொள்ளலாம். ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்.ஜி.ஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்.ஜி.ஆரைத் தேடிப்போய்விட்டார். அங்கே, எம்.ஜி.ஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப்போல வெளியே வந்தார். தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார். தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார். இதுதான் மற்றவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள வேறுபாடு. எம்.ஜி.ஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது முக்கியமாக இருந்தது.

எம்.ஜி.ஆர்

குதிரைவண்டிக்காரரின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர், ஒரு நாள் இரவில் காரில் வந்துகொண்டிருந்தபோது, ஓர் இடத்தில் 10 பேர் கூடி நின்றனர். அங்கு, அழுகைச் சத்தமும் கேட்டது. உடனே என்ன நடந்தது என்று போய் பார்த்துவிட்டு வா என தன் உதவியாளரை அனுப்பினார். அவர் வந்து, ஒரு குதிரை செத்துவிட்டது. குதிரைவண்டிக்காரரின் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள் என்றார். உடனே, எம்.ஜி.ஆர் அந்தக் குதிரைவண்டிக்காரரிடம் புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு, அதற்குப் பணம் கொடுத்தார். அவர், குதிரை வாங்கி வண்டியில் பூட்டி ஓடவைப்பது வரை அவர்களுக்குச் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டுமே, அதற்கும் தனியாகப் பணம் கொடுத்தார். குதிரைவண்டிக்காரர் புதுக் குதிரை வாங்கியதும் வண்டியில் பூட்டிக்கொண்டு வந்து, எம்.ஜி.ஆரிடம் காட்டிவிட்டுப் போனார். 

காலில் காயம் பட்ட ஊழியருக்கு உதவி

ஒரு நாள், படப்பிடிப்பு தளத்தில் ஓர் ஊழியர் காலை நொண்டியபடி வேலைபார்த்துக்கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். அவரை அழைத்து, அவருக்கு சிகிச்சைக்குப் பணம் கொடுத்து, ‘கால்  குணமடையும்வரை வேலைக்கு வரவேண்டாம்' என்று கூறி அனுப்பினார். அப்போது அவர் அருகில் இருந்தவர்களிடம், “எனக்கு வசதி இருந்ததால் என்  கால் முறிந்தபோது நல்ல சிகிச்சைபெற்று குணமானேன். பாவம் அவர் வசதி இல்லாத காரணத்தால்தானே இவ்வாறு காலில் கட்டோடு வேலைக்கு வந்துள்ளார். அவருக்கு நாம்தானே உதவ வேண்டும்’’ என்றார். ஏழை எளியோருக்கு உதவுவதை எம்.ஜி.ஆர் தன் கடமை என்று நினைத்ததால் மட்டுமே அவருக்கு இப்படி வலியச் சென்று உதவும் மனமும் குணமும் அமைந்தது.

கேமராக்காரருக்குக் கேட்காமல் அளித்த உதவி

தினமும் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு முடிந்ததும், ஸ்டில்ஸ் போட்டோ எடுத்துவந்து கொடுக்க புகைப்படக்காரர்கள் படப்பிடிப்புத் தளத்திலேயே இருப்பார். அந்தப் படங்களைப் பார்த்து விக், மேக்கப், உடை ஆகியன சரியாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர்வார்கள். காலையில் எடுத்த படங்கள் இரண்டு மூன்று மணியளவில் தளத்துக்கு வந்துவிடும். ஒரு நாள், நாகராஜராவின் அக்காள் மகன் சங்கர் ராவ், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவரை வந்து தளத்திலிருந்து தனியறைக்கு அழைத்துக்கொண்டுபோனார். அங்கு, எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர்.எஸ் இருந்தார். சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. டாக்டர் சங்கரின் உடலைப் பரிசோதித்தார். சங்கருக்கு ஹெர்னியா இருப்பதால், உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார் எம்.ஜி.ஆரிடம். அதற்கு எம்.ஜி.ஆர், சரி ஏற்பாடுசெய்யுங்கள் சிகிச்சைக்குவேண்டிய முழுச்செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். சங்கர் பயந்துவிட்டார். எம்.ஜி.ஆர், அவர் மாமாவிடமும் விஷயத்தை எடுத்துச்சொன்னார். சிகிச்சை முடிந்து சங்கர் நலம் பெற்றார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் வந்து சங்கரைப் பார்த்துச்சென்றார்.

சங்கர், செட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர், அவர் ஏதோ வலியால் அவதிப்படுவதைப் புரிந்துகொண்டார். சங்கரின் முகபாவத்தைவைத்து வலியின் தீவிரத்தை எம்.ஜி.ஆரால் உணர முடிந்தது. இவனிடம் கேட்டால் ஏதாவது காரணம் கூறுவான் என்று அவர் உடனே தன் சொந்த மருத்துவரை வரவழைத்துப் பரிசோதிக்கும்படிக் கூறினார். சங்கருக்கு வலி மற்றும் நோயிலிருந்து நிரந்தர நிவாரணம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர்

நடன இயக்குநருக்கு பாக்கி கிடைத்தது

எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கும்போது, சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனித்துக்கொண்டே இருப்பார். இதனால்தான் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது லதா (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்), சரோஜாதேவி (அன்பே வா), நம்பியார் (ஆயிரத்தில் ஒருவன்), மனோகர் (அடிமைப்பெண்), வீரப்பா (ஜெனோவா) போன்றோருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆரால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. எம்.ஜி. ஆரின் இந்தப் பண்புகுறித்து டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஒருநாள், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் முகம் வாடிப்போய் இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர், உடனே அவரைத் தனியாக அழைத்து காரணத்தைக் கேட்டார். அவருக்கு மைசூரில் டான்ஸ் ஷூட் செய்ததற்குரிய சம்பள பாக்கி இன்னும் வரவில்லை என்பதை அறிந்ததும், தயாரிப்பாளரிடம் சொல்லி உடனே சம்பளத்தைப் பெற்றுத் தந்தார்.  'அப்போதெல்லாம், மாதத்துக்கு ஐந்து பாடல்கள்தான் வரும். அதற்கும் சம்பளம் வராமல் இருந்துவிட்டால், குடும்பம் நடத்துவது கஷ்டம். இதை உணர்ந்த எம்.ஜி.ஆர், வாடிய என் முகத்தைப் பார்த்தே உதவிவிட்டார்' என சுந்தரம் தன் பேட்டியில் கூறினார். 

ஸ்டன்ட் மாஸ்டர்  குழுவிற்கு வாழ்வளித்தல்

பலராம் என்றொரு ஸ்டன்ட் மாஸ்டர், தன் குழுவினருடன் சினிமாவில் கோலோச்சி வந்தார். அந்தக் குழுவினர், படங்களில் நடனமும் ஆடுவார்கள், சண்டையும் போடுவார்கள். ஒரு நாள், பலராம் மாஸ்டர் காலமாகிவிட்டார். துக்கம் விசாரிக்க வந்த எம்.ஜி.ஆர், தாயிழந்த பிள்ளைகள் போல அங்கு நின்றுகொண்டிருந்த மாஸ்டரின் மாணவர்களைப் பார்த்தார். அவர்களைத் தன்னிடம் வந்து சேர்ந்துவிடுமாறு அழைத்தார். மறுவாழ்வு கிடைத்த அவர்கள், அகமகிழ்ந்தனர். அப்படி வந்தவர்கள், கடைசி வரை எம்.ஜி.ஆருடனேயே இருந்தனர். எம்.ஜி. ஆர் அரசியலுக்கு வந்த பின்பும் அவருடன் மெய்க்காப்பாளர்களாகத் தொடர்ந்தனர். இவர்களில் யாரும் எம்.ஜி.ஆரிடம் வந்து உதவி கேட்கவில்லை. ஆனால், பார்த்த மாத்திரத்திலேயே அவர்களின் அனாதரவான நிலையை உணர்ந்து, அவர்களைத் தன்னுடையவர்களாக எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர், வடபழனியில் ஓர் இடம் வாங்கி, அதை ஸ்டன்ட் மாஸ்டர்கள் பயிற்சிபெறுவதற்காகக் கொடுத்தார். பின்பு அவர் முதல்வரானதும், அவர்களுக்குத் திருமங்கலத்தில் 48 வீடுகள் கட்டிக்கொடுத்து, அவற்றில் 47ஐ குடியிருக்கவும் ஒன்றை மட்டும் அலுவலகமாகப் பயன்படுத்தும்படியும் கூறினார். ஆனால், திருமங்கலம் அவர்களின் பணித்தளமான கோடம்பாக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். அவர் காலத்தில்தான் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கென்று தனிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்

வெயிலில் நடந்தவர்களுக்குச் செருப்பு

அண்ணா, ஒரு கட்டுரையில் காலில் செருப்புகூட இல்லாமல் நடந்துபோகும் ஏழை, தன்னருகே காரில் பறந்துபோகின்றவனை நின்று திரும்பிப்பார்த்துச் செல்வான். ஆனால் காரில் போகிறவனோ, அந்த ஏழையைப் பற்றி கனவிலும் நினைக்க மாட்டான் என்பார். ஆனால் எம்.ஜி.ஆர், அதற்கு விதிவிலக்கு. அவர், எப்போது காரில் போனாலும் படப்பிடிப்பில் இருந்தாலும் அவர் கண்ணில் படும் கஷ்டங்களைப் பற்றி கவலைப்படுவார். அதற்கு தன்னால் முடிந்த அளவுக்குப் பரிகாரம் தேடவும் முயல்வார். ஒரு நாள் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு, அவர் மைசூரிலிருந்து மனைவி ஜானகி அம்மையார் மற்றும் ஜானகி அம்மையாரின் தம்பி மகளோடும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரத்தில் ஒரு பாட்டியும் இளம்பெண்ணும் தலையில் விறகுச் சுமையுடன் கால் சூடு பொறுக்காமல் நின்று நின்று நடந்துசென்றனர். உடனே எம்.ஜி.ஆர், தன்னுடன் காரில் பயணித்த இருவரிடமும் உங்கள் செருப்பைக் கழற்றுங்கள் பாவம் அந்தப் பாட்டி வெயிலில் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்றார். உடனே ஜானகியின் செருப்பு பாட்டிக்கும் ஜானகியின் தம்பி மகள் செருப்பு பாட்டியுடன் வந்த இளம்பெண்ணுக்கும் வழங்கப்பட்டன. அவர்கள், அதன் பின்பு நிம்மதியாக நடந்து சென்றனர். அந்தச் சாலையில் எத்தனை பேர் காரில் போயிருப்பார்கள். யாருக்காவது இந்தச் சிந்தனை வந்ததா?

இளநீர்க்காரருக்கு மருத்துவ உதவி

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம். அவர் கோட்டைக்குப் போகும்போது, அவ்வழியே தினமும் ஒருவர் கையில் இளநீர் வைத்துக்கொண்டு அதை நீட்டியபடியே நிற்பார். எம்.ஜி.ஆரின் கார் நிற்காது. ஒரு நாள் எம்.ஜி.ஆர், இங்கு ஒருவர் இளநீர் வைத்தபடி நிற்பாரே அவரைச் சில நாள்களாகக் காணோமே, அவருக்கு என்னவாயிற்று என்று பார்த்துச்சொல்லுங்கள் என்றார். அந்த இளநீர்க்காரர் விஷயம் அப்போதுதான் அவர் உதவியாளருக்குத் தெரிந்தது. விசாரித்துப் பார்த்ததில், இளநீர்க்காரருக்கு மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரிந்தது. எம்.ஜி.ஆர், அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும்படிச் செய்து, அவருக்கு மேலும் பல உதவிகள் செய்தார்.

எம்.ஜி.ஆர்

போலீஸ்காரருக்கு லிஃப்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் காரில் வரும்போது, வழியில் ஏதாவது கார் நின்றிருந்தால் உடனே தன் ஆட்களை அனுப்பி என்ன பிரச்னை என்று கேட்டு அவர்களுக்கு உதவுவார். ஒரு நாள், வழியில் ஒரு போலீஸ்காரர் பேருந்துக்காக நிற்பதைப் பார்த்து, அவரைத் தன் காரில் வரும்படி கூறினார். ஆனால், அந்த போலீஸ்காரரோ, தனக்கு அடுத்தவரிடம் தேவையில்லாமல் உதவியோ சலுகையோ பெறுவது பிடிக்காது. தானொரு நேர்மையான போலீஸ்காரர் என்றார். எம்.ஜி.ஆர் திரும்பவும் அவரிடம், இந்த வழியே இனி பஸ் கிடையாது. நீங்கள் காரில் வாருங்கள், அடுத்து வரும் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக்கொள்ளுங்கள். பஸ் வராவிட்டால், காலையில் டூட்டிக்குப் போக முடியாதே என்றார். போலீஸ்காரருக்கு காரில் வர மனமேயில்லை. இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியில்லையே என்று காரில் ஏறி உம்மென்று உட்கார்ந்துகொண்டார். 

எம்.ஜி.ஆருடன் பேச விரும்பாதவர் போல நடந்துகொண்டார். ஆனால் எம்.ஜி.ஆர், தனக்குக் கடமை உணர்ச்சியுள்ள கண்டிப்பான போலீஸ்காரர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அவரது ஸ்டேஷன் மற்றும் டூட்டி விவரங்களை எல்லாம் மெள்ள விசாரித்தார். மன இறுக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்ட போலீஸ்காரர், எம்.ஜி.ஆர் தனக்கு உதவும் நோக்கத்துடன்தன் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டு, பின்பு சகஜமாகப் பேசினார். விரைவில் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். அவர் பின்னர், தன் இரண்டு மகள்களின் திருமணத்துக்கும் எம்.ஜி.ஆரை அழைத்தார். எம்.ஜி.ஆரும் நேரில் சென்று வாழ்த்தினார். 

வேற்று மாநிலங்களில் உதவி

எம்.ஜி.ஆர், 'பணம் படைத்தவன்' படப்பிடிப்புக்கு கொல்கத்தா போயிருந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு நிதி உதவி அளித்தார். 'அடிமைப்பெண்' படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் போயிருந்தபோது, முதல் நாளே அங்கு நடந்த தீவிபத்துக்கு நிவாரணமாக 50,000 உதவினார். 'அன்பே வா' மற்றும் 'இதய வீணை' படப்பிடிப்புகளுக்கு காஷ்மீர் போனபோது, உடன் வந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஸ்வெட்டர், சாக்ஸ் மற்றும் மஃப்ளர் வாங்கிக் கொடுத்தார். இதை, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா தனது பேட்டியில் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்

ரிக்‌ஷாக்காரருக்கு மழைக்கோட்டு 

1964-ம் வருடம். அப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நல்ல மழை. எம்.ஜி.ஆரின் கார், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நிற்கிறது. ஒரு ரிக்‌ஷா ஓட்டி, வேகமாகத் தன் வண்டி நனையாமல் இருக்க பாடுபடுகிறார். வண்டி சீட் நனைந்துவிட்டால், யாரும் வண்டியில் ஏற மாட்டார்களே என்ற கவலை அவருக்கு. தான் மழையில் நனைந்தாலும் வண்டி நனையக் கூடாது என்று கவலைப்படும் அந்தத் தொழிலாளிக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார். அதனால்தான் அவர், 'ஏழைப் பங்காளன் எம். ஜி.ஆர்' என்று வாழ்த்தப்படுகிறார். 

எம்.ஜி.ஆர், உடனே சென்னையில் எத்தனை ரிக்‌ஷாக்கார்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டறிகிறார். மொத்தம் 3000 என்கின்றனர். இவர், தன் தையல்காரரிடம் சொல்லி ஒரே வாரத்துக்குள் 5000 மழைக்கோட்டுகளைத் தைக்கும்படி உத்தரவிடுகிறார். எத்தனை தையல்காரர் வேண்டும் என்றாலும் வாடகைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். தைத்து முடித்ததும், அறிஞர் அண்ணாவை அழைத்து, அவர் கையால் ரிக்‌ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டுகளை வழங்கும்படிச் செய்தார். மீதி 2000 கோட்டுகள் மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் வாழ்ந்த ரிக்‌ஷாக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.

சாலைப் பணியாளருக்குக் காலுறை

 

'கணவன்' படத்தில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் தார்ச்சாலை போடும் பணியாளர்களாக நடித்திருப்பார்கள். அப்போது, ஜெயலலிதா காலில் தார் கற்கள் ஒட்டிக்கொள்ளும். அவற்றை எம்.ஜி.ஆர் மெள்ள மெள்ள ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு, தன் கால் செருப்பைக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்வார். அவர், தார்ச்சாலைமீது சமப்படுத்தியபடி வரும் புல்டோஸரோடு அதன் சக்கரத்தில் தண்ணீர் ஊற்றியபடி ஓடி வருவார். புதிதாகப் போடப்பட்ட தார், காலில் ஒட்டாதபடி அப்போது காலில் சாக்குத்துணி கட்டியிருப்பார். இந்த நிலை பிறகு மாறிவிட்டது. எம்.ஜி.ஆர், சாலைப் பணியாளருக்கு ரப்பர் கால் உறைகள் வழங்கி, அவர்களின் கண்ணீர் துடைத்தார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/107635-the-unknown-secrets-of-mgrs-helping-attribute-mgr-series-episode-19.html

Link to comment
Share on other sites

என்.எஸ்.கே முதல் சோ வரை... எம்.ஜி.ஆர் கடந்துவந்த காமெடியன்ஸ்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-20

 
 

எம்.ஜி.ஆர்

 

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று அறிவுரை கூறிய எம் ஜி ஆர் தன் படங்களில் சிரிப்பை ஒரு குறிக்கோளோடு பயன்படுத்தினார். தன் இமேஜை உயர்த்தவும் தக்க வைக்கவும் ஏற்றபடி நகைச்சுவைக் காட்சிகளையும் நகைச்சுவை நடிகர்களையும் எம்.ஜி.ஆர் தேர்வுசெய்தார். மெயின் கதையோடு சேர்த்து ஒரு துணைக்கதையாகவே நகைச்சுவை நடிகர்களின் காதலும் தொழிலும் இதர செயல்முறைகளும் அமைந்திருக்கும். ஆனால், அவை லட்சிய வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்காது. கேலிக்கூத்தாக இருக்கும் அல்லது சாமான்ய மனிதர்களின் இயலாமையை காட்டுவதாக இருக்கும். சில படங்களில் எம் ஜி ஆர் வரும் காட்சிகளில் அவர் கூடவே இந்த நகைச்சுவை நடிகர்களும்  இடம் பெறுவார்கள். அப்போது எம் ஜி ஆரின் செயல் வேகத்தை உயர்த்திக் காட்டும் விளம்பரதாரர்களாக செயல்படுவார்கள். எம் ஜி ஆர் வெற்றி ஃபார்முலாவில் நகைச்சுவையின் அவசியம் என்ன,  அவர் தன் படங்களில் தானே நகைச்சுவையாக நடித்தது, மற்ற நடிகர்கள் நகைச்சுவைக்காக நடித்தது, நகைச்சுவை நடிகர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு  ஆகிய நான்கு விஷயங்களை இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

 

காமெடியனின் அவசியம் 

எம்.ஜி.ஆரை ஹீரோவாக ஹைலைட் செய்யும் இருவரில் காமெடியன்களின் பங்கு முக்கியமானது. ஒரு ஹீரோ (எம் ஜி ஆர்) தன்னை நல்லவன் என்றும் வல்லவன் என்றும் இரண்டு விஷயங்களைக் காட்ட நினைக்கிறார். இதற்கு எதிர்மறையாக கெட்டவன் என்பவனை காட்ட வில்லனும் வலிமையற்றவன் என்பதைக்  காட்ட காமெடியனும் தேவைப்படுகிறார்கள். ஹீரோ நல்லவன்; வில்லன் கெட்டவன். இங்கு நன்மை தீமை என்பது ஒரு முரண்பட்ட அமைப்பு. கதாநாயகன் உடல் வலிமையும் அறிவுதிட்பமும் உடையவன். காமெடியன் மெலிந்த உடலும் விவரம் தெரியாமலும் இருப்பவன். இது மற்றொரு முரண் அமைப்பாகும். இவற்றை ஆராய்ச்சியாளர்கள் இருமை எதிர்வுகள் binary oppositions  என்பர். ஆக கதாநாயகனின் உடல் வலிமையையும் அறிவு திட்பத்தையும் உயர்த்திக் காட்ட காமெடியன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது.

எம்.ஜி.ஆரும் ஜானகியும் இணைந்து நடித்த மருத நாட்டு இளவரசியில் எம்.ஜி.ஆர் ஓர் ஏழை கிராமத்தான். அவருக்கு பணக்கார்களே பிடிக்காது.  அவரை வீரனாக்க அவருக்கு ஜானகி வாள் சண்டை கற்றுக்கொடுப்பார். அடிமைப்பெண் படத்திலும் வேங்கையனுக்கு சண்டைப் பயிற்சி அளித்து ஜெயலலிதா வீரனாக்குவார். உழைக்கும் கரங்கள் படத்தில் வரும் தேவதாசி குலத்தைச் சேர்ந்த பவானி எம்.ஜி.ஆரை பார்த்து ‘’ரங்கா நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி அவருக்கு உடல்வலிமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவார். வீரம் என்பது உடல்வலிமையுடன் தொடர்புடையதாகவே எம்.ஜி.ஆர் படங்களில் (பல்லாண்டு வாழ்க தவிர) காட்டப்பட்டுள்ளது.

பலமற்ற காமெடியன்

எம்.ஜி.ஆர் படத்தில் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் போன்ற காமெடி நடிகர்கள் வலிமையற்றவராகவே சித்திரிக்கப்பட்டனர். பரிசு படத்தில் நாகேஷ் எம்.ஜி.ஆரின் கை “ஆம்சை’’ அமுக்கி பார்ப்பார். “எனக்கும் உப்புமா’’ என்று தன் ஒல்லி கையை காட்டுவார். அதற்கு எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே “ஆமாம் கிண்டினால் ஒனக்கு உப்புமா’’ என்று சாப்பிடும் உணவை கூறி கேலி செய்வார். மேலும், பல படங்களில் நாகேஷை தூக்கி பொத்தென்று தரையில் போடுவார். தேங்காய் சீனிவாசன் நவரத்தினம் படத்தில் ஏதாவது தள்ளுங்க என்று எம் ஜி ஆரிடம் டிப்ஸ் கேட்பார். எம் ஜி ஆர் “நான் தள்ளினால் தாங்கமாட்ட’’ என்று பதில் கூறுவார். சும்மா தள்ளுங்க என்று தேங்காய் கூறியதும் எம்.ஜி.ஆர் தள்ளுவார் தேங்காய் பொத்தென்று தரையில் விழுவார். இவ்வாறு காமெடியன்கள் உடல்வலிமையற்றவர்களாகவே சித்திரிக்கப்படுவர்.

காமெடியனும் வில்லனும்

ஒரு முறை எம்.ஆர். ராதாவிடம் அவரை புக் பண்ணும்போது ஏன் கதாபாத்திரத்தைக் கேட்காமல் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், “என்ன கொடுக்கப் போகிறார்கள் ஒன்று வில்லன் அல்லது காமெடியன்’’ என்றாராம். எம்.ஜி.ஆர் படங்களில் அவர் இந்த ரோல்களில் நிறைய நடித்திருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் இவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்குவார் 

ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் காதருகில் வந்து ஒரு பாட்டி ‘இந்த நம்பியார் பயகிட்ட ஜாக்கிரதையா இருப்பா’ என்று எச்சரித்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆருடன் வில்லத்தனமாக மோதி நடித்த நம்பியார், ஆரம்பத்தில் அவர் படங்களில் காமெடியனாகவே நடித்தார். மந்திரிகுமாரியில் அவர் ராஜகுருவாக மொட்டையடித்து வளைந்த அடர்த்தியான புருவத்துடன் வந்து பயமுறுத்திய பிறகு அவர் முழு நேர வில்லனாகிவிட்டார். 

வில்லத்தனமான காமெடியன்

நம்பியாரைப் போல இல்லாமல் எம்.ஆர்.ராதா காமெடி செய்துகொண்டே வில்லனாக நடிப்பார். ஆங்கிலச் சொற்களை அதிகம் பயன்படுத்துவார். பகுத்தறிவையும் ஆங்கில பழக்க வழக்கங்களையும் உயர்த்தும் வகையில் இங்குள்ள சில மூட நம்பிக்கைகளை நையாண்டி செய்வார். இவருடைய வில்லத்தனமான காமெடியை மக்கள் வெகுவாக ரசித்தனர். எம்.ஆர். ராதா பெரியாரின் தொண்டர் என்பதால் அவர் நாடகங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் பல வகையிலும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர் அஞ்சாமல் தன் பகுத்தறிவு பிரசார நாடகங்களை வெற்றிகரமாக நடத்திவிடுவார். எம்.ஆர். ராதாவின் துணிச்சலைக் கண்டு எம்.ஜி.ஆர் அவரை மிகவும் மதித்தார். அவர் முன்னால் உட்காரக்கூட மாட்டார். அண்ணே என்றுதான் அவரை அழைப்பார். எம்.ஆர். ராதாவுக்கும் எம்.ஜி.ஆரை வெகுவாக பிடித்திருந்தது, மற்ற முன்னணி நடிகர்கள் அவர் நடிப்பதை மக்கள் பார்க்க விடாமல் அவர் முகம் மறையும்படி வந்து நின்றுகொள்கின்றனர் என்று எம்.ஆர். ராதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். எம்.ஜி. ஆர். படங்களில் அவருக்கு இந்தத் தொல்லை கிடையாது. சுதந்திரமாக பெரியாரிய சிந்தனைகளையும் பரப்பினார்.

சிந்தனை சிரிப்பு வழங்கிய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

எம்.ஜி.ஆர்

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, சக்கரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ. மதுரமும் நகைச்சுவை நடிப்பில் ஜொலித்தனர். கலைவாணரிடம் இருந்து எம்.ஜி.ஆர் எளிமையும் கொடைப்பண்பையும் கற்றுக்கொண்டார். அறுந்த செருப்பை உதறிவிட்டு வந்த எம்.ஜி.ஆர் கலைவாணரிடம் தனக்கு புதுச்செருப்பு வாங்கவேண்டும் என்றார். அப்போது கலைவாணர் அவரது அறுந்த செருப்புகளைக் கொண்டுவந்து கொடுத்தார். அறுந்துபோன செருப்பின் வார் தைக்கப்பட்டிருந்தது. கலைவாணர் எம்.ஜி.ஆருக்கு எளிமையான வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்தார். தன் கணவரைத் தவிர வேறு யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத டி ஏ மதுரம், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு காரணமாக தன் கணவர் சிறையில் இருந்தபோது வழக்கு செலவுக்காக தயாரிக்கப்பட்ட பைத்தியக்காரன் படத்தில் எம். ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார்.

நாயகன் நாயகியரின் தோழர்களாக காமெடியன்கள்

குலதெய்வம் ராஜகோபால் மன்னாதி மன்னன் படத்தில் நகைச்சுவை வேடத்தில் ஜி. சகுந்தலாவுடன் ஜோடியாக நடித்தார். இப்படத்தில் அச்சம் என்பது மடமையடா பாட்டில் எம்.ஜி.ஆர் கூட வரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் எம்.ஜி.ஆரும் பத்மினியும் நாட்டிய கலா மேதைகள். எம்.ஜி.ஆரின் நண்பனாக வரும் ராஜகோபாலுக்கு நடனம் ஆடத் தெரியாது. இவர் நடனம் கற்றுக்கொண்டால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சகுந்தலா நிபந்தனை விதிப்பார். இவர் கை கால்களில் கயிறு கட்டிக்கொண்டு தை தை என்று ஆட்டுவது சிரிப்பாக இருக்கும். இதுவே காமெடியனை கதாநாயகனிடம் இருந்து குறைத்துக் காட்டுவதற்கான பாத்திரப்படைப்பு முறை ஆகும்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இளைஞரான டனால் தங்கவேலு செருப்பு தைக்கும் கிழவனாக வருவார். அந்தப் படத்தில் சாரங்கபாணி எம்.என். ராஜத்துடன் சேர்ந்து மெயின் காமெடியனாக நடித்திருப்பார். தங்கவேலு, ராஜா தேசிங்கில் ராகினியுடன் ஜோடியாக நடித்திருப்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நண்பனாக நாகேஷும் ஜெயலலிதாவுக்கு தோழியாக மாதவியும் நடித்தனர். 

சந்திரபாபு

எம்.ஜி.ஆர், சந்திரபாபு

எம்.ஜி.ஆருடன் பிற்காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய சந்திரபாபு ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராக இருந்தார். அவரது நாடோடி மன்னன், குலேபகாவலி போன்ற வெற்றிப் படங்களில் இடம்பெற்றிருந்தார். சிவாஜியைவிட ஒரு படத்தில் அதிக சம்பளம் கேட்டு வாங்கினார். நாகேஷ் கால்ஷீட்டை சொதப்பியபோது அவருக்குப் பதிலாக சோ பின்பு தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் போன்ற சிரிப்பு நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். எம்.ஜி.ஆர் தன் படங்கள் வெற்றிபெற  மற்ற எவரையும் நம்பி இருக்கவில்லை அடுத்த தகுதியான கலைஞர்களைத் தெரிவு செய்தார். பின்பு தன் தவற்றை உணர்ந்து திரும்பி வந்தபோது அவர்களை மன்னித்து வாய்ப்பு தரும் மனோபாவமும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. யாரையும் அவர் தன் ஜென்ம விரோதியாக கருதவில்லை. தன் வெற்றிப் பாதையில் வரும் தடைக்கற்களை மீண்டும் வராமல் அப்புறப்படுத்துவதில் மட்டும் அவர் முனைப்பாக இருந்தார்.

சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும் விரக்தியும் அவமானமும் பொது வாழ்க்கையில் அகராதியாகப் பேசத் தூண்டியது. எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை ஒதுக்கியதும் திரையுலகமே இவரை ஒதுக்கிவிட்டது.  சந்திரபாபு சிவாஜியிடம் போய் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை.  சந்திரபாபு மிகவும் கஷ்டப்படுவதை அறிந்து பின்பு எம்.ஜி.ஆரே அடிமைப்பெண் படத்தில் வாய்ப்பளித்தார். 

நாகேஷ்

எம்.ஜி.ஆர், நாகேஷ்

நாகேஷ் முதன்முதலில் நாடகத்தில் நடித்தபோது ஐயோ வயிற்று வலி என்ற ஒரே வசனம் மட்டும் பேசி நடித்தார். அந்த நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.ஜி.ஆர் ஒரே வசனத்தை விதவிதமாக பேசி நடித்த நாகேஷை தன் பாராட்டுரையில் குறிப்பிட்டார். நேரில் அழைத்து பாராட்டினார். நாகேஷ் பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். குறிப்பாக தேவர் படங்களில் நாகேஷுக்கு ஒரு பாட்டும் வைக்கப்பட்டது.  நாகேஷ், மனோரமா ஜோடி மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதற்கு முன்பு என்.எஸ்.கே – டி ஏ மதுரம், தங்கவேலு - சரோஜா , சி டி ராஜகாந்தம் என்று கணவன் மனைவியர் காமெடி நடிப்பில் கலக்கி வந்தனர்.  

நாகேஷின் ஒல்லி உடல்வாகு காமெடி நடிப்புக்கு ஏற்றதாக அமைந்தது. சில வருடங்கள் இவரை தன் படங்களில் இருந்து விலக்கி வைத்த எம் ஜி ஆர், மீண்டும் தன் படங்களில் வாய்ப்பளித்தார்.  உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்ற 25 பேர் அடங்கிய குழுவில் நாகேஷும் இடம்பெற்றிருந்தார். அக்குழு ஹாங்காங் வந்தபோது நாகேஷின் பிறந்தநாள் வந்தது. அன்று எம்.ஜி.ஆர் பெரிய விருந்து ஏற்பாடு செய்து ஒன்பது வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்றை நாகேஷுக்கு பரிசளித்தார். மீனவ நண்பன், உரிமைக்குரல் போன்ற எம்.ஜி.ஆரின் பிற்கால படங்களிலும்  நாகேஷ் இடம்பெற்றார்.

தேங்காய் சீனிவாசன் 

எம்.ஜி.ஆர், தேங்காய் சீனிவாசன்

கும்பகோணம் தேர்தல் கூட்டத்தில் அறிமுகமான தேங்காய் சீனிவாசன், எம் ஜி ஆரிடம் மிகுந்த அன்பு உடையவர். ரிக்‌ஷாக்காரன் படத்தில் இயக்குநரிடம் தனக்கு இரு பாடல்காட்சி வைக்கும்படி சீனிவாசன்  கூறினார். அதை அவர் அப்படியே எம்.ஜி.ஆரிடம் கூற, எம் ஜி ஆர் சிரித்த படியே சாங் வேணுமா வச்சுடலாம் என்றார். எம்.ஜி.ஆர் ஏதோ கேலியாக கூறுவதாக சீனிவாசன்  நினைத்தார். ஆனால் அந்தப் படத்தில் ‘’பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி’’ என்ற பாடலில் தன்னோடு பாட்டு முழுவதும் சேர்ந்து ஆடும் வாய்ப்பைத் தந்தார்.  எம்.ஜி. ஆர் முதலமைச்சரான பிறகு சீனிவாசன் சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக எம்.ஜி.ஆரிடம் கூறினார். எம்.ஜி.ஆர் இப்போது தயாரிப்பு லாபமாக இல்லை வேண்டாம் என்று அறிவுறுத்தினார். சீனிவாசன் அதைக் காதில் வாங்காமல் சிவாஜியை வைத்து ’கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார். இதை சீனிவாசன் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் ‘’உனக்கு பட்டால் தான் புத்தி வரும், போ’’ என்று சொல்லிவிட்டார். தேங்காய் சீனிவாசன் போனதும் அவரை நினைத்து எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார். உடனே தன் பணியாள் ஒருவரிடம் 25 லட்ச ரூபாயைக் கொடுத்து தேங்காய் சீனிவாசனிடம் கொடுக்கும்படி அனுப்பினார். 

ஐசரி வேலன் 

ஐசரி வேலன்

எம்.ஜி.ஆர் படங்களில் ஆரம்பம் முதல் அவர் வரும் காட்சிகளில் மட்டும் நடித்துவந்த பழம்பெரும் நடிகரும் அவரது மெய்க்காவலரில் ஒருவருமான திருப்பதிசாமியின் மருமகன் ஐசரி வேலன் ஆவார். இவர் மகன் ஐசரி கணேஷ் தன் தந்தை வேலனின் பெயரால் வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளார். எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு ரிவால்வரை மஞ்சள் பையில் வைத்து கையில் சுற்றி தொங்கவிட்டபடி திருப்பதிசாமி அவருடன் அத்தளத்தில் இருப்பார். எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க வருபவர்களின் பெயர்ப்பட்டியல் திருப்பதிசாமியிடமே இருந்தது. ரகசிய போலீசு 115 படத்தில் அம்முக்குட்டி புஷ்பமாலாவின் சிங்கப்பூர் மச்சானாகவும் படகோட்டியில் முதல் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு அப்பாவாகவும் திருப்பதிசாமி நடித்திருப்பார். ஐசரி வேலன் நேற்று இன்று நாளை, இதயக்கனி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சோ

எம்.ஜி.ஆர், சோ

சோ சட்டத்துறையிலும் நாடகத் துறையிலும் வல்லவர். அரசியல் விமர்சகர். அவர் பார்மகளே பார் படத்தில் காமெடியனாக அறிமுகம் ஆனார். எம்.ஜி.ஆருடன் எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, ஒளிவிளக்கு, அடிமைப்பெண், என் அண்ணன் போன்ற வெற்றிப் படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆரை நேரிலும் தன் துக்ளக் பத்திரிகையிலும் அதிகமாக விமர்சித்துள்ளார். அதே சமயம் எம்.ஜி.ஆரின் கொடைப்பண்பை அதிகமாகப் பாராட்டி போற்றியவரும் இவரே. இவரது முட்டை விழியும் ஒல்லி உடம்பும்  பார்ப்பவருக்கு சிரிப்பை வரவழைத்தன. 

நகைச்சுவையும் எம் ஜி ஆரும்

சபாஷ் மாப்பிள்ளை என்ற படம் நடிகை மாலினியின் சொந்தத் தயாரிப்பு. இப்படத்தில் எம்.ஜி.ஆர் காமெடி கதாநாயகனாகவே நடித்தார். இதன் படப்பிடிப்பு பம்பாயில் நடந்தது. அதுபோல அறிஞர் அண்ணா எழுதிய நல்லவன் வாழ்வான் கதையில்  கதாநாயகன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான். அந்தப் படத்தில் நடித்த எம்.ஜி.ஆரும் படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பார். அதன் க்ளைமேக்சில் எம்.ஆர். ராதாவை ஒரு சண்டைக் காட்சியில் தன்னுடன் நடிக்கவைத்தார். தண்ணீரில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் நடித்ததனால் எம்.ஆர். ராதாவுக்கு சளி, இருமல் தொந்தரவு வந்தது. எம்.ஜி.ஆர் இதைக் கேட்டதும் மிகவும் கவலைப்பட்டார். எம்.ஆர். ராதா சுகமாகும் வரை தினமும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குப் போய் அவருடன் உட்கார்ந்திருப்பார். அவர்களின் நட்புகுறித்து விளக்கும்போது ராதாரவி இதனை குறிப்பிட்டார்.

நாடோடியில் எம் ஜி ஆரின் மைமிங்

ஒரு நடிகனுக்கு சவாலாக இருப்பது காமெடி என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். தான் நடித்த நாடோடி படத்தில் சார்லி சாப்ளின் போல மைமிங் செய்தார். சரோஜாதேவியும் எம்.ஜி.ஆரும் ஒரு மேசை முன் உட்கார்ந்து மேலை நாட்டு உணவு வகைகளை உண்பது போல உடல்மொழியால் மட்டுமே நடித்தனர்.

எம்.ஜி.ஆர் சங்கே முழங்கு படத்தில் தன் தங்கைக்கு பெண் வீட்டாராகவும் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து திருமணப்பேச்சு நடத்தும் காட்சியில் அவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறிப் பேசி நடித்து நகைச்சுவையை வழங்குவார். வாய்க்குள் வெற்றிலையை அதக்கி வைத்திருப்பதுபோல அவருடைய பேச்சும் அங்கவஸ்திரத்தை சேலை போல போர்த்திக்கொண்டு நடிக்கும் அவரது உடல்மொழியும் ஆண் பெண் என மாறி வரும் முக பாவனைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வெகு பொருத்தமாக அமைந்திருக்கும். அவருடைய நகைச்சுவை நடிப்புத் திறனுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.  

மாறு வேடங்களில் நகைச்சுவை

எம்.ஜி.ஆர் மாறு வேடங்களில் வரும் காட்சிகளைத் தன் இயல்பான கதாநாயகன் நடிப்புக்கு அப்பாற்பட்ட நடிப்புத் திறனைக் காட்ட பயன்படுத்துவார். மலைக்கள்ளன் மற்றும் நீரும் நெருப்பும் படங்களில் அவர் ஒரு சீனாக்காரனாக வரும் காட்சிகளில் அவர் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்தபடி நடந்து வருவதும் அவரது சீனமொழி பேச்சும் தலையாட்டுவதும் உடல் அசைப்பதும் என அனைத்து பாவனைகளும் சிரிப்பை வரவழைக்கும். குமரிக்கோட்டம் படத்தில் நூறு ரூபாய்க்காக அவர் அசோகனை சிரிக்க வைக்க முயலும் காட்சியில் பஃபூனை போல நடித்திருப்பார். இவ்வாறு மாறு வேடங்களில் பல காட்சிகளில் எம்.ஜி.ஆர். தன் காமெடி நடிப்புத் திறனை ஓரளவு வெளிப்படுத்தி மனநிறைவு பெற்றார். 

யாருக்கு மகிழ்ச்சி?

 

எம்.ஜி.ஆர் தன் முழு திறமையையும் காட்டும் வகையில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தால் அதிகபட்சம் அவர் ஒரு சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், மக்கள் திலகமாகியிருக்க முடியாது. தான் ஆசைப்பட்டபடி நடித்து மகிழ்ச்சியடைவதை விட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை தம் குறிக்கோளாக கொண்டிருந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடிய கதாபாத்திரத்தை மட்டும் தேர்வுசெய்து நடித்தார்.  திரையுலகில் மக்கள் திலகமாக இருந்து  மக்கள் தலைவராக உயர்ந்தார். எனவே, இன்றைக்கும் மக்கள் அவரை மறக்காமல் தம் நினைவு செல்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/107803-comedians-who-acted-in-mgr-movies-mgr-series-episode-20.html

Link to comment
Share on other sites

பெண் வேடம் முதல் சிங் வேடம் வரை... எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்ஸ்! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-21

 
 

எம்.ஜி.ஆர்

 

நடிப்புத் திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர்!

 

எம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது நடிப்பு ஆர்வத்தை நிறைவு செய்யவில்லை. அதனால் அவர் வேறு பல கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பி தன் படங்களில் அவற்றை மாறு வேடக் காட்சிகளாக அமைத்தார். மாறு வேடத்தில் நடிக்கும்போது அதற்கேற்ற உடை, குரல், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தார். காதல் சண்டை எனக் காட்சிக்குக் காட்சி துள்ளிச் செல்லும் ஹீரோவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் கிழவனாகவும் பெண்ணாகவும் பல்வேறு தொழில் செய்பவராகவும் நடிப்பதையும் ஆடிப் பாடியதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

பெண் வேடத்தில் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் புதுமைப்பித்தனில் நடன மங்கையாகவும் காதல் வாகனம் படத்தில் நவீன மங்கையாகவும் சில காட்சிகளில் வருவார். கவுன் போட்ட இளம்பெண்ணாக எம்.ஜி.ஆரின் வேடப் பொருத்தமும் பெண்ணைப் போல அவர் கொஞ்சிப் பேசுவதும் நளினமாக் நடப்பதும் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தன. சங்கே முழங்கு படத்தில் பெண்ணாக வேடம் போடாவிட்டாலும் திருமண சம்பந்தம் பேசும் பெண்ணைப் போல நடித்துக் காட்டியிருப்பார். அதைப் போல மாட்டுக்கார வேலனில், வேலன் எம்.ஜி.ஆர் தன்னை ரகு என நினைத்து காதலிக்கும் ஜெயலலிதாவைப் பற்றி தெரிவிக்கும்போது,

''ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா''

என்று பாடி ஒரு பெண்ணைப் போல ரகு எம்.ஜி.ஆரிடம் நடித்துக் காட்டுவார். அந்தப் பாட்டில் அவர் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும்.

சாமியாராக எம்.ஜி.ஆர்

நல்லவன் வாழ்வான், ஆனந்த ஜோதி, இதய வீணை போன்ற படங்களில் சாமியாரைப் போல வருவார். நல்லவன் வாழ்வான் படத்தில் கொலை பழி சுமந்து ஒளிந்து வாழும் நிலையில் உண்மைக் கொலைகாரனை அறிய அதே ஊரில் எம்.ஜி.ஆர் சாமியாராக வந்து தங்கியிருப்பார். அப்போது ‘‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்’’ என்ற பாட்டுப் பாடுவார்.

இதய வீணையில் திருட்டு பழி சுமந்த அண்ணனான எம்.ஜி.ஆர் தன் தங்கை லட்சுமியின் கல்யாணத்துக்கு சாமியார் வேடத்தில் வந்து ‘‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி – திருமணம் கொண்டாள் இனிதாக’’ என்று பாடி வாழ்த்துவார். இந்தப் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜி சகுந்தலாவிடம் என் கடைசிக்காலம் இப்படிதான் (ஆன்மிக வழியில்) இருக்கப் போகிறது என்று தன் சாமியார் கோலத்தைக் காட்டினாராம். அதன் பிறகு அவர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் ஆங்காங்கே தாமரை கொடியை ஏற்றி அவர்களாகவே புது கட்சி தொடங்கினர். பின்பு எம்.ஜி.ஆர் அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் தலைவராகிவிட்டார். அவரை திமுகவிலிருந்து வெளியேற்றாமல் விட்டிருந்தால் ஒரு வேளை அவர் ரஜினியைப் போல ஓர் ஆன்மிகவாதியாகி இருப்பார். திமுக தன் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது.

முஸ்லிம் வேடத்தில் எம்.ஜி.ஆர்

மலைக்கள்ளன், மகாதேவி, சங்கே முழங்கு, போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் துப்பு துலக்குவதற்காக பட்டாணி முஸ்லிம் வேடமிட்டு வந்தார். மலைக்கள்ளனில் அப்துல் ரஹீம் என்னும் வடநாட்டு முஸ்லிம் வேடம் ஏற்றிருப்பார். தமிழை அன்றைய வடநாட்டுக்காரர் போல பேசுவார். இன்ஸ்பெக்டர் நடத்தும் விசாரணையில் அவரது திருட்டுப் பார்வையும் உடல்மொழியும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுத் தந்தது. 

மகாதேவியில் லப்பை முஸ்லிம் போல மாறு வேடமிட்டு வந்து மக்களுக்கு இளவரசன் உயிரோடு இருக்கும் உண்மையை தாயத்து மூலமாக வெளிப்படுத்துவார். தாயத்தை விற்பதற்காக ‘‘தாயத்து தாயத்து – சில சண்டாளர் வேலைகளை சனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து’’ எனப் பாடுவார். அப்போது அவர் தலைப்பாகையில் காதோரத்தில் சொருகிய பத்தி புகைந்துகொண்டிருக்கும். கண் இழந்தவர் போல வருவதால் கண்களைச் சுற்றி கறுப்பாகத் தோன்றும். உடையும் வெகு பொருத்தமாக இருக்கும். கழுத்தில் தாயத்து அணிந்திருப்பார். கையில் டேப் வைத்து அடித்துக்கொண்டு வருவார். கைலியை உயர்த்திக் கட்டியிருப்பார். தோளில் ஒரு துணி மூட்டை தொங்கும்.

சங்கே முழங்கு படத்தில் வீண் கொலைப் பழியேற்று ஊரை விட்டு முஸ்லிம் பாய் வேஷத்தில் ரயிலேறிவிடுவார். அப்போது தன் காதலி லக்ஷ்மியை அதே வேஷத்தில் சந்தித்து அவருடன் பேசுகின்ற காட்சிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் உருக்கமானவை. வசதியான முஸ்லிமாக வருவதால் தலையில் குஞ்சம் தொங்கும் உயரமான குல்லா, கையில் ஒரு ப்ரீஃப் கேஸ் மற்றும் சிறு கைத்தடி வைத்திருப்பார், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மேக்கப், உடை, உடல் மொழி ஆகியவற்றில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார்.

பஞ்சாப் சிங்காக எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

சங்கே முழங்கு படத்தில் எம்.ஜி.ஆர் கொலைப்பழியிலிருந்து தப்பிக்கவும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் பஞ்சாப் சென்று கிருபால் சிங் எனத் தன் பெயரையும் உருவத்தையும் மாற்றிக்கொள்வார். அங்கேயே ஐ.பி.எஸ் முடித்து தமிழகம் வந்து காவல்துறை அதிகாரியாகி உண்மையான கொலையாளியைக் கண்டு பிடிப்பார்... (சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா கதையும் இது போன்றதுதான்) எம்.ஜி.ஆருக்கு சிங் வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிங்குகளைப் போல அவரும் தலையில் டர்பன், முகத்தில் சிறிய கருந்தாடி என வருவார். இவ்வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். 

குடியிருந்த கோயிலில் ஆனந்த் எம்.ஜி.ஆர், திருடன் பாபுவாக கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தபோது ஒரு முறை மட்டும் சிங் வேடம் போடுவார். இந்த வேஷத்துடன்தான் எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாட்டுக்கு பங்க்ரா நடனம் ஆடியிருப்பார். அதிலும் வேஷப் பொருத்தும் மிகச் சரியாக இருக்கும்.

பூட்டுக்காரராக எம்.ஜி.ஆர்

தெய்வத்தாய் படத்தில் எம்.ஜி.ஆர் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலைத் தேடும் காவல்துறை அதிகாரி மாறனாக நடித்தார். இதில் பூட்டு விற்பவரை போல மாறு வேடம் போட்டு கள்ளநோட்டு மாற்றும் கும்பலைக் கண்டுபிடிக்க ஊரைச் சுற்றி வருவார். அவரது பம்பை க்ராப், முறுக்கு மீசை, ஏற்றிக்கட்டிய கைலி, கையில்லாத ஓவர் கோட், தோளில் தொங்கும் இரும்புப்பெட்டி, ஒரு கையில் பெரிய இரும்பு வலையத்தில் கோக்கப்பட்ட பல தினுசு சாவிகள் இத்துடன் காலை அகட்டி வைத்து நடக்கும் நடை எனப் பொருத்தமாக மாறு வேடம் போட்டிருப்பார். பூட்டுச் சாவி ரிப்பேர் என்று தொடங்கும் ஒரு பாட்டைப் பாடுவார். அதில் பூட்டும் சாவியும் என்ற சொற்கள் சமூக சிந்தனையோடு இடம்பெற்றன. காங்கிரஸ்காரர்களின் வெற்றுப்பேச்சுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றும் பாடுவார்.

வளையல்காரராக எம்.ஜி.ஆர்

படகோட்டி நம்பியாரால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் சரோஜா தேவியைச் சந்திக்க எம்.ஜி.ஆர் வளையல்காரராக வருவார். அந்த வீட்டில் நம்பியார் – சரோஜாதேவி திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் அப்போது எம்.ஜி.ஆர் கறுப்பு மேக்கப்பில் தலையில் வட்டக் குடுமி, பெரிய வயிறு,  மேலே கனத்த கோட், முகத்தில் ஒரு கறுப்பு மரு, பெரிய உருண்ட மீசை, தோளில் வளையல் பெட்டி கையில் வளையல் சரம் எனத் தன் குண்டு உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சோபாவில் பொத் என விழுவார். அந்தத் தோற்றத்தில் அவரைப் படம் பார்க்கும் புதியவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது. 

‘‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - கொண்டாடி வரும் வளையல் – அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே  - சிங்காரத் தங்க வளையல்’’ என்ற பாட்டும் பாடி வளையல்களை அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு விற்பார். இந்தக் காட்சியில் வயதான ஒரு தம்பதியர் வரும்போது ‘மாமனாரை மாமியாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சு தந்த வளையல்’ மற்றும் ‘இளங்காளையர்கள் கெஞ்சிவர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்’ என்ற வரிகள்  ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன.

மின்சாரத்துறை ஊழியர்

காதல் வாகனம் படத்தில் மின் பயன்பாட்டைப் பதிவுசெய்யும் மின்சாரத் துறை ஊழியராக வயதான தோற்றத்தில் வருவார். தலையில் தொப்பி, கண்ணில் ஒரு காந்தி கண்ணாடி, கையில் ஒரு பதிவேடு, குடு குடு நடையுடன் அவரது நடிப்பும் தோற்றமும் பாராட்டும்படியாக இருக்கும். துப்பறியும் நோக்கில் எம்.ஜி.ஆர் மாறுவேடத்தில் வரும் இக்காட்சி நகைச்சுவைக் காட்சியாக அமைந்திருக்கும்.

வெஸ்டெர்ன் டான்ஸ் மாஸ்டராக எம்.ஜி.ஆர்

'என் கடமை' படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரி. அவருக்கு எம்.ஆர்.ராதாமீது சந்தேகம் இருப்பதால் அவர் வீட்டுக்குள் போய் வந்து துப்பு கண்டுபிடிக்க வழி தேடுவார். அப்போது சரோஜாதேவிக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் கற்றுத்தர ஒரு மாஸ்டர் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குப் போய் பணியில் சேர்ந்துவிடுவார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சரோஜாதேவியிடம் உனக்காகத்தான் இந்த வேடத்தில் வந்தேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் குற்றவாளி எம்.ஆர்.ராதா அல்ல அவருக்கு வைத்தியம் பார்க்க வரும் டாக்டர் என்பதை கண்டுபிடிப்பார். டாக்டர் வேடத்தில் பாலாஜி நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான். யாரது யாரது தங்கமா என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுவார்கள். படிக்கட்டில் சுற்றி வந்து ஸ்டெப் போட்டு இருவரும் ஆடுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர் கறுப்புத் தாடி கறுப்புக் கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அடிக்கடி தாடியைத் தடவிக்கொள்வார். ஹீல்ஸ் ஷூ போட்டு தன்னை நல்ல உயரமாகக் காட்டியிருப்பார்.

கதா காலட்சேபம் செய்பவராக எம்.ஜி.ஆர்

எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் போலீஸுக்கு பயந்து ஒரு காலட்சேபம் நடத்தும் இடத்துக்கு வந்து அங்கு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவரே காலட்சேபம் செய்வார். இந்து சமயத்தின் பார்ப்பனியக் கருத்துகளுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது காலட்சேபன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். 1967-ல் வெளிவந்த படம் என்பதால் அப்போது அமெரிக்கா விண்வெளிவீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்தில் கால் வைத்த நிகழ்ச்சி பிரபலமாகியிருந்தது. எனவே அதையே தம் காலட்சேபப் பாடுபொருளாக்கி மூட நம்பிக்கைகளைக் கேலி செய்து ஒரு கலகலப்பான நிகழ்ச்சியை நடத்துவார். முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இவரது நடிப்பும் முக பாவனைகளும் காண்போர் மனதைக் கவரும். மேலும் இவரது வேடப் பொருத்தம் வியக்க வைப்பதாக அமையும். மொட்டைத் தலை அதில் பட்டை விபூதி, சிவந்த நிறம், மேல் அங்கவஸ்திரம், கைகளில் தப்பளா கட்டை, கழுத்தில் மாலை என வெகு நேர்த்தியாக அவரது மேக்கப் அமையும். அவர் தலையைத் திருப்பி இரு பக்கம் இருப்பவரையும் பார்த்துப் பேசுவதும் கைகளை வீசி வீசி பாடுவதும் அவரது முக பாவமும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களும் அந்நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் அவரது நடிப்புத் திறனுக்கு இக்காட்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும். 

எம்.ஜி.ஆர்

கலை மக்களுக்காக 

 

எம்.ஜி.ஆர் தனது  நடிப்பார்வத்துக்கு தீனி போடவே  பல படங்களிலும் மாறு வேடக் காட்சிகளை அமைத்து நடித்துள்ளார். இக்காட்சிகளின் வெற்றி இவர் இதே கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடித்திருந்தாலும் இப்படித்தான் வெகு சிறப்பாக நடித்திருப்பார் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஒரு படம் முழுக்க அவர் ஒரு சாமான்யனை போல நடிப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே எம்.ஜி.ஆர்  தன்னுள் இருந்த கலைஞனை ஒதுக்கிவிட்டு கலையார்வத்தை மட்டுப்படுத்திவிட்டு மக்களின் மகிழ்ச்சி ஆதரவு என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணித்ததால் அவர் வெற்றி திருமகன் ஆனார். இங்கு ஒரு கலைஞனின் தனிமனித ஆர்வத்தை விட அவன் சார்ந்திருக்கும் சமூக அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு கலையும் கலைஞன் என்ற ஒருவனுக்கானது அல்ல அது கலைஞனை வாழவைக்கும் சமூகத்துக்கானது என்பதை எம்.ஜி.ஆரின் கலை வாழ்க்கை புரிய வைக்கிறது. எம்.ஜி.ஆர் கலை கலைக்காக என்ற கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; கலை மக்களுக்காக என்ற சித்தாந்தத்தை அவர் நம்பினார். மக்களை மகிழ்விக்கின்ற அவர்களுக்கு படிப்பினை தருகின்ற படங்களை உருவாக்கினார். அதன் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் ஆனார். பின்பு மக்கள் முதல்வர் ஆனார். அவர் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/108080-from-woman-getup-to-singh-character-mgrs-ultimate-getups-mgr-series-episode-21.html

Link to comment
Share on other sites

மாணவியாக... நடிகையாக... அரசியல்வாதியாக எம்.ஜி.ஆருடன் பயணித்த லதா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-22

 
 

எம்.ஜி.ஆர்

 

அ.தி.மு.க வளர்ச்சிக்கு உதவிய லதா

 

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான நாயகியாக சரோஜாதேவி, ஜெயலலிதாவுக்குப் பின்பு நடித்தவர் லதா. எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற லதாவை எம்.ஜி ஆர் தன் கட்சி வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நாளன்று அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன்பே 1970 ல் லதாவுடன் அவர் உலகம் சுற்றும் வாலிபனுக்கான வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துவிட்டார். இந்தப் படத்தில் அவர் ஜெயலலிதாவை நடிக்க வைக்க எவ்வளவோ முயன்றும் ஜெயலலிதா விதித்த நிபந்தனைகள் விதிரூபத்தில் அவர்களைப் பிரித்து வைப்பதிலேயே குறியாய் இருந்துவிட்டன. 1970 ல் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் படப்பிடிப்புக்காகப் புறப்பட்டுச் சென்ற எம்.ஜி.ஆர் தன் குழுவில் தன்னுடன் தன் மனைவி ஜானகி அம்மையார் சினிமா நடிகைகள் லதா, மஞ்சுளா மற்றும் சந்திரகலா ஆகியோருடன் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவையும் அழைத்துச் சென்றார்.  இவர்களில் ரிக்‌ஷாக்காரன் படம் வெளிவந்த பின்பு மஞ்சுளா தன்னுடைய ஐந்து வருட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். ஆனால் லதா அவ்வாறு வெளியேறவில்லை.

யார் இந்த லதா?

எம்.ஜி.ஆர் - லதா

லதா பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு விழாவில் நாட்டியம் ஆடினார். அந்தப் புகைப்படங்களை ஆர்.எஸ் மனோகர் எம்.ஜி.ஆரிடம் கொண்டுவந்து காட்டினார். அப்போது எம்.ஜி.ஆர் புதுப்படம் ஒன்றிற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தப்பெண் நடிக்குமா என்று விசாரித்துச் சொல்லுங்கள் என்றார். ஆர்.எஸ்.மனோகர் லதாவின் வீட்டுக்குச் சென்றார். அவரது தாயார் லீலா ராணி அங்கிருந்தார். லீலா ராணியின் அக்காள் கமலா இந்தி தெலுங்குப் படங்களில் நடித்தவர். மனோகர் லதா அம்மாவிடம் விரிவாகப் பேசினார். ஆனாலும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. லதாவின் தந்தை ராமனாதபுரத்து ராஜா ராஜேஸ்வர சண்முக சேதுபதி ஆவார். அவர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். எனவே, லதாவின் அம்மா தன் மகளை நடிக்க அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மனோகர் அருகில் இருந்த லதாவைக் கவனித்தார். லதாவுக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை புரிந்துகொண்டார். உடனே ‘’சரி அம்மா, நீங்கள் பாப்பாவுடன் வந்து ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் பார்த்துச் சொல்லிவிடுங்கள்’’ என்றார். 

எம்.ஜி.ஆரை சந்தித்த லதா

எம்.ஜி.ஆர் - லதா

மறுநாள் எம்.ஜி.ஆரின் அலுவலகத்தில் (இப்போதைய எம்.ஜி.ஆர் நினைவில்லம்) லதா தன் அம்மாவுடன் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தார். எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவிடம் ‘உங்க குடும்பத்தைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். சினிமாவில் உங்கள் மகள் நடிக்கிறதால உங்களுக்கு எந்தப் பாதிப்போ பிரச்னையோ வராது. உங்க பொண்ணுக்கு ஆர்வம் இருந்தா நான் அவளை பெரிய ஸ்டார் ஆக்குறேன்’’ என்றார். அவரிடமும் லதாவின் அம்மா ‘’என் பொண்ணு படிக்கணும்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘’இப்ப நீங்கள் ஒத்துக்கங்க. நாங்க உங்களுக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ அதைக் குடுப்போம் எந்த கௌரவ குறைவும் உங்களுக்கு வராது’’ என்றார்.  உடனே லதா மிகவும் ஆர்வமாக ‘’நான் நடிக்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆர் தாம் சொன்னபடி கடைசி வரை தன் சொல்லைக் காப்பாற்றினார். எனவே இன்றும் லதா எம்.ஜி.ஆரை தன் வாழ்வில் மனித ரூபத்தில் வந்த தெய்வம் என்று போற்றிப் புகழ்கிறார். மேலும், இக்கட்டுரைக்காக நான் அவரிடம் பேசியபோது அவரை தன் mentor  என்று மகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டார்.

அந்தப் பதினைந்து வயதில் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எது நல்லது எது கெட்டது என்று சொல்லிக்கொடுத்து தனக்குப் பயிற்சியளித்ததையும்  நன்றியோடு லதா தெரிவித்தார். எம்.ஜி.ஆர் 1970ல் வெளிநாட்டு படப்பிடிப்புக்குப் போகும்போது லதாவை அவர் அம்மா இல்லாமல் தனியாகத்தான் அழைத்துப்போனார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் லதா மஞ்சுளா மற்றும் சந்திரகலா ஆகியோரின் பெற்றோரிடம்தான் இந்த மூவரையும் தன்சொந்தக் குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றார். எல்லா நாடுகளிலும் இந்த மூவரையும் ஒரே அறையில் தங்க வைத்து அவர்களுக்கு வீட்டு ஏக்கம் வராமலும் அவர்கள் தம்மோடு நட்போடு பழகும்படியும் எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டார்.

ஐந்து வருட ஒப்பந்தம் 

எம்.ஜி.ஆர் - லதா

எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு லதாவும் அவர் அம்மாவும் வீடு திரும்பிய பின்பு எம்.ஜி.ஆர் லதாவை ஐந்து வருடம் ஒப்பந்தம் செய்தார். எதற்கு இந்த ஒப்பந்தம் என்று கேட்டபோது எம்.ஜி.ஆர் ‘’ நான் பல நடிகைகளுக்கு நடிப்பும் நடனமும் சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடுகிறேன். அவர்கள் பிரபலமானவுடன் அவர்கள் கால்ஷீட்டுக்காக நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பிரச்னை வராமலிருக்கவே இந்த ஒப்பந்தம்’’ என்றார். பின்பு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு லதாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார். 

சினிமாவுக்காக லதாவுக்குப் பயிற்சியளித்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடிக்க லதா ஒப்பந்தம் ஆனதும் அவரை ரிக்‌ஷாக்காரன் படப்பிடிப்புக்கு வரவழைத்து படப்பிடிப்பு எப்படி நடக்கிறதென்று பார்க்க வைத்தார். சினிமாவுக்கேற்றபடி நடிக்கவும் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிபாவத்துடன் பேசவும் சினிமா டான்ஸ் ஆடவும் தினமும் லதாவுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே பரத நாட்டியம் படித்திருந்தவர் என்பதால் அவருக்கு முக பாவம் காட்டுவதிலும் ஸ்டைலாக ஆடுவதிலும் சிரமம் ஏதுமில்லை. வெகு சீக்கிரம் அனைத்துப் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றார்.

பொம்பள சிரிச்சா போச்சு

எம்.ஜி.ஆர் - லதா
 

ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் லதாவை மிகவும் மதித்துப் போற்றிய எம்.ஜி.ஆர் அவரைப் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். ஒரு முறை செட்டில் நாகேஷ் ஏதோ ஜோக் சொல்ல அங்கு அவர் அருகே உட்கார்ந்திருந்த லதா சத்தம் போட்டுச் சிரித்தார். இதை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர் லதாவை அழைத்து ‘’பெண்கள் எங்கிருந்தாலும் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது; ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கக் கூடாது; அடக்கமாக இருந்தால்தான் அழகு. உன் குடும்பத்து மரியாதையை நீ அப்படிக் காப்பாற்ற வேண்டும்’ என்றார். அவர் அன்று சொன்னதை தன் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்ட லதா அதன் பிறகு யாரும் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சத்தம் போட்டுச் சிரிப்பதோ பேசுவதோ கிடையாது. 

நடிப்பு என்றாலும் இப்படியா?

எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு லதா மற்ற நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் அவர் குடித்துவிட்டு முன்னாள் காதலரோடு பாடுவது போல ஒரு காட்சி. அதற்கு ரஜினிகாந்தின் மனைவி லதா பின்னணிக்குரல் கொடுத்திருந்தார். பாட்டு சூப்பர் ஹிட். நானா நானா யாரோ தானா மெள்ள மெள்ள மாறினேனா...  என்ற பாடல். எம்.ஜி.ஆரிடம் இருந்த ஒரு நாள் லதாவுக்கு அழைப்பு வந்தது. ‘’என்னதான் நடிப்பு என்றாலும் இப்படியா ஒரு பெண் நடிப்பது. இனி இந்த மாதிரி ரோல் எல்லாம் செய்யாதே” என்று எம்.ஜி.ஆர் லதாவைக் கண்டித்தார். லதாவுக்கும் தான் செய்தது தவறு என்று பட்டது சரியென்று ஒப்புக்கொண்டார். இதை பின்பு அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் லதா மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். லதாவின் பெயர் கெட்டுவிடக்கூடாது அவரது குடும்பப் பெருமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் அக்கரை கொண்டிருந்தார். 

12 படங்களில் எம்.ஜி.ஆரும் லதாவும் 

எம்.ஜி.ஆர் - லதா
 

ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததால் படங்களில் திமுக கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான வசனங்களைப் பேசி பாட்டுகளைப் பாடி நடித்தார். ஆனால், லதா மட்டுமே அதிமுக வளர்ச்சிக்குத் தேவையான காட்சி நடனம் வசனம் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். எம்.ஜி.ஆரும் லதாவும் ஜோடியாக உலகம் சுற்றும் வாலிபன் (11-05-1973); நேற்று இன்று நாளை (12-07-74); உரிமைக்குரல் (7-11-74); சிரித்து வாழ வேண்டும் (31-11-74); நினைத்ததை முடிப்பவன் (9-5-75); நாளை நமதே (4-7-75); பல்லாண்டு வாழ்க (31-10-75); நீதிக்கு தலை வணங்கு (19-3-76); உழைக்கும் கரங்கள் (23-5-76); நவரத்தினம் (5-3-77); மீனவ நண்பன் (15-8-77); மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (14-1-78) ஆகிய 12 படங்களில் நடித்திருந்தனர். பல படங்கள் தயாரிப்பில் இருந்தன. அவற்றில் அண்ணா நீ என் தெய்வம் படத்திற்கு எடுத்திருந்த இரண்டு பாடல்கள் பாக்யராஜ் நடித்து வெளிவந்த அவசரப் போலீஸ் 100 படத்தில் இடம்பெற்றன. 

அதிமுக ஆதரவு காட்சிகளில் லதா 

எம்.ஜி.ஆர் புதுக்கட்சியான அதிமுகவை தொடங்கிய பின்பு தன் படங்களில் தன் ரசிகைகள் சார்பாக லதா திமுகவினருக்குப் பதிலடி கொடுக்கும்படியான காட்சிகளை அமைத்தார். உரிமைக்குரல் படத்தில் வரும்

 ‘’ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா - ஒரு 
ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் 
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா?’’ 

என்ற பாடல் பெண்களுக்கு ஆண்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலை கொடுத்தது. வசனங்களிலும் லதா உழைக்கும் கரங்கள்; மீனவ நண்பன்; நவரத்தினம்; மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் வில்லன் தரப்பினரை எதிர்த்துப் பேசும் வசனங்கள் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவினரை எதிர்த்துப் பேசும் வசனங்களாகவே அமைந்தன. 

எம்.ஜி.ஆர் - லதா

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் கவிஞராக எம்.ஜி.ஆரும் அவரது மாணவியாக லதாவும் வருவார்கள். அப்போது பி.எஸ்.வீரப்பா ‘’மாணவியா தாலி கட்டாத மனைவியா’’ என்று கேட்கும்போது அதற்கு சரியான பதிலடி கொடுப்பார் 
பல்லாண்டு வாழ்க படத்தில் கெட்டவர்கள் ஐவரையும் திருத்தும் பணியில் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு லதா உறுதுணையாக இருப்பார். அவர்கள் தாமாக போய் குடிக்கவில்லை எதிராளிகள் தான் ஏமாற்றிக் குடிக்கவைத்துவிட்டனர் என்பதை அந்த ஐவரின் சார்பாக எம்.ஜி.ஆரிடம் எடுத்துச்சொல்லி அவர்கள் இனி குடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை எம்.ஜி.ஆருக்கு ஏற்படுத்துவார். வில்லன்களை பற்றி லதா பேசும் வசனங்கள் திமுகவினரை குறித்தே எழுதப்பட்டிருக்கும்.

அதிமுக ஆரம்பித்த பின்பு வந்த எம்.ஜி.ஆர் படங்களில் லதா பேசும் ஒவ்வொரு வசனமும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் பேச வேண்டிய வீர வசனமாகவே அமைந்தது. இவ்வசனங்கள் பெண்கள் மத்தியில் அதிமுக ஆதரவு பெருக பெரும்பங்காற்றின. வீட்டில் கணவன் திமுகவுக்கோ அல்லது பெரியவர்கள் காங்கிரஸுக்கோ ஓட்டு போடும்படி சொன்னால் பெண்கள் அவர்களை எதிர்த்து வாதிட்டனர். இந்த இரு கட்சிகளும் சரியில்லை அதிமுக மட்டுமே நல்லாட்சி நடத்தும் என்று பெண்கள் பகிரங்கமாகக் கூறினர். இதற்கு உறுதுணையாக இருந்தது லதாவின் கதாபாத்திரங்களும் அவர் படங்களில் பேசிய வசனங்களும் ஆகும். (வசனங்களையும் பாட்டு வரிகளையும் இன்னும் எடுத்துக்காட்டு தந்து விளக்கினால் இத்தொடர் மிகவும் நீண்டுவிடும்).

லதாவை அரசியலுக்கு அழைத்த எம்.ஜி.ஆர்


எம்.ஜி.ஆர் - லதா

அதிமுக கட்சியில் பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட போது மூன்றாவது உறுப்பினராக சேர்க்கப்பட்டவர் லதா. எனவே அவர் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். அவருக்கு 20, 22 வயதிருக்கும் போது எம்.ஜி.ஆர் அவரை தீவிர அரசியலில் ஈடுபடும்படி அழைத்தார். ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக்க விரும்பினார். லதா இதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கூட அவருக்கு இடம் கிடைத்திருக்கும். அவரது அரசியல் வாரிசாக உருவாக்கப்பட்டு இராமநாதபுரத்து ராஜாவின் மகள் தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார். ஆனால் லதாதான் பல மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதாலும்தான் சிறு பெண் என்பதாலும் அரசியல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

 சகுந்தலா நாட்டிய நாடகமும் அதிமுக வளர்ச்சி நிதியும்

அதிமுக வளர்ச்சிக்காக எம்ஜி ஆர் லதாவைக் கொண்டு சகுந்தலை நாட்டிய நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். மதுரை, திருச்சி, கோவை, பவானி ஆகிய ஊர்களில் இந்நிகழ்ச்சி நடத்தி 35 லட்ச ரூபாய் கட்சிக்கு நிதி திரட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் அதிமுகவின் முக்கிய விழாக்களில் லதாவின் நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறச் செய்தார். லதாவும் எம்.ஜி.ஆர் சொன்னபடி கேட்டு நடந்தார். இதனால் பல முக்கியஸ்தர்கள் தன்னைச் சந்திக்க வந்தபோது லதா தன்னுடன் இருப்பது எம்.ஜி.ஆருக்கு இயல்பானதாகவே தோன்றியது. தொந்தரவாகத் தோன்றவில்லை. குறுக்கே பேசுவது குதர்க்கமாகப் பேசுவது போன்ற குணங்கள் லதாவிடம் இல்லை. எனவே பலரது பேட்டிகளில் ‘’அந்த நேரம் லதா அங்கிருந்தார். எம்.ஜி.ஆர் லதாவிடம் இப்படிச் சொன்னார்’’என்ற க்ராஸ் ரெஃபெரன்சுகளில் லதா இருந்ததை அறிகிறோம். லதா எம்.ஜி.ஆரை பேட்டி கண்டு பத்திரிகையில் வெளியிட்டார். இதற்கு முன்பு ஜெயலலிதா இவ்வாறு எம்.ஜி.ஆரை ஒரு பேட்டி எடுத்திருந்தார்.
 
எம்.ஜி.ஆருக்கு உடனிருந்து உதவிய லதா

எம்.ஜி.ஆர் - லதா

வெளிநாட்டுப் பயணங்களில் பிரமுகர் சந்திப்புகளில் எம்.ஜி.ஆர் தம் கட்சிக்கொள்கையை தமிழில் விளக்கும்போது லதா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வார். பணிவான பேச்சும் இனிய குரலும் லதாவுக்கு ப்ளஸ் பாயின்ட்டாக இருந்தது. எனவே எம்.ஜி.ஆருக்கு ஒரு தனிச் செயலாளர் போல லதா உடனிருந்து உதவினார். லதாவும் ஜெயலலிதாவைப் போல ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நன்றாகப் பேசும் திறமை பெற்றிருந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு அவர் எந்தவிதத்திலும் தொல்லைதரவில்லை. ஜெயலலிதாவே வேண்டாம் எனக் கருதிய ஆர்.எம்.வீரப்பன் போன்ற மூத்தவர்கள் லதாவின் பணிவையும் பண்பையும் மெச்சி ஏற்றுக்கொண்டனர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின்பு ஜெயலலிதா சிலரைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி தொடங்கினார். அதில் லதாவை அவர் முக்கியமானவராக இணைத்துக்கொண்டார். அன்று முதல் லதா நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திருநாவுக்கரசர் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்தார். பிறகு பாரதிய ஜனதா கட்சிக்குத் தாவினார். அதன் பின்பு இப்போது காங்கிரஸில் மாநிலத் தலைவராக இருக்கிறார். ஆனால் லதா இப்படிக் கட்சி மாறவில்லை. அதிமுக கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்து தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அரசியல் ஆசானாகவும் இருந்து அதற்குரிய நுட்பங்களைப் புரியவைத்த எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்துவருகிறார். 

உயிரைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் - லதா

ஒரு முறை எம்.ஜி.ஆரும் லதாவும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த போது சில அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த லதாவை எம்.ஜி.ஆர் தன் அருகில் வரும்படி அழைத்தார். லதாவும் பட்டென்று வந்துவிட்டார். திடீரென்று லதாவின் தலைமீது தொங்கிக்கொண்டிருந்த சர விளக்கு ஒன்று அறுந்து விழுந்தது. லதா அங்கே நின்றிருந்தால் அவ்விளக்கு அவர் தலை மீது விழுந்து அவர் உயிரைப் போக்கியிருக்கும். ‘’இன்று நான் உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது எம்.ஜி.ஆரால் எனக்குக் கிடைத்த பாக்கியம்’’ என்று லதா நன்றியோடு நினைவுகூர்கிறார். (இது போன்று எம்.ஜி.ஆர் உயிர் காத்த நிகழ்ச்சிகளை சரோஜாதேவி நம்பியார் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் மனோகர் பி.எஸ்.வீரப்பா எனப் பலரும் தமது பேட்டியில் கூறியிருக்கின்றனர்)

பனிமலையில் லதாவைத் தூக்கிச்சென்ற எம்.ஜி.ஆர்

ராஜஸ்தானில் அடிமைப்பெண் படப்பிடிப்பின் போது பாலைவனத்துச் சுடுமணலில் நடக்கவியலாமல் தவித்த ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் தன் கைகளால் குழந்தையைப் போல தூக்கிச் சென்றார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதைப்போல எம்.ஜி.ஆர் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. பனிமலையின் அழகை கண்டு ரசிக்க லதா கிளம்பியபோது தமிழ்நாட்டுப் பண்பாட்டுப்படி அழகாக புடைவை உடுத்தியிருந்தார். காரை விட்டு கீழே இறங்கியபோது காலில் செருப்பு போட்டிருந்தார். சிறிது தூரம் எம்.ஜி.ஆருடன் நடந்து சென்றார். கால் பனிக்குள் புதைந்தது ஓரடியை வைத்தால் அடுத்த அடியை எடுத்து வைக்க இயலவில்லை. என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் லதாவை அப்படியே தூக்கியபடி அரைமணி நேரம் நடந்து சென்று பனிமலையின் அழகைக் காட்டிவிட்டு பின்பு காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு தான் மட்டும் தனியாகப் பனிமலையில் ஏறிச்சென்று சுற்றிப் பார்த்தார். 

லதா இந்த சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘’ அவர் புகழின் உச்சியில் இருந்த நேரம். ஒரு நடிகைதானே என்று என்னை ஒதுக்கவில்லை. மனித நேயம் என்ன என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். 

தினமும் மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் - லதா

 

லதா திருமணமாகி சிங்கப்பூர் சென்ற பிறகு அவரது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் போனதால் சென்னைக்கு வந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றார். எம்.ஜி.ஆர், ’அம்மா நல்லா இருக்காங்களா’ என்று கேட்டபோது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் விஷயத்தை சொன்னார் லதா. ‘’ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை.  நீ முதலில் எனக்குச் சொல்லியிருக்க வேண்டாமா’’ என்று உரிமையோடு கடிந்துகொண்டார். இதுதான் எம்.ஜி.ஆர் என்று அவரை பாராட்டும் லதா அவர் தன்னோடு பழகியவர்களை உண்மையாக நேசிப்பார் என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார். தினமும் எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். தன்னை நம்பி சினிமாவில் நடிக்க தன் பெண் லதாவை ஒப்படைத்தாரே அந்த நல்ல குணத்துக்காக அவர் மருத்துவமனையில் இருந்த பத்து நாளும் சென்று பார்த்தார். கோடையில் குளிர் தருவாக வந்த லதா எம்.ஜி.ஆர் வாழ்வில் ஒரு முக்கியப் புள்ளி ஆவார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/108345-lathas-career-as-a-student-actress-politician-along-with-mgr-mgr-series-episode-22.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-23

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆரும் கேமராவும்

 

எம்.ஜி.ஆரின் வெற்றியில் சினிமா தொழில்நுட்பம் பற்றிய அவரது அறிவு முக்கியப் பங்கு வகித்தது. அவர் தன் படங்களில் கேமரா கோணம், உடை, ஒப்பனை, படத்தொகுப்பு, படம் வெளியிடும் நாள், வெளியிடும் திரையரங்கு, பட விநியோகம், ரசிகர் மன்ற செயல்பாடுகள் என அனைத்து விஷயங்களும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்படி கவனித்தார். 

எம்.ஜி.ஆர் திரையில் தன்னை அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அதற்காக டிஃப்யூஸ் போன்ற சில விசேஷ தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தினார். வித விதமான தொப்பிகள் வைத்து நடிக்கும் எம்.ஜி.ஆர் ஒரு காட்சியில் கூட தன் முகத்தில் தொப்பியின் நிழல் விழாதபடி கவனமாக இருப்பார். லைட்டிங் சரியாக இருக்கும்படி அவர் கவனித்ததால் இன்றும் அவரது படங்களைச் சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் தெளிவாக உள்ளன. இவ்வாறு மற்ற பழைய படங்கள் இருப்பதில்லை அவை ஒரே இருட்டும் வெளிச்சமுமாக இருக்கிறதே தவிர நடிப்பவரின் முகபாவனை சரியாகத் தெரிவதில்லை. 

டிரான்சிஸ்டரை பிரித்து சேர்த்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் தொழில் நுட்ப அறிவு சினிமாவோடு மட்டும் நின்றுவிடவில்லை மற்ற விஷயங்களிலும் அவருக்கு இதே அறிவும் ஆர்வமும் இருந்தது. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரை பற்றி பேசும்போது. அவர் ஒரு டிரான்சிஸ்டரை பிரித்து திரும்பவும் அசெம்பிள் செய்ததை நான் பார்த்தேன் என்றார். ஒரு கேமரா புதிதாக அறிமுகமானவுடன் எம்.ஜி.ஆர் அதை வாங்கி அது எப்படிச் செயல்படுகிறது அதன் விசேஷ அமைப்புகள் என்னென்ன என்பதை அவர் அறிந்துகொள்வார். பின்பு ஒரு புகைப்படக்காரரை அழைத்து அவரிடம் காண்பித்து மற்ற விஷயங்களைக் கேட்டறிவார். அவரிடம் இந்த இடத்தில் நின்று இந்தக் கோணத்தில் என்னைப் படம் எடு என்பார் அந்தப் படங்கள் அற்புதமாக வந்திருக்கும். 

எம்.ஜி.ஆர்

கேமராக்காரர்கள் எழுதிய நூல்கள் 

புகைப்படக்காரர் எஸ்.எஸ் ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் பற்றிய எழுதிய நூலில் எம்.ஜி.ஆரின் கேமரா அறிவு குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார். சங்கர் ராவ் என்ற ஸ்டில் போட்டோகிராபரும் எம்.ஜி.ஆரின் குணம், மனம் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவரைப் பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளார்.

மூத்தவர் ஆர் என் நாகராஜ ராவ்

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் அவரது அழைப்பைப் பெற்று தலைமைச் செயலகத்தில் வைத்து அவரை முதல் படம் எடுத்தவர் சீனியர் போட்டோகிராபர் ஆர்.என் நாகராஜ ராவ். இவர் நாடோடி மன்னன் காலம் முதல் எம்.ஜி.ஆரின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்து வந்தார். இவர் ஒரு பேட்டியில் ‘’ நான் எம்.ஜி.ஆருக்கு எந்த யோசனையும் சொன்னதில்லை. அவருக்கே போட்டோவுக்கு எந்த கலர் சரியாக இருக்கும் என்பது தெரியும். அவர் அதன்படி செய்வார். அவரை வைத்து போட்டோ எடுப்பதில் எனக்குச் சிரமமேயில்லை’’ என்று கூறியிருப்பது எம்.ஜி.ஆரின் கேமரா ஞானத்தைக் காட்டுகிறது. 

எம்.ஜி.ஆர் தன் படங்களில் அறிமுகமாகும் மணிமாலா, பாரதி போன்ற புதுமுகங்களை போட்டோ எடுத்து டெஸ்ட் பார்ப்பதற்காக ஆர். என் நாகராஜ ராவின் ஸ்டுடியோவுக்கு அழைத்து வருவார். அப்போது  டெஸ்ட் முடிய நான்கு மணி நேரமானாலும் எம்.ஜி.ஆர் பொறுமையாக வெளியே அமர்ந்திருப்பார். தன்னுடன் நடிக்கும் நடிகையரும் திரையில் சரியாகத் தெரிய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நினைவாற்றல்

வெற்றியாளருக்குரிய முக்கியத் தகுதிகளுள் ஒன்று நினைவாற்றல் ஆகும். எம்.ஜி.ஆரின் நினைவாற்றல் சிறப்பு குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். எம்.ஜி.ஆர் தன்னை எடுக்கும் படங்களையும் காட்சிகளையும் மறக்கவே மாட்டார். அவர் முதல்வராகி பத்து நாள்கள் கழித்து  ‘’1947இல் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி எடுத்த போட்டாவில் பத்து காப்பி எம்.ஜி.ஆர் வாங்கிவரச் சொன்னார்’’ என்று ஆர்.என் நாகராஜ ராவிடம் அவர் அனுப்பிவைத்த ஆள் ஒருவர் வந்து கேட்டார். இவருக்கு வியப்பாக இருந்தது. முப்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த படத்தை எம்.ஜி.ஆர் தன் நினைவில் வைத்திருந்து இப்போது கேட்டு அனுப்புகிறார்.

ஒரு முறை ஒரு படத்தின் எடிட்டிங்கின் போது ‘’நான் கையை மடக்கி குத்துவது போன்ற ஒரு காட்சி இருக்கும் அதைக் கொண்டு வா. இந்த இடத்தில் சேர்க்க வேண்டும்’’ என்றார். எடிட்டர் அப்படி ஒரு காட்சி எதுவும் ஃபிலிமில் இல்லையே என்றார். ‘’படத்தில் நடித்த எனக்குத் தெரியாதா, போய் நன்றாகத் தேடிப் பார்’’ என்று கேட்டு எம்.ஜி.ஆர். வாங்கினார். 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் முடிவே இறுதியானது

எல்லாப் படத்துக்கும் இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்று ஆட்கள் தனித்தனியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் தன் படங்களின் ஒவ்வொரு பதிவையும் குறிப்பாகத் தன் காட்சிகளை தானே முடிவு செய்வார். கேமரா வழியாக தான் பார்த்து திருப்தியான பின்பு தனது காட்சிகளை எடுக்க அனுமதிப்பார். ஒரு முறை அவர் தனிப்பிறவி படப்பிடிப்பில் கேமரா கோணம் பார்த்துக்கொண்டிருந்த போது கேமராவுக்கு முன்னால் ஓடியபடி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதா விளையாட்டாக வசனத்தைச் சொல்லவும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் கோபத்தைப் பார்த்து செட் அமைதியாகிவிட்டது. ஓடிக்கொண்டிருந்த ஜெயலலிதா சட்டென்று திரும்பிப்பார்த்தார். இறுகிய முகத்துடன் இருந்த எம்.ஜி.ஆர் ‘’விளையாட்டு முடிந்துவிட்டதா வேலை பார்ப்போமா’’ என்றார். ஜெயலலிதாவுக்கு முகம் வாடிவிட்டது. சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் அவரை அழைத்து ‘’பாவம் நீ என்ன செய்வாய் கல்லூரியில் படிக்க வேண்டிய பெண் நீ. இப்போது இங்கு வந்து நடிக்கிறாய்’’ என்று கூறி தேற்றினார். அத்துடன் ‘’செய்யும் தொழிலை சிரத்தையுடன் செய்ய வேண்டும். வேலை செய்யுமிடத்தில் விளையாடக் கூடாது’’ என்று புத்திமதி கூறினார்.

லோ ஆங்கில்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் லோ ஆங்கிளை பயன்படுத்துவதை தவிர்ப்பார். ஆனால், ஸ்ரீதர் படத்தில் கேமரா கோணம் அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஒளிப்பதிவாளரிட்ம் அது குறித்து விசாரித்தார். அதனால் அவர் எம்.ஜி.ஆரிடம் ‘’நீங்கள் பாருங்கள் இக்காட்சி அருமையாக இருக்கும்’’ எனறு விளக்கிக் கூறினார். அவர் லோ ஆங்கிள் அமைப்பதில் கை தேர்ந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவர் விளக்கத்தை ஒப்புக்கொண்டார். அந்தப் படம்தான் எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் படத்தில் ரேக்ளா வண்டியிலிருந்து குதிப்பது போன்ற படம். இந்த ஸ்டில் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே  மிகவும் புகழ் பெற்ற ஸ்டில் ஆகும். படத்தில் அக் காட்சியைப் பார்க்கும்போது  ரசிகர்களின் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.

சென்னை ஸ்ரீதரின் கண்காட்சி 

எம்.ஜி.ஆர் வித விதமான கேமராக்களை வாங்கி அவற்றை கொண்டு படம் பிடிப்பதை ஸ்டில் போட்டோக்காரர்கள் அவ்வப்போது படம் எடுப்பது வழக்கம். அந்தப் படங்களைச் சேகரித்து சென்னை ஸ்ரீதர் ஒரு எம்.ஜி.ஆரும் கேமராவும் என்ற படக் கண்காட்சியை நடத்தினார். அந்தக் கண்காட்சியில் அந்தக் காலத்து கேமரா வரலாறும் இணைந்திருந்தது. ரகசிய போலீஸ் படத்தில் சிறிய அளவிலான ஒரு கேமரா கொண்டு எம்.ஜி.ஆர் படம் பிடிப்பார். அந்த ஸ்டில் படத்தின் போஸ்டரிலும் இடம்பெற்றது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் வந்த இதயக்கனி படத்தில் டப்பா கேமரா எனப்படும் பழைய கேமராவை வைத்து ராதா சலூஜாவை வித விதமாகப் படம் பிடிக்கும் காட்சியும் ‘’ஒன்றும் அறியாத பெண்ணோ, உண்மை மறைக்காத பெண்ணோ’’ என்ற பாட்டும் இடம்பெற்றது. 

எம்.ஜி.ஆர்

தொண்டர் மத்தியிலும் கேமரா மீது கவனம்

தேர்தல் கூட்டங்களில் பல தொண்டர்கள் வந்து எம்.ஜி.ஆருடம் படம் எடுப்பர். அவர் முதல்வரான பின்பு சில வேளைகளில் தனது காரிலேயே புகைப்படக்காரர்களை அழைத்துப் போவதும் உண்டு. நல்ல படங்கள் எடுத்தால் அவர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுவார். அவர் திமுகவில் இருந்தபோது தேர்தல் நிதிக்காக தொண்டர்கள் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் எனப் பணம் கொடுத்து எம்.ஜி.ஆரோடு படம் எடுக்கும் முறையும் இருந்தது, தொண்டர்கள் அதிகம் பேர் இருப்பதால் அப்போது கேமராக்காரர் அவசரமாகப் படம் எடுப்பார். ஆனால், அந்த அவசரத்திலும் எம்.ஜி.ஆர் கேமரா சரியாக இயக்கப்படுகிறதா என்பதை கவனிப்பார். ஒரு நாள் ஒருமுறை போட்டோ எடுத்த பிறகு இன்னொரு முறை எடு என்றார். போட்டோகிராபருக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் எடுக்கப் போனார் எதற்கும் ஒரு முறை கேமராவை சரி பார்த்துக்கொள்வோம் என்று சரிபார்த்தார். அதன் முன்பகுதியில் அப்பெர்ச்சர் மூடியிருந்தது. எம்.ஜி.ஆர் லென்ஸ் மூடியிருப்பதை கவனித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். இரண்டாவது எடுத்த படம்தான் சரியாக வந்திருந்தது.

படப்பிடிப்பின் போதும் அரசியல் கூட்டங்களிலும் எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் எம்.ஜி.ஆர் தான் இருக்கும் சுற்றுப்புறத்தின் மீது ஒரு கண் வைத்தபடி கவனமாக இருப்பார். இந்த alertness அவரது வெற்றி ரகசியங்களில் ஒன்றாகும்.

ஒருவருக்கே மூன்று கேமரா பரிசு

ஆர்.என் நாகராஜ ராவின் மருமகனான சங்கர் ராவுக்கு எம்.ஜி.ஆர் இரண்டு புதுவகையான கேமராக்களை வாங்கிக் கொடுத்தார். இவர் திறமையின் மீது எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கை இருந்ததால் இவர் எம்.ஜி.ஆரோடு பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.. இளைஞரான இவர் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த பாசமும் அக்கறையும் இருந்தது. ஒரு முறை இவர் சட்டை கிழிந்திருந்ததை பார்த்த எம்.ஜி.ஆர் இவருக்கே தெரியாமல் உடனே ஆறு செட் டிரஸ் எடுத்து பரிசளித்தார். சங்கர் தயங்கியதை பார்த்த எம்.ஜி.ஆர் ‘’நானும் உன் அண்ணன் தானே’’ என்று கூறி அவரை மறுக்காமல் பெற்றுக் கொள்ளும்படி செய்தார். எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை முதல்வரானதும் புதிதாக அறிமுகமான நவீன கேமரா பற்றி எம்.ஜி.ஆரிடம் சங்கர் தெரிவித்தார். அதன் விலையைக் கேட்ட எம்.ஜி.ஆர் அதனை சங்கர் வாங்குவதற்கு 15,000 ரூபாய் கொடுத்தார்.

ஹாங்காங்கில் கேமரா பரிசளித்த எம்.ஜி.ஆர்

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்குத் தன் குழுவினருடன் ஹாங்காங் போன எம்.ஜி.ஆர் அங்கு ஐந்து கேமராக்களை வாங்கினார். அசோகனுக்கும் சங்கர் ராவுக்கும் இயக்குநர் ப. நீலகண்டனுக்கும் ஆளுக்கொன்றாக வழங்கினார் மற்ற இரண்டையும் ‘’எனக்கு ஒன்று என் அண்ணனுக்கு ஒன்று’’ என்றார். அப்போது தன்னருகில் நின்றுகொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தியைப் பார்த்ததும் ‘’இவரும் என் அண்ணன்தான்’’என்று அவருக்கு ஒரு கேமராவைக் கொடுத்துவிட்டார். அந்த இடத்தில் ராமமூர்த்தி இருக்கும்போது அவருக்குக் கொடுக்காமல் இருக்க எம்.ஜி.ஆருக்கு மனமில்லை. எனவே பெருந்தன்மையுடன்  எம்.ஜி.ஆர் கொடுத்துவிட்டார்.

எம்.ஜி.ஆர்

வெளியூர் படப்பிடிப்பில் பல கேமரா

ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்த போது ஆர்.எஸ் மனோகர் நிறைய ஒட்டகங்களோடு வந்து வேங்கையனைப் பிடிக்கும் பாலைவனக்காட்சியில் எம்.ஜி.ஆர் ஒரே சமயம் ஆறு கேமராவைப் பயன்படுத்தினார். ஒரு கேமரா அடுத்த கேமரா எடுக்கும் காட்சியில் தெரியாத வகையில் இக்காட்சியைப் படமாக்கினார். அதன் பிறகு பலர் இவ்வாறு பல கேமராக்களைப் பயன்படுத்தினாலும் அதற்கு முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான்.

மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்துக்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியிலும் எம்.ஜி.ஆர் பல கேமராக்களைப் பயன்படுத்தினார். இரண்டு படங்களுக்கும் அவரே இயக்குநர். அவர் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளர் யாராக இருந்தாலும் கேமராவை இயக்குவதில் அவருக்குக் கூடுதல் சுதந்திரம் இருந்தது. 

அரச கட்டளை படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கினார். அவர் பகல் முழுக்க  படம் எடுத்துவிட்டுப் போன பிறகு மாலையில் எம்.ஜி.ஆர் அனைத்தையும் மாற்றி திரும்ப எடுப்பார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை அண்ணன் எடுத்த காட்சியாகவே இருந்தாலும் மாற்றி எடுக்காமல் விடமாட்டார்.

செட் அமைப்பும் கேமராவும்

எம்.ஜி.ஆர் படத்துக்குக் கலை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர் அங்கமுத்து. எம்.ஜி.ஆர் முதல்வரானதும் இவரை குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் ஆக்கி கௌரவித்தர். இவர் எம்.ஜி.ஆரின் கனவுக் காட்சிகள் மற்றும் தத்துவப் பாட்டு காட்சிகளுக்குப் பெரிய அளவில் செட் அமைப்பார். அதற்கு செட் வரைபடத்தை (ஸ்கெட்ச்) எம்.ஜி.ஆரிடம் காட்டி அவரது அனுமதியைப் பெறுவார். அப்போது தரைக்கான திட்டத்தைம்.(கிரவுண்ட் ப்ளான்) சேர்த்துக் கொண்டு போய் காட்ட வேண்டும். இந்த ஸ்கெட்சை பார்த்ததுமே அதைச் சரி செய்து கொடுக்கும் எம்.ஜி.ஆர் எங்கெங்கு கேமரா வைக்க வேண்டும் தான் எங்கு நிற்க வேண்டும் என்பதையும் அப்போதே  முடிவு செய்துவிடுவார். செட் தயாரானதும் ஒரு முறை வந்து பார்த்து உறுதி செய்வார். 
நினைத்ததை முடிப்பவன் படத்தில் ‘’கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’’பாட்டுக்கான செட் தயாரானதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்தார். பாட்டு வரிகள் மற்றும் தன் காஸ்டியூம் பற்றி கேட்டறிந்தார். சிவப்பு நிற பேண்ட் மாஸ்டர் உடை என்று தெரிந்ததும் செட்டின் சுவர்ப்பகுதியை நோக்கினார் அதுவும் சிவப்பு நிறத்தில் இருந்தது. உடையும் பின்னணி நிறமும் ஒன்றாக இருக்க வேண்டாம் என்பதால் தனது காஸ்டியூம் பளிச் என்று தெரியும் வகையில் சுவரின் நிறத்தை வேறு லைட் கலருக்கு மாற்றிவிடும்படி கூறினார். இப்போது அந்தப் பாட்டில் சுவரின் வெளிறிய நிறம் நீல நிறமாக இருக்கும். 

எம்.ஜி.ஆர் பெரிய செட்கள் அமைக்கும்போது அதன் அழகு முழுமையாகத் தெரியும்படி ஒளிப்பதிவாளரிடம் லாங் ஷாட் வைக்கும்படி நினைவுறுத்துவார். லாங் ஷாட்டில் செட்டின் அழகை காணும் ரசிகர்கள் கலை இயக்குநரின் திறமையையும் கலைஉணர்வையும் ரசித்துப் பாராட்டுவர். அவருக்கும் தன் படம் மூலமாக திரையுலகில் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வார். 

எம்.ஜி.ஆர்

மற்றவரின் திறமையை மதிக்கும் எம்.ஜி.ஆர்

 

வேதாகமத்தில் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயருக்குரியதை ராயருக்கும் கொடுங்கள் என்று கூறியதை போல எம்.ஜி.ஆர் ஒளிப்பதிவாளருக்கு உரிய அங்கீகாரத்தை அவருக்கும் கலை இயக்குநருக்குரிய அங்கீகாரத்தை இவருக்கும் அளிக்க தயங்கியதே இல்லை. எம்.ஜி.ஆர் தானும் புகழ் பெற வேண்டும் அதே வேளையில் தன்னுடன் இருக்கும் தன் தொழில்நுட்பக் கலைஞரும் புகழ் பெற வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்பட்டார். அவர்களின் உழைப்பையும் திறமையையும் எம்.ஜி.ஆர் ஒருபோதும் இருட்டடிப்பு செய்ததில்லை. அவர் படத்தில் பணமும் அதிகமாகக் கிடைக்கும் புகழும் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் அவருடன் பணியாற்ற பலரும் ஆர்வமாக முன்வந்தனர். (எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்து தனிப் புத்தகமே எழுதலாம்)

https://cinema.vikatan.com/tamil-cinema/news/108610-technical-intelligence-of-mgr-mgr-series-episode-23.html

Link to comment
Share on other sites

வேட்டி கட்டுவது முதல் விருந்தோம்பல் வரை... எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த பழக்கவழக்கங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-24

 
 

எம்.ஜி.ஆர்

 

எம்.ஜி.ஆர் தன் படங்களிலும் நிஜ வாழ்விலும் சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். அவர் சிகரெட், மது, காபி, டீ குடிக்கமாட்டார் என்பதெல்லாம் தவிர வேறு பல குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்களும் அவரிடம் இருந்தன. 

 

உடை

எம்.ஜி.ஆர் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் வேட்டி கட்டும்போது வலது புறம் கரைவைத்துக் கட்டுவார். இதை அவரது அமைச்சரவை படங்களில் காணலாம். பாதம் மறையும்படி கட்டாமல் சற்று உயரே தூக்கிக் கட்டுவார். தரை பெருக்க கட்டினால் தரித்திரம் என்று அவர் அம்மா சொன்னதால் தாய் சொல்லைத் தட்டாமல் அப்படிக் கட்டினார். 

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆ ரின் உடைகளைத் துவைக்க ஒரு தனிச் சலவைக்காரர் இருந்தார். ஒரு நாளுக்கு நான்கு முறைகூட வேட்டி சட்டை மாற்றுவார். ஒரு முறை கட்டி கழற்றியதை அவர் அந்த நாளில் மறுமுறை கட்டுவதில்லை. தினமும் துவைத்த ஆடைகளையே உடுத்தினார். 

காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கதர் கட்டினார். கதர் உடுத்திதான் தன் முதல் மனைவி பார்கவியைத் திருமணம் செய்தார். தி.மு.க-வுக்கு மாறிய பின்பு கதர் உடுத்துவதை நிறுத்திவிட்டார். பட்டு உடுத்தத் தொடங்கினார். 
வேட்டியை மடித்துக் கட்டும் பழக்கம் எம்.ஜி.ஆருக்குக் கிடையாது. வெள்ள சேதத்தைப் பார்வையிடும்போது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். என் அண்ணன் படத்தில் காலின் காயம் தெரிய வேண்டிய காட்சியில் மட்டும் வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டுவார். வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் சில்க் கைலி கட்டுவார்.

எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஜி.நாயுடு பின்னாளில் நாயுடு ஹால் என்ற கடையைத் தொடங்கியதாகக் கூறுவர். அவருக்குப் பல படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஏ.முத்து, தான் தைத்து தந்த சட்டையைதான் எம்.ஜி.ஆர் கடைசி வரை போட்டிருந்தார் என்று கூறும்போது எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவருக்கு அணிவித்திருந்த சட்டை எம்.ஏ.முத்து தைத்ததுதான் என்று சொல்லி மனம் நெகிழ்கிறார்.

எம்.ஜி.ஆர்

நகை

எம்.ஜி.ஆர் வெளியே வரும்போது நகை அணியும் கையில் ஒரு வாட்ச் மட்டுமே கட்டியிருப்பார். வீட்டில் இருக்கும்போது தன் சங்கிலி மோதிரங்களை எடுத்து அணிந்துகொள்வாராம். ஆனால், படத்திலும் நிஜத்திலும் அவர் நடு விரலில் மோதிரம் அணிய மாட்டார். மற்ற நடிகர் நடிகையர் அவர் ஜோடி நடிகைகள்கூட நடு விரலில் மோதிரம் அணிவர். ஆனால், அவர் சனிவிரல் எனப்படும் அந்த நடு விரலில் நகை அணியக் கூடாது என்ற பெரியவர்கள் வாக்கை மீறுவது கிடையாது. அவர் சங்கிலியில் அவர் தாயார் படம் உள்ள பென்டண்ட் தொங்கும்.
 
ஏன் இவ்வளவு கனமான பெரிய வாட்ச் கட்டியிருக்கிறீர்கள் என்று ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருக்கும்போது கூட்டத்தை விலக்க இது ஒரு மென்மையான ஆயுதமாகப் பயன்படும் என்றார் எம்.ஜி.ஆர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா?

வணக்கம்

எம்.ஜி.ஆர் இரண்டு கையையும் முகத்துக்கு நேரே கூப்பி வணக்கம் சொல்வார். பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று வணங்குவார். நடிகை பானுமதிதான் அவரைச் சந்திக்க போனபோது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வணங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். பானுமதி ஓர் அஷ்டாவதானி என்பதாலும் திரையுலகில் நடிப்பு, இசை, நடனம் பாட்டு இயக்கம் எனப் பல துறைகளிலும் திறமை பெற்றவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவரை எழுந்து நின்று வணங்கியிருக்கலாம். 

கறுப்புக் கண்ணாடி போட்ட காரில் பயணித்தாலும் வெளியே யாராவது இது எம்.ஜி.ஆர் கார் என்பதை அடையாளம் கண்டு வணங்கினால் இவர் உள்ளே இருந்து வணங்குவார். பொதுக்கூட்டத்தில் மேடையின் இரு புறமும் நடந்து வந்து கையை தலைக்கு மேலே உயர்த்தி சிரித்த முகத்தோடு வணங்குவார். உடனே கூட்டம் ஆரவாரிக்கும். 

கல்யாணத்துக்கு வெள்ளி டம்ளர்

பொதுவாக எம்.ஜி.ஆர் தான் செல்லும் திருமணங்களுக்கு ஆறு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்குவார். கணவன் மனைவி மாமியார் மாமனார் மகன் மகள் என்ற அழகான குடும்பத்துக்கு அவர் அளிக்கும் பரிசு ஆறு வெள்ளி டம்ளர்கள் ஆகும். 

கலை நிகழ்ச்சிக்குத் தங்கச் சங்கிலி

எம்.ஜி.ஆர் மேடை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினால் பெரும்பாலும் தங்கச்சங்கிலி பரிசளிப்பது வழக்கம். கங்கை அமரனின் மகன் மிருதங்க அரங்கேற்றத்துக்குப் பத்து பவுன் சங்கிலி பரிசளித்தார். ஒரு முறை பத்மா சுப்பிரமணியம் தன் மாணவியின் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கும்படி அழைத்திருந்தார். அப்போது மேடையில் வைத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கவிருந்த பேழையை எம்.ஜி.ஆர் திறந்து பார்க்க முயன்றார். பத்மா எம்.ஜி.ஆரை நெருங்கி அவரது காதில் அதற்குள் ஒன்றுமில்லை என்றார். உடனே எம்.ஜி.ஆர் சரி நிகழ்ச்சி தொடரட்டும் என்று சொல்லிவிட்டு தன் ஆட்களை அழைத்து ஐந்து பவுன் சங்கிலி வாங்கிவரச் சொல்லி நடனமாடிய பெண்ணுக்கு பரிசளித்தார்.

உட்காரும் ஸ்டைல்

 எம்.ஜி.ஆர் எப்போதும் நேராக உட்கார்வார். ஆனால், கால் மேல் கால் போட்டு உட்காரமாட்டார். அதனால் அவர் முன்பு மற்றவர்களும் அப்படி உட்கார்வதில்லை. சிலர் தமது பழக்கம் காரணமாக அப்படி உட்கார்ந்தால் எம்.ஜி.ஆர் அதற்கு கோபிக்க மாட்டார். 

மதுரையில் உலக தமிழ்ச் சங்க அறிவிப்பு கூட்டத்தின் போது தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் மேடையில் எம்.ஜி.ஆரோடு இருந்தனர். அப்போது மேடையில் இருந்த திருமதி ராதா தியாகராஜன் சாய்ந்தபடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்.

 எம்.ஜி.ஆர் முன்பு நாஞ்சில் மனோகரன் கால் மேல் கால் போட்டு உட்கார்வது குறித்து கட்சியினர் எம்.ஜி.ஆரிடம் குறைபட்டுக்கொண்ட போது ‘’அவர் பழக்கம் அப்படி இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்றார். 

ஒரு முறை ரசிகர்கள் பணம் கொடுத்து எம்.ஜி.ஆருடன் போட்டோ எடுத்த போது ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எம்.ஜி.ஆரின்  தோள் மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவரது காலை கீழே எடுத்துவிட்டபோது எம்.ஜி.ஆர் ‘’வேண்டாம் அவர் காசு கொடுத்திருக்கிறார் அவர் இஷ்டப்படி உட்காரட்டும்’’ என்று கூறிவிட்டார்.

சாப்பாடு

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் மற்றும் சாப்பிடும் முறை குறித்து நிறைய பேர் எழுதிவிட்டனர். விருந்தினரைப் பார்த்துப் பார்த்து சாப்பிட வைப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர் மட்டுமே. தான் சாப்பிடும்போதே யார் எந்தப் பொருளை விரும்பிச் சாப்பிடுகின்றனர் என்பதை பார்த்து அவருக்கு அந்த பதார்த்தத்தை வைக்கச் சொல்வார். 

’தாயினும் சாலப் பரிந்து’ உபசரிப்பவர் எம்.ஜி.ஆர் என்பதற்கு ஓர் உதாரணம். ஒருமுறை புகைப்படக்காரர் சங்கரிடம் எம்.ஜி.ஆர் பொறித்த முழுக்கோழியைக் கொடுத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார். சங்கர் தன்னால் இவ்வளவும் சாப்பிட இயலாது என்றார். நீ இளைஞன் சாப்பிட முடியும் சாப்பிடு என்று ஊக்கப்படுத்தி சாப்பிட வைத்துவிட்டார். அதன்பிறகு சங்கருக்குத் தன்னால் முழுக்கோழி சாப்பிட முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. பிறகு முழுக்கோழி சாப்பிட ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர் சுவையான உணவுகளை யார் சமைத்துக் கொடுத்தாலும் அவரிடம் திரும்பவும் அதை தனக்குச் சமைத்துத் தரும்படி கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். தன் வக்கீல் என்.சி. ராகவாச்சாரியாரிடம் சொல்லி அவர் வீட்டிலிருந்து ரசம் சாதம் புளியோதரைச் சமைத்துத்தரச் சொல்லி வாங்கிச் சாப்பிடுவார். லதாவின் அம்மாவிடம் சொல்லி கருவாட்டுக் குழம்பு வாங்கிச் சாப்பிடுவார். 

எம்.ஜி.ஆர் சாப்பிடும்போது உணவை மிச்சம் வைக்க மாட்டார். அன்னத்தை மிச்சம் வைப்பவன் வாழ்க்கை பின்னப்படும் என்று அவர் அம்மா சொன்ன புத்திமதியைக் கடைசி வரை பின்பற்றினார். அவர் அசைவம் சாப்பிடும்போது எலும்பைக் கடித்து துப்ப ஒரு தனித் தட்டு வைக்கச் சொல்வார். கீழே தரையில் துப்பி அசுத்தப்படுத்த மாட்டார். தரையைச் சுத்தப்படுத்துவோர் தன் எச்சிலை கையால் வாரி எடுக்கும் கொடுமைக்கும் அவரைத் தள்ளமாட்டார்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார். விருந்தினர் வரும்போது மேசையில் அமர்ந்து உண்பார். என்.டி.ஆர் முதல்வர் பதவியேற்பதற்கு முன்பு எம்.ஜி.ஆரை தன் அமைச்சர் குழுவினருடன் வந்து சந்தித்து ஆசிபெற்றார். அன்று அவர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர் காலை விருந்தளித்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் காலையில் பெரும்பாலும் எம்.ஜி.ஆரோடுதான் உணவருந்துவார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் வீட்டில் ஆரம்பத்தில் அவர் அண்ணனின் ஒன்பது குழந்தைகளுக்கும் அடிக்கடி பிறந்த நாள் பெயர் சூட்டல் திருமண நாள் என்று விசேஷங்கள் வந்துகொண்டேயிருக்கும். அவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதை விரும்பமாட்டார். அன்றைக்குப் பாயசத்துடன் நல்ல சாப்பாடு செய்யச் சொல்வார். ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போய் வரும்போது அடிக்கடி விசேஷம் வருவதால் அங்கு வைக்கும் பாயசத்தை எனக்குத் திருகுச்செம்பில் (கூஜா) எம்.ஜி.ஆரின் அண்ணி கொடுத்து விடுவார்கள் என்பார். அதன்பிறகு ஜானகி அம்மையாரின் அண்ணன் பிள்ளைகள் ராமாவரத்திலிருந்து வளர்ந்த போதும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இல்லை. அதை அவர் ஆடம்பரம் என்று நினைத்தார். 

பேசா மொழி

எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வரும்போதும் அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு வரும்போதும் பேசாமலேயே தன்னுடன் இருப்பவர்களுக்கு தன் கருத்தைப் புரிய வைத்துவிடுவார்.

மதுரை அருகே வைகை அணைக்கட்டில் மாட்டுக்கார வேலன் ஷூட்டிங் நடந்த போது அவரைப் பார்க்க வந்த மக்கள் கூட்டம்  நாளுக்கு நாள் அதிகரித்தது. அனைவருக்கும் எம்.ஜி.ஆர் தண்ணீர் கொடுக்கம்படி கட்டளையிட்டார். காவல் துறையினரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சுமார் இரண்டு லட்சம் பேர் கூடிவிட்டனர். அப்போது எம்.ஜி.ஆர் கேமரா வைக்கும் இடத்துக்கு ஏற்ப கூட்டத்தைப் பார்த்து கையை நேரே நீட்டி  இருபுறமும் விலகும்படி அசைப்பார். கூட்டம் மெள்ள விலகும். அவர் போதும் என்று கையசைத்த பிறகு அப்படியே நின்றுவிடும்.  பின்னால் போங்கள் என்றாலும் அதே மாதிரி கையசைப்பார். மொத்தக் கூட்டமும் பின்னால் நகர்ந்து கொண்டேயிருக்கும். மெகாஃபோன் பயன்படுத்தாமல் அவர் இவ்வாறு கை அசைத்தாலே போதும். கூட்டம் கட்டுப்படும்.

பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆரின் தலை அசைவையும் பார்வை போகும் திசையையும் மெய்க்காப்பாளர்கள் கவனித்துச் செயல்படுவர். ஒரு கூட்டத்தில் ஒருவன் பெண்களிடம் சில்மிஷம் செய்வதை எம்.ஜி.ஆர் மேடையிலிருந்து பார்த்துவிட்டார். அவர் ஒரே இடத்தை உற்று நோக்குவதை அறிந்த மெய்க்காப்பாளர் விரைந்து போய் அவனை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர். இன்னொரு கூட்டத்தில் கண் தெரியாத இருவர் முன்னால் வரமுடியாமல் சிரமப்படுவதை பார்த்த எம்.ஜி.ஆர் தன் மெய்க்காப்பாளரைப் பார்க்கவும் அவர்கள் அவர் பார்த்த திசையில் கூர்ந்து பார்த்தனர். அந்தக் கண் தெரியாதவர்களைப் பாதுகாப்புடன் அழைத்து வந்து எம்.ஜி.ஆரைப் பார்க்க வைத்தனர். எம்.ஜி.ஆர் ஓர் இடத்தை உற்றுப் பார்ப்பதும் ஒருவரை கூர்மையாகப் பார்ப்பதும்  கூட அவர் பயன்படுத்திய கருத்துப் புலப்பாட்டு உத்திகள் ஆகும்.

முத்தம்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்  சிலரை பாராட்ட நினைக்கும்போது அவருக்கு முத்தம் கொடுப்பது வழக்கம். படத்திலும் சரி நிஜத்திலும் சரி எம்.ஜி.ஆர் இவ்வாறு முத்தம் கொடுப்பது உண்டு. நம் நாடு படத்தில் தன் அண்ணன் மகனாக நடித்த ஸ்ரீதேவிக்கு கன்னத்திலும் அவனுக்கு அக்காவாக நடித்த குட்டி பத்மினிக்கு நெற்றியிலும் முத்தம் கொடுப்பார். சித்தப்பாக இருந்தாலும் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க கூடாது என்ற கருத்து இக்காட்சியில் உணர்த்தப்படும். நேற்று இன்று நாளை படத்தில் தன் கணவன் என தவறாக நினைத்து ராஜஸ்ரீ எம்.ஜி.ஆரிடம் முத்தம் கேட்கும்போது அவரை கண்ணை மூடிக் கொள்ள செய்துவிட்டு ஒரு சிறுமியை அழைத்து அவரது கன்னத்தில் முத்தம் தர செய்வார். இந்தக் காட்சியும் கருத்துள்ள காட்சி ஆகும். பெண்களிடம் எம்.ஜி.ஆர் மிகுந்த செல்வாக்கு பெற இத்தகைய காட்சிகள் உதவின.

எம்.ஜி.ஆர் காரில் பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது ரசிகர்கள் அவர் கார் ஜன்னலை தொற்றிக்கொண்டு ஓடிப்போய் அவர் கையில் முத்தம் கொடுப்பது சகஜம். அவர் டாட்டா காட்டும்போது அவர் கையை பிடித்து முத்தம் வைப்பர். சிலசமயம் ரசிகர்கள் எம்.ஜி.ஆ ரை கன்னத்தில் கிள்ளியும் கொஞ்சுவார்கள்.

எம்.ஜி.ஆருக்கு 1985க்கு பிறகு பேச்சு திறன் பாதிக்கப்பட்டிருந்த போது அவர் தனக்கு பிரியமானவர்கள் சந்திக்க வந்தபோது அவர்களின் கையில் முத்தம் கொடுத்து தன் அன்பை தெரிவித்தார். வேதம் புதிது படம் எம்.ஜி.ஆ ருக்கு போட்டுக் காட்டிய போது சத்யராஜ் அருமையாக நடித்திருந்த காட்சிகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் அவர் கையை பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார. சுமார் பத்து முத்தமாவது கொடுத்திருப்பார் என்று மனம் நெகிழ்கிறார் சத்யராஜ்.  அதுவே அவர் பார்த்த கடைசி படமும் ஆகும்
திரையுலகம் எம்.ஜி.ஆருக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்  சிவாஜிக்கு மேடையில் வைத்து முத்தம் கொடுத்தார். அப்போது நம்பியாரும் எம்.ஜி.ஆ ரிடம் முத்தம் கேட்டார். எம்.ஜி.ஆர் உன் முகத்தில் தாடி இருக்கிறது அது குத்தும் என்றார். இருந்தாலும் நம்பியார் எம்.ஜி.ஆ ரிடம் முத்தத்தை கேட்டுபெற்றுக் கொண்டார். இதை பார்த்த மொத்த கூட்டமும் ஆரவரித்து மகிழ்ந்த்து. சினிமாவில் எதிரிகளாக தோன்றும் இவர்கள் நிஜத்தில் இத்தனை அன்பும் பாசமும் உடையவர்களா என்று நினைத்தனர். 

ராஜீவ் காந்தி சென்னைக்கு வந்து தன் தாத்தா நேருஜியின் சிலையை திறந்து வைத்துவிட்டு கிளம்பியபோது ஏர்போர்ட்டில் எம்.ஜி.ஆரிடம் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். அவரது அன்பை கண்ட எம்.ஜி.ஆர் மனம் நெகிழ்ந்து புன்னகைத்தபடி அவர் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் சந்திக்கவேயில்லை. இருவரும் காலமாகிவிட்டனர்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப்பிடிப்புக்கு கண்ணன் வரவழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு வேலையே இல்லை ஐந்தாம் நாள் எம்.ஜி.ஆர் அவரை அழைத்து பல பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தைக் கொடுத்து பாடம் செய்துகொள் என்றார். செட்டுக்குக் கண்ணன் வந்த்தும் அவரிடம் எம்.ஜி.ஆர் ஒரே டேக் என்று சொல்லிவிட்டு சுற்றிலும் ஐந்து கேமராக்களை வைத்து லதாவும் கண்ணனும் இடம்பெறும் அந்தக் காட்சியைப் படமாக்கினார். ஷாட் முடிந்ததும் கண்ணனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என் நம்பிக்கையைக் காப்பாத்திட்ட கண்ணா என்று பாராட்டினார்.

மரியாதை

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் தெரியாதவர்களை, புதியவர்களை, மேலும் வயதில் சிறியவர் என்பதால் வாடா போடா என்று பேச மாட்டார். தம்பி என்றுதான் அழைப்பார். வயதானவர்களை பெரியவர் என்றும் வயதான அம்மா என்றுமே குறிப்பிடுவார். ஆதவன் ஷூட்டிங்கில் சரோஜாதேவியை யாரோ கிழவி என்று ரெஃபெர் செய்தபோது அவர் வருத்தத்துடன் இந்தத் தகவலை தெரிவித்தார். தன் வீட்டுப் பிள்ளைகளும் அவ்வாறே மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்ற நல்லொழுக்கத்தை வலியுறுத்துவார்.

ஒரு முறை தன் வீட்டுப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப்போகும் ரிக்ஷாக்காரரை ஆறுமுகம் வா என்று தன் வீட்டுச் சிறுமி அழைத்தபோது இது தப்பு நீ அவரை அண்ணே என்றுதான் அவரை அழைக்க வேண்டும் என்று திருத்தினார். காலையில் குட்மார்னிங்  என்று வீட்டில் பிள்ளைகள் சொன்னால் எதற்கு குட்மார்னிங் வணக்கம் என்று சொல் எனத் திருத்துவார். வீட்டிலும் நாட்டிலும் தமிழ் மீது பற்றுக்கொண்டவராகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

கலைஞரை ஒரு முறை பத்திரிகையாளர் சோலை தன் கட்டுரையில் கருணாநிதி என்று குறிப்பிட்டிருந்தார். எம்.ஜி.ஆர் சோலையிடம் அவர் பெரியவர் அவரை பெயர் சொல்லி குறிப்பிடக் கூடாது அவரை கலைஞர் என்றோ கலைஞர் கருணாநிதி என்றோதான் குறிப்பிட வேண்டும் என்றார். ஆனால் இன்று இரு மாபெரும் இயக்கங்களின் தலைவரான அறிஞர் அண்ணாவின் இயற் பெயரில் அண்ணாதுரை என்று ஒரு படம் வருகிறது. திராவிட இயக்கங்கள் குறிப்பாக எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அவர் வழியைப் பின்பற்ற கடமைப்பட்டுள்ள அதிமுக கூட அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பெரியவர்களை பெயர் சொல்லி குறிப்பிடக் கூடாது என்பது தமிழ் மரபு அதுவும் குறிப்பாக அறிஞர் பெருமக்களை சங்க காலம் தொட்டு நாம் அவர் என்றுதான் குறிப்பிட்டு வருகிறோம். இயற்பெயரோடு ஆர் எனும் மரியாதைப் பன்மை விகுதி [honorific suffix] சேர்த்தே குறிப்பிட வேண்டும் என்பது தமிழ் இலக்கண மரபு.

பண்டிகை

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார். 

எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை  வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு.

எம்.ஜி.ஆர்

திருமணம்

எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால்  அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.

நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்

https://cinema.vikatan.com/tamil-cinema/news/108823-habits-which-made-mgr-an-icon-mgr-series-episode-24.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.