Jump to content

பாகிஸ்தான் எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி தொடர்


Recommended Posts

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

 

 

அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

8_Dinesh.jpg

அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக லஹிரு திரிமான்னே கடமையாற்றவுள்ளார்.

இவர்கள் தவிர, திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்சன் சந்தகன், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு கமகே ஆகியோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக வீரர்களாக, தனஞ்சய டி சில்வா, ஜெஃப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கிச் செல்லும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.virakesari.lk/article/24706

Link to comment
Share on other sites

புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி

Sri Lanka New Players
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவுள்ள இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம மற்றும் ரோஷன் சில்வா ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தான் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை அணி ஐக்கிய இராச்சியம் பயணிக்கவுள்ளது. இத்தொடரில் இலங்கை சார்பாக ஆடவுள்ள 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிரஹம் லப்ரோய் தலைமையிலான  தேசிய அணியின் தேர்வுக்குழாம் இன்று (20) வெளியிட்டுள்ளது.

 

செப்டம்பர் 28ஆம் திகதி அபுதாபி நகரில் இரு அணிகளுக்குமிடையிலான  முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகின்றது. டுபாயில் ஆரம்பமாகும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இலங்கை அணி விளையாடவுள்ள முதலாவது பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக அமையவுள்ளது.

 

நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்பட்ட 22 வயதேயான  இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம முதன்முறையாக இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினை இத்தொடர் மூலம் பெற்றுள்ளார்.

சதீர சமரவிக்ரம சதீர சமரவிக்ரம

 

இலங்கை கிரிக்கெட் வாரியம் 2016/17 ஆம் ஆண்டின் பருவகாலத்தில் நடாத்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 1016 ஓட்டங்களினை (6 அரைச் சதங்கள் மற்றும் 3 சதங்களுடன்) கொல்ட்ஸ் அணிக்காக குவித்த சதீர சமரவிக்ரம அத்தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரராக பதிவாகியிருந்தார்.

 

உள்ளூர் போட்டிகளின் துடுப்பாட்ட ஜாம்பவானாக திகழும் ரோஷென் சில்வாவும் இத்தொடர் மூலம் இலங்கை அணிக்கு முதற்தடவையாக அழைக்கப்பட்டுள்ளார். முதல்தரப் போட்டிகளில் 10 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினை கொண்டிருக்கும் சில்வா 100 இற்கு மேலான போட்டிகளில் ஆடி 18 சதங்களுடன் 26 அரைச் சதங்களினையும் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோஷென் சில்வா ரோஷென் சில்வா

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் பயிற்சியின்போது தொடை தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தொடரில் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்சின் இடத்தினை நிரப்பும் விதமாகவே ரோஷென் சில்வாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

குறைந்த உயரம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கெளசால் சில்வாவுக்கு இலங்கை அணியின் ஆரம்ப வீரராக மீண்டும் வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இலங்கைக்காக இறுதியாக தென்னாபிரிக்க அணியுடனான சுற்றுப் பயணத்தில்  ஆடியிருந்த சில்வா, இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப வீரர் உபுல் தரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து 6 மாதங்களுக்கு ஓய்வினை எடுத்துக்கொண்டதன் காரணமாகவே அணிக்கு மீண்டும் நுழையும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.

 

இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில்  இரண்டு பெறுமதியான அரைச் சதங்களை குவித்து தனது திறமையினை வெளிக்காட்டியிருந்த அழகிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லஹிரு திரிமான்னவும் இந்த தொடர் மூலம் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளார். திரிமான்ன கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தில்ருவான் பெரேரா இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2  விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியிருப்பினும் இலங்கை அணிக் குழாத்தில் தனது இடத்தில் நீடிக்கின்றார். இவருடன் சேர்ந்து அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் வலுப்படுத்துவர்.

வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தமது உபாதைகளிலிருந்து மீண்டு பூரண உடற்தகுதியுடன் காணப்படுவதால் அவர்கள் லஹிரு கமகே மற்றும் இடது கை பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாந்துவுடன் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியுடனான தொடரில் இலங்கையில் காணப்பட்ட இடது கை சுழல் வீரர் மலிந்து புஷ்பகுமார மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரத்ன, கெளசால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன (உப தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் பிரதீப் , லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து, ரோஷேன் சில்வா, லக்ஷன் சந்தகன், மலிந்த புஷ்பகுமார

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஹம்சா இடம்பிடித்துள்ளார். ஹரிஸ் சோஹைல், பிலால் ஆசிப் ஆகியோரும் உள்ளனர்.

 
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்
 
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு முன்பு ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி முகாமிற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது, அந்த தொடரில் விளையாடிய மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ்கான் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.

201709231701099387_1_bilalAsif-s._L_styv

எனவே பாகிஸ்தான் அணி அந்த இடத்தில் இரண்டு சிறந்த வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹரிஸ் சோஹைல், உஸ்மான் சலாகுதீன் ஆகியோர் மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ்கானுக்குப் பதிலாக களம் இறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

201709231701099387_2_harissohail001-s._L

இருவருக்கும் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது இதுதான் முதல் முறை. வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சா அணியில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. அசார் அலி, 2. ஷேன் மசூத், 3. சமி அஸ்லம், 4. பாபர் ஆசம், 5. ஆசாத் ஷபிக், 6. ஹரிஸ் சோஹைல், 7. உஸ்மான் சலாகுதீன், 8. சர்பிராஸ் அஹமது (கேப்டன்), 9. யாசீர் ஷா, 10. மொகமது அஸ்கார், 11. பிலால் ஆசிப், 12. மிர் ஹம்சா, 13. மொகமது அமிர், 14. ஹசன் அலி, 15. மொகமது அப்பாஸ், 16. வஹாப் ரியாஸ்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/23170109/1109561/PAK-Vs-SL-Uncapped-Hamza-Sohail-picked-for-SL-Tests.vpf

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யூனிஸ் கான், மிஸ்பா இல்லாமல் களமிறங்கும் பாக்.

 

 
27CHRELMISBAH

யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக்.   -  Getty Images

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நாளை தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுபெற்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய அம்சமாக யூனிஸ் கானும், மிஸ்பா உல் ஹக்கும் இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களைக் குவித்தவர் யூனிஸ் கான். 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 10,099 ரன்களைக் குவித்ததுடன், ஸ்லிப்பில் நின்று பல கேட்ச்களையும் பிடித்துள்ளார். அதே போல் 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிஸ்பா உல் ஹக், 10 சதங்களுடன், 5,222 ரன்களைக் குவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இவர்கள் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை பல போட்டிகளில் கரை சேர்த்துள்ளனர். 44 சதங்களைக் குவித்துள்ள இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 15 முறை 100 ரன்களுக்கு மேல் குவிந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்த இவர்களின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 9 தொடர்களில் ஒன்றில்கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது பாகிஸ்தான் அணி.

 

ஈடு செய்வது கடினம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது, “அணியின் பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாகத் திகழ்ந்த அவர்களின் இழப்பை ஈடு செய்வது கடினம். பாகிஸ்தான் அணிக்காக அவர்கள் இருவரும் பல சாதனைகளை செய்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் தற்போது அவர்கள் இல்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.

முன்னணி வீரர்களின் ஓய்வால் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ள நிலையில் யாசிர் ஷாவின் சுழற்பந்து வீச்சை நம்பி பாகிஸ்தான் அணி இப்போட்டியை எதிர் கொள்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் யாசிர் ஷா, 24 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பதால் பாகிஸ்தான் அணி அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வென்று, தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளது. - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article19761170.ece

Link to comment
Share on other sites

புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி  
Sri Lanka vs Pakistan Test Series Preview

புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி  

PAKvSL-web-banner-728.jpg

உலகக் கிண்ணம், T-20 உலக சம்பியன்ஷிப், சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய .சி.சியின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர்கள் மூன்றினையும் இதுவரையில் நான்கு நாடுகளே வெற்றி கொண்டுள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களுக்கே சிம்மசொப்பனமான இந்த மூன்று வகை தொடர்களின் கிண்ணங்களையும் கைப்பற்றிய நான்கு நாடுகளில் ஒன்றான இலங்கை, “அடுத்த உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுமா? “என்கிற வினாவோடு அண்மைய நாட்களில் இக்கட்டான நிலையொன்றில் இருந்தது.  

எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள் இன்றைய நாட்களில் தடைகளை எல்லாம் உடைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இலங்கை அணியும் எதிர்காலத்தில் மீண்டுவர முடியும் என்பதற்கு சிறந்த சான்றாகவே உள்ளது.

அந்த வகையில், இலங்கை வீரர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுடான தொடர் தங்களது அணியினை பழைய நிலைக்கு கொண்டுவரவும், அணியின் கௌரவத்தினை மீட்டுக்கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கடல் கடந்த இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (28) அபுதாபியில் ஆரம்பமாகின்றது.

எனவே, இரு அணிகளுக்கும் இடையிலான  டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை  நாம் இக்கட்டுரையின் மூலம் பார்க்கவுள்ளோம்.

இலங்கைபாகிஸ்தான் டெஸ்ட் போட்டி வரலாறு

தமக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த 1982ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணி, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றது. இரண்டு அணிகளும் இதுவரையில் 51 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடனேயே அதிக தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை  விஷேட அம்சமாகும்.

இரண்டு அணிகளும் மோதிய போட்டிகளில் 19 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதுடன் 14 போட்டிகளில் இலங்கை வெற்றியாளராக தனது நாமத்தை பதித்துள்ளது. 18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளன.

அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்

2015 ஆம் ஆண்டு இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு  தொடரின் போது இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக சந்தித்துக்கொண்டன. மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரினை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.

இலங்கை அணியின் அண்மைக்காலம் குறித்து குறிப்பிடும்பொழுது, இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.

எனினும் பின்னர் இடம்பெற்ற ஜீம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியை சுவைத்தது.

இந்தியாவின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் இலங்கை தோல்வியினை தழுவி இருப்பினும், அத்தொடர் தோல்விகள் தமது அணியின் வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவியிருந்ததாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் நிக் போத்தஸ் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

டெஸ்ட் தரவரிசையில் 7 ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை அணியினால் இந்த வருடத்தில் பலம் குறைந்த அணிகளான ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக மாத்திரமே வெற்றிகளை பதிவு செய்ய முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை வீரர்கள் கடந்த வருடத்தில் சவால் மிக்க அவுஸ்திரேலிய அணியினை தமது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்திருந்தனர். அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களையும் தமது அண்மைய தவறுகளைத் திருத்தியும் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இலங்கை சரியான விதத்தில் செயற்படுமாயின் நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.

இத் தொடரின் இரண்டாவது போட்டியில் முதற் தடவையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடவுள்ள இலங்கை அணி, 2016ஆம் ஆண்டிலிருந்து 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அவற்றில் 7 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை எடுத்துப்பார்க்கும் போது, இலங்கை அணியினைப் போன்ற ஒரு மோசமான பதிவையே அவர்களும் அண்மைய வருடங்களில் வைத்திருக்கின்றனர்.

இறுதியாக மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்த பாகிஸ்தான் அணி, அதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.

அதே போன்று, 2016 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், யாராலும் எதிர்வு கூற முடியாத அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அமைவது வழமையான விடயமாகும்.

இலங்கை அணி

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பதவியினை சனத் ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் இராஜினாமா செய்த பின்னர், கிரஹம் லப்ரோய் தலைமையிலான புதிய தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட்ட இலங்கை குழாமே ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகியுள்ளது.

இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் கவனம் செலுத்த 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக்கொண்ட காரணத்தினால் அவர் இம்முறை குழாத்தில் உள்ளடக்கப்படவில்லை.

மேலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், மத்திய வரிசை வீரர் அசேல குணரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் காயம் காரணமாக அணியில் உள்வாங்கப்படாமை இலங்கைக்கு பாரிய இழப்பாகும். எனவே, அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் பலருடனேயே இலங்கை பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.

தற்போது அணியில் இருப்பவர்களில், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்னவுடன் இணைந்து குசல் மெண்டிஸ் வலுப்படுத்தலாம் என எதிர்பார்க்க முடியும். இலங்கை அணிக்காக 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (634) குவித்த வீரராக திமுத் கருணாரத்ன காணப்படுகின்றார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 6  டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் கருணாரத்ன மொத்தமாக 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

Dimuth திமுத் கருணாரத்ன

இன்னும் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பினை பெற்ற லஹிரு திரிமான்னவும் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள் என்பதில் ஐயமில்லை.

ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப வீரரான நிரோஷன் திக்வெல்ல டெஸ்ட் போட்டிகளில் மத்திய வரிசையில் அணியினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட வீரராக காணப்படுகின்றார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் திக்வெல்ல 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 227 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Niroshan Dickwella நிரோஷன் திக்வெல்ல

இன்னும் அணியில் வெற்றிடமாகவுள்ள மெதிவ்ஸ் மற்றும் தரங்க ஆகியோரின் இடத்தினை நிரப்ப அறிமுக வீரர்களான ரோஷென் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை எதிர்பார்க்க முடியும். பத்து வருடங்களுக்கு மேலாக முதல்தரப் போட்டிகளில் அனுபவம் கொண்ட ரோஷென் சில்வா 50 இற்கு அண்மித்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார்.

Roshen Silva ரோஷென் சில்வா

அதோடு வெறும் 22 வயதேயான சதீர சமரவிக்ரம 2016/17 ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில்  இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்பட்ட முதல்தர அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sadeera சதீர சமரவிக்ரம

பந்து வீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது இலங்கை அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நுவான் பிரதீப் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அதோடு, சுரங்க லக்மாலும் மீண்டும் பூரண உடற்தகுதியினை அடைந்துள்ளார்.

இவர்களோடு சேர்த்து அணியின் மூத்த சுழல் வீரர் ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகியோரும் இலங்கைக்கு உபயோகமாக காணப்படுவார்கள். இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் 7 போட்டிகளில் ஆடியிருக்கும் ஹேரத், மொத்தமாக 35 விக்கெட்டுக்களை கைப்பற்றி மேம்பட்ட ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ரங்கன ஹேரத் ரங்கன ஹேரத்
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

திமுத் கருணாரத்ன,  சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன, ரொஷேன் சில்வா, தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், சுரங்க லக்மால்

 

பாகிஸ்தான் அணி

மிஸ்பாஹூல் ஹக் மற்றும் யூனுஸ் கான் போன்ற அனுபவமிக்க வீரர்களின் ஓய்வினை அடுத்து சர்பராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியினை நோக்கும் போது, அவர்களும் பல இளம் வீரர்களை கொண்ட நிலையிலேயே இலங்கையை எதிர்கொள்கின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை நெருங்கியிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அசார் அலி பாகிஸ்தானின் துடுப்பாட்ட தூண்களில் ஒருவராக செயற்படலாம். 46 ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினைக் கொண்டிருக்கும் அலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் இரண்டு அபார சதங்களை விளாசி தனது அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார். எனவே, இவர் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய முக்கிய வீரர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

அசார் அலி ©AFP அசார் அலி ©AFP

இன்னும், அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மட், பாபர் அசாம் மற்றும் அசாத் சபீக் ஆகிய வீரர்களையும் பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தக் கூடிய  துடுப்பாட்ட வீரர்களாக கருத முடியும். இதில் அசாத் சபீக் 40 இற்கு அண்மித்த டெஸ்ட் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் ஒரு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

31 வயதாகும் சுழல் வீரரான யாசிர் சாஹ் இலங்கை அணிக்கு நெருக்கடி தந்து பாகிஸ்தானை வலுப்படுத்தக் கூடிய முக்கிய சுழல் பந்து வீச்சாளராவார். இலங்கை அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தமாக 25 விக்கெட்டுக்களை கைப்பற்றிய யாசிர், தொடர் நாயகனாகவும் தெரிவாகியிருந்தார்.

யாசிர் சாஹ் ©Getty Images யாசிர் சாஹ் ©Getty Images

இன்னும், சூதாட்ட புகாரில் இருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த மொஹமட் ஆமீரும் பாகிஸ்தானின் துருப்புச்சீட்டுக்களில் ஒன்றாக காணப்படுகின்றார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆமீர் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். ஆமீருடன் சேர்த்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி மற்றும் அனுபவமிக்க வஹாப் ரியாஸ் ஆகியோர் பாகிஸ்தானின் பந்துவீச்சு துறையினை மேம்படுத்துவார்கள் என நம்பிக்கை கொள்ள முடியும்.

மொஹமட் அமீர் ©Getty Images மொஹமட் அமீர் ©Getty Images
எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி

அசார் அலி, ஷான் மஸூத், பாபர் அசாம், அசாத் சபீக், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), ஹரிஸ் சொஹைல், மொஹமட் மீர், மொஹமட் அப்பாஸ், யாசிர் சாஹ், வஹாப் ரியாஸ், ஹசன் அலி

எனவே, இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுடான தொடரில் இழந்த பெருமைகளை மீட்பார்களா? இல்லை மோசமான ஆட்டத்தை வழமை போன்று தொடருவார்களா? என்பதை தொடர் நிறைவடைந்த பின்னரே நாம் அறிய முடியும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

புதுவிதிகளுடன் இன்றைய போட்டி : இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

 

 

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்டி அபு­தா­பியில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. 

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண் டாவது போட்டி பகலிரவு டெஸ்டாக நடைபெறவுள்ளது.  தொடர் தோல்­வி­களால் துவண்டு போயுள்ள இலங்கை அணி பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொட­ருடன் நிமிரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதன்­ப­டி புதிய பழைய இளைய வீரர்கள் என ஒரு கல­வை­யாக டுபாய் சென்­றுள்­ளது இலங்கை அணி.

மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற ஜாம்­ப­வான்கள் ஓய்­வு­பெற்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்­டியை பாகிஸ்தான் அணி எதிர்­கொள்­கி­றது.

கடந்த 10 ஆண்­டு­களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்­கிய அம்­ச­மாக யூனிஸ் கானும், மிஸ்பா உல் ஹக்கும் இருந்­துள்­ளனர். டெஸ்ட் போட்­டி­களில் பாகிஸ்தான் அணிக்­காக அதிக ஓட்­டங்­களைக் குவித்­தவர் யூனிஸ்கான். 

கடந்த காலங்­களில் நடந்த டெஸ்ட் போட்­டி­களில், இவர்கள் இரு­வரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை பல போட்­டி­களில் கரை சேர்த்­துள்­ளனர். 

முன்­னணி வீரர்­களின் ஓய்வால் துடுப்­பாட்ட வரிசை பல­வீ­ன­மாக உள்ள நிலையில் யாசிர் ஷாவின் சுழற்­பந்து வீச்சை நம்பி பாகிஸ் தான் அணி இப்­போட்­டியை எதிர் கொள்­கி­றது. 

2 ஆண்­டு­க­ளுக்கு முன் இலங்கை அணிக்கு எதி­ராக நடந்த டெஸ்ட் தொடரில் யாசிர் ஷா, 24 விக்­கெட்­டுக்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார் என்­பதால் பாகிஸ்தான் அணி அவ­ரிடம் இருந்து நிறைய எதிர்­பார்க்­கி­றது. அதே நேரத்தில் இலங்கை அணி, பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொடரில் வென்று, தங்கள் செல்­வாக்கை நிலை­நி­றுத்­திக்­கொள்ளும் எண்­ணத்தில் உள்­ளது. - 

இன்­றைய போட்­டியில் உள்ள இலங்­கையும் சரி பாகிஸ்­தானும் சரி தங்­களை நிலை­நி­றுத்திக் கொள்­ளவும் உல­குக்கு தங்­களை நிரூ­பிக்­கவும் இந்த டெஸ்ட் தொடரை பயன்­ப­டுத்­தப்­போ­வது நிச்­சயம்.

இன்று காலை. 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/25015

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

 

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

http://www.virakesari.lk/article/25022

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கை 4 விக்கெட்களை இழந்தது

 


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கை 4 விக்கெட்களை இழந்தது
 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று ஆரம்பமானது.

முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

அபுதாபி ஷெய்க் ஷாஹிட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 61 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

லஹிரு திரிமான்னவை ஆட்டமிழக்கச் செய்த யசீர் ஷா தனது 150 ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மத்திய வரிசையில் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி நான்காம் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

திமுத் கருணாரத்ன தனது 13 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

205 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்ற அவர் ரன் அவுட் ஆனார்.

தனது 13 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய தினேஷ் சந்திமால், 60 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

http://newsfirst.lk/tamil/2017/09/பாகிஸ்தானுக்கு-எதிரான-டெ/

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை நிதான ஆட்டம்

 

 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நேற்­றைய நாள் ஆட்ட நேர முடிவில் திமுத் மற்றும் சந்­தி­மாலின் நிதான ஆட்­டத்­தினால் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 227 ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ளது.

sri-lanka-pakistan-cricket.jpg

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நேற்று அபு­தா­பியில் தொடங்­கி­யது. 

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார். 

அதன்­படி திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஜோடி கள­மி­றங்­கி­யது. நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு அணியில் இணைக்­கப்­பட்ட கௌஷால் சில்வா தனது திற­மையை இந்தப் போட்டியில் நிரூ­பிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் 12 ஓட்­டங்­க­ளுடன் அசன் அலியின் பந்­து­வீச்சில் போல்­டாகி ஏமாற்­றினார்.

அதனைத் தொடர்ந்து வந்த இலங்கை அணியின் உப தலைவர் திரி­மான்ன ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்­சி­ய­ளித்தார். திரி­மான்­னவைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் கள­மி­றங்­கினார். 

கடந்த சில போட்­டி­களில் தனது ஆட்­டத்­தி­றனை நிரூ­பிக்கத் தவ­றி­வரும் குசல் இந்தப் போட்­டி­யி­லா­வது முன்­னேற்றம் காண்­பாரா என்று எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நிலையில் 10 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து அவரும் ஏமாற்­றினார்.

61 ஓட்­டங்­க­ளுக்கு மூன்று விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலையில் இருந்த இலங்கை அணியை தமது நிதான ஆட்­டத்­தினால் தூக்கி நிறுத்­தினர் அணித் தலைவர் சந்­திமால் மற்றும் திமுத் கரு­ணா­ரத்ன ஆகியோர்.

இவர்­களின் நிதான ஆட்­டத்­தினால் பாகிஸ்தான் வீரர்கள் கடும் சிர­மப்­பட்­டனர். பாகிஸ்தான் அணியின் நம்­பிக்கைப் பந்­து­வீச்­சா­ள­ரான யசீர் ஷா கூட இந்த ஜோடியை பிரிக்க பெரும் சிர­மப்­பட்­டார். இந்த நிலையில் இரு­வரும் அரைச்­சதம் கடக்க நங்­கூ­ர­மிட்­ட­துபோல் நின்­றது இந்த ஜோடி.

திமுத் கரு­ணா­ரத்ன 205 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 93 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் ரன்­அவுட் முறையில் ஆட்­ட­மி­ழந்து 7 ஓட்­டங்­களால் சதத்தைத் தவ­ற­விட்டார். அதன்­பி­ற­குதான் பாகிஸ்தான் பந்­து­வீச்­சா­ளர்கள் நிம்­மதி பெரு­மூச்சு விட்­டனர்.

ஆனால் அடுத்து வந்த நிரோஷன் திக­்வெல்ல சந்­தி­மா­லுடன் ஜோடி சேர்ந்து 42 ஓட்­டங்­களைப் பெற்று நேற்­றைய ஆட்­ட­நேர முடி­வு­வரை களத்தில் நிற்க மறு­மு­னையில் நின்ற சந்­திமால் 184 பந்­து­க­ளுக்கு 60 ஓட்­டங்­களைப் பெற்று அவ­ருக்கு துணை நின்றார்.

நேற்றைய முதல் நாளின் ஆட்ட

நேர முடிவில் இலங்கை 4 விக்கெட்

டுக்களை இழந்து 227 ஓட்டங் களைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் யசீர் ஷா 2 விக்கெட்

டுக்களையும், அசன் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/25063

Link to comment
Share on other sites

தினேஷ் சந்திமாலின் சதத்துடன் இமாலய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை
Dinesh-Chandimal7.jpg

தினேஷ் சந்திமாலின் சதத்துடன் இமாலய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை

 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் அபார சதத்துடன் இலங்கை அணி தம்முடைய முதல் இன்னிங்சினை சிறப்பாக நிறைவு செய்துள்ளது.

போட்டியின் முதல் நாளில்  ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் அரைச் சதங்களுடன் போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களினை குவித்திருந்தது. களத்தில் தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

 

தமது முதல் இன்னிங்சினை இன்று தொடர்ந்த இலங்கை அணியில், போட்டி ஆரம்பித்து சிறு நிமிடங்களில் நிரோஷன் திக்வெல்ல தன்னுடைய ஆறாவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து இலங்கையை வலுப்படுத்திய நிரோஷன் திக்வெல்ல இன்றைய நாளின் முதல் விக்கெட்டாகவும் இலங்கை அணியின் ஐந்தாவது விக்கெட்டாகவும் பறிபோயிருந்தார். 112ஆவது ஓவரில் ஹசன் அலியினால் போல்ட் செய்யப்பட்ட திக்வெல்ல 117 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 83 ஓட்டங்களினை பெற்று தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்சினை பதிவு செய்திருந்தார்.

நிரோஷன் திக்வெல்ல ஐந்தாம் விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமாலுடன் பகிர்ந்துகொண்ட 134 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 300 ஓட்டங்களை அண்மித்து ஸ்திர நிலை ஒன்றினை அடைந்து கொண்டது.

மதிய போசண இடைவேளை அண்மித்த வேளையில் தினேஷ் சந்திமால் தனது 9 ஆவது டெஸ்ட் சதத்தினையும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பை பெற்றுக்கொண்ட பின்னர் முதலாவது சதத்தினையும் பூர்த்தி செய்தார்.

இலங்கை அணியின் மத்திய வரிசை விக்கெட்டுக்களை சரிக்க சிரமப்பட்ட பாகிஸ்தான் தரப்பு  போட்டியின் 120 ஆவது ஓவரில் இறுதியாக களம் நுழைந்த தில்ருவான் பெரேராவினை ஓய்வறை அனுப்ப முயற்சி (LBW) செய்திருந்த போதிலும் மூன்றாம் நடுவரின் தீர்ப்புடன் தில்ருவான் பெரேரா காப்பாற்றப்பட்டார்.

தொடர்ந்து தினேஷ் சந்திமால் மற்றும் தில்ருவான் பெரேரா ஜோடி ஆறாவது விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த நிலையில், இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டாக பாகிஸ்தானின் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைலினால் தில்ருவான் பெரேரா வீழ்த்தப்பட்டார். நீண்ட நேரம் களத்தில் நின்ற பெரேரா 33 ஓட்டங்களை பெற்றார்.

அடுத்து வந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் எவரும் 10 ஓட்டங்களையேனும் கடக்காத நிலையில், போட்டியின் தேநீர் இடைவேளை நிறைவடைந்து சிறிது நேரத்தில் 154.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 419 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.

 

 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொறுப்புடன் நின்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மொத்தமாக 372 பந்துகளினை எதிர்கொண்டு 14 பெளண்டரிகளுடன் 155 ஓட்டங்களினை பெற்று சிறப்பாக செயற்பட்டதுடன் மிகவும் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றினையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அணியின் இறுதி மூன்று விக்கெட்டுக்களையும் 16 ஓட்டங்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில், மொஹமட் அப்பாஸ் மற்றும் யாசிர் சாஹ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதமும், ஹசன் அலி இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சினை ஆரம்பித்த பாகிஸ்தானின் இளம் வீரர்கள் உறுதியான தொடக்கம் ஒன்றினை தந்திருந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவின் போது 23 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 64 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்களான சான் மசூத் 30 ஓட்டங்களுடனும், சமி அஸ்லம் 31 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

 

அசார் அலியின் போராட்டத்தால் வலுவான நிலையில் பாகிஸ்தான்

 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூத், சமி அஸ்லம் மற்றும் அசார் அலி ஆகியோரின் அரைச் சதங்களுடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை முதல் இன்னிங்சினை (419 ஓட்டங்களுடன்) நிறைவு செய்த பின்னர், பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 23 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 64 ஓட்டங்களினைப் பெற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது சிறப்பான தொடக்கம் ஒன்றினை வெளிக்காட்டியிருந்தது. களத்தில் ஆரம்ப வீரர்களான ஷான் மசூத் 30 ஓட்டங்களுடனும் சமி அஸ்லம் 31 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

 

இலங்கை அணியினை விட 355 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.

பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்கள் முதலாம் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இலங்கைக்கு மிகவும் தேவையாக காணப்பட்டிருந்த பாகிஸ்தானின் முதல் விக்கெட்டினை போட்டியின் 45 ஆவது ஓவரில் தில்ருவான் பெரேரா மூன்றாம் நடுவரின் உதவியோடு கைப்பற்றியிருந்தார். இதனால் தனது 7 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்த சமி அஸ்லம் 51 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.  

சமி அஸ்லமின் விக்கெட்டினை அடுத்து, தில்ருவான் பெரேரா வீசிய அதே ஓவரில் புதிய துடுப்பாட்ட வீரராக மைதானம் விரைந்த அசார் அலியின் விக்கெட்டினை கைப்பற்றும் சந்தர்ப்பம் ஒன்றும் LBW முறையில் இலங்கைக்கு கிட்டியது. எனினும், மூன்றாம் நடுவர் அது ஆட்டமிழப்பில்லை என தீர்ப்பு வழங்க பாகிஸ்தானுக்கு அதிஷ்டம் கைகொடுத்தது.

எனினும் முதலாம் விக்கெட்டினை அடுத்து சில நிமிடங்களில் போட்டியின் மதிய போசண இடைவேளைக்கு முன்பாக இலங்கையின் முன்னணி சுழல் வீரர் ரங்கன ஹேரத்தினால் பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. இம்முறை, அரைச் சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்த மற்றைய ஆரம்ப வீரர் ஷான் மசூத் போல்ட் செய்யப்பட்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

 

மதிய போசண இடைவேளையினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில்  புதிய வீரர்களான அசார் அலி மற்றும் அசாத் சபீக் ஆகியோர் மந்த கதியிலாக ஓட்டங்கள் சேர்த்து போதும் தமது அணியினை மெதுவாக கட்டியெழுப்பினர். மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை இலங்கை வீரர்களால் பாகிஸ்தானின் மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியாது போயிருந்தது.

இன்று 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பாகிஸ்தானின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர் அசார் அலி தனது 5,000 ஆவது டெஸ்ட் ஓட்டத்தினை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேநீர் இடைவேளையினை அடுத்து புதிய பந்தின் மூலம் பாகிஸ்தானின் மூன்றாம் விக்கெட்டினை ரங்கன ஹேரத் கைப்பற்றியிருந்தார். இதனால் மூன்றாம் விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களினை பகிர உதவிய அசாத் சபீக் 39 ஓட்டங்களுடன் இலங்கை வீரர் லஹிரு திரிமான்ன எடுத்த பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார்.

எனினும், அசார் அலியின் 26 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தோடும், புதிய துடுப்பாட்ட வீரர் பாபர் அசாமின் ஓட்ட உதவியோடும் பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களினை நெருங்கி வலுவடைந்தது.

71 ஓட்ட இணைப்பாட்டத்துடன் பாகிஸ்தானின் நான்காம் விக்கெட் பறிபோக போட்டியின மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தானின் நான்காம் விக்கெட்டாக நுவான் பிரதீப்பினால் வீழ்த்தப்பட்ட பாபர் அசாம் நல்லதொரு ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும் அதனை நீண்ட இன்னிங்சாக மாற்றத்தவறி 28 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார்.

போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின் போது பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 112.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியினை விட 153 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அசார் அலி 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.  

இலங்கை அணி சார்பான இன்றைய பந்து வீச்சில் பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் படி செயற்பட்ட ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 419 (154.5) தினேஷ் சந்திமால் 155(372)*, திமுத் கருணாரத்ன 93 (205), நிரோஷன் திக்வெல்ல 83(117), யாசிர் சாஹ் 120/3 (57), மொஹமட் அப்பாஸ் 75/3 (26.5), ஹசன் அலி 88/2 (27)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ் ) – 266/4 (112.4) அசார் அலி 74(200)*, ஷான் மசூத் 59(148), சமி அஸ்லம் 51(130), ரங்கன ஹேரத் 47/2 (25)

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்

 

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்த ஹரிஸ் சொஹைல்; தடுமாற்றமான நிலையில் இலங்கை
crick-1.jpg

பாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்த ஹரிஸ் சொஹைல்; தடுமாற்றமான நிலையில் இலங்கை

 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது  டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைலின் பொறுப்பான ஆட்டத்துடன் பாகிஸ்தான் தமது முதல் இன்னிங்சை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளதுடன், சிறப்பான பந்துவீச்சையும் வெளிக்காட்டியுள்ளது.

 

போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடியிருந்த பாகிஸ்தான், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியோடு 112.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அசார் அலி 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தார்.

பாகிஸ்தான் ஆட்டத்தின் நான்காம் நாளில் தமது முதல் இன்னிங்சை இலங்கை அணியை விட 153 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்தது.

போட்டி ஆரம்பித்து 122 ஆவது ஓவர் வீசப்பட்ட பொழுது இலங்கை வீரர்களுக்கு இன்றைய நாளின் முதல் விக்கெட்டைப் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைந்திருந்த போதிலும் அது கைகூடியிருக்கவில்லை. தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சு மூலம் அசார் அலி மீது LBW சந்தேக கோரிக்கை ஒன்றைக் கேட்டு இலங்கை வீரர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடியிருந்தனர். எனினும் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக, இப்போட்டியில் இரண்டாவது தடவையாக அசார் அலி காப்பற்றப்பட்டிருந்தார்.

எனினும் நீண்ட நேரம் அதிர்ஷ்டம் கைகொடுக்காத நிலையில் அசார் அலி ரங்கன ஹேரத்தின் ஓவரில் பதில் வீரராக களத்தடுப்பில் ஈடுபட்ட சதீர சமரவிக்ரம எடுத்த அழகிய பிடியெடுப்பு ஒன்றின் மூலம் ஆட்டமிழந்திருந்தார். பாகிஸ்தானின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அசார் அலி 226 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தானுக்காக சிறப்பாக செயற்பட்ட அசார் அலியின் விக்கெட்டைத் தொடர்ந்து களம் நுழைந்திருந்த அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஒரு உறுதியான ஆரம்பத்தை தந்திருந்த போதிலும், அதனை நீடிக்க முடியாமல் 18 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார்.

இன்னும் இலங்கை வீரர்கள் குறுகிய நேர இடைவெளியில் பாகிஸ்தானின் இரண்டு விக்கெட்டுகளை சாய்க்க போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது பாகிஸ்தான் 340 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டது.

மதிய போசண இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் ஆறாம் இலக்கத்தில் களமிறங்கியிருந்த பாகிஸ்தானின் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைல் அணியின் மோசமான நிலை அறிந்து விவேகமான முறையில் துடுப்பாடத் தொடங்கினார்.

இதனால் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தானின் இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த 82 ஓட்டங்களை வழங்க வேண்டி ஏற்பட்டது. போட்டியில் மூன்றாவது தடவையாக எடுக்கப்பட்ட புதிய பந்தின் பின்னர் பாகிஸ்தான் 162.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 422 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.

தனது கன்னி டெஸ்ட் அரைச்சதத்துடன் பாகிஸ்தானுக்கு வலுவூட்டிய சொஹைல் 161 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அத்தோடு பின்வரிசையில் அதிரடியாக ஆடிய ஹசன் அலி 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உடன் 29 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் இடது கை சுழல் வீரர் ரங்கன ஹேரத் மொத்தமாக 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை இவ்வாறாக ஒரே இன்னிங்சில் சாய்ப்பது இது 32 ஆவது தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்னும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சுடன் சேர்த்து, போட்டியின் தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாகிஸ்தானை விட 3 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது  இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி மோசமான ஆரம்பத்தைக் காட்டியிருந்தது.

 

முதல் இன்னிங்சில் குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன இம்முறை வெறும் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். அத்தோடு முதல் இன்னிங்ஸ் போல் லஹிரு திரிமான்ன, கெளஷால் சில்வா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை இம்முறையும் காட்டியதோடு, அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன் காரணமாக போட்டியின் நான்காம் நாள் நிறைவில் இலங்கை அணி 40 ஓவர்களுக்கு 4  விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களுடன் இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது. களத்தில் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் 2 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.

பாகிஸ்தான் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுழல் வீரர் யாசிர் ஷாஹ் இலங்கையின் 2 விக்கெட்டுகளை இந்த இன்னிங்சில் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) –  419 (154.5) தினேஷ் சந்திமால் 155(372), திமுத் கருணாரத்ன 93(205),  நிரோஷன் திக்வெல்ல 83(117), யாசிர் ஷாஹ் 120/3(57), மொஹமட் அப்பாஸ் 75/3(26.5), ஹசன் அலி 88/2(27)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 422 (162.3)அசார் அலி 85(226), ஹரிஸ் சொஹைல் 76(161), ஷான் மசூத் 59(148), சமி அஸ்லம் 51(130), ரங்கன ஹேரத் 93/5 (40), சுரங்க லக்மால் 42/2(22), நுவன் பிரதீப் 77/2(25.3)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 69/4 (40) – கெளஷால் சில்வா 25(87), குசல் மெண்டிஸ் 16*(63), யாசிர் ஷாஹ் 25/2(14)

போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

வெல்லப்போவது யார் ? வெற்றியை நோக்கி பாகிஸ்தான்.... இலங்கை...

 

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறும் நோக்கில் இன்றை 5 ஆவது நாளான இறுதிநாளில் களமிறங்கியுள்ளன.

pakistan.jpg

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது. 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 422ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து  138 ஓட்டங்களைப்பெற்றது.

இந்நிலையில் இன்றைய ஆட்டநேர நிறைவுக்குள்  136 ஓட்டங்களைபெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மதிய நேர இடைவேளைக்குப் பின்னர் 16 ஓட்டங்களைப்பெற்று 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியா? பாகிஸ்தான் அணியா வெல்லப்போவதென பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/25214

26/3 (15 ov, target 136)
Day 5: Pakistan require another 110 runs with 7 wickets remaining
33/4 (17 ov, target 136)
Link to comment
Share on other sites

419 & 138
 
 
 
422 & 114 (47.4 ov)
 

Sri Lanka won by 21 runs

 

 

 

 
 

Pakistan's first loss in Abu Dhabi is sealed by their chief tormenter Rangana Herath. It's also his 400th wicket.

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

டெஸ்ட் போட்டிகளில் மற்றொரு மைல்கல்லை எட்டிய ரங்கன ஹேரத்திற்கு வாழ்த்துக்கள்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

Bild könnte enthalten: 1 Person, lächelnd, machen Sport und Text

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை வெற்றிகொண்டது இலங்கை

Published by Priyatharshan on 2017-10-02 19:10:46

 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்றிலை பெற்றுள்ளது.

sri-lanka.jpg

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சந்திமல் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுக்க, திமுத்து கருணாரத்ன 93 ஓட்டங்களையும் டிக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் மொஹமட் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  422 ஓட்டங்களைப்பெற்று 3 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசர் அலி 83 ஓட்டங்களையும் ஹரிஸ் சொகைல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் அசத்திய இலங்கையின் சுழல் மன்னன் 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

3 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து  138 ஓட்டங்களைப்பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த டிக்வெல்ல ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் யசீர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்நிலையில் இன்றைய 5 ஆம் நாள் ஆட்டநேர நிறைவுக்குள்  136 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இலங்கையின் பந்துவீச்சளார்களின் மிகவும் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்கத் தடுமாறி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப்பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

21 ஓட்டஙகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் மன்னன் ரங்கன ஹேரத், 400 விக்கடெ்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற உலகசாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/25226

Link to comment
Share on other sites

எமது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இது – மகிழ்ச்சியின் உச்சத்தில் சந்திமால்

சொந்த மண்ணில் இந்திய அணியுடன் இடம்பெற்ற மூன்று வகைப் போட்டிகள் ஒன்பதையும் கோட்டை விட்டு  தோல்விகளையே சந்தித்து வந்த இலங்கை அணி, அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மோசமான நிலையொன்றில் இருந்து மீண்டு கொண்டமைக்காக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆறுதல் அடைந்துள்ளார்.

நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றோம். அனைவரும் கடினமாக உழைத்தனர். எங்கள் கடின உழைப்புக்கான பலன் எமக்கு கிட்டியிருக்கின்றது, “ என சந்திமால் முதல் டெஸ்ட்டின்  பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றிய 6 விக்கெட்டுக்களோடு, மொத்தமாக போட்டியில் 11 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆட்ட நாயகனாக தெரிவான இலங்கையின் முன்னணி சுழல் நாயகன் ரங்கன ஹேரத் பற்றியும் குறிப்பிட்ட சந்திமால் ரங்கன (ஹேரத்) ஒரு சிறந்த வீரர். அவர் எனக்கு மிகப் பெரியளவில் உறுதுணையாக காணப்படும் ஒரு நபர். இன்னும் தனது அனுபவங்களையும் சக அணி வீரர்களிடம் அவர் பகிர்ந்து கொள்கின்றார். திறமை மிக்க அவர் எமது அணிக்கு கிடைத்திருப்பது என்பது மிகவும் பெறுமதியானது. “ என குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த வருடத்தில் ரங்கன ஹேரத் தனது 40 ஆவது அகவையை எட்டப் போவதைப் பற்றியும் சிறிது கவனம் செலுத்தியிருந்த சந்திமால், அவருக்கு வயது அதிகரிப்பது இப்போதைக்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இல்லையென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு (ஹேரத்துக்கு) இப்போது 39, தற்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. எனினும் அவர் எப்போதும் தன்னால் வழங்க முடிந்த சிறப்பானதையே தருகின்றார். நான் விளையாடும் போதெல்லாம் அது தொடர வேண்டும் என ஆவல் கொள்கின்றேன். “

இலங்கை அணியானது குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்ட யாசிர் சாஹ்வின் பிடியெடுப்போடு 24 ஓட்டங்களுக்குரிய வெற்றியொன்றினை கொண்டாடியிருந்தது. எனினும், சில நிமிடங்களில் போட்டி நடுவர்கள் பாகிஸ்தானின் இறுதி விக்கெட்டுக்காக தில்ருவான் பெரேரா வீசிய அந்தப் பந்து முறையற்றது (No Ball) என அறிவிக்க இலங்கை வீரர்களின் ஆரவாரம் முடிவுக்கு வந்தது. இது பற்றியும் பேசியிருந்த சந்திமால் அதனை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

அந்த விக்கெட்டினை (யாசிர் சாஹ்வின்) நாங்கள் கைப்பற்றிய பின்னர், நீண்ட காலம் கொண்டாட காத்திருந்த ஒரு வெற்றியின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்த தொடங்கியிருந்தோம். எனினும், அது முறையற்ற பந்து என போட்டியின் மூன்றாம் நடுவர் அறிவிக்க நாம் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தோம். அதிலும் (பந்தினை வீசிய)தில்ருவான் பெரேரா மிகவும் துன்பத்துக்கு ஆளாகியிருந்தார். நானும், ஹேரத்தும் இணைந்து அது வெறும் ஒரு பந்துதான் இன்னும் அவர்கள் பெற அதிக ஓட்டங்கள் இருக்கின்றன, சரியான முறையில் அடுத்த பந்துகளை வீசினால் போதும் எனக்கூறி  தில்ருவான் பெரேராவுக்கு ஆறுதல் வழங்கினோம். “

இந்த போப்போட்டியில் இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல வழங்கிய பங்களிப்பினையும் மறுக்க முடியாது. நான்கு விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களுடன் போட்டியின் ஐந்தாம் நாளினை ஆரம்பித்த இலங்கை வீரர்களுக்கு, திக்வெல்ல பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களின் உதவியே 136 ஓட்டங்களை வெற்றி இலக்காக தீர்மானித்தது. அதோடு, இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான திக்வெல்ல போட்டியின் முதல் இன்னிங்சில் 83 ஓட்டங்களைப் பெற்று தனது தனிப்பட்ட ரீதியான சிறந்த டெஸ்ட் இன்னிங்சினையும் காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திக்வெல்ல அவரது போராட்டம் மூலம் எமக்கு இரண்டாம் இன்னிங்சில் 140 ஓட்டங்களுக்கு கிட்டவான இலக்கு ஒன்றினை அடைய உதவினார். (இந்த இலக்கினை பாகிஸ்தான் பெறுவதை) ரங்கன ஹேரத் என்கிற சிறந்த வீரர் எமக்கு உதவுபவர் என்பதும் தெரியும். இறுதியாக எமக்கு அவர் தனது சிறப்பாட்டம் மூலம் பெறுமதியினை தந்தார். “  எனக்கூறிய சந்திமால் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தனது அணிக்கு வழங்கிய பங்களிப்புக்களை இறுதியாக விபரித்திருந்தார்.

அதோடு சந்திமால், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேம் லப்ரோய் தலைமையிலான இலங்கை அணியின் புதிய தேர்வாளர்கள் குழாத்துக்கு தமது அணியினை இந்த சுற்றுப் பயணத்தில் முன்னேற்ற அறிவுரைகள் வழங்கியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நான் தேர்வாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் இங்கு வர முன்னர், அவர்கள் என்னோடும், அணியுடனும் பேசியிருந்தனர், இன்னும் எமக்கு நம்பிக்கையையும் ஊட்டி இருந்தனர். அதுவே இந்த மாற்றமான (மேம்பட்ட) விளையாட்டுக்கு காரணம். எமது வீரர்களும் போட்டியின் மத்தியில் இருந்து சிறப்பான ஆட்டங்களை காட்டத் தொடங்கினர். “ என்றார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இளஞ் சிவப்பு பந்தில் விளையாடப்படும் இலங்கையின் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்; வரலாற்றுத் தொடர் வெற்றிக்கு குறிவைத்துள்ள இலங்கை

(நெவில் அன்­தனி)

பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரண்­டா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாய் விளை­யாட்­ட­ரங்கில் பகல் இரவு போட்­டி­யாக இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

தனது 35 வருட டெஸ்ட் கிரிக்கெட் வர­லாற்றில் இளஞ்­சி­வப்பு பந்­தைக் ­கொண்டு பகல் இரவு போட்­டியில் இலங்கை விளை­யா­ட­ வி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.

pink-ball-test-cricket-match.jpg

எவ்­வா­றா­யினும் உள்ளூர் போட்­டி­களில் இலங்கை வீரர்கள் பலர் இளஞ் சிவப்பு பந்தில் விளை­யா­டி­யி­ருப்­பதால் இப்போட்டி பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது என ஐக்­கிய அரபு இராச்­சியம் புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அபுதாபியில் துல்­லி­ய­மாக பந்­து­வீசி பாகிஸ்தான் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு கடுஞ் சோத­னையைக் கொடுத்து இலங்­கைக்கு அபார வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்த சுழல் ­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத், இலங்­கையின் வர­லாற்­று­ப்புகழ் மிக்க முத­லா­வது பகல் இரவு டெஸ்ட் போட்­டி­யிலும் பிர­கா­சிப்பார் என வெகு­வாக நம்­பப்­ப­டு­கின்­றது.

136 ஓட்­டங்­களை வெற்றி இலக்காகக் கொண்டு பதி­லுக்கு பாகிஸ்தான் துடுப்­பெ­டுத்­தா­டி­ய­ போது ரங்­கன ஹேரத் 43 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்டு­களை வீழ்த்தி இலங்­கைக்கு முற்­றிலும் எதிர்­பா­ராத வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் ‘‘நாங்கள் மீண்டும் அதீத ஆற்­றலை வெளிப்­ப­டுத்­த­வேண்டும். பாகிஸ்தான் ஒரு திற­மை­ வாய்ந்த அணி என்­பதால் அவ்­வ­ணியை குறைத்து மதிப்­பிட முடி­யாது’’ என அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் நேற்றுக் கூறினார்.

இந்தப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்று தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­று­வ­தற்கு கங்­கணம் பூண்­டுள்ள இலங்கை அணி பெரும்­பாலும் முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டிய வீரர்­க­ளு­ட­னேயே களம் இறங்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது.

ஒரு­வேளை லஹிரு திரி­மான்ன பூரண குண­ம­டை­யாமல் இருந்தால் அவ­ருக்குப் பதில் சதீர சம­ர­விக்­ரம அல்­லது ரொஷேன் சில்வா விளை­யாட வாய்ப்­புள்­ளது. மற்­றும்­படி அணியில் மாற்றம் ஏற்­பட வாய்ப்­பில்லை.

இலங்கை குழாம்:  தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), திமுத் கரு­ணா­ரட்ன, கௌஷல்ய சில்வா, லஹிரு திரி­மான்ன, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்­வெல்ல, டில்­ருவன் பெரேரா, ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், லக்ஷான் சந்­தகேன், சதீர சம­ர­விக்­ரம, ரொஷேன் சில்வா, விஷ்வா பெர்­னாண்டோ, லஹிரு கமகே.

பாகிஸ்தான் குழாம்: சர்ப்ராஸ் அஹ்மத் (அணித் தலைவர்), அஸ்ஹர் அலி, ஷான் மசூத், சமி அஸ்லாம், பாபர் அஸாம், அசாத் ஷபிக், ஹரிஸ் சொஹெய்ல், உஸ்மன் சலாஹுதீன், யசிர் ஷா, மொஹமத் அஸ்கர், பிலால் ஆசிப், மிர் ஹம்ஸா, மொஹமத் ஆமிர், ஹசன் அலி, மொஹமத் அபாஸ், வஹாப் ரியாஸ்.

http://metronews.lk/?p=14969

Link to comment
Share on other sites

34/0 (10.1 ov)

நாணய சுழற்சியில் இலங்கை; வெற்றி முதல் தடவையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை

 

 
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளதுடன், இதற்காக இளஞ்சிவப்பு இளஞ்சிவப்பு நிறத்திலான பந்து பயன்படுத்தப்பட உள்ளமை விஷேட அம்சமாகும்.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.