Jump to content

பங்களாதேஷ் எதிர் தென்ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு

விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார்.

 
விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு
 
வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் விளையாடுகிறது.

இதற்காக வங்காள தேசம் அணி வீரர்கள் கடந்த சனிக்கிழமை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன் இடம்பிடித்துள்ளார்.

அனைத்து வீரர்களும் விமானத்தில் ஏற தயாராக இருக்கும்போது ருபெல் ஹொசைனை மட்டும் தென்ஆப்பிரிக்க குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர்.

இதனால் ருபெல் ஹொசைன் டாக்காவில் உள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டின் விதிப்படி விசா இருந்தாலும் குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதி அளித்தால் மட்டுமே விமான ஊழியர்கள் அவரை ஏற்றிச் செல்வார்கள்.

201709191628508037_1_RubelHossain1-s._L_

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ருபெல் ஹொசைனுக்கு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சினையால் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/19162847/1108797/Rubel-denied-immigration-clearance-to-fly-to-South.vpf

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் பிலாண்டர் விளையாடவில்லை

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் பிலாண்டர் விளையாடவில்லை
 
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் இடம்பெறமாட்டார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது பிலாண்டருக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் இன்னும் சரியாகாததால் பிலாண்டர் பங்கேற்க முடியவில்லை.

201709191622247457_1_chrismorris-s._L_st

காயம் அடைந்துள்ள மற்றொரு வீரரான ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் டெஸ்ட் தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார். அவர் அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கு திரும்ப உள்ளார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் ஸ்டெயினும் அணியில் இடம்பெற மாட்டார்.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாவிடிலும் மோர்னே மோர்கல், காகிசோ ரபாடா, ஆலிவியம், பர்னெல், பெலுக்வாயோ மற்றும் ஹென்றிக்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/19162221/1108796/Philander-ruled-out-of-first-Test-against-Bangladesh.vpf

Link to comment
Share on other sites

அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா அணிதான்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்

 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை வென்ற எங்களின் அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா என வங்காளதேச கேப்டன் கூறியுள்ளார்.

 
 
அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்கா அணிதான்: வங்காளதேச கேப்டன் சொல்கிறார்
 
வங்காளதேச கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

தற்போது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி அதிக கவனம் செலுத்தி வருகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் முதன்முதலாக வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. தற்போது வங்காள தேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அடுத்த இலக்கு தென்ஆப்பிரிக்காதான் என வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘வங்காள தேசம் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எங்களுடைய முதல் இலக்கு, சிறப்பான ஆட்டத்துடன் செல்ல வேண்டும் என்பதுதான்.

எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும்போது நாங்கள் அதிக உறுதியோடு இருந்தோம். அதே உறுதியோடு தென்ஆப்பிரிக்கா மண்ணில் விளையாடுவது எளிதானதல்ல. ஆனால், எங்களுடைய அடுத்தக்கட்ட நோக்கம் அதுதான். ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது எங்களுக்கு சிறந்த வாய்ப்பு.

201709221812315706_1_rahim001-s._L_styvp

சாஹிப் அல் ஹசன் சிறப்பான வீரர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதுதான் வெற்றிக்கான முக்கிய விஷயம். ஆனால், தமீம் இக்பால், மெஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொமினுல் ஹக்யூ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

 

 

அனுமதி கிடைத்ததால் ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்

 

குற்றவாளி ஐ.டி.யுடன் ஒத்துப்போனதால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாதல் தவித்த, ருபெல் ஹொசைன் தற்போது அனுமதி கிடைத்து புறப்பட்டுள்ளார்.

 
அனுமதி கிடைத்ததால் ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்
 
வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடுவதற்காக சில தினங்களுக்கு முன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றது. அப்போது தென்ஆப்பிரிக்க குடியேற்ற அதிகாரிகள் ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா செல்ல அனுமதி மறுத்தனர். விசா இருந்த போதிலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது. அப்போது, ருபெல் ஹொசைன் மீது குற்றப் பிண்ணனி உள்ளதாக கூறி, அவரது போட்டோ மற்றும் அனைத்து விவரத்தையும் தெரிவித்தது.

அந்த புகைப்படத்தை பார்த்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம், படத்தில் இருந்தவரின் பிறந்த தேதி விவரங்கள் அனைத்தும் ருபெல் ஹொசைன் விவரத்துடன் ஒத்திருந்தைதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

201709221827124040_1_rubel001-s._L_styvp

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெளிவாக தென்ஆப்பிரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். அப்போது ருபெல் ஹொசைன் வேறு நபர். படத்தில் இருப்பவர் வேறு நபர் என்பதை தெளிவுப்படுத்தியது.

இதனால் ருபெல் ஹொசைனுக்கு தென்ஆப்பிரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ருபெல் ஹொசைன் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். 28-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ருபெல் ஹொசைன் விளையாட இருக்கிறார்.

தடை விதிக்கப்பட்டதால் நேற்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ருபெல் ஹொசைனால் பங்கேற்க இயலவில்லை.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

எங்கே விக்கெட்டுகள்? பரிதாப வங்கதேசம்: வறுத்து எடுக்கும் தென் ஆப்பிரிக்கா 407/1

 

 
amla

வங்கதேசப் பந்து வீச்சை புரட்டி எடுக்கும் ஆம்லா, எல்கர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் சற்று முன் வரை தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 407 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

தொடக்க வீரர் டீன் எல்கர் 170 ரன்களுடனும், ஹஷிம் ஆம்லா 135 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 211 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.

எல்கர் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்களையும் ஆம்லா 17 பவுண்டரிகளையும் 1 சிக்சரையும் அடித்துள்ளார்.

முதல் விக்கெட்டுக்காக தென் ஆப்பிரிக்காவின் மர்க்ரம் மற்றும் டீன் எல்கர் இணைந்து நேற்று 196 ரன்களுக்கு வறுத்தெடுத்தனர். தற்போது ஆம்லா, டீன் எல்கர் வறுத்தெடுத்து வருகின்றனர்.

முஸ்தபிசுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், மெஹதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, மஹமுதுல்லா, மொமினுல் ஹக், சபீர் ரஹ்மான் என்று 7 பவுலர்களைப் பயன்படுத்தியும் மைதானம் நெடுக பீல்டர்கள் ஓடிக்கொண்டிருப்பதுதான் மிச்சமாகியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார் என்பதே!!

மொத்தம் 44 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் இதுவரை விளாசப்பட்டுள்ளன. உள்நாட்டில் கூப்பிட்டு சில அணிகளை வென்று பேசாத பேச்சும் பேசிய வங்கதேச அணிக்கு உண்மையான டெஸ்ட் போட்டி என்ன என்பது இப்போது தெரிந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

ஒருவேளை இந்தத் தொடர் முடிந்தவுடன் மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை சாலையில் ஓடியிருந்தால் வங்கதேசத்துக்கே கூட வந்திருக்கலாம் என்று வங்கதேச வீரர்களில் பலர் நினைக்கக் கூடும்.

496/3d
 

http://tamil.thehindu.com/sports/article19775354.ece

Link to comment
Share on other sites

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றி பெறும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா

வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றி பெறும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா
 
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி  2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 2 டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சார்பில் எல்கர், ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். ஒரு ரன்னில் எல்கர் இரட்டை சதத்தை தவறவிட்டார். 

இதைதொடர்ந்து 146 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் சார்பில் முஸ்தபிகுர் ரகுமான் மற்றும் ஷ்பியுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு 
விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மோமினுல் ஹக் மற்றும் மொகமதுல்லாவை தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் 89.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் கேசவ் மகாரஜ் 3 விக்கெட்டும், மார்கல், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 15. 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் ஆம்லா 17 ரன்களுடனும், டெம்பா பவுமா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி வங்காளதேசத்தை விட 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்க அணி போட்டியை வெல்லும் நோக்கில் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபடும் என்றே தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/01113154/1110760/south-africa-leads-230-runs-bangladesh-for-first-test.vpf

Link to comment
Share on other sites

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

 

வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
 
டர்பன்:

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி  2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 2 டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி சார்பில் எல்கர், ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். ஒரு ரன்னில் எல்கர் இரட்டை சதத்தை தவறவிட்டார். இதைதொடர்ந்து 146 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது.

இதைதொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணியில் மோமினுல் ஹக், மொகமதுல்லாவை தவிர மற்றவர்கள் தாக்குப் பிடிக்கவில்லை. அந்த அணி 89.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டும், மார்கல், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் டெம்பா பவுமா 71 ரன்களும், டூ பிளசிஸ் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க அணி 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

201710021912262628_1_sa-2._L_styvpf.jpg

இந்நிலையில் 424 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 90 ரன்களில் சுருண்டது. இதனால் 333 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக இம்ருல் காயேஸ் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தென் ஆப்ரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட், ரபடா 3 விக்கெட் மற்றும் மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/02191223/1110958/south-africa-won-by-333-runs-in-bangladesh-for-first.vpf

Link to comment
Share on other sites

333 ரன் வித்தியாசத்தில் தோல்வி: ஏமாற்றத்தால் வெட்கமடைகிறேன் - வங்காளதேச கேப்டன்

 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததன் மூலம் வெட்கப்படுகிறேன் என வங்காளதேச கேப்டன் சொல்கிறார்.

333 ரன் வித்தியாசத்தில் தோல்வி: ஏமாற்றத்தால் வெட்கமடைகிறேன் - வங்காளதேச கேப்டன்
 
தென்ஆப்பிரிக்கா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 496 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 424 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. ஆனால், மகாராஜ் (4), ரபாடா (3) ஆகியோரின் பந்து வீச்சில் 90 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு செசன் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போனது.

இதனால் வங்காள தேச அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வெட்கமடைகிறேன் என முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

333 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து முஷ்டாபிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘இந்த தோல்வியால் வெட்கடைகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற மோசமான தோல்வியை நான் பார்க்கிறேன்.

201710031828521205_1_6rahim-s._L_styvpf.

இந்த தோல்வி எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற மோசமான பேட்டிங் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏராளமான வகையில் ஒரு அணி தோல்வியை சந்திக்கலாம். ஆனால், எங்கள் அணி இரண்டு செசன் விளையாடும் வகையில் திறமை பெற்றிருந்தோம்.

டாஸ் வென்ற நாங்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் 500 ரன்கள் எடுப்போம் என்ற உத்தரவாதம் கிடையாது. பந்து வீச்சை தேர்வு செய்தது அனைவர்களின் முடிவு. தென்ஆப்பிரிக்காவின் ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து எங்களுக்கு நன்றாக தெரியாது. இதனால் கணிப்பதற்கு கடினமாக உள்ளது. நாங்கள் கணித்ததை விட முற்றிலும் மாறுபட்ட ஆடுகளமாக இருந்தது.

201710031828521205_2_6elgar-s._L_styvpf.
முதல் இன்னிங்சில் 199 ரன்கள் குவித்த டீன் எல்கர்

எந்தவொரு பிளாட் பிட்ச் ஆக இருந்தாலும் இரண்டு மணி நேரம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். 4-வது இன்னிங்சை என்ன நிகழும் என்று நாம் யோசித்தால், முதல் இன்னிங்சில் 100 ரன்னில் அவுட்டாக வேண்டிய நிலை ஏற்படும். இது கடிமான மாறிவிடும் ’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/03182848/1111135/I-am-ashamed-and-disappointed-with-the-result-says.vpf

Link to comment
Share on other sites

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச வீரர் தமிம் இக்பால் காயத்தால் விலகல்

 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் காயம் காரணமாக விலகி உள்ளார்.

 
 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச வீரர் தமிம் இக்பால் காயத்தால் விலகல்
 
புளோம்பாண்டீன்:

வங்காளதேச கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீனில் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஏற்கனவே ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து இருக்கும் தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகிய இருவரும் இல்லாமல் வங்காளதேச அணி டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருப்பது 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு (காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி) இதுவே முதல் முறையாகும். 

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/05102937/1111399/Bangladesh-lose-opener-Tamim-Iqbal-to-thigh-injury.vpf

Link to comment
Share on other sites

எல்கர், மார்க்ரம் சதம்; தென் ஆப்பிரிக்கா 428 ரன் குவிப்பு

 
elcar

சதமடித்த மகிழ்ச்சியில் டீன் எல்கர்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட்இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான டீன் எல்கர் (113), அய்டன் மார்க்ரம் (143) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53.4 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் புளோயம்ஃபான்டீன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு டீன் எல்கர்-அய்டன் மார்க்ரம் ஜோடி அபார தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அசத்தலாக ஆடிய டீன் எல்கர் 116 பந்துகளில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த 2-ஆவது சதம் இது. அதேநேரத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 10-ஆவது சதம் இதுவாகும்.
டீன் எல்கரைத் தொடர்ந்து மார்க்ரம் 141 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய முதல் சதமாகும். தென் ஆப்பிரிக்கா 53.4 ஓவர்களில் 243 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. டீன் எல்கர் 152 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் சேர்த்து சுபாஷிஸ் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆம்லாவும் சிறப்பாக ஆட, அந்த அணி 58.4 ஓவர்களில் 276 ரன்களை எட்டியபோது மார்க்ரம் ஆட்டமிழந்தார். அவர் 186 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த டெம்பா பெளமா 7 ரன்களில் நடையைக் கட்ட, ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது. ஆம்லா 89, டூபிளெஸ்ஸிஸ் 62 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
வங்கதேசம் தரப்பில் சுபாஷிஸ் ராய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/07/எல்கர்-மார்க்ரம்-சதம்-தென்-ஆப்பிரிக்கா-428-ரன்-குவிப்பு-2785589.html

Link to comment
Share on other sites

நான்கு வீரர்கள் சதம்: வங்காள தேசத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவிப்பு

எல்கர், மார்க்கிராம், அம்லா, டு பிளிசிஸ் ஆகியோரின் அபார சதத்தால் வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவித்துள்ளது.

 
நான்கு வீரர்கள் சதம்: வங்காள தேசத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவிப்பு
 
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பிளோயம்ஃபோன்டின் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்க்கிராம் ஆகிய தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் வங்காள தேசத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர்களை பிரிக்க வங்காள தேச பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை. 8 பேர் பந்து வீசினார்கள். 8 பேரின் பந்து வீச்சையும் விளாசிய இருவரும் சதம் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 243 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்க்கிராம் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார. இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. அம்லா 89 ரன்னுடனும், டு பிளிசிஸ் 62 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அம்லா, டு பிளிசிஸ் ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்கள். அம்லா 132 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி காக் களம் இறங்கினார்.

201710071815147673_1_amla001-s._L_styvpf

தென்ஆப்பிரிக்கா 120 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. டு பிளிசிஸ் 135 ரன்னுடனும், டி காக் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எல்கர் - மார்க்கிராம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்த நிலையில், அம்லா - டு பிளிசிஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது.

வங்காள தேச அணி சார்பில் சுபாஷிஸ் ராய் 118 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்ளக் வீழ்த்தினார். பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/07181512/1121892/Four-Player-cenutry-south-africa-573-runs-declared.vpf

Link to comment
Share on other sites

உத்வேகமும் அளிக்க முடியவில்லை, வழிகாட்டவும் முடியவில்லை: விரக்தியில் முஷ்பிகுர் ரஹிம்

 

 
mushfiqur

வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்.   -  படம். | ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இதுகாறும் பாடுபட்டுச் சேர்த்து வைத்த பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நிலையில் தன்னால் தன் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியவில்லை என்று வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் விரக்தியில் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று எதிரணியை பேட் செய்ய அழைத்தது, தற்போது பேட் செய்ய அழைத்தது என்று தான் ஏன் டாஸ் வென்றோம் என்று இருப்பதாக பொறுமிய முஷ்பிகுர் ரஹிம் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பு குறித்துக் கூறும்போது,

“டாஸ் வென்றது என் தவறு, இந்த 2 போட்டிகளிலும் டாஸில் தோற்றிருக்கலாம். இது என்னுடைய சொந்தத் தோல்வியே, என்னால் வீரர்களுக்கு உத்வேகமூட்ட முடியவில்லை, வழிகாட்டியாக இருக்க முடியவில்லை.

நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் நல்ல பீல்டர் இல்லை. பயிற்சியாளர்கள் என்னை டீப்பில் பீல்ட் செய்யுமாறு கூறுகின்றனர். காரணம், அருகில் பீல்ட் செய்தால் நான் பந்தைக் கோட்டை விடுவதாகவும் கேட்ச்களை நழுவ விடுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் உள்ளே நின்றால்தானே பவுலர்களிடம் பேச முடியும், ஆனால் அணி நிர்வாகம் என்ன சொல்கிற்தோ அதைக் கேட்க வேண்டியுள்ளது.

இந்தப் பிட்ச் முதல் 2 மணி நேரங்களுக்கு நன்றாகவே இருந்தது, நிறைய ரன்களைக் கொடுத்தோம். இதே பிட்சில் அவர்கள் எப்படி வீசுவார்கள் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. சிறிது நேரங்களில் நன்றாக வீசினர், ஆனால் அதனை நீடித்துச் செய்ய முடியவில்லை. ஃபுல் லெந்தில் வீசி ஸ்விங் செய்யலாம் என்றால் நேராக அடிக்கிறார்கள், சரி கொஞ்சம் லெந்தை மட்டுப்படுத்தலாம் என்றால் ஒரேயடியாக ஷார்ட் பிட்ச் ஆகி விடுகிறது” என்றார் முஷ்பிகுர் ரஹிம்.

http://tamil.thehindu.com/sports/article19818511.ece

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி

 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்தது.

 
2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி
 
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 6-ந்தேதி (நேற்று முன்தினம்) ப்ளோயம்ஃபோன்டின் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (113), மார்க்கிராம் (143), அம்லா (132) மற்றும் டு பிளிசிஸ் (135 அவுட் இல்லை) ஆகியோரின் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். வங்காள தேசம் 426 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.

201710081856371730_1_southafrica001-ss._

இதனால் வங்காள தேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு டு பிளிசிஸ் அழைத்தார். 426 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.

201710081856371730_2_rabada001-s._L_styv

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 172 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சிலும்  ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


201710081856371730_3_elgar001-s._L_styvp

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது. இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த டீன் எல்கர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/08185635/1122006/2nd-Test-south-africa-beats-bangladesh-by-254-runs.vpf

 

 

 

வங்காள தேச கேப்டன் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: உறைந்து போன தென்ஆப்பிரிக்க வீரர்கள்

பவுன்சர் பந்து வங்காள தேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஹெல்மெட்டை தாக்கியதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 
 
வங்காள தேச கேப்டன் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: உறைந்து போன தென்ஆப்பிரிக்க வீரர்கள்
 
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பிளோயம்ஃபோன்டின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்து. ஆட்டத்தின் 14-வது ஓவரை தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டுயன்னே ஆலிவியர் வீசினார். அந்த ஓவரை வங்காள தேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் எதிர்கொண்டார்.

11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆலிவியர் வீசிய பவுன்சர் பந்தை தவிர்ப்பதற்காக குனிய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து முஷ்பிகுர் ரஹிமின் ஹெல்மெட்டின் இடது பக்கத்தை பலமாக தாக்கியது.

201710081739298993_1_rahim002-s._L_styvp

பந்து தாக்கியதும் உடனடியாக கிழே விழவில்லை என்றாலும், தள்ளாடியபடி சிறிது தூரம் நடந்தபின் தரையில் முட்டிபோட்டி அமர்ந்தார். இதைப் பார்த்த தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக வங்காள தேச அணி டாக்டர் மற்றும் தென்ஆப்பிரிக்க அணி டாக்டர் மைதானத்திற்குள் விரைந்து முஷ்பிகுர் ரஹிமை பரிசோதித்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வலியுறுத்தினர். ஆனால் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ந்து விளையாடினார். பவுன்சர்கள் வீசப்பட்ட போதிலும் அதை சாதுர்யமாக தடுத்து ஆடினார். இறுதியில் 26 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அவுட்டாகி வெளியேறிய பின்னர் தலையில் காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பதை குறித்து அறிய மருத்துவமனை சென்றுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/08173928/1121996/Mushfiqur-taken-to-hospital-after-blow-to-head.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.