Jump to content

இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி தொடர்


Recommended Posts

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கெய்ல் அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் - ஹோல்டர்

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலம் என வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கெய்ல் அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் - ஹோல்டர்
 
வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. சம்பள பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அணியில் ஓரம் கட்டப்பட்டு இருந்த அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:-

கிறிஸ்கெய்ல் அணிக்கு திரும்பியது உண்மையிலேயே கூடுதல் பலமாகும். எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரது ஆட்டம் இருக்கும். அவர் அணியில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சமீபத்தில் நடந்த கரீபியன் ‘லீக்’ போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்று முன்னேறி செல்வோம் என்றார்.

 

 

 

ஸ்டோக்ஸ் ஒழுங்காக நடந்து கொண்டால் நானும் நடந்து கொள்வேன்: மர்லன் சாமுயெல்ஸ்

 

 
stokes

உலகக்கோப்பை டி20 இறுதியில் வெற்றி பெற்றதையடுத்து சாமுயெல்ஸ், ஸ்டோக்ஸ்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

2016 உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் ஏற்பட்ட பகைமையின் நினைவில், நடப்பு ஒருநாள் தொடரில் ‘ஸ்டோக்ஸ் பேசாமல் இருந்தால் நானாக எந்த வசையையும் தொடங்க மாட்டேன்’ என்று மே.இ.தீவுகள் வீரர் மர்லன் சாமுயெல்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று மே.இ.தீவுகள், இங்கிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மழைகாரணமாக ஆட்டம் தாமதமாகியுள்ளது.

2016-ம் ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் கார்லோஸ் பிராத்வெய்ட் 4 சிக்சர்களை வெளுத்துக் கட்டி மே.இ.தீவுகள் சாம்பியன் ஆனபோது மர்லன் சாமுயெல்ஸ் எதிர்முனையில் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அப்போது ஸ்டோக்ஸ் ஒரு பதற்றமான வீரர் என்றார் சாமுயெல்ஸ். இதற்கு முன்பாக ஒருமுறை 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கிரெனடாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சாமுயெஸ்ல் ஸ்டோக்ஸைப் பார்த்து நக்கலாக சல்யூட் செய்தார் .

இவையெல்லாம் சேர்ந்து தற்போது இந்த இருவருக்குமிடையே மோதல் போக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மோர்கன் கூறும்போது, “பென் ஸ்டோக்ஸ் தன் பாணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுதான் ஸ்டோக்ஸின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும்” என்றார்.

தி கார்டியனில் மர்லன் சாமுயெல்ஸ் கூறும்போது, “இங்கிலாந்தில் நான் நல்ல பெயர் எடுக்கவே வந்திருக்கிறேன். ஸ்டோக்ஸ் பேசாமல் இருந்தால் நானாக எதையும் ஆரம்பிக்கப் போவதில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article19715180.ece

171/7 (38.2/42 ov)
 
 
Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவை காப்பாற்றுமா இங்கிலாந்து - எதிர்பார்ப்பில் ஸ்ரீலங்கா ரசிகர்கள்

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்றைய தினம் மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடர் குறித்த இரு அணிகளுக்கு மட்டுமல்லாது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்காவை காப்பாற்றுமா இங்கிலாந்து - எதிர்பார்ப்பில் ஸ்ரீலங்கா ரசிகர்கள்

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணப் போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதி பெற ஸ்ரீலங்கா அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் தமக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ளன.

இதனடிப்படையில் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 5க்கு 0 என்ற அடிப்படையில் அல்லது 4 க்கு 0 என்ற அடிப்படையிலோ கைப்பற்றினால் உலக கிண்ண போட்டித் தொடருக்கான வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக் கொள்ளும்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் ஸ்ரீலங்கா அணி 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கு நேரடியாக தெரிவாகும்.

இதனால் இந்த போட்டித் தொடர் மேற்கிந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு மிகவும் மக்கியத்துவம் வாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/cricket/is-englad-save-srilanka

66/1 (9.3/42 ov, target 205)
 
 
Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

 
முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
 
லண்டன்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்ட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சால் வெஸ்ட் அணி தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. வெஸ்ட் அணி 42 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய கிரிஸ் கெயில் 27 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விகெட்டுகளும், வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்ஸ்டோ நிதானமாக விளையாடி சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 30.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளும், ஜெரோம் டெய்லர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைதொடர்ந்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் 21-ம் தேதி நடைபெறுகிறது.

 

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/20092410/1108887/first-one-day-england-beat-west-indies-by-7-wickets.vpf

Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி
 
லண்டன்:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

இதற்கிடையே, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்
இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது.

இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் துல்லியமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இங்கிலாந்து அணியினரின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றினர்.

அதன்பின்னர், ஜோ ரூட் 79 பந்துகளில் 84 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 73 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி தனது அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியினரை கலங்க வைத்தார். 57 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டர் உள்பட 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டும், டெய்லர், பவல், நர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து 370 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 78 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தவிர வேறு யாரும் பொறுப்பாக விளையாடவில்லை.

இதனால் அந்த அணி 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் தனது துல்லியமான பந்துவீச்சால் பிளங்கட் 5 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டி 27-ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/25042255/1109729/england-take-20-lead-in-ODI-series-against-west-indies.vpf

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/25042255/1109729/england-take-20-lead-in-ODI-series-against-west-indies.vpf

Link to comment
Share on other sites

14 பந்துகளில் 8 சிக்ஸ்; 53 பந்துகளில் சதம்; மொயின் அலி அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

 

moeen%20ali

சிக்சருடன் சதம் விளாசிய மொயின் அலி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

gayle

கிறிஸ் கெயில்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

moeen%20ali

சிக்சருடன் சதம் விளாசிய மொயின் அலி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

gayle

கிறிஸ் கெயில்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

பிரிஸ்டல் மைதானத்தில் மொயின் அலி வானில் சிக்சர் தீபங்களை ஏற்ற இங்கிலாந்து 369 ரன்களைக் குவித்து பிறகு மே.இ.தீவுகளை 245 ரன்களுக்குச் சுருட்டி 3-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்று இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

மொயின் அலி கடைசி 14 பந்துகளில் அடித்த ஸ்கோர் விவரம்: 6, 6, 2, 4, 6, 6, 6, 6, 2, 4, 1, 6, 0, 6

மொயின் அலியின் அதிரடி திகைக்க வைக்கும் அதிரடியாக அமைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் 2-வது அதிவேக சதமாகும் இது. மொயின் அலி 50 ரன்களிலிருந்து 100 ரன்கள் செல்வதற்கு 12 பந்துகளையே எடுத்துக் கொண்டார். இதில்தான் 8 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசித்தள்ளினார்..

இவரது அதிரடி பின்னால் வந்தது என்றால் முதலில் ஜோ ரூட் (79 பந்துகளில் 84), பென் ஸ்டோக்ஸ் (63 பந்துகளில் 73), ஆகியோரும் மே.இ.தீவுகள் பந்து வீச்சில் கையை நனைத்தனர் இலக்கைத் துரத்திய போது கிறிஸ் கெய்ல் தனி மனிதராக இலக்கை விரட்டிவிடும் உறுதியுடன் ஆடினார். 78 பந்துகளில் 94 ரன்களுடன் தன் இஷ்டத்துக்கு சிக்சர்களைம் கேட்டுக் கேட்டு அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரன் ஓடுவதில் மந்தமான கிறிஸ் கெய்ல் ரன் அவுட் ஆவார் என்று எதிர்பார்த்தபடியே அடில் ரஷீத்தின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேற, 176/4 என்று ஆகி 245 ரன்களுக்குச் சுருண்டது. லியாம் பிளங்கெட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மே.இ.தீவுகளால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி ஜேசன் ஹோல்டரின் கூடுதல் பவுன்ஸிற்கு ஜானி பேர்ஸ்டோ (13) விக்கெட்டை இழந்தது. ஹோல்டரிடமே கேட்ச் கொடுத்தார். ரூட், ஹேல்சுடன் இணைந்தார். ஹேல்ஸ் 36 ரன்களில் மிகுவெல் கமின்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். இயன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர்கிறது. அவர் முதல் பந்திலேயே ஹோல்டர் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

74/3 என்று இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கையில் ரூட், ஸ்டோக்ஸ் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி 132 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மேலும் அதிரடி காட்ட நினைத்த தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் கொடுத்தார். ஆஷ்லி நர்சை தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசிய ஸ்டோக்ஸ் மீண்டுமொரு சிக்சர் அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து ஒரு சிறு சரிவு ஏற்பட்டது. பட்லர் (2), ரூட் (79 பந்துகளில் 84) ஆகியோர் கமின்ஸ் பந்தில் வெளியேறினர். பட்லர் பந்து அருமையானது, ஆஃப் பைலை மட்டும் தட்டியது, ரூட் நேராக எல்.பி.ஆனார்.

இங்கிலாந்து 217/6 என்று தடுமாறிய போது கிறிஸ் வோக்ஸ் (34), மொயின் அலியுடன் இணைந்தார். அடுத்தடுத்த சிக்ஸ்களுடன் 41 பந்துகளில் அரைசதம் கண்டார் மொயின் அலி, இங்கிருந்துதான் தொடங்கினார் அதிரடியை. 60 ரன்களிலிருந்து 90-ஐ எட்டுவதற்கு மொயின் அலி 7 பந்துகளையே எடுத்துக் கொண்டார். சிக்சர்கள் மழை பொழிந்தது. மே.இ.தீவுகள் பவுலர்கள் புதிதாக எதையும் முயற்சி செய்யாமல் தொடர்ந்து குட் லெந்த்தில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர்.மீண்டும் இரண்டு சிக்சர்களில் 53 பந்துகளில் சதம் கண்டு 57 பந்துகளில் 102 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து 369 ரன்களை எட்டியது. மே.இ.தீவுகள் கடைசி 2 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தது, ஹோல்டரை வரிசையாக 3 சிக்சர்கள் அடித்தார் மொயின் அலி. ஆஷ்லி நர்ஸ் அடுத்தடுத்து 2 கேட்ச்களை மொயின் அலிக்கு விட்டார்.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் தொடக்க அபாய வீரர் எவின் லூயிஸ், டேவிட் வில்லேயை 2 சிக்சர்கள் அடித்து இன்னொரு முயற்சியில் வெளியேறினார்.

கிறிஸ் கெய்ல் தன் இஷ்டத்துக்கு பந்துகளை வெளியே அடித்துக் கொண்டிருந்தார், மொயின் அலியை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்து பழிதீர்த்தார்.78 பந்துகளில் 94 ரன்களூடன் அவர் ஆடிய போது ஒருவேளை 370 இலக்குடன் ஒரு மோது மோதுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் எளிதாக ஓட வேண்டிய ரன்னை தன் மந்தத்தனத்தினால் ரன் அவுட் ஆகி குட்டிச்சுவராக்கினார். கடைசியில் இங்கிலாந்து 2-0 முன்னிலை.

http://tamil.thehindu.com/sports/article19750624.ece

Link to comment
Share on other sites

மே.இ.தீவுகளின் நான்காவது போட்டி இன்று.!

 

2019 ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாக செல்ல இலங்­கைக்கு வழி­விட்ட மேற்­கிந்­தியத் தீவுகள் அணி தற்­போது இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளை­யாடி வரு­கி­றது.

ஏற்­க­னவே நடை­பெற்ற மூன்று போட்­டி­களில் இரண்டு போட்­டி­களில் இங்­கி­லாந்து அணி வெற்­றி­பெற்­றது. ஒரு போட்டி மாத்­திரம் வெற்றி தோல்­வி­யின்றி நிறை­வுக்கு வந்­தது. 

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் நான்­கா­வது ஒருநாள் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்து தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/24967

Link to comment
Share on other sites

4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ், ஹேல்சுக்கு அணியில் இடமில்லை: இங்கிலாந்து அதிரடி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்சுக்கு அணியில் இடமில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 
 
4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ், ஹேல்சுக்கு அணியில் இடமில்லை: இங்கிலாந்து அதிரடி
 
லண்டன்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட்கிழமை பிரிஸ்டோனில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை போலீசார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அதன்பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை வெளியே விட்டுள்ளனர். அவருடன் மற்றொரு வீரர் ஹேல்ஸும் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேக்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/27154038/1110241/stokes-hales-dropped-for-fourth-ODI-against-westindies.vpf

Link to comment
Share on other sites

எவின் லூயிஸ் திகைக்க வைக்கும் அதிரடி; ஜோசப் அருமை: மே.இ.தீவுகளின் துரதிர்ஷ்ட தோல்வி

 
evinlewisjpg

எவின் லூயிஸ்

கெனிங்டன் ஓவலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் விளாசியும் மழை காரணமாக டக் வொர்த் முறையில் இங்கிலாந்திடம் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி கண்டது.

எவின் லூயிஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததோடு, 189 ரன்கள் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்கோரை கடக்கும் வாய்ப்பையும் தவற விட்டார். காயம் அவரை வெளியேற்றியது. இங்கிலாந்து 3-0 என்று முன்னிலை.

357 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட வேண்டிய இங்கிலாந்து அல்சாரி ஜோசப்பின் அசாத்தியமான வேகப்பந்து வீச்சில் இடையில் 5 விக்கெட்டுகளை இழந்து 27.1 ஓவர்களில் 181/5 என்று பரிதவித்தது. ஆனால் அதன் பிறகு 8 ஓவர்களில் மொயின் அலி (48 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (43நாட் அவுட்) ஆகியோரது 77 ரன்கள் அதிரடி ரன் கூட்டணியில் 35.1 ஓவர்களில் 258/5 என்று டக்வொர்த் ஸ்கோரைக் கடந்தது. ஒருவேளை மே.இ.தீவுகள் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் இலக்கு டக்வொர்த் முறையில் 272 ரன்களாக அமைந்திருக்கும், இங்கிலாந்து தோல்வி தழுவியிருக்கும்.

வெற்றி தோல்வி சகஜமே. ஆனால் எவின் லூயிஸ் நேற்று ஆடிய அதிரடி ஆட்டம் திகைக்க வைக்கும் இன்னிங்ஸ் ஆகும். 130 பந்துகளில் 17 பவுண்டரிக்ள் 7 சிக்சர்களுடன் 176 ரன்கள் எடுத்து அவர் ஜேக் பால் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய யார்க்கரில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு கணுக்காலைத் தாக்க காயத்தினால் துடித்துப் போய் விட்டார், மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில்தான் அவர் செல்ல வேண்டியிருந்தது. அதே போல் ஹோல்டரின் இன்னிங்ஸ் ஒரு கபில் ரக காட்டடியாகும். 62 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்தார் ஹோல்டர், இவரும் எவின் லூயிஸும் இணைந்து 18 ஓவர்களில் 168 ரன்களை விளாசித்தள்ளினர். கடைசியில் போவெல் 15 பந்துகளில் 28 ரன்களை எடுக்க கடைசி 10 ஓவர்களில் மே.இ.தீவுகள் 131 ரன்கள் விளாசித்தள்ளி, கடைசியில் மழையால் தோல்வு தழுவியது உண்மையில் துரதிர்ஷ்டமே. தொடரில் இங்கிலாந்து 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் வோக்ஸ் ஆரம்பத்தில் கிடைத்த ஸ்விங் பந்து வீச்சில் கிறிஸ் கெய்ல் (2), ஷேய் ஹோப் (11), மர்லன் சாமுவேல்ஸ் (1) ஆகியோரைக் காலி செய்ய மே.இ.தீவுகள் 6.1 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த் இன்னொரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் ஜேசன் மொகமத் (46), எவின் லூயிசுடன் இணைந்து இருவரும் 4-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர். 28.2 ஓவர்

40-வது ஓவரிலிருந்து திடீர் ஆவேசம் கொண்ட எவின் லூயிஸ்; சிக்சர் மழை

39-வது ஓவர் வரைக்கும் மே.இ.தீவுகள் இன்னிங்ஸில் சிக்சரே வரவில்லை. ஆனால் அடுத்த 6 ஓவர்களில் 11 சிக்சர்கள் விளாசப்பட்டது உண்மையில் இங்கிலாந்தை திகைக்க வைத்தது. கிறிஸ் கெய்ல் மீண்டும் இறங்கி விட்டாரோ அல்லது விவ் ரிச்சர்ட்ஸ் இடது கையில் பேட் செய்கிறாரோ என்று யோசிக்கும் அளவுக்கு காட்டடியில் இறங்கினார் எவின் லூயிஸ்.

40-வது ஓவரில் லியாம் பிளங்கெட் வீச வரும்போது மே.இ.தீவுகள் 212/4 என்று இருந்தது. எவின் லூயிஸ் 105 பந்துகளில் 109 ரன்களை எடுத்திருந்தார், இதுவரை தன்னை மீறி எந்த ஒரு ஷாட்டையும் அவர் ஆடிவிடவில்லை. 14 பவுண்டரிகளை அடித்திருந்தார் எவின் லூயிஸ். பிளங்கெட் பந்தை ஸ்கொயர் லெக்கில் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து தொடங்கினார் லூயிஸ். அடுத்த பந்தில் முன்னங்காலை லேசாக ஒதுக்கிக் கொண்டு நேராக ஒரு சிக்ஸ். அடுத்த அடில் ரஷீத் ஓவரில் கூக்ளியில் லூயிஸ் அடித்த ஷாட்டில் ஜேசன் ராய் கவர்ஸில் கடினமான வாய்ப்பை நழுவ விட்டார். கேட்சை விட்டால் என்ன ஆகும் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார் லூயிஸ். சிக்ஸ் மிட்விக்கெட்டிலும் பவுண்டரி அருமையான பைன் லெக் பிளிக் மூலமும் வந்தது.

ஹோல்டர் தன் பங்குக்கு மொயின் அலியை நேராக இரண்டு இடி போன்ற ஷாட்டில் சிக்சர்களை விளாசினார். அதன் பிறகு எங்கு போட்டாலும் அடிதான். 62 பந்துகளில் ஹோல்டர் 4 பவுண்டரிக்ள் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை விளாசினார். எவின் லூயிஸ் முதலில் 94 பந்துகளில் சதம் கண்டவர் 130 பந்துகளில் 17 பவுண்டரி 7 சிக்ச்ர்களுடன் 176 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் பால் வீசிய ரவுண்ட் த விக்கெட் யார்க்கரில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு கணுக்காலைத் தாக்க துடிதுடித்து விழுந்து விட்டார், ஸ்ட்ரெட்சரில்தான் பெவிலியன் எடுத்துச் செல்லப்பட்டார், கடைசியாக கிடைத்த தகவலின்படி நூலிழை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எவின் லூயிஸுக்கு. 47-வது ஓவரில் அவர் 176 ரன்களில் வெளியேறினார், ஒருவேளை இருந்திருந்தால் இரட்டைச் சதம் விளாசியிருக்கக் கூடும் ஏனெனில் அந்த மூடில்தான் இருந்தார் அவர். இது மே.இ.தீவுகள் அணியின் 4-வது சிறந்த ஒருநாள் ஸ்கோராகும்.

மேலும் இங்கிலாந்தில் எந்த ஒரு வீரரும் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததில்லை. போவெல், ஹொல்டருடன் இணைய அவர் 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கடைசி 11 ஓவர்களில் 13 சிக்சர்களுடன் 144 ரன்கள் விளாசிய மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது.

அல்சாரி ஜோசப்பின் அபாரப் பந்து வீச்சு: இங்கிலாந்து டக்வொர்த் முறையில் வெற்றி!

அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட ஜேசன் ராய் தொடக்க வீரராக களமிறங்கினார். ஜேரோம் டெய்லர், ஹோல்டர் ஷார்ட் பிட்ச் ஆக வீச 104 ரன்களில் ஜேசன் ராய் மட்டும் வெளுத்துக் கட்டி 70 ரன்களை எடுத்தார். மிகுவெல் கமின்ஸை நேராக ஒரு அரக்க சிக்ஸ் அடித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை மூன்றிலக்கத்துக்குக் கொண்டு சென்றார்.

66 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 84 ரன்கள் எடுத்த ஜேசன் ராய், அல்சாரி ஜோசப்பின் ஸ்லோ ஆஃப் கட்டரை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களில் விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஜோசப்பிடம் வெளியேறினார். ஜோ ரூட்டுடன் 14 ரன்களில் ஜோசப் வீசிய பந்தை புல் ஷாட் ஆட பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. ஜோஸப் 90 மைல்கள் வேகத்தில் வீசி பிறகு நல்ல வேகம் குறைந்த ஸ்லோ ஆப் கட்டர்களையும் திறம்பட வீசினார்.

இங்கிலாந்து அணி இப்போது 157/3 என்ற நிலையில் டக்வொர்த் முறையில் 18 ரன்கல் பின்னால் இருந்தது. மோர்கன் கடைசி 8 இன்னிங்ஸ்களில் 12 ரன்களையே எடுத்திருந்தார், இந்தப் போட்டியில் பார்மை மீட்டெடுக்கலாம் என்று நினைத்த தருணத்தில் 19 ரன்கள் எடுத்த அவர் ஜோசப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட அது சிக்சருக்குப் பறந்து கொண்டிருந்தது, ஆனால் இடையில் கைல் ஹோப் ஒரு எம்பு எம்பி அசாத்திய கேட்சைப் பிடித்தார். சாம் பிலிங்ஸ், ஜோசப் பந்தில் கெய்லிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற 181/5 என்று ஆனது.

அன்று பிரிஸ்டலில் 53 பந்துகளில் சதம் எடுத்த மொயீன் அலியும், ஜோஸ் பட்லரும் இணைந்தனர். மே.இ.தீவுகள் ஸ்பின்னர் ஆஷ்லி நர்ஸ், மொயீன் அலிக்கு 3 பந்துகளில் 16 ரன்களை விட்டுக் கொடுக்க நம்பிக்கை பிறந்தது. 33-வது ஓவர் முடியும் போது கூட இங்கிலாந்த் அணி டக்வொர்த் முறையில் 15 ரன்கள் பின்னிலையில் இருந்தது. ஆனால் 2 ஓவர்களில் மே.இ.தீவுகளின் விதி முடிந்தது, டெய்லரின் ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி பறக்க டக்வொர்த் தேவையை மே.இ.தீவுகள் கடந்தது. மொயின் அலி 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்களையு பட்லர் 35 பந்துகளில் 43 ரன்களையும் எடுக்க இருவரும் 8 ஓவர்களில் 77 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அதிர்ஷ்டகரமான வெற்றியை ஈட்டியது. ஆட்ட நாயகனாக அசாத்திய அதிரடி காட்டிய எவின் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article19767304.ece

Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.

 
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
 
 
லண்டன்:
 
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது.
 
இந்நிலையில், 5-வது ஒருநாள் போட்டி சவித்ஆம்ப்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் கெயிலும், கைல் ஹோப்பும் களமிறங்கினர். கெயில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். கைல் ஜோப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஷாய் ஹோப்யுடன், மார்லன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்து ரன்குவிக்க முயற்சித்தார். சாமுவேல்ஸ் 32 ரன்னிலும் , அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் முகமது 25 ரன்களுலும் ஆட்டமிழந்தனர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, 39.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. 
 
சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 72 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. சுனில் அம்ப்ரிஸ் 38 ரன்களுடனும், அஷ்லே நர்ஸ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 
 
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராய் 96 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து தொடக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தது. 
 
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் அடித்தார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதிசெய்தது.
 
201709300331414858_1_england-bairstow._L
 
இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் மோயின் அலி தொடர்நாயகன் விருது பெற்றார். இந்த ஒருநாள் தொடரை 4-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/30033134/1110600/england-won-5th-odi-against-westindies-by-9-wickets.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.